ஐஸ்வர்ய கைவல்யங்களிலே புகாதே-அவன் தன்னையே ஆசைப்படப் பார் என்கிறார் –
ஒரு நாயகமாய் -ஐஸ்வர்யா கைவாக்யங்கள் த்யாஜ்யங்கள் -போல் இங்கு-பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்றவாறு )
நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –
நன்று பிணி மூப்புக் கை யகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–
பதவுரை
ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) கடல் போல் ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]ஜரா மரண மோஷாயா -கைவல்யம் -இஷ்ட ப்ராப்தியில் ஆசை இல்லாமல் நினிஷ்டம் தொலைய மாத்திரம் -போக்கடிப்பதே பிரதானம் -அடைந்து அனுபவிப்பது இல்லையே -ஆகவே கையகற்றி -பத பிரத்யோகம்
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]-நான்கு ஊழி -உப லக்ஷணம் எண்ணிறந்த -அநந்தம் -என்றும் கொள்ளலாம்
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.
நன்று பிணி மூப்புக் கையகற்றி –இத்தால் கைவல்யத்தைச் சொல்கிறது(ஜரா மரண மோஷாயா -ஸ்ரீ கீதை -7-29-)
நான் கூழி-நின்று நிலமுழுது மாண்டாலும் –ப்ரஹ்மாவினுடைய ஐஸ்வர்யத்தைப் பெற்றாலும்
என்றும்-ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்–அளவுடைய நெஞ்சே –நீயே முற்பட்டு இருக்கிற உன்னை இரக்கிறேன் இறே(குறுகா –அளவில் இன்பம்–திருவாய் 6-9-10-)
அடலாழி கொண்டான் மாட்டன்பு விடல் –விடாதே கொள் -(விடாமல் பக்தி செய்வாய் )வேண்டினேன் கண்டாய் –பால் குடிக்க இரக்கிறேன் இறே-
ஐஸ்வர்யம் நிலை நில்லாது -கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம் என்கை –
அன்றியே இரண்டையும் சேர்த்துத் தரிலும் -விடல் -இவை நன்றான அன்றும் -அவன் அல்லாமையையும்
பற்றுகைக்கு அவனாக அமையும் -வேண்டினேன் -இவ்வர்த்தம் -அடலாழி இத்யாதி -எனக்கு கைக் கூலி தந்து பற்றும் விஷயம் -(அடல் ஆழியும் கையுமாக அழகைக் காட்டி லஞ்சம் கொடுத்து என்னைத் திருத்திக் கைக்கொண்டான் -)
(ஆரானும் யாதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே -பெரிய திருவந்தாதி -25
நான்கு ஊழி -அநந்த காலம் என்றபடி)
———————————————————————–
நாட்டாரைக் கொண்டு கார்யம் என் -நெஞ்சே நீ இவ் விஷயத்தைக் கை விடாதே கிடாய் -என்கிறார் –
கேவல ஆத்ம அனுபவத்துக்கு விலக்கான -வியாதி ஜரை தொடக்கமானவற்றை நன்றாகக் கை கழல விட்டு
இப்படி பிரகிருதி விநிர்முகனான ஆத்மாவை அனுபவிக்கை யாகிற கைவல்ய புருஷார்த்தத்தோடே
கால தத்வம் உள்ள தனையும் நெடுகி நின்று பூமி தொடக்கமாக ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக உண்டான
இவ்வண்ட ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் ஸ்வ அதீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும் -அளவுடைய நெஞ்சே
யுத்த உன்முகமான திரு வாழியை திருக் கையிலே தரித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன் விஷயத்தில் உண்டான
ஸ்நேஹத்தை சர்வ காலத்திலும் விடாதே கொள்-
இவ் வேப்பங்குடி நீரைப் பருகைக்கு உன் காலைப் பிடித்து வேண்டிக் கொள்கிறேன் கிடாய் -என்கிறார் –
——————————————————————————-
சிஷ்யர்கள் ஆச்சார்யர்கள் ஆனார்கள் -(நெஞ்சும் புலன்களுமான சிஷ்யர்கள் ஞானமுடைய ஆத்மாவுக்கு உபதேசம் )
இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ்விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அன்பாழி யானை யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித் தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-
பதவுரை
அன்பு—பகவத் பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது(அன்பு இருக்கும் இடம் என்று சொல்ல வேண்டாத படி -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போல் அன்பு என்றே சொல்லலாம் படியான நெஞ்சு நெஞ்சு
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பே போல் )
ஆழியானை–ஸர்வேஸ்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;(பண் ஆழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;(ஊழி காணான் திரு நாமம் சாதிக்கிறார் -பழைய காலத்தையே பார்க்காமல் -பழைய காலங்களில் செய்த பாபங்களைக் கணிசியான் )
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப் பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.
அன்பாழி யானை யணுகு என்னும் –அன்பு -என்று நெஞ்சை சொல்லிற்று (விஞ்ஞாதா என்னாதே விஞ்ஞானம் என்று சொல்லுமா போல் )அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு விடாதே -என்று
திரு உள்ளத்தை இரக்க -அதுவும் நீர் ஆழியானை விடாதே கொள் என்கிறது
நா வவன் தன்-பண்பாழித் தோள் பரவி யேத்து என்னும் –நாவானது அவனுடைய ஸுந்தர்ய ஸாகரமான தோள்களை
அக்ரமமாக ஏத்து என்னா நின்றது -முடியும் படி யாதொன்று அறியாது காணும் –
முன்பூழி-காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்-பூணாரம் பூண்டான் புகழ் —-
சாபராதராய் இருந்துள்ள நம்மால் அவனைக் கிட்டப் போமோ என்னில்
ஓர் அடி வர நின்றால் குற்றமே அன்றியே குற்றம் கிடக்கும் நாளும் காண வரியான் என்கிறது
முன்பூழி-காணானை-அவனைக் காணும் என்னா நின்றது கண்
செவி இத்யாதி -குற்றம் பார்த்து போகிறான் ஆகிலும்
விடாய் போகாத ஆபரண சோபையை உடையவனுடைய புகழைக் கேள் என்னா நின்றது செவி –
ஆழியானை -ராஜ புத்திரர்கள் இடைச் சேரிக்குள் அகப்படுமா போலே —
பண்பு ஆழித் தோள் -ஸுந்தர்ய ஸாகரமான(பண் பாழி -அழகும் மிடுக்கும் என்றுமாம் )
பரவி ஏத்து -நீ ஏத்தும் க்ரமம் தப்பாமே
முன்பு இத்யாதி -நாம் பண்ணி வைத்த பாபங்களை நினைத்துச் சீறிலோ என்னில் பாபமும் கீழ்க் கிடந்த காலமும் மறக்கும்
கண் கண்டவாறே தெரியும் இ றே -சீறி நோக்கும் நோக்கும் -வாத்சல்யத்தாலே நோக்கும் நோக்கும் -(கோபத்தால் சிவந்தது என்னைக் காண்பதற்கு முன்பு -வாத்சல்யத்தாலே சிவந்தது -என்னைக் கண்ட பின்பு )
செவி கேள் என்னும் -செவிக்கு விக்ருதி சொல்ல அவசரம் இல்லை – பூண் ஆரம்–ஆபரணமாக உடம்புக்கு ஆபரணம் –
சர்வ பூஷண பூஷார்ஹா பூஷணார்ஹம்–மற்றைய ஆபரண்களுக்கு ஆபரணம் என்றும் -பூண்டான் -பூண வல்ல அழகு – புகழ் ப்ரஹ்ம பூஷணம் -(ஆபரணங்களை அழகூட்டும் பெருமாள் )
(அன்பே வடிவானதால் மனஸை அன்பு என்கிறார்
விஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே -அறிவை யுடைய ஆத்மாவையே அறிவு என்று உபநிஷத் சொல்வது போல்
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-3-29-)
———————————————————–
இவர் கரணங்கள் இவருக்கு முன்னே அங்கே பிரவணமாய் -குரு சிஷ்ய க்ரமம் மாறாடி எதிரே நின்று –
ஆழ்வீர்-நீர் இவ் விஷயத்தை விடாதே கிடீர் என்று அவை தான் தமக்கு முன்னே உபதேசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –
அன்பு என்றும் -அன்புக்கு ஆஸ்ரயம் என்றும் தெரியாத படி அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
நெஞ்சானது திருவாழி யுடையவனானவனைக் கிட்டி அனுபவி என்று உபதேசியா நிற்கும் –
வாக் இந்த்ரியமானது நீர்மையையும் மிடுக்கையையும் யுடைத்தான அவனுடைய தோளை அடைவு கெடப் பேசிக் கொண்டு
ஸ்தோத்ரம் பண்ணு என்னா நிற்கும் -கண்களானவை -நம் அபராதம் காணாத அளவன்றிக்கே
அபராதம் பண்ணின முன்புள்ள காலத்தையும் காணாதவனைக் கண்டு அனுபவி என்னும்
செவிகள் ஆனவை ஆபரணமாக திரு மேனிக்கு ஆபரணமாகப் பூணப்படும் ஹாரம் முதலான
திவ்ய ஆபரணங்களை அழகு பெறப் பூண்டு இருக்குமவனுடைய கல்யாண குணங்களைக் கேளாய் என்று
தூண்டா நிற்கும் —
பண் பாழித் தோள் -என்று (பண்பு ஆழி )ஸுந்தர்ய ஸாகரமான திருத் தோள் -என்னவுமாம் –
———————————————————————————————————–
கீழ் தம்முடைய இந்திரியங்கள் ப்ரவணமான படி சொல்லிற்று -அவ்விஷயம் தான்
இனி அறிய ப்ராப்தமாய் இருந்தது -நீ அத்தைப் பற்றிலும் பற்று -விடிலும் விடு என்கிறது –
(உடலும் உயிரும் ஏற்றான் ——சேதன அசேதனங்கள் சரீரம் பிரகாரம்-சிறு மயிர்க்காலால் சமஸ்த வற்றையும் தரிக்கிறேன் -கீதை )
அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –
புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-
பதவுரை
நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக் கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜல பூர்த்தியை யுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.
புகழ்வாய் பழிப்பாய்–புகழிலும் புகழ் -பழிக்கிலும் பழி
நீ பூந்துழா யானை-பழித்தல் இகழ்தல் செய்யப் போமோ -என்கிறது –
இகழ்வாய் கருதுவாய்–இகழிலும் இகழ்-கருதிலும் கருது —
என் நெஞ்சே -நாட்டுக்குச் சொல்கிறேனோ -உனக்கு அன்றோ –
திகழ் நீர்க்-கடலும் மலையும் -இரண்டாலுமாகக் கார்யத்தைச் சொல்லுகிறது –
இரு விசும்பும் காற்றும்-காரண பூதங்களுக்கும் உப லக்ஷணம்
உடலும் உயிரும் -காரணமான சித் அசித்துக்களை சொல்கிறது
உடலும் உயிரும் ஏற்றான் ——-இத்தால் இவை எல்லாம் அவனுக்கு கார்ய தயா சேஷம் -அவன் சேஷி என்கிறது
அவை மத்தியஸ்தம் என்னும் படி தம்முடைய ப்ராவண்யம் –
புகழ் இத்யாதி -வாசகத்துக்கு -இகழ்வாய் கருதுவாய் -மனஸ்ஸூ -என் நெஞ்சே -புகழ்ந்து பழகின நெஞ்சே
பூந்துழாயானை புகழ்ந்து அல்லது நிற்க ஒட்டாது —
ஏற்றான் -ஆதாரத்தைப் பற்றிலும் பற்று -ஆதேயத்தைப் பற்றிலும் பற்று -இது இருந்த படி –
(உடலும் -உயிரும் -உடல் என்று தர்ம சாதனமான இந்திரியங்களுக்கு உப லக்ஷணம்
தர்ம சாதகமாய் இருக்கும் பெருமையால் தனித்து எடுத்து அருளுகிறார்
உயிர் என்றது தர்ம பூத ஞானம் -நித்ய விபூதி முதலான அஜடப் பொருள்களுக்கு உப லக்ஷணம் )
——————————————————————–
அந்தக் கரணங்கள் தானும் கீழ்ப்படும் படி தாம் அவ் விஷயத்திலே ப்ரவணரான படியை அருளிச் செய்கிறார் –
நல்லது இன்னது என்று வகை இட்டு அறிய வல்ல நெஞ்சே -இப்படி நல்லது காண வல்ல நீ புகழ்ந்து அல்லது நிற்க
ஒண்ணாத படி அழகிய திருத் துழாயாலே அலங்க்ருதனானவனை வாய் விட்டுப் புகழ்வாய் -அன்றிக்கே பழிப்பாய்–செய்தபடி செய்
இப் பொகடு சரக்கான விஷயத்தை அநாதரிப்பாய் -(பொகடு சரக்கான விஷயம் -விடத் தக்க விஷயத்தை தானே அநாதரிக்க வேண்டும் )அன்றிக்கே ஆதரிப்பாய் -செய்த படி செய்
விளங்கா நின்றுள்ள ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடலும் பர்வதமும் பரப்பை யுடைத்தான
ஆகாசமும் -வாயுவும் -தேவாதி சரீரங்களும் -தத் தத் சரீரஸ்தங்களான ஆத்ம வர்க்கமும் ஆகிற இவ் வஸ்துக்கள் எல்லாம்
தான் என்ற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும் படி (அப்ருதக் ஸித்த விசேஷணம் விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருப்பதே பிரகாரம் )சர்வ பிரகாரியாய் இருப்பான் ஒருத்தன் –
இப்படி சர்வ பிரகாரியாய் நிற்கிறவனைப் பற்றிலும் பற்று -அன்றிக்கே பிரகாரத்தில் ஒன்றைப் பற்றிலும் பற்று என்றபடி
அன்றிக்கே உடலும் உயிருமான இப் பதார்த்தங்களை ஏற்றான் -தரித்தான் -என்றுமாம் –
(கடல் மலை-ப்ரஹ்மாதி தேவர்கள் — பிரகாரங்கள் இவற்றை முன்னிட்டுப் பற்று- பற்று -பற்றா விட்டாலும் பகவத் ஸ்திதி இதுவே)
———————————————————————————————————
இது இவனுக்கு ஏற்றமாகச் சொல்லுவான் என் -அல்லாத ருத்ரனும் இப்படி சேஷியாய் அன்றோ இருப்பது என்னில்
அவனுடைய பிரகாரங்களை பார்த்தால் ரஷ்யமாகத் தோற்றும் -இவனைப் பார்த்தால் ரக்ஷகனாக இருக்கும் என்கிறது
(ஆகாசாத் பதிதம் தோயம் -கேசவன் கச்சதி கச்சதி-நம் கண்ணன் அல்லது கண் அல்லையே -ந ஹி பாலந சாமர்த்தியம் -பலவற்றையும் பட்டியல் இடுகிறார்
ஏற்றான் -எயில்எரித்தான்-நீற்றான்-கூற்றொரு பால் மங்கையான்-வார் சடையான்-கங்கையான்
புள்ளூர்ந்தான்-மார்விடந்தான்-நிழல் மணி வண்ணத்தான்-பூ மகளான்-நீண் முடியான்-நீள் கழலான்
ஒவ்வொன்றும் இவனே ரக்ஷகன் என்பதை பறை சாற்றுமே )
அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –
ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு —-74-
பதவுரை
ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துக் கொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத் திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேஸ்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.
ஏற்றான் புள்ளூர்ந்தான்-வேதாத்மாவான திருவடியைத் தனக்கு வாஹனமாக யுடையனாய் இருக்குமாகில்
அவன் அப்ரஸித்தமாய் இருபத்தொரு எருத்தை வாஹனமாக உடையனாய் இருக்கும் –
எயில் எரித்தான் -ஆஸ்ரிதரை ஒரு வியாஜ்யத்தில் அழிக்குமவன்
மார்விடந்தான்-ஆஸ்ரிதற்காக தன்னை அழிய மாறும் இவன்
நீற்றான்–பஸ்மச்சந்த -என்று பிராயச்சித்தம் பண்ணும் அவன் –
நிழல் மணி வண்ணத்தான் -கண்டால் ஸ்ரமஹரமான வடிவு இவனது –
கூற்றொரு பால்-மங்கையான்–ஒரு ஸ்திரீயை தனக்கே வைத்துக் கொண்டு இருக்குமவன்
பூ மகளான்–அஸ்யேசாநா ஜகதோ விஷ்ணு பத் நீ -என்னுமவளைத் தனக்காக யுடையவன் இவன்
வார் சடையான்–சாதக வேஷன் அவன் –
நீண் முடியான்-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு முடியை யுடையவன் இவன் –
கங்கையான்-பாவ நார்த்தமாக கங்கையைத் தரித்து கொண்டு இருக்கும் அவன் -(சிவ பூத் ஆனான் )
நீள் கழலான் —அந்த தீர்த்த பூதையான கங்கைக்கு உத்பாதகமான திருவடியை யுடையவன் இவன் –
ஏற்றான் –எயில் எரித்தான் –நீற்றான் –கூற்றொரு பால்
மங்கையான் – வார் சடையான் -கங்கையான் ஆன அவன் –
புள்ளூர்ந்தான் –மார்விடந்தான்–நிழல் மணி வண்ணத்தான் -பூ மகளான்–நீண் முடியான்-நீள் கழலான்-இவன்
காப்பு-அவனுடைய ரக்ஷை இவன் –
உடலும் உயிரும் என்றத்தோடு இவனோடு வாசி இல்லை -அவனுக்கு சேஷமாம் இடத்தில் –
(விஷ்ணுர் ஆத்மா பகவத பவஸ்யாமி த தேஜஸ தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம் சர்க்கம் ச விஷேஹே மஹேஸ்வரம் –பாரதம்
மத்யம் பீத்வா குரு தாராம்ஸ் ச கத்வா ஸ்தேயம் க்ருத்வா ப்ரஹ்மஹத்யாஸ் ச க்ருத்வா
பஸ்மச் சன்னோ பஸ்ம ஸய்யா சயா நோ ருத்ரத் யாயீ முச்யதே ஸர்வ பாபை –சாதாதப ஸ்ம்ருதி –பிராகிருத சரீரத்தை யுடையவன்
நீல தோயதா மத்யஸ்தா
புருஷம் கிருஷ்ண பிங்களம்
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி
பாவ நார்த்தம் ஜடா மத்யே ததார சிரஸா ஹர
யச்சவ் ச நிஸ் ஸ்ருத சரித் ப்ரவரோ தநேந மூர்த் நி வித்ருதேந சிவ சிவோ அபூத்)
—————————————————————-
அவனே ஆஸ்ரயணீயன் என்பான் என் -ருத்ரனை ஆஸ்ரயணீயனாகக் கொண்டாலோ என்ன
அவனும் அவனுக்கு சரீர பூதனாகையாலே அவனே ரக்ஷகன் என்கிறார் –
தமஸ் பிரக்ருதியான தனக்குச் சேரும் படி அஞ்ஞமான ருஷபத்தை வாஹனமாக யுடையனாய்
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் குடியிருப்பான த்ரி புரத்தை மஞ்சாட்டமாக சுட்டுக் பொகட்டவனாய் -ப்ராயச்சித்தி என்று
தோற்றும்படி பஸ்மோத் தூளிக சர்வாங்கனாய் சரீரத்தில் ஒரு பார்ஸ்வ பிரதேசத்தில் பார்வதியைத் தரிக்குமவனாய்
சாதகத்வ ஸூ சகமான தாழ்ந்த ஜடையை யுடையவனாய் -பாவ நார்த்தமாக ஜடா மத்யத்திலே தரிக்கப் பட்ட கங்கையை யுடையனான ருத்ரன் –
த்ரயீ மயனான பெரிய திருவடியை வாஹனமாக யுடையவனாய் -ஆஸ்ரித விரோதியான ஹிரண்யன் மார்வைப் பிளந்து பொகட்டவனாய்
ஸ்ரமஹரமான நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனாய் புஷ்ப நிவாஸினியான பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக யுடையவனாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடையவனாய் கங்கோத் பத்தி ஸ்தானமான நீண்ட
திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய ரக்ஷையாய் இருக்கும் –
(சதுர் முகன் கையில் சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில்
துலாயாம் ஸ்ரவணே ஜாதம் -பாஞ்ச ஜன்ய அம்சம் -ஓங்கார விளக்கம் அருளிச் செய்யவே முதல் திருவந்தாதி
அநந்யார்ஹ சேஷ பூதன் -அவனே ப்ராப்யம் ப்ராபகம் –
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்தும் ப்ரகார தயா சேஷம் -)
—————————————————————————————————————-
சேஷியாய் இருந்துள்ள உன்னை உணர பிரதிபந்தகம் எல்லாம் போம் என்கிறது –
இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –
காப்புன்னைக் யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி ———–75-
பதவுரை
திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு-உன்னிப்பதுக்கு மேல் த்யானம்
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.
அநிஷ்டம் தொலையப் பெற்று இஷ்ட பிராப்தியும் பெறுவார்கள்
காப்புன்னைக் யுன்னக் கழியும் –உன்னை உணர -காப்பு -காவல் -தேவதைகள் -கழியும் -( ஆதித்ய சந்திரன் பகல் இரவு அபிமான தெய்வங்கள் தர்மம் –14 தேவதைகள் )
காப்பு என்கிறது -ஈஸ்வரனுக்குப் புரவர் போலே இவ் வாத்மாக்கள் செய்த கர்மங்களை ஆராயக் கடவரான
சந்த்ராதித்யர்கள் தொடக்கமான பதினாலு பேருடைய சிறைகள் -கர்ம வஸ்யனாகை இறே இவர்கள் காக்கைக்கு அடி -(பெருமானுக்கு வஸ்யமானால் -யம தர்மராஜன் மது ஸூதன ப்ரப்ருதிகளை ப்ரபு என்றே கொள்வான் -இது உப லக்ஷணம் மற்ற தெய்வங்களுக்கு )
அரு வினைகள்-ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து ஒழியும் –அக் காப்புக்கு அடியான அவித்யாதிகளால் யுண்டான பந்தம் உன்னை நினைக்க நெகிழும் –
மூப்புன்னைச்-சிந்திப்பார்க்கு இல்லை –காப்பும் அருவினைகளும் போன அதிகாரிகளுக்கு –மூப்பாவது -கைவல்யம் –
அன்றியே -ஷட்பாவ விகாரங்களுக்கும் உப லக்ஷணம் ஆகவுமாம்
திரு மாலே –ஈஸ்வரன் ஸ்வ தந்தர்யத்தாலே ஆராயப் புக்காலும் பிராயச்சித்த சாத்தியம் அல்லாத பாபம்
நாம் பொறுக்கும் அத்தனை அன்றோ என்று உணர்த்துவாள் ஒருத்தி அருகே உண்டு என்கிறது
தாசீ நாம் ராவண ஸ்யாஹம் மர்ஷய மீஹ துர்பலா —-ராஜ சம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞ்ஞயா –என்கிறபடியே
நின்னடியை-வந்திப்பார் காண்பர் வழி ——–உன் திருவடிகளிலே விழுவார்கள் நல்ல வழி காண்பர் –
வழி -என்று அர்ச்சிராதி கதி என்றுமாம் -பரமபதம் போலே பரமபதத்துக்கு போம் வழி –நரகம் போலே பொல்லாதாய் இருக்கும் நரகத்துக்கு போம் வழி —
பிரபு –அந்யந்ருணாம் நவைஷ்ணவாணாம் தே வர்ஷி –இத்யாதி –(நாராயணனுக்கு அடிமைப் பட்டவன் தேவ ரிஷி பித்ரு கடன்களில் இருந்து மீட்கப்படுகிறான் )
அருவினை -அவித்யாதிகளால் பிறக்கும் புண்ய பாபங்கள் -சாரீரமான மூப்பு –
திருமாலே -யுவா குமாரா -யுவ திஸ்ஸ குமாரிணீ-(ருக் வேதம் )என்கிற உங்களை ஆஸ்ரயித்ததால் உங்களைப் போலே
பரமம் சாம்யம் உபைதி இறே -(திரு மாலைப் போலவே யுவா குமாரராயே இருப்பார் அன்றோ )–வந்தியாதார்க்கு முள்ளும் முடுக்குமான வழி —
(ஆதித்ய சந்த்ர அவநிலோ அநலஸ் ச த்யவ்ர் பூமிர் ஆபோ ஹ்ருதயம் யமஸ் ச
அஹஸ் ச ராத்ரிஸ் ச உபே ச ஸந்த்யே தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம் –14 தேவதைகளும் சாக்ஷி-
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மது ஸூதந ப்ரபந்நான் ப்ரபுர் அஹம் அந்நிய ந்ரூணாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-
கமல நயன வாஸூ தேவ விஷ்ணோ தரணி தர அச்யுத சங்க சக்ர பாணே
பவ சரண மிதீர யந்தி யே வை த்யஜ பட தூர தரேண தான பாபான் –3-7-33-
தேவர் ரிஷி பூதாப்த்த ந்ரூணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மநா யஸ் சரணம் சரண்யம்
நாராயணம் லோக குரும் ப்ரபந்ந -பாகவதம் –11-5-41-)
மூப்பு -ஷட் விகாரங்களுக்கும் உப லக்ஷணம்
அஸ்தி -உளனாவது -ஜாயதே -பிறக்கிறான் -பரிணமதே-மாறுதல் அடைகிறான் -விவர்த்ததே -வளர்ச்சி அடைகிறான் -அபஷீயதே -கிழவன் ஆகிறான் -விநஸ்யதி -மரணம் அடைகிறான்
யுவா குமாரா –யுவதிஸ் ச குமாரிணீ -தங்களை ஓக்க அருள் செய்யும் மிதுனம் –
வழி காண்பர் -இவ்வுலகில் நல் வழி நடத்தை செய்வார் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் சென்று
பரம புருஷார்த்த ரூபமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும் பெறுவர்
—————————————————————————
இப்படி ஈஸ்வர அபிமானிக்கு ரக்ஷகனான உன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதம் விட்டு நீங்கும் -நல்வழியே போகலுமாம் –என்கிறார் –
சர்வாதிகனான உன்னை அனுசந்திக்க பாபங்களுக்கு சாக்ஷியாகக் காத்துக் கொண்டு இருக்கும் படி நீ
கற்பித்து வைத்த -யம தர்மாதிகளான பதினாலு வஸ்துக்களும் -சூரியன் சந்திரன் -காற்று அக்னி ஆகாயம் பூமி ஜலம்
மனஸ் யமன் பகல் இரவு ப்ராத ஸந்த்யை சாயம் சாந்த்யை தர்மம் -ஆகிய 14 – நமக்கு இவ்விடம் அடைவில்லை என்று விட்டு நீங்கும்
அந்த காப்புக்கு அடியாய் அவித்யா சஞ்சிதமான கர்ம பந்தங்கள் உன்னை அனுசந்திக்கக் கழன்று போம் –
ஆஸ்ரிதர் குற்றத்தை நற்றமாகக் கொண்டு ஏற்றும் பிராட்டி பக்கல் பெரும் பிச்சனானவனே –உன்னை அனுசந்திப்பார்க்கு
ஜராதிகளான ஷட்பாவ விகாரங்களும் முதலிலே இல்லை -தேவரீர் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் போம் வழி என்னும் படி
நிரதிசய போக்யமான அர்ச்சிராதி மார்க்கத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள் -நல்ல வழியே போகப் பெறுவார்கள் என்றுமாம்
மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை -என்றது காப்பும் அருவினைகளும் கழிந்த அதிகாரிகளுக்கு வரும் மூப்பாவது
கைவல்யமாய் -அது முதலிலே உன்னை அனுசந்திப்பார்க்கு இல்லை -என்றபடி –
———————————————————————————————————————
உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தித்த
தேசமே எல்லா நன்மையையும் கொடுப்பதாக இருக்க -என்கிறது -(தேசோஹம் சர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
(பல கரணம்-பக்தியாகிற வழி – உபாசனம் பல பிரதா பகவான் –உபாசகனுக்கு பிரபன்னனுக்கு இரண்டுமே பகவான்)
உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-
பதவுரை
வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆஸ்ரயிக்கு மவர்கள்
வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆஸ்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.
(ப்ரபன்னனுக்கு அத்யாவசியம் -மஹா விசுவாசம் வேண்டுமே -அது தொலையாத குறை வாராமல் -திருமலை அசேதனம் கொடுக்குமா என்கிற சங்கை இல்லாத குறை வாராமல் -)
வழி நின்று நின்னைத் தொழுவார்–
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவ்ய –(ப்ரஹதாரண்யம்-6-5-6–கேட்கத் தக்கதும் நினைக்காத தக்கதுமான ஆத்மா த்யானிக்கத் தக்கது -பார்க்கத்தக்கது )என்றும்
தமேவ தீரோ விஞ்ஞாய பிரஞ்ஞாம் குர்வீத ப்ராஹ்மண -(ப்ரஹதாரண்யம்-6-4-21-ஞானமுடையவர்களுள் சிறந்தவனாக ப்ராஹ்மணன் அந்தப் பரமாத்மாவையே ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம் செய்யக் கடவன் ) என்றும்
உபாசனம் த்ருவா ஸ்ம்ருதி தர்சன சாமாநகாரதா ப்ரத்யக்ஷதா பத்தி -(பர்யாய சப்தங்கள் )–என்றும்
விஷதே தத் அநந்தரம் -(ஸ்ரீ கீதை -18-55-) என்றும் சொல்லும் அளவும் சொல்லுகிறது –
பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யஸ்சாஸ்மி தத்த்வத–
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநந்தரம்–৷৷18.55৷৷
ஸ்வரூபத்தாலும் ஸ்வ பாவத்தாலும் நான் எத்தகையவனோ -குணத்தாலும் செல்வத்தாலும் நான் எப்படிப்பட்டவனோ
அத்தகைய என்னை முன் கூறிய பரபக்தியாலே உள்ளபடி அறிகிறான் –
என்னை உள்ளபடி அறிந்து அதற்குப் பிறகு பரம பக்தியால் என்னைப் பரிபூர்ணமாக அடைகிறான் –
மேலே மேலே பக்தி முற்றும் -பர பக்தி -அத்ருஷ்டார்த்த பிரத்யக்ஷ அபி நிவேசம் -ஆசை ஏற்படும்
பர ஞானம் -சாஷாத்காரம் பண்ணி அனுபவிக்க
பரம பக்தி புனர் விஸ்லேஷ பீருத்வம் கிடைத்த அனுபவம் விலகுமோ என்று துடிக்க வைக்கும்
ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
யஹா அஸ்மி யாராக -எப்படிப்பட்டவனாக -இன்னான் இணையான் –ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள்-இரண்டையும் அறிகிறான் பர பக்தி
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -இன்னான் -நிர்விகார தத்வம் ஞான மயம் அந்தம் அற்றவன் –
ஞான பல -இத்யாதி இணையான் -அறிந்து கொண்டு என்னை பெற பக்தியால் தெரிந்து கொள்கிறான் -அதற்கு பின் உண்மையாக தெரிந்து அடைய ஆசை கொள்கிறான்
ஞாத்வா பர ஞானம் -ஞானம் முற்றி முற்றி தர்சன சாஷாத்கார அவஸ்தை –
மேலே பரம பக்தி அடைந்து என்னை அனுபவிக்கிறான் –
(வழி நின்று -கிடைக்கும் பலனுக்கு இவர்கள் பக்தியையே உபாயமாக நினைக்கையாலே இத்தனை ஸ்ரமம் பட வேண்டும் என்று அவன் சங்கல்பித்து இருக்கிறான்
அவனையே உபாயமாக பற்றும் பிரபன்னனுக்கு ஒரு முயற்சியும் இல்லாமல் தானே பலனை அளிக்கிறான்
ஆகையால் பல பிரதனனும் பல உபகரணமும் அவனே
முயற்சியின் பெருமை உபாசகனுக்கு
மஹா விஸ்வாஸ பெருமை பிரபன்னனுக்கு
உபாசகர் வழி நின்று எம்பெருமானைத் தொழ
ப்ரபன்னன் எம்பிரானையே வழியாகவே நினைத்துத் தொழுகிறார்கள் -)
வழுவா-மொழி நின்ற மூர்த்தியரே யாவர் –யதாபூதவாதியான வேதத்தில் சொன்ன வடிவை யுடையவராவார்
பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்கிற படியே –
(ஏஷ ஸம் ப்ரஸாதோ அஸ்மாச் சரீராத் சமுத்தாய
பரஞ்சோதி ரூப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -சாந்தோக்யம் -8-12-2-
ஸ்வரூப ஆவிர்பாவமே பரம புருஷார்த்தம்)
(மூர்த்தியரே யாவார் –
மூர்த்தி என்று ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ப்ரக்ருதி சம்பந்தத்தால் மறைந்து கிடந்த ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவதை உணர்த்துகிறார்)
பழுதொன்றும்-வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த-சீரான் திருவேங்கடம் –
ப்ராப்ய ப்ராபகங்கள் ஒன்றும் குறையாத படி பரம பதத்தைக் கொடுக்கும் திரு உலகு அளந்த நீர்மையை யுடையவனுடைய திருமலை
(பழுதொன்றும் வாராத வண்ணமே-ருசியும் நம்பிக்கையும் குறையாத படி
ப்ராப்யம் பகவான்
ப்ராபகம் -திருமலை)
மண்ணளந்த-சீரான்-என்று சம் புத்தியாகவுமாம்
வழுவா மொழி –ஒருவருக்கு ஒருவர் ஓதுவித்துப் போருகை -மூர்த்தியரே யாவர்-அதுக்கு ஈடான ஸ்வரூபத்தை யுடையவர் ஆவார் –
மண்ணளந்த-சீரான்-அந்த ஸ்வபாவம் உண்டு திருமலைக்கு –
(திருவேங்கட மலையே பரம பதத்தைக் கொடுக்கும் என்கிறார்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
தேசோயம் ஸர்வ காம துத் -)
எம்பார் ஓவாதே அநுஸந்திக்கும் பாட்டு –
———————————————————————-
உன்னைத் தொழுவார் பிழைப்பர் என்று சொல்ல வேணுமோ –உன்னோடே சம்பந்தமுடைய திருமலை ஆழ்வார்
தம்மைப் பற்றினார்க்குத் தப்பாமல் ப்ராப்யத்தைக் கொடா நின்ற பின்பு -என்கிறார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி ஸித்தமாய்-ஸ்ரவண மனன த்யான உபாஸன தர்சனாதி அவஸ்த்யா யுக்தமான பக்தி மார்க்கத்தில்
சலியாமல் உறைக்க நின்று சர்வாதிகனான உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள் -யதாபூதவாதி யாகையாலே
ஒரு நழுவுதல் அற்று இருக்கிற உபநிஷத் பாகங்களிலே-ஸ்வேன ரூபேண நிஷ்பத்யதே–என்று
ப்ராப்யதயா ப்ரதிபாதிக்கப் படா நின்றுள்ள ஸ்வரூப ஆவிர்பாவத்தை யுடையராய்ப் பெறுவார்கள்-
பூமியை அளந்து கொண்ட சீல ஸுலப்யாதி கல்யாண குணங்களை யுடையவன் எழுந்து அருளி நிற்கிற திருமலை –
தன்னை ஆச்ரயித்தார்க்கு ப்ராப்ய ப்ராபகங்களில் ருசி விசுவாசங்களுக்கு ஒரு குறையும் வாராத
படியாகப் பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்தைக் கொடா நிற்கும் –
——————————————————————————————————
உகந்து அருளின தேசங்கள் பூமியிலே உண்டாய் இருக்க -சம்சாரம் உண்டோ -என்கிறது –
தம்முடைய இடரானவை திருமலையை ஆஸ்ரயிக்கப் போமோ என்னில்-
அநாதி காலம் நம்மைப் பெறுகைக்கு அவன் படுகிற பாட்டை அநுஸந்தியாய் –
(எதிர் சூழல் புக்கு திரிந்து -ருசி அனுகுணமாக நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் -சாதிக்கிறான் –
நின்று கிடந்தது இருந்து நடந்து செய்த வினைகள் அனைத்துமே போக்கி அருளுகிறார்
திரு விண்ணகர் இருந்த திருக் கோலம் இல்லையே -ஆகவே இங்கு ஸ்ரீ வைகுந்த்தைச் சொன்னவாறு )
திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-
பதவுரை
வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் – அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்–பூ மாறாதே இருந்துள்ள அகழை யுடைத்தான திருக் கோவலூரும்
விண்ணகரம் -என்று பரம பதத்தைச் சொல்லுகிறது
நான்கிடத்தும்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே-
நான்கு இடத்தும் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்த படியையும் சொல்ல
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாப பலம் போம் என்கிறது -(சும்மெனாதே கைவிட்டோடி-இத்யாதி -வானோ மறி கடலோ -இத்யாதி )
என்றால் கெடுமா மிடர் ——–தாய் பேர் சொல்ல கிலேசம் போமா போலே -(குழந்தை -ஸ்வயம் ப்ரயோஜனமாகச் சொல்லுமா போல் -உபாய பாவத்தால் இல்லையே )
இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –
(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)
(இத்தை உபாய புத்தியுடன் செய்ய வேண்டாம் -ஸ்வயமன் ப்ரயோஜனமாகவே அனுசந்திக்க அமையும் –
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே –பெரியாழ்வார் -5-4-2-
வானோ மறி கடலோ -பெரிய திருவந்தாதி -54-
அநிஷ்ட நிவ்ருத்தி சொன்னது பகவத் பிராப்தி முதலாகிய இஷ்ட ப்ராப்திக்கும் உப லக்ஷணம்)
————————————————————————-
திருமலை ஒன்றுமே அல்ல கிடீர் -உகந்து அருளின தேசங்கள் அடங்க இப்படியே கிடி கோள்–என்கிறார் –
திருமலையிலே நின்று அருளினான் –வைகுண்ட மா நகரிலே எழுந்து அருளினான் -திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளினான்
ஒன்றோடு ஓன்று விச்சேதியாதே செறிந்து அழகியதாய் (அகழியை யுடைத்தாய் )போக்யதை அளவிறந்துள்ள திருக் கோவலூர் ஆகிற
ஸ்ப்ருஹணீயமான திவ்ய நகரத்திலே நடந்து அருளினான் -என்று இந்த நாலு திருப்பதிகளிலும் ஆஸ்ரித அர்த்தமாக
அவன் நிற்பது இருப்பது கிடப்பது நடப்பதாக வியாபாரங்களை அனுசந்தித்தால் –
தாங்களே சூழ்த்துக் கொண்ட சாம்சாரிக துக்கங்கள் போன வழி தெரியாத படி (தம் தாமே )விட்டு ஓடிப் போம் –
——————————————————————————————————————-
நீ துக்கப் படுகைக்கு சங்கை யுண்டோ என்னில் -போராய் நெஞ்சே –
இனி நம் பக்கல் இடர் வந்ததாகில் முதலை பட்டது படும் அத்தனை -(மாஸூ ச -என்பதும் விதியே )
அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-
பதவுரை
நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)
இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்-தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த–
ஆனையைத் தொடருவதான கொடிய முதலையை முடித்த –
சூழ்ச்சி என்று வஞ்சித்தலாய் -முடித்த என்றபடி –
படமுடைய-பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்–இத்தால் அநாஸ்ரிதர் வந்தாலும் ஆஸ்ரிதர் வந்தாலும் அவன் இருக்கும் படி சொல்கிறது
(ரக்ஷணம் -அஸ்தானே பய சங்கை -பொங்கும் பரிவு -ஸ்பரிசத்தால் வந்த பூரிப்பு)
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு —–கொய்யப் பட்டுச் செவ்வியை யுடைய நாகப் பூவைக் கொண்டு
பைந்நாகப் பள்ளியான் -பாதமே கை தொழுதும்-இடரார் படுவார் -எழு நெஞ்சே-என்று அந்வயம் –
நாகப் பூ என்கையாலே -அப்ராக்ருத புஷபம் தேடிப் போக வேண்டா -காட்டில் ஒரு பூ அமையும் -என்கிறது
இவர்கள் (முதல் ஆழ்வார்கள் மூவரும் )என்றும் காட்டிலே இறே பழகிற்று–
(அங்கு ஆராவாரமது கேட்டு அழல் உமிழ்க்கும் -நான்முகன் -10-
கொய் நாகப்பூ -காட்டிலே இருக்கும் ஒரு பூவே அமையும்
நாகப் பள்ளியானுக்கு சத்ருசமாக அன்றோ நாகப்பூ
இப்படி தொழுதால் இடர் பட வேண்டாமே
அவை முதலை பட்டது படுமே)
———————————————————————-
அவன் நமக்காகச் செய்த செயல்களை அனுசந்தித்தால் -அவன் திருவடிகளில்
அடிமையிலே அன்வயித்து அல்லது நிற்க ஒண்ணாது கிடீர் -என்கிறார் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை வடிம்பிட்டு நலியக் கடவதாய் –அதி பிரபலமாய் -நெஞ்சு இரக்கம் இல்லாத படி
அதி குரூரமான முதலையைத் தப்பாத படி சூழ்ந்து அழித்துப் பொகட்டவனாய் -ஸ்வ ஸ்பர்ஸத்தாலே விகசித பணனாய்
இடம் வலம் கொண்டு பரிமாறுகைக்கு தக்க பரப்பை யுடையனான திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை -கொய்து கொள்ள வேண்டும் படி சம்ருத்தமாய் போக்யமான
நாக புஷ்ப்பங்களைக் கொண்டு ஆஸ்ரயிப்போம் –
அவனுக்கு அடிமை செய்யாமல் கிடந்து துக்கப் பட வல்லார் யார் -நெஞ்சே -சடக்கென எழுந்து இரு –
———————————————————————————————————
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து -79-
பதவுரை
மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை-பெறாப் பேறு பெற்றதாக அவன் திரு உள்ளம் -ஆகவே ஒண் தாரை
அம் கை–(தனது) அழகிய திருக் கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறி வந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)
(ஸ்வர்க்காதி லோகத்தில் தோள் -கீழே தாள் -மேலே ஸத்ய லோகத்திலும் தாள்)
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்-குணமே குற்றமாம் –குற்றம் குணமாம் கிடீர் சம்சாரம்
ராவணனோ பாதி வத்யனாய் இருக்க உதார குணம் இவன் பக்கலிலே கிடக்கையாலே தன்னதான பூமியை
அவனுக்காக மேல் எழுத்து இட்டு அவன் கொடுத்தானாக இவன் கொண்டத்தை –தன் கையில் நீர் வார்த்தவனைப்
பாதாளத்திலே தள்ளினான் என்று பழி சொல்லா நிற்பார்கள் -தன்னதல்லாத பூமியை தன்னது என்று கொடுத்தவனை இறே
நெல் வாலிலே வைத்து தெறிக்க வேண்டுவது -அவனைப் பழி சொல்வார் இல்லை -(தனக்கு இத்யாதி -கம்பர் )
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்–ஆரத்தை இரக்கிறானோ இவன்
ஒண்டாரை-நீரங்கை தோய நிமிர்ந்திலையே–அலாப்ய லாபம் பெற்றாரைப் போலே —
வர்ஷேண பீஜம் ப்ரதிஸஞ்ச ஹர்ஷ –(ஸூ ந்தர காண்டம் )என்னுமா போலே அழகிய கையிலே நீர் விழும் காட்டில் வளர்ந்ததில்லையோ –
நீள் விசும்பில்-ஆரங்கை தோய வடுத்து –பரந்த விசும்பில் ஆரமும் கையும் அடுத்து தோயும் படிக்கு ஈடாக -அன்றிக்கே
நீள் விசும்பில் உள்ளார் அழகிய தோளில் அணைய என்றுமாம் -நாம் ஆஸ்ரயிக்க வேணுமோ —
தானே அர்த்தியாம்-நான் அர்த்தியோ என்ன -நிமிர்ந்திலையே –
கொண்டானை அல்லால் -தனக்கு என்று கொடுக்கப் புகுமாகில் நமக்கு இதில் பிராப்தி இல்லை என்று இருந்தால் ஆகாதோ
என்று இருக்க -அது குணமாகை தவிர்ந்து நிற்கைக்கு உடலாவதே -பையலை நெல்லிலே வைத்து தெறிக்க வேணும்
என்பாரும் உண்டாயாயிற்றோ -ஆர் அறியப் பட்டான் –
மண் தா என -தன்னதிலே ஏக தேசத்தை -மா வலியை-அஸூரனைக் கிடீர் – நீர் தோய நிமிர்ந்திலையே
மறு மனஸ் ஸூபடும் என்று அப்போதே -நீள் விசும்பிலார்
அங்கை தோய -அடுத்து ஆஸ்ரயிக்க நிமிர்ந்திலையே -என்றுமாம் –
(குணசாலியிடம் யாசித்துப் பெறா விடிலும் தாழ்வாகாது -மேலானவன் இடம் சிறியதைக் கேட்டு கிடைக்கா விட்டாலும் உயர்ந்ததே
தாழ்ந்தவன் இடம் உயர்ந்ததைக் கேட்டுப் பெற்றாலும் தாழ்ந்ததே)
தனக்கு இயலா வகை தாழ்வது தாழ்வில் கனக்க அரியானது கைத்தலம் என்னில் எனக்கு இதன் மேல் நலம் யாது கொல் -கம்பர்
அஃலம் புரிந்த நெடும் தடக்கை -திருநெடும் தாண்டகம் -6-
வாதா தபக்லான் தமிவ ப்ரணஷ்டம் வர்ஷேண பீஜம் ப்ரதி சஞ்சு ஹர்ஷ -ஸூந்தர -29-6-
வாடி நசித்துப் போன விதை மழையினால் சந்தோஷிப்பது போல் பிராட்டி மகிழ்ந்தாள்
நீர் விழுந்ததும் வாடிய விதை வளருமா [போலே வாமனன் ஓங்கி த்ரிவிக்ரமனானான் –
——————————————————————————-
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறிக் கார்யம் செய்ய எங்கே கண்டோம் –என்னில்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ -என்கிறார்
உன் விபூதியில் ஏக தேசமான பூமியை எனக்குத் தர வேணும் -என்று மஹா பலியைச் சென்று அர்த்தித்து-
அவன் மறுக்க மாட்டாமல் உனக்குத் தந்தேன் என்று தாரை சாய்க்க -அழகிய அந்த உதக தாரையின் நீரானது
கொடுத்து வளர்ந்த அழகிய திருக் கையிலே வந்து விழும் காட்டில் -அவன் மறு மனஸ்ஸூ படில் செய்வது என்
என்று நினைத்துப் பரப்பை யுடைத்தான அந்தரிஷாதி லோகங்களில் வர்த்திக்கிற ப்ரஹ்மாதிகளுடைய அழகிய கையானது
ஸ்பர்சித்துத் திருவடிகளை விளக்கும் படிக்கு ஈடாகக் கடுகச் சென்று கிட்டி -உதக ஜலமும் திருவடி விளக்கின ஜலமும்
ஏக உதகமாம் படி வளர்ந்திலையோ —
தன்னை அழிய மாறி உதார குணம் பற்றாசாக தன் விபூதியை என்னது என்று
அபிமானித்து இருந்த அவன் குற்றம் பாராதே தானே சென்று இரந்து நீர் ஏற்று வாங்கிக் கொண்ட குணாதிகனானவனை
வஞ்சகன் -சர்வ ஸ்வாபஹாரி -தனக்கு அபேக்ஷிதம் செய்தவனைப் பாதாளத்தில் தள்ளினவன் -என்றால் போலே
பழி சொல்லும் இத்தனை ஒழிய –
கொடுத்த மஹா பலியை-பகவத் விபூதி அபஹாரி -அஹங்கார க்ரஸ்தன்
ஆஸூர ப்ரக்ருதி என்றால் போலே யுண்டான அவன் குற்றங்களை ஆர் தான் சொல்லுவார் –
சம்சாரிகள் ஸ்வ பாவம் குணத்தைக் குற்றம் ஆக்கியும் குற்றத்தைக் குணம் ஆக்கியும் -செய்யும் படி அன்றோ இருப்பது -என்று வெறுக்கிறார்
நீள் விசும்பில் ஆரமும் கையும் சென்று ஸ்பர்சிக்கும் படி கிட்டி என்னுதல்
அன்றிக்கே நீள் விசும்பிலார் அடையக் கை எடுத்து ஆஸ்ரயிக்கும் படியாக என்னவுமாம் —
——————————————————————————————————————-
பரிஹாரம் இல்லாத ஆஸ்ரித விரோதம் பிறக்கிலும்-அவர்களைப் பொறுப்பித்து-
புருஷகாரமாக அவர்களைக் கைக் கொண்டு ரஷிக்கும் -என்கிறது –
அபயம் என்று புகுந்த ஸ்ரீ விபீஷணப் பெருமாளை புகுர ஓட்டோம் என்றவரை பொறுப்பித்து
ஆ நயைநம் ஹரி ஸ்ரேஷ்ட-என்று அவரைக் கொண்டு அழைப்பித்தால் போலே-
பாதாளத்தில் ஸூ முகன் என்ற
ஒரு சர்ப்பத்தை பெரிய திருவடி அமுது செய்ய நினைக்க -அத்தை அறிந்து ஸ்வர்க்கத்திலே உபேந்த்ர மூர்த்தியாய்
எழுந்து அருளி இருக்கிற இடத்திலே திருப் பள்ளிக்கு கட்டிலைக் கட்டிக் கொண்டு கிடக்க -திருவடி பாதாளத்தில் சென்று
தேடிக் காணாமல் திருவடிகளிலே வந்து இவன் கிடக்கிற படியைக் கண்டு சிவிகையார் சொல்லும் வார்த்தையை விண்ணப்பம் செய்ய
திரு வாழியை இவன் கையிலே கொடுத்து பலத்தை ஷயிப்பிக்க-பின்பு திருவடி ஸ்தோத்ரம் பண்ண
கிருபை பண்ணி திருவடி கையிலே அடைக்கலமாகக் காட்டிக் கொடுத்து ரக்ஷித்தான் என்கிற உபாக்யானத்தை அனுசந்தித்து அருளிச் செய்கிறார் –
ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் –
மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -என்றத்துக்கும் -நத்யஜேயம் -என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-
அடுத்த கடும்பகைஞற்கு |
– |
நெருங்கிய கொடிய சத்துருவான கருடனுக்கு-பையுடை நாகப் படைக் கொடியான் |
ஆற்றேன் என்று |
– |
(நேரே நின்று பிழைத்திருக்கத்தக்க) வல்லமை யுடையேனல்லேன்’ என்று சொல்லிக் கொண்டு |
ஓடி |
– |
விரைந்து ஓடிப் போய், |
படுத்த பெரு பாழி |
– |
(எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு) விரித்த பெருமை பெற்ற படுக்கையாகிய சேஷனை |
சூழ்ந்த |
– |
சுற்றிக் கொண்ட |
விடத்து அரவை |
– |
விஷத்தை யுடைய ஸுமுகனென்கிற ஸர்ப்பத்தை |
வல்லாளன் கை கொடுத்த |
– |
வலிமை யுடைய கருடனது கையிலே (அடைக்கலப் பொருளாகத்) தந்து ரக்ஷித்த |
மா மேனி மாயவனுக்கு அல்லாதும் |
– |
சிறந்த திரு மேனியை யுடைய-ஆச்சார்ய பூதனான -எம்பெருமானுக்குத் தவிர |
(மற்ற தேவதாந்தரங்கட்கு) | ||
ஆள் ஆவரோ |
– |
அடிமை யாவர்களோ. |
அடுத்த –சஹஜ சத்ரு -கடும் பகைஞன்–திருவடியோடே விரோதம் கொண்டால் பிழைக்கப் போகாது -என்கை –
ஆற்றேன் என்றோடி படுத்த பெரும் பாழி–பாழி-என்று படுக்கைக்கு பெயர் –
சூழ்ந்த –சுற்றின -விடத் தரவை–சரண்யனுக்கு க்ருபா விஷயம் என்கிறது –
வல்லாளன் கை கொடுத்த –பிரசன்னனான போது அவனைப் பொறுக்க மாட்டேன் என்னாதே ரக்ஷிக்க வல்லவனானவன் கையிலே காட்டிக் கொடுத்த
மா மேனி -காட்டிக் கொடுத்த பின்பு வடிவில் பிறந்த புஷ்கல்யம்–
மாயவனுக்கு–அல்லாது மாவரோ ஆள் —–எல்லா அவஸ்தையிலும் விட்டுக் கொடாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆளாவாரோ –
ந ஷமாமி என்னும் தப்புக்கு போக்கடி காண வல்லன் என்கிறார் -(பாகவத அபசாரத்துக்கும் பரிஹாரம் தேடி ரக்ஷித்து அருளினான் அன்றோ )
நலிய நினைக்கில் அத்தை வெல்ல வல்லாரும் இல்லை -ரக்ஷிக்க நினைக்கில் அத்தை தடுக்க வல்லாரும் இல்லை –
ஆஸ்ரித விரோதி என்று கை விட வேண்டிய விஷயத்தையும் பொருத்தி விட வல்லவனை ஒழிய -கடித்த வாயாலே தீர்க்கை
வத்யதாம்-என்றவரையே -அஸ்மாபிஸ் துல்யோ பவது-என்னப் பண்ணுகை -(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யம் பெருகி இருக்குமே )
அடுத்த – சஹஜ சத்ருவினுடைய சத்தை யுண்டாகில் பகையாயே இருக்கும்
கடும் பகை —பேர் சொல்ல முடியும் படி கொடிதாகையும் –
பெரும் பாழி –இந்த்ர அனுஜன் படுக்கை –திருப் பாற் கடல் ஆகவுமாம் –
(ந ஷமாமி -நத்யஜேயம் -இரண்டுக்கும் விரோதம் வராமல் அவனிடமே ஒப்படைத்து அவனைக் கொண்டே ரக்ஷித்து அருளிய அதி சமர்த்தன்
கடித்த வாயாலே முத்தம் இடச் செய்து அருளினான்
வத்யதாம் -என்ற வானர முதலிகளளையே -அஸ்மாத் அபி துல்யோ பவது என்று கூற வைத்து அருளினால் போலே)
——————————————————
மஹா பலி பக்கலில் நின்றும் பூமியை மீட்டு நோக்கின அளவன்றிக்கே -அசாதாரண பரிகாரத்தோடே விரோதித்து வந்து
ஒருவன் சரணம் புக்கால் -ந ஷமாமி -(கிருத யுக ஸ்ரீ வராஹப் பெருமாள் வார்த்தை)
என்றத்துக்கும் -நத்யஜேயம் -(த்வாபர யுக பெருமாள் சுக்ரீவன் இடம் வார்த்தை )என்றத்துக்கும் விரோதம் வாராத படி
அவன் கையிலே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே நோக்குவான் ஒருவன் என்கிறார் –
பிறப்பே பிடித்து உண்டானது ஒன்றாகையாலே -ப்ரத்யாசன்னமாய் -பேர் சொல்லவே முடியும் படி கொடிதான
ஸாத்ரத்வத்தை உடையனான பெரிய திருவடிக்கு நேர் நின்று பொறுக்க மாட்டேன் என்று பெரிய வேகத்தோடு ஓடிச் சென்று
அங்குத்தைக்கு அனுரூபமாம் படி விரித்த திவ்ய சிம்ஹாசனத்தை (பள்ளிக்கட்டு -கோப்புடைய சீரிய சிங்காசனம் )சுற்றிக் கொண்டு கிடந்த பயத்தாலே உமிழுகிற விஷத்தை யுடைய ஸூமுகனாகிற சர்ப்பத்தை
ந ஷமாமி -என்றத்தையும் -நத்யஜேயம் என்றத்தையும் ஓக்க நோக்குகைக்காக
சரணாகத பரித்ராணத்துக்கு அனுகுணமான மிடுக்கை யுடைய பெரிய திருவடி கையில் கடித்த வாயாலே தீரும் படி
காட்டிக் கொடுத்து ரஷித்தவனாய் -ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணப் பெற்ற ஹர்ஷ பிரகர்ஷம் அடங்கலும்
நிழல் இட்டுத் தோற்றுகிற ஸ்லாக்யமான திரு மேனியை யுடையனாய் -ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை
காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுக்கு ஒழியவும் ஸ்வ பர சம் ரக்ஷண ஷமர் அல்லாத வேறு ஷூத்ர தேவதைக்கு அடிமை ஆவர்களோ
———————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply