இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20 – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப்பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய
கால்களை -துராராதரான வர்கள் இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து
-அங்கே வந்து உன்னை அனுபவித்தல் இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல்
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற
ஸ்வர்க்காதி ஸூ கத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –
சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே -இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி -ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –
அன்றிக்கே தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –

——————————————————————————

ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

ஆஸ்ரயணீயரான-அந்த தேவர்கள் -அவர்களை ஆஸ்ரயிக்கிற இந்த மநுஷ்யர்கள் என்ன ஒரு வாசி இல்லை –
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனுடைய திருவடிகளைத் தலையாலே வணங்கி வாயாலே ஏத்தி
எவர் தான் ஆஸ்ரயியாதவர்கள் -ஆராய்ந்து பார்க்குமளவில் பரம்பின அழகிய கிரணங்களை யுடையனான ஆதித்யனும்
-அழகிய திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய ப்ரஹ்மாவும் -லலாட நேத்ரனான ருத்ரனும் ஆகிற நாட்டுக்கு
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான இவர்கள் அன்றோ நாள் தோறும் அவன் புக்க இடம் புக்கு பின்பற்றி
ஆஸ்ரயிக்கையே ஸ்வபாவமாக உடையராய் இருக்கிறார்கள் –

———————————————————————————————-

இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

இட்ட விலங்கை ஒடித்துக் கையிலே கொண்டு ஸ்வைரமாகத் திரிகிற மத்த கஜமானது தன்னால் கரை காண ஒண்ணாத
பரப்பை யுடைத்தான பொய்கையில் அத்யபி நிவிஷ்டமாய் சென்று புக்கு -விகசிதமாய் ஓங்கி இருந்துள்ள அழகிய
தாமரைப் பூவை சாதரமாகப் பிடித்துக் கொண்டு -அத்தசையிலே முதலையின் வாயிலே அகப்பட்டது-
தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துக்கம் பிரஸ்த்துதமாகப் பதறி -பூ செவ்வி அழிவதற்கு முன்னே
திருவடிகளிலே பணிமாறப் பெறுகிறிலோம் என்று பயப்பட்டு -முதலையைத் துணிக்கைக்குப் பரிகரமான திருவாழியை
யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ -முன்பு ஒரு நாளிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி
யானவனுடைய பரமபதம் ஆகிற ஸ்தானம் தன்னை பிராபித்தது -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்னும் நியதி இல்லை என்று கருத்து –

—————————————————————————————-

இப்படி அவன் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனபின்பு -சம்சார வர்த்தகரான ஷூ த்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோ ள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

வயிற்றைப் பெரிய ஊர் போலே கண்ட அன்னலும் துன்னலுமாக இட்டு வளர்த்து -அதுக்கு உறுப்பாகத் தான்
அறியாதே பிறர் அறிந்து ஏறிடும்படி -அபுத்தி பூர்வகமாக செய்யப்படும் பழியையும் -புத்தி பூர்வகமாகத் தான்
அனுஷ்ட்டித்துப் போரும் நிஷித்தா சரணம் ஆகிற பாபத்தையும் உத்தரோத்தரம் வளர்த்துக் கொண்டு
-இஹ லோகத்தில் பர லோக ஸூகம் கனாக் கண்டு அறியாதவர்கள் ஆகையால் -இத்தை பெரிய வாழ்வாக
நினைத்துக் களித்துத் திரியும் ஹேயரான சம்சாரிகளை -உனக்கு ஒரு பழி யுண்டோ -பாவம் யுண்டோ -என்று புகழாதே
-கண்டது அல்லது அறியாத அறிவு கேடர்காள் –திரு வுலகு அளந்து அருளின போது எட்டு திக்குகளையும் பேர்த்துப் பொகடும்படி
-விம்ம வளர்ந்த நாலு திருத் தோள்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை
இடை விடாமல் சொல்லிக் கொண்டு -தீதில் நன்னெறி காட்டி எங்கும் சஞ்சரித்து -உங்கள் ஸஞ்சாரத்தாலே
நாட்டை இருந்ததே குடியாகப் பரி சுத்தராம் படி பண்ணுங்கோள் –
பண்டிப் பெரும் பதி-என்று முன்பு இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து என்னுதல் -பழையதான சம்சாரத்தைச் சேர்த்து -என்னவுமாம் –

————————————————————————————–

இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக கிருஷ்ணனாவது -ராமன் ஆவதாக கொண்டு
-அதி ஸூ குமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

கொடிதான யுத்தத்திலே எதிரிகள் விடுகிற அம்புகள் தன் மேலே படும்படி உடம்புக்கு ஈடு கொடாமல் -சாரதியாய்க் கொண்டு
அர்ஜுனன் சொன்ன இடத்திலே தேரை நடத்திக் கொண்டு திருமேனி அலசும்படி இதஸ் தத்ஸ சஞ்சரித்ததுவும்
வன வாஸோ மஹோதய -என்று சொல்லும்படி உகப்புடன் காட்டிலே சஞ்சரித்துத் திரிகிற அன்று மாயா மிருகத்தின் பின்னே போய்
நித்யம் ப்ராணசமையான பிராட்டியைப் பிரிந்து அலைச்சல் பட்டதும் –
அதி கடினமான பூமியிடத்திலே பள்ளி கொண்டு அருள ஆதரித்ததுவுமான இவ்வோ செயல்கள் எல்லாம்
மென்மை குளிர்த்தி நாற்றங்களை பிரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டு
அருளக் கடவ அதி ஸூ குமாரனான தனக்குச் சால அழகியதாய் இருந்தன என்று வயிறு பிடிக்கிறார் –
கண் பள்ளி கொள்ள -என்றது கண் -என்று இடமாய் -தறைக் கிடை கிடக்க என்றபடி –

———————————————————————————

இப்படி நம்மை பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார் –

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மர-என்று எம்பெருமானுக்கு சேஷித்வம் கூறு பட்டால் போலே
தனக்கு சேஷத்வம் கூறு பட்டது என்னும் இடத்தை பிராமண பிரசித்தி யாலும் -ஆச்சார்ய சேவையாலும்
-தான் உள்ளபடி அறிய மாட்டாதவனாய் இருந்தானேயாகிலும் -நம் உடைமையை நாமே பெற வேணும் -என்று
மேல் விழுகிற வியாமுக்தனானவனை -திரு வாணை இட்டுப் புகாத படி தடுக்கை யன்றிக்கே மனசிலே வந்து
சேராத தக்கதாகத் தான் பொருந்தி இடம் கொடுத்து வைத்துக் கொள்ளுவது –
இத்தலையிலே இவ்வளவு ருசி மாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தருகை அவனுடைய பரம் இ றே —
அது எங்கனே என்னில் -காடு எழுந்து கிடக்கிற அதி கடினமான திடரை-வருகிற வர்ஷ ஜலம் புறம்பு போகாதே தடை யற வந்து புகுரும்படி
ஏரியாம் பிரகாரம் யத்தனித்து வெட்டுவிக்கும் இத்தனை ஒழியப் பின்னை வர்ஷத்தைப் பெய்விப்பார் ஆர்
-அதுக்கு கடவனான பர்ஜன்யன் அன்றோ –
ஏரி வர்ஷத்தை உண்டாக்கிக் கொள்ளும் அன்று அன்றோ பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளல் ஆவது
-ஆனபின்பு இத்தலையில் விலக்காமையே பற்றாசாகத் தானே விரோதியைப் போக்கி ப்ராப்தியைப் பண்ணித் தரும் என்றபடி –

அங்கன் அன்றிக்கே –மனத்தடையே வைப்பதால் மாலை -அவன் சேஷி தான் சேஷம் என்னும் இடத்தை சேதனன் தான் அறிய
மாட்டானே யாகிலும் -யத்யதாசரதி ஸ்ரேஷ்டம்-என்கிறபடியே தனக்கு ருசி இன்றிக்கே இருக்கச் செய்தேயம்
செய்வார் செய் முறை பாடு காண்டாகிலும் சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைத்துக் கொள்வது –
இவ்வளவு கொண்டே அவன் தானே விரோதியையும் போக்கி ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கும் –
அதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறது -வனத்திடரை -இத்யாதி -காட்டுத் திடரை ஏரியாம் படி கல்லுகை ஒழிய
மற்றும் மலை பெய்விப்பார் ஆர் -என்று யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே -மாலை மனத்திடை வைப்பதாம்-சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே கொண்டு வந்து
சர்வ சக்தி வையானோ என்று ஷேபம் –
வனத்திடரை இத்யாதி -மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை யடுவித்து மழை பெய்விப்பானும்
-அவன் தானே யன்றோ என்கிறார் –
அப்படியே மனத்திடரில்-அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி ருசி உண்டாக்குவானும் -தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும்
அவனே யன்றோ என்னவுமாம் –முற்பட்ட யோஜனை திருமலை நம்பியது -இரண்டாம் யோஜனை ஆழ்வானது

———————————————————————————

இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனான இந்திரனும் -சிலாக்யமான திரு நாபீ கமலத்தை வாசஸ் ஸ்தானமாக
யுடைய ப்ரஹ்மாவும் -நேர் கொடு நேரே சென்று கிட்ட மாட்டாமல் பாடே பக்கே நின்று திருவடிகளிலே பின்னாபிமானராய் விழுந்து
ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான ஸுந்த்ர்யாதி சீலாதி குண சேஷ்டிதங்கள் ஆகிற பிரகாரங்களை யுடையனாய் -சர்வாதிகனானவனை
-கலா மாத்ர மான சந்திரனை தரித்து இருக்கிற சிவந்த ஜடையை யுடையனான ருத்ரன் தன் ஹிருதயத்திலே அனுசந்தித்திக் கொண்டு
இருந்த துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து -அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆனபின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாச்ரயணீயனாய் இருப்பர் –

————————————————————————————————————–

இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து -தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

ஆகாசத்தை அளவிடிலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -இவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இடத்தை
கோள் சொல்லித் தருகிற தாமரை போன்ற கண் அழகை யுடையனான சர்வேஸ்வரன் -நம்முடைமையை நாமே நம்மை
அழிய மாறி ரஷிக்கை நமக்கு ஸ்வரூப பிராப்தம் அன்றோ -என்று நியாயமாகச் செய்த செயல்கள் இருந்த படி –
ஸ்ரீ வாமனனாய் தன்னை அழிய மாறி அர்த்தித்து பூமி முதலான லோகத்தை வாங்கிக் கொண்டதும் –
மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ ரூபியாய்க் கொண்டு அழகிய மிடுக்கை யுடையனான ஹிரண்யனுடைய
மார்விலே -திரு உகிரை நாட்டிப் பிளந்து பொகட்டதுவும்
ஒரு நாளிலே தான் அளந்து கொண்ட சப்த லோகங்களையும் தர தம விபாகம் பாராதே திரு வயிற்றிலே எடுத்து வைத்து
நோக்கியும் செய்த செயல்கள் இவைகள் கிடீர் / வழக்கு -நியாயம் -பிராப்தம் -என்றபடி –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –
உடையவன் உடமையை ரஷிக்கை பிராப்தம் இ றே –

———————————————————————————-

நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
-இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பெரிய பிராட்டியார் -என் புகுகிறதோ -என்று வயிறு எரிந்து-மங்களாந்யபி தத்யுஷீ –என்று மங்களா சாசனம் பண்ணி
நோக்க வேண்டும் படி நிரதிசய ஸூ குமாரமானவனே –
இப்படி இருக்கிற நீ சிறு பிள்ளையாய்க் கொண்டு அதி ஸூ குமாரமான திருவடிகளாலே அதி பிரபலமான சகடத்தை
உதைத்து முறித்து விழ விட்டாய் -பிரானே இது பிராப்தம் அன்று கிடாய் -ரக்ஷகனான நமக்கு விரோதிகளை போக்கி
நோக்குகை பிராப்தம் அன்றோ என்று இந்த ஸாஹஸ பிரவ்ருத்தி யிலே அனுதாபம் கூட அற்று இருக்கிற நீ புத்தி
பண்ண வேண்டா -அதுக்கு மேலே அஸூரனான குழக் கன்றைக் கொண்டு அஸூர வடிவாயத் தீதான
விளாவின் காய்க்கு எறிந்த இந்த தீம்பான செயலானது பூமியிலே பிரகாசிக்கும் படியாக தப்பாகச் செய்தாய் –
-அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் -விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

————————————————————————————————-

பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியாத தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் –

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

தங்கள் அறியாது இருக்கப் பிறர் அறிந்து ஏறிடும் அபகீர்த்தியையும் அறிந்து அனுஷ்ட்டிக்கப் பட்ட பர ஹிம்சாதி ரூபமான
பாபத்தையும் கை கழிய விட்டு சர்வ காலமும் யுன்னை ஸாஸ்திரங்களில் சொல்லுகிற கட்டளையிலே வழி பட்டு நின்று
போக ரூபமாக ஆஸ்ரயிக்குமவர்களும் -நாராயண சப்த வாசகன் ஆகையால் சர்வ ரக்ஷகனாய் இருக்கிற உன்னுடைய
திரு நாமங்களை விச்சேதம் இல்லாத படி ப்ரேம யுக்தராய்க் கொண்டு அழகிதாக அறிந்து ப்ரேம பரவசராய்க் கொண்டு
அழகிதாக ஏத்துகைக்கு ஹேதுக்களான ப்ரேமம் -தத் ஹேதுவான உத்பஜனம் -தந்நிதானமான ருசி -தந்நிதானமான ஸூ ஹ்ருதம்
-அதுக்கு அடியான உன் கடாக்ஷம் -என்றால் போலே சொல்லுகிற இவற்றைத் தாங்கள் பெற்று உடையராய் இருக்குமவர்களான
இவ்விரண்டு அதிகாரிகளும் ஸூ கோத்தரராய் வாழப் பெறுவார்கள்
மாதோ என்கிற இது ஓர் அவ்யயமாய் -இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

——————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: