திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

கீழே வானவரைக்காப்பான் மலை -என்றார் -அப்படி ரஷித்த ஒரு சேஷ்டிதத்தை அருளிச் செய்கிறார்
தலையாமைதான் ஒரு கை பற்றி -ஆமையான தான் இரு கை தலைப் பற்றி -என்றபடி
மேலே கொந்தளியாத படி மந்திரத்தின் உச்சியை ஒரு கையால் அமுக்கின படி –
இப்படி பரோபகாரமே போது போக்கானவன் திரு நாமங்களை வாயாராகி கூறுவதே வாய் பெற்ற பிரயோஜனம் –

————————————————————————

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திரு கபிஸ்தலம் பள்ளி கொண்ட பெருமாளை மங்களா சாசனம் அருளிச் செய்கிறார்
காணியும் இல்லமும் கைப்பொருளும் ஈன்றோரும் பேணிய வாழ்க்கையும் பேர் உறவும் -சேணில் புவித்தலத்து இன்பமும்
-பொங்கு அரவம் ஏறிக் கவித்தலத்தில் கண் துயில்வோன் கால் –பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்று எட்டு திருப்பதி அந்தாதி
இந்த ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் அருளிச் செய்த சரம ஸ்லோகமே நெஞ்சில் பதிந்து இருப்பதால் ஒரு வகைக் கெடுதலும் வராதே –

———————————————————————————————–

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து  உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை
-அடிமைச் சுவடு அசாதாரணம் என்றவாறு
உன்னையே சகல புருஷார்த்தமாக கொண்டு உன் வடிவு அழகிலே ஈடுபட்ட
-நீ அருளிய மயர்வற மதி நலம் பெற்ற நான் விலஷணன் அன்றோ -என்றவாறு –

——————————————————————————————–

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

இவ்வுலகத்தோர் படியை விரித்து அருளிச் செய்கிறார்
பரம நீசர்கள் என்பதை -தக்கோர் -என்று இழிவு சிறப்பு -ஷேப யுக்தி -மஹா வியாபர்களாக நினைத்து இருக்கும் சம்சாரிகள்
-விலைக்காட்படுவர்-திருமந்திரத்தின் பொருளுக்கு எதிர்த்தடையாக வயிற்று பிழைப்புக்கு பிறர்க்கு அடிமை பட்டு
-காசுக்கும் கூறைக்கும் கற்றை நெல்லுக்கும் தங்களை விற்று இருப்பர்
விசாதி ஏற்று உண்பர்-தங்கள் வியாதி நோய் மட்டும் இன்றி பிறர் நோய் வியாதி தீர எருமைக்கடா தானம் செய்ய
அத்தை நாலு நாள் ஜீவனத்துக்கு என்று வேறே ஏற்பார்கள் -அவ்வழியால் அவர்கள் வியாதியையும் அனுபவிப்பார்கள் –
தலைக்காட் பலி திரிவர் –பிழைத்தால் பிரஜை தலை அறுத்துக் கொடுப்பதாக ஷூத்ர தேவதைகளுக்கு பிரார்த்தித்து
அப்படியே அறுத்துக் கொடுத்து ஒழிவர்-
அபிராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்-ப்ராப்த விஷய
ப்ரவணனுக்குச் சொல்ல வேண்டா இறே -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மா முனிகள் -தாசி ஒருத்திக்கு நோய் விஞ்ச அவள் இடம் அன்பு கொண்டவன் தலை அறுத்து தர பிரார்த்தித்து
-நோய் தீர்ந்த வாறே அரிந்து கொடுத்த கதை உண்டே -முலைக் கால்–முலை வழியே
விடமுண்ட வேந்தனையே வேறாக -மற்றப் பேர் ஸ்துதிப்பதில் காட்டிலும் விலக்ஷணமாக
-வேறாக -பாட பேகம் ஒவ்வாது -தளை கெடுவதால் –

——————————————————————————————

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53-

கல்லாதவர் இலங்கை -கற்று உணர்ந்த மஹாநுபாவன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் துரத்தப்பட்டானே
–பொல்லாத-தேவரைத் -அமங்களுக்கு கொள்கலம் –ச்மாசானமே இருப்பிடம் –எலும்பு மாலை -விருபாக்ஷன் –
-கண் கொண்டு காணக்-அமங்களங்களை ஸஹித்துக் கொண்டாலும் ஸ்வ தந்திரமாக
கார்யம் செல்ல வல்லமை இல்லாதவர்கள் அன்றோ
திரு இல்லாத்-தேவரைத் தேறேல்மின் தேவு—ஸ்ரீ யபதித்தவம் இல்லாதவர்கள் -இவர்களைத் தெய்வங்களாக நினைக்க வேண்டாம்
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் -பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை -ஆணம் என்று
அடைந்து வாழும் மாதர்கள் -எம்மாதி பால் -பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்க கிற்றிரே –திருச் சந்த விருத்தம்

———————————————————————————

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

சகல தெய்வங்களும் சகல பதார்த்தங்களும் எம்பெருமானுக்கு சேஷ பூதம் என்று
அறிய மாட்டாதார்கள் எவ்வளுவு கற்றாலும் பயன் இல்லையே
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —
அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
–யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –

———————————————————————————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

தேவதாந்தர போஜனம் செய்து அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –
அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூ கமும் இன்றி –நிரதிசய மோக்ஷ ஸூ கமும் இன்றிக்கே ஸ்வர்க்க ஸூ கத்தை யுடையவர் என்றவாறு –

——————————————————————————–

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

அல்ப பலன் தருமவர்களே ஆகிலும் ரக்ஷிக்க வல்லவர்கள் இல்லை என்பதை பாணா ஸூர விருத்தாந்தத்தால் காட்டி அருளுகிறார்
அவர் இவர் என்று இல்லை -உயர்ந்தவர்கள் – தாழ்ந்தவர்கள் என்றவாறு
அநங்க வேள் தாதை -மன்மதன் -ப்ரத்யும்னனுக்கு ஜனகன் –
ருத்ர தாண்டவத்துக்கு பாணன் மத்தளம் தட்ட மகிழ்ந்து ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் வலிமை செல்வம் அருளி
-சபரிவாரனாய்க் கொண்டு வாசலில் காவலும் செய்தான் -பரிவாரங்களோடு தோற்றதால் —ஒருங்கு தோற்றான் -என்கிறார் –
திருப் பாற் கடலை உவரிக் கடல் என்றது -சமுத்திர சாம்யத்தைப் பற்ற –

—————————————————————————————-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

அனைத்தும் அவன் இட்ட வழக்கு -புண்ய பாபங்கள் அனுக்ரஹம் இலக்கணவர்களை நல்வினை செய்வித்தும் –
நிக்ரஹம் இலக்கணவர்களை தீ வினை செய்வித்தும் –
நல் வினைகள் பயனாக தேவ யோனியில் பிறப்பித்தும் -தீ வினைகள் பயனாக அசுர யோனியில் பிறப்பித்தும்
-இரண்டின் பயனாக பூமியில் பிறப்பித்தும் -சங்கல்ப அதீனம் என்றவாறு
அவன் திருநாமங்களும் –என் நெஞ்சமானவர் –ஓன்று போலும் -நெஞ்சத்திலே சத்தை பெற்று இருப்பவர்
அன்றிக்கே கௌரவம் தோற்ற நெஞ்சினார் -என்னவுமாம்
வானவர் தானவர் தாரகை -பூமி -என்நெஞ்சம் -ஆகிய எல்லாம் பெரும் குருந்தம் சாய்த்தவனே -என்றவாறு –

————————————————————————

என் நெஞ்சமேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

தன் நெஞ்சத்தில் அஞ்ஞானம் போக்கி அங்கே நிரந்தர வாசம் பண்ணி அருளும் ஆபத் ரக்ஷகன் –
பக்கல் அன்பு விளைந்தமையை அருளிச் செய்கிறார்
மண்ணளந்தான் -என்னெஞ்சு -மேயானை – மண்ணளந்த திருக் கோலத்துடன் நெஞ்சகத்தில் இருந்தமையையும் அருளிச் செய்கிறார்
இருள் நீக்கி -வினை எச்சம் அன்று -பெயர்ச் சொல் -இருளை நீக்குகின்றவன் என்றபடி -அத்தாலே எம்பிரான் -உபகாரகன் -ஆனான் –
இப்படிப்பட்டவனை நெஞ்சில் கொள்ளாத ருத்ரனுக்கும் ப்ரஹ்மஹத்தி தோஷம் தன் உகப்பாக செய்து அருளி
உகந்த எம்பெருமானுக்கு என் அன்பைக் செலுத்தினேன் என்கிறார் –

———————————————————————————

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

அன்பாவாய் -அன்பே வடிவானவன் -அளவற்ற அன்பு கொண்டவன் என்றபடி –
ஆரமுதமாவாய் அடியேனுக்கு-இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய்–தாய் தந்தை மக்கள் மனைவி மற்றும் அனைவராலும்
உண்டான ஆனந்தம் உன்னை அடைந்து பெற்றேன் –இப்படியெல்லாமும் ஆவதற்கு ஆதி ஸ்ரீ யபதி–
பொன் பாவை-கேள்வா கிளரொளி -பிராட்டியைக் கைப் பிடித்ததனால் பெற்ற தேஜஸ் ஸூ –அப்ரமேய ஜனகாத்மஜாயா
என் கேசவனே கேடின்றி-ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் –அடியேனான நான் ஆள்பட்டேன் -காத்து அருள்வாய் -என்கிறார் –

—————————————————————————

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60–

ஆட் பார்த்து உழி தருவாய்-நம்மைத் தேடிப்பிடிக்க அலைந்து திரிகின்றானே –ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
-ஞானானம் லப்தவா –பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
நம் வலையில் சிக்குவார் என்று நீ திரிய -யாதிருச்சிகமாக சிக்கிக் கொண்ட என்னை விட்டு விடலாகாது -என்கிறார்
கண்டு கொள் என்றும் நின்-தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை –இப்போது உன் திருவடிகளையே நோக்கிக் கொண்டு
இருக்கும் நிலைமையை என்றுமே இருப்பதாக நீ கடாக்ஷித்து அருள வேணும்
கேட்பார்க்கு-அரும் பொருளாய் நின்ற–நீயே காட்டக் கண்டு -உன் திருவருளால் அறியும் அத்தனை –
வரங்கனே உன்னை-விரும்புவதே விள்ளேன் மனம்—இத்தை கண்டு கொள் –என்று கூட்டிப் பொருள் கொள்க –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: