திரு விருத்தம் -20-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
வெறி விலக்கு துறை
மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-இத்தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே
தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி
கருமுக மாலையை -நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே -இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா
நின்றி கோள்-என்று அத்தை நிஷேதித்திக் கொண்டு -இவளுடைய நோயையும் இந்நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20

பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்-துறையடைவு -வெறி விலக்கு -தீர்ப்பாரை யாமினி -4-6-

வியாக்யானம் –

சின்மொழி –சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு -சப்தாவசேஷை -என்னவுமாம் -அங்கனே யாகில் இத்தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்த -போலே -சின் மொழி -என்றது முக்தை-இம் முக்த்யையை விதக்தை யாக்கும் போது ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது
-சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –
நோயோ –நோய் ஓ -பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே இந்நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –
இவள் பருவம் அளவு அன்று -கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –
பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி –
கழி பெருந்தெய்வம்–கழிய மிக்க பெரும் தெய்வம் -அவ்வருகு இல்லாத தெய்வம் –பதில் விஸ்வஸ்ய-என்றும்-பதிம் பதீனம் -என்றும்
-தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் –
அவ்விஞ்ஞாதம் விஜா நாதம்-என்றும் யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் -உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-
இன்ன-இந்நோய் இது என்று -இந்நோயும் இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று
இன்மொழி -அர்த்த ரஹிதமான மொழி –
கேட்கும் இளந்தெய்வம் அன்று இது -தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது
-கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவைகள் அன்று
இன் மொழி –வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு -பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –
வேல! நில் நீ -தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் -இங்கே புகுராதே கொள்-
எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் -கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக
காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–அம்மனைமீர்  என்று சம்போதித்து நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்
-புத்ரகா இதி ஹோவாச -சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே அம்மனைமீர் என்பான் என் என்னில் இவ்வர்த்தம்
இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை -தாங்களே இவ்வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி
உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-பிரளய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும் சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு –
ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் -இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இ றே
-ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்
மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது
சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் -தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்--பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: