திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73–

அவன் வைத்த-பண்டைத் தானத்தின் பதி–அப்பெருமான் முன்பே சாதித்து வைத்த பரமபத மார்க்கம்
என்னத் தகுந்த சரம ஸ்லோகத்தை —பண்டத்தானத்தின் -நித்ய விபூதி
அவன் உபாயமாகும் இடத்து வேறு ஒரு உபாயத்தையும் எதிர்பாராமல் தானே பூரணமாய் இருந்து
கார்யம் தலைக் கட்ட வல்லனாகும் பெருமை -என்று பட்டர் அருளிச் செய்வாராம்
அவன் உண்ட போதும் உமிழ்ந்த போதும் நிரபேஷனாக செய்து அருளியததால் நிரபேஷத்வ உபாயத்வம் அறியாலாமே
நீல கண்டனும் நான் முகனும் பேர் ஆழியான் தன் பெருமை அறிவார்களா –
சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கே நித்ய விபூதி ஸூ லபமாகும் –

———————————————————————————————–

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

அஞ்சி வந்து அடி பணிந்த ஸூ முகனுக்கு அபயம் அளித்த வரலாற்றை அருளிச் செய்கிறார் –
தேவேந்திரன் சாரதி மாதலி புத்ரி-குணகேசி க்கு வரனாக -ஸூ முகன் – பிதாமகன் -ஆர்யகன் –தன் புத்ரனை
பெரிய திருவடி பஷித்து ஸூமுகனையும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக சொல்லி போந்ததை சொல்லி –பெரிய திருவடியையே
தோளிலே அடைக்கலமாக கொள்ளச் செய்து அருளினான் –
அடுத்த கடும் பகைஞ்ஞாற்கு ஆற்றேன் என்றோதி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக் கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள் -பொய்கையார் -80 –
நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணா
நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –அடியேன் –நின்னடி
இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -4 -8 -4 –
ஆஸ்ரித விரோதிகளை க்ஷமிக்க மாட்டேன் -அடியார்களைக் கை விட்டேன் -இரண்டையும் காட்டி அருளிய செயல் அன்றோ-
-இதையே அவன் –தன்-வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனுக்கு என்கிறார்
பாய் திரை நீர்ப் பாழி--கடல் போன்ற குளிர்ந்த படுக்கை என்றும் திருப் பாற் கடல் என்றுமாம் –

—————————————————————————————————-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

மகிழாத -பெருமையாகக் கொண்டு மேனாணிப்பு கொள்ளாத என்றபடி
அரசன் -கனிகண்ணன்-வாக்கால் பாடல் பெறாத ஐதிக்யம் உண்டே-

——————————————————————————————

வைகுந்தச்-செல்வனார் சேவடி மேல் பாட்டு–நாக்கொண்டு மானிடம் பாடேன்–என்ற அத்யவசாயம் தமக்கு வந்த படி எங்கனே எண்ணில்
உலகில் உள்ள அனைத்து வாஸ்யங்கள் வாசகங்கள் எல்லாம் அவன் திவ்ய சங்கல்பத்தாலே என்று அருளிச் செய்கிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் முறையும் –இயலும் இசையும்
படுகதையும் –பழைய சரித்ரங்களைக் கூற வந்த -இதிஹாசங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை அறிவிக்கும் புராணங்களும்
ஈட்டிய தீயும் -பஞ்சீ கரணத்தால் பல குணங்களும் தன்னிலே அமையும் படி சேர்க்கப் பட்ட அக்னியும் –
இரு விசும்பும் –பரந்த ஆகாசம் முதலான பஞ்ச பூதங்களும் –
-கேட்ட-மனுவும் -வேதங்களில் ஓதப்பட்ட மனு பகவான் அருளிச் செய்த தர்ம சாஸ்திரமும் –மனு சொல்வது எல்லாம் மருந்தாய் இருக்குமே -என்பர்
சுருதி மறை நான்கும் மாயன்-தனமாயையில் பட்டதற்பு-சங்கல்பத்தால் உண்டான தத்வங்களாகும் –

———————————————————————————————–

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

எனது குற்ற மிகுதியைக் கண்டு இகழாமல் -என்னுடைய ஸமஸ்த கருமங்களை உரு மாய்ந்து போம்படி
திரு உள்ளத்தை என் பக்கலில் வைத்து அருளினான் -என்கிறார்
கடல் வண்ணன்-தான் -தற்பென்னைத் தான் அறியா னேலும்-என்றது சர்வஞ்ஞன் தனது குற்றங்களை
அறிந்திலேன் -என்கிறார் –நைச்சியனுசந்தானம் பண்ணுகிறார்
எற் கொண்ட எவ்வினையும் -எற் கொண்ட-வெவ்வினையும் -பாட பேதங்கள் –வெவ்வினையும் மோனை இன்பத்துக்கு ஒக்கும் –

———————————————————————————–

எம்பெருமான் திருநாமத்தை யாதிருச்சிகமாக கேட்கப் பெற்ற பரமசிவன் விகாரம் அடைந்ததே வாசா மகோசரம்
என்றால் சாஷாத் கரிக்கப் பட்டவர்கள் படும் பாடு சொல்லக் கூடியதோ-

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78–

கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கோலோ -திருவாய் -6 -7 -3 -இங்கு ஈடு –
-என் செய்யுங்கோலோ –சொல்ல மாட்டாள் –தவிர மாட்டாள் –அழாது ஒழிய மாட்டாள் –எங்கனே படுகிறாளோ –
-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்
-அவன் தன்னையே கண்டு அனுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே
-அனுசந்தான வேளையில் போல் அன்று இறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் –
காமன் உடல்-கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த -வண்டலம்பும்-தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து
அங்கு-ஆர் அலங்கல் ஆனமையால் –ஆய்ந்தால் -மிகவும் அசைந்து போனமையை ஆராய்ந்து பார்த்தால் —கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
உண்மை உணர்த்த -நீர் யாரை உபாசிக்கிறீர் -என்ற கேள்வி வியாஜத்தாலே-பகவான் நாமங்களை சிவபெருமானுக்கு உணர்த்த
–ஸ்மரித்த மாத்திரத்திலே -கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்றும் உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர-என்றபடி உள் குழைந்தான்-
ஆர் அலங்கல் ஆனமை–அலங்கல் மாலைக்கும் அசைவுக்கும் பெயர் -பூ மாலை போலே துவண்டு விழுந்தான் என்கை
ஆனமையால் -ஆல்-என்பதை ஆய்ந்து என்பதுடன் கூட்டி ஆய்ந்தால் -என்ற படி

————————————————————————————————

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

தம்-மெய்குந்த மாக விரும்புவரே–தங்கள் உடம்பை வியாதியாக எண்ணுவர் –
ஆதிப்பெருமானை அன்பினால் ஆய்ந்து கொண்டு -தங்களுடைய வாய்ந்த மனத்திலே அவனை இருத்த வேணும் என்னும்
விருப்பம் யுடையவர்கள் -தங்களுக்கு என்று இருப்பட்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்தை பெற்ற போது பெறுகிறோம்
என்று ஆறி இருக்கை அன்றிக்கே -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ-என்று விரைந்தவராய்க் கொண்டு
-அதற்கு இடையூறாய் இருக்கிற இவ் உடல் என்று தொலையும் -என்று இருப்பார்கள் –
வடுக பாஷையில் –குந்தம் என்று வியாதிக்குப் பெயர் -என்பர் பூர்வர்கள் –

————————————————————————————————–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

– உலகம்-பரந்து—பாடின வாடின கேட்டு –சிறந்த பாகவதர்கள் எங்கும் திரிந்து பாடின பாட்டுக்களையும் ஆடின ஆட்டங்களையும் கேட்டதனால் –
உலகம் உயர்ந்தோர் மாட்டே -சிறந்த பாகவதர்கள் -என்றபடி
படு நரகம்– வாசற் கதவு-வீடின–குரூரமான நரகங்கள் வாசல் கதவுகள் விட்டு ஒழிந்தன -நரகங்கள் புல் மூடிப்போனவே
ஆனபின்பு –
அறிவிலா மனுஷர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒலியும் அன்றே –
மேலொருநாள் வெள்ளம் பரக்க–முன்னொரு காலத்தில் பிரளய வெள்ளம் பரவின போது
உலகம் கரந்து காத்து அளித்த கண்ணன் -உலகங்களை எல்லாம் திரு வயிற்றிலே மறைத்து வைத்து
துன்பங்களைப் போக்கி ரஷித்த -கண்ணன் விரைந்து அடைமின் –

————————————————————————————————–

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

நீ -ஞானம் சக்திகளில் குறைவற்ற நீ
கற்ற மொழியாகிக் கலந்து -நான் கற்ற சொற்களுக்கு பொருளாக இருந்து கொண்டு -என்னோடு ஒரு நீராகக் கலந்து –
நற்றமிழை விதையாக வித்தி–இப்பிரபந்தத்தை பக்தியாகிய பயிருக்கு விதையாக விதைத்து
என்னுள்ளத்தை – விளைத்தாய்-என் இருதயத்தை விளையும் படி கிருஷி பண்ணினாய்
மனம் கதவு –என்றும் மனம் -காணலாம் என்றும்–மனமே எம்பெருமானை அடைய பிரதிபந்தகம் என்றும்-
-காண்பதற்கு உறுப்பாகும் என்றும் வெவேறு சமயங்களில் நினைத்து
குதையும் வினையாவி தீர்ந்தேன் -பிரமிப்பதையே தொழிலாகக் கொண்ட நெஞ்சைத் தவிர்ந்தேன் –
மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோஷயா -நெஞ்சினால் நினைக்க முடியாத ஞான சக்திகளை யுடையனான நீ
என் வாக்கில் வரும் சொற்களுக்கு பொருளாய் இருந்து கொண்டு என்னுடைய நெஞ்சம் ஆகிற நிலத்திலே
தமிழாகிற விதையை வித்தை பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாய் யாகையாலே
நிலைபெற்ற நெஞ்சுடையேன் ஆனேன் என்கிறார் –

—————————————————————————-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

விட்டு ஏத்த மாட்டாத வேந்து –நன்றாக ஸ்துதிக்க மாட்டாத இந்திரனும் –
என் உள்ளத்தோடு நீராக கலந்து கொண்ட நன்மைக்கு ஈடுண்டோ –

——————————————————————————————

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் 
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் செய்து அருளும் உபகார பரம்பரைகளையும்- எத்தனை செய்தாலும்
திருப்தி அடையாமல் அடியார்க்கு என் செய்வான் என்றே இருப்பவன்
வேந்தராய்-விஷ்ணுவின் அம்சம் இன்றி அரசராய் இருக்க முடியாதே –
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் –திருவாய் -4-4-8-
விண்ணவராய்-வருணாதி தேவர்களையும் இருப்பவன்
விண்ணாகி-ஸ்வர்க்காதி அனுபவங்களை அளிப்பவனும் அவனே
தண்ணளி –கிருபை -அருள் சேதுபவனுமாய் -/ மால் வண்ணன்-வியாமோஹமே வடிவு எடுத்தவன்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய்–எல்லா நன்மைகளும் செய்யும் -உறவினர் -தாய் மற்றும் எல்லாருமாய்
பின்னால் தான் கொடுக்கும்-இவ்வளவுக்கும் மேலே தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அருள்வான் –
தான் செய்யும் பிதிர்-இவை எம்பெருமான் செய்யும் அதிசயங்கள் –

———————————————————————————————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் -விஷயாந்தரங்களில் புகுந்து விகாரப்படும் நெஞ்சுடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடுஎதிர்வன்–ஞானத்தில் பரமசிவனொடு ஒத்து இருப்பான் -என்னலாமாயினும்
அவன் எனக்கு நேரான் –ஈஸ்வரோஹம் என்னும் -அந்த ருத்ரன் நித்ய தாசனான -என்னோடு ஒவ்வான்
-அதிரும்-கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –ஒலிக்கும் வீரக் கழலை அணிந்துள்ள ராஜாதி ராஜனான கண்ணபிரானையே
எந்நாளும் தொழும் படியாக ஆசைப்படுவதையே நித்ய கர்மயமாக ஏற்றுக் கொண்டு இருக்கிற அடியேன் –

——————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: