மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்– 11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

அவன் திரு நாமத்தைச் சொல்லத் தானே காட்டக் காணும் அத்தனை -அல்லாதார்க்கு துர்ஜ்ஜேயன்-என்கிறது –

கூரியதான ஞானத்தை யுடையார்க்கு அல்லது அவனை அறிந்து தலைக் கட்டப் போகாது -என்கிறார் –

நன்கோது நால்  வேதத்துள்ளான் நற விரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன்   -சங்கோதப்
பாற்கடலோன் பாம்பணையின் மேலான் பயின்று  உரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான் —-11–

நற விரியும்–நறவு இரியும்-தேன் தோற்கும்படியான இனிமையை யுடைத்தாய் –
நுண்ணறிவினான்-தம் முயற்சியால் அறிவிற்கு அறிய முடியாதவன் –

நன்கோது நால்  வேதத் துள்ளான்–பிரதி நியத விசேஷங்களோடே கூட -சாங்க அத்யயனம் பண்ணின வேதங்களாலே-
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய-என்கிறபடியே ப்ரதிபாதிக்கப் பட்டவன்–
நற விரியும்-தேன் தோற்கும்படியாகக் கிளர்ந்த கடல் போலேயும் –
பொங்கோதருவிப் புனல் வண்ணன்  -அருவிப் புனல் போலேயும் இருந்துள்ள திருமேனியை யுடையவன்
-சங்கோதப்-பாற்கடலோன்–சங்குகளோடு கூடின திரையை யுடைத்தான திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுமவன்
பாம்பணையின் மேலான்-அனந்த சாயி –
பயின்று  உரைப்பார்-நூற் கடலான்–சாதரமாக உரைக்குமவர்களாலே-இதிஹாச புராணங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் –
நுண்ணறிவினான் —-ஸ்வ யத்னத்தாலே அறிவிற்கு துர்ஜ்ஜேயன் —

——————————————————————

ஸ்வர வர்ணாதிகளாலே நழுவுதல் வாராத படி ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண க்ரமத்தாலே நன்றாக ஒத்தப்படுமதாய்
-ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய் நன்றாக
விஸ்திருதம் ஆகா நிற்பதாய் -கிளர்த்தியை யுடைத்தான கடல் போலேயும் -அறிவிப் புனல் போலேயும் இருக்கிற
திருமேனியின் நிறத்தையும் யுடையனாய் -சங்குகளை கொழித்து ஏறிடா நின்ற திரைகளை யுடைத்தான
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனாய் -திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டு அருளுமவன் ஆகையால் -ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய்-
-தர்ம வீர்ய ஞானத்தால் வேதார்த்தங்களை உத்தர உத்தரம் அவகாஹித்து -தரிசித்து –
-லோக உபகாரகமாகச் சொல்லிப் போரும் மன்வாதி பரம ரிஷிகளால் நிர்மிதங்களான
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் ஆகிற சாஸ்திர வர்க்கங்களாலே ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனாய்-
-ஸூஷ்ம அர்த்த அவகாஹியான வி லக்ஷண ஞானத்தால் அறியப்படும் ஸ்வபாவனாய் இருக்கும்-
-பரிசலான அறிவால் அறியப்படுமவன் அல்லன் என்று கருத்து —

——————————————————————————————————————

ஒருத்தருக்கும் அறியப் போகாதோ என்னில் -இப்படி அறிவிற்கு அறியலாம் என்கிறது –

ஆகில் அவனை ஒருவராகிலும் அறிந்து கண்டதாய்த் தலைக் கட்ட ஒண்ணாதோ என்னில்
நாம் சொல்லுகிற இவ் வழியாலே காண்பார்க்குக் காணலாம் -என்கிறார் –

அறிவென்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண் கதவம் செம்மி -மறை யென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோறும்
பைங்கோத வண்ணன் படி  ——12-

அறிவென்னும் தாள் கொளுவி–திண்ணிதான ஸ்ரவண ஞானத்தை மூட்டி –
ஐம்புலனும் தம்மில்-செறிவென்னும் திண் கதவம் செம்மி -பாஹ்ய இந்திரியங்கள் மனஸ்ஸோடே கூடி –
-மனஸ் ஸூ ஆத்மாவோடு கூடி -இருக்கிற இந்த செறிவாகிற திண்ணிய கதவை இந்திரியங்கள் பாஹ்ய விஷயங்களில் போகாதபடி செம்மி –
மறை யென்றும் நன்கோதி –யோகாத் ஸ்வாத்யாயமா ம நேத் -யோகம் கை வந்தாலும் பிராமண பிரமேயங்களினுடைய சேர்த்தி அனுசந்திக்க வேணும் –
நன்குணர்வார் காண்பரே நாடோறும்-பைங்கோத வண்ணன் படி  ——உபாசனம் -த்ருவ அநு ஸ்ம்ருதி-
-தர்சன-சாமானாகார ப்ரத்யக்ஷ தாபத்தி -இவ்வளவாக உணர்ந்தவர்கள் நன்கு உணர்ந்தவர்கள் -ஆகிறார்
-ஸ்ரமஹரமான வடிவை யுடையவனுடைய படி இப்படி யுணர்ந்தவர்கள் நாள் தோறும் காண்பார்கள் –

————————————————————————

ஸ்வாத்யாயோஸ் த்யேதவ்ய -என்கிற விதியை அனுசரித்த்திக் கொண்டு -அசேஷ ஜகத்துக்கும் ஹிதத்தை
அநு சாஸிக்கை யாகிற நன்மையை யுடைத்தான வேதத்தை சக்ரமமாக ஓதி -ததர்த்த ஸ்ரவண ஜெனிதமாய்-
-ஆத்ம பரமாத்ம விஷய பிரதானம் ஆகிற தாளை பாஹ்ய விஷயங்களில் மனஸ் ஸூ ஒட்டாத படி உறைக்கக் கோத்து-
-ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்திரியங்களும் தம் தாமுக்கு அடைத்த இருப்பிடமான ஸூபாஸ்ரயத்திலே செறிந்து-
-நிற்கப் பண்ணுகை யாகிற பலிஷ்டமான கதவை -புகவிட்ட மனஸ் ஸூ புறப்பட இடம் அறும் படி யோக-
அப்யாஸத்திலே செம்மிப் பொகட்டு -இப்படி யோக ஜெனிதமான மனசாலே
த்யேய வஸ்துவை–பச்சை நிறத்தை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான திரு நிறத்தை யுடையனான-
சர்வேஸ்வரனுடைய ரூப குண விபூதி யாதிகளான ஸ்வ பாவங்களை -சதா பஸ்யந்தி -என்கிறபடியே-
-இன்று ஒன்றோடு அன்றோடு வாசி அற எப்போதும் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-
-இப்பாட்டிலும் கீழ் அறிய அரியன் என்றத்தை உபபாதித்தார் யாய்த்து –

—————————————————————————————————-

இப்படி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு வருத்தம் உண்டு இத்தனை போக்கி அவன் தானே
கொண்டு வந்து காட்டும் அன்று வருத்தம் அறக் காணலாம் -என்கிறார்-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-
படிவட்டத் தாமரை -பூ வலம் ஆகிற தாமரைப் பூவை
பண்டுலகம் நீரேற்று- அடிவட்டத்தால் அளப்ப –அடி வலயத்தாலே அளப்ப –
நீண்ட -முடிவட்டம்-ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே-மாகாயமாய் நின்ற மாற்கு —வடிவாலே பாரித்து
வியாமோஹத்தை யுடையனான வனுக்கு திரு அபிஷேகமானது ஆகாசத்தை யூடறுத்து அண்ட பித்திக்கு அவ்வருகே நீண்டது –

————————————————————————–

முன்பு ஒரு நாளிலே லோகத்தை மஹா பலி பக்கலிலே சென்று நீர் ஏற்று வாங்கிக் கொண்டு பூ மண்டலம்
ஆகிற தாமரையைப் பாத வலயத்தாலே அளக்க -அண்ட கடாஹம் வெடிக்கும் படி விம்ம வளர்ந்த சர்வேஸ்வரனுக்கு
பெருக்காறு சுழித்தால் போலே சுழித்துக் கிளருகிற ஒளி வெள்ளத்தை யுடைத்தாய் முசிவற வளர்ந்த
திரு வபிஷேகமானது அந்த்ரிஷாதிகளான ஊர்த்வ லோகங்களை ஊடுருவிக் கொண்டு போய்
அண்ட கடாஹத்து அளவும் செல்ல வளர்ந்ததே -இது என்ன ஆச்சர்யம் என்று அனுபவிக்கிறார் –

——————————————————————————————-

அறிவு என்னும் தாள் கொளுவி-என்கிற பாட்டில் சொல்லுகிற படியே இந்திரிய ஜெயம் பண்ணி அறிகை அரிதாய் இருந்ததீ
-அசக்தர் இழக்கும் அத்தனையோ என்னில் -இழக்க வேண்டாத உபாயம் சொல்கிறது –

கீழே ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி -என்று -இந்திரிய ஜெயம் பண்ணுகை -அரிது
-இந்திரிய ஜெயம் பண்ணினார்க்கு அல்லது அவனைக் காண முடியாது -கண்டால் அல்லது இந்திரியங்களை ஜெயிக்க முடியாது
-ஆனபின்பு அஜிதேந்த்ரியர் ஆனார்க்கும் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி திருமலையிலே
வந்து ஸூ லபன் ஆனான் -ஆனபின்பு அவனை எளிதாக ஆஸ்ரயிக்கலாம் -என்கிறார் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள்  கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

-நாற்பால வேதத்தான் -நாலு வகையான வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் படுமவன் -வேதைகி சமதி கம்யனால்
கண்ணாலே காண்கிற சப் தாதிகளை அனுபவிப்பார்க்குக் காண அரிது இ றே என்னில்
வேங்கடத்தான்–கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி திரு மலையிலே வந்து நின்றவனை -ஆகில்
கண்ணாலே காணப் படுகிற சப் தாதிகளோடு ஒக்குமோ என்னில் –
விண்ணோர் முடி தோயும்-பாதத்தான் -இப்படி திருமலையில் நிற்கிறவன் -நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன்-
பாதம் பணிந்து ——-அவன் திருவடிகளிலே பணிந்து –
மாற்பால் மனம் கழிப்ப –வியாமுக்தனாய் இருக்கிறவன் பக்கலிலே மனஸ் ஸூ சுழிக்க
மங்கையர் தோள்  கை விட்டு-நரகத்திலே மூட்டக் கடவதான ஸ்த்ரீகளுடைய தோள்களைக் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம்–பிரமாணங்களிலே அல்பம் மனஸை வைக்க எளிதாம் –

———————————————————————-

நாலு வகைப்பட்ட வேதங்களாலே ப்ரதிபாதிக்கப் படுமவனாய் -இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகாதே கண்டு
அனுபவிக்கலாம் படி -திரு மலையிலே வந்து -நிற்கிற ஸுலப்யத்தை யுடையனாய் -இப்படி ஸூ லபனான நிலை
தன்னிலே நித்ய ஸூ ரிகளும் திருவடிகளிலே தலை மடுத்து ஆஸ்ரயிக்கலாம் படி பெரிய மேன்மையை
யுடையனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து சர்வேஸ்வரன் பக்கலிலே மனஸ் ஸூ பிரவணமாக-
போக யோக்கியமான பருவத்தைக் காட்டி துவக்கக் கடவ ஸ்த்ரீகளுடைய தோளோடு அணைந்து அனுபவிக்க வேணும் என்னும்
நசையை சவாசனமாக விட்டு வேதாதி ஸாஸ்திரங்களில் மனஸை வைகைக்கு எளிதாம் –

—————————————————————————————————————

அவனாலே ஸ்வயம் பட்டவனுக்கு துக்கம் ஒன்றும் இல்லை இ றே -என்கிறது –

இப்படி அரியனானவனை நீர் கண்டு அனுபவிக்கப் பெற்றபடி எங்கனே என்ன-
-நிர்ஹேதுகமாக என் ஹிருதயத்திலே புகுந்து கண் வளரக் கண்டேன் என்கிறார்

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள்  மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்த -அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —–15-

பணிந்து உயர்ந்த பௌவப் படுதிரைகள்–தாழ்வது கிளறுவதான கடல் திரைகளை மோத-
-மோத என்கிறது -குறும் திவலை படிலும் திருமேனியிலே ஒரு மலை விழுந்தால் போலே இருக்கை –
  மோத
பணிந்த பண மணிகளாலே –அத்திவலைகள் திரு மேனியில் படாத படி காத்த பணத்தின் மணிகளாலே
அணிந்த -அங்கு-அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் -அதினாலே அலங்க்ருதனான திருவனந்த ஆழ்வான்
ஆகிற படுக்கையிலே கிடக்கிற சர்வேஸ்வரன்
அடியேன்-மனம் தன் அணைக் கிடக்கும் வந்து —-அப்பெரிய படுக்கையிலே கிடக்குமவன் பரியவும் அறியாதே
-அப்படுக்கை வாய்ப்பும் இன்றிக்கே இருக்க வந்து என் மனசிலே தங்கா நின்றான் -எங்கே தங்குமவன் எங்கே தங்கா நின்றான்
-கிடக்க ஒரு படுக்கை இல்லாதவன் படுக்கை உள்ள இடம் தேடி வருமா போலே –
-திரு அயோத்யையில் உள்ளார் அவனைச் சரணம் புக்குக் கிடக்க –ஆவாசந்த்வஹம் இச்சாமி என்று இருந்தால் போலே –

————————————————————–

ஸ்வ சந்நிதானத்தாலே மேலே கிளர்ந்தும்-கீழே விழுந்தும் செல்லுகிற கடலில் உண்டான அலைகள் ஆனவை
நாலு பாடும் கண் பாராமல் அலைக்க-அத்திவலைகள் திரு மேனியில் படாத படி குடை பிடித்தால் போலே
கவிந்து இருக்கிற பணா மண்டத்தில் உண்டான மாணிக்கங்களாலே அழகு பெற அலங்கரித்திக் கொண்டு
இருக்கிற திருவனந்த ஆழ்வான் ஆகிற திருப் பள்ளி மெத்தையில் பள்ளி கொண்டு அருளா நின்றுள்ள
சர்வேஸ்வரன் அந்த படுக்கையில் பொருந்தாதே அங்கு நின்றும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
வந்து அநந்யார்ஹ சேஷ பூதனான என்னுடைய மனஸ் ஸூ ஆகிற படுக்கையிலே பள்ளி கொண்டு அருளா நிற்கும் –

————————————————————————————————–

இப்படி வந்து தங்குகைக்கு அடி பிராட்டியோடே இருக்கை என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே வந்து தங்கினான் -என்கிறார் –

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–
-திருவல்லிக் கேணியான்–வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
-ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே நின்றவன்
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
சென்று   —-பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் -தயா வலோ கிதா தேவா –
-பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் -ப்ரதேஹி ஸூ ப கே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————————————–

அழகிய அல்லியை யுடைத்தான தாமரையை இருப்பிடமாக யுடையளாய் -நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார்
-அமிருத மதன சமயத்திலே நிற்கிற தேவர்களை மதியாமல் சென்று -இறையும் அகலகில்லேன் -என்று பொருந்தி
வர்த்திக்கும் படியான அழகிய திரு யுடைத்தான திரு வல்லிக் கேணியிலே தங்கினவன் எனக்கு ஸ்வாமி –
ஒரு வல்லித் தாமரையாள் -சென்று- ஒன்றிய சீர் மார்வனாய் -வெண் திரைகள்–வந்துதித்த-செம்பவள வெண் முத்தம்
-அந்தி விளக்காம் மணி விளக்கான -திருவல்லிக் கேணியான்   –எந்தை-என்று அந்வயம் –

———————————————————————————————————–

அவளோடு கூடி இருக்கையாலே பலத்துக்குத் தட்டு இல்லை -இனி என்னுடைய வாக்கானது
அவனை விச்சேதம் இன்றிக்கே அனுபவிப்பதாக –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை நம் பக்கல் வியாமுக்தன் என்று அறிவதொரு நாள் யுண்டானால்
-இதுக்கு முன்பும் பின்பும் உள்ள காலம் எல்லாம் சப்பிரயோஜனமாய்த் தலைக் கட்டும் கிடீர் என்கிறார் –

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-17-

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் —சர்வேஸ்வரன் என் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் என்று அறிந்த நாள்
–கழிந்த நாள் -வரக் கடவ நாளான எல்லா நாளும் நல் விடிவாம் -இந்நாள் வரும் படி கழிந்த நாள் ஆகையால்
போன நாளும் அழகிது -மேல் விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கப் பெறுகையாலே வரும் நாளும் அழகிது –
என்றும்-இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —-ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இன்றிக்கே ஒழியும் உறவு இன்றிக்கே
நித்யனான பிதாவினுடைய வாக்கானது விச்சேதம் இன்றிக்கே வாழ்த்துக –

——————————————————————–

புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் அந்தக் கண்ணாலே குளிர நோக்கி நம் பக்கலிலே வியாமோகத்தைப் பண்ணினான் -என்னும்
அறிவு பிறந்ததொரு நாள் யுண்டானால் -இந்நாள் மருவுகைக்கு யுடலாய்க் கொண்டு கழிந்த நாள்களும்
-இப்பேற்றை அனுபவித்து இருக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு மேல் வரக் கடவ எல்லா நாள்களும்
அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற நல்ல நாளாகத் தலைக் கட்டும் -ஒரு நாள் யுண்டாய் ஒரு நாள் இல்லையாய் இருக்கை அன்றிக்கே
-பூதா நாம் யோ அவ்யய பிதா -என்கிறபடியே சர்வ காலத்திலும் அழியாத என் பிதாவானவனுடைய ஒன்றுக்கு ஓன்று
ஒப்பான திருவடிகளுக்கே அடிமையாய்க் கொண்டு என்னுடைய வாக் இந்த்ரியமானது விஸ்ம்ருதி பிரசங்கம் இன்றிக்கே ஏத்துவதாக –

———————————————————————————————–

உன்னுடைமையை ஒன்றும் சோர விடாத நீ என்னைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் –

கால த்ரயத்திலும் அழிவு வராமல் அனுபவிக்கப் பெற்ற எனக்கு திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தையும் தந்து
தத் விரோதியான சம்சார பயத்தையும் மாற்றி அருள வேணும் என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

வாய் மொழிந்து வாமனனாய் –ஸ்ரீ வாமனனாய் -மாவலீ மூவடி மண் தா -என்று அருளிச் செய்து
மாவலி பால்-மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே –அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே
தாவிய நின்-எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———திரு உலகு அளந்து அருளினவனுடைய கல்யாணமான திருவடிகளிலே நிர்ப்பயனாய்
காலம் எல்லாம் அடிமை செய்து இருக்கும் படி அருள் ஒவ்க்ஷதத்தை சேவித்தான் ஒருவன் தனக்கு பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கை கொடா நின்றான் இ றே -அவனுடைய அருள் பெற்ற வன்றே
சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்காது தட்டில்லை இ றே —

—————————————————————————-

சர்வாதிகனான நீ ஸ்ரீ வாமனனாகி ஆ ஸூ ர பிரக்ருதியான அவன் இரங்கும் படி -கொள்வன் நான் -என்றால் போலே
சில முக்த ஜலப்பிதங்களைப் பண்ணி -மஹா பலி பக்கலிலே சென்று மூன்றடி மண்ணை அபேக்ஷித்து
-அவன் தரப் பின்னை அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனே -வகுத்த சேஷியான உன்னுடைய அநாயாசேன
ஜகத்தை அளந்து கொண்டதாய் அசங்கோசமான அழகை யுடைத்தாய் பரஸ்பர சத்ருசமான திருவடிகளுக்கே
-ஒழி வில் காலம் எல்லாம் -என்கிறபடியே கால தத்வம் உள்ளதனையும் அடிமை செய்து
-இவ்வடிமைக்கு அழிவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே நிர்ப்பரனாய் இருக்கும் படி பண்ணி அருள வேணும்
-நெடுமால் -ஆஸ்ரிதர் பக்கல் வியாமுக்தன் என்னவுமாம் –

———————————————————————————————————-

அருள் என்னும் காட்டில் அருளுமோ என்று திரு உள்ளம் விசாரிக்க -நமக்கு அருளாது ஒழியுமோ -என்கிறார் –

அஞ்சாது இருக்க அருள் என்று நாம் அவனை நிர்ப்பந்தித்தால் -அவன் நம்முடைய அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷித்தல்
-அன்றிக்கே நம் கார்யம் செய்கைக்கு சக்தன் இன்றிக்கே இருத்தல் செய்யிலோ என்று திரு உள்ளம் பிற்காலிக்க
-அவன் நம் கார்யம் செய்கைக்கு சக்தனே -நம் அயோக்யதையைப் பார்த்து உபேக்ஷிப்பதும் செய்யான் -என்கிறார் –

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -19-

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று-தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் –ஆலிலையிலே சேர்ந்து
வியாமுக்தனான பிள்ளை நமக்கு அருளாது ஒழியுமோ
-இருளாத-சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது-முந்தையராய் நிற்பார்க்கு முன் —
-இருளாத சிந்தைகளை யுடையராய் திருவடிகளிலே புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு கைகளால் தொழுது
முற்பாடராய் இருக்கிறவர்களுக்கு முன் -அருளாது ஒழியுமே-முன்னே அருளானோ –

——————————————————————–

பகவத் விஷயத்தில் அஞ்ஞான ஏக தேசமும் ஊடு கலசாத ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு சிவந்த திருவடிகளிலே
அழகிய செவ்விப் பூக்களை அடைவு கெடப் பணிமாறி -கைகளால் அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்து
முற்பாடராய் இருக்கிற அதிகாரிகளுக்கு முன்னே -ஜகத்து பிரளயத்தில் அழிய புக்கவன் ஒரு பவனாய்
இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே அறிவு கலசாத முக்த சிசுவாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளின
அக்கடிகடனா சமர்த்தன் அருளாது ஒழியுமோ –யோக்கியருக்கு முன்னே அயோக்யரான நமக்கு தன்
அக்கடிகடனா சாமர்த்தியத்தால் அருளும் -நீ பயப்பட வேண்டா என்று திரு உள்ளத்தைக் குறித்து மா ஸூ ச -என்று தேறி அருளுகிறார்-

———————————————————————————————————–

அவன் தன்னை அ பேக்ஷித்தார்க்கு தன்னை அழிய மாறி கார்யம் செய்யுமவன் என்கிறார் –

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே -என்னே
திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு ——-20-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே –உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட இந்த லோகம் தன்னையே
பெறாது பெற்றாயாக அளந்து கொள்கை -இது பெரியது ஒன்றே
-என்னே-திருமாலே செங்கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ யிதனைப் பேசு —உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும் என்னே சேர்த்தி யுண்டு
-நீ இத்தைச் சொல்ல வேணும் என்று -எத்திறம் என்கிறார் –

——————————————————————————

முன்பொரு காலத்தில் ஜகத்தை எல்லாம் திரு உதரத்திலே எடுத்து வைத்து புறப்பட விடுவதாய்ச் செய்த உனக்கு
இப்படி இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமான அந்த லோகத்தை பின்பு ஒரு நாளிலே இரண்டு திருவடிகளால் அளந்து
கொள்கையான இது ஒரு பெரிய செயலாகச் செய்தாயோ -ஸ்ரீ யபதியாய் அவ்ளோட்டைச் சேர்த்தியாலே
சிவந்த திருக் கண்களை யுடையனாய் -ஒருவராலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையையாய்-
-எங்களுக்கு ஸ்வாமி யானவனே -நீ இத்தை அருளிச் செய்ய வேணும் -இந்திரன் பல் காட்டின்து
பொறுக்க மாட்டாமல் உன் வியாமோஹத்தால் செய்த செயல் அத்தனை இ றே -என்னே இது என்ன ஆச்சர்யம் என்று வித்தாராகிறார் –

————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: