திவ்ய தேச அனுபவம் –சோழ நாடு –ஸ்தல மாஹாத்ம்ய விளக்கம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

1-திருவரங்கம் -ஸ்ரீ பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள்
-காவேரி விராஜா -பர வாசு தேவன்-ப்ரத்யக்ஷம் பரம பதம் -தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருக் கோயில் –
பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் -பெரிய திருநாள் -பெரிய அவசரம் –
மூலவர் -பெரிய பெருமாள் / ஸ்ரீ ரெங்க நாதர் -புஜங்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -நம்பெருமாள் -அழகிய மணவாளன் –
தாயார் -ஸ்ரீ ரெங்க நாயகி
விமானம் -ப்ரணவாகார விமானம் –
தீர்த்தம் -சந்த்ர புஷ்காரிணி -கொள்ளிடம் -காவேரி
ஸ்தல வருஷம் -புன்னை மரம்
மங்களா சாசனம் -10 ஆழ்வார்களும் ஆண்டாளும் –

ப்ரணவாகார விமானத்தில் திருப் பாற் கடலில் தோன்றிப் பிரமனால் ஸத்ய லோகத்தில் ஆராதிக்கப் பட்ட பெருமாள் –
இஷுவாகு மன்னரால் சரயூ நதியின் தென் கரையில் அயோத்தியில் ஸ்தாபிக்கப் பட்டு ஸ்ரீ ராமர் வரை அனைத்து மன்னர்களாலும் ஆராதிக்கப் பட்டார்
ஸ்ரீ ராமனால் விபீஷணனுக்கு இவ்விமானமும் பெருமாளும் பரிசாகக் கொடுக்கப் பட்டு இலங்கையை நோக்கி
பிராயணப் பட்ட போது வழியில் 2 காவேரிகளுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டார்
ஆகவே விபீஷணன் இருக்கும் இலங்கையை -தென் திசையை -நோக்கி சயனம்
ஐப்பசி மாதத்தில் முப்பத்து முக்கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் கலக்கிற படியால் துலா காவேரி ஸ்நானம் சிறப்பானது –
இத் திருத் தலத்தில் அனைத்து மரபுகளும் ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப் பட்டன –
இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஓன்று –

வடதிருக் காவேரி -கொள்ளிடம் -ஆர்ஷம் ரிஷிகளால்
நான்கு நேரி /ஸ்ரீ ரெங்கம் /ஸ்ரீ முஷ்ணம்/ திருமலை /நைமிசாரண்யம் /புஷ்கரம் /பதரிகாச்ரமம் /சாளக்கிராமம் -ஸ்வயம் வியக்தம்
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரக -முக்தி
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
தர்மவர்மன் சோழ ராஜன்
-இதம் ஹி ரெங்கம் -ஆதி சங்கரர் -இங்கே பிறந்தால் வேறு பிறவி இல்லை
ராஜ தானி -எல்லா ஆச்சார்யர்களும் வாழ்ந்து கைங்கர்யம் செய்த திய்வய தேசம்
54 சந்நிதிகள் -நடை அழகு -கஜ சிம்ம புலி ஏறு சர்ப்பம் -1323 -1378 -வெளியே சென்று -திருமலையிலே ஸ்ரீ ரெங்க மண்டபம் –
பங்குனி உத்தரம் சேர்த்தி -சேர குல வாலி சேர்த்தி -ஸ்ரீ ராம நவமி -உறையூர் சேர்த்தி -மூன்றும் உண்டே –

——————————————————————————-

2- திருக் கோழி–உறையூர் -நிகிளா புரி
மூலவர் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் -நின்ற திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸ்ரீ கமல வல்லி நாச்சியார் உறையூர் வல்லி /க -பரமாத்மா ம ஜீவாத்மா -சேர்த்து வைக்கும் பாலம் கமலா-இளமை தோன்றும் திரு முக மண்டலம்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரிணி -குடமுருட்டி நதி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

நந்த சோழன் -உறையூரை தலை நகராக கொண்டு ஆண்டான் -தாமரை ஓடையில் ஓர் தாமரை மலரில் கிடைத்த பெண் குழந்தையே ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் –
அவளை அழகிய மணவாளன் திருக் கல்யாணம் செய்து கொண்டார் -இருவரையும் பிரதிஷ்டை செய்து நந்த சோழன் சிறப்பான கோயிலைக் காட்டினார் –
பங்குனி ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் அன்று நம் பெருமாளுக்கும் ஸ்ரீ கமல வல்லி நாச்சியாருக்கு திருக் கல்யாணம் நடை பெறுகிறது -ஆயில்ய நக்ஷத்ரம் –
இது திருப் பாண் ஆழ்வார் திருவவதார ஸ்தலம் – கார்த்திகை ரோகிணி –
கோழியும் கூடலும் -பெரிய திருமொழி –ராஜ தானி சோழர்களுக்கு -சோழ மன்னன் யானை ஒட்டின கோழி -ருத்ரன் அனுக்கிரகத்தால் -என்பர்
நாச்சியார் தங்கி உறையும் திவ்ய தேசம்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சி வாசம் செய்த திவ்ய தேசம் –

———————————————————————-

3- திருக் கரம்பனூர் —
மூலவர் -ஸ்ரீ புருஷோத்தமன்- புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் —ஸ்ரீ பூர்வா தேவி- பூர்ண வல்லி
விமானம் — உத்யோக விமானம்
தீர்த்தம் -கதம்ப தீர்த்தம்
ஸ்தல வருஷம் -வாழை மரம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

தாயார் கடாக்ஷத்தால் கபால சாபம் தீர்ந்த இடம் –
இங்கு மும் மூர்த்திகளும் அவரவர் தேவரிமார்களுடன் சேவை சாதிக்கின்றனர் –
பகவான் கதம்ப மரமாக இருந்த போது பிரமன் திரு மஞ்சனம் செய்ய உடனே புருஷோத்தமனாக சேவை சாதித்தார் –
கதம்ப மரமாக இருந்து கதம்ப ரிஷிக்கு சேவை சாதித்த படியால் கதம்பானூர் என்ற பெயர் பெற்று -பின்னாளில் கரம்பனூர் ஆகியது –

கரம்பனூர் உத்தமனை -கலியன் –
சரஸ்வதி இருப்பதால் -கல்விக்கு பிள்ளைகள் கூட்டமாக வந்து சேவிப்பார்கள்
அன்னம் பூர்ணமாக அருளும் தாயார் -கைப்பிடி அன்னம் இட்டு கபால விமோசனம் -பிஷாண்டார் கோயில்
கார்த்திகை திரு நாள் -பெருமாள் ருத்ரன் சேர்ந்து எழுந்து அருளுவார் –
திருக் கண்ண புரத்தில் சிவன் திருக் கோலம் சாத்தி கொள்வார்
ஆழ்வார் பட்டவர்த்தி -அருகில் -இங்கே இருந்து திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் கைங்கர்யம்

————————————————————————————————–

4-திரு வெள்ளறை
மூலவர் -ஸ்ரீ புண்டரீகாக்ஷன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ பங்கயச் செல்வி -செண்பக வல்லி –
விமானம் -விமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -குசா மணி கர்ணிகா சக்ர புஷ்கல வராஹ கந்த ஷீர பத்ம -ஆகிய 7 தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ தேவி நாச்சியாருக்கு ஏற்றம் தரும் இடம் -சிபி சக்கரவர்த்தி படையுடன் இங்கு தண்டு இறங்க -பகவான் ஒரு
வெள்ளைப் பன்றி வடிவத்தில் போக்கு காட்டி புற்றுக்குள் மறந்தார் –
மார்க்கண்டேய ரிஷி சொன்ன படி சிபி சக்கரவர்த்தி பாலால் அபிஷேகம் செய்ய புற்றுக்குள் இருந்து ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் வெளிப்பட்டார் –
இங்கு இருக்கும் பூங்கிணற்றில் தாயார் தவம் இருந்து பெருமாளைத் திருக் கல்யாணம் பண்ணிக் கொண்டார் –
இங்கு தஷிணாயணம் உத்தராயணம் இரண்டு வாசல்கள் உண்டு -இங்குள்ள ஸ்வஸ்திகா குளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
திருச்சி துறையூர் மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 20 கிமி தூரம் –

ஸ்வேத கிரி –மலைக்கட்டு க்ஷேத்ரம் / நாச்சியார் பல்லக்கு முன்னே -/ திரு வீதி தட்டு பிரசாதமும் இவளுக்கு /
பூம் கிணற்றில் தவம் இருந்த போர் கொடி வாழியே
கர்ப்ப க்ருஹத்தில் ஆதி சேஷன் கருடன் ஸூர்ய சந்திரர்கள் சேவை
உய்யக் கொண்டார் எங்கள் ஆழ்வான் அவதாரம் இங்கே
3700 பக்தர்கள் குடி ஏற்றி -ஒருவர் குறைய -பெருமாளே உருவம் கொண்டு பக்தர்களில் ஒருவன்
பலி பீடத்தில் திரு மஞ்சனம் பிரசித்தம்
காப்பிட்டார் பெரியாழ்வார் -இந்த திவ்ய தேச மங்களா சாசனம் —
7 புண்ய தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே –
ஸ் வஸ்திகா குளம் வெளியில் சேவிக்க வேண்டும்

——————————————————————————–

5-திரு அன்பில்
மூலவர் -வடிவு அழகிய நம்பி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ ஸூ ந்தர ராஜன்
தாயார் -ஸ்ரீ அழகிய வல்லி நாச்சியார்
விமானம் -தாரக விமானம்
தீர்த்தம் -மண்டூக புஷ்கரிணி
மங்களாசானம் -திரு மழிசை ஆழ்வார்

மண்டூக மஹர்ஷி இங்கு இருக்கும் தீர்த்தத்தில் நீராடி சாபத்தில் இருந்து விடுதலை பெற்றார் –
இவர் பெயரிலே புஷ்கரிணி –
இங்கு தாயார் நின்ற நிலையிலும் -ஆண்டாள் அமர்ந்த திருக் கோலத்திலும் சேவை சாதிப்பது சிறப்பு –
லால்குடிக்கு கிழக்கே 8 கி மி தொலைவில் உள்ள தேசம் –
அப்பக்குடத்தான் சந்நிதியில் இருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம் –

அன்பை இல்லமாக கொண்டவர் -அன்பே இருப்பிடம் -என்றவாறு
மாசி பவ் ரணமி -கொள்ளிடக் கரைக்கு எழுந்து அருளுவார் –நம் பெருமாளும் எழுந்து அருளுவார் –
அநிருத்த மூர்த்தி இவர் என்பர் -ரஷிக்கும் பொழுது பேர் அழகன் –
மண்டூக -ஜலத்துக்கு உள்ளே இருந்து தபஸ் -துர்வாசர் சாபத்தால் மண்டூகம் ஆனார் –
சிவன் ப்ரம்மா ஊர்வசி மூவருக்கும் ப்ரத்யக்ஷம் –
சம்சாரம் தூண்டுவிக்கும் விமானம் -அதனால் தாரக விமானம் –

—————————————————————————————————–

6 -திருப் பேர் நகர் -கோவிலடி -அப்பக்குடத்தான் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -இந்திரா தேவி –கமலவல்லி
விமானம் -இந்த்ர விமானம்
தீர்த்தம் -இந்த்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /திருமங்கை ஆழ்வார்

துர்வாசர் சாபத்திற்கு ஆளான உபமன்யு அரசர் இங்கு வந்து அதை போக்கிக் கொள்ள தினமும் ததீயாராதனம் செய்து வந்தார் –
ஒரு நாள் பகவான் தானே வந்து அனைவரின் பிரசாதத்தை உண்டும் பசி ஆறாமல் அப்பத்தைக் கேட்டு வாங்கி அந்த குடத்துடன் சயனித்து விட்டார் –
அரசனும் சாபம் நீங்கப் பெற்றார் -அன்றிலிருந்து தினமும் மாலை வேளையில் பெருமாளுக்கு அப்பம் அமுது செய்யப் படுகிறது
-நம்மாழ்வார் கடையாக பதிகம் அருளிச் செய்த திருத் தலம் –
திருச்சியில் இருந்து 20 கி மி தூரம் /கல்லணையில் இருந்து 7 கி மி தூரம் –
சாபம் கொடுக்க கொடுக்க துர்வாசர் தப வலிமை அதிகம் ஆகுமே
ஸ்வாமித்வம் -வெளிப்படுத்தி அருளினார் – பேரேன் என்று திரு உள்ளம் நிறைந்து அருளும் பெருமாள்
பிடித்தேன் -பிணி சாரேன் பிறவித துயர் எழுந்தேன் -உன பாதம் உகந்து பெற்றேன்
ஆதி ரெங்கம் -ஸ்ரீ ரெங்க பட்டணம் -அப்பால ரெங்கன் -ஸ்ரீ ரெங்கன் –பரிமள ரெங்கன் –

————————————————————————————————-

7– திருக் கண்டியூர்
மூலவர் -ஹரசாப விமோசனப் பெருமாள் -நின்ற திருக் கோலம் –கிழக்கு திரு முக மண்டலம் –
உத்சவர் -கமல நாதன்
தாயார் -கமல வல்லி
விமானம் -கமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -பத்ம தீர்த்தம் -குடமுருட்டி நதி -கபால மோக்ஷ புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாகுமே

பரமசிவன் தன்னுடைய சாபம் இங்கு நீங்கப் பெற்றார் -நீல கண்டன் சாபத்தைப் போக்கிய படியால் கண்டியூர் -என்று அழைக்கப் படுகிறது –
இந்த ஷேத்ரத்தில் -கமல நாதன் –கமல வல்லித் தாயார் –கமல புஷ்கரிணி –கமலாக்ருதி விமானம் –
-கமல தீர்த்தம் -இருக்கிற படியால் இதனைப் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் –
தஞ்சை திருவையூறு சாலையில் -தஞ்சையில் இருந்து 10 கிமி தூரம் –
பலி நாத பெருமாள் –மஹா பலி வணங்கிய பெருமாள் -நரஸிம்ஹர் / சுதர்சனர் -சேவை பிரசித்தம்

——————————————————————————————

8- திருக் கூடலூர்
மூலவர் -வையம் காத்த பெருமாள் / ஜகத் ரக்ஷகன் /நின்ற திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி -புஷப வல்லி
விமானம் -சுத்த சத்வ விமானம் –
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம் –திரு மங்கை ஆழ்வார் -5-2-பதிகம்

ஹிரண்யாக்ஷன் இடம் இருந்து பூமா தேவியை காக்க வராஹப் பெருமாள் -இங்கு கோரைப் பற்களால் உள்ளே புகுந்து
ஸ்ரீ முஷ்ணத்தில் வெளியே வந்தார் — கடல் மலைகள் – அருந்தும் பெருமாள் -ஸ்ரீ வராஹர் புகுந்த இடம் -இது-பிரயோக சக்கரத்துடன் சேவை
அம்பரீஷ மஹா ராஜர் இப் பெருமாள் அருள் பெற்று பல கைங்கர்யங்களைச் செய்துள்ளார் –
பிற்காலத்தில் ஸ்வப்னத்தில் சாதித்து – -காவேரி வெள்ளத்தால் அடித்துப் போக்கப்பட்டு இராணி மங்கம்மாள் புனர் நிர்மாணம் செய்துள்ளார் –
இங்கு நர்த்தன ஆஞ்சநேயர் பிரசித்தம் -கூத்தாடும் திருக் கோலம் -உத்சவம் கண்டு வசம் இழந்து நர்த்தனம் செய்தாராம்
திருவையாறில் இருந்து 11 கி மி தூரம் –

————————————————————————————-

9- திருக் கவித்தலம் -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று
மூலவர் -கஜேந்திரன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ரமாமணி வல்லி / பொற்றாமரையாள்
விமானம் -காகா நாக்ருதி விமானம்
தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரிணி -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்

கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க பெருமாள் இந்த ஷேத்ரத்தில் தவம் இயற்றும் படிக் கூறினார்
கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரனாக சேவை சாதித்து அருள்கிறார்
இதனால் கபித்தலம் என்ற பெயர் ஏற்பட்டது -இந்த்ரத்யும்ன மஹா ராஜாவுக்கும் பகவான் இதே காட்சியை அளித்ததாகக் கூறப் பட்டது –
ஆற்றங்கரைக்கு கிடக்கும் கண்ணன் –ஏகாந்த ஸ்தலம் -உரை கிடக்கும் உள்ளம் எனக்கு -சரம ஸ்லோகம் உள்ளத்தில் இருக்க கூற்றம் சாராதே
கொள்ளிடம் காவேரி நடுவில் இதுவும்
பாக்ஸர் -சோனிபூர் -பீகார் அருகில் நடந்தது -கிருத யுக கஜேந்திர விருத்தாந்தம் காண திருவடி ஆசைப்பட -சேவை சாதித்து அருளி –

—————————————————————————————-

10–திருப் புள்ளம் பூதங்குடி
மூலவர் -வாழ்வில் இராமன் / புஜங்க சயனம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பொற்றாமரையாள்
விமானம் -சோபனா விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம் / க்ருத்ர புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

இராவணன் இடம் நடந்த போரில் ஜடாயு மஹா ராஜா அடிபட்டு மரணம் அடைய -ஈமக்கி கடன்களை செய்து பெருமாள்
ஜடாயுவை மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி வைத்து இக்காட்சிகளை இங்கே பக்தர்களுக்கு காட்டி அருளினார்
சோமுகன் என்னும் அரக்கன் பிரமன் இடம் இருந்து வேதங்களை திருட -இங்கே பகவான் பிரமனுக்கு மீண்டும் வேதங்களை உபதேசித்தார் –
திரு மண்டங்குடி இதன் அருகில் -உள்ளது –
தாக்கீது -நாசிக் பஞ்சவடி அருகில் நடந்தது –திருப் புட் குழியிலும் சேவை இங்கே போலே
அஹோபில மேடம் அதீனம் -தேசிகர் சந்நிதி பிரசித்தம் –
ஜடாயு ஹனுமான் லஷ்மணன் பூமி தேவி கர்ப்ப க்ருஹத்துக்குள் சேவை
இரண்டு திருக்கரங்கள் –கண்டு மங்களா சாசனம் பண்ணாமல் போக -சங்கு சக்கரத்துடன் சேவை சாதித்து பாடல் பெற்றாராம்
சயன திருக்கோலம் இங்கும் திருப்புல்லாணியிலும் -இராமனை சேவிக்கலாம் – கம்பரும் பாடி -இவனாகும் அவ்வல் வில் ராமன்

——————————————————————————————–

11-திரு ஆதனூர்
மூலவர் -ஆண்டளக்கும் ஐயன் -/ புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்கம் போலவே –
தாயார் -ஸ்ரீ ரங்க நாயகி –பார்க்கவி என்றும் திரு நாமம்
விமானம் -ப்ரணவாரா விமானம்
தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரிணி
ஸ்தல வ்ருக்ஷம்–பாடலை வ்ருக்ஷம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார் –

ஆ -பசு -காம தேனு -இந்த ஷேத்ரத்தில் தவம் பெற்று சிறந்த கதி பெற்றதால் -ஆதனூர் -பெயர்
திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய கடனுக்கு இப்பெருமாள் செல்வம் அளந்து கொடுத்து
கணக்கும் எழுதிய படியால் -மரக்கால் ஓலைச் சுவடி யுடன் எழுந்து அருளி இருக்கிறார் –
மண்ணை அளந்து கொள்ளக் கொடுக்க -சரியாக வேலை செய்தால் தங்கமாக தெரியும் -இல்லை என்றால் மண்ணாக தெரியும்
கணக்கும் வைக்க எழுத்து கோல்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -அரசனாக ஆண்டு அன்னம் அளக்கும் -அளிக்கும் -ரக்ஷகன் –
பெருமாள் தலைக்குக் கீழ் ஒரு மரக்கால் படியை வைத்து இருக்கிறார்
அக்னி பகவானுக்கும் தன் சாபம் தீராத தவம் புரிந்த க்ஷேத்ரம் -கொள்ளிடம் காவேரி நடுவில் சேவை இங்கும் –
இந்திரனும் ஸ்ரீ மஹா லஷ்மி மாலையை மரியாதை குறைவுடன் நடத்திய சாபம்–துர்வாசர் பிருகு சாபம் -இரண்டும் சொல்வர்
இங்கே தவம் இருந்து தாயாரின் அருளை பெற்று தீர பெற்றான் –
ஸ்வாமி மலையில் இருந்து 3 கி மி தூரம் –

—————————————————————————————-

12-திருக் குடந்தை
மூலவர் -ஸ்ரீ -சார்ங்க பாணி / ஆராவமுதன் /அபர்யாப்தாம்ருதன் /உத்யோக சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கோமள வல்லி
விமானம் -வைதிக விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி
மங்களாசாசனம் -பூதத்தாழ்வார் / பேயாழ்வார் / திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /ஆண்டாள் / திரு மங்கை ஆழ்வார் –
திருமங்கை ஆழ்வார் 6 திவ்ய பிரபந்தங்கள் அனைத்திலும் மங்களா சாசனம் –

பிரமன் ஸ்ருஷ்டிக்கு தேவையான வித்துக்களை ஒரு குடத்தில் -கும்பத்தில் வைத்தான் –
அந்த கும்பம் இமயமலையில் இருந்து கங்கா யமுனா கோதாவரி கிருஷ்ணா -பாலாற்றின் வழியாகக் காவிரியை அடைந்தது
இங்கு கும்பத்தின் கோணத்தில் -மூலையில் -இருந்து வித்துக்கள் கீழே விழுந்த படியால் கும்ப கோணம் என்ற பெயர் பெற்றது –
ஹேம மஹர்ஷிக்கு திருமகளாக பிராட்டி பிறக்க -அவளைத் தேருடன் எழுந்து அருளி மகர சங்கராந்தி அன்று
ஸ்ரீ சாரங்க பாணி திருக் கல்யாணம் செய்து கொண்டார்
கர்ப்பகிரகம் தேர் வடிவில் இருக்கும் –
உத்யோக சயனம் -உத்தான சயனம் –கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -திரு மழிசை பிரான் -ஆராவமுத ஆழ்வார் –
தாயார் -பெருமாள் மாற்றி திருக் கோலம் -குத்து விளக்கு எரிய-அன்று -சேவை யுண்டே –
ஸ்ரீ சார்ங்க பாணி -ஸ்ரீ சக்ர பாணி -ஸ்ரீ ராம ஸ்வாமி திருக் கோயில்கள் பிரசித்தம்
தஷிணாயணம் உத்தராயணம் -இரண்டு வாசல்கள் உள்ளன –
நாலாயிரம் மீண்டும் கிடைக்க ஆராவமுதனே அருள் புரிந்தார் -திராவிட ஸ்ருதி தர்சகாய நம -நாமாவளி –
கோல்ஹா பூரில்-தாயார் –திருமலை -பத்மாவதி –பாதாள ஸ்ரீனிவாசர் கோயில் –
மகா மகம் பிரசித்தம் –பாஸ்கர க்ஷேத்ரம் -ஸூ ர்யனால் பிரசித்தம் -சக்கர படித்துறை பிரசித்தம் –
சுதர்சன வல்லி விஜய வல்லி –ஐஸ்வர்யம் ஆயுசு ஆரோக்யம் -திரு மழிசை -திருச் சக்கர அம்சம் –
தக்ஷிண அயோத்தியை -அதனால் தான் ஸ்ரீ ராமர் கோயில் -அமர்ந்த திருக் கோலம் ஆஞ்சநேயர் -தம்பூரா ஸ்ரீ ராமாயணம் திருக் கைகளில் உடன் சேவை
பட்டாபிஷேகம் திருக் கோலம் -லஷ்மணன் இரண்டு வில்லுடன் சேவை –

————————————————————————————————————-

13 -திரு விண்ணகர்
மூலவர் -ஸ்ரீ நிவாஸன் /ஒப்பிலியப்பன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பூமா தேவி
விமானம் -சுத்த ஆனந்த விமானம்
தீர்த்தம் -அஹோ ராத்ர புஷ்காரிணி
மங்களாசாசனம் -பேயாழ்வார் -நம்மாழ்வார் –திருமங்கை யாழ்வார்

ம்ருகண்டு முனிவர் -திருமகள் -உப்பையே விட்டு திருக் கல்யாணம் -பிரசாத்தின் உப்பு சேர்ப்பதில்லை –
திருவோணம் ஸ்ரவண தீபம் பிரசித்தம் –
உப்பிலி அப்பன் /ஒப்பிலி அப்பன் /பொன்னப்பன் / முனியப்பன் /முத்தப்பன்/ -என் அப்பன் –
-ஐந்து அப்பன் -திரு நாமங்களுடன் சேவை சாதிக்கிறார் –
ஸ்ரீனிவாசனுக்கு அண்ணன் என்பர் –சுத்த ஆனந்தம் -விமானம் –
மகா லஷ்மி தாயாரே பூமி தேவியாக சேவை இங்கு
பங்குனி ஏகாதசி திருவோணம் –தோன்றி -பேச்சு வார்த்தை -ஐப்பசி திருவோணம் திருக் கல்யாணம் –

—————————————————————————-

14-திரு நறையூர்
மூலவர் -திரு நறையூர் நம்பி – / ஸ்ரீ நிவாஸன் / -நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -நறையூர் நின்ற நம்பி –
தாயார் -வஞ்சுள வல்லித் தாயார் / நம்பிக்கை நாச்சியார்
விமானம் –ஹேம விமானம்
தீர்த்தம் -மணி முக்தா நதி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

நீளா தேவிக்கு சிறப்பு –வஞ்சுள மரத்தின் அடியில் திரு வவதரித்த தாயார் மேதாவி மஹர்ஷியால் வளர்க்கப் பட்டாள்-
நறை-நறுமணம் -மிக்க பூஞ்சோலைகள் நிறைந்த வூர் -நறையூர்
திருமங்கை ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்த படியால் பகவான் இங்கு சங்கு சக்கரங்களை முன்னோக்கிப் பிடித்து இருப்பார்
கல் கருட சேவை மிகவும் பிரசித்தம் –
பங்குனி -உத்தரம் -வெள்ளி -தாயார் தோற்றம் -நேராக கர்ப்ப க்ருஹ சேவை தாயாருக்கு –
சங்கர்ஷணன் பிரதியும்நன் அநிருத்தினன் புருஷோத்தமன் சேவை -பிரமன் -நித்ய பூஜை இங்கு —
மடல் எடுத்ததும் இங்கு –சங்கு சக்கர பொறி ஒற்றிக் கொண்டதால் -இடம் வலம் மாறி முன்னால் வைத்து சேவை
கோ செங்கணான் சோழன்
கருடன் -9 சர்ப்பங்கள் உடன் சேவை -அமிருத கலசம் -அமுது செய்கிறார் —

—————————————————————————————-

15-திருச்சேறை
மூலவர் –சார நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -சார நாயகி
விமானம் -சார விமானம்
தீர்த்தம் -சார புஷ்கரணி
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

இங்கு ஸ்ரீ தேவி . பூ தேவி / நீளா தேவி / சார நாயகி /மஹா லஷ்மி -ஐந்து நாய்ச்சிமார்கள் -ஐந்து தாயார் சேர்த்தி உத்சவம் பிரசித்தம் –
பிரளய காலத்தில் வித்துக்களை சேமிக்கச் செய்யப்படட குடத்தின் மண் இந்த ஷேத்ரத்தில் இருந்து எடுக்கப் பட்டது
வித்யா பர்வத அடியில் 7 நதிகள் தவம் செய்ய ஒரு கந்தர்வ ராஜா பொதுவாக நமஸ்கரிக்க –
காவேரிக்கு கங்கைக்கும் இது யாருக்கு என்ற போட்டி வர பிரமன் கங்கைக்கு தான் இந்த மரியாதை என்ன
-சினம் கொண்ட காவேரி இங்கே தவம் புரிய அவளுக்கு முதலில் குழந்தை வடிவத்திலும் -மா மதலை பெருமாள் —
பின்பு ஸ்ரீ சார நாதனாகவும் காட்சி அளித்தான் பகவான் -மார்க்கண்டேய ரிஷி காவேரி தாயார் கர்ப்ப க்ருஹத்தில் சேவை –

குட வாசல் -கும்ப கோணம் -வயிற்று பகுத்து திருச் சேறை-
மூலவர் கையில் புஷபத்துடன் சேவை
வன வாச ராமர் -சடை முடியுடன் சேவை –

———————————————————————————

16-திருக் கண்ண மங்கை -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் -பத்தராவிப் பெருமாள் /நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அபிஷேக வல்லி
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -தர்சன புஷ்கரிணி –பார்த்தாலே பலம் கிட்டும் –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -கண்ண -கற்கலாம் பொருள் தானே –நம்பிள்ளை -பெரியவாச்சான் பிள்ளை –

கருடன் -கட்டம் போட்ட புடைவை சாத்துவார் -வர பிரசாதி
கடலுக்கு வெளியே வந்த படியால் -பகவானுக்குப் பெரும் புறக் கடல் என்ற பிரசித்தமான திரு நாமம் –
பாற் கடலில் தோன்றிய ஸ்ரீ மஃகா லஷ்மி மணம் புரிவதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வர –
வெட்கமுற்ற திருமகள் இங்கே வந்து மணம் புரிந்தாள்-
தேவர்களும் தேனீக்கள் வடிவில் மறைந்து திருமணத்தைக் கண்டனர் -தாயார் சந்நிதியில் தேன் கூடு இன்றும் உண்டு
அன்னம் -கிளி வண்டு காதலிக்கு பிடிக்குமே –
இங்கு க்ஷேத்ரம் /விமானம் /மண்டபம் /அரண்யம் /சரஸ் /க்ஷேத்ரம் /ஆறு /நகரம் -ஏழும் அமுதமயம் -சப்தாம்ருத க்ஷேத்ரம் -பெயரும் உண்டு
திருக் கண்ண மங்கை ஆண்டான் -தனி சந்நிதி -நாய் சண்டை -கதை -நாத முனிகள் சிஷ்யர் –ஸூ வியாபாரத்தை விட்டாரே –

——————————————————————————

17-திருக் கண்ண புரம் – -ஸ்ரீ கிருஷ்ண ஆரண்ய க்ஷேத்ரம்
மூலவர் -நீல மேகப் பெருமாள் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம் -பிரயோக சக்கரத்துடன் மூலவர் சேவை –
உத்சவர் –சவ்ரி ராஜன் -மை வண்ண நறும் குஞ்சி –
தாயார் -கண்ண புர நாயகி
விமானம் -உத்பலாவதக விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் / குலசேகர ஆழ்வார் / பெரியாழ்வார் / ஆண்டாள் /திருமங்கை ஆழ்வார்

உபரிசரவசு -ராஜா இங்கே வர -ரிஷிகள் மிகவும் மெலிந்து தவம் செய்து கொண்டு இருக்க
அவர்கள் சாமாக் கதிர்கள் போலே தோற்றம் அழிக்க -ராஜா வாளால் வெட்ட ஆரம்பித்தான்
ரிஷிகள் பகவானை வேண்ட அவர் சிறு பாலகனாய் த் தொன்று ராஜாவுக்கு தண்டனை கொடுத்து இங்கேயே காட்சி கொடுத்தார்
இங்கு விமானம் முக்தி அழித்தது -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக அமாவாசை தோறும் பெருமாளுக்கு திருக் கைது தள சேவை உண்டு
திருமங்கை ஆழ்வாருக்கு அஷ்டாக்ஷர திருமந்த்ரார்த்தம் உபதேசித்த திருத் தலம் –
சரண்ய முகுந்தத்வம் -பலம் -மாம்சம் — -உத்பலாவதக -உடலில் ஆசை இல்லாதவர்க்கு முக்தி அளிக்கும் பெருமாள்
கீழ வீடு -இது சம்பிரதாயத்தில் மாசி மகம் தீர்த்தவாரி -மாப்பிள்ளை ஸ்வாமி -பிரசித்தம் -திரு மலை ராயன் பட்டணம் -2.5 நாள் உத்சவம்
திரு அஷ்டாக்ஷர க்ஷேத்ரம் -தெப்பம் உத்சவம் பிரசித்தம் –
விமானம் -மாட வீதி திரு மங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து சேவிக்கலாம் –
அரையர் -தாளம் -அடி பட்டு வடு இன்றும் சேவிக்கலாம் -முனி யதரையன் பொங்கல் பிரசித்தம் –

————————————————————————

18-திருக் கண்ணங்குடி -ஸ்ரீ கிருஷ்ண ஆரண்ய க்ஷேத்ரம் –
மூலவர் –சியாமா மா மேனியன் லோக நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -தாமோதர நாராயணன்
தாயார் -லோக நாயகி அரவிந்த வல்லி
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -ஸ்ரவண புஷ்கரிணி –கேட்டாலே பாபம் தொல்லைக்கு –
ஸ்தல வ்ருக்ஷம் -மகிழ மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

வசிஷ்டர் -வெண்ணெயால் கண்ணன் உருவம் ஆராதனம்பண்ணிக் கொண்டு இருந்த மூர்த்தியை பாலகன் வடிவில் வந்த
பெருமாள் எடுத்துக் கொண்டு போக- ரிஷிகள் பாலகனைப் பிடித்துக் காட்டினார் –
இடுப்பில் தாம்பால் கட்டுப்பட்டவன் முதலில் தாமோதரனாகவும் பின்பு நாராயணனாகவும் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தான்
உறங்காப்புளி – தோலா வழக்கு -ஊராக் கிணறு -காயா மகிழ்–திருமங்கை ஆழ்வார் சரித்திரத்தில் -இங்கு பிரசித்தம் –
நாகை ஸ்வர்ண சிலை மறைத்த இடம் -உறங்கா புளி/ நிலம் -தோலா வழக்கு -தீராத வழக்கு திருக் கண்ணங்குடி
நீர் கொடுக்காததால் சபிக்க ஊராக் கிணறு -இளமையான மகிழ் மரம்
நாகை -திருவாரூர் மார்க்கம் -ஆழியூருக்கு அருகில் –

————————————————————————————

19-திரு நாகை
மூலவர் -நீல மேக்கப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஸுந்த்ரராஜன்
தாயார் -ஸுந்த்ர வல்லி
உத்சவர் -கஜ லஷ்மி
விமானம் -ஸுந்தர்ய விமானம்
தீர்த்தம் -சார புஷ்கரணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -அச்சோ ஒருவர் அழகிய வா –

க்ருத யுகத்தில் ஆதி சேஷனாலும் –த்ரேதா யுகத்தில் பூமி தேவியாலும் –த்வாபர யுகத்தில் மார்கண்டேயராலும்
கலி யுகத்தில் சாலிசுகன் என்ற அரசனால் ஆராதிக்கப் பட்டவர்
நாக ராஜா வான ஆதி சேஷன் ஆராதித்த படியால் நாகப் பட்டினம் ஆயிற்று –
பெருமாள் இங்கு பேர் அழகுடன் விளங்குகிற படியால் -நாகை அழகியார் -என்றும் அழைக்கப் படுகிறார் –
துருபனுக்கு அருளிய ஸ்தலம் – ராஜா இடுப்பில் சாவிக் கோத்து / காதில் நீலா கல் தனியாக தொங்கும் –

——————————————————————————-

20-தஞ்சை மா மாணிக் கோயில்
மூலவர் -நீல மேகப் பெருமாள் / மணிக் குன்றப் பெருமாள் / நர சிம்ஹப் பெருமாள் / வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -செங்கமல வல்லி / அம்புஜ வல்லி / தஞ்சை நாயகி
விமானம் -ஸுந்தர்ய விமானம் / மணிக் கூட விமானம் / வேத ஸூ ந்தர விமானம்
தீர்த்தம் -அம்ருத நதி -ஸ்ரீ ராம தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரணி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் திரு மங்கை ஆழ்வார்

க்ருத யுகத்தில் தஞ்சகன் -கஜமுகன் -தண்டகன் -எனும் அசுரர்கள் தவம் செய்து பராசர மஹர்ஷிக்கு இடையூறு செய்தனர்
பகவான் தோன்றி தஞ்சகனை அளித்ததால் அவன் பெயராலேயே தஞ்சை என்றாகியது –
அடுத்தது கஜமுகனை சிங்க முகத்தோடு பகவான் அழிக்கிறார்-அவரே தஞ்சை ஆளி-
விண் ஆறு -வெண்ணாற்றங்கரை -விராஜையே-என்பர் –
வர்ண கலாபம் நரஸிம்ஹர் -தஞ்சை ஆளி பெருமாள் –
தண்டக வனம் பெயர் –
மணியே குன்றமாக -பச்சை மா மலை போலே மேனி –

———————————————————————————————

21-நந்தி புர விண்ணகரம் -நாதன் கோயில் –ஜகந்நாதன் —
மூலவர் -ஜகந்நாதன் – விண்ணகரப் பெருமாள் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -செண்பக வல்லி
விமானம் -மந்தார விமானம்
தீர்த்தம் -நந்தி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தாயார் பகவானுடைய திரு மார்பில் என்றும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தவம் கிழக்கே நோக்கி –புரிந்த க்ஷேத்ரம் –
நந்தி கேஸ்வரர் இங்கு தவம் புரிந்து சாபம் தீர பெற்றார் -ஆதலால் -நந்தி புர விண்ணகரம் -பெயர்
சிபி சக்கரவர்த்தி புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னுடைய மாம்சத்தைக் கொடுத்த தலம் –
நித்ய ஹோமம் -வான மா மலை ஜீயர் அதீனம் –

—————————————————————————————-

22-திரு வெள்ளியங்குடி
மூலவர் –கோலா வல்லி இராமன் / புஜங்க சயனம் /கிழக்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -சிருங்கார ஸூந்தரன்
தாயார் -மரகத வல்லி
விமானம் -புஷ்கலா வர்த்தக விமானம்
தீர்த்தம் -சுக்ர தீர்த்தம் / பிரம்ம தீர்த்தம் / இந்த்ர தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -கதலி -வாழை வ்ருக்ஷம் -செவ்வாழை -மரம்

கண்ணை இழந்த சுக்ராச்சாரியார் -வெள்ளி -இங்கே தவம் செய்து கண்ணைப் பெற்றார் –
க்ருத யுகத்தில் ப்ரஹ்ம புத்ரம் -த்ரேதா யுகத்தில் பிரச்சாரம் -த்வாபர யுகத்தில் இந்த்ர நகரம் -கலி யுகத்தில் பார்க்கவ புரம்
என்ற பெயர்களோடு இந்த க்ஷேத்ரம் விளங்குகிறது –
அலங்கார பிரியன் -கோல வில் ராமன் -சயன திருக் கோலம் -விஸ்வ கர்ம -தேவர் தச்சன் நிரைய கோயில்கள் –
/ மயன் அசுரர் தச்சன் -பிரார்த்தித்து -நிர்மாணித்த திருக் கோயில் என்பர் –
கருடன் நான்கு திருக் கைகள் உடன் சேவை -சங்கு சக்கரத்துடன் சேவை –
பெரியவாச்சான் பிள்ளை திருவவதார ஸ்தலம் சேங்கனூர் மிக அருகில் உள்ளது –

————————————————————————————-

23-தேரழுந்தூர்
மூலவர் -தேவாதிராஜன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஆ மருவியப்பன் / கோஸகன்
தாயார் -செங்கமல வல்லித் தாயார்
விமானம் -கருட விமானம்
தீர்த்தம் -தர்சன புஷ்காரிணி -காவேரி தீர்த்தம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார்

உபரிசரவசு -அரசனின் ஆகாயத்தில் பறக்கும் தேர் இங்கு பூமியில் அழுந்தின படியால் தேரழுந்தூர் ஆயிற்று –
கோகுலத்தில் பிரமன் கவர்ந்து சென்ற மாடு கன்றுகளைத் தேடிக் கொண்டு கண்ணன் இங்கு வந்து கோசகனாகக் காட்சி கொடுத்தார் –
பெரிய திருவடி பிரஹலாதன் -கர்ப்ப க்ருஹ சேவை பெருமாள் உடன்
கவி சக்கரவர்த்தி கம்பர் -பிறந்த -கோயிலுக்குள்ளே கம்பர் மனைவியுடன் –
பெரிய திருவடி சமர்ப்பித்த விமானம் இங்கு -திரு முடி -வைர முடி சேவை திரு நாராயண புரத்தில் –

————————————————————————————–

24-சிறு புலியூர்
மூலவர் -அருமா கடல் அமுதன் / புஜங்க சயனம் / தெற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -க்ருபா சமுத்ரன்
தாயார் -திரு மா மகள் நாச்சியார் -தயா நாயகி –
விமானம் -நந்த வர்த்தக விமானம்
தீர்த்தம் -மானஸ புஷ்கரணி -அநந்த சரஸ்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

சிறிய உருவம் -பால சயனம் / புலி போன்ற பாதங்களை யுடைய வ்யாக்ர பாதர் என்ற ரிஷி ருத்ரன் இடம் மோக்ஷம் வேண்டி தவம் செய்ய
அவன் ரிஷியை சிறு புலியூருக்கு அழைத்து வந்தார் -ரிஷி பகவான் இடம் வேண்டி மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற்றார் –
கொல்லு மாங்குடி அருகில் –
ஆதி சேஷன் தனி சந்நிதி உண்டு / நாக தோஷம் -பால் பாயாசம் அமுது செய்வார் -புஷ்கரிணியில் சந்நிதி
வியாசர் வியாக்ரபாதர் பிரத்யக்ஷம்

——————————————————————————–

25-திருத் தலைச் சங்க நாண் மதியம்
மூலவர் -நாண் மத்திய பெருமாள் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வெண் சுடர்ப் பெருமாள்
தாயார் -தலைச் சங்க நாச்சியார்
உத்சவர் -செங்கமல வல்லித் தாயார்
விமானம் -சந்த்ர விமானம்
தீர்த்தம் -சந்த்ர புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

சந்திரன் இந்த புஷ்கரிணியில் நீராடி தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றார் –
சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஒளியுடன் பெருமாள் அனைவருக்கும் காட்சி அளிக்கிறார்
மாயவரம் -ஆக்கூர் -சீர்காழி -மார்க்கம் -ஆக்கூரில் இருந்து 3 கிமி தூரம் –
பூம்புகார் அருகில் -காவேரி பூம் பட்டணம் -பழைய பெயர் -கடலில் கலக்கும் இடம் –
ரோஹிணி மட்டும் ஆசை -அதனால் சாபம் -தீர்க்கப் பெற்ற ஸ்தலம்
சங்கு வியாபாரம் -தலைமையான இடம்

——————————————————————————-

26-திரு இந்தளூர்
மூலவர் -பரிமள ரங்க நாதர் –ஸூகந்த வன நாதன் -வீர சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
சயன திருக் கோலத்துடன் -சங்கு சக்கரம் தாங்கி வீர சயனம் –
தாயார் -பரிமள ரங்க நாயகி -ஸூகந்த வன நாச்சியார் -சந்த்ர சாப விமோசன வல்லி தாயார்
விமானம் -வேத ஆமோத விமானம் –வேதத்துக்கு ஆனந்தம் கொடுக்கும்
தீர்த்தம் -இந்து புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

மது கைடபர் கள் வேதத்தை பிரமன் இடம் இருந்து அபகரித்துக் கொண்டு ஒழித்து வைக்க அது நாற்றம் பிடித்தது
பிரமன் பரிமள ரங்க நாதரின் திருவருளால் வேதத்தின் நாற்றத்தைப் போக்கினார்
சந்திரன் -இந்து -புஷ்கரிணியில் நீராடி சாபம் தீர்ந்தார் –
ஆண் பாவனையில் உடல் திருமங்கை ஆழ்வார்
தலைப் பக்கம் ஸூரியன் கங்கை -திருவடி சந்திரன் -காவேரி
ஐப்பசி மாசம் முழுவதும் உத்சவம் -கங்கை காவேரியில் வந்து பவித்ரம் அடைவாள்

————————————————————————————-

27-திருக் காவளம் பாடி
மூலவர் -கோபால கிருஷ்ணன் / ராஜ கோபாலன் ருக்மிணி ஸத்ய பாமையுடன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் -செங்கமல நாச்சியார் / மடவரல் மங்கை
விமானம் -வேத ஆமோத விமானம்
தீர்த்தம் -தடா மலர்ப் பொய்கை –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -4-6-

காவளம்-என்றால் பொழில் -சோலை / நரகாசூரனை இந்திரனுக்காக அழித்த பின்பு ஸத்யபாமா கண்ணனிடம்
தேவ லோகத்தில் இருக்கும் பாரி ஜாத புஷபம் வேண்டும் எனக் கேட்டாள்-இந்திரன் பொழிலை அழித்து
தனக்கு வேண்டிய காவளம் கொண்டு வந்து இந்த ஷேத்ரத்தில் அமைத்தார் -இதனால் இந்த பெயர் –
துவாரகா தீசனான கண்ணனே இங்கு எழுந்து அருளி இருப்பதாகக் கூறப்படுகிறது –
திரு நாங்கூர் -11 -திவ்ய தேசங்கள் -தக்ஷன் யஜ்ஜம் -ருத்ரன் -11 மூவரும் -ஏகாதச ருத்ரர்கள் -கோபம் அடக்க –
தை அம்மாவாசை கருட சேவை -பிரசித்தம் –

———————————————————————————-

28-காழிச் சீராம விண்ணகரம் –சீர்காழி
மூலவர் -தாடாளன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -த்ரிவிக்ரமன்
தாயார் -லோக நாயகி
உத்சவர் -மட்ட விழும் குழலி
விமானம் -புஷ்காலா வர்த்தக விமானம்
தீர்த்தம் -சங்க புஷ்கரிணி -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

ராம லஷ்மணர்கள் தாடகையை வாதம் செய்து சித்தாசமரத்தில் இருந்தனர் –
அந்த இடத்திற்கும் இந்த ஷேத்ரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த திரு நாமம் –
பிரமன் தன்னுடைய ஆயுளை நினைத்து செருக்குடன் இருந்தான் -அவன் கர்வத்தை ரோமச முனிவர் இந்த இடத்தில் அடக்கினார்
பாடலீகா வானம் உத்தம க்ஷேத்ரம் -என்றும் இவ்விடம் அழைக்கப் படுகிறது –
தவிட்டுப் பானை தாடாளன் –பாட ஆராதனை செய்ய பெருமாள் வேண்டுமே –தாடாளா வா வெண்ணெய் உண்ட தாடாளா வா
-தவிட்டுப் பானை தாடாளா வா -பாட -வந்தானே –
திருமங்கை ஆழ்வார் இங்கு திரு ஞான சம்பந்தரை வாதப் போரில் வென்று அவர் இடம் இருந்த வேலைத் தன் வசம் ஆக்கினார் –
வினைகள் கழிந்து சீர் பெறுக -காழிச் சீர் –சீர் காழி -விண்ணகரம் -இடது திருவடி மேலே -இடது கை மேலே –

———————————————————————————————

29-திரு அரிமேய விண்ணகரம்
மூலவர் -குடமாடு கூத்தர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -சதுர் புஜ கோபாலன்
தாயார் -அம்ருத கட வல்லி
விமானம் -உச்ச்சச்ருங்க விமானம்
தீர்த்தம் -கோடி தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் –
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

அரி என்றால் -திருடுபவர் அல்லது அபஹரிப்பவர் –இந்தப் பெருமாள் நம் பாபங்களைத் திருடி உள்ளங்களை அபஹரிப்பவர் –
கோவர்த்தன கிரி தாரியே இங்கு எழுந்து அருளி இருக்கிறார் –
சதுர் புஜங்களுடன் கண்ணன் எழுந்து அருளி இருப்பது சிறப்பாம்சம் ஆகும் –
உதங்க மகரிஷிக்கு இந்த திருக் கோலத்தில் காட்சி கொடுத்தார் என்று ஸ்ரீ பாகவதம் சொல்லுமே –

———————————————————————————–

30-திரு வண் புருடோத்தமம்
மூலவர் -புருஷோத்தமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புருஷோத்தம நாயகி
விமானம் -சஞ்சீவ விக்ரஹ விமானம்
தீர்த்தம் – திருப் பாற் கடல் தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –4-2-

வியாக்ரபாத முனிவர் தன் குழந்தையான உபமன்யுவைத் தனியே விட்டு புஷபம் பறிக்கப் போக -அக் குழந்தை அல்லது தொடங்கிற்று
இதை பார்த்த தாயார் பெருமாளை ஏவி திருப் பாற் கடலையே பாலாகக் கொடுத்தாள் -என்று ஸ்தல புராணம் சொல்லும்
இவ்விதமாகவே திருப் பாற் கடல் தீர்த்தம் உண்டாயிற்று
அயோத்யையில் இருக்கும் மாரியாத்தா புருஷோத்தமன் ஸ்ரீ ராமரே இங்கு வந்து காட்சி கொடுத்து அருளுகிறார் –

——————————————————————————————–

31-திருச் செம்பொன் செய் கோயில்
மூலவர் -பேர் அருளாளன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஹேம அரங்கன் -செம் பொன் அரங்கர்
தாயார் -அள்ளி மா மலர் தாயார்
விமானம் -கனக விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி -கனக தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –4-3-

இராவண வதத்தால் நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி தோஷம் போக்கிக் கொள்ள த்ருட நேத்ரர் முனிவர் இடம் வேண்டிக் கொள்ள
1000 பாரம் தங்க பசுவைச் செய்து அதில் நான்கு நாட்கள் ஸ்ரீ ராமர் உட்க்கார்ந்து பிறகு அதில் இருந்து வெளியே வந்தார் -கோ பிரசவம் –
அந்த தங்க பசுவை ரிஷிக்கு தானமாக கொடுத்தார் –
இவற்றை வைத்துக் கொண்டு த்ருட நேத்ர முனிவர் இக் கோயிலை எழுப்பினார்
பொன்னை தானமாக வாங்கிக் கட்டப் பட்ட கோயில் ஆதலால் செம் பொன் கோயில் பெயர் பெற்றது –
உறையூர் அழகிய மணவாள பெருமாளே இங்கு சேவை -ராமனால் ஆராதிக்கப் பட்ட நம் பெருமாளே -என்பர் –

—————————————————————————-

33-வைகுண்ட விண்ணகரம்
மூலவர் -வைகுண்ட நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி -தனிக் கோயில் நாச்சியார் கர்ப்ப க்ரஹத்திலே சேவை
விமானம் -அநந்த ஸத்ய வர்த்தக விமானம்
தீர்த்தம் -லஷ்மி புஷ்கரிணி –உதங்க புஷ்கரிணி –விரஜா
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –3-9-

ஸ்வேத கேது என்ற மஹா ராஜா கார்ய வைகுண்டம் அடைந்த பின்பும் அவருக்குப் பசி எடுத்தது –
தான தர்மங்களில் குறை இருப்பதால் பூ லோகம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள நாரதர் கூறினார்
அதன் படி அரசன் இங்கு வர அவருக்குத் திருமால் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் படிக்கே காட்சி கொடுத்து அருளினார் –

———————————————————————————————————

34-திருவாலி -திரு நகரி -நாச்சியார் பிறந்த புகுந்த தேசங்கள்
திருவாலி –
மூலவர் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் / வீற்று இருந்த திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -திருவாலி நகராளன்
தாயார் -அம்ருத கட வல்லி
விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -லாஷண புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்
திரு நகரி –
மூலவர் -தேவ ராஜன் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -கல்யாண ரங்க நாதர் -வயலாலி மணவாளன் –
தாயார் -அம்ருத வல்லி
விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -லாஷண புஷ்கரிணி
மங்களா சாசனம் -குலசேகர ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்

பஞ்ச நரசிம்ஹ க்ஷேத்ரம் -திரு வாலியில் -ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர்-திருக் குறையலூரில் உக்ர நரசிம்ஹர் -மங்கை மடத்தில் வீர நரஸிம்ஹர்
திரு நகரியில் -யோக நரஸிம்ஹர் மற்றும் ஹிரண்ய நரஸிம்ஹர்
சாந்தம் அடைய தாயார் வலது மடியில் எழுந்து அருளி இருக்கிறார் -பல தேசங்களில் இடது மடியில் சேவை உண்டே
திருவை ஆலிங்கனம் செய்த சேவை என்பதால் திருவாலி -திரு வேடுபரி உத்சவம் -பிரசித்தம் —
திரு மணம் கொல்லை–கலியன் -பட்டம் -மிடுக்கு கண்டு –மந்த்ரம் போட்டாயா -நீலன் -கலியன் -திருமங்கை ஆழ்வார்
அரசமரம்– ஆலி நாட்டு அரசு –தெய்வங்களில் அரசன் வயலாலி மணவாளன் -அருளிய
-மந்த்ர அரசு திரு மந்த்ரம் -வாடினேன் வாடி பிறக்கும் உத்சவம்
-சிந்தனைக்கு இனியான்–பரக்கத் நிஷ்டை –குமுத வல்லி நாச்சியார் உடன் புறப்பாடு -தூது-நான்கே பாசுரங்கள் -கள்வன் கொல்-திருக் கோலம் –
பங்குனி உத்தரம் முந்திய நாள் -நீர் மேல் நடப்பான்– நிழலில் ஒதுங்குவான் –தாளூதுவான் –தோலா வழக்கன்-நான்கு சிஷ்யர்கள் -ஆலி நாடன்
பூர்ண மஹரிஷியின் பெண்ணாக அம்ருத வல்லி தாயார் திருவவதாரம் செய்து திருக் கல்யாணம் செய்து கொண்ட ஸ்தலம் –
திருமங்கை ஆழ்வார் -அணைத்த வேலும் —தஞ்சமான தாளிணை –ஸ்ரீ ராமானுஜர் திருவடியில் சேவை
குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன்
கலியன் திருக் கோலம் கண்ணின் நின்றும் அகலாதே -கலியன் மேல் ஆணை
விதைக்கோட்டை மேலே கல்யாண ரெங்க நாதர் சேவை –
ஏவலம் வெஞ்சிலை பெருமாள் சேவை –நீணிலா முற்றம் -திருக் கண்ண புரம் -காண்பாள் -பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ-

————————————————————————————–

35-திருத்தேவனார் தொகை –
மூலவர் -தெய்வ நாயகன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மாதவப் பெருமாள்
தாயார் -கடல் மகள் நாச்சியார்
உத்சவர் -மாதவ நாயகி –இருவரால் இருவருக்கும் பெருமை
விமானம் -சோபன விமானம்
தீர்த்தம் -சோபன புஷ்கரிணி
மங்களா சாசனம் –திருமங்கை ஆழ்வார் -4-1-

கடல் கடைந்த போது தோன்றிய நாச்சியார் இங்கு வர பெருமாள் இங்கு எழுந்து அருளி திருமணம் புரிந்தார்
தேவர்கள் திரண்டு வந்து நின்ற இடமாதலால் இந்த பெயர் –
கீழச் சாலை மாதவப் பெருமாள் கோயில் என்ற பெயரும் உள்ளது

————————————————————————————————————-

36-திருத் தெற்றியம்பலம்
மூலவர் -செங்கண் மால் -ரெங்க நாதர் -புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம் -நான்கு புஜத்துடன் சயனம்
தாயார் -செங்கமல வல்லி
விமானம் -வேத விமானம்
தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் – -திருமங்கை ஆழ்வார்

அம்பலம் — இடம் / தெற்றி-மேடு –/ நிலத்தில் இருந்து உயரத்தில் இருக்கும் திவ்ய க்ஷேத்ரம்
பள்ளி கொண்ட பெருமாள் –என்பர் -படுக்கைக்கு மேடு வேண்டும் -மணல் மேட்டில் அரங்கன் அங்கே போலே –
ராஹு –கேதுவைக் கண்டு ஸூரியன் பயந்து குளத்தில் மறைந்து இருக்க -காட்சி கொடுத்து பயம் போக்கி அருளிய பெருமாள் –

—————————————————————————————-

37-திரு மணிக் கூடம் –
மூலவர் -மணிக் கூட நாயகன் / வரத ராஜன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம் -கஜேந்திர வரதராஜன் –
தாயார் -திரு மகள் நாச்சியார்
விமானம் -கனக விமானம்
தீர்த்தம் -சந்த்ர புஷ்கரிணி — ப்ரஹ்ம தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

மோஹினி அவதாரம் -ராஹு கேதுக்களை ஸூர்ய சந்திரர் காட்டிய பின்பு பட்டணத்து குளத்தில் ஒளிந்து கொள்ள
அவர்கள் பயத்தை போக்கி -காட்சி கொடுத்து அருள் பாலித்த பெருமாள் –

—————————————————————————————-

38-திரு வெள்ள குளம் -அண்ணன் கோயில்
மூலவர் -ஸ்ரீ நிவாஸன் / அண்ணன் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை
உத்சவர் -பத்மாவதி -பூவார் திரு மகள்
விமானம் -தத்வத்யோதக விமானம்
தீர்த்தம் -ஸ்வேத புஷ்கரிணி — வெள்ள குள தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –

துந்துமாற ராஜாவின் பிள்ளையான ஸ்வேதன் 9 வயசில் அகால மரணம் அடைவான் என்று சொல்ல -குல குரு
வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிய சொல்ல -கார்த்திகை சுக்ல ஏகாதசி என்று கடாக்ஷித்து நீண்ட ஆயுளை வழங்கினார்
ஸ்ரீ நிவாஸ பெருமாளுக்கே அண்ணனாக கொண்டாடப் படுகிறார் –
குமுத வல்லி நாச்சியார் -தெய்வப் பெண் -மருத்துவர் வளர்க்க -திரு மங்கை ஆழ்வார் முதலில் கண்டு –
கருட சேவைக்கு அடுத்த நாள் திருமங்கை ஆழ்வார் இங்கே எழுந்து அருளுகிறார் –
மஞ்சள் கொல்லை –உத்சவம் –அன்று இரவு 11 கருட சேவை –

—————————————————————————————-

39-திருப் பார்த்தன் பள்ளி
மூலவர் -தாமரையாள் கேள்வன் / நின்ற திருக் கோலம் / மேற்கே திருமுக மண்டலம்
உத்சவர் -பார்த்த சாரதி
தாயார் -தாமரை நாயகி
விமானம் -நாராயண விமானம்
தீர்த்தம் -கட்க புஷ்கரிணி -வாளால் கீறி வந்த தீர்த்தம் –
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

அர்ஜுனன் ஷேத்ராடனத்திற்காக தெற்கு நோக்கி -வரும் பொழுது தீர்த்த தாகம் எடுக்க
அகஸ்திய கமண்டலம் தீர்த்தமும் தீர்ந்து போக -கண்ணனை பிரார்த்திக்க சொல்லி -ப்ரத்யக்ஷம் ஆகி –
-நீண்ட வாளை கைகொடுக்க அத்தாலே பூமியைக் கீற தீர்த்தம் வந்தது
நான்கு தோள்களுடன் கூடிய பார்த்த சாரதி பெருமாள் அர்ஜுனனுக்கும் அகஸ்திய முனிவருக்கும் காட்சி கொடுத்து அருளினான்
அர்ஜுனன் கண்ணன் சேர்ந்து சேவை தனியாக இங்கு உண்டு
கோல வில்லி ராமன் -கண்ணன் இதன் ஒரே ஆசனம் கர்ப்ப க்ருஹத்தில் —

——————————————————————————————

40-திருச் சித்ர கூடம் -சிதம்பரம் –
மூலவர் -கோவிந்தராஜன் -போக சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
7 பணங்கள்-இங்கும் சப்த கிரி போலே -நான்கு புஜத்துடன் சயனம் –
உத்சவர் -தேவாதி ராஜன் -பார்த்த சாரதி -கடிவாளம் பிடித்து சேவை
கோவிந்தா கூப்பிட உதவின பார்த்த சாரதி அன்றோ –
தாயார் -புண்டரீக வல்லி
விமானம் -சாத்விக விமானம்
தீர்த்தம் -புண்டரீக புஷ்கரிணி
மங்களா சாசனம் -குலசேகர ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

தேவதச்சன் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்ட அழகான சித்ர கூடம் -பார்வதி பரம சிவன் -யார் சிறந்த நாட்டியம் ஸ்ரீ மன் நாராயணன் தீர்ப்பு வழங்க
தஞ்சகன் கஜமுகன் தண்டகன் -மூவரையும் பகவான் அழித்த பின்பு -அவர்கள் சகோதரி தில்லி -காந்தார வ்ருக்ஷமாக விரிந்து அதன் கீழே சயனம்
-தில்லி சில்லி -இருவரும் இங்கும் ஸ்ரீ முஷ்ணத்திலும் என்பர்
உத்சவர் தான் கோவிந்த ராஜர் திருப்பதியில் இன்றும் சேவை -தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் புதிதாக உத்சவர் இங்கே ஏற்பாடு செய்து அருளினார் என்பர் –
காட்டு மன்னார் கோயில் அருகில்-
——————————————————————————————–

மன்னார் குடி –
ராஜ மன்னார் -வாஸூ தேவ பெருமாள் மூலவர்
ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்
தோடு -ஒரு காதிலும் மற்று ஒன்றில் குண்டலம்–யசோதை நந்த கோபாலன் -இருவர்க்கும் ஆபரணங்கள்
-பெண் ஜாடை உடன் கண்ணன் -சாமுத்ரா லக்ஷணம் -கோபிகை ஜெயிக்க தோடு என்றுமாம் – -மாடு கன்றுக்குட்டி
32 வித்யைகள் -கண்ணன் காட்டி அருள
உன்னித்து –வண் துவராபதி மன்னனை ஏத்துமின் – மா முனிகள் -சமர்ப்பித்து அருளினார்
ஹரித்ரா புஷ்கரிணி -நதி போலவே
கோபால சமுத்திரம் வீதி பெயர்கள்
18 நாள் ப்ரஹ்ம உத்சவம் –

——————————————————————————————–

திரு மண்டங்குடி
தொண்டர் அடி பொடி வன மாலை அம்சம் -மார்கழி கேட்டை
பூக் குடலை யுடன் சேவை
அரங்கன் -ஸ்ரீ நிவாஸன் -அழகர் -மூவரும் சேவை –

———————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: