திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-6-

அவாப்த சமஸ்த காமனாய் -பரிபூர்ணனான -ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஈஸ்வரனை ஷூத்ரனும் ஷூத்ர உபகரணனுமாய் இருக்கிறவன்
ஆஸ்ரயிக்கைக்கு உபாயம் உண்டோ -என்னில்
இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டும்படி குறை இல்லாமையாலே அந்த பூர்த்தியும் ஸ்வா ராததைக்கு உறுப்பு
ஸ்ரீ யபதித்வமும் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் சீலாதிகளுக்கு அடியாகையாலே அதுவும் ஸ்வா ராததைக்கு உடலாகக் கடவது
வித்த அவ்யய ஆயாசங்கள் இல்லாமையாலும் -பிரத்யவாய பிரசங்கம் இல்லாமையாலும் – -த்ரவ்யாதி கார்யங்கள் யுடைய விசேஷநியதி இல்லாமையாலும்
த்வத் அங்க்ரி முத்திச்ய —யா க்ரியா-பத்ரம் புஷ்பம் -அந்ய பூர்ணாத் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஆஸ்ராயணம் ஸூகரம் என்கிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரயிப்பார்க்கு த்ரவ்ய நியதி இல்லை என்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசனைப்
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –
உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரய ணீ யனுக்கு ஹீயம்-
குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்-
இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை-
ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை –
இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை
ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று
அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

பாடி –விரிவது மேவலுறுவீர்
சம்சாரான் முக்தராய் சமஸ்த கல்யாண குணாத்மகனை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்துக்குப் போக்குவீடாக
எதத் சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே பாடி விஸ்ருதராகை யாகிற சம்பத்தை பெற வேண்டி இருப்பீர்
இந்த கனத்த பேற்றுக்குச் செய்ய வேண்டும் கிருஷி என் என்னில்
பிரிவகையின்றி
பிரிவாகிற வகை இன்றி
நினைந்து நைந்து -சூட்டு நன் மாலைகள் -என்கிறபடியே விலஷணர் ஆஸ்ரயிக்கும் அவனை நாம் ஆஸ்ரயிக்கை யாவது என் -என்று
அகலுகைக்கு ஒரு வகையிட்டுக் கொண்டு அகலாதே
நன்னீர்த்
ஒரு கந்தத்தாலும் உபஸ்கரியாத வெறும் நீர்
தூயப் –
அக்ரமாகப் பிரயோகித்து
-புரிவதும்
நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்
இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் -நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு -என்றும் சொல்லக் கடவது இ றே
அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று
பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்
ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

———————————————————

த்ரவ்ய நியதி இல்லாமையே அன்று -அதிகாரி நியமும் இல்லை என்கிறார் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

மதுவார் தண்ணம் துழாயான் –
பூவே -என்றது கீழ் -மதுவார் -என்று தொடங்கிற்று இதில் -அந்தாதிக்கு சேரும்படி என் என்னில் –
பூவாகில் மதுவோடு கூடி இருக்கையாலே சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் திருக் குழலின் ஸ்பர்சத்தாலே மதுஸ் யந்தியான திருத் துழாயை யுடையவன் –
சர்வேஸ்வரத்வ லஷணம் இது வி றே
ஐஸ்வர் யமும் போக்யதையும் இருக்கிற படி
-முது வேத முதல்வனுக்கு
இவ்வொப்பனை அழகை அனுபவித்து ஏத்தப் புக்கு ஷமர் அன்றிக்கே -இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இ றே வேதைக சமதிகன்யன் என்னுமது

எதுவேது என் பணி என்னாது அதுவே
வேத முதல்வனுக்கு பணி எது -என் பணி ஏது-என்னாததுவே
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு சத்ருசர் -நாம் செய்யுமது ஏது -என்று கை வாங்காது ஒழிகை
அந்தரங்க வ்ருத்தியோடு பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்கை என்னவுமாம்
ஆட்செய்யுமீடே
ஆட்செய்கைக்கு அதிகாரம் –

——————————————————–

கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறந்து அவன் பக்கல் தம்முடைய
மநோ வாக் காயங்கள் ப்ரவணமாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஈடும் யெடுப்புமிலீசன் –
ஜன்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டன் என்று ச்வீகரித்தல் -அபக்ருஷ்டன் என்று உபேஷித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
ஜாத்யாதிகள் பார்க்க விறகு இல்லையே
சம்பந்தம் சாதாரணம் ஆனபின்பு ஆரை விடுவது
மாடு விடாது என் மனனே
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது
பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இ றே பலத்து அளவிலே மீளுவது
நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது
உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது
தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே -என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

———————————————————————

கீழ்ச் சொன்ன ப்ராவண்யம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாய்ச் செல்லா நின்றது என்கிறார் –

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழி படும்-
கீழ் அணங்கு என்றதுக்கு அர்த்தம் இங்கே தெரிவித்தார் இ றே
தைவாவிஷ்டரைப் போலே ஆடா நிற்கிற என் சரீரம் அவன் பக்கலிலே வணங்கி வழி படா நின்றது
வழி படுகையாவது -அதுவே யாத்ரையாகச் செல்லுகை-

ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் –
அமரர் என்கிறது -நித்ய ஸூ ரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்
தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று
ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்
பிதற்றும் –
ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

குணங்கெழு கொள்கையினானே-ஈசன்
ரத்நாகரம் போலே ஏவம் விதமான குணங்கள் வந்து சேருகைக்கு ஆஸ்ரயமாய் உள்ளான் என்னுதல்-
இக்குணங்கள் வந்து கெழுமுகையை ஸ்வ பாவமாக யுடையான் என்னுதல்

பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே-ஈசனைக் கண்டு -அணங்கு என ஆடும் என் அங்கம்
-வணங்கி வழி படும்பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினான் கிடீர் என்கிறார் –
நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே தம்முடைய கரணங்களுக்கும் யாத்ரையாய் செல்லா நின்றது என்கிறார் –

——————————————————-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

கொள்கை கொளாமை இலாதான்-
ஆஸ்ரிதரோடு பரிமாறும் இடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யம் பாராதவன்
அதாவது -இவன் உத்க்ருஷ்டன் -அந்தரங்க வ்ருத்தியைக் கொள்வோம்
இவன் அபக்ருஷ்டன் -புறத் தொழிலைக் கொள்ளுவோம் -என்னுமவை இல்லாதவன் –
எள்கல் இராகம் இலாதான் –
அடிமை கொள்ளும் இடத்தில் வாசி இல்லையே யாகிலும் அவ்வாசியை நினைத்து இருக்குமோ -என்னில்
ராக த்வேஷ விபாகம் இன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க வத்சலனாய் இருக்கும்
ஆனால் இவன் தன்னைக் கிட்டினார் பக்கல் பார்க்குமது ஏது என்னில்
-விள்கை விள்ளாமை விரும்பி –
விள்கை -பிரயோஜநாந்தரங்களைக் கொண்டு விடுகை –
விள்ளாமை -அநந்ய பிரயோஜனனாகை
விரும்பி -ஆதரித்துப் பார்த்து
-உள் கலந்தார்க்கு ஓர் அமுதே-
அநந்ய பிரயோஜ நற்கு நிரதிசய போக்யனாய் இருக்கும் –

————————————————————–

நிரதிசய போக்யனான அவனை உபாயமாகப் பற்றி ப்ரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகிறவர்களை நிந்திக்கிறார்

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர அமையும் -என்று இருக்கிறவர்களுக்கு –
ஷூத்ரத்தை அபேஷித்தார்கள்-என்று இகழாதே கடலைக் கடைந்து அம்ருதத்தை கொடுத்த பரம உதாரன்
நிமிர் சுடராழி நெடுமால்
நால் தோள் அமுது -என்றும் -அமுது என்றும் தேன் என்றும் -தம்முடைய அம்ருதம் இருக்கிறபடி
மிக்க தேஜஸ்சை யுடைத்தான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
இவர்கள் அபேஷித்தத்தை தலைக் கட்டிக் கொடுத்த ப்ரீதியால் வந்த புகர்திரு வாழி யிலே தோற்றி இருக்கை-
பிரயோஜ நாந்தரமே யாகிலும் நம்மைக் கொண்டு பெறப் பெற்றோமே -என்று இவர்கள் பக்கல் வ்யாமோஹத்தை யுடையவன் என்னவுமாம்

அமுதிலும் ஆற்ற இனியன்
இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்
வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –
அற்ற இனியன்
மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே
அவ்வம்ருதம் படும் கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளுகிறது
தன் வாசி அறியாதே இருப்பார்க்கும் எழுப்பிக் கடைவித்துக் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
நிமிர் திரை
அவனோட்டை ஸ்பர்சத்தாலே கொந்தளித்த திரை
நீள் கடல்
தாளும் தோளும் முடிகளும் -என்கிறபடியே அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு இடம் போந்து இருக்கை –

—————————————————–

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல
சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
சத யோஜன விச்தீர்ணமான கடல் -அகழ்-
அது மிகை என்னும்படி அரண் மிக்க ஊர் –
அவை மிகை என்னும்படி ராஷசன் ஆனவன் மிடுக்கு
-தோள்கள் தலை துணி செய்தான்
அகப்பட்டான் இ றே -என்று கொன்று விடாதே தோள்களைக் கழித்து -தலைகளை க்ரமத்தில் அறுத்து
அவன் இளைத்து நின்ற அளவிலே -நீ இளைத்தாய்-இன்று போய்ப் பின்னை வா -என்று போது போக்காகக் கொன்ற படி –
தாள்கள் தலையில் வணங்கி-
திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –
ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இ றே இருப்பது
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்
நாழ் -குற்றம்

———————————————————-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

கழிமின் தொண்டீர்காள்
பகவத் விஷயத்தில் நசையுடையீர் –
விஷயங்களில் ருசியைக் கழியுங்கோள்
கழித்துத் தொழுமின்
இந்த விஷயங்களில் ருசியைக் கழித்து அந்தச் சக்கரவர்த்தி திருமகனைத் தொழும்கோள்
கழித்து என்கிற அநு பாஷணத்தாலே-விஷய விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை
கழிக்கை யாவது -இது பொல்லாது என்று இருக்கை
அவனைத் தொழுதால்
கரும்பு தின்னக் கூலி போலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி
நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே
அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————————————————————-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில்
-ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –
தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்
அத்விதீயனான வல்லபன்
ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –
புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

——————————————————–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாபங்களைப் போக்கும் ஸ்வபாவர் –
நொடி நிறையும் அளவிடத்திலே ஷண மாத்ரத்திலே என்றபடி –
ப்ரதிபஷ நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபாவமாக யுடையவர் –
இன்று ஆஸ்ரயித்தவனையும் நித்ய ஆஸ்ரிதரோடு ஒக்க விஷயீ கரிக்கும் என்னும் இடத்துக்கு ஸூசகம் என்றுமாம் –
வடிவார் என்று தனியேயாய்-அழகிய வடிவை யுடையவர் என்றுமாம்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று வினை போக்குவது –

——————————————————–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் என்கிறார் —

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை
அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –
இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன –
ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பிறவார் -பிறக்கை இ றே -மாத்ரு சுஸ்ருஷணம் அழகிது -என்னுமோ பாதி -பகவத் சமாஸ்ரயணம் எளிது என்று உபதேசிக்க வேண்டுகிறது
உபதேச நிரபேஷமாக ஜன்ம சம்பந்தம் அற்று பகவத் ஏக போகராகப் பெறுவார்
தீது அவம் ஏதம் -என்று கர்த்தாவுக்கும் -கவிக்கும் -பாட்டு உண்கிறவனுக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் சொல்லுகிறது -என்றும் சொல்லுவர் –

———————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: