முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –91-100– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

பரம பதம் ஸ்வ யத்ன சாத்தியம் அன்றோ என்றவோபாதி-இச்சையும் வேண்டாவோ -என்கிறது-
ஹேயத்தில் ஹேயதா புத்தியும் உபாதேயத்தில் உபேதேயதா புத்தியும் வேண்டாவோ பேற்றுக்கு –

கீழில் பாட்டு ருசி யுடையவனுக்கு உதவின படி –

(சம்சாரத்தில் இந்திர கதியாக சுற்றி சுற்றி வர -தானே அருள நினைப்பார்களை -அவனது விசேஷ அபிமானம் -விலக்காமல் -தக்க வைக்க வேண்டுவதே வேண்டும்
வேற இடங்களில் அருசியும் -பல நீ காட்டிப் படுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ -உபயாந்தரங்களில் அந்வயம் இல்லாமல்
ப்ரயோஜனந்தரங்கள் ஆசை இல்லாமல் -இருக்க வேண்டும்
ஸ்ரீ வராஹா மூர்த்தி திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் ஆகுமே -)

சர்வேஸ்வரன் சர்வ அபேக்ஷித ப்ரதனேயாகிலும் இதர விஷயங்களில் ருசி யற்று அவனை
ஆஸ்ரயித்தார்க்கு அல்லது பரமபத பிராப்தி அரிது -என்கிறார் –

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(சரீரத்தையே இனியதாக ஸ்திரமாக நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–ஆத்ம ஸ்வரூபம் ஆகிய யாதாத்ம்ய  தத்வ ஜ்ஞாநமாகிற
சுடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி-வையம் தகளியில் முதலில் வைய கதிரோன்  விளக்கு -இங்கு நிகமனத்திலும் நேராக வராஹ மூர்த்தி  விளக்கு
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி–சரீரம் கண்டது எல்லாம் பொல்லாதாய் இருக்கச் செய்தேயும்
ஆபாத ப்ரதீதியில் நன்று போலே இருப்பது ஓன்று உண்டு -அந்த இருள் சரீரத்தை -அவகாஹிக்கப் போம் –
ஞானச் சுடர் கொளீஇ –ஞானம் ஆகிற விளக்கை பிரகாசிப்பித்து –இதினுடைய ஹேயதையும்-அந்யதா ஞானமும்
யதார்த்த ஞானத்தால் போம் –ஆக யதார்த்த ஞான பூர்வகமாக பர ஞானம் வேணும் –
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் –நோவு பட்ட போது உதவினவனாய் இவை இல்லாத வன்று -தான் உண்டாய்
ரஷிக்கும் அவனுடைய திருவடிகளிலே ருசி இல்லாதார்க்கும் உண்டோ பரம பதம் –
அவன் ஆபி முக்கியம் பண்ணுகிறபடியை அனுசந்திக்க வைமுக்ய சங்கை யுண்டோ —

(மருவாதார் -முதல் பிரபத்தி உபாயமாக -மேல் ருசி தூண்ட கைங்கர்யம் செய்ய வேண்டுமே)

ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன -நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ –

கீழில் பாட்டு ருசி யுடையவனுக்கு உதவின படி –

ஊனக் குரம்பை- ஹேயமாய் அல்பமாய் அஸ்திரமாய் அநர்த்தமாய் அகவாய் தெரியாத படி மேலே தோலை வைத்து
மினுக்கி ஆபாத ப்ரதீதியிலே நன்று என்று தோற்றும் படி இத்தை உள்ளபடியே அனுசந்தித்து அபுருஷார்த்தம் என்றும்
புருஷார்த்த விரோதி என்றும் பேசிற்று -பொய் நின்ற இத்யாதி –
ஞானச் சுடர் கொளீஇ–பிரகாரமான தன்னை அனுசந்தித்து பிரகாரியான அவனையே -தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கி –இத்தலை நினையாத போதும் நினைத்திருந்து நோக்குமவன் -விரோதியான இவ் வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான் -(ததாமி புத்தி யோகம் )

(ஆச்சார்யன் த்வயத்தைச் சொல்ல இவன் அத்தைத் திரும்பிச் சொல்லும் அன்று ஒரு தடவையே சொல்ல வேண்டிய பிரபத்தி –
அதற்குப் பின் இவன் ஸ்வரூபத்திலே புகுமே –
இந்நினைவு ஒரு கால் ஏற்பட்டால் பின் அழியக் கூடியது அல்லவே –
பெறப்போகும் பலத்தின் சீர்மையைப் பார்த்தால் இவன் ஆயுள் முழுவதுமே இந்நினைவோடே இருந்தாலும் -ஒரு தடவை என்பதற்கும் போராத படியாய் அன்றோ இருப்பது )

(ப்ரபந்ந நாதக் யேஷாம் ந திஸதி முகுந்ததோ நிஜ பதம் –ப்ரபன்னனைத் தவிர வேறே யாருக்கும் முகுந்தன் பரமபதத்தைத் தர மாட்டான் – தேசிகன் )

(ஊழியான் பாதம் மருவதார்க்கு உண்டாமோ வான் —-நான்ய பந்தா வித்யதே அயநாய -என்கிற வேதாந்ததார்த்தம் )

(நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் -பரிபாடல் -15 -)

—————————————————————-

சர்வேஸ்வரன் சர்வ அபேக்ஷித ப்ரதனேயாகிலும் இதர விஷயங்களில் ருசி யற்று அவனை
ஆஸ்ரயித்தார்க்கு அல்லது பரமபத பிராப்தி அரிது -என்கிறார் –

அக வாயில் தோஷம் தோற்றாத படி மாம்சம் செறிந்து மேல் எழ மினுங்கித் தோற்றுகிற சரீரம் ஆகிற குடிசையிலே-
அதில் தோஷம் உள்ள எல்லை அளவும் செல்ல உள்ளுற அவகாஹித்து அத்தை போக்யம் என்று இருக்கிற அஞ்ஞானம்
ஆகிற இருளைப் போக்கி ஜீவ பர யாதாம்யத்தை விஷயீ கரித்து இருக்கும் ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
தன்னுருக் கெடுத்து நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தை யுடையனாய் கொண்டு
லோகத்தை இடந்து எடுத்துக் கொண்டு ஏறினவனாய் -இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும்
தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய திருவடிகளை நாள் தோறும் பொருந்தி
ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –

——————————————————————-

அவ்வவ ஜாதிகளில் அவதரித்து அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி-
ஸ்ரீ வராஹமானால் கோரைக் கிழங்கு தாரகமாம் -இடையன் ஆனாகில் வெண்ணெய் தாரகமாய் இருக்கிறபடி –

இப்படி ஆஸ்ரிதர் ரஷிக்கும் அளவன்றிக்கே அவாப்த ஸமஸ்த காமனான பூர்த்திக்குப் போராத படி –
ஆஸ்ரிதர் தொட்டு அளைந்த த்ரவ்யத்தைத் தனக்கு தாரகமாக விரும்பி இருக்கும் -என்கிறார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-

பதவுரை

வான் ஆகி–ஆகாசமாகியும்-ரூபனாகவும்
தீ ஆய்–அக்நியாகியும்-ரூபனாகவும்
மறி கடல் ஆய்–அலை யெறிகிற கடலாகியும்-ரூபனாகவும்
மாருதம் ஆய்–காற்றாகியும்-ரூபனாகவும்
தேன் ஆகி–தேன் போன்றும்
பால் ஆம்–பால் போன்றும் பரம போக்யனான
திருமாலே–எம்பெருமானே!
முன் ஒரு நாள்–பிரளயம் நீங்கின காலத்திலே
மண்ணை–(பிரளய காலத்தில் உட் கொண்டிருந்த) இவ் வண்டத்தை
உமிழ்ந்த-(உள்ளேயே கிடந்து தளர்ந்து போகாதபடி) வெளிவிட்ட
வயிறு–உன் வயிறானது
ஆன் ஆய்ச்சி வெண்ணெய்– பசுக்களை மேய்க்கும் இடைக் குலத்திற் பிறந்தவளான யசோதை யென்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
விழுங்க–அள்ளி அமுது செய்ததினால்
நிறையுமே–நிறைந்து விடுமோ? [நிறைய மாட்டாது]

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்-பஞ்ச பூதங்களாலே ஒரு அண்டமாய் அண்டாந்த வர்த்ததிகளான
புருஷர்களுக்கு நிர்வாஹகனாய்
தேனாகிப் பாலாம் திருமாலே –சர்வ ரஸ என்கிறபடியே பிராட்டியோடே கூட பரம பதத்தில் இருக்கிறவன்
ஆனாய்ச்சி-வெண்ணெய் விழுங்க நிறையுமே –உபய விபூதி உக்தனாய் இருக்கிற இருப்புக்குச் சேருமோ
ஓர் இடைச்சி வெண்ணெயை விழுங்குகை –
பிரளயம் கொள்ளாத படி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை
வெண்ணெயாலே நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார்
ருசி யுடையாரோடு சம்பந்தம் உள்ளது ஓன்று அல்லாத உபய விபூதி யோகம் குறை பட்டு இருக்குமவனுடைய ருசி சொல்கிறது –
ஆனாய்ச்சி வெண்ணெய் -முடை நாறும் வெண்ணெய்  நிறையுமே -குறைக்கும் இட்டு அடைக்க வேணும்
சம்சாரிகளுக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –

—————————————————————-

இப்படி ஆஸ்ரிதர் ரஷிக்கும் அளவன்றிக்கே அவாப்த ஸமஸ்த காமனான பூர்த்திக்குப் போராத படி –
ஆஸ்ரிதர் தொட்டு அளைந்த த்ரவ்யத்தைத் தனக்கு தாரகமாக விரும்பி இருக்கும் -என்கிறார் –

ஆகாசம் அக்னி அலை எறிகிற கடல் காற்று முதலான பூதங்களாலே சமைந்த அண்டாந்த வர்த்தி பதார்த்தங்களுக்கு
நிர்வாஹகனாய் பரமபத வாசிகளுக்கு சர்வ ரஸ சமவாயமான தேன்–ஸ்வாபாவிக ரசமான பால் –
இவை போலே நிரதிசய போக்யனாய்க் கொண்டு இருக்குமவனாய் -இந்த உபய விபூதி யோகத்துக்கு மேலே
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த ஐஸ்வர்யத்தையும் யுடையவனே -பண்டு ஒரு நாளிலே பிரளயத்தில் அழியாத படி
பூமியை அடங்க எடுத்து விழுங்கி உள்ளுக் இடந்து தளராத படி வெளிநாடு காண உமிழ்ந்த உன்னுடைய
வயிறானது பசு மேய்க்கும் குடியிலே பிறந்த யசோதை பிராட்டி கடைந்து வைத்த முடை நாற்றம்
குன்றாத வெண்ணெயை அபி நிவேசத்தோடே அமுது செய்து அருள அத்தாலே நிறையுமோ-

(சரீரீ சரீர பாவம் -பிரகார பிரகாரி பாவம்–காரண கார்ய பாவம் -அப்ருதக் ஸித்த விசேஷணம்)

(தேஹோ தேஹிநி -என்றும் -ஸ்தித் யுத் பத்தி -என்றும் தொடங்கும் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வ ஸ்லோகங்களை அனுசந்திக்கவும் -)

தேஹ தேஹினி காரேண விக்ருத்ய ஜாதி குணா கர்ம ச
த்ரவ்யே நிஷ்டித ரூப புத்தி வசநா தாத்ஸ்த்யாத் ததா இதம் ஜகத்
விஸ்வம் த்வயி அபி மந்யஸே ஜகதிஷே தேந அத்விதீய தத
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம ரங்கேஸ்வர –23-

ஹே ரங்கேஸ்வர
தேஹ சரீரமானது
தேஹினி –ஆத்மாவின் இடத்திலும்
காரேண விக்ருத்ய–தங்கள் காரண வஸ்துவின் இடத்திலும் கார்ய ரூபமான விகாரங்களானவை
ஜாதி குண கர்ம ச–ஜாதியும் குணமும் கர்மமும்
த்ரவ்யே -த்ரவ்யத்தின் இடத்தில் இருந்தும்
தாத்ஸ்த்யாத்–ஒரு போதும் விட்டுப் பிரியாது இருக்கும் விசேஷணம் என்கிற காரணத்தினால்
நிஷ்டித ரூப புத்தி வசநா–ரூபத்தில் அனுபவம் வியவஹாரம் என்னும் இவை நிலைத்து இருக்கப் பெற்றுள்ளன
ததா இதம் ஜகத்–அவ்விதமாகவே இந்த எல்லா உலகத்தையும்
விஸ்வம் அபி த்வயி–எல்லா உலகத்தையும் தேவரீர் இடத்தில்
அபி மந்யஸே–நிஷ்டிபுத்தி வசனமாம் படி சங்கல்பித்து உள்ளீர்
த ரூப தேந அத்விதீய ஜகதிஷே –ஆகையால் அத்விதீயாராக சொல்லப்பட்டீர்
தத-அதனால்
மாயா உபாதி விகார சங்கர கதா கா நாம –மாயை உபாதி விகாரம் என்னும் இவற்றின்
சம்பந்தப் பேச்சானது ஏது-அது பிசகு என்றபடி –

ஆகவே-தேஹத்துக்கும் தேஹிக்கும் காரியத்துக்கும் காரணத்துக்கும் ஜாதி குண கர்மங்களுக்கும் த்ரவ்யத்துக்கும் அப்ருதக் சித்தி நிபந்தனமாக
ஐக்ய நிர்தேசம் கூடுவது போலவே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் உண்டான ஐக்கியமும் என்றவாறு –

மாயா வாத சங்கர மதமும் -உபாதி பேதம் பாஸ்கர மதமும் –
ப்ரஹ்மமே பரிணமிக்கிறது விகார வாதம் யாதவ பிரகாச மதம் -நிரசனம்–
உடல் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் –
மாயா வாதங்கள்
உபாதி வாதங்கள்
விகார வாதங்கள் நிலை நிற்காதே

தேவதாதி சரீரம் சரீரீ இடத்திலும் -கட படாதி விகாரங்கள் காரணத்திலும் –
கோத்வாதி ஜாதியும்–
ஸூக்லாதி குணங்களும் –
கமனாதி கிரியையும் –
த்ரவ்யத்திலும்
அப்ருதக் சித்த சம்பந்தத்தால் பர்யசிக்குமே –

அப்படியே சர்வ ஜகத்தும் அப்ருதக் சித்த விசேஷணமாய் –
பிரகாரமாய் –
தேவரீர் அத்வதீயமாய் இருக்க
சங்கர பக்ஷத்தில் ப்ரஹ்மத்துக்கு மாயா சம்பந்தமும்
பாஸ்கர பக்ஷத்தில் உபாதி சம்பந்தமும்
யாதவ பிரகாச பக்ஷத்தில் விகார சம்பந்தமும் சொல்வது எதற்க்காக என்கிறார் –
அசங்கதை அன்றோ -என்றபடி

ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி க்ரசன நியமன வ்யாபநை ஆத்மந தே
சேஷ அசேஷ பிரபஞ்ச வபு இதி பவத தஸ்ய ச அபேத வாதா
சர்வம் கலு ஜெகதாத்ம்யம் சகலம் இதம் அஹம் தத் த்வம் அஸி ஏவம் ஆத்யா
வ்யாக்யாதா ரங்க தாம ப்ரவண விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை –24-

ஹே ரங்க தாம ப்ரவண
ஸ்திதி உத்பத்தி ப்ரவ்ருத்தி -ரஷணத்தாலும் ஸ்ருஷ்டிப்பதாலும் காரியங்களில் பிரவர்த்தனம் செய்வதாலும்
க்ரசன -சமயத்தில் திரு வயிற்றினுள் வைத்து ரக்ஷிப்பதாலும்
நியமன–ஒவ்வொரு வஸ்துக்குள்ளும் உள் புகுந்து நியமிப்பதாலும்
வ்யாபநை –எங்கும் வியாபிப்பதாலும்
ஆத்மந தே–சர்வ ஆத்மாவாய் இருக்கின்ற தேவரீருக்கு
சேஷ –சேஷப்பட்டதான
அசேஷ பிரபஞ்ச–உலகம் முழுவதும்
வபு இதி –தேவரீருக்கு சரீரமாகா நின்றது என்கிற காரணத்தினால்
பவத தஸ்ய ச –தேவரீருக்கு அவ்வுலகத்துக்கும்
அபேத வாதா-அபேதத்தை சொல்லுமவையான
சர்வம் கலு -சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
ஜெகதாத்ம்யம் -ஜெகதாத்ம்யம் சர்வம்
சகலம் இதம் அஹம் -சகலம் இதம் அஹம் ச வாஸூ தேவா
தத் த்வம் அஸி-தத் த்வம் அஸி ஸ்வேத கேதோ
ஏவம் ஆத்யா-என்று இவை முதலான பிரமாணங்கள்
வ்யாக்யாதா விஜயபி வைதிகை ஸார்வ பவ்மை -ஜயசாலிகளான வைதிக தலைவர்களினால் பொருத்தம் உடையனவாக வியாக்யானிக்கப் பட்டன –

சாமாநாதி கரண்ய நிர்த்தேசம் உப பன்னம்

(திருமாலே –ஸ்ருஷ்டியாதிகளைச் செய்வதும் அவளது உகப்புக்காகவே –
தேனாகிப் பாலாம் -எல்லா ரசங்கள் கூட்டரவே -இரண்டைச் சொன்னது ஸர்வ ரசங்களுக்கும் உப லக்ஷணம் -ஸர்வ ரஸ -உபநிஷத் -)

(திருமாலே -உபய விபூதி ஐசுவர்களுக்கும் மேல் அன்றோ ஸ்ரீ யபதித்தவம் -)

(ஆஸ்ரித ஸ்பர்சம் பெற்ற த்ரவ்யமே தாரகமாகக் கொள்ளுமவன் -இம் மஹா குணம் இல்லாவிடில் உபய விபூதி நாதத்வமும் பயன் அற்றதாகவே விடுமே -)

——————————————————————————————–

கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –
எங்கனே உய்வர் தானவர் நினைத்தால் என்று நரசிம்ஹத்தைக் கண்ட அஸூர ராக்ஷஸ
ஜாதியாகப் படும் பாட்டை அவனைக் கண்ட அனுகூலர் படும் படி –

ஓர் அரியாய் நீ இடந்தது என்று நம்மை ஆஸ்ரித பக்ஷ பாதியாகக் கீழே சொன்னீர் –
அது நீர் அறிந்த படி என் என்ன -ஹிரண்யன் மேலே பண்ணின சீற்றம் கொண்டு அறிந்தேன் என்கிறார் –

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக் கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச-வயிறு அழலுகிறது ஆர்க்கு என் என்னில் –ஆழ்வார்க்கு –முன்பு ஒரு நாள்
ஹிரண்யன் செய்ததாய் இராதே தம்முடைய எதிரே வாளும் உருவிக் கொண்டு புறப்பட்டால் போலே இருந்த படி
என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே—(பெரியாழ்வார் )என்கிறபடியே –
வந்தானை-தம்முடைய மேலே வந்தால் போலே இருக்கிற படி

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா–ஸுகுமார்யத்தாலும் அழகாலும் பூவைக் கீழ்ப் படுத்துவதான
கையிலே திரு வாழியை யுடையவனே
பொறி யுகிரால்-பார்த்த படியே இருக்க வேண்டி இருக்கிற திரு உகிராலே
நின்-சேவடிமே லீடழியச் செற்று ——என்றும் நாங்கள் ஆசைப்பட்டுப் போகிற திருவடிகளிலே
அவனை ஏறிட்டு இனி முளையாத படி முடித்து

(நின் சேவடி மேல் -பரி ஸ்ரமாத் பரி ஸூப்தாஹம் ராகவாங்கேப் யஹம் சிரம்-களைப்பினால் ராகவன் மடியில் நெடுங்காலம் உறங்கினேன் – -ஸூ ந்தர -38-20-
என்கிறபடி பிராட்டிமார் பள்ளி கொண்டு அருளும் உன்னுடைய சிவந்த திருவடிகளின் மேல் ஏறிட்டுக் கொண்டு)

எயிறிலக  வாய் மடுத்த தென் நீ–பிராட்டிமார்க்கும் சம்போகத்திலே திரு முத்து தோற்றாத படி பண்ணும் ஸ்மிதம் வேண்டா
எயிறு தோற்றும்படிக்கு ஈடாகப் பண்ணின ஹாசத்தைக் கண்டால் அதுவே அமையும் என்னும் படி இருக்கிற வாயை மடுத்தது என் நீ
உனக்கும் சீற்றத்துக்கும் விஷயம் யுண்டோ -முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு
த்வயி கிஞ்சித் சமாபன்னே-என்னும் விஷயங்கள் அன்று -அத ராமோ மஹா தேஜோ
கொடியவாய் விலங்கின் இன்னுயிர் மலங்கக் கொண்ட சீற்றம் -என்று சரணாகதர்க்குத் தஞ்சமான தனமாவது
ஆஸ்ரித அர்த்தமாக ஹிரண்யனைப் பற்ற பண்ணும் சீற்றம்-நரஸிம்ஹரைக் கண்ட அசுரர் ராக்ஷசர் ஜாதி படும் பாட்டை ஹிரண்யனைக் கண்ட அனுகூலர் படும் படி

வயிறு அழல-அஸ்மான் ஹந்தும் நஸம்சய ராஷசோ அப்யேதி -இத்யாதி
தனித் தனியே சொல்லில் ஒருவர் அல்லா ஒருவர் பிழைக்கிலுமாம் -என்று வேர்ப் பற்றிலே நலிய –
பொறியுகிரால்- பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா-போகத்துக்கு ஏகாந்தமான அழகை யுடைய அறு காழி என்னுதல் –
திரு வாழி பிடிக்கத் தகும் கை என்னுதல் – சென்று வைத்து -வாய் மடுத்த தென் நீ-

சங்கல்பம் தவிர்ந்து-திருவாழி தவிர்ந்து -திரு வுகிராலே பிளந்து பிணத்தின் முகத்திலே நா மடிக் கொள்வதே –

(கோபம் ஆஹாரயத் தீவ்ரம் யதார்த்தம் ஸர்வ ரக்ஷஸாம் எல்லா ராக்கதர்களையும் கொல்ல கடும் கோபத்தை ராமன் வரவழைத்துக் கொண்டான் -ஆரண்யம் -24-34-)

(அத ராமோ மஹா தேஜா ராவணேந க்ருத வ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்த்தூலம் கோபஸ்ய வஸமே யிவான்-யுத்த -59-136-
மஹா தேஜஸ் வீயான ராமன் ராவணனால் காயப்பட்டவனும் வானர ஸ்ரேஷ்டருமான ஹநுமானைப் பார்த்து கோப வசப்பட்டான் –
பாகவத அபசார க்ரூரத்தால் விரோதியை அளித்த பின்பும் கோபம் தணியாதே -)

(பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையால் நின் சேவடிமே லீடழியச் செற்று —என்ற பாடமாகில் —-
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையால் நின் சேவடி மேல் பொறி யுகிரால் ஈடழிய -என்று கூட்டி
புஷ்ப்பத்திலும் மென்மை மிக்கதாய் -ஆசைப்படத் தக்க திருவாழியை யுடையதான திருக்கையாலே
அன்பர்களை வைத்துக் கொள்ள வேண்டிய திருவடிகளிலே கிடத்தி
அழகிய திரு உகிராலே அவனை அழித்தது -என்ற பொருள் -)

———————————————————

ஓர் அரியாய் நீ இடந்தது என்று நம்மை ஆஸ்ரித பக்ஷ பாதியாகக் கீழே சொன்னீர் –
அது நீர் அறிந்த படி என் என்ன -ஹிரண்யன் மேலே பண்ணின சீற்றம் கொண்டு அறிந்தேன் என்கிறார் –

ஸுகுமார்யம் அழகு முதலான ஸ்வ பாவத்தால் பூவைப் பூவினுடைய வடிவு அழகைத் தலை அழித்து இருப்பதாய்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியை தரித்த திருக் கையை உடையவனே -கண்ட அனுகூலர் என்னாகத் தேடுகிறதோ -என்று
வயிறு எரியும் படி வாளை உருவிப் பிடித்துக் கொண்டு வந்த ஹிரண்யனை உன் உக்ர வேஷம் கொண்டு
அவன் பயப்படும்படியாக பிராட்டிமார் பள்ளி கொண்டு அருளும் உன்னுடைய சிவந்த திருவடிகளின் மேல் ஏறிட்டு
நாநா வர்ணமான அழகிய திரு யுகிர்களாலே கட்டுக் குலைந்து சிதறிப் போம் படி முடித்து-

பின்னையும் சீற்றம் மாறாமையாலே திரு எயிறுகளானவை விளங்கும்படிக்கு ஈடாக நீ நா மடிக் கொண்டது என்-

ஆ என்று வாய் அங்காந்து -இதுவோ பிலவாய–இத்யாதி

பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையால் -என்ற பாடமாய்த்தாகில்-புஷ்பத்திலும் காட்டிலும் ஸூ குமாரமாய்
திருக் கைகளால் -திரு உகிராலே–அனுகூலரை வைத்துக் கொள்ளுகைக்கு யோக்கியமான திருவடிகளிலே
அவனை வைத்துக் கொண்டு -என்று பொருளாகக் கடவது –

—————————————————————————————————

இப் பாட்டு கீழ்ப் பாட்டில் விருத்தாந்தம் ஆகவுமாம் –
ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –

(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு  நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன் படிகள் எல்லாவற்றையும் காட்டும் ஸ்வ பாவனை அல்லது
என் நாவானது வேறு சிலரை ஏத்தாது என்கிறார் –

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை–பீஷ்மாதிகளுக்கு காட்டி அருளிய ஸ்ரீ கிருஷ்ணன் –
மார்கண்டேயருக்கு காட்டி அருளிய ஸ்ரீ வாமனன் என்றுமாம் –

செற்று எழுந்து தீ விழித்து-என்றது நீ ஒரு தூது வர விட வேண்டா என்ற துரியோத நாதிகளைச் சீறிப் பார்த்த படி யாகவுமாம் –
நரகில் பாப கர்மம் போக்குகைக்கு என்று சங்கல்பம் வேண்டா –
சென்றவிந்த வேழ் உலகும்-மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்-மறையவர்க்குக் காட்டிய மாயவனை-நரகில் பாப கர்மம் போக்க சங்கல்பிக்க வேண்டா
தீ விழித்ததே போதும் –
ஸ்ரீ மார்க்கண்டேய பகவானுக்காகவுமாம் – ஸ்ரீ பீஷ்ம துரோணாதிகள் ஆதல் -சாமான்ய லஷியா வயம்
யல்லால்-இறையேனும் ஏத்தாது என் நா –பர வ்யூஹாதிகளில் போகாது -(தேவதாந்த்ர பஜநம் சொல்ல வந்தது அல்ல )

(யச்ச கிஞ்சித் மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவர ஜங்கமம்
தத் பஸ்யம் அஹம் ஸர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன -பாரதம் -ஆரண்ய -191-123-மார்க்கண்டேயர் வசனம் )

(திருமாலை அல்லது தெய்வம் என்று எத்தேன் -64- என்கிற இடத்திலேயே தேவதாந்தங்களைக் கழித்த பின்பு
மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா என்று இங்கு
பரம புருஷனுடைய ரூபாந்தரங்களையே கழிக்கிறார்)

(பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—-இரண்டாம் திருவந்தாதி -41–

சுகோ முக்தோ வாமதே வோபி முக்த -என்றவர்கள்
-ஸூக வாம தேவாதிகளான பரம வைதிகருக்கு –
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி
தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகள் என்றுமாம்-
மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
தத்ரூ ஸூர் விஸ்மிதா காரா –என்னும்படி
தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –
ஸ்ரீ மார்கண்டேயன் என்றுமாம்-
மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது
மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது -)

————————————————————-

தன்னை ஆஸ்ரயித்தார்க்கு தன் படிகள் எல்லாவற்றையும் காட்டும் ஸ்வ பாவனை அல்லது
என் நாவானது வேறு சிலரை ஏத்தாது என்கிறார் –

(ஹிரண்ய கசிபு துரியோதனாதிகள் -செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற -இது மட்டுமே
ஆஸ்ரிதற்கு விந்த வேழ் உலகும் மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்)

அதி பிரவ்ருத்தமான இவற்றை அழிக்கக் கடவதாய் பெரிய உத்யோகத்தோடே கிளர்ந்து -அக வாயில் சீற்றம் தோற்ற
நெருப்பு எழப் பார்த்து அழித்துப் பொகட்டு –

தன் பக்கலிலே உப ஸம்ஹ்ருதமாய் வந்து சேர்ந்து கிடக்கிற
இந்த சப்த லோகங்களையும் அழித்துப் பொகட்டு -அதுக்கு மேலே அழிந்த போன வஸ்துக்கள் இவை காண் -என்று
தன் திருப் பவளத்தைத் திறந்து -தத் பஸ்ய அஹம் சர்வம் -என்று சகல ஜகத்தையும் வைதிகனான மார்க்கண்டேய பகவானுக்கு
முன்பிருந்த கட்டளையிலே காட்டின ஆச்சர்ய சக்தி உக்தனானவனை ஒழிய ஏத்தப் பெறாமல் உறாவிக் கிடக்கிற என் நாவானது

பர வ்யூஹாதிகளான அவஸ்தாந்தரங்களிலே ஏக தேசமும் ஸ்தோத்ரம் பண்ணாது –

அன்றிக்கே பாரத சமரத்திலே பீஷ்மாதிகளுக்கு வைஸ்வரூப்யம் காட்டின படியை இப்பாட்டில் சொல்லுகிறது ஆகவுமாம் –
அப்போது கிளர்ந்து நெருப்பு எழப் பார்த்து சம்ஹரித்துச் சொல்லுகிற இந்த சகல லோகங்களையும்-
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி -என்கிறபடியே தன்னுடைய கோபாக்கினியால் ஜ்வலித்துக் கிளருகிற
திருப் பவளத்திலே விழுந்து நசித்துப் போகிற படியை வைதிகரான பீஷ்மாதிகளுக்குக் காட்டின ஆச்சர்ய பூதனை ஒழிய
என் நா ஏத்தாது என்று பொருளாகக் கடவது –

பீஷ்மாதிகள் விஷயமான போது மறையவர்க்கு என்கிற இது
ரேபாந்தமாகக் கடவது -மார்க்கண்டேய விஷயமான போது னகர ஒற்றாகக் கடவது –

(ரகாரம் கடைசியில் வந்து பன்மை
மறையவன் -னகர ஒற்று ஒருமை )

(அநேக பாஹூதர வக்த்ர நேத்ரம் –பஸ்யாமி த்வாம் ஸர்வதோநந்தரூபம்—
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் -பஸ்யாமி விஸ்வேஸ்வர விஸ்வரூப—৷৷11.16৷৷)

(அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.
பஸ்²யாமி = காண்கிறேன்
த்வாம் = உன்
ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை
நா = இல்லை
அந்தம் = முடிவு
ந = இல்லை
மத்யம் = நடு
ந = இல்லை
புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்
பஸ்யாமி = காணுதல்
விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே
விஸ்வரூப = விஸ்வ + ரூபம் = அனைத்தையும் கொண்ட வடிவமானவனே)

(கணக்கற்ற கைகள் வயிறுகள் வாய்கள் கண்கள் ஆகியவற்றை உடையவனாய் -அளவற்ற உருவங்களை யுடையவனாய் –
உன்னை எல்லாப் புறத்திலும் காண்கிறேன் -அனைத்தையும் நியமிப்பவனே -அனைத்தையும் உடலாகக் கொண்டவனே –
நீ எல்லை அற்றவனாகையாலே உனக்கு முடிவையும் காண்கிறிலேன் -தொடக்கத்தையும் காண்கிறிலேன்
உலகங்களை நியமித்து உலகங்களை சரீரமாக -எண்ணிறந்த கைகள் கண்கள் -அந்தம் அற்ற ரூபங்கள் –
ஆதி முடிவு நடு தெரியாமல் –)

(கிரீடிநம் கதிநம் சக்ரிணம் ச–தேஜோ ராஸிம் ஸர்வதோ தீப்தி மந்தம்-
பஸ்யாமி த்வாம் துர்நிரீக்ஷ்யம் ஸமந்தாத் தீப்தாநலார்க த்யுதிமப்ரமேயம்—৷৷11.17৷৷)

(கிரீடிநம் = கிரீடம்
கதிநம் = கதை
சக்ரிணம் = சக்ராயுதம்
ச = மேலும்
தேஜோராஸிம் = ஒளி வீசும்
ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்
தீப்திமந்தம் = ஒளியூட்டும்
பஸ்யாமி = நான் பார்க்கிறேன்
த்வாம் = உன்னை
துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான
ஸமந்தா த் = அனைத்துப் பகுதிகளிலும்
தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்)

(பேர் ஒளிக் குவியலாய் இருப்பவனாய் -எல்லாப் புறத்திலும் ஒளி யுடையவனாய் -ஒவ் ஒரு அவயவமும்
காண்பதற்கு அரியனாய்-கொழுந்து விட்டு எரியும் அக்னியைப் போலேயும்-ஸூர்யனைப் போலவும்
கிரணங்களை உடையவனாய் -அளவிட்டு அறிய முடியாதவனாக உன்னை
கிரீடத்தை உடையனவாகவும் -கதையை உடையவனாகவும் சக்ரத்தை உடையவனாகவும் காண்கிறேன்
கிரீடங்கள் -கதைகள் சக்ராயுதம் தரித்து -அசாதாரண லக்ஷணங்கள் -திருமாலுக்கு தானே –
ஆதி ராஜ்யம் அதிகம் புவனானாம் -ஒளி படைத்த பதார்த்தங்கள் சேர்த்த திரு மேனி –)

அமீ ச த்வாம் (ஸர்வே ) த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா–ஸர்வேஸ் ஸஹைவ அவநி பால ஸங்கை–
பீஷ்மோ த்ரோணஸ்- ஸூத புத்ரஸ் ததாஸௌ-ஸஹாஸ் மதீயைரபி யோதமுக்யை—-৷৷11.26৷৷

வக்த்ராணி தே த்வரமாணா விஸந்தி–தம் ஷ்ட்ராகராலாநி பயாநகாநி.–
கேசித் விலக்நா தஷநாந்தரேஷு-ஸந்த்ருஸ் யந்தே சூர்ணிதைர் உ த்த மாங்கை—-৷৷11.27৷৷

எதிரே காட்சி அளிக்கும் த்ருதராஷ்ட்ரனின் புத்திரர்கள் நூற்றுவரும் பீஷ்ம பிதா மஹரும் ஆச்சார்யரான துரோணரும் –
அவ்வண்ணமே எதிரே காட்சி அளிக்கும் கர்ணனும் -அவர்களைச் சேர்ந்த அரசர் கூட்டங்களோடும்
நம்மைச் சேர்ந்த சில வீரர் தலைவர்களோடும் கூட வளைந்த பற்களை உடையவையாய் மிகவும் பயங்கரமாய் இருப்பவையுமான
உனது வாய்களுக்கு உள்ளே -அழிவின் பொருட்டு விரைவுடன் நுழைகிறார்கள் –
அவர்களில் சிலர் துண்டு துண்டாக்கப்பட்ட தலைகளோடு கூடியவர்களாய் பற்களின் இடைவெளிகளில்
தொங்குகின்றவர்களாய் காணப்படுகிறார்கள்
திரு வாயை திறக்க -த்ருதாஷ்ட்ர புத்திரர்கள் -பூமி பால ராஜாக்கள் கூட்டம் -பீஷ்மர் துரோணர் -கர்ணன் –
முன்னால் நிற்கும் கர்ணன் -நம் பஷத்தவர்களும்-கூட -அடுத்த ஸ்லோகத்தில் புகுகிறார்கள் என்பதை சொல்லி
வளைந்த பற்கள் -பயங்கரமான வாய் -வெகு வேகமாக உள்ளே புகுகிறார்கள் –வாயை மூடுவதற்கு முன்னே புக வேகமாக -போக வேன்டும் –
எஞ்சாமல் வயிற்றில் அடக்கினான் -முற்றும் உண்ட கண்டம் கண்டீர் –
சூரணமாக உத்தம அங்கம் தலை- ஆக்கப்பட்டு -பற்களில் சிக்கி -தொங்கும் காட்சி கண்டேன் –

பீஷ்மரும் துரோணரும் ஸம்ஹரிக்கப் படுவதை அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கு காட்டிய ஆச்சார்ய பூதனே -மாயவனை -என்கிறது –

————————————————————————————————————–

இது விடப் போகாததாய் இருந்தது -இது கீழ்ப் போகாததாய் இருந்தது -இதுக்கு எங்கனே விலக்கடி யுண்டான படி –
அபரிகரராய் இருக்கில் செய்யலாவது இல்லை இறே -என்னில் ஈஸ்வரன் ஒரு பரிகரம் தேடும்படி வைத்தானோ என்கிறது –

(ஸ்ரீ வை குண்டம் செல்வது கை பட்டு எளியது என்று ஸம்ஸார சூழலில் சிக்குவதே அரிது என்பதே ஆழ்வார் திரு உள்ளம்-மா கதி -அர்ச்சிராதி கதி என்றும் உபாயங்கள் பக்தி பிரபத்தி என்றும் கொள்ளலாம் -இவை இரண்டும் ஸித்தமாய் உள்ளனவே -ஸ்ருஷ்டத்வ வன வாஸம் -பிரமாணம் )

இப்படி அவனை ஏத்துகைக்கு பரிகரமான நாவைக் கொண்டு அவனை ஏத்தாதே –
சேதனர் அத்தை சம்ஹரிக்கைக்குக் பரிகரமாக்கிக் கொண்ட படி எங்கனே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ஸ்ரமப் பட்டுத் தேட வேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப் பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக் கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத் தன்மை யற்ற [திரும்பி வருதலில்லாத]
மா கதிக்கண்–பரம ப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகை யுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படி யிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக் கதிக் கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று-ஓவாது உரைக்கும் உரை உண்டே–ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாயா -என்கிறபடியே
நாக்கு ஆகில் அவனை ஏத்தக் கடவது -அந் நாக்கு கண்டவோபாதி திரு மந்த்ரமும் இவனுக்கு இளைப்பாறிச் சொல்ல வேண்டாதது உண்டே
ஒரு சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம் -இது சொல்லுமதில் நரக அனுபவம் அமையும் என்னாத திரு மந்த்ரம் உண்டே –
மூவாத-(மூப்பு அடையாத -அழியாத -திரும்பி வராத-மீளுதலாம் ஏதும் இலா கதி  )மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே –அபுநராவ்ருத்தி லக்ஷணமான ப்ராப்யத்துக்குச் செல்லும் அர்ச்சிராதி மார்க்கம் உண்டே –
என்னொருவர்-தீக் கண் செல்லும் திறம் —-நரகத்துக்கு போக வழி நேராகக் கண்டிலோம் -இதுக்கு விலக்கடி எங்கனே உண்டாயிற்று
சம்சாரி ஹிதம் காண்கிறிலோம்-நாளோ செல்லா நின்றது -என்னொருவர்-தீக் கண் செல்லும் திறம் -வலிய விலக்கடி தேட வேணும்-

நா என்றதும் தாமரையின் பூ என்றதும் –
தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது———இரண்டாம் திருவந்தாதி–21–என்றபடி
சென்னியரே-தமக்கும் இந்த்ரியங்களுக்கும் மற்ற ஆஸ்ரயண  உபகரணங்களுக்கும்  உப லக்ஷணம்-

நாராயணேதி ஸப்தோ அஸ்தி வாக் அஸ்தி வச வர்த்தி நீ
ததாபி நரகே கோரே பதந்தீத் யேதத்புதம் –பிராமண கோஸம்
நாராயண என்னும் ஸப்தம் உள்ளது -வாக்கு வசப்பட்டு இருக்கிறது -அப்படி இருந்தும் கோரமான நரகில் விழுகிறார்கள் என்பது ஆச்சர்யமே –

————————————————————

இப்படி அவனை ஏத்துகைக்கு பரிகரமான நாவைக் கொண்டு அவனை ஏத்தாதே –
சேதனர் அத்தை சம்ஹரிக்கைக்குக் பரிகரமாக்கிக் கொண்ட படி எங்கனே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

ஏத்துகைக்கு பரிகரமான நாவானது புறம்பு போய்த் தேட வேண்டாத படி தம் தாம் வாயிலே உண்டே -சஹஸ்ராக்ஷரீ மாலா மந்த்ரம்
போலே நெடுக இருந்து சொன்னாலும் முடிவு காண ஒண்ணாத படி இருக்கை அன்றிக்கே -நமோ நாராயணாய என்று ஒரு காலே
சொல்லி இளைப்பாறலாம் படியான திரு மந்த்ரம் உளதாய் இரா நின்றதே -அபுநரா வ்ருத்தி லக்ஷணமாய் பரம ப்ராப்யமான
மோக்ஷத்திலே செல்லுகைக்கு ஈடான உபாயம் உண்டே –இப்படி உஜ்ஜீவனத்துக்கு உடலான நல் வழி போகாமல் விநாசத்துக்கு
ஈடான துர் மார்க்கங்களிலே சென்று ஒருவர் விழுகிற பிரகாரம் என்னாயிருக்கிறதோ என்று விஸ்மயப் படுகிறார் –

——————————————————————————————————

விலக்கடி இல்லை என்று இருக்கலாய் இருக்கிறது இல்லை -இவ்வர்த்தத்தைக் கை விடாதே கொள்-என்று
தம்முடைய திரு உள்ளத்தைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

(கடைக்கட்  பிடி –அனைத்துமே அவன் வசப்பட்டவையே-அனைத்தும் அப்ருதக் சித்த விசேஷணங்கள்- சரீரம்- பிரகாரம் -நியாமகம் -இந்த  அர்த்தத்தை இறுதி வரை விடாமல் கொள் -அர்த்தத்தின் இறுதியைக் கொள் என்றுமாம்-ஈஸ்வர ப்ரீதி கோப உபவ் புண்யமும் பாபமும்  )

லௌகிகர் செய்தபடி செய்ய -நெஞ்சே நீ முந்துற முன்னம் நான் சொல்லுகிற இத்தை அழகியதாக புத்தி பண்ணு என்கிறார் –

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இரு வகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம் மண் தான்–இந்தப் பூமியும்
மறி கடல் தான்–அலை யெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந் முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலே யாவன்;
கடைக்கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மை யென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக்கொள்.

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்–நான் சொல்லிற்று தப்பாதே போகிற நெஞ்சே –
அர்த்த தத்வம் கண்டு அல்லது கால் வாங்கேன் -என்று இருக்கிற நெஞ்சமே –
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் —
புறம் தான் இம் மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்துப் போருகிற நம்மோடு -விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை-
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில் -ஏஷ ஏவ சாது கர்ம கார யதி –தம்முடைய பக்கல் கர்த்ருத்வம் தவிர்த்த பின்பு
ஒரு அசேதன கிரியையைப் பற்றுவர் அன்றே -செங்கண் மால் கண்டாய்-சர்வேஸ்வரன் கண்டாய் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-(வேதாந்தம் காட்டிய அடையாளம் )

இம்மண் இத்யாதி -பிரதிபந்தகமான -அசித்தோடே கூட சேதனனும் அவனே -அநுக்தமான மஹத்தாதிகளைச் சொல்லுகிறது(ஷேத்ரஞ்ஞனும் அவனே – கீதை -அதே அர்த்தம் இங்கும் -ஷேத்ரமும் அசித்தும் அவனே அர்த்தாத் ஸித்தம் )
அவனை ஒழிய ஸ்வ தந்திரமாய் இருப்பது ஒன்றும் இல்லையே –கண்டாய்  கடைக்கட்   பிடி–இவ்வர்த்தத்தை திரும்பாது
கடைக்கட் பிடி -கடி போகப் பிடி -இவ்வர்த்தத்தின் யுடைய கடைப்பிடி கண்டாயே என்றுமாம்

அறம் இத்யாதி -ஆபாத ப்ரதீதியில் அவனை ஒழிய புண்ய பாபம் என்று தோற்றுவது-நிலை நின்று பார்த்தால் அவனே கடவன் என்று தோற்றும்
திரும்பாது என்று நெஞ்சோடு கூட்டவுமாம் –திரும்பாது -அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் -என்னவுமாம்
திரும்பாது கடிகைக் கடிபிடி -என்னவுமாம் –
நாட்டார்க்கு பல வழி யுண்டாகிலும் நம்முடைய வழியைப் பற்றி இராய நீ -திரும்பாது என் நெஞ்சமே
சொல் என்று அலைகிற நெஞ்சே – செங்கண் மால் – நம்முடைய விஷயத்தில் இருக்கிறபடி கண்டாயே –
அறம் இத்யாதி -பெறுகைக்கும் இழக்கைக்கும் அவனுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஒழியப் போக்கு இல்லை
சர்வமும் பகவத் அதீனம் அன்றோ -கடைக் கட் பிடி –அறுதியாகப் பிடி —

—————————————————————

லௌகிகர் செய்தபடி செய்ய -நெஞ்சே நீ முந்துற முன்னம் நான் சொல்லுகிற இத்தை அழகியதாக புத்தி பண்ணு என்கிறார் –

எனக்கு பவ்யமான நெஞ்சே புண்யம் பாபம் என்று சொல்லப்படுகிற இரண்டுக்கும் நிர்வாஹகனாய்ப் போருகிறவன்
புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் தானே கிடாய் -இந்த பூமியும் அலைகிற கடலும் வாயுவும் ஆகாசமும் இவற்றுக்குப்
புறம்பான மஹதாதிகளுமான இவற்றுக்கு எல்லாம் நிர்வாஹகனாய் இருக்கிறவன் அந்த புண்டரீகாக்ஷன் தானே கிடாய்
முடிவில் வந்தால் இதுவே அர்த்த தத்வம் என்று இத்தைத் தவறாத படி மனசிலே பிடித்துக் கொள் –

(செங்கண் மால் -அறம் பாவமாவான் -ஒருவனை நோக்கி வாத்சல்யத்தால் கண்கள் சிவக்க கடாக்ஷித்தால் புண்யமாகும்
மற்ற ஒருவனைக் கோபத்தால் பார்க்க அவனுக்குப் பாபத்தை வளரச் செய்கிறான்

ஏஷ ஹ்யேவைநம் ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி
தம் யமேப்யோ லோகேப்ய உன்னி நீஷதி
ஏஷ ஹ்யேவை நம ஸாது கர்ம காரயதி யமதோ திநீஷதி -கௌஷீதகீ -2-64-65-
எந்த ஜீவனை அண்டத்தில் உள் இருக்கும் இந்த லோகங்களில் இருந்து மேலே பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறானோ
அவனை பரமாத்மாவே நல்ல கர்மங்களை பண்ணுவிக்கிறான்
எவனைக் கீழே தள்ள விரும்புகிறானோ அவனை கெட்ட கர்மங்களை பண்ணும்படி செய்கிறான் –

அனைத்துக்கும் பிரகாரீ -சரீரீ -சேஷீ – நியாமகன் -ஸ்வாமி அவனே
புண்யா புண்யா ஈஸ்வர ப்ரீதி கோபவ் -அவனது உகப்பே புண்யம் கோபமே பாபம்
இதுவே அர்த்த தத்வம் என்று தவறாத படி மனஸ்ஸிலே பிடித்துக் கொள்)

————————————————————————————————

அறம் பாவம் என்றும் இரண்டும் ஆவான் -என்றதுக்கு வியாக்யானம் இப் பாட்டு –

பிடி சேர்  பொடி சேர்-என்ற இத்தால் பிராயச் சித்தம் பண்ணி அத்தால் ஸூத்தன் அன்றியிலே இருக்கிறவனையும்
ஸூத்தன் ஆக்கிற்று திருவடிகளில் ஸ்பர்சத்தாலே என்கிறது

அறமும் அவனே என்று பாவனமாகச் சொல்லா நின்றீர் -கங்கை தொடக்கமானவையும் பாவனம் அன்றோ என்ன
அதனுடைய பாவனத்வம் தத் சரண கமல சம்பத்தாயத்தம் என்கிறார் –

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்–ஒளி பொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜல மயமான
கங்கை என்னும் பேர்–கங்கை யென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்—ஸ்ப்ருஹணீய சிறந்த பெண்
உன் தன் அடி சேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

பிடிசேர் களிறளித்த பேராளா உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே –ஜென்ம ஞான வ்ருத்தங்கள்-
சாந்தோ தாந்தோ உபரதஸ் திதி ஷூ -என்னும் அவன் இறே மோக்ஷத்து விஷய பிரவணம் ஆகையிறே பாபம் ஆவது
தன் பிடி பக்கல் ப்ரவணமாய் தன் பக்கலில் இன்றிக்கே இருந்த களிற்றை ரஷிக்கும் போது பாபம் தான் இட்ட வழக்காக வேணும் இறே –
பேராளா -பிடி சேர்ந்த களிற்றை ரக்ஷித்தான் என்றால் அவன் செய்தான் ஆகில் கூடும் என்று இருக்கை –

உந்தன்-அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே–இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்கு என்கிறது
பொடி சேர்-அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த-புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் —
பஸ்மச் சந்தனாய் அக்னியைக் கையிலே ஏற்றானாய் இருந்துள்ள ருத்ரனுடைய விளங்கா நின்ற ஜடை மேலே
பாய்ந்த புனலை யுடைத்தான கங்கை என்னும் பேரை யுடைத்தான விலக்ஷணையான ஸ்த்ரீ உன் திருவடிகளிலே
சேர்ந்து அன்றோ நாட்டுக்கு பாவனம் ஆயிற்று -(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடு வினை களையலாமே )

பிடி சேர்  பொடி சேர்-என்ற இத்தால் பிராயச் சித்தம் பண்ணி அத்தால் ஸூத்தன் அன்றியிலே இருக்கிறவனையும்
ஸூத்தன் ஆக்கிற்று திருவடிகளில் ஸ்பர்சத்தாலே என்கிறது-

பிடி சேர் களிறு -அவன் பிடியை நினைக்க நீ அவனை நினைத்திலையோ -ஒரு கால் நினைத்தான் ஆகில்
முன்பு ஸ்வரூபம் இது அன்றோ என்கிறது –ஜென்ம வ்ருத்தங்கள் அன்று பிரயோஜகம் -(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு )
அருள் பெற்றாள் -பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –

(சாந்தோ தாந்தோ உபரதஸ் திதி ஷுஸ் ஸமாஹிதோ பூத்வா ஆத்மன்யே வாத்மானம் பஸ்யேத்-ப்ருஹதாரண்யம் – 6-4-28-
உள்ளும் புறமும் இந்திரியங்களை அடக்கியவனாய் -காம்ய கர்மங்களில் ஆசை அற்றவனாய் -பொறுமையுடன்
கூடினவனாய் கலங்காத மனஸ்ஸை யுடையவனாய் இருந்து கொண்டு தனது ஆத்மாவில் அந்தர்யாமியாய் இருக்கும் பரமாத்மாவைக் காணக் கடவன்
இவனோ பிடி சேர் களிறு -வ்ருத்த தோஷம் தண்ணளி செய்து அருளி ரஷித்த மஹா ப்ரபாவன் –

த்ரவீ பூதஸ் ததா தர்ம -ஈஸ்வர ஸம்ஹிதை -தர்மமே -ஜலமாயிற்று

மத்யம் பீத்வா குரு தாராம்ஸ் ஸ்ச கத்வா ஸ்தேயம் க்ருத்வா ப்ரஹ்ம ஹத்யாஸ் ச க்ருத்வா
பஸ்மச் சந்தோ பஸ்ம ஸய்யா ஸாயாநோ ருத்ராத்யாயீ முச்யதே ஸர்வ பாபை –சாதாதப ஸ்ம்ருதி

பாவநார்த்தம் ஜடா மத்யே ததார சிரஸா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை

கங்கையும் உனது திருவடி ஸ்பர்சத்த்தாலே அன்றோ பாவானத்வம் தரும் சக்தியைப் பெற்றாள்)

————————————————————-

அறமும் அவனே என்று பாவனமாகச் சொல்லா நின்றீர் -கங்கை தொடக்கமானவையும் பாவனம் அன்றோ என்ன
அதனுடைய பாவனத்வம் தத் சரண கமல சம்பத்தாயத்தம் என்கிறார் –

ஸ்வ ஹிதம் அறியாதே பிடியின் பக்கலிலே பிரவணமாய் -அத்தை விட்டு நீங்க மாட்டாமல் கூடி வர்த்திக்கிற ஆனையை-
அதின் வ்ருத்த தோஷம் பார்த்து இகழாதே தண்ணளி பண்ணி ரஷித்த மஹா பிரபாவன் ஆனவனே
பஸ்ம சய்யா சயான -என்கிறபடியே பண்ணின தோஷத்துக்கு பிராயச்சித்தமாக எப்போதும் பஸ்மத்திலே சாயுமவனாய்
அக்னிக்கு அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய ஒளியை யுடைத்தான ஜடையின் மேலே
தச் ஸூத்யர்த்தமாக வந்து குதித்த நீரை யுடையளாய் -கங்கை என்னும் பேரை யுடைய ஸ்லாக்யையான ஸ்த்ரீ யானவள்
பாதகிகளையும் பரிசுத்தனாக்கும் -ஸ்வதஸ் சக்தியை யுடையனான உன் திருவடிகளைக் கிட்டி அன்றோ
அவள் அந்த பிரசாதம் எல்லாம் பெற்றது –

விஷய பிரவணமான களிற்றை ரஷிக்கையாலே பாபம் இவன் இட்ட வழக்கு என்றும்
கங்கையினுடைய பாவனத்வம் தத் சம்பந்தாயத்தம் என்கையாலே புண்யம் அவன் இட்ட வழக்கு என்றும் சொல்லிற்று யாய்த்து –

——————————————————————————————————————

ஈஸ்வரனாய் அதிகாரியாய் -தானும் சிலர் காரியத்துக்கு கடவனாய் இருக்கிறவனை -இவனுடைய சம்பந்தத்தாலே
ஸூத்தன் ஆனான் என்று சொல்லும் படி எங்கனே என்னில் -ஈஸ்வர அபிமானியாய் இருக்கும் போது சொல்லுமத்தை
பிரமாணிக்க ஒண்ணாது -இவனுடைய ஸ்வரூபத்தை பார்க்கலாகாதோ -என்கிறார் –
ருத்ரனுடைய ஐஸ்வர்யம் பொய்யோ -என்னில் பகவத் அதீனம் -என்கிறார் —

(அரன் அதிகன் -உலகு அளந்த அரி அதிகன் -சமம் என்று பேசும் அறிவிலிகள் கம்பர்-வேறே வேறே வியக்திகள் அன்றோ )

ஜகத் சர்வம் சரீரம் தே –சமஸ்தத்துக்கும் அந்தராத்மா நாராயணனே -சேஷி நியாந்தா வியாபகன் தாரகன் –

ஏறாளும் இறையோனும் திசைமுகனும்–கூறாளும் தனி உடம்பன் –இத்யாதி

உளன் -உள்ளத்தே உறைவதாலேயே சத்தை பெற்று உள்ளதாகும் -பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லையே )

அவன் திருவடியில் பிறந்த கங்கையை ஜடையிலே தரித்தான் என்று ருத்ரனுக்கு குறை சொல்லுகிறது என்
அவனும் ஒரு காரியத்தில் அதிகரித்து ஈஸ்வரனுமாய் அன்றோ போருகிறது-என்ன
அவனுடைய ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் வந்தது அத்தனை போக்கி ஸ்வத இல்லை என்கிறார் –

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் –98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடை  முடியையுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேஸ்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

இருவரங்கத் தால் திரிவரேலும்–இருவர் அங்கத்தால்-வடிவுடன் திரிந்தார்கள் ஆகிலும்
ஒரு வனங்கத் தென்று முளன்-ஒருவன் -சாதக வேஷம் பூண்ட சிவன் -அங்கத்து என்றும் உளன் -நெடுமாலின்
ஏக தேச சரீரத்தைப் பற்றி எக்காலத்திலும் சத்தை யுடையனாய் இருப்பன் –

பொன் திகழு மேனிப்–சர்வேஸ்வரனாய் இருக்கும் போது மேக ஸ்யாமமாய் இருக்கும் இறே(நீல தோயத மத்யஸ்தா -கருப்பு மேகத்தில் பள பளத்து -ஹிரண்ய மயம் -முகில் -மேக வண்ணன் -கடல் வண்ணன் )
புரி சடை–தாழ் சடையானுக்கும் நீண் முடியானுக்கும் வாசி பார்த்துக் கொள்ளலாம் அத்தனை இறே –
அம் புண்ணியனும்–ஹூத்வாத்மா நம் தேவ தேவோ பபூவ –என்கிற படியே –
நின்றுலகம் தாய நெடுமாலும் –ஸ்வைரமாக அதி மானுஷ சேஷ்டிதத்தைப் பண்ணினவனும் -அவன் தலையிலும்
பிறர் தலையிலுமாகத் திருவடிகளை வைத்தவனும்(சர்வாதிகத்வமும்-வாத்சல்யம் காட்டும் -தாய் அன்பு காட்டுபவனாயும் )
என்றும்-இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் —–இருவரும் ச பரிகரமாகத் திரிந்தாரே யாகிலும் -ஒருவனுக்கு ஸ்திதி (உளனாகும் தன்மை )ஒருத்தன் சரீரத்தைப் பற்றி
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் என்னும் படியே —
நின்று உலகம் இத்யாதி -ருத்ரன் தலையிலும் நாட்டார் தலையிலும் ஓக்க அடியிட்டவன் –
இரு அங்கத்தால் -இரண்டு வடிவுகளாலே -என்றுமாம் -அங்கத்தில் ஏக தேசத்தில் உளன் என்றுமாம் –

(நீல தோயத மத்யஸ்தா -தைத்ரியம்

ந மாம் கர்மாணி விம்பந்தி -ஸ்ரீ கீதை

மஹா தேவஸ் ஸர்வ மேத மஹாத்மா ஹுத் வாத்மாநம் தேவ தேவோ பபூவ
ஸர்வான் லோகான் வியாப்ய விஷ்டப்ய கீர்த்யா விராஜதே த்யுதிமான் க்ருத்தி வாஸ -பாரதம் சாந்தி பர்வம் –20-12-
இவனுடைய ஈஸ்வரத்வம் சாதன அனுஷ்டானத்தாலே யுண்டாயிற்று

திருவடியால் துகை யுண்டவன் அன்றோ –

உலகம் தாய நெடுமால் -பேர் அன்புடைய தாய் குழந்தையை அணைப்பது போன்ற செயல்

நாம ரூபா வாஹன லோக க்ருத்ய பரிகாராதிகளில் வாசி யுண்டே
நாரணன் -அரன்
கொண்டல் வண்ணன் -பொன் திகழ் மேனி
வேதாத்மா வாஹனம் -எருது -ரிஷப வாஹனம்
ஸ்ரீ வைகுண்டம் -கைலாச வாஸி
ரக்ஷணம் -ஸம்ஹாரம்
நித்ய ஸூரி கணங்கள் சூழ -பூத ப்ரேத பிசாச கணங்கள்
சூழ
ஸாத்விக ஆகாரம் -தாமஸ ஆகாரம்
வேதத்தால் கோஷிக்கப் படுபவன் -தானே செய்த சிக்க ஆகமத்தால் கோஷிக்கப் படுபவன்

ருத்ரபதவியும் பிரவாஹோ நித்யம் -என்றும் என்னக் குறைவில்லை

ஸ ப்ரஹ்மா ச சிவ -தைத்ரியம்
ப்ரஹ்மா நாராயண சிவஸ் ச நாராயணா சக்ரஸ்ய நாராயண திசஸ் ச நாராயண
யஸ்ய ஆத்மா சரீரம்
திருமேனியில் ஒரு புறம் அடங்கி நின்று சத்தை பெறுபவன்
பஸ்ய ஏகாதச மே ருத்ரான் தக்ஷிணம் பார்ஸ்வமா ஸ்ரீ தரான் -பாரதம் மோக்ஷ தர்மம்
ப்ரஹ்மணாம் ஈசம்  கமலாசனம்-கீதை
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் -திருவாய் -1-3-9-

சாமந்தருக்கு -சிற்று அரசர்க்கு புறம்பே நாடுகள் கனக்க யுண்டானாலும்
மாளிகைக்குள்ளே -அரண்மனைக்குள்ளே -செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்து மகிழவார் போலே
இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இறே
ஒரு கலகங்களிலே அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி இருந்து கலகம் தீர்ந்தகு புறம்பே குடி போனாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னரும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -திருவாய் -4-10-3-
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -திருவாய் -4-10-4-)

——————————————————-

அவன் திருவடியில் பிறந்த கங்கையை ஜடையிலே தரித்தான் என்று ருத்ரனுக்கு குறை சொல்லுகிறது என்
அவனும் ஒரு காரியத்தில் அதிகரித்து ஈஸ்வரனுமாய் அன்றோ போருகிறது-என்ன
அவனுடைய ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதன் ஆகையால் வந்தது அத்தனை போக்கி ஸ்வத இல்லை என்கிறார் –

பொன் போலே ஒளி விடுகிற வடிவையும் பின்னின ஜடையையும் யுடையனாய் -இப்படி ஜடை கட்டி அனுஷ்டித்த
அழகிய புண்யத்தை யுடைய ருத்ரனும் ஸ்வைரமாக நின்று ருத்ரனோடு அல்லாதாரோடு வசியற சகல லோகங்களையும்
அநாயாசேன அளந்து கொண்ட சர்வாதிகனான சர்வேஸ்வரனுமாகிற இவர்கள் இருவரும் சர்வ காலத்திலும்
இரண்டு சரீரத்தை உடையவராய் -அறிவு கேடர்க்கு ஓக்க நினைக்கலாம் படி திரிந்தார்கள் யாகிலும்
புண்ணியனான ஒருவன் நெடுமாலான ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு சர்வ காலத்திலும் லப்த சத்தாகனாய் இருக்கும்

அன்றிக்கே ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த சத்தாகனாய் இருக்கும் என்னவுமாம்

இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

——————————————————————————————————————–

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட -நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –

(ஜங்கம ஸ்ரீ விமானம் -நடமாடும் விமானம் நமது உள்ளம்-நின்று இருந்து கிடந்து சாதன அனுஷ்டானம் செய்து பெறாப் பேறு பெற்றது போல் நம் திரு உள்ளமே பரம புருஷார்த்தம் )

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் —
நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான-அனுகூலமான- மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்ய வாஸம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற் கடலிலே கண் வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்ய வாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்துகொள்.

உளன் கண்டாய் -இலனானவனை உளன் என்கிறது அன்று -அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் -நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

( தனக்குத் தான் தேடும் நன்மை தீமையோ பாதி விலக்காயே இருக்கும் -நான் இருக்கிறேன் ஸ்வ ரக்ஷண அந்வயம் கூடாதே)

நன்னெஞ்சே –எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
உத்தமன்  என்றும்-உளன் கண்டாய் –அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்-இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன்
என்று இருக்கும் -தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும் தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –

உளன் கண்டாய் –பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –
நன்னெஞ்சே –இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே -உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை – உள்ளுவார்–புகுர சம்வத்திப்பார்
உள்ளத்து உளன் -இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் -அணைப்பார் கருத்தானாவான் —

—————————————————————————-

புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் —
நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

அவன் ஒருவன் உளன் -என்று சொன்னால் உகக்கும் நல்ல நெஞ்சே -பிறர்க்கு நன்மை வேணும் -என்று
எப்போதும் சிந்தித்த படியே இருக்கும் உத்தம புருஷன் -நம்முடைய ரஷணத்தாலே தன் சத்தையாம் படி உளனா மவன் கிடீர்
நாம் உளரான அன்றோடு இலரான அன்றோடு வாசி அற சர்வ காலத்திலும் நம்மை ரஷிக்கையிலே தீஷித்து உளனாய் இருக்குமவன் கிடாய்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டு விலக்காதே அத்தை பொருந்தி அநுஸந்திக்குமவர்களுடைய நெஞ்சிலே சாதரமாக
நித்ய வாசம் பண்ணுமவன் கிடாய் -திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனும் -திரு மலையிலே நின்று அருளினவனும்
கிடப்பது நிற்பதாய் அங்கு பண்ணின கிருஷியின் பலமாக (கோர மா தவம் செய்தனன் கொல் )நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
இடவகைகள் இகழ்ந்திட்டு -என்கிறபடியே அவ் விடங்களை அநாதரித்து சாதரமாக நித்ய வாசம் பண்ணுமவன் என்று புத்தி பண்ணு –

(பல பாசுரங்களில் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி பெருமைகளைப் பிறருக்கு உபதேசித்தவர் இப் பாசுரத்தில் ஈஸ்வர ஸத் பாவத்தை உபதேஸிக்கிறார் என்பது பொருந்தாதே –
நம்மை நம்மிடமும் பிறர் இடமும் காட்டிக் கொடுக்காமல் ரக்ஷித்து நமது சத்தையை அருளுவதிலேயே ஊன்றி இருக்கிறான் என்கிறார்
நன்னெஞ்சே -அவனே நமக்கு ரக்ஷகன் என்பதை எனக்கும் உபதேஸிக்க வல்ல முந்துற்ற நெஞ்சு அன்றோ –
நம்மை தனது பேறாக ரக்ஷித்து சத்தை பெறுவான் அவன் என்று சொன்னால் விஸ்வஸிக்கும் நல்ல நெஞ்சே என்றுமாம்)

பிறரை ஹிம்சிப்பதே யாத்திரையாக கொள்பவன் அதம அதமன்
ஸூய நலத்துக்காகப் பிறரை ஹிம்சிப்பவன் அதமன்
ஸூய நலத்தை விட்டு பிறரை ரக்ஷிப்பவன் -மத்யமன்
பிறரை ரக்ஷித்தால் அல்லது தரிக்காமல் -தன்னைத் தாழ விட்டாகிலும் -தனது பேறாகவே ரக்ஷிப்பவன் உத்தமன்
புருஷோத்தமன் ஒருவனே -)

அசன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேநம் ததோ விது -தைத்ரியம்-

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

பர வ்யூஹ விபவ அர்ச்சா நிலைகள் எல்லாமே அவன் நம்மைப் பெற ஸாதன அனுஷ்டானம் செய்யும் இடங்களே
இளம் கோயில் கை விடேல் என்று பிரார்த்திக்க வேண்டும்படி அன்றோ இருக்கும் –
விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -தைத்ரியம்
நெஞ்சமே நீள் நகர் –திருவாய் -3-8-2-
உள்ளத்திலுக்கப்புடன் புகுந்து நித்ய சத்தை பெறவே நித்ய வாஸம் செய்யும்
அவனை ஆணை இட்டு விலக்காமல் அத்வேஷமும் ஆபி முக்யமுமே வேண்டியது
நம்மைப் பெற அவனது முயற்சிகளுக்குப் பிரமாணம் -வெள்ளத்து உள்ளானும் -இது பரமபத நிலைக்கும் உப லக்ஷணம்
வேங்கடத்து உள்ளானும் -இது நின்று இருந்து கிடந்தது நடந்து ஸேவை சாதித்து அருளும் அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
இத்தைப் பெற்ற பின்பு இகழ்ந்திட்டு -5-4-10- இவற்றை உபேக்ஷித்து இந்நெஞ்சு இல்லையேல் நமக்கு வாழ்வு இல்லை என்று பேர் உகப்போடே நித்ய வாஸம் செய்து அருளுகிறான் –
இப்படி நம்மை ரஷித்தே தான் சத்தை பெறும்படி இருப்பதை அனுசந்திக்கவே நம்மையே பிறரையோ நினைத்து அஞ்ச வேண்டாம் என்கிறார் -)

மற்ற ஆழ்வார்களும் இதே போல் பாசுரம்-உளன் -நல்ல வேளை இவர் இருந்தார் -உளன் -என்னை காப்பாற்றி எனது சத்தைக்கு காரணமாக இருந்தவர்
எங்கும் உளன்-வஸ்து ஸ்திதிக்கு அவன் எங்கும் இருந்தாலும்ந – -பிரகாசம் ஆஸ்திகர் உள்ளத்தில் -புரிந்து கொண்டால் தானே பிரகாசிக்கும்

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————————————————————————————————————–

பேறும் அத்தாலே -பெறுவதும் அவன் திருவடிகளை அவனாலே பெறுவது -என்கிறது –

(புல்லைக் காட்டி புல்லை இடுவாரைப் போல் -திருவடிகளைக் காணலாம் -கண்டு தொழுது கைங்கர்யம் செய்யும் அளவும் -இதுவே புருஷார்த்தம்
அத்தை அடைய ப்ராபகமும் திருவடிகளே-இதனாலே இணை அடிகள் -மனத்து வை -மஹா விஸ்வாஸம்-வேண்டுமே
பெரும் பேர் இன்பத்தை முதலில் சொல்லி பின்பு உபாயம் உபதேச வேளையில் செய்ய வேண்டுமே – இரண்டிலும் ப்ராப்யமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபாயமாகவும் பற்றுகிறோம் -)

இப்படி மேல் விழுந்து நம்மை ஆதரிக்கிறவனைப் பெறுகைக்கு உபாயம் ஏது என்ன
அவனே ப்ராப்யம்
அவனைப் பெறுகைக்கு ப்ராபகமும் அவனே என்று அத்யவசி -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-(மண்டல அந்தாதி )

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களை யெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–ஆச்சர்ய சேஷ்டிதங்கள் கொண்ட எம்பெருமானையே-மனசில் வைத்ததும் உபாயம் ஆகாதே மாம் ஏகம் அன்றோ -அதிகாரி ஸ்வரூபம் -பல அனுபவ யோக்யதா ஆபாதம்-உண்ண பசி வேண்டுமா போல் –
மனத்து வை–மனத்தில் உறுதியாகக் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண் மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

ஓரடியும்-லோகத்தை அடங்கலும் தன்னதாக்கின திருவடிகளையும்
சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்–சகடாசூரனை நிரசித்த போக்யமான திருவடியையும்
ஈரடியும் காணலாம் –இவ் விரண்டு திருவடிகளை ப்ராப்யம்
என் நெஞ்சே –காண வேணும் என்று இருக்கிற என்னெஞ்சே -இதுக்கு உபாயம் ஏது என்னில் -அவன் என்கிறது –
ஓரடியில்-தாயவனைக் -ஓர் அடியாலே எல்லாவற்றையும் அளந்த ஸூலபனை
கேசவனைத் -விரோதி நிரசன சீலனானவனை
தண் துழாய் மாலை சேர்-மாயவனையே மனத்து வை —ஸூலபனும் இன்றிக்கே விரோதியைப் போக்குமவனும் இன்றிக்கே
இருக்கிலும் விட ஒண்ணாத போக்யமான மாயவனை (குண க்ருத தாஸ்யத்தை விட ஸ்வரூப க்ருத தாஸ்யமே ஸ்ரேஷ்டம் )-நாம் உன் சஹகாரிகள் என்று இராதே
காண்பதுவும் அவனையே -காட்டுவானும் அவனே –நமக்கு பிரதிபத்தியே உள்ளது -(உறுதியான நம்பிக்கையே மஹா விஸ்வாஸமே வேண்டும் -விடுவித்திப் பற்றுவித்த அவனே உபாயம் -நஞ்சீயர் )

சாடுத்த ஓர் அடியையும் திரு உலகு அளந்த சேவடியையும் காணலாம் –காண ஒண்ணாதோ என்று இருக்கிற என்னெஞ்சே
தாயவனை -கீழ்ச சொன்ன ஓர் அடி – கேசவனை -சாடுதைத்த திருவடிகளை உடையவனை –
திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் –
தண் துழாய்–போக்யதை – மாயவன் -இவன் என்று நினையாதபடி பண்ண வல்லவன் – மனத்து வை -அநுஸந்தி-

(தாயவனை -தாய் போலே தடவிக் -கொடுத்து ஸுலப்யம்
ஒரு நீராக உயர்ந்தோர் தாழ்ந்தோர் வாசி இல்லாமல் பரிமாறி –ஸுசீல்யம்
குற்றத்தை நற்றமாகக் கொள்ளும் வாத்சல்யம் -நீர்மை
ப்ரஹ்மாதிகள் தலையிலும் திருவடி வைக்கையாலே சர்வாதிகத்வம் -சர்வஞ்ஞத்வம் ஸர்வ சக்தித்வம்
இப்படி ஆஸ்ரயண ஸுஹர்ய ஆபாத குணங்களும்-ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்களும் நிறைந்தவன்
கேசவனை – விரோதி நிரசன சீலத்தவம்
இதுக்கும் மேலே காணக் கண் குளிரும் துழாய் மாலை அணிந்து இருக்கும் அதி ஸூந்தரன்
ஸஹ காரி நிரபேஷ ஆச்சர்ய பூதன்
நாம் செய்ய வேண்டியது ஒன்றே -மனத்து வை -என்கிறார் –
மாயவனையே மனத்து வைத்து இத்தை உபாயமாகக் கொள்ளாதே
த்வமேவ உபாய பூதவ்
மாமேகம் சரணம் வ்ரஜ
நாராயணனே நமக்கே பறை தருவான்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு
உண்ணுவதும் பசி போல் இதுவும்
ஒண் மலர்ச் சேவடி -பூ விழும் மென்மையான திருவடிகளைக் கொண்டு காடும் மேடும் அளப்பதே
மென்மை -குளிர்த்தி -நாற்றம் செம்மை
விஷ்ணோ பத பரம மத்வ உத்ஸ
தேனே மலரும் திருப்பாதம்
ஈரடி -சேர்த்தி அழகு
காணலாம் -அனுபவத்தைச் சொன்னது கைங்கர்யத்துக்கும் உப லக்ஷணம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற பரம சாராரத்தை அருளிச் செய்து பிரபந்தத்தைத் தலைக் கட்டுகிறார் )

———————————————————————–

இப்படி மேல் விழுந்து நம்மை ஆதரிக்கிறவனைப் பெறுகைக்கு உபாயம் ஏது என்ன
அவனே ப்ராப்யம்
அவனைப் பெறுகைக்கு ப்ராபகமும் அவனே என்று அத்யவசி -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

காண வேணும் என்று அபி நிவேசிக்கிற -என்னுடைய நெஞ்சே -ஒரு திருவடியால் ஜகத்தை எல்லாம் அளந்து கொண்ட
சீல ஸுலப்யாதி குணங்களை யுடையவனாய் -கேசி ஹந்தா வாகையால் விரோதிகளை வேறு அறுக்கைக்கு உறுப்பான
ஞான சக்தியாதிகளை யுடையனாய் -ஸூலபனும் அன்றிக்கே விரோதியை வளர்க்கிலும் விட ஒண்ணாத படி
குளிர்ந்த திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனாயக் கொண்டு நிரதிசய போக்யனாய் ரஷிக்கும் இடத்தில்
சஹாயாந்தரங்களை அபேக்ஷியாத ஆச்சர்ய பூதனு மாயிருக்கிற ஸர்வேஸ்வரனே உபாயம் என்று மனசிலே
அத்யாவசாய புரஸ்சரமாக வைத்துக் கொள்ளு –

இப்படி அவனே உபாயம் என்று அத்யவசித்தால் லோகத்தை அளந்து கொண்ட
ஒரு திருவடியையும் -சகடம் முறிந்து விழும்படி உதைத்துத் தள்ளிப் பொகட்டதாய் -அழகிய பூ போலே அதி ஸூகுமாரமான
சிவந்த ஒரு திருவடியுமான இரண்டு திருவடிகளையும் சாஷாத் கரித்து அனுபவிக்கலாம் –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading