திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பஞ்ச பூதங்களும் -சந்த்ர ஸூ ர்யர்களும் -மேக மண்டலங்களும் -ஜீவ ராசியும் -எண் திசையும்
-ஆவரணங்களும் -அண்டம் எல்லாம் -எம்பெருமானுடைய விபூதிகள் -என்கிறார்
கொண்டல் பெயரும் -மேகங்களும் -சேதன வர்க்கமும் -/ மேகம் என்று பெயர் பெற்றவையும் -என்றுமாம்
அகைப்பு -எழுச்சி -முயற்சி -திரு உள்ளத்தில் சங்கல்பம் என்றபடி –

——————————————————————-

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

அகைப்பில் மனிசரை -உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்-புகைத்தான் –நீசங்களான ஆறு மதங்களில் புகும்படி செய்தவனும் –
சாக்கியர் -உலுக்கியர் அக்ஷபாதர் ஷபணர் கபிலர் பதஞ்சலி -முதலானோரால் ப்ரவர்த்திக்கப் பட்ட அவைதிக மதங்கள்
-உகைக்குமேல் -உதாசீனாய் இருந்து விடும் பக்ஷத்தில் -உபேக்ஷித்தல் -தேவதாந்த்ரங்கள் இடத்தில் ஆவேசியாத பக்ஷத்தில்
அஹங்காரப்படுகிறவர்களை லோக வழக்கில் வாலாட்டும் என்பார்களே
எவ்வாறு செய்கையும் -தேவதாந்தரங்களுக்கு -ஹவிஸ் அளிப்பது அந்தர்யாமித்வம் உத்தேசித்து அன்றோ
அழைப்பு -தேவதைகளின் ஆஹ்வாநமும்
அவரவர் தமது தமது அறிவகை வகை அவரவர் இறையவர் என வடி யடையவர்கள் -அவரவர் இறையவர் குறைவலர்
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-திருவாயமொழி -பாசுரத்தில் அன்வய முகத்தால் -சொல்வதையே
வியதிரேக முகத்தில் சொல்லி -எம்பெருமான் ஆவேசியா விட்டால் ஒரு தெய்வமும் ஒரு பலனும் அளிக்க வல்லதாக மாட்டாது -என்கிறார் –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் உலகில்லை என்றே –4 -10 -6 –

———————————————————————–

உலகோர் எக்கேடு பெற்றாலும் பெறட்டும் -எண் பொழுது போக்கு நாலதாக இறுக்கப் பெற்றேன் –
திருவேங்கடமுடையானை சேவிக்க வேணும் என்றும் திரு வேங்கடத்திலே நித்யவாஸம்
பண்ண வேணும் என்றும் ஆசைப்படா நின்றேன் -என்கிறார்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

கூடல் — கூடல் இழைத்தல்-கூடல் வளைத்தல்-கூடல் குறி –பெண்டிற்கே உரித்தாகையாலே ஆழ்வார் நாயகி
சமாதியில் அருளி செய்கிறார் என்பர் அழகிய மணவாள ஜீயர் –
வரன்றி வந்து இழிய–த்ராட்டிக் கொண்டு வந்து இழிய-வரண்டி–பாட பேதம்
மணிகளை கண்டு இவை கொள்ளி வட்டம் என்று அஸ்தானே பய சங்கை பண்ணுமா யானைகளும் -மலைப் பாம்புகளும்
-யானைகள் ஓடி மலைப் பாம்புகளின் வாயிலே விழும் படி என்றுமாம் –
யானை வெருவவும் அரவு ஒடுக்குகவும் -என்றும் யானை வருவி அரவின் வாயிலே ஒடுங்கவும் என்றுமாம் –

—————————————————————————-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

யாதிருச்சிகமான யுக்தி மாத்திரத்தாலே -மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கை யதுவே
-பரமபதமும் சித்தம் என்னும் படி பேறு பெற்றேன்
மாடி மாங்காயிட்டு அருளுவதே என்று அனுசந்தித்து ஈடுபட நின்றேன் –
வேதைகி சமய-மிதுனமே -நூலாளன்-நூலாட்டி -அசமதாதிகளால் பரம்பரையாக ஓதப்படும் நூல்களாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரமாக உள்ள எம்பெருமான் திருவடிகளில் அகப்பட்டேன்
அவனை சாஸ்திரங்களில் நின்றும் பிரிக்க ஒன்னாதா போலே அடியேனையும் அவன் திருவடிகளில் நின்றும் பிரிக்க முடியாதே
நான் அஸஹ்ருதயமாக சொன்ன சொல்லையும் சஹ்ருதயமாகக் கொண்டு மாடி மாங்காயிட்டு விஷயீ கரித்து
அருளியதால் அவன் திருவடிகளுக்கே அற்றுத் தீர்ந்தேன் –

—————————————————————————————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

நீ திருவேங்கடமலையை விட்டு என் உள்ளத்தே வந்தாயாயேயாயினும் -நீ வருவதற்கு சாதனமான அந்த திரு மலையை
சேவிக்க காதல் கொண்டுள்ளேன் -நீ உக்காந்து வாழ்ந்த இடம் என்றே எனக்கும் உத்தேச்யம் -திருவோண திரு உத்சவத்தில்
மங்களா சாசன ஒலியும்-பேரொலி செய்து மாணிக்கங்களை உதிரும் அருவி ஒலியும் நிறைந்த திரு வேங்கடம் –
நான் உன்னை திருவேங்கடத்தில் சேவிக்க விரும்ப நீயோ அங்கு நின்றும் என் உள்ளத்தே வந்து உறைகின்றாயே -என்றுமாம் –

————————————————————————————-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42–

சென்னியோங்கு தண் திருவேங்கடத்தை சென்று வணங்குமின் என்று உபதேசிக்கிறார் -சேண் உயர் –மீமிசைச் சொல்
நீர்மையால் -பாபங்களை போக்குவதே அன்றோ ஸ்வபாவம் திரு வேங்கடத்துக்கு
வெம் கொடும் பாவங்கள் எல்லாம் வெந்திடச் செய்வதால் நல் மங்கலம் பொருந்தும் சீர் வேங்கடமலை யான தொன்று -புராணச் செய்யுள் –

——————————————————————————

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

அந்தி தோறும் வந்து திருவந்திக் காப்பிடுவார்கள் -கங்குல் இரவுக்கு வாசகமாயினும் இங்கு அந்திப் பொழுதை குறிக்கும் –
நளிர் மதிச் சடையன் -சந்த்ர மௌலி -திங்கள் சடை ஏற வைத்தான் -என்கிறார்
குடை -சத்ர சமராதி உபகரணங்களும் உப லக்ஷணம்
புகுந்தார்கள் -புகுந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றவாறு
அணிவான் -வான் விகுதி பெற்ற வினை எச்சம் –

————————————————————————————-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

கிளர் ஒளி இளமை கெடாமல் இருக்கப் பெற்ற குமரர்களே-தண்டு காலா வூன்றி வூன்றி தள்ளி நடக்கும் முதுமையில்
திருமலையை நினைக்கவும் முடியாதலால் -இப்பொழுதே திருமலைக்கே போவீர் -என்கிறார்
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க -தாமே யறிகிற்போம் நல் நெஞ்சே -பூ மேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதமத்தாலே எண்ணினான் பண்பு -பொய்கையார் -45 –
ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண் –பேயார் -77
புராணங்களில் இல்லாமல் ஆழ்வார்கள் மட்டுமே சாஷாத் கரித்த விருத்தாந்தம் —

——————————————————————————————-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

நித்ய ஸூரிகளுக்கும் திருமலை ப்ராப்யம் -ஆதாரத்துடன் திருவடித்த தாமரைகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து
பல்லாண்டு -ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -என்று சொல்லி படுகாடு கிடப்பர்–ஸ்தாவர பிரதிஷடையாக நித்ய வாசம் செய்து
நித்ய கைங்கர்யம் செய்வார் -என்றபடி -விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பு அன்றோ /
பரிந்து -அஸ்தானே பயசங்கை பண்ணி பரிந்து -/ வாய்ப்பு நிதி போலே –

———————————————————————————-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச் செஞ்சுடர் நா வளைக்கும் திருமால் இரும் சோலையதே -பெரியாழ்வார் -4 -3 -2 –
சந்திரனைப் பிடித்து நந்தா விளக்காக -வைப்பதாக -ஆழ்வார் திருமலையில் இருப்பே சத்வ குணம் வளர்விக்குமே-என்பதாலும்
வாயும் திரை யுகளும்-2 -1 – போலே அனைத்தும் தம்மைப் போலவே பகவத் பிராவண்யராய் இருப்பாரே -என்றுமாம் –
ஆடுது மேல் -ஆடு திரேல் -பாட பேதங்கள் –

—————————————————————————————–

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

அவனைப் போலே இங்கு உள்ள அனைத்தும் உத்தேச்யம் -யாளிகள் – சிங்கங்கள் -நவ ரத்தினங்கள் -புஷ்ப்ப வ்ருக்ஷங்கள்
-நவ மணிகள் கொழித்து கொண்டு வரும் அருவிகள் -காடுகள் -குரங்குகள் -வேடர்கள்
-இவை எல்லாம் யுடைத்தான திரு மலை மணி வண்ணனுடைய திருப்பதி –

—————————————————————————————–

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

அசுர ஜாதியால் வரும் துன்பங்களை தேவர்களுக்கு போக்கி அருளியது போலே ஆஸ்ரிதர் துன்பங்களை
தொலைத்து அருள எழுந்து அருளி இருப்பவன் திருவேங்கடத்தான் என்றவாறு –
விண்ணோர் மெய்மையால் -நித்ய ஸூ ரிகள் உண்மையான பக்தியால் -ஸுலப்யம் கண்டு அனுபவிக்க ஆஸ்ரயிப்பதும் இவனே –

——————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: