முதல் திருவந்தாதி- / பாசுரங்கள் -2-10 – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

கார்யாத் காரண அநு மானம் வேணுமோ -அவனுடைய அதி மானுஷா சேஷ்டிதங்கள் கிடைக்கச் செய்தே

இப்படி அநு மானப் பிரமாணம் கொண்டு வருத்தத்துடன் அவனுடைய பரத்வம் அறுதியிட்டு வேணுமோ
–அவன் விபூதி விஷயமாக பண்ணி அருளின உமிழ்ந்த பர்யந்த திவ்ய சேஷ்டிதங்கள்
ஓர் ஒன்றே அவனுடைய பரத்வத்தை அறுதியிட்டுத் தராதோ -என்கிறார் —

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-

என்று-இன்னமும் கடல் கடைந்த நுரையும் திரையும் மாறிற்றோ / கடைந்தது-கடையப் புக்கு கை வாங்கினவர்களை
ஈஸ்வரனாகக் கொள்ள வேணுமோ
எவ்வுலகம்-லோகாந்தரத்தையோ -அடிச்சுவடு தெரியாதோ -/
எவ்வுலகம் நீர் ஏற்றது–இன்று மஹா பலியால் நோவு படா நின்றதோ -அவன் அடிச்ச சுவடு மாறிற்றோ
-வாமனன் மண் இது என்று தோற்றுகிறது இல்லையோ –இவ்வுலகம் அன்றோ நீர் ஏற்றது -என்கிறது –
/ ஒன்றும் அதனை யுணரேன் -அன்று எங்கே போனேனோ
-இச் சேஷ்டிதங்கள் கிடக்க கார்யாத் காரண அநு மானம் பண்ணித்த திரியவோ நான் /
அன்றிக்கே -ஒன்றும் அதனை யுணரேன்-என்றது -அதி மானுஷ சேஷ்டிதங்களைக் கண்டு எத்திறம் -என்று மோஹிக்கிறார் ஆகவுமாம் –
/ யுணரேன்  நான் -அன்றைக்கே எனக்கு என்னவோ ஒரு விஷயம் தேடி அநர்த்தப் பட்டேன் /
ஒன்றையோ -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டது இல்லையோ -யுணரேன் -என்று இழந்த நாளைக்கு சோகிக்கிறார்-
என்று கடல் கடைந்தது எவ்வுலகம்-என்றது எல்லாச் செயல்களுக்கும் உப லக்ஷணம்
-என்று -என்று ஞான வைஸத்யம் சொல்லுகிறது -ஞானமாவது -யத்தேச கால சம்பந்தி தயா யாதோர்த்தர்தம் தோற்றிற்று
-தத் தேசகால சம்பந்தி தயா அவ்வர்த்தத்தை காட்டுகை இ றே
அன்று -இத்யாதி -நீ அணை அடைத்து திரு வில்லாலே அழித்து உண்டாக்கின கடலிலே -/
கண் படுத்த -கண் வளர்ந்த ஆழி -/ உடைத்து -சம்ஹரித்து -என்றுமாம் –
இது -இத்யாதி -இல்லாத அன்று ஸ்ருஷ்டித்து -பிரளயம் கொள்ள அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து
-பிரளயம் வருகிறது என்று ஏற்கவே திரு வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறப்பட விட்ட பார் –
இது -என்றது -தாம் இருந்த பூமி யாகையாலே / அது -என்றது அத்தோடு சம்பந்தித்த கடலாகையாலும்
அஸந்நிஹிதம் ஆகையாலும்–ஆழி அது -என்று அந்வயம்–
செய்யுடையவன் அன்றோ கிருஷி பண்ணுவான் –அல்லாதார்க்கும் ஈஸ்வரத்வ பிரசங்கம் யுண்டாகில்
இதிலே அவர்களுக்கும் ஒரு தொழில் யுண்டாகாதோ

————————————————

தன்னை அர்த்தித்த தேவர்கள் அபேக்ஷிதம் செயகைக்காக-அண்ணல் செய்து அலைகடல் கடைந்து -என்னும் படி
தன் ஸர்வேச்வரத்வம் தோற்ற கடல் கடைந்து அருளிற்று எத்தனை நாள் உண்டு என்றும்
-ஈஸ்வர அபிமானிகளான ருத்ராதிகளும் -திருவடி விளக்குவார் –விளக்கினை தீர்த்தத்தை சிரஸா வஹித்து பரிசுத்தரராம் படி
இந்திரன் பிரார்த்தனை சார்த்தமாக்கும் படி அர்த்தியாய்க் கொண்டு மஹா பாலி பக்கல் நீர் ஏற்று அளந்து கொண்டது எந்த லோகம்
–என்றும் அவ்வவோ செயல்களில் குமிழ் நீர் உண்ணக் கடவதான அந்த சேஷ்டிதத்தை ஏக தேசமும் யான் அனுசந்திக்க மாட்டுக்கிறிலேன் –
ராவணன் திருவினைப் பிரித்த அன்று -சீதா முக கமல சமுல்லாச ஹே தோஸஸ சே தோ-என்கிறபடியே
தத் உல்லாச அர்த்தமாக தத் சஜாதீயமான லவண சமுத்திரத்தை மலைகளால் அடைத்து -அங்கு உள்ளவர்கள் இங்கு வந்து நலியாத படி
தனுஷ்கோடியாலே உடைத்து -/ எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்த கடலாகும் அந்தக் கடல்
-ரஷ்ய வர்க்க சம் ரக்ஷணத்தில் நித்ய தீஷிதனாய் இருக்கிற நீ -அழிந்த அன்று ஸ்ருஷ்டித்து
-அவாந்தர பிரளயத்தில் இடந்து எடுத்து -மேல் பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே வைத்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு
-இப்படி உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுக் கிடக்கிற பூமியாகும் இந்த பூமி –
கண்டவாற்றால் தனதே உலகு என்றான் -என்கிறபடியே இவ்வோ திவ்ய சேஷ்டிதங்கள் தானே அவனே சர்வாதிகன்எ
ன்னும் இடத்தை காட்டுகிறது இல்லையோ -என்கை –
என்று -என்கையாலே திரையும் நுரையும் இப்போதும் மாறிற்று இல்லை -என்கை –
எவ்வுலகம் என்கையாலே அளந்த அடிச்சுவடு இப்போதும் அப்படியே எடுக்கலாய் இருக்கை –

—————————————————————————————

அப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல -அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —

எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் -அதிலே கிடந்தது -அலைகிறார்

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

நீரளவும்–ஆவரண ஜலம் வரையில் / சூருருவின்
பேய் அளவு கண்ட -தெய்வப் பெண்ணின் வடிவை யுடைய பேயான பூதனை யுடைய உயிருக்கு எல்லையைக் கண்ட
/ நீயளவு கண்ட நெறி -நீ செய்து முடித்த செயல்களை –

பாரளவும் ஓரடி வைத்து –பூமி உள்ள அளவும் ஓர் அடி வைத்து -/
ஓரடியும் -வைத்த அடியை -சொல்லவுமாம் -மற்றை அடியை யாகவுமாம் –
பாருடுத்த-நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –பவ்வ நீரோடை ஆடையாகச் சுற்றி -என்கிறபடியே
-பூமியை ஆவரித்த ஜலத்தை கடந்து -என்னவுமாம் –(கண்ணார் கடல் உடுக்கை -சிறிய திருமடல் )
-மேலில் அண்டத்தைச் சூழ்ந்த ஜலத்து அளவும் சென்றது என்னவுமாம் –
சூருருவின்-பேயளவு கண்ட பெருமான் –சூரும் அங்கும் தெய்வப் பெண் -என்கிறபடியே –
-விலக்ஷணமான வடிவு என்கிறது -பேயைத் தெய்வப் பெண் என்னலாமோ என்னில் -பிசாசோ –தேவ யோநயா -என்று
பிசாசையும் தேவ யோனியிலே கூட்டுகையாலே யாம் –
பேயளவு கண்ட-பேயாகப் பரிச்சேதித்த –பேயாகப் பரிச்சேதிக்கை யாவது -முடிக்கை என்று பொருளாம் இ றே
பெருமான் -பூதனையை முடித்து ஒரு சேஷியை ஜகத்துக்குத் தந்தாய் -ஸ்தந்யம் தத் விஷ சம்மிஸ்ரம் ரஸ்யம் ஆஸீஜ் ஜகத் குரோ –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி —-நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை –
அன்றியே -மஹா பலியாலே அபஹ்ருதையான பூமியை அளந்து உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
-என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு -பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி
என்னை விஷயீ கரித்த படி அறிகிலேன் என்னவுமாம் –
பாரளவும் -அளவிலே குசை தங்கின அருமை / உடுத்த நீர் அளவும் -ஆவரண ஜலம் / பேயளவு -எல்லை /
பெருமான் -அச் செயலாலே என்னை யுண்டாக்கினவன் –
நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை -உன்னை பரிச்சேதிப்பார் முடிந்ததே போம் இத்தனை
-தாயைப் பேயாக்கின படி -நீ அளவிட்டு வைத்த உபாயம் உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணுகிறாயோ

——————————————————–

அதி லோகமான அழகை யுடைய ஒரு திருவடியை -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறபடியே
பூமியுள்ள வளவே நிற்கும் படி குசை தாங்கி வைத்து
அத்தோடு துல்ய விகல்பம் பண்ணலாம் படியான மேலே எடுத்த மற்றொரு திருவடியும்
அண்ட கடாஹத்தைச் சூழ்ந்த ஆவரண ஜலத்து அளவும் செல்ல வளர்ந்ததது இ றே
தன் வடிவை மறைத்து தெய்வ நங்கையான யசோதை வடிவு கொண்டு வந்த பூதனையை-அவள் நினைவு அவளோடு போம் படி
அளவிட்டு முடித்த செயலாலே-ஜகத்துக்கு சேஷியான உன்னை நோக்கித் தந்தவனே –
நீ அளந்து கொண்ட வழியை நான் இன்ன படி என்று அறிய மாட்டுகி றிலேன் -இச்செயலை அனுசந்தித்தால்
அதிலே ஆழங்கால் படும் அது ஒழிய அளவிட்டு அனுபவிக்க மாட்டுகி றிலேன் -என்று கருத்து –
சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்கிறபடியே திவ்ய ஆகாரையான பேய் என்றபடி
பேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———————————————————————————————

நீர் அறிந்திலீர் ஆகில் -ஈஸ்வரன் அறியானோ -என்ன -எம்பெருமான் பிரசாதம் அடியாக பிறந்த அறிவுடைய நான் தடுமாறா நின்றேன் –
தபஸ் சமாதியாலே பெற்ற அறிவுடையவன் உபதேசிப்பதே -என்று ஷேபிக்கிறார்

அவன் அருள் அடியாக வந்த தெளிவால் குறைவற்ற நானும் உட்பட நீஞ்சிக் கரை ஏற மாட்டாமல் கிடந்தது அலையா நிற்க –
ஸ்வ யத்னத்தாலே வந்த ஞான சக்திகளை போரப் பொலிய நினைத்து —
ஒருவனை -ஒருவன் -அறிய ஒருப்படுவதே-என்ன மதி கேடனோ என்று ருத்ரனை ஷேபிக்கிறார்

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் ———–4—

நெறி வாசல்-உபாயமும் -ப்ராப்யமும் / நால்வர்க்கு-அகஸ்தியர் -தக்ஷர் -புலஸ்தியர் -கஸ்யபர் -என்னும் நால்வருக்கும் /
ஐந்து-பொறி வாசல்–ஐந்து ஞான இந்த்ரியங்களுடைய துவாரங்களில் யுள்ள -/ போர்க்கதவம் -அடைக்க ஒண்ணாத கதவுகளை –

நெறி வாசல் தானேயாய் நின்றானை–நெறியான வாசல் -உபாயமான வாசல் என்னவுமாம் –
நெறி என்று உபாயமாய் –வாசல் என்று உபேயத்தைச் சொல்லிற்றாய் –
உபாயமும் உபேயமும் தானேயாய் நின்றவனை -என்றுமாம் -இப்போது இது சொல்கிறது -பிராப்தி அவனை ஒழிய
உண்டாகில் அன்றோ அறிவும் அவனை ஒழிய உணர்வது என்கைக்காக-
யைந்து பொறி வாசல்–ஒன்றை அடக்கில் ஓன்று திறக்கும் -என்கை -நீரை அடைக்கப் புக்கால் ஓர் இடம் அடைக்க
ஓர் இடம் கோழைப் படுமா போலே –சஞ்சலம் ஹி மன-
போர்க்கதவம் சாத்தி -அடைக்கப் புக்கால் –ஒண்ணாத படி பொரா நின்ற கதவம் -/ சாத்தி -என்றது அடைக்கப் போகாமையாலே –
அறிவானாம்-என்று ஷேபிக்கிறார்
ஆலமர நீழல் -தான் தபஸ்ஸூ பண்ணின ஆழ மாற நிழலிலே – தான் பகவத் சம்பந்தம் பண்ணுவதற்கு முன்னே
சிஷ்ய பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே —
சர்வஞ்ஞனான அஜாத சத்ருவுக்கு ப்ரஹ்ம ஞானம் இன்றியே இருக்கிற -பாலாகி -உபதேசத்தால் போலே –
அறம் -ஸமாச்ரயண பிரகாரம் / நால்வர்க்கு -அகஸ்திய புலஸ்யாதி களுக்கு –
அன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன் —–தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
-சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே கதற அவன் கடவானோ -என்கிறார்
நெறி வாசல் -ஸ்வரூப அனுரூபமான உபாயம் என்றுமாம் –
யாய் நின்றானை–சித்தம்
சாத்தி-வருந்திச் சாத்தலாம் அத்தனை -தாளிட ஒண்ணாது-முகத்திலே அறையும் -நல்ல விஷயம் காட்டா விடில் குதறு கொட்டும்
–பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே -பண்ணா விடில் உபாயம் உண்டோ –
அறிவானாம்-பட பட என சிஷிஷு கொள்ளும் அத்தனை அல்லது அறிவுக்கு அடைவுண்டோ –
சீராமப் பிள்ளைக்கு பட்டர் -இதுவே தாரமாக இருக்கிற சாதுவை நாழியாதே என்று அருளிச் செய்தார் –
நால்வர்-தஷாதிகள் /அன்றுரைத்த-ஆலமர் கண்டத் தரன் —எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும்
-விஷ ஹரண சக்தியையும் கொண்டு இத் துறையிலே இழியப் போமோ –

——————————————————–

– வட வ்ருஷச்சாயையிலே பகவச் ஸமாச்ரயண ரூபமான தர்மத்தை -அகஸ்திய புலஸ்திய தக்ஷ மார்கண்டேயர்கள் ஆகிற நாலு சிஷ்யர்களுக்கு
பகவத் விஷயத்தில் உவ்வக் குழியிட இழிந்த அன்று பகவத் விஷயத்தை மறுபாடுருவும் படி தர்சித்துச் சொல்ல வல்ல பேரளவுடையார்
பண்ணக் கடவ உபதேசத்தைப் பண்ணி ஆச்சார்ய பதம் நிர்வஹித்தோம் என்று இருக்கும்
பெரிச அறிவாளனாய் -அமிருத மதன தசையில் பிறந்த ஹாலாஹலம் என்கிற விஷத்தை நாராயணன் ஆஜ்ஜையாலே
கழுத்திலே அடக்கிக் காள கண்டன் என்று விருது பிடித்துத் திரியும் பெரு மிடுக்கனாய்
-சம்ஹாரத்வ சக்தி யுக்தனாய் அபிமானித்து இருக்கிற ருத்ரன் –
ஸ்ரோத்ராதி ரூபேண ஐந்து வகைப் பட்டு இருப்பதாய் -விஷயங்கள் ஆகிற வரை நாற்றத்தை காட்டித் தன்னுடன்
சேர்ந்தாரை முடிக்கும் யந்த்ர கல்பமான இந்திரிய துவாரங்களில் –
அடைக்கப்புக்கவர்கள் முகத்தில் அறைந்து பொருகிற கதவை -வருத்தத்தோடு அடைத்து
-உபாயமும் தத் ஸாத்யமுமான உபேயமும் -அநந்ய ஸாத்யனான தானேயாய்க் கொண்டு நின்ற சர்வேஸ்வரனை
ஸ்வ யத்ன ஸித்தமான தன் ஞான சக்தியாதிகளைக் கொண்டு அறிவதாக இருக்கிறானாம் -என்ன அஞ்ஞனோ -என்று கர்ஹிக்கிறார் –
நெறி வாசல் என்று ஸ்வரூப அனுரூபமான உபாயம் -என்னவுமாம் –

—————————————————————————————————

நாட்டிலே ஈஸ்வரனாக நிச்சயித்து போருகிறவனை-அறிவானாம் -என்று நீர் சொல்லுகிற படி எங்கனே என்னில்
அவ்வீஸ்வரத்வம் போலே காணும் கோள் அறிவும் -என்கிறார் –
ஞானம் இல்லாமையால் இவன் ஐஸ்வர்யம் ஆறல் பீறல் -என்கிறார் —

நாடு அடங்க ருத்ரனே சர்வாதிகன் என்று அறுதியிட்டு -அவன் கால் கீழ்த் தலை மடுத்து -போற்றுவது புகழ்வதாய் யன்றோ போருகிறது-
நீர் அவனை ஷேபிக்கப் கடவரோ -என்ன -ருத்ரனுடைய அநீஸ்வரத்வமும்-எம்பெருமானுடைய ஈஸ்வரத்வமும்
தத் தத் நாம வாஹ நாதி ஸ்வரூபங்கள் கொண்டே அறுதியிடலாம் -என்கிறார் –

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று ——–5-

அரன் நாரணன் நாமம் -ஒருத்தனுக்கு நாமம் அரன் / ஒருத்தனுக்கு நாமம் நாராயணன் /
ஸ்ருஷ்டமான ஜகத்திலே தீம்பிலே கை வளர்ந்து தன்னை முடித்துக் கொள்ளப் புக்கால்
அத்தை சம்ஹரிக்கைக்காக அவன் கொண்ட வடிவுக்கு பிரகார பூதனான தான் அரனாகிறான் –
ஈஸ்வரன் கை யடைப்பாக கார்யம் செய்யும் இடத்திலும் அழியும் லீலா விபூதியில் இவனுக்கு அந்வயம் -மாநாவிக்கு நிர்வாஹகரானார் போலே
நாராயணன் -உபய விபூதியும் தனக்கு வாசஸ் ஸ்தானமாய் -அவற்றுக்கு ஆலம்பனமாய் இருக்கும் என்றிட்டு நாராயணன் -என்று திரு நாமம் –
ஆன் விடை புள்ளூர்தி-கைக் கொள் ஆண்டிகளை போலே ஒருத்தனுக்கு ஒரு எருது வாஹனம்–
ஒருத்தனுக்கு ஒரு வேதாத்மாவாய் இருந்துள்ள பெரிய திருவடி
உரை நூல் மறை-ஒருத்தனுக்கு உதகர்ஷம் சொல்லுவது ஆகமம் -ஒருத்தனுக்கு உத்கர்ஷம் சொல்லுவது அபவ்ருஷேயமான வேதம்
யுறையும் கோயில் வரை நீர்-தன் காடின்யத்துக்குச் சேர்ந்த மலை ஒருவனுக்கு வாசஸ் ஸ்தானம்
-தன்னுடைய தண்ணளி க்குச் சேர்ந்த நீர் ஒருவனுக்கு –
கருமம் அழிப்பு அளிப்புக்-ஒருவனுக்கு கர்மம் அழிக்கை -ஒருவனுக்கு கர்மம் ரக்ஷை -அழிக்கை என்றால் அது ஒன்றிலும் நிற்கும்
-அளிப்பு என்றால் அழிக்கும் அதிலும் செல்லும் –
கையது வேல் நேமி-ஒருவனுக்கு ஆயுதம் பிணம் தின்னிகளைப் போலே வேல் -ஒருவனுக்கு ஆயுதம் –
தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா -என்கிற ஆயுதம் –
நிலத்துக்குறி பகவன் பட்டரை பரம பதத்திலும் ஈஸ்வரன் சதுர் புஜனாய் இருக்கும் என்னும் இடத்துக்கு பிரமாணம் உண்டோ என்று கேட்க
-தமச பரமோ தாதா சங்க சக்ர கதாதரா-என்று பேசா நின்றது இ றே என்று அருளிச் செய்ய
-அவன் கோபிக்க -பிராமண கதி இருந்தபடி இது -ப்ரசன்னராம் அத்தனை இ றே -என்று அருளிச் செய்தார் –
உருவம் எரி கார் -ஒருவனுக்கு வடிவு எரி -சம்சார தப்தனாய் சென்றவனுக்கு நெருப்பிலே விழுமா போலே –
ஒருவனுக்கு வடிவு கார் -தப்தனாய் சென்றவனுக்கு ஒரு நீர்ச் சாவியிலே வர்ஷித்தால் போலே ஸ்ரமஹரமான வடிவு
மேனி  யொன்று —-இப்படி விசத்ருசமாய் இருக்கையாலே ஓன்று சரீரம் ஒருத்தன் சரீரி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா என்றால் -சர்வஞ்சாஸ்ய சரீரம் என்று தோற்றுமா போலே
-ஒருத்தன் சரீரம் என்றால் ஒருத்தன் சரீரி என்று தோற்றும் இ றே

அரன் -சிலரை நசிப்பிக்குமவன் ஒருவன் -/ நாரணன் –ததீயத்தை ஒழிய உளன் ஆகாதவன் ஒருவன் -நீ என்னை அன்று இலை –
ஆன் விடை -அநஸ் வர்ய ஸூசகம் /புள்ளூர்தி-கெருட வாஹனம் நிற்க -இவன் ஐஸ்வர்யா ஸூசகம்
நூல்-ஆப்தி கேட்க வேண்டில் விப்ர லம்பாதி தோஷ தூஷிதம்/ மறை-அபவ்ருஷேய நித்ய நிர் தோஷ ஸ்ருதி
வரை-காடின்யத்துக்கு சத்ருசமான இடம் /நீர்-தண்ணளிக்குத் தக்க இடம்
கருமம் அழிப்பு -நசிப்பிக்கை /அளிப்புக் -ரஷிக்கை
வேல் -காண வயிறு அழலும் /நேமி-விட்டாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
எரி-நெருப்பைத் தூவும் -/கார் -காண ஜீவிப்பிக்கும்
மேனி  யொன்று-ஓன்று சரீரம் என்றால் மற்று யவன் சரீரி என்று தன்னடையிலே வரும் இ றே -அந்தர்யாமி ப்ராஹ்மணத்தை நினைக்கிறார் –

அரன் -தன்னை ஒழிய ஒன்றை அழியாதே நிற்கில் ஈஸ்வரத்வம் இல்லை
நாரணன் -தன்னை ஒழிந்த வற்றில் ஓன்று வழியில் ஈஸ்வரத்வம் இல்லை
ஆன் -அநீஸ்வரத்வ ஸூ சகம் / புள் -ஈஸ்வரத்வ ஸூ சகம்
நூல் -சொன்னவனுக்கு ஆப்தி இல்லையாகில் அப்ரமாணம் / மறை -ஆப்த வாக்யமான பிரமாணம்
அழிப்பு அளிப்பு– இவற்றை ஸூ சிப்பிக்கிறது அரன் நாரணன் வாசக சப்தத்துக்கு வசன கிரியை போலே
வேல் -கலக்க வரிலும் -பயமாம் / நேமி -பிரிந்தாலும் இன்னார் என்று அறியேன் -என்னப் பண்ணும்
உருவம் எரி மேனி ஓன்று கார் மேனி ஓன்று -இங்கனம் சேர்ந்து இருக்க வேண்டாவோ -ஷேபம்-அறிவுடையார்க்குச் சொல்ல வேணுமோ சேர –

———————————————–

பிணம் சுடும் தடி போலே கண்டதடைய அழிக்கையே தொழிலாக உடையவன் என்னும் இடத்தை தெரிவிக்கிற ஹரன் -என்று ஒருவனுக்குப் பெயர் –
ஸமஸ்த வஸ்துக்களையும் உள்ளும்புறமும் ஓக்க வியாபித்து சத்தையையே நோக்கும் என்று அறிவிக்கிற நாராயணன் என்று ஒருவனுக்கு பெயர் –
அறிவு கேட்டுக்கு நிதர்சநமாகச் சொல்லப்படும் ருஷபமே ஒருவனுக்கு வாஹனம் -த்ரயீ மய-என்று சொல்லப்படுகிற பெரிய திருவடி ஒருவனுக்கு வாஹனம் –
ஒருவனைச் சொல்லும் பிரமாணம் வேத விருத்தார்த்தைச் சொல்லும் பவ்ருஷேயமான ஆகமம்
-ஒருவனைச் சொல்லும் பிரமாணம் நித்ய நிர்தோஷமாய் அபவ்ருஷேயமாய்-யதாபூதவாதியாய் -ஸ்வதபிரமணமான
வேதம் –
ஒருவன் நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் கடின ப்ரக்ருதியான -தன் பிரக்ருதிக்கு சேர்ந்த கைலாசம்
ஒருவன் உகந்து வசிக்கும் ஸ்தானம் தண்ணளி பண்ணி ரஷிக்கும் தன் படிக்குச் சேர்ந்த ஷீரார்ணவம்
ஒருவன் செய்யும் தொழில் கண்டது எல்லாவற்றையும் கண்ணற்று அழிக்கை –
ஒருவன் செய்யும் தொழில் ஸமஸ்த வஸ்துக்களையும் தண்ணளி பண்ணி ரஷிக்கை
ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் கொலைக்கு பரிகரமான மூவிலை வேல் -ஒருவன் கையில் ஏற்கும் ஆயுதம் ரக்ஷணத்துக்கு பரிகரமான அறம் முயல் ஆழி
ஒருவன் ரூபம் நெருப்பு போலே -ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத படி காலாக்கினி ஸந்நிபமாய் இருக்கும்
ஒருவன் வடிவு கண்டவர்கள் கண் குளிரும்படி காள மேகம் போலே இருக்கும் –
இப்படி பரஸ்பர விசத்ருசமான இரண்டு வஸ்துக்களில் ஓன்று சரீரமாய் இருக்கும் –ஓன்று சரீரியாய் இருக்கும் என்னும் இடம் அர்த்த சித்தம்
–சர்வாத்மா -சர்வ பூத அந்தராத்மா நாராயண -என்றால் சர்வஞ்சாஸ்யை சரீரம் என்று ப்ரதிகோடி வருகிறாப் போலே –
அன்றிக்கே இவர்கள் ரூபம் பார்த்தால் -எரி மேனி ஓன்று -கார் மேனி ஓன்று என்னவுமாம் –

————————————————————————

அவனை சரீரதயா சேஷம் என்றீ ராகில் ஆகில் நீரும் சேஷ பூதர் அன்றோ -நீர் உபதேசிக்கிற படி எங்கனே என்னில்
-எனக்கு அவன் பிரசாதம் அடியாகையாலே விஸ்ம்ருதி சங்கை இல்லை -என்கிறார் –

அவன் அறிவானாம் -என்று ருத்ரனை அறிவு கேடன் என்று ஷேபித்துச் சொன்னீர் –நீர் தாம் அறிந்து பிறர்க்கு உபதேசிக்கும் படி எங்கனே -என்ன –
சத்வம் தலை எடுத்த போது ஸ்வ யத்னத்தாலே சிறிது அறிந்தானாய் ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை எடுத்த போது ஈஸ்வரோஹம் -என்று இருக்கும்
அவனைப் போலேயோ நான் -நிர்ஹேதுகமாக அவன் தானே காட்டக் கண்டவன் ஆகையால் எனக்கு ஒரு விஸ்ம்ருதி பிரசங்கம் இல்லை -என்கிறார் –

ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை –6-

ஓன்று மறந்து அறியேன்–அன்று-கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்–கர்ப்ப வாசம் பண்ணா நிற்கச் செய்தே
-ஐயோ நோவு பட்டாயாகாதோ -என்று அவன் கடாக்ஷிக்க -அவனைக் கண்டேன் தம்முடைய விலக்காமையைக்
கொண்டு சாஷாத் கரித்ததாகச் சொல்லுகிறார்
திருவரங்க மேயான் திசை –ஓன்றும் மறந்து அறியேன்–பெரிய பெருமாள் இடையாட்டத்தில்-அவனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒன்றும் மறந்து அறியேன் –
ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ -ஸ்ரமஹரமான வடிவை யுடைய பெரிய பெருமாளை இன்று மறப்பேனோ
-இது தான் தேஹ யாத்ரையாய் பர ப்ரதிபாதன யோக்கியமான காலத்திலே மறப்பேனோ –
ஏழைகாள்-இவ்விஷயத்தில் புதியது உண்டு அறியாதவர்களே -என்கிறார் –
திசை என்றது -அவன் இடையாட்டத்திலே என்றபடி -அத்திக்கிலே என்று சொல்லக் கடவது இ றே
ஒன்றும் மறந்து அறியேன் -கண்ட அளவிலே ஒன்றும் மறந்து அறியேன் -உம்முடைய ஸுஜன்யமோ -என்னில் அன்று
-ஓத நீர் வண்ணனை -மறக்க ஒண்ணாத அழகு -/ ஏழைகாள்-மறக்க ஒண்ணாத விஷயத்தை விட்டு
நினைக்க ஒண்ணாத விஷயத்தைப் பற்றி நிற்கிறவர்களே –
அன்று -அறியாக் காலத்துள்ளே–ஜாயமானம் ஹி –கரு இத்யாதி -மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் மறந்திலேன்
-நினைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில் இன்று மறப்பேனோ
திருவரங்கமே யான் -இடையாட்டம் பர திசையிலேயோ-எல்லை நிலத்திலே –
அன்று-கருவரங்கத் துட்கிடந்து–திருவரங்க மேயான் திசை – கை தொழுதேன் கண்டேன்-ஓன்று மறந்து அறியேன்
-ஓதம் நீர் வண்ணனை நான்-இன்று மறப்பனோ வேழைகாள் -என்று அந்வயம்

——————————————————————

அறிவு நடையாடுகைக்கு யோயத்தை இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்தில் கிடந்தது ஜயமான காலத்திலே
இத்தலையிலே அபிரதிஷேதமே பற்றாசாக குளிராக கடாக்ஷித்து தன் படிகளைக் காட்டித் தருகையாலே
-சம்சாரிகளை தண்ணளி பண்ணி ரஷிக்கைக்காக தாமே கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளுகிற
பெரிய பெருமாளுடைய ஸ்வரூப ரூப குணாதி ஸமஸ்த ஸ்வ பாவங்களையும் சாஷாத் கரித்து அனுபவித்தேன்
-காட்சிக்கு அனந்தரமான அஞ்சலி பந்தம் முதலான வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன்
-மறுக்க இடம் அறும் படி தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள வற்றாய்-ஓதம் கிளர்ந்த சமுத்திர ஜலம் போலே
-இருந்து குளிர்ந்த வடிவு அழகை யுடையவனை ஏக தேசமும் மறந்து அறியேன் –
உலக இதர விஷயங்களில் மண்டித் திரிகிற அறிவு கேடர்காள்-மறைக்கைக்கு ஹேது உள்ள இடத்தில்-
மறவாத நான் நினைக்குக்கு ஹேது உள்ள இன்று மறப்பேனோ –

————————————————————————-

அல்லாத தேவதைகள் -சரீரதயா சேஷ பூதர் -நிர்வாஹ்யர் -அவனே சேஷி -நிர்வாஹகன் -என்று சொல்லும்படி எங்கனே-
–அவர்களும் ஒரோ தேசங்களுக்கு ஈஸ்வரருமாய் -அவர்களுக்குப் பிரதானமான செயல்களும் உண்டாயச் செல்லா நிற்க -என்ன
-அதுக்கும் அடி அவனே -அது அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு வர்த்தகம் -என்கிறார்

அப்படியாகில் நாட்டடங்க எம்பெருமானை விட்டுக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்து –
எடுத்து-திரிகைக்கு அடி என் என்ன உகவாதார் தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்குகள் -என்கிறார் –

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு ——-7–

திசையும் –திக்கோடு கூடின பூமியும் –
திசையுறு தெய்வமும்-அத்திக்கிலே வியாப்தரான தேவர்களும்
தெய்வத்-திசையும் கருமங்கள் எல்லாம்-அவ்வவ தேவதைகளுக்கு பொருந்தின கர்மங்கள் எல்லாம் -த்ரிபுரதஹநாதி
அசைவில் சீர்க்-அல்லாதாருடைய சீருக்கு அசைவு உண்டு போலே காணும்
கண்ணன் -தன்னை இதர சஜாதீயன் ஆக்குவது -தன்னுடைய இச்சையால்
நெடுமால் -யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஓதப்படும் பெரியவன்
கடல் கடைந்த -பெரியவன் என்று இராதே அரியன செய்து நோக்குமவன்
காரோத-வண்ணன் -நோக்காதே அழிக்கிலும் விட ஒண்ணாத வடிவு –
படைத்த மயக்கு —–பல சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியையும் கொடுத்து வைத்தால் தன் வழி வாராதவர்களை
அறிவு கெடுக்கும் படி –அல்லாதார் அறியா விடுவான் -தைவீ ஹ்யேஷா குணமயீ-ஸ்ரீ கீதை -7-14-
தெய்வத் திசையும் -ஸ்ருஷ்டியாதி கர்மங்கள் / அசைவில் சீர் -நித்தியமான கல்யாண குணங்கள் /
கண்ணன் நெடுமால் -ஆஸ்ரிதரை விடாத பெரும் பித்தன் /கடல் கடைந்த -அபேக்ஷிப்பாரே வேண்டுவது/
காரோத வண்ணன் -குண ஹீனன் ஆனாலும் விட ஒண்ணாதே
திக்கு பலஷிதையான பூமியும் -அவ்வவ திக்குகளில் வர்த்திக்கிற தேவதைகளும் -அத்தேவதைகளுக்குச் சேர்ந்த-ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களும் யாவும் –
அப்பஷயாதி தோஷங்கள் இன்றிக்கே-நித்தியமான கல்யாண குணங்களை யுடையனாய் -அக்குணங்கள் ப்ரேரிக்க வந்து
-கிருஷ்ணனாய் வந்து பிறந்த ஸுலப்யத்தை யுடையனாய் –
ஸூ லபனான இடத்திலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -தன் பெருமை பாராதே சரணம் புக்க
தேவர்களுக்காக உடம்பு நோவக் கடலைக் கடைந்து அபேக்ஷித சம்பவித்தானாம் பண்ணுமவனாய் –
ரஷியாதே அழியச் செய்யிலும் விட ஒண்ணாத கறுத்த கடல் போலே இருந்து குளிர்ந்த வடிவை உடையனானவன் –
தன் பக்கல் வாராதாரை அகற்றுகைக்கு உண்டாக்கின ப்ராமக வஸ்துக்களாய் இருக்கும் –மயக்கு -மயங்கப் பண்ணும் வஸ்துக்கள் –

———————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது ——–8-

முயங்க மருள்-முயங்கு அமருள்-சைன்யம் நிறைந்த பாரத யுத்த களத்திலே-

-இம் மயக்கு பொதுவோ என்னில் –ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும் நோக்கும் -என்கிறார் –

இப்படி அநாஸ்ரீதரை மயங்கப் பண்ணுகிற அளவன்றிக்கே-ஆஸ்ரீத விஷயத்தில்
ஸத்ய சங்கல்பனான தன் நிலை குலைந்து பக்ஷ பதித்து ரஷிக்கும் என்கிறார் –

மயங்க வலம்புரி வாய் வைத்து –அர்ஜுனன் தன்னை நிமித்தமாக நிறுத்தி யுத்தம் பண்ணப் புக்கால் -இவன் க்ரமத்தாலே
தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் போகாத அளவிலே -தன் திரு வாயிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைக்கும் அத்தனை
-அதுக்கு ஒருத்தராலும் இறாய்க்கப் போகாது -அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி அற எல்லாரும் மயங்கும் இத்தனை
–உகவையாலே மயங்குவாரும் -பயத்தாலே மயங்குவாரும் –யஸ்ய நாதேந தைத்யா நாம் பலஹானி ரஜாயத
-தேவா நாம் வவ்ருதே -தேஜ-பிரசாத ஸ் சைவ யோகி நாம் -ஸ்ரீ விஷ்ணு புரா-5-21-29-என்கிறபடியே
ச கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்–ஸ்ரீ கீதை -1-19-
அத்யைவ நஷ்டம் குருணாம் பலமிதி தார்த்த ராஷ்ட்ரா மே நிரே-தத் விஜயா காங்ஷிணே சஞ்சயோ-அகதயத் ஈத்ருசீ பவதியானாம் விஷய ஸ் திதி ரிதி
வானத்து –மறைக்க ஒண்ணாத நிலத்திலே
இயங்கு -ஒரு க்ஷணம் ஓர் இடத்தில் நில்லாதவனை
மெரி கதிரோன் தன்னை-குறித்துப் பார்க்க போகாதபடி கிரணங்களை விடா நின்றுள்ளவனை
முயங்க மருள்-தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது ——ஸத்ய சங்கல்ப என்ற ஸ்ருதிக்குச் சேருமோ -நமே மோகம் வஸோ பவேத் -என்று-
அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ -ஈஸ்வரத்துவத்துக்குச் சேருமோ
திருமாலே -ஸத்ய சங்கல்பத்தை அழிக்குமவனைச் சொல்லுகிறது -/
போராழி இத்யாதி -ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று சொன்ன பீஷ்மாதிகள் முன்னே ஆயுதத்தை எடுத்துக் பொருது –

மயங்க -எல்லார்க்கும் ஆஸ்ரீத விஷயத்திலே அவர்கள் சங்கல்ப்பித்த படியே நடத்தும் பக்ஷ பாதி
மயங்க -ஆயுதம் எடேன் என்று வைத்து அர்ஜுனன் அம்பால் தனித் தனியே கொல்லப் பற்றாமே ஒருகால் முழுக்காயாக அவிய
வானத்து -தூரத்து நிற்கிறவனை / இயங்கும் -சஞ்சரிக்கிறவனை -/ முயங்கு அமருள் -தனி இடத்தில் அல்ல -எல்லாரும் காண -எத்திறம் அறிந்தேன் –
திருமால் -நாட்டார் பரிமாற்றம் அல்ல -அவை அந்த புரத்தில் பரிமாற்றம்
போரிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தாலே கொன்றான் -ஆதித்யனை மறைத்தான் –ஸ்ரீ பீஷ்மரைத் தொடர்ந்தான் -/
முயங்கு அமருள்-நெருங்கிய யுத்தம் / தேராழி –ரதாங்கம்-திரு வாழி –

——————————————

துரியோத நாதிகள் பீதி அதிசயத்தாலே அறிவு அழியும்படியாக -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்திலே மடுத்தூதி –
மறைக்க ஒண்ணாத தன்னிலமான ஆகாசத்தில் -குறிக்க ஒண்ணாத படி இதஸ்தநஸ் சஞ்சரிக்குமவனாய்
-ஸ்வ தேஜஸால் சர்வரையும் அபி பவிக்கிற கிரணங்களை யுடையவனான ஆதித்யனை ஆஸ்ரீத விஷயத்திலே
ஓரத்துக்கு உவாத்தான பிராட்டியார் பக்கல் பெரும் பிச்சானவனே -சகல பிராணிகளும் யுத்த தித்ருஷயா வந்து
நெருங்கிக் கிடக்கிற சமரபூமியிலே பொருகைக்குப் பரிகரமான திரு வாழி யோடே கூடின திருக் கையாலே
பீஷ்மாதிகளைத் துரத்திப் பொருது ஸத்ய சங்கல்பனான நீ அத்தைக் குழைத்து திரு வாழி யாலே மறைத்து அருளிற்று எதுக்காக
–சர்வ சாதாரணமான உறவுக்குச் சேருமோ – ஸத்ய சங்கல்பனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ
-உன் பெருமைக்குப் போருமோ-இவை எல்லாவற்றையும் கால் கடைக் கொண்டு இங்கனே செய்து அருளிற்று எதுக்காக
-ஆஸ்ரீத விஷயத்தில் ஓரம் ஆகாதே -என்று வித்தாராகிறார் -தேராழி –ரதாங்கம்-

————————————————————————

ஆஸ்ரிதரை ஒழியவும் ஜகத்துக்கு சத்தா நாஸம் வரில் பரிஹரிக்கும் என்கிறார் –

இவ்வளவு அன்றிக்கே ஆபத்து முதிர்ந்த அளவில் -ஆஸ்ரிதர் -அநாஸ்ரிதர் -என்று தரம் பாராதே-இருந்ததே குடியாகத்
தன்னை அழிய மாறி நோக்கும் ஸ்வபாவன் -என்கிறார் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே விரி தோட்ட
சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க
மாவடிவின் நீ யளந்த மண் ———9-

விரி தோட்ட-சேவடியை-மலர்ந்த இதழ்களை யுடைய தாமரையைப் போன்ற சிவந்த திருவடியை -/
விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் – பொரா நின்ற கோட்டை யுடைத்தான-ஏனமாய்-அத்விதீயமான ஏனமாய்
-ஜாதிச் செருக்காலே பூமியை உழுது கொடு திரியா நிற்கும்
புக்கு இடந்தாய்க்கு அன்று உன்-ஒரு கோட்டின் மேல் கிடந்த தன்றே –பிரளயம் கொண்டு உழுகைக்கு பூமி இல்லாத அன்று
தன் திருவயிற்றிலே வைத்து நோக்கும் -இத்தால் சொல்லிற்று யாயிற்று உதாரனாய் இருப்பான்
ஒருவன் நாலு பேருக்குச் சோறிட நினைத்தால் நாற்பது பேருக்கு இட்டு மிகும்படி சோறு உண்டாக்குமா போலே
-ரஷ்யத்தின் அளவன்று இ றே ரக்ஷகன் பாரிப்பு –
விரி தோட்ட-சேவடியை நீட்டித்-விரியா நின்ற தோடுகளை யுடைத்தான தாமரை போலே இருந்துள்ள சேவடியை நீட்டி
-விரிதோட்ட -என்று சம்புத்தி யாகவுமாம் -திரு மேனியில் ஒளி விரியும் தோட்டை யுடையவனே –
திசை நடுங்க-திக்குகள் எல்லாம் நடுங்க –
விண் துளங்க-விண்ணில் உள்ள தேவ ஜாதி எல்லாம் நடுங்கும் படியாக
மாவடிவின் நீ யளந்த மண் —-பெரிய வடிவைக் கொண்டு நீ அளந்த மண் –
-ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் -சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –

பொரு-அபன்னராய் விலக்காதார்க்கும் -தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளுவார்க்கும் செய்யும் படி -/
விரி தோட்ட-விரிகிற தோட்டை உடையவை போலே இருந்துள்ள –
விண் துளங்க -அபி மானிகளான தேவர்கள் -நடுங்க
பெரிய வடிவாலே அளந்த மண் -திரு எயிற்றுக்கு ஒரு நீல ரத்னம் போலே இருப்பதே -என்ன ஆச்சர்யம் –
——————————————–
விகசிதமான இதழையுடைய தாமரை போலே சிவந்த திருவடிகளை வளர்த்து திக்கு பலஷிதையான பூமியில் உள்ளார்
நடுங்கவும் உபரிதன லோகத்தில் உள்ளார் நடுங்கவும் பெரிய வடிவை யுடையையாய்க் கொண்டு நீ அளந்து
கால் கீழ் இட்டுக் கொண்ட பூமியானது -நில மகள் முலையில் குங்குமத்தோடே நிலத்தோடு வாசி அற எங்கும்
ஜாதி உசிதமான செருக்காலே பொருது கொடு வருகிற கொம்புகளை யுடைத்தாய் அழகுக்கு அத்விதீயமான
வராஹ வேஷத்தை உடையனாய்க் கொண்டு -பிரளய ஜலத்திலே முழுகி அண்ட பித்தியினின்றும் இடந்து எடுத்துக் கொண்டு
ஏறின உனக்கு அக்காலத்தில் உன் எயிற்றின் ஏக தேசத்திலே ஒரு மறுப் போலே கிடந்தது ஓன்று அன்றோ –
ஆபத்து வந்தால் தலையால் நோக்குதல் –தலையிலே காலை வைத்து நோக்குதல் -செய்யுமவன் அன்றோ நீ
-ரஷ்ய வர்க்கத்தை நோக்கும் அளவில் உனக்கு ஒரு நியதி உண்டோ -என்று உகந்து அனுபவிக்கிறார்
விரி தோட்ட என்று விஸ்திருதமாய் பிரகாசிக்கிற திருத் தோடுகளை உடையவனே என்று சம்போதம் ஆக்கவுமாம் –

————————————————–

சேராதன செய்தும் ஆஸ்ரிதரை நோக்குமவன் -என்கிறார்-

இப்படி பெரிய வடிவைக் கொண்டு சிறிய செயலைச் செய்து நோக்கும் அளவு அன்றிக்கே -சிறிய வடிவைக் கொண்டு
பெரிய செயலைச் செய்து நோக்கிலும் நோக்கும் -என்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——-10-

மறி கடலும்-அலை எறியும் சமுத்ரங்களும்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு–எண்ணிக்கைகளை எல்லை கண்ட -எண்ணிறந்த கல்யாண குணங்களையும்–திருச் சக்கரத்தையும் யுடைய உனக்கு –

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்–ஆதாரமான மண்ணும் -அதற்கு உறுதியான மலையும் –வேலியான கடலும் –
-தாரகமான காற்றும் –அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும் -விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் –
-ஐந்தர ஜாலிகர் செயல் போலே பொய்யன்று இது -ஆப்தரான ஆழ்வார்கள் மெய்யென்பர்
எண்ணில்-ஆராயில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு -எண்ணிறந்த குணங்களையும் திரு வாழி யையும் யுடையனான யுனக்கு
அலகாவது -பரிச்சேதகம் இ றே -அத்தை அளவு கண்ட சீர் -அபரிச்சேதயமான அலகை பரிச்சின்னமாக்கின சீர்
அன்றிவ்வுலகளவும் உண்டோ வுன் வாய்—-இந்த ரக்ஷணத்தில் த்வரை தான் சிறிய வடிவில் பெரிய ஜகத்தை வைத்தான் –
மண்ணும் இத்யாதி -சேராச் சேர்த்தியானவை அடைய மெய் என்பர் -இந்திர ஜாலம் என்னப் பெற்றதோ -ரிஷிகள் கூப்பிடா நிற்பார்கள்
எண்ணில்-அலகளவு கண்ட-எண்ணை அளவு படுத்தும் குணங்கள் தாதூ நாமிவ சைலேந்தரோ-
-குணா நாமா கரோ மஹான் -கிஷ் -15-21-/ பஹவோ ந்ருப கல்யாண குணா -அயோத்யா -2-26-
ஆழி யாய்க்க்கு-குணங்களும் அப்படியே சீரிய கை / வுலகளவும் உண்டோ-ரக்ஷகத்வ பாரிப்புக்கு அடைவில்லாமை –

————————————————–

சர்வ சாதாரணமான பூமியும் -அதுக்கு தாரகமான குலா பர்வதங்களும் அத்தைச் சூழ்ந்து கிடந்து அலை எரிகிற சமுத்ரங்களும்
-தத் அந்தர்வர்த்திகளுக்கு உஸ்வாசாதி ஹேதுவான காற்றும் -அதுக்கு அவகாச பிரதமான ஆகாசமும் -இவற்றை அடையத்
திருவயிற்றிலே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்து அருளின இத்தை -பரமார்த்தம் என்று உன் சக்தி சாமர்த்தியத்தை
தறை காண வல்ல வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள் –
உன்படியைப் பரிச்சேதித்து அநுஸந்திக்கும் அளவில் அளவிடுகைக்கு பரிகரமான ஆயுதங்களையும் பரிச்சேதித்து எல்லை
கண்டு இருக்கிற அசங்க்யாதமான கல்யாண குணங்களையும் –
திரு வாழியையும் யுடையையான உனக்கு இவற்றை எடுத்துத் திரு வயிற்றிலே வைத்து அருளின அன்று
இஜ் ஜகத்தோ பாதியும் பெருமை யுடைத்தோ உன்னுடைய திருப் பவளமானது-இந்த சிறிய திருப்பவளத்தைக் கொண்டு
பெரிய ஜகத்தை அமுது செய்து அருளின இவ்வாச்சர்யம் என்னாய் இருக்கிறதோ -என்று ஈடுபடுகிறார் –

————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: