திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

எம்பெருமான் நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்ற பாக்யம் தன்னத்தே என்கிறார் –
மதுவை அளித்த எம்பெருமானை மனசில் கொண்டால் துக்கம் வாராது -அப்படி செய்ய வேண்டி இல்லாமல் தானே தம்மை விஷயீ கரித்தான் என்கிறார்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ்–இன்று ஒன்றி நின்று உலகை -சமஸ்த லோகத்தையும் விடாதே நின்று-தன் ஆஞ்ஞை செல்லும்படி நடத்தினவன்
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று–என்பர் பெரியவாச்சான் பிள்ளை –இன்று பாடமே சிறந்தது –
ஏழ் -உலகை -ஒன்றி நின்று-ஆணைஓட்டினான்-சென்று -ஒன்றி நின்ற திரு-இன்று -எனக்கே தான்-எங்கும் தன் செங்கோல் செல்லும்படி
தனி யரசு செய்யும் திருமால் தானே எழுந்து அருளிப் பொருந்தி நெஞ்சில் வாழும் படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு –

—————————————————————————–

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62–

திருமாலின் தேன் மிக்க திருத் துழாய் மாலையை அணிந்து கொள்ளப் பெற்றால் -ஸ்ரீ யபதியே சிறந்த தெய்வம் -என்று அறியலாகும் –
திருவிருந்த-மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடிப் பெறாமையாலே
திரு நின்ற பக்கம் திறவிது என்று -உணரப்பெற்றிலர்-என்ற கருத்தை உய்த்து உணர வேண்டும்
அபாங்க பூயாம் சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத்-பிராட்டி உடைய நிரம்பிய கடாக்ஷம் பட்ட வஸ்துவே பரப்ரஹ்மம் ஆனது -பட்டர் –
கரு நின்ற -கரு நின்றவர்களை -கர்ப்பப் பையில் தாங்கிப் பிறப்பது இறப்பது -இப்படிப் பட்டவர்களை
பரதெய்வம் என்று கற்றார் இடம் சொன்னால் முகம் சிதறப் புடைப்பார்கள் ஆதலால் அன்னவர்கள் இடம்
வாய் திறவாமல் கல்லார்க்கு உரைப்பாராம் -கல்லார் -கல்வி பயிலாத மூடர் –

——————————————————————————————-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

தாரா கணப் போர்-நக்ஷத்ரங்களுடைய சுப அசுப நிமித்தமான சஞ்சாரத்தை
விரித்துரைத்த -ஜ்யோதிஸ் சாஸ்த்ர முகத்தால் வெளியிட்டு அருளினவனும்
வென்னாகத்துன்னை-பிரதிகூலருக்கு தீக்ஷணமான திருவனந்த ஆழ்வானுக்கு அந்தராத்மா ஆகிய உன்னை –
தெரித்து -அனுசந்தித்து –
எழுதி-வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்-பூசித்தும் போக்கினேன் போது–எதுக்கு எண்ணில்
தரித்து இருந்தேனாகவே–சத்தை பெறுவதற்காக -சாதன அனுஷ்டான ரூபமாக அல்ல –

———————————————————————————————–

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

தம் கால ஷேப க்ரமத்தை அருளிச் செய்தார் கீழ் இதில் பிறர் கால ஷேப க்ரமம் உபதேசிக்கிறார்
அவன் திருவடிகளில் புஷபங்களை பரிமாறி திரு நாமங்களை சொல்லி ஏத்தி இறைஞ்சுவதே வேண்டும் என்கிறார்
போதான விட்டிறைஞ்சி -ஏதேனும் பூ -புரிவதுவும் புகை பூவே -1 -6 -1 —

——————————————————————————–

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

எம்பெருமான் விஷயமாக இப்படிப்பட்ட சொல் மாலைகளை சிந்தித்து இருப்பதுவே நமக்கு உற்றது என்ற அத்யவசாயம் கொண்டேன் –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் 9 -1 -7 –கண்டீர்கள் அந்தோ —-குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே —
மாதவனை சொல்மாலைகள் கொண்டு யாதேனும் வல்லவா சிந்தித்து இருக்கிற தமக்கே வைகுந்தம் உண்டு -மற்றையோர்க்கு இல்லை –
மாதாயா--மாது -அழகுக்குப் பெயர் -தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே-
மாதா -தாய் போலே அளிப்பவன் என்றுமாம் -/ மாலவனை-மாயவனை -பாட பேதம் –

———————————————————————————————

கீழே -யாதானும்-வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து-இல்லையோ சொல்லீர் இடம்–என்றதுமே எம்பருமான்
நம் இருப்பிடத்தை இவர் ஆசைப்படுவது என் -இவர் நெஞ்சு அன்றோ நமக்கு உத்தேச்யம் -என்று
இவர் திரு உள்ளத்தே புகுந்து அருள -அத்தை அருளிச் செய்கிறார் –

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66–

இதற்கு முன்னே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -சகல வித கைங்கர்யங்களுக்கும் உரிய திரு வனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளி
இன்று முதலாக மேலுள்ள காலம் எல்லாம் எனது நெஞ்சையே தனக்கு இடமாக அமைத்துக் கொண்டான் ஆயிற்று –
இப்படி அவன் தானே வந்து விரும்பப் பெற்ற பாக்யத்தால் -அடியேன் நளிர் மதிச் சடையனாவது நான் முகக் கடவுளையோ
நெஞ்சில் கொள்ளவோ வாங்கவோ இனி பிராப்தி எது -எம்பெருமானை அண்டை கொண்ட மிடுக்கு எனக்கே அன்றோ
திடமாக வையேன்-பரம் பொருளாக மனத்தில் கொள்ள மாட்டேன் / வையேன் நான் ஆள் செய்யேன் –-பரதத்வம் இன்னது என்று
கண்டு அறியத்தக்க ஸூ ஷ்ம புத்தி யுடையேனான நான் அந்த தேவதாந்தரங்களுக்கு தொண்டு செய்யவும் மாட்டேன் —வை -கூர்மை -என்றவாறு –
இப்படி சொல்வதற்கு காரணம் – வலம் -திருமாலின் பரிக்ரஹமாய் இருக்கப் பெற்ற மிடுக்கே யாம் –

————————————————————————————-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67–

எம்பெருமானை ஸ்துதிப்பதே நன்மை -நல் குலம் தரும் என்று நான் விஸ்வஸித்து இருக்கிறேன் -இதற்கு விபரீதமாக
கெடுதலை விளைத்தலும் ஆனாலும் -எம்பெருமானை எத்தகையே உத்தேச்யம் –
வலமாக -குலமாக-அன்றிக்கே மாட்டாமை தானாக -இருந்தாலும் ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானை ஸ்துதிப்பேன் -என்கிறார் –
குலம் தரும் செல்வம் தந்திடும் –வலம் தரும் மற்றும் தந்திடும் –நாராயணா என்னும் நாமம் —

—————————————————————————————

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷ மபீ வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம-கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன ப்ரபந்நான்
பிரபுரஹம் அந்நிய ந்ரூணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –3 -7 -14 –
அவன் தமர் எவ்வினையாராகிலும் எம் கோன் அவன் தமர் என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப்பட்டு
அறியார் கண்டீர் -அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் -பொய்கையார் –
கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்–நம்மாழ்வார்
மூவுலகு யுண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -நாவலிட்டுழி தருகின்றோம்
நமன் தமர் தலைகள் மீதே -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஏத்தியுன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாமல் சோத்தம் நாம் அஞ்சுதம் என்று
தொடாமை நீ காத்தி போய்க் கண்ண புரத்துறை யம்மானே-திரு மங்கை ஆழ்வார் –
திறம்பேல்மின் கண்டீர் -ஞாபகப் பிசகினால் அந்த தூதர்கள் அதிகாரம் செலுத்தினால் அனர்த்தம் விளையும்
திருவடி தன் நாமம்-மறந்தும் புறம் தொழா மாந்தரை –திருவடி -அடி -அடிகள் –ஸ்வாமிக்கு வாசகம் –
தேவதாந்த்ர பற்று இல்லாமையே முக்கியம் -அந்நிய சேஷத்வம் ஒழிவதே பிரதானம் -தேவர்களுக்கு சேஷமான
புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை சம்சாரிகளுக்கு சேஷமாக்குகை –
மாந்தரை-பாட பேதம் -தப்பாகும் வெண்டளை பிறழும்
ராஜ மஹிஷியிடம் காதல் கொள்ளாதே என்பதை ரகசியமாக சொல்லுவது போலே இங்கும்
காதில் சொல்ல வேணும் -பிறர் அறிந்தால் பொல்லாது ஆகுமே –

————————————————————————–

கீழே எம்பெருமான் திருநாம பாவானத்வம் அருளிச் செய்து இதில் அதன் போக்யத்தை அருளிச் செய்கிறார் –
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானைக் கேளாச் செவிகள் செவியல்ல கேட்டோம் –பெரிய திரு -11 -7 -2 –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

புவிக்கும் புவி யதுவே கண்டீர் -பூமியில் உள்ளவர்க்கு எல்லாம் நிழல் ஒதுங்க இடம் ஆவதும் புண்டரீகாக்ஷன் திரு நாமமே –
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன்–எம்பெருமானை யாதிருச்சிகமாகக் கிட்டப் பெற்றேன்
-நான் கிருஷி பண்ணி பெற்றேன் அல்லேன் -விதி வாய்த்தது
வேதார்த்த ரகஸ்ய சாரார்த்தமும் இதுவே
கவிக்கும்-நிறை பொருளாய் நின்றானை –மற்றவர்களை பாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருட வேண்டும் –
-இவனே ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் -அன்றோ –

——————————————————————————————–

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

லோக பிரசித்தம் அன்றோ –
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து–தான் ஒருவனாகி—ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும்–
தான் ஒருவனாகி—இரு நிலத்தைச்-சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்–மூன்று இடங்களிலும் அன்வயம் –
யானொருவன்- வறிகின்றேன் அல்லேன் –உலகம் எல்லாம் அறியும் -அன்றோ –

————————————————————————————————-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று-ஓதிய வாக்கதனை கல்லார்–சரம ஸ்லோகத்தையும்-அதன்-பொருளையும்
-அறியப் பெறாதவர்கள் -தத்வ ஞானம் பெறாதவர்கள் –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி –
-உபநிஷத் சாரம் -இதுவே -இத்தை அறியாதவர் -மெய்ஞ்ஞானம் இல்ல்லாத ஏதிலாராம் –சம்பந்தம் இல்லாதவர் -பகைவர் என்றபடி -த்விஷத-என்றபடி –
சேயன்–மிகப் பெரியன் –அணியன் -சிறியன்–அரியனாயும் எளியனாயும் இருப்பான் என்றவாறு –

———————————————————————————-

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

முத்தி மார்க்கம் தெரியாமல் சம்சாரத்தில் உழலும் ஆத்மாக்களுக்கு
இல்லறம் -என்னும்-சொல்லறம்--க்ருஹஸ்த விஹித தரமமாக -கர்மா யோகம் தஞ்சம் என்று சாஸ்திரம் சொல்வதும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல
இல்லேல் துறவறம் இல் என்னும் சொல்லும் -அன்றிக்கே ஞான யோகம் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களை
சொல் அல்ல -பிரமாணம் அல்ல -ஞான யோகம் சன்யாசம் என்றும் துறவறம் எண்டும் சொல்லக் கடவது இ றே –
இல்லேல் அல்லற அறம் என்னும் சொல்லும் -பக்தி யோகம் -தேச வாசம் திரு நாம சங்கீர்த்தனம்
-இவை உபாயங்கள் தஞ்சம் என்று சொல்லும் பிரமாணங்களும்
சொல் அல்ல -பிரமாணம் அல்ல –
-நல்லறம் ஆவனவும் -நல்ல தர்மங்களான திரு நாம சங்கீர்த்தநாதிகளும்
நால் வேத மாத்தவமும் –நான்கு வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்கள் எல்லாம் –
நாரணனே-ஆவது-ஸ்ரீ மன் நாராயணன் உடைய அனுக்ரஹத்தாலே பயன் அளிப்பன ஆகின்றன –
ஈதன்று என்பார் ஆர்-இவ்வுண்மையை மறுப்பார் யுண்டோ -அனைவராலும் அங்கீகரிக்கத் தக்கதே –
எந்த யோகத்தைப் பற்றினாலும் -முடிவில் அந்த அந்த யோகங்களினால் திரு உள்ளம் உகக்கும்
எம்பெருமானே பலன் பெறுவிக்க வல்லவன் -என்பதால் -அவன் திருவருளையே தஞ்சமாக கொள்ளுதல் ஏற்கும்
-இவ்வர்த்தம் சகல சாஸ்த்ர சித்தம்-சர்வ சம்மதம் -என்பதை –ஈதன்று என்பார் ஆர்–என்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: