முதல் திருவந்தாதி– பாசுரங்கள் -11-20– -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

இவனுடைய ரக்ஷகத்வத்தில் த்வரையைக் கண்டு தம்முடைய இந்திரியங்கள் வியாகுலமாம் படி சொல்லுகிறது –

இப்படி அவன் படிகளை அனுபவித்துக் கொண்டு போகிற வழியாலே -தமக்கு அவன் பக்கல் உண்டான அபி நிவேசத்தைப் பேசினார் கீழ்
-இப்போது கரணியான தம்மிலும் காட்டில் தம்முடைய கரணங்களுக்கு அவன் பக்கல் உண்டான அபிநிவேச அதிசயத்தை பேசுகிறார் –

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி ——–11-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது –நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ –திரு உலகு அளந்து அருளினவனுடைய நீர்மையைக் கண்டால்
நான் வேண்டாம் என்னிலும் தொழுது அல்லது நில்லாது
பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–பேய் நஞ்சாகக் கொடுத்தால் -இவன் தாரகமாக யுண்டான்
-அவள் தன் நெஞ்சில் தண்மையால் முடிந்தாள் அத்தனை –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி ——அவன் உரு அல்லது கண்கள் காணா / அவன் பேச்சே அல்லது செவிகள் கேளா –
ஆஸ்ரித விஷயத்திலும் -சாமான்ய விஷயத்திலும் இருக்கும் இருப்பில் சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமான படி –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -தாம் புறம்பே வாழ்த்தப் பார்க்கிலும் -தாம் செய்யா
கை யுலகம்-தாயவனை அல்லது தாந்தொழ–தொழாதார் தலையிலும் இருந்து தொழுவித்துக் கொள்ளும் திருவடிகளை
யுடையவனை அல்லது -தாம் தொழா-அவனும் ஏற வாங்கிலும் -நானும் ஏற வாங்கிலும் –
  பேய் முலை நஞ்-சூணாக வுண்டான்–கொடா விடில் பிழையேன் என்று கொடுக்க -உண்ணா விடில் பிழையேன் என்று உண்டான் -அநந்யார்ஹம் ஆயிற்று –
உருவோடு பேர் அல்லால்-காணாக் கண் கேளா செவி -ஹ்ருஷீ கேசன் அன்றோ —

———————————————

என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –
கைகளானவை தரதம விபாகம் பாராதே இருந்ததே குடியாக லோகத்தை அடைய அநாயாசேன அளந்து கொண்ட
சீலாதிகனாவனை ஒழிய தாம் தொழப் பாராது –பூதனையுடைய முலையில் விஷத்தை தாரகமாக விரும்பி
-அமுது செய்தவனுடைய வடிவை ஒழிய கண் காணாது -குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஒழியச் செவி கேளாது —

———————————————————————–

தம்முடைய அனுபவமான பக்தியைச் சொல்லுகிறது என்னவுமாம் -பக்தியை விதிக்கிறது என்னவுமாம் –
கீழ் ப்ராப்ய சிஷை பண்ணினார் -இனி ப்ராபகம் சொல்லுகிறார் –

கீழ் ஸமாச்ரயணீயனாகச் சொன்னவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே தத் அனுரூபமான சாதனம் பக்தி -என்கிறார் –

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு ——-12-

அவியாத ஞானம் -நாஸம் அற்ற பக்தி ரூப பன்னமான ஞானம்
செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும்-பஞ்ச பூதங்களிலான தேஹமும்
வேள்வியும் -அக்னி ஹோத்த்ரம் போன்ற பக்திக்கு சாதனமான கர்மங்களும் –
நல் அறமும் -பக்திக்கு விருத்தியைச் செய்யும் விவேகம் விமோகம் முதலான ஆத்மகுணங்களும்
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —என்பரே–நிரபேஷ ரக்ஷகனான ஸ்ரீ வராஹ மூர்த்திக்கு சாதனம் என்கிறார்களே -என்ன அறிவு கேடு –

வேள்வியும் -பக்தி விவ்ருத்தி யர்த்தமாகவும் -பாப ஷயத்துக்காகவும் அனுஷ்டிக்கிற கர்மங்கள் –
அக்னி ஹோத்ராதி து தத் கார்யா யைவ தத் தர்ச நாத் –/ ஆ ப்றா யாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -என்றும் /
யஞநேன தாநேந தபஸா அநாசகேன ப்ராஹ்மனோ விவிதி ஷந்தி -என்றும் சொல்லுகிறபடியே
நல்லறம் -விவேகாதிகள் -/ என்பரே ஏனமாய் நின்றார்க்கு இயல்வு -ஏனமாய் நின்றாரைப் பெறுகைக்கு பண்ணும் பிரவ்ருத்தி இவை என்பர் –
ஆபத்தே அடையாளமாக தானே ரஷிக்கும் என்கையாலே –
அவன் உபாயமாகத் தன்னுடைய பக்தியைச் சொல்லுகிறது என்றுமாம் –
செ வி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –சர்வ இந்திரியங்களுக்கும் உ ப லக்ஷணம்
செந்தீ-புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் -ஆக இருபத்து நாளுக்கும் உப லக்ஷணம் –
அவியாத்-ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே–கர்மா யோக அந்தரகதமான ஞானம் -ப்ரக்ருதி ஹேயதாயா ஜ்ஜேயை
-ஆத்மா உபாதேயதயா ஜ்ஜேயன் -ஈஸ்வரன் உபாதேய தமனாய் கொண்டு ஜ்ஜேயன் -சஞ்சலம் ஹி
வேள்வி -கர்ம யோகம் -/ நல்லறம் ஆன்ரு சம்சயாதி தர்மங்கள்/ என்பர் -வேத சாஸ்திரங்களில் பிரசித்தி
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு —தளர்ந்த போது எடுக்குமவன் -என்று ஷேபமான போது பிரவ்ருத்தி கொண்டு
புகுவதைக் கை வாங்கின அன்று எடுக்க இருக்க -ஞானப் பிரானை அல்லால் இல்லை / அறிவானாம் -என்றால் போலே -இயல்வு -உபாயம்

————————————–
ஸ்ரோத்ர ஜிஹ்வா சஷூர் க்ராண த்வக்குகள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
-தேஜஸ் பிருத்வி வாயு ஜலம் ஆகாசங்கள் ஆகிற பூத பஞ்சகமும்
தத் பலஷிதமான சரீரமும் -இந்த கரண களேபரங்களால் சாதிக்கப் படுமதாய்-அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானமும் -பக்தி உத்பத்தி விவ்ருத்தி ஹேதுவாய் -பல சங்க கர்த்ருத்வ தியாக பூர்வகமாக பண்ணும் யாகாதி கர்மங்களும்
-நாள் தோறும் பக்தியை வளர்க்கக் கடவ விவேக விமோதாதிகளும் -ஆன்ரு சம்சய தாநாதிகளும் ஆகிற விலக்ஷண தர்மமும்
-சர்வ ஸூலபனாய்-ஆபத் சகனாய் நின்ற சர்வேஸ்வரனுக்கு -சத்ருச சாதனம் என்று வேத வைதிக புருஷர்கள் சொல்லா நின்றார்கள்
-பக்தித–என்றும் -பக்த்யா த்வத் அநந்யா ஸக்ய-என்றும் சொல்லக் கடவது இ றே
அங்கண் இன்றிக்கே தமக்கு போக உபகாரணமான பக்தியை -உபாசகர் உபாயமாக அநுஸந்திக்கும் கட்டளையைச் சொல்லி
பக்தியை ஷேபித்து பிரபத்தியை அருளிச் செய்கிறார் ஆகவுமாம் -அப்போதைக்கு –
ஏனமாய் நின்றார்க்கு நல்லறமான இவை இயல்வு என்பரே-தானே வந்து நிஹிதனாய் ரக்ஷிக்குமவனைப் பெறுகைக்கு
இவற்றை சத்ருச சாதனம் என்று சொல்லா நிற்பார்கள் -என்ன அறிவிலிகளோ -என்று ஷேபமாகக் கடவது
-ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்று இ றே தம்முடைய சித்தாந்தம் –

———————————————————————————————–

வாயவனை யல்லது வாழ்த்தாது -என்னும்படியாய் இருந்தது -உம்மது–அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது
அவதானம் வேணும் -எங்கனே கூடும்படி என்னில் -அல்லாதாரும் ஆஸ்ரயிக்கும் படி தானே பிரதமபாவியாம் -என்கிறார் –

உபகரணங்களையும் கொடுத்து -ருசியையும் ஜநிப்பித்து-உபாயமுமாய் -தானே பல பிரதானம் பண்ணும் என்கிறார்

அவனை நேர் கொடு நேர் கிட்டிப் பரிமாறுகைக்கு அதிகாரிகள் நித்ய ஸூ ரிகளே –இப்படி இருக்கச் செய்தேயும்
சம்சாரிகளான நம் போல்வார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படி தன்னை ஸூ லெபனாக்கி வைக்கும் -என்கிறார் –

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் ——-13–

இயல்வாக –சத்ருசமாக
யீன் துழாயான் அடிக்கே செல்ல-ஆக முதலியாகத் தோள் மாலை இட்டிருக்கிறவதுக்குப் போரும்படியாக
முயல்வார் இயல் அமரர் முன்னம்-இயற்றியை யுடையரான நித்ய ஸூ ரிகள் முன்னே மஹா யத்னம் பண்ணுவார்கள் –
விஷய பிரவணராய் அவனை அறியாதவர்களும்
-இயல்வாக-சத்ருசமாக
நீதியால் ஓதி -முறையால் திரு நாமங்களை சொல்லி
நியமங்களால் பரவ-பரவும் படிக்கு ஈடாக -சாஸ்திரங்களில் சொல்லும் நியமங்களாலே பரவசமாகும் படிக்கு ஈடாக
-ஆதியாய் நின்றார் அவர்–அவர் தாமே –பிரதம ஸூ க்ருதம் ஆனார் –

இயல் அமரர் –இயற்றியை யுடைய அமரர் -/ முன்னம் -முந்துற முன்னம் /இயல்வாக–இதுவே யாத்திரையாக
யீன் துழாயான்-பரி பூர்ணன் / அடிக்கே செல்ல–திருவடிகளுக்குச் சேர /முயல்வார்-யத்னம் பண்ணுவார் –
-இயல்வாக-சத்ருசமாக /நீதியால் ஓதி -சாஸ்திர யுக்தமான படியே / நியமங்களால் பரவ-ஸ்ரவணாதிகளால் ஆஸ்ரயித்து
ஆதியாய் நின்றார் அவர் -அவர்களுக்கு உபேயத்துக்கு அடியானால் போலே வேண்டினவிடத்துக்கு இவர்களுக்கு
உபாயத்துக்கு அடியாக நின்றால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவனே இதுக்கும் வேண்டின பின்பு அவனையே பற்ற அமையாது என்றுமாம் –

————————————-

ஐஸ்வர்ய ஸூசகமான அழகிய திருத் துழாயை யுடையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்ட -சத்ருசமாக உத்யோகிப்பர்
-முந்துற முன்னம் அதுக்கு ஈடான யோக்யதையை யுடையரான நித்ய ஸூ ரிகள் -அல்லாத நம் போல்வாரும்
-ஸ்வ வர்ணாதிகளுக்கு நழுவுதல் வாராத படி அழகிதாகக் கொண்டு சாஸ்திர யுக்தமான விரத நியமாதி க்ரங்களோடே
அத்யயனத்தைப் பண்ணி -அதீதமான வேதத்தின் அர்த்தத்தை ஆச்சார்யன் பக்கலிலே கேட்டு மனனம் பண்ணி
அர்ச்சனை பிரணாமா கீர்த்த நாதிகளோடேகூட அனவரத பாவனை பண்ணுகை யாகிற நியமங்களாலே
பக்தி பரவசராய் பரவும்படிக்கு ஈடாக அப்படிப் பட்ட பெருமை யுடையவர் -பூர்வஜ -என்கிறபடியே
-ருசி உத்பாதகராய்க் கொண்டு முற்பாடராய் நின்றார் –ஆகையால் நமக்கு எல்லாம் ஆஸ்ரயிக்க குறையில்லை என்று கருத்து –
-இயலமரர் –இயற்றியை யுடையரான -யோக்யதை யுடையரான நித்ய ஸூ ரிகள் -என்றபடி –

————————————————————————————————————

பிரக்ருத்யா ஆஸ்ரயிக்குமவர்களை யும் சொல்லி -ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுமவனையும் சொல்லிற்று
-இது ஒன்றும் பெறாதாரைச் சொல்லுகிறது –
அவனை வேண்டாதார் படுகிற பாடு பாரீர் -என்கிறார் –

இப்படி ருசி உத்பாதகனாய்க் கொண்டு முற்பாடானாய் நிற்கிறவனை விட்டு -சம்சாரிகள் ஷூத்ர தேவதா ஸமாச்ரயணம்
பண்ணா நின்றார்கள் என்னில் –
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் அந்த ஆசிரயணீயரான தேவதைகளுக்கும் ஆசிரயணீயன் அவனே -என்கிறார் –

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் ———-14-

அவரவர் –ரஜஸ் பிரசுரரும் தமஸ் பிரசுரரும்
தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி-குணானுகுணமாக வெளிச் செறிந்த படி ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று -ரஜஸ் தமஸ் ஸூக்களுக்கு விஷயமானவரை என்னுடைய ஸ்வாமி என்று
சுவர் மிசைச்-சார்த்தியும் வைத்தும் தொழுவர் ——-சர்வேஸ்வரன் பக்கல் -எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பர்
-என்கிற செயலில் பித்தியிலே எழுதியும் வைத்தும் தொழுவர் –
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் —-இவர்களுடையவும் -ஆசிரயணீயங்கள் யுடையவும் தலையிலே அடியை வைத்தவனே பிரதானம் –
/ மூர்த்தி யுருவே முதல்–சர்வேஸ்வரனுடைய திரு மேனியே பிரதானம் –

அவரவர் பின்ன ருசிகள் / தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி -சாஸ்திரத்தின் பின் செல்லார் /
இவர் இவர்–சகர புத்திரர்கள் கண்டாரை -என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே -தோற்றினாரை
உலகளந்த-மூர்த்தி யுருவே முதல் –சமாஸ்ரயிப்பார் தலையிலும் ஸமாச்ரயணீயர் தலையிலும்
ஓக்கத் திகைத்த சர்வேஸ்வரன் -உருவே முதல் -வடிவே முதல் –

———————————————–

ரஜஸ் தமஸ் பிரசுரராய் பின்ன ருசிகளான அவ்வதிகாரிகள் -சாஸ்திர முகத்தால் அன்றிக்கே குணானுகுணமாக
தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே வாய் விட்டுப் புகழ்ந்து தங்கள் உகந்த குணங்களை யுடைய ஐயன் துர்க்கை
தொடக்கமாக ருத்ரன் முடிவாக உண்டான இவர்கள் நமக்கு ஆசிரயணீயரான ஸ்வாமிகள் என்று ஆதரித்துக் கொண்டு
ஒவ்வொரு தேவதைகளை ஓரோர் பித்திகளிலே சித்ர ரூபேண எழுதியும் க்ருஹம் தொடக்கமான
ஓரோர் இடங்களிலே ப்ரதிமா ரூபேண ப்ரதிஷ்டித்து வைத்தும் ஆஸ்ரயியா நிற்பார்கள் –
இவர்கள் இப்படிச் செய்தாலும் ஆச்ரயிக்கிறவர்களோடு -ஆசிரயணீயராக இவர்கள் விரும்புகிற அத்தேவதைகளோடு வாசியற
எல்லோரும் தன் கால் கீழே துகை யுண்ணும் படி ஜகத்தை அடைய அளந்து கொண்ட சர்வேஸ்வரன் திருமேனியை பிரதானம் –

——————————————————————————-

அவ்வோ தேவதைகளும் ஆச்ரயணீயராய்ச் சொல்லா நிற்கச் செய்தே -அவர்கள் அப்ரதானர் இவன் பிரதானன் என்று
சொல்லுகிறது உம்முடைய பக்ஷத்தாலே இ றே என்ன -அர்த்த தத்வம் இருந்தபடியேப் பார்க்கலாகாதோ -என்கிறார் –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் -புறம்பே ஆஸ்ரயிப்பார் சிலரும் ஆஸ்ரயித்தார்கு பலம் கொடுப்பார்
சிலருமாய் அன்றோ நாட்டில் நடந்து போருகிறது-என்ன -அவை யடங்கலும் வியர்த்தம் என்கிறார் –

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

முதலாவார் மூவரே –இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் அன்று இ றே -மூவர் இ றே பிரதானர்
அம்மூவருள்ளும்முதலாவான் –ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஜீவ வ்யவதாநத்தாலே -அந்தர்யாமியாயும்
-தன் பக்கலிலே ஸ்வேன ரூபேண நின்றும் காரணம் ஆவான் –
மூரி நீர் வண்ணன்-பொன்னுருவும் தீயுருவும் ஆனவர்கள் அன்று -பரப்பை யுடைத்தான கடல் வண்ணன் –
-முதலாய–காரணமான
நல்லான் அருள் அல்லால்-அறவனானவன் அருள் அல்லால்
நாம நீர் வையகத்துப்-பல்லார் அருளும் பழுது ——அவனுடைய அருள் ஒழிய அல்லாதார் எல்லாருடைய அருளும் பழுது
-அதிகாரிகள் ஆகையால் அவர்களை முற்படச் சொன்ன அத்தனை -பழுதாம் இடத்தில் அவர்களோடு அல்லாதாரோடு வாசி இல்லை
-அவனுக்கு வசராய்க் கொண்டு பலம் தரிலோ என்னில் இரண்டும் வியர்த்தம் –
முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முளை பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ
நாமம் -நாம மாத்ரரான பல்லார் என்னுதல் –பிரசித்தமான நீர் வையகம் என்னுதல் -பல்லார் -கீழ்ச் சொன்ன ப்ரஹ்ம ருத்ராதிகள் அகப்பட
-தனித்தனியவும் திரளவும் பழுது -வியர்த்தம் –

—————————————————

இவர் இவர் என்று இருந்ததே குடியாக ஆஸ்ரயணீயர் என்று பிரமியாதே ஸ்ருஷ்டியாதி கார்யங்களை
அதுக்கு அடைத்த வடிவு எடுத்து நடத்திக் கொண்டு போருகிற-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகள் ஆகிற மூவருமே
ஜகத்துக்கு ப்ரதானர் ஆவர் -அம் மூவர் தம்மில் சமர் என்றும் -மூவரும் கூட ஓன்று என்றும்
-மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன்-என்றும் பிரமியாதே -அந்த மூவரிலும் வைத்துக் கொண்டு பிரதானனாவான்
ப்ரஹ்மாதிகளை இடுக்கி ஸ்ருஷ்டியாதிகளை நிர்வகித்துப் போருமவனாய்-சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருக்கிற
வடிவையும் யுடையவன் ஆனவன் -ஜகத் காரண பூதனுமாய் சர்வ விஷயமான வாத்சல்யத்தையும் யுடையனானவனுடைய
கிருபை ஒழிய -பிரசித்த மான நீரையுடைத்தான ஜகத்தில் உள்ள பலருடைய பிரசாதமும் வியர்த்தம்
-இவனை ஒழிந்த மற்ற இவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர் களோடு வாசியற சர்வமும் வியர்த்தம்
அன்றிக்கே -நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது என்னவுமாம் -தான் பலியாத அளவன்றிக்கே
-பகவத் பிரசாதத்தையும் விலக்குவதாகையாலே-பழுது -என்கிறார்-

—————————————————————————————–

நல்லான் அருள் பெற்ற -எனக்கு சோகம் உண்டாயிற்று -என்கிறார் –
பண்டு உபாயாந்தரங்களிலும் தேவதாந்தரங்களிலும் ப்ரவணனாய் இழந்தேன் என்று சொல்லுகிறார் –

இதர தேவதைகளைப் பற்றி இவ்விஷயத்தை இழந்த நாட்டார் இழவைப் பரதவ நிஷ்கர்ஷ முகத்தாலே பரிஹரித்தவர்
-அநாதி காலம் இதர தேவதைகளையும் -இதர சாதனங்களையும் பற்றி இவ்விஷயத்தை அகன்று -திரிந்த தம் இழவை நினைத்து சோகிக்கிறார்

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் –போன காலம் அநாதி –வரும் காலம் அநந்தம் -இத்தோடு ஒத்த காலம் இறே போயிற்று என்று அழுதேன்
-இழவுக்கு அழுதார் ஆகில் அச்சம் ஆவது என் -வருமத்தை குறித்து அன்றோ அஞ்சிற்று என்னில் -அதிகாரி நான் ஆகில்
போன காலம் போலே ஆகிறதோ வருகிற காலமும் என்கிறார் –
யஸ்ய ராமம் ந பஸ்யேத்து யம் ச ராமோ ந பஸ்யதி –நிந்திதஸ்ச வ ஸேல் லோகே ஸ்வாத்மாப் யேநம் விகர்ஹதே-என்று
சொல்லுகிறது பெருமாளுடைய ஒரு நாளைக்கு இழவுக்கு இ றே
கடலோதம் காலலைப்பக் -திருவடிகளை -கடலோதமானது துடை குத்துமா போலே அலைப்ப
கண் வளரும் செங்கண்-அடலோத வண்ணரடி——அரவணை மேல் கண்டு தொழுதேன்–தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
பழுதே -பழுதும் பழுது அல்லாததும் கூடப் பெற்றேனோ / பல பகல் -இழந்த அநாதி காலம் பலவாய் -அதுக்கு அநந்தரம் அனந்த காலமான படி
போயின -போன நீர்களைக் கோலவோ–வரும் காலமும் பழைய காலமும் ஓன்று -பழைய நானே இன்னம்
அப்படியாகில் செய்வது என் –என்கிறார் -காலேஷ் வபி ச –
அரவணை மேல் கண்டு -பரியங்க வித்யையில் படியே பூர்ணமாகக் கண்டேன் / கண்டு தொழுதேன் -கண்டால் செய்யும் தொழில் /
கால் அலைப்ப -சிறு திவலை துடை குத்த / செங்கண் –வாத்சல்யம் தோற்றுகை / அடலோதம் -நெருங்கின ஓதம் –

———————————————

ஸுகுமார்ய அனுரூபமாக கடலின் சிறு திவலைகள் ஆனவை துடை குத்துவாரைப் போலே அனுகூலமாகத் திருவடிகளை ஸ்பர்சிக்க –
பாத்தாலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -வாத்சல்யத்தாலும் ஐஸ்வர்யத்தாலும் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடையனுமாய் –
-அனுபவிக்கப் புக்கவர்களை அபி பவித்து எழ வீசுகிற ஸுந்தர்ய தரங்கங்களோடு கூடின வடிவை யுடையவனுமானுடைய திருவடிகளை –
-வெளுத்த நிறத்தை யுடையனான திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே -ஞான சாஷாத்கார முகேன கண்டு அனுபவித்து –
-தத் அனந்தர பாவியான தொழுகையிலும் அந்வயிக்கப் பெற்றேன் –இப்படி அனுபவத்தோடு அடிக்க கழஞ்சு பெற்றுச் செல்லுகைக்கு-
உறுப்பான கீழ்க் கழிந்த காலம் எல்லாம் ஓன்று ஒழியாத படி வ்யர்த்தமே போய் விட்டதே -என்று கண்ண நீர் வெள்ளமிட இருந்து சோகித்தேன் –
கீழ் இழவுக்கு அடியான நம்முடைய கர்மம் இப்போதும் குறி அழியாதே கிடக்கையாலே
-மேலுள்ள காலத்திலும் -இவ்வனுபவத்துக்கு குறைத்தல் வரில் செய்வது என் -என்று பயப்பட்டு அழுதேன் –

———————————————————————————————

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அனுபவிக்கப் போமோ -பரமபதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
-இங்கே வெள்ளம் இட்ட அன்று தான் பெற்றேனோ -என்கிறார் –
பழுது என் என்னில் -இன்று கதை கேட்க இருந்தேன் என்பார் இ றே

திருப் பாற் கடலிலே சென்று கிட்ட வேண்டும் படி தூரமாய் நான் இழந்தேனோ-அவன் தானே எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து தூளிதானம் பண்ணா நிற்கச் செய்தே கிடீர்-நான் இழந்தேன் -என்கிறார் –

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று ——–17-

அடியும் படிகடப்பத் -கோலமாம் என் சென்னிக்கு -என்னும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையும் அளப்ப
தோள் திசை மேல் செல்ல–திருத் தோள்கள் திக்குகளில் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் –திரு அபிஷேகம் அண்ட பித்தி அளவும் நிமிர்ந்தது
வடியுகிரா-லீர்ந்தான் ஈராணியன தாகம்–கூரிய உகி ராலே ஹிரண்யனுடைய மார்வைப் பிளந்தான்
இருஞ்சிறைப் புள்-ளூர்ந்தான் உலகளந்த நான்று ——-பெரிய திருவடி முதுகில் இருக்கப் பொறாத மிருதுவான
திருவடிகளைக் கொண்டு உலகு அளந்த அன்று -அடியும் படி கடப்ப-தோள் திசை மேல் செல்ல -முடியும் விசும்பு அளந்தது -என்கிறார்
-நான் கேட்டார் வாய் கேட்டுப் போம் அத்தனை –
அடியும் படி கடப்ப-இத்யாதி -சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டது
-தோள் திக்குகளை எல்லை கண்டது –முடியும் அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று
-நின்றார் நின்ற படியே வெற்றி கொள்ளுமா போலே
வடிவு -இத்யாதி ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி -ஓர் இடத்திலே சென்று முகம் காட்டும் -அளவன்று இறே
ஜகத்துக்கு எல்லாம் ஏக காலத்திலே உதவின இது –

———————————

இந்திரன் கார்யம் செய்க்கைக்காக திரு வுலகு அளந்து அருளின காலத்திலே -கோலமாம் என் சென்னிக்கு -என்கிறபடியே
என் தலைக்கு அலங்காரமாக நான் ஆசைப்பட்டு இருக்கும் திருவடிகள் -காடும் ஓடுமான பூமியை அளந்து கொள்ள
-பிராட்டியை பரிஷ்வ்ங்கிக் கடவ திருத் தோள்கள் ஆனவை இடமடையும் படி திக்குகளின் மேலே வளர்ந்து செல்ல
-திரு அபிஷேகமும் அபரிச்சேதயமான ஆகாசத்தை முசிவற நிமிர்ந்து அளவு படுத்திக் கொண்டது -என்று
தத்வ வித்துக்களான ரிஷிகள் சொல்லா நிற்பர்கள் –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

———————————————————————————————

திரு உலகு அளந்தித்திலேயோ இழந்தது -அத்தோடு ஓக்க வரையாதே தீண்டிப் பரிமாறின கிருஷ்ணாவதாரத்தில் இழந்திலேனோ-என்கிறார் –

கடலில் கிடையிலும் அங்கு நின்றும் வந்து ஞாலத்தூடே நடந்த இடத்திலும் இழந்த அளவோ –
இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும் படி இடைக்குலத்திலே வந்து பிறந்த இடத்திலும் இழந்தேன் இறே -என்று சோகிக்கிறார் –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் ———18-

நான்ற முலைத்தலை–தொங்குகிற ஸ்தாத்தில் இருக்கிற
தோன்ற வுண்டான்-திருடி எல்லாரும் அறியும் படியாக அமுது செய்தவனும் –
வென்றி சூழ் களிற்றை-வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய குவலயா பீடத்தை –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு -இவன் தன்னுடைய வாயை முலையில் வைக்க ஸ்வரூபா பத்தியைப் பெற்றாள் அவள்
–ஆரேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கு ஸ்வரூபாபத்தி தப்பாது -எல்லாருக்கும் வந்தேறி போம் -ஸ்வேன ரூபேண அபி நிஷ் பத்யதே–என்கிறபடியே –
உறி வெண்ணெய்-தோன்ற வுண்டான் -உறியில் சேமித்து வைத்த வெண்ணையைக் கண்டு எட்டி யுண்டு -களவு தோற்றும் படி உண்டான் –
வென்றி சூழ் களிற்றை –வென்றி மிக்க களிற்றை-வெற்றியை யுடைத்தாய் இவனைச் சூழ்க்க நினைத்த களிற்றை -என்றுமாம் –
ஊன்றிப்-ஆனைப் பூசல் என்று இராதே கிட்டி -மருப்பொசித்த பாகன் -என்னும் படியே
பொருதுடைவு கண்டானும் -பசலைக் கலம் போலே உடையும் படி கண்டவன் -இடைவு கண்டான் -என்றுமாம் –
புள்ளின் வாய் கீண்டானும்-மருதிடை போய் மண்ணளந்த மால் —திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிறது-
-கிருஷ்ணாவதாரத்துக்கும் திரு உலகு அளந்து அருளின இடத்துக்கும் அழகும் முஃத்யமும் ஆஸ்ரித பக்ஷபாதமும்
-உள்ளிடடவை இரண்டு இடத்துக்கும் ஒத்து இருக்கும் –
நான்ற -இத்யாதி -தன் க்ருத்ரிமான பால் போன வாறே அந்த முலை பையான படி /
தோன்ற யுண்டான் -சிசுபாலாதிகளும் ஏசும் படி / வென்றி இத்யாதி -வெற்றியையும் சூழ்ச்சியையும் யுடைய
/ஊன்றி -தரித்து நின்று /உடைவு -கருவிப் பை போலே ஆக்கின படி / மண்ணளந்த மால் -பின்னாட்டின படி –

———————————————–

பேய் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்டு வந்த பூதனையுடைய பாலின் கனத்தாலே சரிந்து நாலுகிற
முலையில் யுண்டான நஞ்சை -அவள் பிணமாய் விழும்படி அமுது செய்து -உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெயை சிசுபாலாதிகள் கோஷ்ட்டியிலும் பிரசித்தமாம் படி அமுது செய்து அருளினவனாய்-
-வெற்றியை யுடைத்தாய் -எதிர்த்தவர்களை தப்பாமல் சூழ்த்துக் கொள்ள வல்ல குவலயா பீடத்தை
கஜ யுத்தத்துக்கு தேசிகரான வர்களை போலே உறைக்க நின்று பொருது தலை எடுக்க மாட்டாமல்
உரு அழிந்து உளுக்காம் படி பண்ணினவனும் -தன்னை விழுங்க வந்த பகாஸூரன் வாயை
கிழித்துப் பொகட்டவனும்-யாமளார்ஜுனங்களின் நடுவே அவை வேர் பரிந்து விழுந்தபடி தவழ்ந்து
போய் பூமி முதலான லோகங்களை அளந்து கொண்ட சர்வாதிகன் கிடீர் –

———————————————————————————————–

அவதாரம் ஒழியப் பெற்றாரும் உண்டு கிடீர் -என்கிறார் –
நான் தீண்டப் பெறாதே மயங்கா நின்றேன் -நீ தீண்டப் பெற்று பரவசமாகா நின்றாய் -பூமியைப் போலே ஒரு கால் இன்றியே
நித்ய சம்ச்லேஷம் பெறுவதே கடல் -என்று கொண்டாடுகிறார் –

காதாசித்கமான அனுபவம் கிடையாமையால் -நான் கண்ண நீர் விழ விடா நிற்க -அவனை மடியிலே சாய விட்டு
முழு நோக்குச் செய்து நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற நீ என்ன பாக்யம் பண்ணினாய் -என்கிறார் –

மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ———-19-

மாலும்-மது பான மத்தரைப் போலே பிச்சேறா நின்ற
கருங்கடலே-பெற்ற பேறு உன்னுடம்பே கோள் சொல்லுகிறது இல்லையோ -இல்லையாகில் உடம்பு வெளுத்து இராதோ–
என்நோற்றாய்-ஆசையை விட்டு நானும் நோற்கும் படி சொல்லாய் –
வையகமுண்-டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று ——–சிறு வயிற்றிலே பூமி எல்லாவற்றையும் அடக்கி -பவனான ஆலிலையில்
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருமேனியைத் தீண்டப் பெற்று
மாலும் -மதுபான மத்தரைப் போலே பிச்சேறுகிற கடலே –
கருங்கடல் -உடம்பு வெளுக்க வேண்டாவே
ஆழியான் -ஏகார்ணவத்திலும் -திருப் பாற் கடலிலும் துயின்ற -என்னுதல் -/ ஆஸிலே கை வைத்து
-பிரளயத்தை இரு துண்டமாக விடுவேன் என்று இருக்கும் -என்றுமாம் –
பிராட்டிமாரோடு ஊடின போதும் உனக்கு பிரிவு இல்லை –
கடலும் எம்பெருமானும் -ஸ்ரீ பாரத ஆழ்வானும் பெருமாளையும் போலே நிறம்
ப்ரஹ்ம பிராப்தி பலமாய் கைங்கர்யம் ஆனுஷங்கிகம் -ஆனால் போலே திருமேனி தீண்டுகை பிராப்தம் –
-கைங்கர்யம் அவகாதத்தில் ஸ் வேதம் போலே உபாயத்திலும் ஸ்வரூப ஞானம் பிறந்தால் வியவசாயம் ஆனுஷங்கிகம் –

———————————————

ஜகத்தை அடைய பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே எடுத்து வைத்து ஓர் ஆலம் தளிரிலே -கண் வளர்ந்து அருளினவனாய்
-பிரளயம் வரில் இரு துண்டமாக விடுகைக்கு பரிகரமான திருவாழியை யுடையனுமாய் -அழகிய கறுத்த நிறத்தை யுடைய திரு மேனியையும்
-அதுக்குப் பகைத் தொடையாகும் படி வாத்சல்யத்தாலே குதறிச் சிவந்த திருக் கண்களையும் யுடையனாய்-
-ஆஸ்ரித வியாமுக்தனானவன் கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் -சர்வ காலத்திலும் அவன் திருமேனியை நீ அனுபவிக்கப் பெற்று-
-அந்த ஸ்பர்ச ஸூகத்தாலே மயங்கா நிற்பதாய் -அவன் வடிவின் நிழலீட்டாலே கறுத்த நிறத்தை யுடைய கடலே-
-இப்பேறு பெறுகைக்கு என்ன சாதன அனுஷ்டானம் பண்ணினாய் -அத்தைச் சொல்ல மாட்டாயோ நானும் அனுஷ்ட்டித்துப் பார்க்கைக்கு -என்று கருத்து –
மால் -என்று பெருமையைச் சொல்லுகிறது என்றுமாம் –

——————————————————————————————-

பெற்றார் தளை கழல -என்கிற -இத்தால் கிருஷ்ணாவதாரத்தை சொல்லவுமாம்
-வாமனாவதாரம் தன்னையே சொல்லுகிறது ஆகவுமாம் –
படுக்கையாய் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ -தேவதாந்தரங்களுக்கு தன்னைக் கொடா நிற்க என்கிறார்

கடல் அவனைப் பெற்று களித்த அளவேயோ-அப்படுக்கையை விட்டு -இங்கே வந்து அவதரித்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார் –

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——-20–

பெற்றார் தளை கழலப் -பேர்ந்து -பிறந்து -என்றுமாம் -ஆரேனுமாக ஸ்பர்சிக்கப் பெற்றார்க்கு –தளை கழல-
பேர்ந்தோர் குறளுருவாய்ச்-செற்றார் படி கடந்த –செங்கண் மால்— இந்திரனுக்கு அன்று ஆகாத சத்ரு தனக்கு ஆகாதே
–த்விஷத் அன்னம் நபோக்த்வயம்–யஸ்த்வாம் த்வேஷ்ட்டிச மாம் த்வேஷ்ட்டி –மஹா பலி என்னது என்று அபிமானித்த பூமியை அளந்த சர்வேஸ்வரன் –
  நற்றா-மரை மலர்ச் சேவடியை –செவ்வி மாறாதே இருந்துள்ள திருவடிகளை
வானவர் கை கூப்பி-நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——-திரள நின்று பூவைக் கொண்டு ஏத்துவார் -என்றுமாம்
-தொடுத்த மாலை கொண்டு ஏத்துவார் என்றுமாம் –

பெற்றார் -நிதி எடுக்கப் பெற்றார் என்னுமா போலே -என் பிள்ளை என்று அபிமானித்தால் தளை கழலா நின்றால்
-அடியோம் என்றால் தளை கழலச் சொல்ல வேணுமோ –
பேர்ந்து -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று என்னவுமாம் -திருப் பாற் கடலில் நின்றும் வந்தான் ஆகவுமாம் –
ஓர் குறள்-நாட்டில் வாமனர்கள் இவன் வளர்ந்து அருளின இடத்தோடு ஒக்கும் –
செற்றார் -தன்னைச் செற்றார் -மம பிராணா ஹி —
படி கடந்த -இக்காடுமோடையும் அளந்த -பிறரது பெற்றால் போலே இருப்பதே /
செங்கண் -ஆஸ்ரிதர் அபேக்ஷிதம் முடிக்க பெறுகையால் -/மால் -செய்தது போராது என்று இருக்கை
நல் தாமரை -செவ்விக்கும் அழகுக்கும் குளிர்த்திக்கும் சத்ருசமான தாமரை தேடுகிறார் /
வானவர் -எட்டாத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கை
கை கூப்பி -அவசா பிரதிபே திரே / நிரை மலர் -ஏற்கவே தொடை ஒத்த துளபம் கொண்டு இருந்தார்களோ
ஏத்துவரால் -இப்படி பிறந்தார் பெறாது ஒழிவதே / நின்று-கிண்ணகத்தே எதிர்த்து நின்று –

—————————————-

தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வாஸூ தேவர் தேவகியாருடைய காலிலிட்ட விலங்கு நீங்கும் படியாகப் பரம பதத்தின்
நின்றும் போந்து -இங்கே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து அவ்வளவு இல்லாமல் அழகுக்கு அத்விதீயமாய் –
-கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியான வாமன வேஷத்தை யுடையனாய் -ஆஸ்ரிதனான இந்திரனை
நெருக்குகையாலே தனக்கு சத்ருவான மஹா பலி போல்வார் என்னது என்று அபிமானித்திருக்கிற பூமியை
அநாயாசேன அளந்து கொண்டவனாய் -பாத்தாலே வந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்
-ஆஸ்ரித வியாமுக்தன் ஆனவனுடைய அழகிய தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளை-
-இந்நீர்மை ஏறிப் பாயாத ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற இந்த்ராதிகள் இச்செயலுக்குத் தோற்று அஞ்சலி பந்தத்தைப் பண்ணி
-தொடை வாய்ந்து இருந்துள்ள செவ்வித் பூக்களை பரிமாறிக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பெறுவார்களாம்
-பாவியேன் நாமே இழப்போம் -என்று வெறுக்கிறார் –

———————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: