இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பெரும் புலரி என்றும்-இன்றே நல் விடிவு என்றும்
நல் செழு குரா போது கொண்டு -மணம் மிக்க அழகிய –குரா மரப் புஷ்பங்களைக் கொண்டு –

இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியானவனே -என்றும் -இதர விஷய அனுபவத்துக்கு உறுப்பாய்க் கொண்டு பாழே கழிகிற நாளிலே-
ஸூ ப்ரபாதா ச மே நிசா -என்கிறபடியே பகவத் அனுபவத்துக்கு யோக்யமாய்க் கொண்டு -அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற
பெரிய தொரு நல் விடிவு உண்டாவதே -என்றும் ஆதரித்துக் கொண்டு -குராவினுடைய அழகியதாய் விலக்ஷணமான
செவ்வியை யுடைத்தான பூவை சம்பாதித்திக் கொண்டு வராஹ சஜாதீயமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை பாகனாபிமன்னராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கொண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

—————————————————————————————————–

இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

இச் சேர்த்தி அழகாலே அனுசந்தித்தவர்களை மகிழப் பண்ணும் ஸ்ரீ யபதியானவனே –ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத
என் மனஸ்ஸானது உன்னை அனுசந்தித்து ப்ரீதி யுக்தமாய்த்து -மன பூர்வோ வாக் உத்தர -என்னும் படி அநந்தரம்
எண்ணப்படும் என் வாக் இந்த்ரியமானது ஸ்ரீ யபதியான உன்னுடைய திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது-
-என் ஹிருதயமானது பிரதிபக்ஷத்தின் மேலே -அழலை உமிழா நின்றுள்ள திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
இவற்றைப் பாடி ஆடுகை ஆகிற தொழிலிலே வியாப்தமாய்க் கொண்டு அத்யவசித்து உகக்கப் பெற்றது –

——————————————————————————————-

கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனுடைய ஒப்பனை அழகுக்கு வாசகமான திரு நாமங்களை ஹிருதயத்திலே
மநோ ரதமானது உத்தர உத்தரம் அனுசந்திக்க வேணும் என்று அத்யவசித்தது -இனி சரீரமானது சர்வ காலமும் வணங்குவது
மூங்கில்கள் மிக்கு இருந்துள்ள பர்யந்தத்தை யுடைய திருமலையிலே வர்த்திக்கிற அழகாலே நம்மை எழுதிக் கொள்ளும்
மிடுக்கை யுடைய திருவேங்கடமுடையானை என்னுடைய வாக் இந்த்ரியமானது
-அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளான ஸ் வ பாவங்களை சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்து –

———————————————————————————————–

ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹராமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே -ஆஸ்ரிதனான இந்திரன்
திருவடிகளிலே வந்து விழுந்த முற்காலத்திலே பூமியை மஹா பலி பக்கலிலே ஸ்ரீ யபதியான பெருமையை அழிய மாறிச் சென்று
அர்த்தித்து அளந்து கொண்டாயான-உன்னுடைய திருவடிகளை தூபத்தால் செவ்விய பூ முதலான உபகரணங்களைக் கொண்டு
-முடிக்கவும் செறிந்த ப்ரேமத்தை யுடையனாய் -ஸுந்தர்ய சீலாதிகளுக்குத் தோற்று ஸ்துதித்து -வகுத்த சேஷியான தேவர்க்கு
இனி மேல் உள்ள காலம் -தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
-என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல் –முன்னே -சந்நிதியில் என்னுதல்-

———————————————————————————————–

இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

எல்லாம் கண்ணன் -என்கிறபடியே தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே -அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப் தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
-இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு சிரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்
-விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே -அந்த விஷயங்களில் காட்டிலும்
மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –
பரீக்ஷகர் ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் தண்ணீரையும் அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று
புத்தி பண்ணி -அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
-நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
-அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ் வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –

———————————————————————————————————–

நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே -நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை
அனுசந்தித்திக் கொண்டு ஸூ கமே இருக்கப் பார்–என்கிறார் –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

ஸ்வத உத்கர்ஷ கந்தம் இன்றிக்கே -அதி ஷூத்ரராய் இருக்கிற சம்சாரிகளுடைய -ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
துர்மானத்தாலே வந்த பெருமையானது -ஸ்வத ப்ராப்தமான பழைய ஷூத்ரதையில் சென்று பர்யவசித்து விடும்
-ஸ்வத க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ண ஷமர் இன்றிக்கே இருக்கிற அறிவு கேடரானவர்களும் தங்கள் நினைவாலே
சர்வஞ்ஞராக அபிமானித்து இருந்தார்களாகிலும் -பழைய அறிவு கேட்டை உடையாராயே விடுவர்கள்
-நான் அவன் படிகளை சொன்னால் -அறிக்கைக்குப் பாங்கான என் மனஸ்ஸே -நீ அறிவு கேடரான நாட்டார் படியைக் கை விட்டு
-ஸ்ரீ யபதி இப்படி இரப்பாளனாய் வந்தான் என்று ஒருவரும் அறியாத படி பூமியை இரந்து அளந்து கொண்டு
-பிரளயத்தில் அழியாதபடி அந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அநந்தரம் உள்ளுக்கிடந்து தளராதபடி
அந்த பூமியை வெளிநாடு காணப் புறப்பட விட்டனாய் –
இவ்வளவு அன்றிக்கே ஆஸ்ரிதர் விஷயத்தில் பண்ணும் ரக்ஷணத்துக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுமாய் இருப்பான்
ஒருவன் என்று அநவரதம் அனுசந்தித்திக் கொண்டு -அவனைப் பற்றின நமக்கு இனி ஒரு குறை யுண்டோ -என்று நிர்ப்பயமாய் இரு-

———————————————————————————————-

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பரந்து குளிர்ந்த -திரு நாபீ கமலத்தினுடைய விஸ்தீர்ணமான பூவினுள்ளே -மறுத்துக் கேள்வி கொள்ளாதே சொன்ன கட்டளையிலே
-ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு சமர்த்தனான சதுர்முகனை ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் எனக்கேயாம் படி அபகரித்து அருளினவனே –
அசேஷ லோக சரண்யனாகக் கொண்டு எல்லோரோடும் பொருந்தி இருக்கிற உன்னுடைய திருவடிகளை வாயார ஏத்தித்
தலையார வணங்கி ஆஸ்ரயியைக்கு உறுப்பு அல்லவாமாகில் -எங்களுக்கு கர்ம அனுகுணமாக மேலே மேலே
உண்டாயச் செல்லுகிற ஜென்மங்கள் அடங்க லும் வியர்த்தங்கள் –
-ஜன்மத்துக்கு பிரயோஜனம் உன்னை ஆஸ்ரயிக்கை இ றே-அதுக்கு உறுப்பு அல்லாத போது அவை அடங்க நிஷ் பிரயோஜனம் என்கை –

———————————————————————————————

அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

பிறர் இடம் பார்த்து அறிந்து விநியோகம் கொள்ள வேணும் என்று கருதும் படி -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கிற மஹா தனத்தை
துர்வாசனையாலே நமக்கு வேணும் என்று அபிமானித்துக் கொண்டு -ந பிபேதி -என்னும் விஷயத்தைப் பற்றினால் போலே –
அறிவு கெட்டு நிர்ப்பரனாய் இராதே -தம் தாமுக்கு அறிந்த போதோடு அறியாத போதோடு வாசியற சர்வ காலத்திலும்
நித்தியமான அபாஸ்ரயம் -ஓன்று -என்று –
சாஸ்திர அப்யாசாதி களாலே அறிந்து -இனி நமக்கு கால தத்வம் உள்ளதனையும் ஸ்ரீ யபதியானவனே
ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் -அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய
அச்சசேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லுகையே வாக் இந்த்ரியத்தால் உச்சரிக்கப்படும் –

—————————————————————————————————

நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்
அது மாட்டாதார் -த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

வகுத்த விஷயத்தை இழந்து -இதர விஷயத்தில் பிரவணராய் திரிகிற சபலர்காள் -சங்க வேத அத்யயனம் பண்ணி
-அதில் சொல்லுகிற -அர்த்தங்களையும் அறிந்து அறிந்த படியே சாஷாத் கார ரூபமான பகவத் பக்தியைப் பேற்றுக்கு
உபாயமாக அனுஷ்ட்டிக்க வல்லி கோளாகில்-சர்வ வித ரக்ஷகனாய் -சர்வ பிரகாரியான புருஷோத்தமனுடைய
-சர்வ ரக்ஷகத்வ வாதியான சகலார்த்தங்களுக்கும் வாசகமான திரு மந்த்ரம் ஆகிற திரு நாமத்தைச் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரமான இத்தனையே வேதத்தில் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாவற்றிலும்
-தாத்பர்யமாக நிர்ணயித்துத் தலைக் கட்டின அம்சம் -இப்படி நன்றாக அத்தை அறிய மாட்டிற்றிலி கோளாகில்
-ஸ்ரீ யபதியினுடைய திரு நாமத்தை சொல்லுகையே -அந்த வேதப் பரப்பு எல்லா வற்றிலும் கூட
சங்ஷேபித்துத் தலைக் கட்டு -இவ்வர்த்தம் பகவத் பிரசாதத்தாலே தெளியக் கண்ட நான் சொன்ன வார்த்தை யாகையாலே
இத்தை தப்பாது என்று விஸ்வஸித்து அறியுங்கோள் –
இத்தைச் சுருக்கு என்கையாலே கீழ்ச் சொன்னது வேதத்தில் பரக்கச் சொன்ன பொருள் -என்று தோற்றுகிறது –

———————————————————————————————————

இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சுருக்காக வாங்கிச சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

சரீரம் எங்கும் ஓக்கப் பூர்வத்தில் வியாபித்து நின்ற ஸ்லேஷமாவானது -சரீர விஸ்லேஷ தசையில் கண்ட ஸ்தானத்தில் வந்து
செறியத் தக்கதாகச் சுருங்க வழித்து இழுத்துக் கொண்டு -வாக் வியவஹார யோக்யதை இல்லாத படி மிடற்றை அடைத்து
மிறுக்குப் படுவதுக்கு முன்னே பெரிய பிராட்டியாராலே சம்ருத்தமாய் விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை நீங்கள் அனுசந்தித்துக் கொண்டு நில்லும் கிடிகோள்
-பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதார் கணக்காம் படி பண்ணக் கடவ சப்தாதி போகங்களால் வரக் கடவ பிரயோஜனம் இல்லை –
சுலாவி நின்று ஐயார்–சுருக்காக வாங்கி–நெருக்கா முன் — -திருப் பொலிந்த-ஆகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் -என்று அந்வயம் –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: