முதல் திருவந்தாதி– பாசுரங்கள் –61-70- -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

ஹிதத்தில் அறியாததுக்கு-தம் தாமுடைய உத்பத்தியில் வருத்தி அறிவுணர்த்துகிறார் –

அவனை ஒழிய இவை தம் தாமுக்கு ஹிதம் அறியாது என்றீர் -அவன் தான் இவை தன்னை நோக்க வேணும் என்கிற
ஹேது என் என்னில் பெற்றவனை ஒழிய வளர்ப்பார் உண்டோ என்கிறார் –

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

புந்தியிலாய புணர்ப்பு –சங்கல்பத்தினால் உண்டாக்கிய ஸ்ருஷ்ட்டி –

உலகும் உலகிறந்த ஊழியும்-லோகம் அடங்க தானே சேஷித்த காலமும் –
ஒண் கேழ்-விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்–அழகிய நிறத்தை யுடைய அலை எறியா நின்ற கடலும்
லோகத்துக்கு ஆதாரமான மலையும் –
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்-புந்தியிலாய புணர்ப்பு ——-இவ் வோக்கமான கடலிலே லோகம் அலைந்து
நோவு படப் புக்கவாறே -ஐயோ நோவு படா நின்றதே -என்று அதுக்குத் துக்கித்த பிராட்டிக்கு பிரியமாக தன் சங்கல்ப ஞானத்தால் ஸ்ருஷ்டித்து
தெளிந்து அழகியதாய் சலிக்கின்ற கடலும் –பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கும் வெற்பும் –
திருமால் இத்யாதி -தாய்க்கு பிரியமாக பிரஜைகளை நோக்கும் அத்தனை இறே -இத்தலை அறிந்தோ ஸ்ருஷ்டித்தது -விலக்காமையே உள்ளது –

————————————————————–

பூமியாதிகளான லோகங்களும் -லோகங்கள் எல்லாம் கால சேஷமாம் படி அமிழ்ந்து கிடக்கிற சம்ஹார காலமும்
-அழகிய நிறத்தை யுடைத்தாய் அலை எறியா நின்றுள்ள ஸ்ரமஹரமான கடலும் -பூமிக்கு ஆணி அடித்தால் போலே
இருக்கிற குல பர்வதங்களும் -பின்னையும் லோகத்தில் யுண்டான சிவந்த நிறத்தை யுடைய தேஜஸ் பதார்த்தங்களும்
வாயுவும் ஆகாசமும் -இவை எல்லாம் பிராட்டிக்கு உகப்பாக ஜகத் ஸ்ருஷ்டியில் ஒருப்பட்ட
ஸ்ரீ யபதி யுடைய சங்கல்பிதமான வகுப்பை யுடையன —

——————————————————————————————————-

உத்பன்னமான பின்பு இவரதோ தம் காரியத்துக்கு கடவராய் இருக்கிறது -என்கிறது -களை பிடுங்கும்படி –

இவற்றை உண்டாக்கித் தான் கடக்க இருக்கை அன்றிக்கே இவற்றைக் களை பிடுங்கி நோக்குவானும் அவனே என்கிறார் –

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன்கணையான் தோள் ——-62-

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து-ஓன்று என்னலாம் படி நிர்விவரமாய் இருந்த மருதினிடை போய்
தர்ச நீயமான குருந்தத்தைச் சாய்த்தும்
மண மருவ மால் விடை யேழ்   செற்று–நப்பின்னை பிராட்டி யுடைய பாணிக்ரஹண மங்களமானது தலைக் கட்டும் படிக்கு
ஈடாக பெரிய எருதுகள் ஏழையும் செற்று
கணம் வெருவ–சங்கைஸ் ஸூராணாம்–என்கிறபடியே அனுகூலரோடு பிரதிகூலரோடு வாசி யற இது என்னாகப் புகுகிறதோ
-என்று வெருவும் படிக்கு ஈடாக
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
—–ஏழு உலகையும் அநாயாசேன கடந்தனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனாவும் –
சூழரவப் பொன்கணையான் தோள் -பரந்து மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைத்தாய் இருந்துள்ள திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவன் –
பூங்குருந்தும் -பூவைக் காட்டி அந்நிய பரதை பண்ணி வஞ்சிக்கப் பார்க்கை -/ மணம் இத்யாதி -தனக்கு வந்த கர்மத்தை தீர்த்த படி
ஏழு உலகு இத்யாதி -பிராட்டிக்கு செய்யும் செயலை இந்த்ரனுக்குச் செய்கை / எண்டிசையும் போயின -திக்குகளை வெளியடக்கை
சூழ் அரவு இத்யாதி -இப்படி படுக்கையிலே கண் வளர பெறாதே-ஆழமானது திரிவதே
பாண்டரஸ் யாத பத் ரஸ்ய சாயாயாம் ஜரிதம் மயா–சிம்ஹாசனத்தில் இருக்க அவசரம் பெற்றிலன்-
-இக்காலத்தில் இறே நிழலிலே முத்துக் குடை இடுவது

————————————————————-

இடைவெளி யறப் பொருந்தி நின்ற யாமளார்ஜூநங்கள் நடுவே ஊடறுத்துக் கொண்டு தவழ்ந்து போய் இலையும் கொம்பும்
தெரியாத படி பூத்துக் கிடந்த குருந்தத்தை தள்ளிப் பொகட்டு பிராட்டியைக் கைப் பிடிக்கை யாகிற கல்யாணம்
தலைக் கட்டுகைக்காகப் பெரிய வடிவை யுடைய ருஷபங்கள் ஏழையும் முடித்து -சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே
அனுகூல பிரதிகூல விபாகம் அற சர்வ பிராணி கணமும் என்னாகத் தேடுகிறதோ என்று நடுங்கும் படி சப்த லோகங்களையும்
வருத்தம் அற அளந்து கொண்டனவும் -எட்டுத் திக்குகளிலும் போய் வியாபித்தனவும் -விஸ்திருதனாய்-
மென்மை குளிர்த்தி நாற்றங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் ஆகிற ஓங்கிய திருப் படுக்கையிலே கண் வளர்ந்து
அருளின சர்வேஸ்வரனுடைய திருத் தோள்கள் கிடீர் -அந்த படுக்கையும் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களை செய்தான் -அப்படுக்கையில் கண் வளர பெறாமல் இப்படி அலமந்து திரிவதே என்று வயிறு பிடிக்கிறார் –

—————————————————————————————————————-

இப்படி அவன் ஸூ லபன் என்று அறிந்து அனுசந்தித்த பின்பு என்னுடைய இந்திரியங்கள் அவனை அல்லது அறிகிறது இல்லை –

இப்படி இருக்கிற அவன் பக்கலிலே என்னுடைய சர்வ இந்திரியங்களும் ப்ரவணம் ஆயத்து-நானும் பிரவணன் ஆனேன் என்கிறார்

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

தோளவனை யல்லால் தொழா –நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும் என் தோளானது அவனை அல்லது தொழுகிறது இல்லை –
என் செவி யிரண்டும்-கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –என் செவிகள் உறவானவனுடைய இனிய மொழியைக் கேட்டிரா நின்றது
-நா நாளும்-என்னுடைய நாக்கானது எப்போதும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே–கோள்-என்று ஒளிக்கும்-மிடுக்குக்கும் பேர்
-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலை கதா மநி-என்னும் படியே அனந்த சாயியான சர்வேஸ்வரனையே கூறும் அத்தனை
நாணாமை நள்ளேன் நயம்  —–ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –
-ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் -அவன் ரக்ஷகனாகவுமாம் தவிரவுமாம் –
அவன் தான் தனக்குப் பகை என்னலாம் படி இருந்தாலும் என் செவி தானும் கேட்பது -ஆசைப்படும் விஷயங்கள் –
நாணாமை நள்ளேன்-ஆண்பிள்ளை சோற்றான்வியை ஆசைப்பட்டவனைப் போலே உணர்ந்தவனுக்கு லஜ்ஜிக்க வேணும்
கோள் -பிராட்டிக்கு தனக்கும் கிடைக்கைக்கு யுண்டாகை

———————————————————————-

என்னுடைய தோள்களானவை நான் வேறு சிலரைத் தொழு என்னிலும் அந்த சர்வேஸ்வரனை அல்லது தொழுகிறனவில்லை —
என்னுடைய செவிகள் இரண்டையும் நிருபாதிக பந்துவான அவனுடைய ஸம்ஸரவே மதுரம் -ஆன பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் நாவானது -சர்வ காலமும் மிடுக்கை யுடைய திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய
சர்வேஸ்வரனுடைய ஆபரண த்வனியை யுடைத்தான -திருவடிகளையே சொல்லா நிற்கும் –
நாட்டார் விரும்பி மேல் விழுகிற விஷயங்களை அவர்களில் வியாவருத்தனான நான் நிர்லஜ்ஜனாய்க் கொண்டு செறியேன்-
ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும் படி காணும் விஷய ப்ராவண்யத்தின் பொல்லாங்கு இருப்பது –

———————————————————————————————————

பிராப்தத்தைச் செய்து அபிராப்தத்தைச் செய்யேன் என்று இருக்கிற என் பக்கல் பாபத்துக்கு வரப் போமோ -என்கிறார் –

உமக்கும் உம்முடைய கரணங்களுக்கும் பகவத் விஷயத்திலே இதர விஷயங்களைக் கடைக் கணியாத படி ப்ராவண்யம்
உரைத்தாலும் துர்வாசனையாலே அவை வந்து மேலிடில் செய்வது என் -என்ன -நான் நின்ற நிலை
இதுவான பின்பு எங்கனே அவை வந்து மேலிடும் படி -என்கிறார் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

நயவேன் பிறர் பொருளை -பிறர் பொருளை ஆசைப்படேன் –த்ரவ்யத்துக்கு உத்கர்ஷமாவது-த்ரவ்யம் தன்னுடைய
நன்மையாலும் -உடையவனுடைய நன்மையாலும் —
த்ரவ்யம் பரிணாமியான அசித் அன்றிக்கே ஆத்ம த்ரவ்யமாய் இருந்தது -யஸ் யாத்மா சரீரம் –பதிம் விஸ்வஸ்ய
–என்று ஓதப்படுகிறவன் உடையவன் —
உத்க்ருஷ்டமான ஆத்மாவை -என்னது -என்று இரேன் –
நள்ளேன் கீழரோடு–ஆத்மாவை என்னது என்று இருக்குமவர்களோடு -இவர்களே கீழார் ஆகிறார் -அவர்களோடு கிட்டேன்
-தங்கள் படி ஆக்கிக் கொள்வர் என்று
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் -உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்
வியவேன்-திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்–ஸ்ரீ யபதி யைக் கண்டு அல்லது விஸ்மயப் படேன் -/
அவனை அல்லது வேறு சிலரை தெய்வம் என்று ஸ்துதியேன் / வியவேன்-திரு மாலை-ஸ்ரீ யபதியினுடைய ஐஸ்வர்யத்தை அர்த்த வாதம் என்று இரேன்
வருமாறு என் என் மேல் வினை  —-அவசியம் அநு போக்தவ்யம்– என்கிற வசனத்தைக் கொண்டு என் பக்கலிலே வர போமோ பாபத்துக்கு -என்கிறார் –
க்ருதக்ருத்யன் என்கிறார் –எம்பெருமான் விரும்பும் ஆத்மாவை அபஹரியேன் -ராவணன் செயலைச் செய்யேன்
-கீழார் அவனுக்கு கூட்டுப்படும் மாரீச பிரப்ரு த்திகள்/ உயர்ந்தவர் விச்வாமித்திராதிகள் -மஹா தமாநசது –
-பெரியோர் -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய-ப்ரஹ்மாதிகளைக் கண்டால் அடுப்படைக் கல்லாக நினைத்து இருக்கும் அத்தனை –
திரு மாலை யல்லது வியவேன் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  –அவசியம் அநு போக்தவ்யம்–என்கிறவை என்னை நலியவோ –

————————————————————————-

உத்தம புருஷஸ் த்வந்ய–என்கிறபடியே சர்வ விசஜாதியனான சர்வேஸ்வரனுடைய ஆத்ம த்ரவ்யத்தை என்னது என்று விரும்பேன் –
பிறரதான ஆத்மாவை என்னது என்று இருக்கும் தாழ்ந்த சம்சாரிகளோடு செறியேன் -உத்துங்கமான ஆத்ம வஸ்து
சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –
சர்வாதிகனான ஸ்ரீ யபதியை ஒழிய புறம்பே சிலரை ஆசிரயணீய தேவதைகள் என்று புத்தி பண்ணி வாய் விட்டுப் புகழேன்
-இவ்வாகாரங்கள் நமக்கு உண்டாயத்தே என்று ஆச்சர்யப் படேன் -இப்படியான பின்பு பகவத் அனுபவ பாத்ரரான நம்முடைய
மேல் தன் நிக்ரஹ ரூபமான பாபம் வந்து மேலிடும் படி எங்கனே –திருமாலை அல்லது வியவேன்–
அவனை அல்லது தைவம் அன்று ஏத்தேன்–என்னவுமாம் –

—————————————————————————————————————

இது எனக்கு ஒருவனுக்குமே அன்று -அவனை ஆஸ்ரயித்தார் எல்லார்க்கும் ஒக்கும் என்கிறார் –

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

வினையால் அடர்ப்படார் -பாபத்தால் அடர்க்கப் படார்
வெந்நரகில் சேரார்-பாப பலமான நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் -தர்ம புத்ரன் நன்றாக தர்சனம் பண்ணினவோ பாதியும் கூடாது இவர்களுக்கு
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே அறியப் போகாதவனை
சேயானை -அதுக்கு அடி தூரஸ்தனாகை
ஆயிரம் பேர்ச் செங்கட்-கரியானைக் கை தொழுதக்கால்   ——தான் கொடுத்த அறிவை யுடையார்களுக்கு
-ஏத்துகைக்கு ஆயிரம் திரு நாமத்தையும் -கண்டு அனுபவிக்கைக்கு ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனை அஞ்சலி பண்ணினால்
வினையால் அடர்ப்படார்-என்னைப் போல் விதேய கரணம் இன்றியே பாவனம் என்று ஆஸ்ரயித்ததற்கு பாபம் போம்
வினை -இங்கு அனுபவிக்கும் பாப பலம் அனுபவியார் / வெந்நரகு போய் அனுபவிக்கும் பாப பலம்
தினை -அஸத்யாபவத்தாலே
நினைதற்–கரியானைச்–ஸ்வ யத்னத்தாலே நினைப்பதற்கு அரியானை / சேயானை -இவன் குற்றம் அன்று -வஸ்து ஸ்வ பாவம்
/ ஆயிரம் இத்யாதி -தானே காட்டுவார்க்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகை /
கை தொழுதக்கால் -பாலைக் குடிக்க நோய் போம் -வகுத்தது செய்ய அமையும் –

——————————————————————–

ஸ்வ யத்னத்தாலே அளவிட்டு நினைக்கைக்கு மிகவும் அரியனாய் மநோ ரத பதத்துக்கு மிகவும் எட்டாத படி அதி தூரஸ்த-தன்னாய்
தன் அருளாலே அறிந்து அனுபவிக்க இழிந்தார்க்கு இழிந்த இடம் எங்கும் துறையும் படி குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமங்களை யுடையனாய் வாத்சல்ய ஸூ சகமாய்ச் சிவந்த திருக் கண்களையும் –
அதுக்குப் பகைத் தொடையான கறுத்த வடிவையும் யுடையனான சர்வேஸ்வரனை அஞ்சலி பிரணாமாதி அனுவர்த்தனங்களைப் பண்ணி
ஆஸ்ரயித்தால் புண்ய பாப ரூப கர்மங்களாலே நெருக்குப் படார் -அதுக்கு பலமாக வரக் கடவதாய் அதி குரூரமான
சம்சாரம் ஆகிற நரகத்திலே சென்று கிட்டார் –ஏக தேசமும் துர்மார்க்கங்களிலே போகார்-

———————————————————————————————————————————

அறிவுடையார்களாய் இருப்பார்கள் ஆகில் பஜனீயன் அவனே கிடீர் என்கிறார்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

உலகம் -உயர்ந்தோரான முமுஷுக்கள் –

காலை எழுந்து உலகம் கற்பனவும் –ஸத்வ உத்தரமான காலையில் எழுந்து இருந்து -மோக்ஷ இச்சை யுடையவர்கள் –கற்பனவும் –
கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்
வேலைக் கண்–ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்–இவற்றினுடைய ரக்ஷணத்துக்காக திருப் பாற் கடலிலே
கையும் திருவாழியுமாய்க் கிடக்கிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே –
பேராழி கொண்டான் பெயர் —-சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களையே இவர்களுடைய ஸ்ரவணத்துக்கும் ஆனந்தத்துக்கு விஷயமாவது –
காலை -சர்வ உத்தரமான காலம் / வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே – கரையை யுடைத்தாய் –ஒப்பில்லாத கடல் /
பேர் ஆழி கொண்டான் -இவர்களை ரஷிக்கைக்காக உருவின பத்திரமும் தானுமாய் இருக்கை –கை கழலா நேமியான்

——————————————————————–

கிளர் ஒளி இளமை -என்கிறபடியே பஜன அனுரூபமான கரண பாடவமுள்ள பால்ய அவஸ்தையில் ஆஸ்ரயண
உன்முகராய்க் கொண்டு கிளர்ந்து லோகம் அடங்க அப்யசிக்குமவையும்-ஞாதவ்யர்த்தங்களை ஓர் ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு
அவற்றை அலகலகாக அறிந்து இருப்பார்களாய் -அத்தாலே வந்த மிக்க உயர்த்தியை யுடையரான பரம வைதிகர் அடங்கலும்
அறிவின் பலமாக சாஷாத் கரிக்க ஆசைப் படுவனவும் -கரையோடே கூடி இடமுடைத்தாய் -அத்விதீயமான கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன் திருவடிகளே -அதுக்கு சாதனமாக ஸ்ரவணம் பண்ணுவதும் மனனம் பண்ணுவதும்
-ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான சர்வேஸ்வரனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்கள்
-பேர் ஆழி கொண்டான் -பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை எடுத்துக் கொண்டு இருக்கிறவன் என்னவுமாம் –
-அப்போது ஓர் ஆழியான் என்றது அத்விதீயமான திரு வாழியை யுடையவன் என்று கொள்வது –

—————————————————————————————————————

மோக்ஷ இச்சை யுடையவர்களுக்கும் அறிவு தலை நின்றவர்களுக்கும் அவனுடைய திருவடிகளை ஏத்துவது-
-அவனுடைய திரு நாமங்களையே ஏத்துவது என்று சொல்லிற்று -ஞானத்துக்கு அவனே விஷயம் ஆகையால் என்கிறது –

இப்படி அறிவில் தலை நின்றவர்கள் அவனை ஆசைப்படுகைக்கு அடி
அறிவுக்கு கந்தவ்ய பூமி ஸ்ரீ யபதி அல்லாது இல்லாமையாலே-என்கிறார் –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு –ஆறானது பூர்ணமாய் சலியா நின்ற கடலையே நோக்கா நின்றது
-ஆறு கடலை நிறைக்கைக்கு அன்று புகுகிறது -புக்கு அல்லது தான் தரிக்க மாட்டாமை
ஒண் பூ -உயரும் கதிரவன் நோக்கும்–தாமரைப் பூ வானத்து தூரஸ்தன் ஆகிலும் ஆதித்யனுக்கு அலரும் அத்தனை -அக்னி யாதிகளுக்கு அலராது
-உயிரும் -தருமனையே நோக்கும் –யமனைக் கிட்டி யல்லது வேறு ஓர் இடத்திலே புக ஒண்ணாது
ஒண் தாமரையாள் கேள்வன் -ஒருவனையே நோக்கும் உணர்வு –ஞானம் ஆகில் ஸ்ரீ யப்பதியை அறியும் அத்தனை
மற்று ஒன்றை அறியாது –தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னும் படியே

————————————————————————-

காற்று வளத்திலே கொந்தளித்துக் கிளரக் கடவதாய் -பரப்பை யுடைத்தான கடலை ஆறானது நோக்கும்
-அழகிய தாமரைப் பூவானது உச்ச ஸ்தல வர்த்தியான ஆதித்யனையே நோக்கா நிற்கும்
-பகவத் பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் சரீர விஸ்லேஷ அனந்தரத்திலே தர்ம ராஜாவான யமனையே சென்று கிட்டா நிற்கும்
-இவை இவை நியதமானால் போலே ஞானமானது அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய
பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான சர்வேஸ்வரன் ஒருவனையே யுமே சென்று பற்றா நிற்கும்
-ஞானம் ஆகில் ஸ்ரீ யபதியைப் பற்றி அல்லது நில்லாது என்கை -பகவத் வியதிரிக்த விஷயங்களை பற்றி பிறக்கும் ஞானம்
எல்லாம் அஸத் கல்பம் -தத் ஞானம் அஞ்ஞானம் அது அந்யதுக்தம் –வித்யா அன்யா சில்பை நை புணம்–என்னக் கடவது இ றே

—————————————————————————————————————–

கீழ் ஞானத்துக்கு விஷயம் அவன் என்றது -உணர அரிது -என்கிறது இப்பாட்டில் –

இப்படி அறிவுக்கு பர்யவசான பூமி -அவன் அல்லது இல்லையாய் இருக்க -அவன் தண்மை அறிவார் தான் இல்லை என்கிறார்

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

உணர்வாரார் உன் பெருமை -ஜூ ஷ்டம் யதா பஸ்யத் யன்யமீஸம்-என்கிறபடியே குணங்களோடு கூடி இருக்கிற
உன்னை உணர்வார் யார் என்கிறது –
ஊழி தோறு ஊழி-உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்–காலத்தை எல்லாம் ஒரு போகியாக்கி -உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களை உணர புக்கால் உணர அரிது என்கிறது
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் –ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த நீ அவதார ரூபேண பூமியிலே வந்து அவதரித்து
அத்தாலே ஸுலப்யத்தை யுடையவனே -கடல் கிட்டிற்று என்னா பரிச்சேதிக்கப் போகாது இறே –
வேங்கடத்தாய் –சம்சாரிகளுடைய சகல துரிதங்களும் போம்படி திருமலையிலே வந்து நிற்கிறவனே
நால்  வேதப்-பண்ணகத்தாய் –ஸ்வரத்துக்கு உள்ளீடாய் நின்று ப்ரதிபாதிக்கிற வேதங்களுக்கு பிரவர்த்தகன் ஆனவனே
நீ கிடந்த பால் ——நீ கிடந்த பால் உணர்வார் யார் –
உன்னாலும் அறிய ஒண்ணாது உன் ஐஸ்வர்யம் / காலம் எல்லாம் கூடினாலும் ஸுலப்யம் அறிய ஒண்ணாது –
விண்ணகம் அவதாரம் இவை என்கை –விண்ணகத்தானாய் பாற் கடலானனாய் மண்ணகத்தானாய் வேங்கடத்தானாய் நின்றான்
-நால் வேதப் பண்ணாகம் –ஐஸ்வர்யம் ப்ரதிபாதிக்கிறது கண்ணுக்கு விஷயம் இறே –
மற்றையது இங்கு சொல்லிற்று அனுவாதம் காண்கையாலே–தஸ்ய யோநிம்–அவனுடைய பிறப்பு –
உயர்வற உயர் நலம் உடையவன் பிறப்பு இறே –தீரா –தீ மதாம் அக்ரேஸரா –மயர்வற மதி நலம் பெற்றார்
-பரிஜாநந்தி –க்ஷணம் தோறும் எத்திறம் என்பர் –

——————————————————————-

பரமபதத்திலே மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்குமவனாய் -பூமி உபலஷிதையான லீலா விபூதியில் நீர்மை தோற்ற வந்து
அவதரிக்கும் ஸ்வபாவனாய் -இரண்டு இடத்துக்கும் பொதுவாய்க் கொண்டு மேன்மை நீர்மைகள் இரண்டும் கரை புரளும் படி
திருமலையிலே வந்து நின்று அருளினவனாய் -ஸ்வர பிரதானமான நாலு வேதத்தாலும் யுக்த வைபவ யுக்தனாய்
ப்ரதிபாதிக்கப்படும் ஸ்வ பாவனானவனே -இப்படி இருக்கிற உன்னுடைய குண வைஷண்யத்தாலே வந்த பெருமையை
கால தத்வம் எல்லாம் கூடினாலும் அறிய வல்லார் யார் -அந்த குணங்களுக்கு ஆஸ்ரயமாய் இருக்கிற உன்னுடைய
திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை தான் அறிய வல்லார் யார்
-நீ ஆர்த்த ரக்ஷணத்துக்காக பள்ளி கொண்டு அருளுகிற திருப் பாற் கடலை அறிய வல்லார் யார் –

—————————————————————————————————————

எல்லாம் ஒழிய ஒரோ ஒன்றை அரிய போமோ -என்கிறது

வேறு ஒருவரால் அறிய ஒண்ணாமை கிடக்க கிடீர்– ஸ்வதஸ் சர்வஞ்ஞனான உன்னாலே தான் உன்னை அறியப் போமோ –என்கிறார் —

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பாலன்  றனதுருவாய் –ரக்ஷக அபேக்ஷமான வடிவை யுடையையாய்
யேழுலகுண்டு -வியாதிரிக்த சகல பதார்த்தங்களையும் ரக்ஷித்து
ஆலிலையின் மேல் -சர்வர்க்கும் ஆதாரமான சர்வ ரக்ஷகனுக்கு கண் வளரப் போகாத ஆலின் இலை மேலே
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் -அன்று வளர்ந்தத்தை ஆப்த தமரானவர்கள் மெய் என்பர்கள்-
-வேத மரியாதை இல்லையாகில் ஸூன்யமாதல்–உண்டாகில் சத்யமாதலே யுள்ளது
ஆலன்று- வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —-ஏழு வயசிலே மலையைக் கீழ்மேலாக எடுத்த நீ அவற்றைச் சொல்ல வேணும் –
அன்று -திக்கு எல்லாம் அழிந்த அன்று / வேலை இத்யாதி –
நீ கண் வளர்ந்த பாற் கடலில் உள்ளதோ –நிராலம்பமான ஆகாசத்தத்ததோ -கரைந்து போன பூமியிலதோ -சொல்ல வேணும்
-பின்பு மழை எடுத்த ஆச்சர்யம் இதுக்கு சத்ருசமோ –இத்தால் அவன் தன் படியை அவன் தானே சொல்லுகையும் அரிது -என்றபடி –
பாலனுடைய ரூபத்தை யுடையையாய் -அப்ராக்ருதமான மஹத்தரமான திரு மேனியைச் சிறுக்கி சஜாதீயம் ஆக்குகை மெய் என்பர் ரிஷிகள்
-எத்திறம் -என்ன -பொய் என்ன ஒண்ணாதே -மெய் -நீயே சர்வத்துக்கும் தாரகன் ஆனமையும் மெய் -இருந்த படி என்
-சோலை இத்யாதி -ஏழு பிராயத்தில் பெரிய மலையை எடுத்த ஆச்சர்யமும் சொல்ல வேணும் –
-இது ஆழ்வார் வந்தால் கேட்க இருந்தோமோ என்றானே எம்பெருமான் -இது அத்யந்தம் விஸ்மயம் -என்கிறார் –

———————————————————————-

ஒரு குறட்டைத் தெறித்தால் ஒரு குறத்திலே பால் பெருகும் படி முக்த சிசுவான விக்கிரஹத்தை யுடைய வனாய்
-சப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலந்தளிரிலே அந்த பிரளய சமயத்திலே
சர்வ சக்தியான நீ கண் வளர்ந்து அருளின இத்தை பரமார்த்தம் என்று கொண்டு பரம ஆப்தரான ரிஷிகள் அடங்கலும் சொல்லா நின்றார்கள்
-அந்த ஆலானது சர்வமும் அழிந்த அன்று வெள்ளம் கோத்துக் கிடக்கிற சமுத்திர ஜலத்தில் உள்ளதோ
-அன்றிக்கே -நிராலம்பமான ஆகாசத்தில் உள்ளதோ –இல்லையாகில் பிரளய ஜலத்தில் கரைந்து போன பூமியிலே உள்ளதோ
-ஏழு திரு நக்ஷத்திரலே ஏழு நாள் ஒருபடிப் பட சோலைகளாலே சூழப் பட்ட கோவர்த்தன பர்வதத்தை எடுத்துத்
தரித்துக் கொண்டு நின்றவனே -இத்தை அருளிச் செய்ய வேணும் -உன்னாலும் உன் படி சொல்ல முடியாது என்று கருத்து –

——————————————————————————————————————

இப்படி அபரிச்சின்ன சக்தியான பின்பு அவனை எல்லோரும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

இப்படியான பின்பு ஜகத்தில் உள்ளார் அடங்கலும் அநந்ய பரராய்க் கொண்டு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

சொல்லும் தனையும் தொழுமின் –நாக்கு சொல்லப் பாங்கான போது எல்லாம் சொல்லி ஆஸ்ரயிங்கோள்
விழுமுடம்பு-செல்லும் தனையும் -உடம்பு பாங்கான போது எல்லாம் ஆஸ்ரயிங்கோள்
திருமாலை– பாங்கான போது ஆஸ்ரயிக்க -யாவதாத்மபாவி ஆச்ரயித்தானாகக் கொள்ளும் பித்தனைச் சொல்லுகிறது –
-நல்லிதழ்த்-தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்–நல்ல செவ்விப் பூவை யுடைய மாலையால் –
-செவ்வி மாலை கிடையாதாகில் கர்தவ்யமான கர்மத்தால் –அது கிடையாதாகில் அதுக்கு அடியான தந்திரத்தால் –
-அது அடையப் போகாதாகில் மந்த்ரத்தைக் கொண்டு செய்வது –
க்ரியா ரூபமான தந்திரம் அரிதாளில் வாக் வ்ருத்தியான மந்திரத்தால் செய்வது –
-மந்திரத்துக்கு தேச கால நியதியும் அதிகாரி நியதியும் வேணும் என்று இருந்திகோள் ஆகில்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–திரு நாமத்தால் ஏத்துவது -தாய் பேர் சொல்ல குளித்து வர வேண்டா இ றே –
திருமாலே -நியதி உண்டு என்னில் அம்மே என்னுமோபாதி சொல்ல அமையும் –

———————————————————————

புருஷகார பூதையான பிராட்டியோடே நித்ய சம்யுக்தையான சர்வேஸ்வரனை –இப்போது விழும் இப்போது விழும் என்னும் படி
அஸ்திரமான சரீரமானது விழும் அளவும் அழகிய பூக்களால் யுண்டான திருமாலையாலும்
-யாகாதி ஸத்கர்மங்களாலும்-யந்த்ரவிதுரமான கேவல கிரியைகளாலும் -க்ரியா விதுரமான மந்த்ரங்களாலும் ஆஸ்ரயிங்கோள் –
-இதுக்கும் சக்தம் இன்றிக்கே இருக்கில் உங்கள் வாக்கு யுக்தி சாமர்த்தியத்தை உடைத்தாய் கொண்டு சொல்லும் அளவும்
குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களாலே ஸ்ரீ யபதியைப் புகழ்வுதிகோள் ஆகில் அது மிகவும் நல்லது –

————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: