திவ்ய தேச அனுபவம் –நடு நாடு -/ தொண்டை நாடு / மலை நாட்டு -ஸ்தல மாஹாத்ம்ய விளக்கம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

41-திருவஹீந்திர புரம்
மூலவர் -தெய்வ நாயகன் / தேவ நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -வைகுண்ட வல்லி -ஹேமாம் புஜ வல்லி
விமானம் -சுத்த சத்வ விமானம்
தீர்த்தம் -சேஷ தீர்த்தம் -கருட நதி –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -3-1-

அஹி-பாம்பு -ஆதி சேஷனால் ஏற்படுத்தப் பட்ட க்ஷேத்ரம் -தாஸ சத்யன் -அடியார்க்கு மெய்யன்
ஓவ்ஷாத்ரி திருமலை -ஹயக்ரீவ பெருமாள் –
ஆதிசேஷன் பெரிய திருவடி -போட்டி -ஆதி சேஷன் வாளால் ஓங்கி அடித்து பாதாள கங்கை -சேஷ தீர்த்தம் –
பெரிய திருவடி விராஜா தீர்த்தம் -அதுவே கருட நதியாக ப்ரவஹிக்கிறது -மருவி கடில நதி -யானது
திரிசூலம் வீச -சக்கரத்தாழ்வார் மேலே பட -மூவராகிய காட்சி ருத்ரனுக்கு காட்சி –
ஸ்ரீ தேசிகனுக்கு பிரத்யக்ஷம் -பரிமுகத்தால் —தபஸால் பெரிய திருவடி -அருள -கருட பஞ்சாசத்-
ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -74 படிக்கட்டுகள் 74 சிம்ஹாசனபதிகள் நினைவூட்ட –
அச்சுயத சதகம் –

———————————————————————————-

42-திருக் கோவலூர்
மூலவர் -தேஹளீசன் -த்ரி விக்ரமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஆயன்
தாயார் -பூங்கோவல் நாச்சியார் புஷ்ப வல்லித் தாயார்
விமானம் -ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -தக்ஷிண பிநாகினி–தென் பெண்ணை ஆறு –கிருஷ்ண -சக்ர தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -பொய்கையை ஆழ்வார் -பூதத்தாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

மிருகண்டு மகரிஷிக்கு -த்ரிவிக்ரமனாக சேவை -அவர் ஆஸ்ரம இடை கழியே கர்ப்ப க்ருஹமானது
வலது திருப் பாதம் தூக்கி -இடது திருப்பாதம் கீழே ஊன்றி சேவை
வலது திருக்கையில் திருச் சங்கும் இடது திருக்கையில் திருச் சக்கரம் -சேவை
விஷ்ணு தூக்கை சேவையும் உண்டே பிரகாரத்தில்
முதல் ஆழ்வார்கள் நெருக்கு உகந்த பெருமாள் -கரும்பு சாறு போலே மூன்று திருவந்தாதிகள்-நீங்கரும்பு கோவலன்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -இன்றும் முதல் சன்னதி -கண்ணனுக்கு வூராக -உலகமான- தீண்டிய இரண்டு அவதாரங்கள்
சங்கு சக்கரம் மாறி -திருவடிகளும் மாறி இங்கே சேவை –
வர்ண கலாபத்துடன் சேவை

———————————————————————————————-

43-திருக் கச்சி -அத்திகிரி –
மூலவர் – பேர் அருளாளன் -தேவாதி ராஜன் -தேவைப் பெருமாள் -நின்ற திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரும் தேவித் தாயார் -மஹா தேவி -தேவ தேவிகா
விமானம் -புண்ய கோடி விமானம் –
தீர்த்தம் -அநந்த சரஸ் -சேஷ தீர்த்தம் –
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமங்கை ஆழ்வார் –

பெருமாள் கோயில் ஸத்ய வரத க்ஷேத்ரம் –
க்ருத யுகத்தில் பிரம்மதேவனாலும் –த்ரேதா யுகத்தில் கஜேந்த்ரனாலும் -த்வாபர யுகத்தில் ப்ருஹஸ்பதியாலும்
-கலி யுகத்தில் அனந்தநாளும் ஆராதிக்கப் பட்டார்
அஸ்வமேத யாகம் -வேள்வியில் பட்ட வடுக்கள் உடன் திரு முக மண்டலா சேவை –
புண்ய கோடி விமானத்துடன் ஹவிர் பாகம் பெற்றுக் கொள்ள எழுந்து அருளினார்
இங்கு செய்யும் புண்ய கார்ய பலங்கள் ஒரு கொடு மடங்காகப் பலன் தரும் –

முதல் ஆழ்வார்கள் திருமழிசை ஆழ்வார்கள் -நால்வரும் -ராமானுஜர் தொடக்கமான பல ஆச்சார்யர்கள் /15 காஞ்சியிலே /
தியாக ராஜன் -உழைத்து -பலம் அரங்கன் அனுபவிக்க –
9 ஷேத்ரங்கள் பெரிய காஞ்சி / 6 சின்ன காஞ்சி
நகரேஷூ காக்கி –நீண்ட திரு வீதிகள்-
வையம் பிரசித்த வைகாசி கருட சேவை -தினமே 7 மைல் புறப்பாடு –
அத் திகிரி –காண் தகு தோள் அண்ணல் –அத்தி கிரி வேல மலை -குடை கொடை சேவை அழகு பிரசித்தம் இங்கு
ஸ்ரீ நிதிம் ஸ்ரீம் அபார அர்த்தினாம்
புஷ்கரம்-நீர் நைமிசாரண்யம் வன ரூபம் பிரமன் -முதலில் போக -இங்கு சாவித்ரி தேவி வைத்து யாகம் பண்ண
இருள் -தீப பிரகாசர் தூப்புல் திருத் தன் கா —
பூதம் ஏவ -அஷ்ட புஜ / யானைகள் ஓட்ட வேளுக்கை ஆளரி / வேகவதி ஆறாக தானே வர -தடுக்க
வெஃகா சேது -திரு வெஃகா -பள்ளி கொண்டு தடுக்க –
இறுதியில் சித்திரம் ஹஸ்தம் தேவ பெருமாள்
இரட்டைப் புறப்பாடு பிரசித்தம்
அத்தி வரதர் -40 வருஷம் -புஷ்கரிணியில் இருந்து -இவரே மூல மூர்த்தியாக முன்னால் இருந்தாராம் –
ஆ முதல்வன் -சம்ப்ரதாயம் -திரு மங்கை ஆழ்வாருக்கு வேகவதி மண்ணையே பொன்னாக அளந்து /
வேடன் வேடுவிச்சி -சாலைக் கிணறு -தீர்த்த கைங்கர்யம் –
கஜேந்திர தாசர் திருக் கச்சி நம்பி ஆலவட்டம் கைங்கர்யம் -மாசி மிருக சீர்ஷம் -ஆறு வார்த்தை –
கூரத் ஆழ்வான் -வராத ராஜ ஸ்த்வம் -கண் பார்வை -பெருமாளையும் ராமாநுஜரையும் மட்டும் பார்க்க –

————————————————————————-

44-அட்ட புயகரம் -அஷ்ட புஜம்
மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -கஜேந்திர வரதன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -அலர்மேல் மங்கை — பத்மாசினி
விமானம் -ககநாக்ருதி விமானம்
தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரிணி
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மங்கை யாழ்வார் -வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு

ஆதி கேசவ பெருமாள் முதலில் இருந்தார் -மகா சந்தன் -தபஸ் -செய்ய இந்திரன் கலைக்க ஆண்யானை பெண் யானை ஏவி விட
இவரும் பெண் உருக் கொண்டு–புலன்கள் ஏவ அலைய மிருகண்டு மகரிஷி மூலம் நல்ல வழி திரும்பி
14000 புஷபங்கள் கொண்டு அர்ச்சித்து –
பிரமன் வேள்வியைத்தடுக்க -சரஸ்வதி யானைகளை ஏவ –
-பெருமாள்-வலது திருக்கையில் -சக்கரம் -கத்தி -அம்பு-தாமரை மலர்
– இடது திருக் கையில் -சங்கு- வில் -கேடயம்- கதை -7 திவ்வியாயுதங்களால் விரோதிகளை போக்கி இஷ்ட பிராப்திக்கு தாமரை
இங்கு மட்டுமே பரமபத வாசல் உண்டு -கோயில் வாசலும் -வைகுண்ட வாசலும் ஒரே நேர் கோட்டில்-
சித்திரை ரோஹிணி -திரு வவதாரம் —
பரமசிவன் செய்யும் யாகத்தை சரபம் தடுக்க -அதுவும் பகவானைக் கண்டு பயந்து சரண் அடைந்ததாக ஐதீகம்

—————————————————————————–

45-திருத் தண்கா
மூலவர் -தீப பிரகாசர் -விளக்கொளிப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -மரகதவல்லி
விமானம் -ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -சரஸ்வதி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

சரஸ்வதி பிரமனின் வேள்வியைத் தடுக்க உலகை இருளால் மூழ்கடிக்க -பகவான் தானே ஒளியாக இருந்து ரக்ஷித்து அருளினார்
உலகுக்கு பிரகாசமாக -போற்றப்படுகிறார் –
தூய்மையான தர்ப்பம் வளர்வதால் தூப்புல் -திரு தேசிகன் அவதார ஸ்தலம் -ஓலைச்சுவடி -உடன் தேசிகன் சேவை
-விளக்கொளியை -மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே
சித்திரை ரேவதி திருவவதாரம் –குளிர்ந்த இடம் -அஞ்ஞானம் போக்கி அருளுவார்

——————————————————————————————–

46 – திரு வேளுக்கை
மூலவர் -வேளுக்கை ஆளரி -முகுந்த நாயகன் -நரசிங்கப் பெருமாள் / அமர்ந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் –வேளுக்கை வல்லி -அம்ருத வல்லி
விமானம் -கனக விமானம் –
தீர்த்தம் –ஹேம சரஸ் தீர்த்தம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் –திருமங்கை யாழ்வார் –

ஹிரண்ய கசிபுவை வாதம் செய்த பின்பு அமைதியான இடம் தேடி ஐந்தே வந்தார்
பிருகு மகரிஷி தபஸ் செய்து அவர்க்கு பிரத்யக்ஷம்
வேளுக்கை ஆளரி -பிரசித்தமான திரு நாமம்
தொண்டை நாட்டில் இங்கும்-திரு நீரகம் -திருப்பாடகம் – மட்டுமே கிழக்கே திரு முக மண்டலம் –
வேள்-அரசன் -நரசிம்ஹ ராஜா -இருக்கும் ஆசைப்படும் தேசம் –
சித்திரை ஸ்வாமி திருவவதாரம் -காமாஷிகா அஷ்டகம் தேசிகன் -அருளிச் செய்தார் –
பிள்ளைப் பெருமாள் ஐ யங்கார் –உனக்கு உரியனான மைந்தன் உய்ந்தான் –உன் தாளுக்கு ஆகாதவர் -தானவர் கோன் கேட்டான் –

———————————————————————————————–

47 – திரு நீரகம் –
மூலவர் -நீர் வண்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -நில மங்கை வல்லி
விமானம் -ஜெகதீஸ்வர விமானம்
தீர்த்தம் -அக்ரூர தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

உலகு அளந்த பெருமாள் சந்நிதிக்குள் இருக்கும் சந்நிதி -இங்கு நீர்மை எளிமையைக் காட்டுகிறார் –
நீரிடை மீனாக திருவாவதரித்து -பிரளய காலத்தில் ஆலிலை கண்ணனாக துயின்றவனையே
நீரகத்தான் என்று மங்களா சாசனம் செய்துள்ளார் –
நீரகத்தாய் —கார் வானத்து உள்ளாய் கள்வா -உலகம் ஏத்தும் காரகத்தாய் –கள்வா –திரு நெடும் தாண்டகம் –
திரு விக்ரமன் குணங்களை -வெளிப்படுத்தும் பெருமாள் பிரகாரங்களில் -நீர்மை –தாயகம் -நீராக உருகி –
நாராயணன் -தண்ணீரை இருப்பிடம் ஆபோ நாராயண —

—————————————————————————————–

48 -திருப் பாடகம்
மூலவர் -பாண்டவ தூதர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ருக்மிணி -ஸத்ய பாமா
விமானம் -பத்ர விமானம்
தீர்த்தம் -மத்ஸ்ய தீர்த்தம்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் –திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -திரு மங்கை யாழ்வார் –

பாண்டவ தூதர் சந்நிதி -பிரசித்தம் -27 அடி உயரத்தில் வீற்று இருந்த திருக் கோலம் –
ஜனமேஜய மஹா ராஜாவுக்கு வைசம்பாயனர் -மஹா பாரதம் கதை யில் விஸ்வரூபம் -கேட்ட பின்பு அப்படியே
தரிசிக்க வேண்டும் என்று ராஜா ஆசைப்பட ரிஷி யாகம் செய்யக் கூறினார்
மஹா ராஜாவும் இந்த ஷேத்ரத்தில் அஸ்வமேத யாகம் செய்ய கண்ணன் இப்பொழுது எழுந்து அருளி இருக்கும் விதத்தில் தர்சனம் கொடுத்தார் –
அருளாலே பெருமாள் எம்பெருமானார் -பிரதிஷ்டை இங்கு –
பாடு அகம் -பெரிய இடம் -சகா தேவன் –உன்னை சிறை வைத்தால் சண்டை நடக்காதே –அடியேற்குத் தெரியும் ஓ ஆதி மூர்த்தி –

—————————————————————————————————–

49-திரு நிலாத் திங்கள் துண்டம்
மூலவர் -நிலாத் திங்கள் துண்டத்தான் -சந்த்ர சூடப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -நிலாத் திங்கள் துண்டத் தாயார் / நேர் ஒருவர் இல்லா வல்லி –
விமானம் -புருஷ ஸூ க்த விமானம்
தீர்த்தம் -சந்த்ர தீர்த்தம்
மங்களாசாசனம் -திரு மங்கை யாழ்வார் –

பார்வதி தேவி ஒரு மா மரத்தின் கீழ் பரமசிவனை அடையத் த்வம் செய்து கொண்டு இருக்க சிவன் அவளை
சோதிக்க எண்ணி மா மரத்தை எரிக்கிறார் -பார்வதி தேவி பகவானைப் பிரார்த்திக்க பகவான் நிலவின் ஒளி போன்ற
அம்ருத கிரணங்கள் கொண்டு மா மரத்தைத் தழைக்கச் செய்தார் –
ஆதலால் நிலாத் திண் கல் துண்டத்தான் -என்று பெயர் பெற்றார் -தாப த்ரயம் தீர்க்கும் பெருமாள் –
ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ளே / திங்கள் நிலா –சந்திரன் –பூர்ண சந்திரன் / துண்டம் -சின்ன இடத்தில் சேவை –

————————————————————————————————–

50-திரு ஊரகம்
மூலவர் -ஊரகத்தான்-உலகு அளந்த பெருமாள் -நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -அமுத வல்லி நாச்சியார் –
விமானம் -சார ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -சேஷ தீர்த்தம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -காமரு கச்சி ஊரகத்தாய் –

மஹா பலி த்ரி விக்ரம அவதாரம் செய்த பொழுது திருவடியின் கீழ் இருந்ததால் அந்த திருக் கோலத்தை சேவிக்க முடிய வில்லை –
அவனுடைய பிரார்த்தனைக்கு இணங்க சத்யவ்ரத க்ஷேத்ரம் இங்கே காட்டி அருளினான் –
பெரிய திரு உருவத்தை நிமிர்ந்து சேவிக்க முடியாததால் மஹா பலிக்காக ஆதி சேஷனாயத் திருக் கோலம்
கொண்டு சேவை சாதித்து அருளுகிறார் -உரகம்- சேஷன் –பாயாசம் அமுது செய்து -இடர் பாடுகள் நீங்கும் –

—————————————————————————————————–

51-திரு வெஃகா –
மூலவர் -சொன்ன வண்ணம் செய்த பெருமாள் / யதோத்த காரி / புஜங்க சயனம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கோமள வல்லி
விமானம் -வேத சார விமானம்
தீர்த்தம் -பொய்கை புஷ்கரிணி
மங்களா சாசனம் -பொய்கை ஆழ்வார் – பேயாழ்வார் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் – திரு மங்கை ஆழ்வார் –

பொய்கை ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –பிரமனின் யாகத்தை தடுக்க சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக வேகமாக ஓடி வர
பகவான் ஆற்றின் குறுக்கே அணையாக சயனித்து யக்ஞ வாடிக்கையைக் காப்பாற்றினார் –
இங்கு மட்டுமே திருக் காஞ்சியில் சயன திருக் கோலம் -பிரமன் சொன்ன வண்ணம் செய்ததால் இப்பெயர் பெற்றார் –
பின்பு திரு மழிசை ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்து அப்பெயர் நிலை நிறுத்தப் பட்டது -மாறிய சயனம் -திருவடி -திரு முடி -ஓரிருக்கை —
கனி கண்ணன் -செந்நாப் புலவன் -பைந்நாகப்பாய் சுருட்டி -ஓர் இரவு இருக்கை —
வேகா சேது ஸ்தோத்ரம் -தேசிகன்–திரு வெஃகா –வேகவதிக்கு அணை-
சித்திரை புனர்வசு நக்ஷத்ரம் –
—————————————————————————–

52-திருக் காரகம்

மூலவர் – கருணாகர பெருமாள் / நின்ற திருக் கோலம் / தெற்கே திருமுக மண்டலம் –
தாயார் -ரமாமணி நாச்சியார் / பத்மா மணி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் -அக்ராய தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

கார்ஹ ரிஷிக்குப் பெருமாள் அருளிய படியால் திருக் காரகம் -என்று பெயர் –
இன்னார் இணையார் பாராமல் கருணை பொழிபவன் -மேகங்கள் மேடு பள்ளம் பார்க்காமல் மழை பொழிவது போல் –

——————————————————————————

53-திருக் கார் வானம்
மூலவர் -கள்வர் -கார் வானப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -கௌரி தடாகம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தண்ணீர் தங்கும் இடம் -மேகம் தங்கும் இடம் -மேகம் மழை பொழிந்தால் வெளுத்து விடும் –
பகவான் எத்தனை கருணை பொலிந்த பின்பும் வெளுக்காமல் கறுப்பாகவே நிலைத்து இருப்பர் –
தண்ணீர் -தண்ணீர் தங்கும் மேகம் -மேகம் தங்கும் வானம் -திரு விக்ரமன் ஸ்வ பாவம் -மூன்றும் சேவிக்கலாம்
கார் வானத்துளாய் கள்வா -பாசுரம் –

——————————————————————————————

54-திருக் கள்வனூர்
மூலவர் -ஆதி வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / மேற்கே திருமுக மண்டலம் –
தாயார் -அஞ்சிலை வல்லி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் – நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தசரதர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் நடத்தும் முன்பு இப்பெருமாளை வணங்கிச் சென்றார் –
தனது ராம அவதாரத்துக்கு தன்னிடமே வந்து தசரதரை வெண்டைச் செய்த பெருமாள் இவர்
பார்வதி தேவியும் மகா லஷ்மித் தாயாரும் உரையாடிக் கொண்டு இருப்பதை பெருமாள் ஒளிந்து இருந்து
கேட்ட படியால் பார்வதி அவரைக் கள்வா -என்று அழைத்தார் –
அவளின் வேண்டுகோளுக்கு இணங்க பகவான் நின்றான் இருந்தான் கி
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது -சோரேண ஆத்ம அபஹாரம்-கச்சி கள்வா என்று ஓதுவது என் கொண்டு

——————————————————————————-

55-பவள வண்ணம்
மூலவர் -பவள வண்ணர் -ப்ரவாளேஸர் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -பவள வல்லித் தாயார்
விமானம் -ப்ரவாள விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

பெருமாள் இங்கு ப்ரவாள வர்ணம் -சிகப்பு -வர்ணத்தில் எழுந்து அருளி இருக்கிறார்
நான்கு யுகங்களில் -க்ருத யுகம் -வெள்ளை /த்ரேதா யுகம் -சிகப்பு -த்வாபர யுகம் -மாந்தளிர் பச்சை வர்ணம் /
கலி யுகம் -தனக்கே உரித்தான கரு நீல வர்ணம் -இப்படி நான்கு வர்ணங்களில் காட்சி அளிக்கிறார்
ப்ருகு முனிவருக்கும் அஸ்வினி தேவர்களுக்கும் ப்ரத்யக்ஷம் –
வைகாசி 5 திருநாள் -தேவராஜன் எழுந்து அருளுகிறார்
ஸ்ரீ யந்த்ரம் -பீடம் -தாயார் உத்சவர் எழுந்து அருளி
பவள வண்ணா எங்குற்றாய் –இங்கனே உழி தருகின்றேன்
இந்த சந்நிதிக்கு எதிரே பச்சை வண்ணர் சந்நிதி பிரசித்தம் –

——————————————————————————————

56- பரமேஸ்வர விண்ணகரம் –
மூலவர் -பரம பாத நாதன் -வைகுண்ட நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி
விமானம் -முகுந்த விமானம்
தீர்த்தம் -ஜரம்மத தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

பரத்வாஜர் முனிவருக்கும் ஒரு கந்தர்வப் பெண்ணுக்கும் குழந்தை பிறக்க -அங்கேயே விட்டுச் சென்றனர்
பகவானும் மஹா லஷ்மியும் வேடர்கள் போலே வேடம் இட்டு குழந்தையை வளர்த்தனர்
அவனே பரமேஸ்வர பல்லவ அரசன் ஆனான்
மூன்று அடுக்கு சந்நிதியையோ நிர்மாணித்தான் -கீழே அமர்ந்த திருக் கோலம்
/நடுவில் கிடந்த திருக் கோலம் / மேல் தலத்தில் நின்ற திருக் கோலம் சேவை –
தொல் பொருள் ஆராய்ச்சி பராமரிக்கும் திரு கோயில் -நிறைய அழகிய சிற்பங்கள் உண்டு –
இருந்து ஆய கலைகள் உபதேசித்து -நின்று ஆசீர்வதித்து -ஆராதிக்க கிடந்தது சேவை –
வைகுண்ட பெருமாள் -கீழே வீற்று இருந்து / வரம் தரும் மா மணி வண்ணன் உத்சவர்
யுவான் சுவான் இங்கே வந்த குறிப்புகளும் சிற்பங்கள்

—————————————————————————————-

57-திருப் புட் குழி
மூலவர் -விஜய ராகவப் பெருமாள் / வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மரகத வல்லி
விமானம் – விஜய கோடி விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

ஜடாயு மஹா ராஜருக்கு ஈமச்ச சடங்குகளை செய்து அருளிய திருத் தலம் -புள் -பறவை –
அவருக்காக குழி தோன்றிச் சடங்கு செய்த இடம் –
வெப்பம் தாங்காமல் பிராட்டி பின்னே சேவை -ஸ்ரீ தேவி பூ தேவி மாறி – சேவை-
க்ருத்ர புஷ்கரிணி நீராடி வயிற்றில் பச்சை பயிறு –காலையில்- முளைக்க வைக்கும் தாயார் குழந்தை பேறு அளிப்பார் –
குதிரை வாகனம் -கீல் குதிரை -பிரசித்தம் –
பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவவதார ஸ்தலம்
யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் பயின்ற தேசம்

——————————————————————————-

58-திரு நின்றவூர்
மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பத்தராவிப் பெருமாள்
தாயார் -என்னைப் பெற்றத் தாயார் / ஸூதா வல்லி –
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -வருண புஷ்கரிணி தீர்த்தம் –
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்
திருக் கடல் மல்லை –நின்ற வூர் நித்திலத் தொத்தினை –கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே
நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை –திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேனே –தொத்து -சொத்து
இரண்டு இடத்திலும் சென்று பெற்ற பாசுரங்கள் –

திருவாகிய மஹா லஷ்மி தனி சிறப்புடன் தங்கிய வூர் –
சமுத்திர ராஜன் இடம் சீற்றம் கொண்ட மஹா லஷ்மி அங்கு இருந்து இந்த ஷேத்ரத்தில் தங்கி விட்டாள்
பிரமானால் தூண்டப்பட்ட சமுத்திர ராஜன் இங்கு வந்துத் தாயாரை -என்னைப் பெற்ற தாயே -என்று
மனம் உருகி வேண்ட தாயாரும் மனம் கனிந்து இங்கேயே தங்கி அருள் புரிகிறார் –
திருமலை திருப்பதி பெரிய ஜீயர் அதீனம் -இந்த திவ்ய தேசம் —
வருணன் சமுத்திர ராஜன் இருவருக்கும் பிரத்யக்ஷம் –

———————————————————————————————

59-திரு எவ்வுள் –
மூலவர் -வைத்ய வீர ராகவன் – புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வீர ராகவன்
தாயார் -கனக வல்லித் தாயார் -வசுமதி
விமானம் -விஜய கோடி விமானம் -புண்யா ஆவரத்தக விமானம்
தீர்த்தம் -ஹ்ருத்தாப நாசினி தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வீஷாரண்ய க்ஷேத்ரம் -சாலி ஹோத்ர முனிவர் -சாலி எனப்படும் நெல் மணிகளால் புத்திர பெயர் வேண்டி யஜ்ஜம்-செய்தார் –
அவர் இவ்வூரில் பர்ண சாலை அமைத்து அதிதி ஸத்காரம் செய்து வந்தார் –
பெருமாளே இங்கு வந்து இவரிடம் உண்டு -நான் ஒய்வு எடுப்பதற்கு எவ்வுள் என்று கேட்டு அவ்விடத்திலேயே சயனித்துக் கொண்டார் –
திரு எவ்வுள் -பெயர் மருவி திரு வள்ளூர்-ஆக அழைக்கப் படுகிறது –
தை அம்மாவாசை -பிரசித்தம் / மது கைடபர்களை அழித்த வீரம் -வீர ராகவன் –
புஷ்கரிணி வெல்லம் கரைத்து -நோய்கள் தீரும் -கிங்க்ருஹேச ஸ்தோத்ரம் தேசிகன் -தர்ம சேனா புரம் அருகில் –அரசன் திரு மகள் -தாயார் –

———————————————————————————————-

60 -திரு வல்லிக்கேணி
மூலவர் -வேங்கடகிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ பார்த்த சாரதி
தாயார் -ருக்மிணித் தாயார்
விமானம் -ஆனந்த விமானம்
தீர்த்தம் -கைரவிணி புஷ்கரிணி
மங்களா சாசனம் -பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்

சுமதி மஹாராஜர் -திரு வேங்கடமுடையானை இரண்டு திருக் கரங்கள் உடன் சேவை சாதிக்க வேண்ட –
அவரை க் கைரவிணி புஷ்கரிணிக் கரையிலே த்வம் செய்யப் பணித்தார் –
அவ்வண்ணமே வியாசருக்கு சுமதி ராஜாவுக்கும் இங்கே வேங்கட கிருஷ்ணனாக சேவை சாதித்தார்
ருக்மிணி பல ராமன் ப்ரத்யும்னன் அநிருத்தனன் உடன் கண்ணன் சேவை சாதிக்கிறார் -சாத்விகி தேரோட்டி உடன்
பீஷ்மர் விட்ட அமுக்ககால் துளைக்கப் பட்ட திரு முக வடுக்கள் உடன் உத்சவர் பார்த்த சாரதி சேவை சாதிக்கிறார் –
அருகே மயிலாப்பூரில் பேயாழ்வார் அவதார ஸ்தலம் –
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பிறந்தவன் -ஐவருக்குக்கும் மங்களாசானம்
ஒப்பவர் இல்லா மாதர் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணி –
ப்ருந்தாரண்யம் துளசிக்காடு –வியாசரால் -ஆர்த்த்ரேயருக்கு -கொடுத்த மூல விக்ரஹம் –
மன்னாத பெருமாள் ஸ்தல பெருமாள் / தெள்ளிய சிங்கர் /
துர்வாசர் தபஸ் -விஸ்வகர்மா தேர் நிழல் -சாபம் தீர
முத்கலர்-தபஸ் -மீன் கூடாது என்பதால் -புஷ்காரிணியில் மீன்களே இல்லை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் -பேயாழ்வார் தெரு -தனி சந்நிதி –
-வாளா கிடந்தது –வாய் திறவான் -ஐந்தலை நாகத்து அணையான் -திரு மழிசை ஆழ்வார் –
இங்கே தபஸ் நெடு நாள் திரு மழிசை ஆழ்வார் -என்னை ஆளுடைய அப்பன் பிரசாதம்
-தனிக் கோவில் நாச்சியார் -வேத வல்லி தாயார் -ப்ருகு மகரிஷி திருக் குமாரி / நான்கு திருக்கரங்கள் மன்னாத பெருமாள் –
தெளிய சிங்க பெருமாள் வீதி /சப்த ரோமருக்காக கஜேந்திர வரதன் -7 நாள் தெப்ப உத்சவம் –

———————————————————————————————-

61-திரு நீர் மலை -தோயாத்ரி –
மலை அடிவாரக் கோயில் –
மூலவர் -நீர் வண்ணன் -ரெங்க நாதர் -நின்றான் நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அணி மா மலர் மங்கை -ரெங்க நாயகி
விமானம் -தோய கிரி விமானம்
தீர்த்தம் – மணி கர்ணிகா -ஸ்வர்ண -ஷீர -காருண்ய -சித்த புஷ்கரிணிகள்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மலை மேல் கோயில் –
மூலவர் -சாந்த நரஸிம்ஹர் -இருந்தான் -வீற்று இருந்த திரு முக மண்டலம் – கிழக்கே திரு முக மண்டலம்
ரெங்க நாதர் -கிடந்தான் -மாணிக்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -ரெங்க நாயகி –
மூலவர் -த்ரிவிக்ரமன் -நடந்தான் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
காண்டவ வானம் -முனிவர்கள் -600 வருடங்கள் -த்வம் செய்து நீர்மையை சேவிக்க பிரார்த்தித்தனர் –
அவர்களுக்கு கருணையை உணர்த்தி இந்த க்ஷேத்ரத்தையே நீர் மலையாக உருவாக்கினார்
வால்மீகி முனிவர் இங்கு மலை மேல் பெருமாளை சேவித்துக் கீழே இறங்கி புஷ்கரிணியில் தீர்த்தமாட
-நீர் வண்ண பெருமாள் அவருக்கு சீதா லஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் ஸஹிதமாக இராமனாக புஷ்காரிணியிலே சேவை சாதித்தார்
கோபுர துவாரம் -நேராக ராமர் சந்நிதியே -த்வஜ ஸ்தம்பம் தள்ளியே இருக்கும் –
திரு மங்கை ஆழ்வார் இப்பெருமாளை மங்களா சாசனம் செய்ய எழுந்து அருளிய போது இவ்விடத்தை சுற்றி
நீர் சூழ்ந்து கொண்டு இருக்க ஆறு மாத காலம் காத்து இருந்து பகவானை மங்களா சாசனம் செய்தார் –
இதனாலே திரு நீர் மலை -பெயர் பெற்றது -ஆழ்வார் தங்கி இருந்த இடம் இப்பொழுதும் திரு மங்கை யாழ்வார் புரம் -என்று அழைக்கப் படுகிறது –
திருக் கோவல் நகர் திரு வாலி குடந்தை புனல்நறையூர் –நீர் வண்ணன் -நரஸிம்ஹர் -உலக அளந்த பெருமாள் -ரெங்கன் -நான்கு புஷ்கரணிகள் நால்வருக்கும்
நீர் மலை -உறக்கமும் உறுதியும் -ரக்ஷணம் தீக்ஷை -ஸுலப்யம் -பரத்வம் –

———————————————————————————————

62-திரு இடவெந்தை
மூலவர் -லஷ்மீ வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார் -அகில வல்லி நாச்சியார் -கோமள வல்லித் தாயார் –
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -வராஹ தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை யாழ்வார் -2-7-

மேக நாதன் பிள்ளை -பலி அரசனுக்கு அருள் புரிய வராஹப் பெருமாள் பூமி பிராட்டியை இடது மடியில் இருத்திக் கொண்டு சேவை சாதித்தார் –
காலவ மகரிஷிக்கு 360 பெண்கள் பிறக்க -ரிஷி வேண்ட பகவான் தினமும் ஒவ்வொரு பெண்ணாகத் திருமணம் செய்தார்
இறுதியில் அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக அகில வல்லி நாச்சியாராக ஆக்கி அவள் உடன் சேவை சாதிக்கிறார் –
திரு வல வெந்தை -திருக் கடல் மல்லை / புருஷோத்தமன் -ஜீவாத்மா அனைவரும் அவன் இடம் சேர வேண்டுமே
–இதுவே நித்ய கல்யாண பெருமாள் காட்டி அருளுகிறார்
கன்னத்தில் மை தீட்டி சேவை
ஆதி சேஷன் -வாசுகி -திருவடியின் கீழே -சேவை –

——————————————————————————————

63-திருக் கடல் மல்லை –
மூலவர் -ஸ்தல சயனப் பெருமாள் /புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -நில மங்கைத் தாயார் –
விமானம் -காக நாக்ருதி விமானம்
தீர்த்தம் -புண்டரீக புஷ்கரிணி -கருட நிதி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார் -2-7-

புண்டரீக மகரிஷி -கடலில் சயனித்து இருக்கும் பெருமாளை சேவிக்க -ஆசை கொண்டு பக்தி பாரவசியத்தாலே தன்னிலை மறந்து
கைகளால் கடல் நீரை வாரி இறைக்க முற்பட்டார் –
ரிஷியின் பக்தியை மெச்சிய பரமன் தனது ஆதி சேஷன் படுக்கையும் துறந்து கரைக்கு ஓடு வந்து நிலத்திலேயே சயனித்த க்ஷேத்ரம்
பூதத்தாழ்வார் திரு வவதார ஸ்தலம் –
முன்பு 7 கோயில்கள் இருந்ததாம் –கடல் அரிக்க–
இடது திருக் கை ஆஹ்வானம் —

———————————————————————————–

64- திருக் கடிகை -சோளிங்கர்
மூலவர் -யோக நரஸிம்ஹர் -அக்காராக கனி / வீற்று இருந்த திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பக்தோசிதான் -தக்காண
தாயார் -அம்ருத பல வல்லித் தாயார்
விமானம் -சிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் / தக்கான் குளம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -மிக்கானை –அக்காராக கனியை அடைந்து உய்ந்து போனேனே –

சப்த ரிஷிகள் -தவத்தை -காலன்-கேயன் – அரக்கர்கள் கெடுக்க -அவர்கள் அரசனை வேண்டிக் கொள்ள
-அவன் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்க -அவர் திருவடியை அனுப்பினார்
அவர் நரசிம்ஹ பெருமாள் கடாஷத்தோடே அவர் கொடுத்து அருளிய சக்ராயுதத்தால் அரக்கர்களை வென்றார்
யோக நரஸிம்ஹர் பெரிய மாலையிலும் திருவடி சங்கு சக்கரங்கள் நான்கு திருத் தோள்கள் உடன் சின்ன மாலையிலும் சேவை சாதிக்கின்றனர்
கடி -ஒரு நாழிகை -24 நிமிஷங்கள் -இந்த மலையில் ஒரு கடி பொழுது இருந்தோமேயானால் பாவங்கள் கழிந்து பரம பதம் கிடைக்கும் –
மலை அடிவார திருக் கோயிலும்- வூரும் ஸ்வாமி தொட்டாச்சார்யரால் ஸ்தாபிக்கப் பட்டவை –
ஸ்ரீ நிவாஸ மஹா குரு -தொட்டாச்சார்யார் ஸ்வாமி –
1543-1607 இருந்தவர் –கோவிந்த ராஜர் -பிரதிஷ்டை பண்ணினவரும் இவரே –
யோகம் -கை வந்தவர் -வாதூல குல தெய்வதிம் -நிதிம்-
தாயார் நவராத்ரி கீழே எழுந்து அருளி 2 மாதம் கீழே இருந்து சேவை —

———————————————————————————————————-

ஆதி கேசவ பெருமாள் -பேயாழ்வார் திருவவதாரம்
திரு மழிசை ஆழ்வார் -சாரமான க்ஷேத்ரம் -ஜெகந்நாத பெருமாள் –

——————————————————————————————

65-திரு நாவாய் –
மூலவர் -நாவாய் முகுந்தன் -நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மங்கை நாச்சியார் ‘
விமானம் -வேத விமானம்
தீர்த்தம் -கமல தடாகம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -9-8-/ திருமங்கை ஆழ்வார் –

ஒன்பது யோகிகள் -பெருமாளை சேவிக்க ஆசைப்பட்டார்கள் -நவ யோகி -மருவி நாவாய் ஆகியது –
பாரதப் புழா-நதிக்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் –
மலையாள திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தனி சந்நிதி தாயாருக்கு உண்டு –
யோகிகள் பகவானை பிரதிஷடை செய்து மறு நாள் வந்து பார்க்கும் பொழுது அங்கு விக்ரஹம் மாயமாகி இருந்தது
தொடர்ந்து அடுத்த எட்டு நாட்கள் நடந்தது இந்தச் சம்பவம் –
9 நாள் கடைசி யோகி ப்ரதிஷ்டை பகவான் பூமிக்குள் புதைந்து கொண்டு இருக்க யோகி அவரை -அப்படியே
நிறுத்த முழங்காலுக்கு மேலே இன்றும் சேவை சாதிக்கிறார்
குட்டிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி மி தூரம் –
பட்டாம்பி -அருகில் – வடக்கு கேரளா -/ காசி யில் செய்யும் பலன் இங்கே
-சங்க சக்ர கதா பத்ம -நான்கு திருக் கைகளிலும் ஏந்தி -நவ யோகி ஸ்தலம்
விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் –

—————————————————————————————

66-திரு வித்துவக் கோடு
மூலவர் -உய்ய வந்த பெருமாள் -அபய ப்ரதன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -வித்துவக்கோட்டு வல்லி
விமானம் -தத்வ காஞ்சனா விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -குலசேகராழ்வார்

அம்பரீஷன் வெகுகாலம் இங்கே த்வம் புரிந்து முக்தி பெற்றதாக ஸ்தல வரலாறு –
திருமாலே இந்திரன் வடிவில் வந்து அம்பரீஷனை சோதித்த பொழுது -அவனது வைக்ராயத்தாலே மகிழ்ந்து
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தன் அப்ராக்ருத ரூபத்துடன் சேவை சாதித்தார்
பர வாஸூதேவனை சேவித்த பின் வ்யூஹ அவதாரத்தை அனுக்ரஹிக்க வேண்ட -நான்கு திருக் கோலம் கொண்டு இங்கே எழுந்து அருளி இருக்கிறார்
கோயிலில் முதலில் சிவன் சந்நிதியும் அதன் பின் பெருமாள் சந்நிதியும் உள்ளது –
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் சேர்ந்து த்வம் இருந்து இந்த நான்கு மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள் –
திரு மிற்றக் கோடு -நான்கு மூர்த்தி பெருமாள் –
காசி விஸ்வ நாதர் காட்சி -இங்கு பிரதிஷ்டை –

——————————————————————————————

67-திருக் காட்கரை –
மூலவர் -காட்கரை யப்பன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரும் செல்வ நாயகி -வாத்சல்ய வல்லி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

இங்கு எழுந்து அருளி இருக்கும் வாமன மூர்த்தியின் அருளால் பலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் ஆவணி திருவோணம் அன்று
தன் மக்களைப் பார்க்கப் பாதாளத்தில் இருந்து வருகிறார் –
இந்த நாளே ஓணம் பண்டிகை –
ஒரு வியாபாரி தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவது கண்டு அப்பெருமானுக்குத் தங்க வாழைக் குலை சமர்ப்பித்தார்
பின்பு பெருமாள் நேத்ர கடாக்ஷத்தால் வாழை மரங்கள் செழித்து -நேத்ர பழம்—நேந்த்ர பழம் —
திருவஞ்சிக் குளம் -திருக் குலசேகர புரம் -அருகில் -கொடுங்களூர் அருகில் –
எர்ணாகுளம் -அருகில் / கபிலர் தபஸ் -புரிந்து -பிரத்யக்ஷம் -வாமனன் சேவை –
கர்ப்ப க்ருஹத்தில் இன்றும் வாழை குலை சேவிக்கலாம் –
ஸுசீல்யம் -9 -6 – உருகுமால் நெஞ்சம் -என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் -போகத்தில் தட்டு மாறும் சீலம்
ப்ரஹ்ம ரஜஸ் பிரகாரத்தில் -சாந்தம் படுத்த யஜ்ஜி -காவல் தெய்வம் –

—————————————————————————————–
68-திரு மூழிக் களம் –
மூலவர் -திரு மூழிக் களத்தான்–ஸ்ரீ ஸூக்தி நாதன் -நின்ற திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -மதுர வேணி நாச்சியார்
விமானம் -ஸுந்தர்ய விமானம்
தீர்த்தம் -பெரும் குளம் -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஹாரீத மஹரிஷியின் பெரும் தவத்தால் பகவான் பிரத்யக்ஷமாகி -அவரை வர்ணாஸ்ரம தர்மம்
யோக சாஸ்திரம் மற்றும் திரு மந்த்ரம் ஆகிய நூல்களை இயற்றச் செய்தார்
இவைகள் பகவான் உடைய ஸ்ரீ ஸூக்திகள் -திரு மொழி -வெளியாகிற படியால் -ஸ்ரீ ஸூக்தி நாதன் –திரு மொழிக் களம் -ஆயிற்று
-அதுவே மருவி -திரு மூழிக் களம் –ஆனது
லஷ்மணன் பரதன் இடம் பட்ட அபசாரத்தைப் போக்கிக் கொள்ள இங்கே த்வம் புரிந்து பெருமாளை மீண்டும் பிரதிஷ்டை பண்ணினான் என்பர் –
மஹாத்மாக்களை விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் குளத்திலே கூடு பூரிக்கும் -தூது விடும் பதிகம் –
நிறைய தூண்கள் வேலைப்பாடுகளுடன் –நீண்ட பிரகாரம் -ஸ்ரீ பலி -ஸ்ரீ வேலி -லக்ஷ தீபம் -பிரசித்தம் –

————————————————————————————

திரு வல்ல வாழ்
மூலவர் — கோலப் பிரான் -ஸ்ரீ வல்லபன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -செல்வா திருக் கொழுந்து நாச்சியார் -வாத்சல்ய தேவி
விமானம் -சதுரங்க கோலா விமானம்
தீர்த்தம் -கண்ட கர்ணன் தீர்த்தம் -பம்பா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

மங்கலத்தம்மாள்-என்ற பெண்மணி ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று பிரம்மசாரிக்குப் பாரணம் செய்வித்து பின்பு தான் விரதத்தை முடிப்பாள்-
தோலாகாசுரன் என்ற அரக்கன் இதற்கு இடையூறு விளைவிக்க -அவள் பகவானைப் பிரார்த்தித்தாள்-
பிரம்மச்சாரியாக வந்த பகவான் அசுரனை முடித்து துவாதசி பாரணத்திற்கு வரும் பொழுது அவருடைய மான் தோல் விலக
அப்பெண்மணி திரு மார்பு லஷ்மியை ஸேவித்தாள்-
ஆகவே இன்றும் திரு வாழ் மார்பனாகவே சேவை சாதிக்கிறார் -கண்டா கர்ணனுக்கு மோக்ஷம் அளித்த இடம்
திரு வல்லா என்றும் அழைக்கப் படுகிறது -திரு வல்லப -மருவி –
செங்கணாஞ்சேரி அருகில் ஆறு திவ்ய தேசங்கள் –
கிருபை குணம் காட்டி அருளி –மெலிவிலும் சேமம் -5-9 — சரணாகதி இங்கு பெண் நிலையில் –
உப்பு மாங்காய் திதியோதனம் -பிரசாதம் –
சுதர்சன-தனி சந்நிதி
50 -அடி உயரம் கருட கொடி -கீழும் அத்தே அளவாம் -பறக்கும் திருக் கோலம்
விஸ்வ கர்மா -ஸ்தாபித்த கோயில்
12000 வாழை பழம் சமர்ப்பித்து ஆண்டுக்கு ஒரு நாள் உத்சவம்

———————————————————————————————-

70-திருக் கடித் தானம்
மூலவர் -அற்புத நாராயணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கற்பக வல்லி
விமானம் -புண்ய கோடி விமானம்
தீர்த்தம் -பூமி தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

கடி -பரிமளம் / பரிமளம் மிக்க சோலைகள் நிறைந்த வூர் –
கடி -நாழிகை -24 நிமிடம் – இந்த க்ஷேத்ரம் இருந்தால் நம் பாவங்கள் கழிக்கப் படுகின்றன
நாரதர் ருக்மாங்கதன் என்ற ஸூ ர்ய வம்சத்து அரசனுடைய ஆஸ்தானத்திற்கு வந்த பொழுது அவரை ராஜா
இந்த ஷேத்ரத்தின் பரிமளம் மிக்க புஷபமாலையோடு கௌரவித்தான் –
அதனுடன் நாரதர் இந்த்ர லோகத்திற்கு செல்ல இந்திரன் அந்த மலர்களைக் கொண்டு வர தேவர்களை அனுப்பினான் –
அவர்கள் ரகசியமாகக் கொண்டு வரும் பொழுது ருக்மாங்கதன் பார்த்து விட்டான் -அவர் பார்த்த படியால் அவர்களால்
மீண்டும் சொர்க்கத்திற்கு செல்ல முடியவில்லை –
ராஜா ஒரு மூதாட்டி இருக்கும் ஏகாதசி விரதத்தின் மகிமையால் அவர்களை மீண்டும் சுவர்க்கத்திற்கு அனுப்பினார்
சகாதேவன் இங்கு பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார் – பாண்டு மஹா ராஜா மரித்த இடம் –
கதி ஸ்தானம் -வித்யா ஸ்தானம் என்றுமாம் –
8-6 – எல்லியும் காலையும் -க்ருதஞ்ஞாதா கந்தம் –தபஸ் பண்ணி திரு உள்ளம் பெற்று –
தீபக் களா -பாண்டுவை எரியூட்டும் உத்சவம் நடக்கும்

————————————————————————————————–

71-திருச் சிற்றாறு திருச் செங்குன்றூர்
மூலவர் -இம்யவரப்பன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -செங்கமல வல்லி
விமானம் -ஜகத் ஜ்யோதி விமானம்
தீர்த்தம் -சங்கு தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

தர்ம புத்திரர் -தம் குருவான துரோணரை கொன்றதால் குருபாதக தோஷம் -வர -பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் இங்கு வந்து
சந்நிதியை ஜீர்ணோத்தாரணம் செய்து திருச் சிற்றாற்றில் தீர்த்தம் ஆடிப் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் –
தர்ம புத்திரர் இந்தப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார்
பெருமாள் இங்கு சங்கு சக்கரம் கை மாற்றி வலது திருக் கையிலே சங்கும் இடது திருக் கையிலே சக்கரமும் தரித்து இருப்பார் –
பாம்பை நதி கிளை நதி சிற்றாறு –
ஸுர்யம் காட்டிய குணம் –வார் கெடா அருவி –பரிய வேண்டாம்-8-4-

—————————————————————————————

72-திருப் புலியூர் –குட்ட நாட்டு திருப் புலியூர்
மூலவர் -மாய பிரான் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் – பொற் கொடி நாச்சியார் –
விமானம் -புருஷோத்தம விமானம் –
தீர்த்தம் -ப்ரஜ்ஜா சரஸ் –பூஞ்சுனை தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

வ்ருஷா தர்பி அரசவைக்கு சப்த ரிஷிகள் வந்தனர் -நாட்டில் பஞ்சம் தலை விரித்த படியால் ரிஷிகள் தானம் வாங்க மறுத்தனர்
-அரசனும் அவர்களுக்குத் தெரியாமல் வாழை பழத்தில் தங்கம் வைத்துக் கொடுத்தார் -அதனை அறிந்த ரிஷிகள் அவற்றை
ஏற்றுக் கொள்ள மறுக்க கோபம் கொண்ட அரசன் க்ருத்யை என்ற பெண் பிசாசை ஏவினான்
-இந்திரன் புலி வடத்தில் அவளைக் கொன்றான் -புலி வடத்தில் வந்த படியால் திருப் புலியூர் என்ற பெயர்
– பகவான் சப்த ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் மாயப் பிரானாகக் காட்சி கொடுத்தார் –
இத்திருத் தலம் பீம சேனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது –
நாயக லக்ஷணம் காட்டிய குணம் -மாயப்பிரான் –/ தோழி -திரு மணம் ஆனது போலே உள்ளதே –
இவள் நேர் பட்டது -அம் தண் துழாய் கமழ்கிறாள்
12 பகுதிகள் குட நாடு இத்யாதி –
————————————————————————————————-

73-திருவாறன் விளை–ஆரம் முளா
மூலவர் -திருக் குறள் அப்பன் -பார்த்த சாரதி / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் -வேத வியாச சரஸ் -பம்பா தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

மது கைடபர்களை அழித்து திரு மால் பிரமனுக்கு ஸ்ருஷ்டி ரஹஸ்யத்தை அளித்ததும் –
அர்ஜுனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட திருத் தலமுமாகும்-
நிலக்கண் என்ற இடத்தில் இருந்து நாராயணப் பெருமாள் இந்த ஷேத்ரதிற்கு வர வேண்டும் என்ற ஆசையில்
ஒரு பிரம்மசாரி வடிவை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து ஒரு படகில் இங்கு வந்தார்
பம்பை ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம் –
ஆனந்த விருத்தி -காட்டிய குணம் -பலர் அடியார் முன்பு –பாம்பணையான் -7-10- இன்பம் பயக்க —
பாம்பை ஆறு அருகில் -படகு போட்டி – இடை -கடை -ஆறு கழிகளால் வேயப்பட்ட படகு -இன்றும் படகு போட்டி பிரசித்தம் –
மாங்காட்டு நாம்பூதிரி -திரு ஓணம் வந்து அதிதி –பெருமாளை சேவித்து விருந்தோம்பல் செய்ததால் தொடங்கிற்று

———————————————————————————————

திரு வண் வண்டூர் –
மூலவர் -பாம்பணை அப்பன் / கமல நாதன் / நின்ற திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -வேதாலயா விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாம்பை ஆறு

பிரமானால் சபிக்கப்பட்ட நாரதர் இவ்விடத்திற்கு வந்து த்வம் புரிந்து பெருமாளின் அருளால் இங்கு இருந்து
பல்லாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட -நாரதீய புராணம் மற்றும் பல நூல்களை இயற்றினார்
-நகுலனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட வூர்
திருப் பாண்டவனூர் -என்பதே மருவி -திரு வண் வண்டூர் –ஆகியது
மார்க்கண்டேயர் பெருமாளின் மூக்கு வழியே உள் புகுந்து அனைத்து உலகங்களைக் கண்டதும் இங்கு தான் நடந்தது

பம்பை ஆற்றின் வடகரையில்
ரக்ஷண ஸ்தர்யம் ரஷித்தே தீருவார் –6-1-வைகல் பூங்கழிவாய்
திருவன் உண்டு -மருவி -இந்த பெயர் –
பாம்பணை அப்பன் -பம்பா அணைந்த அப்பன் -நின்ற திருக் கோலம்
சனகாதிகள் -ப்ரஹ்மம் –நாரதர் மேலே சதுர்முகன் சாபம் –

———————————————————————————————————

75-திருவனந்த புரம்
மூலவர் -அநந்த பத்ம நாபன் -புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ ஹரி லஷ்மி
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -மத்ஸ்ய வராஹ பத்ம தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -10-2-

ஸ்யானந்தூர புரம் -என்று மற்றொரு பெயரிலும் வழங்கப் படுகிறது -திவாகர யோகி ஆராதனம் செய்யும் மூர்த்தியை
பகவான் சிறுவன் வடிவத்தில் எடுத்துக் கொண்டு ஓட யோகி துரத்தி வந்தார் -காட்டுக்குள் தேடிப் போன போது
ஒரு மரம் விழுந்து பழ காத தூரம் பெறுத்த சயனத் திருக் கோலத்தில் சேவை சாதித்தார் -பின்னர் யோகியின் பிரார்த்தனைப் படி
அவர் கையில் பிடித்து இருந்த தண்டத்தின் அளவு சுருக்கிக் கொண்டு இன்று இருக்கும் வடிவத்தில் சயனித்தார் –
இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் மூன்று வாசல்களில் தான் சேவிக்க வேண்டும் –
1688- ஆண்டில் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட ராஜா மார்த்தாண்ட வர்மன் சாளக்ராமத்தாலேயே ஆன புதிய திரு மேனியை
நிர்மாணம் செய்து 1726 -ஆண்டு ஸம்ப்ரோக்ஷணம் செய்தார் –
அரச வம்சத்தினர் இன்று அளவும் பத்ம நாபா தாசர்கள் -என்றே அழைக்கப் படுகின்றனர் –
சாம்யம் -குணம் காட்டி -சாமியார் -5 மைல் நீளம் இலுப்ப மரம் –
18 அடியாக சுருக்கி -அந்தமாக சுருக்கிக் கொண்ட அனந்தன் -உப்பு மாங்காய் -அரிசி கஞ்சி பிரசாதம்
பில்வ மங்கள ரிஷி திவாகர ரிஷி –
யானையில் 1200 சாளக்கிராமம் / 1200 சாளக்கிராமம் இன்னும் வைத்து -நேபாள் மூலம் யானை கொண்டு வந்ததாம் –
பங்குனி ஐப்பசி –ஆறாட்டு உத்சவம் தீர்த்த வாரி
பள்ளி வேட்டை -அம்பு போடுவது போலே -ராஜா மனு போடுவாராம் பெருமாள் சார்பில் –வேதங்கள் ஓதி
முர ஜபம் -பத்ர தீப லக்ஷ தீப உத்சவம்
வெண்ணெய் சாத்தி சேவை சாதிக்கும்- ஆஞ்சநேயர்
நரசிங்ஹர் -உக்ரம் குறைக்க நித்யம் ஸ்ரீ ராமாயணம் பாராயணம்

————————————————————————————————-

76-திரு வாட்டாற்று
மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம் –
தாயார் -மரகத வல்லி நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம் -வாட்டாறு –

திரு வனந்த புரம் போலே இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் -மூன்று வாசல்களில் சேவிக்க வேண்டும் –
கேசி அசுரனை வாதம் செய்து துறையில் தள்ளி பெருமாள் அவன் மேல் படுத்துக்க கொள்ள கணவனைக் காப்பதற்கு கேசியின் மனைவி
நதி வடிவத்தில் ஓடி வந்து பகவானை தள்ள முற்பட்டாள்-பெருமானைக் காக்க பூமா தேவி அவர் சயனித்து இருந்த பூமியை உயர்த்த
ஆறு வட்ட வடிவமாக ஓடி திரு வாட்டாற்று ஆனது –
இது ஒரு மலை மடக் கோயில் -16008 சாளக்ராம மூர்த்திகள் சேர்த்து உருவாக்கப் பட்ட மூலவர் திரு மேனி –
பரலி கோதா இரண்டு ஆறு வட்டமாக ஓட
10-6 – அருள் தருவான் அமைகுன்றான் –வாட்டாற்றான் அடி வணங்கி
பிரணத பாரதந்தர்யம் -அதுவும் நம் விதி வகையே –
22 அடி நீளம் -நாபியில் நான் முகன் இல்லை -இங்கே -ஆதி கேசவ பெருமாள் -செண்பக வானம்
16008 சாளக்கிராமம் -கொண்டே திருமேனி
சாஹோதா மகரிஹிக்கு பிரத்யக்ஷம்
திரு விதாங்கூர் ராஜா தொடர்பு –
ஓண வில் சமர்ப்பிப்பார்கள் –

—————————————————————————————-

77-திரு வண் பரிசாரம் –திருப்பதி சாரம்
மூலவர் -திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன் –வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -இந்த்ர கல்யாண விமானம்
தீர்த்தம் -லஷ்மி தார்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -8-3-ஒரே பாசுரம் — ஸுகுமார்யம் -கொடை தன்மை -ஆழ்வாரையே கொடுத்து அருளினார் –

சப்த ரிஷிகள் அத்ரியை முன்னிட்டு பகவானைப் பிரார்த்திக்க அவர்களுக்கு சேவை சாதித்து அருளினார்
ஹிரண்ய கசிபுவைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் கோபம் தீர்ந்து லஷ்மியைத் தன் திரு மார்பில் சேர்த்துக் கொண்ட இடம்
நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் திரு வவதார ஸ்தலம் -சோமா தீர்த்தக் கரையில் –
அகஸ்தியர் -குலசேகர மகரிஷி -ராமர் லஷ்மணர் சீதா ஆஞ்சநேயர் விபீஷணன் பிரகாரத்தில் சேவை

—————————————————————————————————-

திரு வஞ்சிக்களம்– மாசி -புனர்பூசம் -நல்லவர் கொண்டாடும் நாள் -திருக் குலசேகர புரம் / சேர குல வல்லி நாச்சியார் –

—————————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: