இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்க லும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-
-இந்திரன் கண்ணும் தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –
ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் -எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –
இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் -அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று
அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் -இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமி யான கிருஷ்ணன் -நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத
வடிவை யுடையனாய் -செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து பின்பு குபித்தனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க
சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ் புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி -சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –
ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா -அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –
ஒண் குருதி -என்றது அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான் உன் திரு நாமங்களை
சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

சர்வ ஸூ லபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிகாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் -உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு
வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் -உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-
–இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
-ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –
கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில் கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ -நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

ந நமேயம் என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –
அடிமை செய்யாவிடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –
எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –
அங்கன் இன்றிக்கே -புகலிடம் -என்கிறது -அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே -அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே
அத்யவசித்தேன் என்னவுமாம் -இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

————————————————————————————————

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே -இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே -பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான
இந்த சம்சாரம் ஆகிறது -அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்
-முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –
வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி சம்சாரம் ஆகிற
நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும் அஸ்திரத்தவாதி தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம்
பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ்ஜன்ம சம்பந்தம் கிடாய் -மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில் நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே ஸ்வப்ன கல்பனாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில் அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -அப்படிப்பட்ட அழகை யுடையவன்
திருக்கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள தேஜோ ரூபமான திருவாழியைக் கண்டேன் –
துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும் துரத்தி விட்டுப்
பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் -துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும்
செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் -அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூரா பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
-தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
-நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
-மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான
தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் -இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தாங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம்கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திருநாபியிலே யுடையனாய் -அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் -/
பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -பூக்கள் தள்ளும் படியான செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான
கோவில் -திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணர்வாக்ரால் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
-எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
-அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை -ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
-பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-ஏ வல்ல வெந்தை-எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

——————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: