முதல் திருவந்தாதி—பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் —

தம்முடைய திரு உள்ளத்தை சம்போதித்து -நீர் விஷய காலுஷ்யத்தைத் தவிர்-அவன் ப்ரஸன்னனாம் -என்கிறார் –

இனிதாக திரு நாமத்தை வாயாலே சொல்லவே ப்ரஹ்லாதனுக்கு விரோதியைப் போக்கித் தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னை தந்து அருளும் என்கிறார் –

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

கனியில்–கர்வத்தினால்-

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்-எளிது இன்றிக்கே இருந்துள்ள இரண்டு திருவடிகளையும் காண்பதற்கு –
எளிதாக என்னவுமாம் -என் நெஞ்சே -என்று சம்போதிக்கிறார் –
தெளிய–விஷய காலுஷ்யத்தை தவிர / செவ்வே தெளிந்து ஒழியும் –அவன் நேரே ப்ரஸன்னனாம்
கனியில் பொருந்தாவனைப் பொரலுற்று -செருக்காலே பொருந்தேன் என்று இருந்த ஹிரண்யனை —
அரியா-யிருந்தான்    திருநாமம் எண்–சிறு பிள்ளைக்காக உதவி ஹிரண்யனை முடித்தவனுடைய திரு நாமத்தை எண்ணு –
உள்ளமே நீ தெளியில் அவன் செவ்வே நம் திறத்து தெளிந்து ஒழியும் -பிரமாணம் என் -பிரஹலாதன் தெளிய
அவன் விஷயத்துத் தெளிந்து நின்று கார்யம் பார்த்த படி கண்டிலையோ–பொரலுற்று யிருந்தான் –
பொருது சீற்றத்துக்கு இறை பொறாமல் சோம்பி இருந்தான் -வாக்காலே எண்ண ஒட்டாதவன் -பட்டபாடு அறிவுதி இறே-

—————————————————————–

எனக்கு விதேயமான நெஞ்சே -காண வேணும் என்னும் அபி சந்தியை யுடையார்க்கு அதி ஸூலபமான
திரு வடிகள் இரண்டையும் கண்டு அனுபவிக்கைக்கு நீ
அழகிதாக விஷய காலுஷ்யம் அற்று நிர்மலமாக -அவன் -மேல் எழ அன்றிக்கே -திரு உள்ளத்தோடு செவ்விதாக நான்
முன்பு பண்ணின ப்ராதிகூல்ய பரம்பரைகளிலே அதி ப்ரசன்னனாய் விடும் -ந நமேயம் -என்று தன்னைக் கிட்டோம் என்று
இருந்த ஹிரண்யனை பொருது முடிக்கையில் ஒருப்பட்டு-அவன் வரத்துக்கு உள்ளடங்காத நரசிம்ஹ வேஷத்தை
யுடையனாய்க் கொண்டு பிரஹ்லாத விரோதியைக் கை தொட்டு அழித்த ஆஹ்லாதத்தாலே ஸூ பிரதிஷ்டனாய் இருந்த
சர்வேஸ்வரனுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ரஸ்யத்தை யாலே
நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி அநுஸந்தி –பின்னை நம் கையிலும் பிறர் கையிலும் விட்டுக் கொடான்-என்று கருத்து –
எளிதில் -எளிதில்லாத -ஸூ லபம் இல்லாத இரண்டு திருவடிகள் என்னுதல் -/ என்னுள்ளம் -உள்ளமே என்று சம்புத்தி —

—————————————————————————————————————-

கீழ் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினவனுடைய திரு நாமத்தை எண்ணு
அவன் ப்ரசன்னனாம் என்றது -மற்றும் துர்மானிகளான தேவாதிகளும் அவனை
ஆஸ்ரயிக்கத் தக்க கரணங்களும் அதிகாரம் பெற்றது -என்கிறார் –

நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள்
அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது
நமக்குத் பின்னை சொல்ல வேணுமோ -என்கிறார் –

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்–அஷ்ட வஸூக்கள்–ஏகாதச ருத்ரர்கள் –துவாதச ஆதித்யர்கள் / அஸ்வினிகள் —
வண்ண மலரேந்தி -நாநா வர்ணமான புஷ்ப்பங்களைக் கொண்டு
வைகலும் நண்ணி-ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்–புருஷ ஸூ க்தத்தால்–விச்சேதம் இன்றிக்கே
திரு மாலைக் கை தொழுவர் சென்று–ஸ்ரீ யபதியைச் சென்று ஆஸ்ரயிப்பார்கள் –
தத் உபரியபி பாதராயணஸ் சம்பவாத் –தேவர்களுக்கும் பவிஷ்யத்தில் பெற இருந்துள்ள அதிகார அர்த்தமாக
ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள பரமாத்ம உபாசனம் வித்தியா நின்றது இ றே –
வியாபார யோக்யரான பிரயோஜனாந்தர பரர் று மாலையால் பரவி ஓவுகை அன்றிக்கே
-எல்லாக் காலமும் -எப்போதும் என்றுமாம் / திருமால் –வேண்டுவது எல்லாம் பெறுகைக்கு அடி —

————————————————————–

அஷ்ட வஸூக்களும் ஏகாதச ருத்ரர்களும் துவாதச ஆதித்யர்களும் அத்விதீயரான அஸ்வினிகள் இருவரும் –
நாநா வர்ணமான புஷ்பங்களை தரித்துக் கொண்டு -சர்வ காலங்களிலும் வந்து கிட்டி அத்விதீயமான
ஸ்ரீ புருஷ ஸூக்தாதி சந்தர்ப்பங்களைக் கொண்டு அடைவு கெடப் புகழ்ந்து எல்லாக் காலத்திலும் உச்சி வீடு விடாதே
அபிமதங்களைக் கடிப்பிக்கும் கடகையான பெரிய பிராட்டியாரோடே கூடி இருக்கிற
சர்வேஸ்வரனை துர்மானத்தை துறந்து சென்று கிட்டி ஆஸ்ரயிப்பார்கள் –

—————————————————————————————————————————–

கீழே எல்லா நேர்த்தியும் நேர்ந்து -தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களை சொல்லிற்று-
இதில் தங்களை எல்லாம் அழிய அங்குத்தைக்கு உறுப்பாமவர்களை சொல்லுகிறது –

ஸ்வ பிரயோஜனத்துக்கு மடி ஏற்கும் துர்மானிகள் ஆஸ்ரயிக்கும் படியை அனுசந்தித்த உள் வெதுப்பு அடங்கும் படி-
அநந்ய பிரயோஜனராய் -அபிமான கந்த ரஹிதராய் -தத் தத் அவஸ்த்தை உசிதமான வடிவு எடுத்துக் கொண்டு –
அடிமை செய்யக்கடவ நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான திருவனந்த ஆழ்வான் அங்குத்தைக்கு அடிமை செய்யும் படியை அனுசந்திக்கிறார் –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

சென்றால் குடையாம்–கைங்கர்யம் ஸ்வ புத்த்ய அதீனம் அன்று என்கிறது –நான் குடையாய் நின்றேன்
நீ இங்கே வா -என்கை யன்றிக்கே-அவன் உலாவப் புக்கால் குடை அபேக்ஷிதம் ஆன போது குடையாகை —
யிருந்தால் சிங்காசனமாம்–இருக்கை திரு உள்ளமான போது திவ்ய சிம்ஹாசனமாம்
நின்றால் மரவடியாம் –நிற்கை திரு உள்ளமான போது மரவடியாம்
நீள் கடலுள் என்றும் புணையாம்-கண் வளர அபேக்ஷிதமான போது -கடலிலே எல்லா காலத்திலும் படுக்கையும் –
மணி விளக்காம் -ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்ற போது மங்கள தீபமாய் இருக்கும் –
பூம் பட்டாம் -திருப் பரிவட்டம் அபேக்ஷிதமான போது அழகிய பட்டாம்
புல்கு-மணையாம் –தழுவு அணை அபேக்ஷிதமான போது தழு வணையாம் –
திருமாற் கரவு  —–ஸ்ரீ யபதிக்கு-கட்டிப் பொன் போலே எல்லா வடிவையும் ஆக்கிக் கொள்ளலாம் படி இருக்கிற படி –
சென்றால் -குடையானேன் செல் -என்று சேஷியை நியமியாதே / இருந்தால் -அபேக்ஷை உள்ள போது /
நின்றால் -நின்ற பின்பு / புணை–தெப்பம் / மணி விளக்கு -மங்கள தீபம் / பூம் பட்டு -பும்ஸத்வா வஹமான பரிவட்டம் /
புல்கும் அணை –பிராட்டிமார் ஊடினால் விசனம் மறப்பிக்க வற்றாகை–ஊடலுக்கு ஹேது ஆகவுமாம் –/
திருமாற்கு –இளைய பெருமாளுக்கு அந்தரங்க சேவை / அரவு –தான் ஒரு சேதனன் என்று கூச வேண்டாத படி
தன்னை அமைத்த படி -ராஜ நிவேசனங்களிலே கூனர் குறளரைப் போலே —

——————————————————————-

பெரிய பிராட்டியாரோடே நித்ய சம்யுக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு -அவனும் அவளும் கூடக் கண்
அற்றுத் துகைத்துப் பரிமாறுகைக்கு யோக்யமான வடிவையுடைய திருவனந்த ஆழ்வான் –
உகப்புக்கு போக்குவீடாக அவன் உலாவி அருளப் புக்கால் மழை வெய்யில் படாத படி குடையாம்-
தன் இச்சையால் எழுந்து அருளி இருந்தால் திவ்ய சிம்ஹாசனமாம் -ஸ்வ இச்சையால் எழுந்து அருளி நின்றால் திருவடி நிலைகளாம்-
பரப்பை யுடைத்தான கடலிலே கண் வளர்ந்து அருளும் போதைக்கு -சர்வ காலத்திலும் திருப் பள்ளி மெத்தையாம்-
ஏதேனும் ஒன்றை விளக்கு இட்டுக் காண அபேக்ஷிதமான போது மங்கள தீபமாம் –
சாத்தி அருளத் திருப் பரியட்டம் அபேக்ஷிதமான சமயத்திலே பும்ஸத்வா வஹமான அழகிய திரு திருப் பரியட்டமாம் –
சாய்ந்து அருளின போதைக்குப் பிராட்டிமார் -சீறு பாறு -என்னும் படி தழுவணை யாம் —

—————————————————————————————————————-

ஆஸ்ரிதற்கு சில விரோதம் வந்து போக்க வேண்டில் -படுக்கையும் பொருந்தாமல் வந்து நிற்கும் என்கிறது -இப்பாட்டு நிரல் நிரை –

இப்படி தன் நினைவுக்கு ஈடாக அடிமை செய்யும் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை விட்டு
இங்கே வந்து அவதரித்துக் களை பிடுங்கித் தன் விபூதியை நோக்கும் படியை அனுபவிக்கிறார் –

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

காளியனை விட்டு -குவலயா பீடத்தின் கொம்பை முறித்து -ஆனை மேய்த்து -குருந்தம் ஓசித்து–புள் வாய் கீண்டு –
பகாஸூரனைக் கொன்று -குரவை கோத்து–குடமாடி –பேய் முலை யுண்டு –மல்லரை அட்டு –குன்று எடுத்த சர்வேஸ்வரன் –
எடுத்த இச் செயல்கள் எம்பெருமான் சேஷி விஷயத்தில் குறைந்து பரிமாறும் படி அவன் ஸ்வரூபம் —
செங்கண் அவன் ——-விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு-அட்டு எடுத்தவை
அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்- குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி-என்று அந்வயம் –

——————————————————————————–

புண்டரீகாக்ஷனான அந்த சர்வேஸ்வரன் மறைக்கை இன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாம் படி காளியன் ஆகிற சர்ப்பத்தை விட்டடித்து
-யுத்துன்முகமான குவலயா பீடத்தை முறித்து விழ விட்டு -பசுக்களை குறைவற மேய்த்து – குருந்தத்தை இணுங்கிப் பொகட்டு
-பகாஸூரனுடைய வாயைக் கிழித்து –இடைப் பெண்களோடு திருக் குரவை கோத்து –ஐஸ்வர்ய செருக்குக்குப் போக்கு விட்டுக் குடமெடுத்தாடி
-நலிய வந்த பூதனை முலையை பிராண ஸஹிதமாக உண்டு –கம்சனை ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை முடித்து –
-வர்ஷாபத்தை பரிஹரிக்கைக்காக கோவர்த்தன பர்வதத்தை எடுத்தது முதலான இச் செயல்களானவை
இருந்த படி என் என்று வித்தராய் அனுபவிக்கிறார் -இது நிரல் நிரை என்று தமிழர் சொல்லும் லக்ஷணம் –

——————————————————————————————————————

இப்படி அவன் ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வரூபனான பின்பு அவனுடைய தாமரை யமபடன் ஆராய்வது எங்கனே என்கிறார் –

அவன் இப்படி ஆஸ்ரிதரை கண்ணிலே வெண்ணெய் இட்டு நோக்கி தத் விரோதிகளையும் போக்கும்
ஸ்வபாவனாய் இருக்க ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்க்க வல்லார் -என்கிறார் –

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் -அவனுக்கு அனுகூலமான வர்கள் எது தொழிலார் ஆகில் என் -விஹிதத்தை செய்யில் என்
-நிஷித்தத்தை செய்யில் என்
எங்கோன்-அவன் தமரே என்று ஒழிவது அல்லால்–ப்ரபவதி சம்ய மனே மமாபி விஷ்ணு -என்னும் படியே —
நமன் தமரால்-ஆராயப் பட்டு அறியார் கண்டீர்–நமன் தமரால் ஆராய படாது ஒழிகிறார்
அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-இவர்கள் தாங்களோ என்னில் -அன்று ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –
-பேர் ஆராயில் குவலயா பீடம் தொடக்கமானவை பட்டது படும் -மது ஸூதன ப்ரபந்நான்/
-எங்கோன்-அவன் தமரே–என் நாயகனாவான் அடியார் / எவ்வினையராகில் என் -என்று ஒழிவது அல்லால்-
அவர் புண்யம் பண்ணில் என் -பாபம் பண்ணில் என் -அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடுமது ஒழிய
-த்யஜ பட தூர தரேண தா நாபா பான் –/ அரவணை மேல்-பேராயற்கு ஆட்பட்டார் பேர் —
-படுக்கை பாராட்டில் இறே ஆராய்வது -நன்று செய்தார் என்பர் போலும் -என்று பிராட்டிக்கு அகப்படாத நிலம்
அல்லாத இடத்தே யமனோ ஆராய புகுகிறான் -அவனுடைய ஒரு பேரான சம்சாரி பெரும் தீட்டி வாட்டான் –

—————————————————————

அந்த சர்வேஸ்வரனுக்கு அனுகூலராய்ப் போரும் ஆஸ்ரிதர் ஆனவர்கள் அக்ருத்யகரண க்ருத்ய அகரண ரூபமான
எந்த தொழிலை யுடையார் ஆனார்கள் ஆகிலும் -எங்களுக்கு ஸ்வாமியான அந்த சர்வேஸ்வரனை
ஆஸ்ரயித்த மஹா புருஷர்கள் இ றே என்று அவர்களைக் கொண்டாடி தங்களைக் கொண்டு கடக்கப் போம் அத்தனை ஒழிய
-திரு அரவு அணையில் வர்த்திக்கக் கடவனாய் -இடைத்தனத்தில் தனக்கு ஓத்தார் இல்லை என்னும் படி
அதில் பிரதானனான கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –தங்கள் அளவன்றிக்கே
-தங்கள் பேரும் கூட நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

———————————

பேராயர்க்கு ஆட்படுகையாவது-அவன் விஷயீ கரிக்கப் புக்கால் தன் செல்லாமை தோற்ற நிற்கை யல்லது
இவன் அவனைப் பரிச்சேதித்து அறிகை யாவது என் -என்கிறது –

அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லி போம் அத்தனை அல்லது சர்வேஸ்வரன்
பிரபாவம் யார்க்கும் பரிச்சேதிக்க அரிது -என்கிறார் –

பேரேவரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பேரே வரப் பிதற்ற லல்லால் எம்பெம்மானை-பேராலே அவன் வரும் படி -திரு நாமத்தை சொல்லலாம் -என்னவுமாம்
-அன்றிக்கே ஏதெனும் சொல்லப் புக்காலும் திரு நாமம் வாயிலே வரும் படி பிதற்றல் அல்லால் -இதுக்கு ஈடாக சொல்லுகை -என்றுமாம் –
ஆரே யறிவார் அது நிற்க –என்னுடைய ஸ்வாமியை யாரே அறிவார் -அவ்விடையாட்டம் நிற்க —
நேரே-கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலம் தன்னை யயன் —–அறிவார் கிடக்கிடீர் -அறியாதாரைக் கேட்கல் ஆகாதோ -சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான
திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற
ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-
நம்மால் அறிய ஒண்ணுமோ என்னில் -பேரே வரப் பிதற்றல் -கன்று நின்ற இடத்தே தாய் வருமா போலே வாசிதமாக என்றுமாம் -/
எம் பெம்மானை -தமக்கு நேரே காட்டின படி / உள்ளிருந்தும் காண்கிலான்-கடல் கரையிலே குடில் கட்டி கொண்டு
இருக்கும் காட்டில் கடலைப் பரிச்சேதிக்க ஒண்ணுமோ -அபரிச்சேதயம் என்று அறியில் அறியலாம் –பெரிய கிழாயார் –ப்ரஹ்ம விதாம் வர —

—————————————————————-

ஏதேனும் ஒன்றைச் சொல்லினும் திரு நாமம் வாயிலே வரும் படி அக்ரமமாகச் சொல்லிக் கூப்பிடும் அத்தனை அல்லது
-தன் படிகளை எனக்குத் தானே காட்டித் தந்த என் நாயகனானவனை யார் தான் அறிய வல்லார் –
-அவ்விடை யாட்டம் கிடக் கிடீர் –பரிமள பிரசுரமான திரு நாபீ கமலத்தில் அவ்யவதானே பிறந்து
அங்கே நிரந்தர வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும் அவன் பக்கலிலே ஓதி இவ்வருகு உள்ளார்க்கும் அறிவு கொடுக்கும் படி
அறிவில் தலை நின்ற சதுர்முகனானவன் -சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரன் திருவடித்த தாமரைகளை இவ்வளவு என்று
தர்சிக்கைக்கு சக்தன் அல்லன் -பேறே வரப் பிதற்றுகை யாவது – அவன் தானே வரும் படி
திரு நாமங்களை அக்ரமாகச் சொல்லும் அத்தனை போக்கி என்றுமாம் –

———————————————————————————————————————-

நீர் பகவத் விஷயத்தில் செய்வது என் என்னில் -சம்சாரம் பய ஸ்தானம் என்னும் இடமும் –
உஜ்ஜீவிப்பார் அவனைப் பற்றி என்னும் இடமும் அறிந்தேன் -என்கிறார் –

ப்ரஹ்மாவுக்கு அறிய ஒண்ணாத விஷயத்தை நீர் அறிந்தபடி எங்கனே -என்ன –திரு நாமம் ஆஸ்ரயித்து
அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டக் கண்டேன் என்கிறார் –

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன்–நான் இட்ட வடியிலே இட்டு வாரா நின்ற மஹா பாபங்களை -அஞ்சினேன் –
அஞ்சி-உய -அவற்றை அஞ்சி உஜ்ஜீவிக்கைக்காக –
நின் திருவடியே சேர்வான் நய நின்ற-நன்மாலை கொண்டு –நிர்வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும்-சொன்மாலை கற்றேன் தொழுது —-சொல் தொடை கற்றேன் –
தொழுது -வணங்கி –சொல் மாலை கற்றேன் -ஆற்றாமையால் நான் ஆகைக்குப் பேசினேன் –
அயல் நின்ற -விஸ்லேஷத்தால் வரும் வியசனத்துக்கு அஞ்சி -திருநாமம் சொல்லும் தனையும் கடக்க -சாபலத்தாலே நின்ற –

——————————————————————-

அருகு விட்டுப் பேராதே இடைவிடாமல் நலிந்த படியே நிற்கிற அதி பிரபலமான பாபத்தைக் குறித்து முன்பு போலே
இன்னமும் வந்து மேலிடில் செய்வது என் என்று பயப்பட்டேன் -இப்படி பயப்பட்டு -இந்த பாப சம்பந்தம் அற்று
உஜ்ஜீவிக்கைக்கு நிர்பய ஸ்தானமான உன் திருவடிகளிலே வந்து கிட்டுக்கைக்காக -நயப்புடைத்தாய் -அதி விலக்ஷணமான
சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப்பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய்
திருமந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடையை அப்யசித்தேன் -அன்றிக்கே -திரு மந்த்ரார்த்தை நயிப்பிக்கையாலே
தத் பரமாய்க் கொண்டு நின்ற விலக்ஷண சந்தர்ப்ப ரூபமான இப்பிரபந்தத்தைக் கொண்டு என்னவுமாம் —
அயல் நின்ற என்றது ஞானம் பிறந்த பின் பாபங்கள் தம்மை விட்டுக் கடக்க நின்ற படியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
அயல் நின்ற வல்வினையென்று திரு நாமம் சொல்லாத போது தமக்கு உள்ள வியசனம் ஆகவுமாம் —

———————————————————————————————————-

ஆனபின்பு நெஞ்சே –இவ்விஷயத்தை விட்டு நமக்கு ஒரு க்ஷணம் ஆறி இருக்க விரகு இல்லை -அவன் திருவடிகளை ஆஸ்ரயி -என்கிறார் –

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பழுதின்றி–இடைவீடின்றி -/ அந்தரம் ஒன்றில்லை யடை-கால தாமதம் செய்ய ஹேது எதுவும் இல்லை -அவனை –அணுகு-

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி–கையாலே தொழுது –புஷ்பாதி உபகரணங்களை கொண்டு தொழுது –
எழுதும் எழு வாழி நெஞ்சே —போவோம் -போகு -நெஞ்சே -உனக்கு நன்மை உண்டாக –
பழுதின்றி–எழுவோம் -மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்–விச்சேதம் இன்றிக்கே எல்லா திரு மந்த்ரங்கள்
கற்கிறதும் கை தொழுகை -ஆனபின்பு –
அந்தரம் ஒன்றில்லை யடை—–ஒரு க்ஷணம் மாத்திரம் போகாதே அவன் திருவடிகளில் அடை –
எழுவோம் –உஜ்ஜீவிப்போம் /எழு –ஒருப்படு-/ வாழி -ஒருப்பட்ட படிக்கு மங்களா சாசனம் -இது உனக்கு நித்தியமாக உண்டாக –
பழுதின்றி -குருகுல வாசம் பண்ணிப் பழுத்து விழக் காண்கை-முதலிலே சொல் என்னில் உத் பத்தி தோஷமாம் இ றே/
கற்பனவும் – கிடந்தானை கண்டு ஏறாதே சந்தையிட்டுக் கற்கை

—————————————————————————–

நெஞ்சே -செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு தூபத்தைக் கையிலே தரித்து -ஸ்வரூப அனுரூபமாக
அவனைத் தொழுது உஜ்ஜீவிப்போம் -கடுக எழுந்து இரு -உனக்கு இந்த ஸம்ருத்தி நித்யமாகச் செல்ல
-கிடந்தானை கண்டு ஏறாதே ஆச்சார்யானைப் பழுக்க சேவித்து -திரு அஷ்டாக்ஷரம் முதலான மந்த்ரங்களை
பழுதற நாம் அப்யசிக்கிறவையும் -சர்வேஸ்வரன் திருவடிகளில் இடைவிடாமல் அஞ்சலி பந்தம் முதலான
வ்ருத்தி விசேஷங்களைப் பண்ணுகைக்காக -ஆனபின்பு நமக்கு ஆறி இருக்கைக்கு அவகாசம் ஏக தேசமும் இல்லை -கடுகச் சென்று கிட்டு —

——————————————————————————————————————

கால ஷேபம் பண்ணும் படி சொல்கிறது

போகத்துக்கு வேனுமாகில் இத்தைச் செய்கிறோம் -இதுக்கு இடைச் சுவரான விரோதிக்கு
வேனுமாகில் தரசாரதாத்மஜனை சரணம் புக்கு என்கிறார் –

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

அடைந்த வருவினையோடு –ஆத்ம ஸ்வரூபத்தில் இன்றியே அசித் பிரத்யாசத்தியால் வந்தேறியான அஞ்ஞானாதிகள்
அல்லல் –மானஸ வியாதி
நோய் –சரீர வியாதி -ஆதி -வியாதிகள் என்றபடி –
பாவம்-பரிக்ரஹித்த சரீரத்தாலே பண்ணின நிஷித்த அனுஷ்டானம்
மிடந்தவை-சரீர ஆரம்ப ஹேதுவான பாபங்களுமாக நெருங்கினவை
மீண்டு ஒழிய வேண்டில் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னும் படி ஒரு ராஜ குல சம்பந்தத்தாலே மீளாத படி போக வேண்டில்
நுடங்கிடையை-பிரியத் தகாதவளை –

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——பண்டு இலங்கையில்
வைத்தவனுடைய மிடுக்கை ஒழிய –தன்னுடைய திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்தவன் உபாயம் –
இத்தால் -சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் -இவ்வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் -அவளோடு கூடினவன் உபாயம் என்கை யாலே பற்றுமவர்கள்
அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது
திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
-பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் -இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே
ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை -இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே -உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –
அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
-பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இ றே -அனஸ்னன் / அல்லல் நோய் -ஆதி வியாதி /பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
– மிடந்தவை–சமிதை இடாத பரணி போலே –பரணிக் கூடு வரி த்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே
-சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-
-தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை –
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
-பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது –

———————————————————————-

ஞான ஆனந்தகளோபாதி ஆத்மாவுக்கு நிரூபகம் -என்றபடி -அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற போக்க அரிதான
ப்ராசிநபாவம் -அது அடியாக வருகிற மானஸ மான துக்கங்கள் -சாரீரமான வியாதி -வர்த்தமான சரீரம் கொண்டு
பண்ணுகிற நிஷித்தாசாரம் என்றால் போலே பஹு விதமாய்க் கொண்டு பரணிக் கூடு வரிந்தால் போலே
ஆத்மாவைத் தெரியாத படி மூடிக் கிடக்கிற இவை வாசனையோடு விட்டுப் போக வேண்டில் க்ஷண காலமும்
விஸ்லேஷிக்கத் தகாத படி நேரிய இடை அழகை யுடைய பிராட்டியை முன்பு ஒரு காலத்தில் லங்கையில் கொண்டு
போய்ச் சிறை வைத்த ராவணனுடைய மிடுக்கு அழியும் படிக்கு ஈடாக பண்டு ஒரு நாளிலே தன்னுடைய
ஸ்ரீ சாரங்கத் திரு வில்லை அழகிய திருக் கையிலே வைத்த தசாரதாத்மஜனே உபாயம் –
இத்தால் பிராட்டி விஷயத்தில் போலே ஆஸ்ரித விஷயத்தில் ஈஸ்வரன் உகந்து கார்யம் செய்யும் என்னும் இடமும்
-அவன் ஸ்வ ரக்ஷணத்திலே இரங்கும் அன்று இவனுக்கு க்ருத்யாம்சம் உள்ளது என்னும் இடமும் –
அவன் அபேக்ஷிதம் செய்யும் இடத்தில் இவள் புருஷகாரம் என்னும் இடமும் அவன் வஸ்துவை எனக்கு என்பார்
ராவணாதிகள் பட்டது படுவர் என்னும் இடமும் சொல்லிற்று யாய்த்து -இந்திரிய ஜயத்தைப் பண்ணு -அவனைத் தொழு –
-அவன் திரு நாமத்தைச் சொல்லு -அவனை நினை என்றால் போலே கீழே படி படியாகச் சொல்லிற்று எல்லாம்
ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை
-இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே -உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

————————————————————————————————————

கீழ் அவனையே உபாயம் என்றது -பேறு இவர்களதே யானபின்பு இவ்வாத்மாக்கள் உபாயம் ஆனால் ஆகாதோ என்னில்
-கீழ் போக்கு அறியான் -இப்போது தங்கள் படுகிறது இன்னதாலே என்று அறியார்கள் -வரக் கடவது அறியார்கள்
-ஈஸ்வரன் இவை எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஞான சக்தியாதிகளை யுடையவன் –
பழகி யான் தானே –என்னுமா போலே -ஆகையால் அவனே உபாயமாம் அத்தனை -இத்தை லோகம் அறியாது என்கிறது –

இவன் பல போக்தாவாய் இருக்க அவன் சாதனமாக வேண்டுகிறது என் என்னில் -சர்வஞ்ஞனாய் சர்வ சக்தனாய் இருப்பான்
ஒருவன் உபாயமாம் இத்தனை போக்கி அஞ்ஞனாய் அசக்தனாய் இவனால் செய்யலாவது உண்டோ -என்கிறார் –

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

சரணா மறை பயந்த தாமரை யானோடு–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –
சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம்–கல்பாதியிலே யுண்டாய் -கல்பாந்தத்தில் இல்லை யாகிற ப்ரஹ்மாவோடே கூட
-நஜாயதே ம்ரியதேவா –ஜாயஸ்ய ம்ரியஸ்ய –என்று ஜனன மரண தர்மாக்களான உயிர்களுக்கு எல்லாம்
அரணாய-ரக்ஷகமான –
பேராழி கொண்ட பிரான் அன்றி-கீழே பெருமாள் ப்ரஸ்த்ததுர் ஆகையால் -கடலை வெதுப்பித்து
-தமக்கு வசமாக்கிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன் -என்றுமாம்
கையிலே திரு வாழியை யுடையனாய் உபகாரகனான சர்வேஸ்வரனுடைய உபாய பாவத்தை அறிவர் —
மற்று அறியாது-ஓராழி சூழ்ந்த வுலகு ———-மற்றாய் இருந்துள்ள கடல் சூழ்ந்த லோகமானது உபாயமாக அறியாது
சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்
ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது
மரணாய -சாவது பிறப்பது ஆகிற சரீர தர்மம் / மன்னுயிர் -ஆத்ம தர்மம் -மரண தர்மங்களுடைய அஞ்ஞனாய் அசக்தனாய் –
அரணானவை –இவற்றை வி நாசகன் அறியும் அத்தனை -முடோயம் நாபி ஜாநாதி -/ வேதாஹம்-
ஆப்பன் நஞ்சீயருக்கு -ஜீயரே இவ்வுலகு எம்பெருமானை அல்லாது இருந்ததோ –என்ன -அதுக்குப் பொருள் என்ன
-உயர்ந்தோர் எம்பெருமானை அல்லது அறியார் என்ன -இத்தை பட்டரைக் கேட்க -அதுக்கு ஒரு குற்றம் உண்டு
-ஓர் ஆழி சூழ்ந்த -என்று விசேஷிக்க ஒண்ணாது -என்ன -இதுக்கு பொருளோ என்ன
-ஜீயரே நான் சொல்லும் பொருள் என் என்ன உலகு அறியாது என்ன -அதுவே பொருள் என்றார்
-இத்தை பிள்ளையும் ஜீயருக்கு உரைக்க-திருக் கலிகன்றி தாசர் மறந்தத்தை உணர்த்தினார் -என்று அருளிச் செய்தார் –

—————————————————————-

அபிமத சித்திக்கு அனுரூபமான உபாயங்களை அறிகைக்கு சாதனமான வேதத்தை நாட்டுக்கு உபதேச முகேன
உண்டாக்கின ஞான மஹாத்ம்யத்தை யுடையோம் என்று அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மா வோடே கூட
மரண தர்மாக்கள் ஆகையால் அறிவு கேடராய் நித்தியமான ஸ்வரூபத்தை யுடையரான ஆத்மாக்களுக்கு எல்லாம்
ரக்ஷை யான வற்றை ரக்ஷண பரிகரமான பெரிய திரு வாழியை யுடையனான உபகாரகனை அல்லது வேறு
அத்விதீயமான கடலாலே சூழப் பட்ட பூ லோகத்தில் உள்ள பிராணி அறியாது –
இத்தால் சிறியாரோடு பெரியாரோடு வாசியற தம் தம்முடைய ரக்ஷணம் தங்கள் அறிய மாட்டார்கள் –
இவனே சர்வர்க்கும் ரக்ஷண பிரகாரம் அறியுமாவான் என்றதாய்த்து –

————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: