திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–10- –

திருநாட்டில் புக்கு அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்த ஆழ்வார் அவ்விருப்பு ஞான அனுசந்தான மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்யம் அன்றிக்கே –அதுக்கு மேலே இல்லை கண்டீர் இன்பம் என்றும்
-பிறப்பாம் பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலம்-என்றும் தாம் பிறருக்கு உபதேசிக்கிற சம்சாரத்தில்,
-ப்ரக்ருதி பத்தரானமையை அறிந்து மேரு சிகரத்தில் இருந்து நிர்த்துக்கனாய் மிகவும்
ஸூ கியாய் நின்று வைத்து -துக்க பஹுள மாய்-துஸ் தரமாய் பேர் ஆழமாய் மிகவும் ஓர் இடத்திலும் ஸ்திதி இல்லாத படி
பேர் ஆழமான கடலின் நடுவே தள்ளுண்டவனைப் போலேயும் பாதாளத்தில் விழுந்து நோவு படுமா போலேயும்
அவசன்னராய் -அதுக்கு மேலே தமக்கு அவன் பண்டு கை வந்த படியையும் தன்னைப் பெறுகைக்கு
உபாயம் தானே அல்லாது இன்றிக்கே இருந்த படியையும் அவ்வளவு அன்றிக்கே -எல்லார்க்கும் அவன் அல்லது வேறு ரக்ஷகர் அன்றிக்கே
இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து -இப்படியே இருக்கிறவனை அஷணத்திலே பெறாமையாலே -பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து
தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட
இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால்
தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு
காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே –
தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு –
–சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக –
பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே
இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து
-இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று-
என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் -என்கிறார் –

——————————————————————–

நிர்ஹேதுகமாக உன்னுடைய ஸுந்தரியாதிகளைக் காட்டி எனக்குத் தன்னை ஒழியச் செல்லாத படி பண்ணி என்னை துஸ் ஸஹமான சம்சாரத்திலே வைத்து நீ போய்ப் பண்டு போலே ஒரு குண ஆவிஷ்காரத்தை பண்ணி விட ஒண்ணாது என்கிறார் –

முனியே  நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே— பஹுஸ்யாம் என்று மஹதாதி விசேஷாந்தமான ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுவதான மாநஸமான சங்கல்பத்தை யுடையையாய் இருந்துள்ள சர்வாதிகனே –கரண களேபர விதுரமாய் அசித் கல்பமாய் – ஸோஸ்ய நஸா பன்னமாய்-சதேவ -என்று தன்னைச் சொல்லும் செயலாலே சொல்லும்படி ஸூ ஷ்ம அவஸ்தையை -பஜித்துக் கிடக்கிற அன்று -ச ஏகாகீ நரமேத -என்கிறபடி இவற்றினுடைய நோவை அனுசந்திக்கிற இருப்பைச் சொல்லுகிறது -என்றுமாம் -எனக்கு ருசியைப் பிறப்பிக்கைக்காக நாம ரூபங்களை உன் பேறாகத் தந்து பண்ணின கிருஷி பலித்து உன்னால் அல்லது செல்லாமையை உண்டாக்கிக் கொண்டு நீ கைவிடப் பார்த்தாயா -என்கை –
நான்முகனே-ஆண்ட ஸ்ருஷ்ட்டி யளவும் தானே பண்ணி -இவ்வருகு  யுண்டான தேவாதி ஸ்ருஷ்டிகளை பண்ணுகைக்காக ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக நின்று ஸ்ருஷ்டித்தவனே –நான்முகன் என்கிற இது -விசேஷமான சதுர்முகன் அளவிலே பர்யவசிக்கிறது அன்று -அவனுக்கு அந்தர்யாமியான அவன் அளவும் செல்லுகிறது -மனுஷ்ய சப்தம் தத் சரீரி அளவும் செல்லுகிறாப் போலே –சேதனன் ஸ்வ சரீரத்தைக் கொண்டு தன் நினைவாலே கமன கமன ஆகமனாதி சேஷ்டிதங்களைப் பண்ணுமா போலே -ஸ்வ சரீர பூதனான சதுர்முகனைக் கொண்டு ஸ்வ சங்கல்பத்தாலே தேவாதி சதுர்முக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறான் -ஸர்வேஸ்வரனே–ஸ்ருஷ்டிந்தன கரிஷ்யாமி -த்வாமாவிசய–தநாதரிசின பந்த்தாநவ் –திசைமுகன் கருவுள் வீற்று இருந்து –
முக்கண் அப்பா-இப்படி ருத்ர சரீரியாய்க் கொண்டு ஜகத் உப சம்ஹாரம் பண்ணுமவனே -அதி பிரவ்ருத்தனான பிரஜையை விலங்கிட்டு வைப்பாரைப் போலே ஸ்ருஷ்ட்டி யோபாதி சம்ஹாரமும் உபகாரம் ஆகையால் –அப்பா -என்கிறார் -சம்சார சிரம கின்னா நாம் -இத்யாதி –ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யந்தர கரணீம்–இத்யாதி –
என் பொல்லாக்-கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே –-இஷ்வாகு வம்சயரோடும் யது வம்சயரோடும் சஜாதீயனாய்க் கொண்டு அவதரித்தால் போலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் நடுவே -விஷ்ணு நாமாவாய் அவதரித்து ரக்ஷணத்தைப் பண்ணுகையாலே சம்போதிக்கிறது -அவ்வடிவிலே துவக்கு உண்டவர் ஆகையால் –என் -என்கிறார் –
பொல்லா -அழகு இது என்னில் நாட்டார் அழகோ பாதியாம் என்று விஜாதீயம் என்று தோற்றுகைக்காக -என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ சாந்த்யர்த்தமாக என்னுதல் –
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே-இதுவும் ஒரு வியாவ்ருத்தி இருக்கிற படி -முறுவலும் கண்ணுமாய் இருபத்தொரு மாணிக்க மலை போலே யாய்த்து வடிவு இருப்பது -முறுவலையும் தப்பினாரையும் -அகப்படுத்த வற்றான கண் –
என் கள்வா-நான் அறியாமே இவ் வழகைக் காட்டி வஞ்சித்து என்னை அடிமை கொண்டவனே -உன்னதமான ஆத்ம வஸ்துவை அபஹரித்துக் கொண்டு இருக்கிற என்னை விஷயீ கரிப்பதே -நான் அபஹரிக்கைக்கு அடி -கர்மம் -நீ அபஹரிக்கைக்கு அடி வடிவு அழகு –உடையவன் உடைமை பெற்றாலும் அபகாரம் என்னும் படி யாய்த்து ஸ்வாதந்தர்யம் வயிரம் பற்றின படி -நிர்ஹேதுகமாக உன் வடிவு அழகைக் காட்டி என்னை விஷயீ கரித்தவனே -என்று ஆழ்வான் நிர்வாஹம் –
தனியேன் -சம்சாரிகளோடு பொருந்தாதே உத்தேச்யமான திரளில் புகப் பெறாமையாலே தானியேல் -என்கிறார் –
ஆர் உயிரே -எனக்கு குணங்களை ஆவிஷ் கரித்து குண அனுபவமே யாத்ரையாம் படி பண்ணி எனக்கு பிராண ஹேதுவானவனே –
என் தலை மிசையாய் வந்திட்டு-என் தலையிலே  திருவடிகள் இருக்கும் படி நீட்டி வைத்து -நிர்ஹேதுகமாக பெரிய திருவடியின் முதுகிலே வந்து -என் தலையிலே திருவடிகளை வைத்து -செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்றார் இ றே-ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் பண்ணுகிற இடத்தில் உனக்கு ஜகத்தால் செய்யப் பட்டது ஓன்று இல்லாதாப் போலே என்னை இவ்வளவு புகுர நிறுத்தின உனக்கு என்னால் செய்யப் பட்டது ஓன்று இல்லை -இனி மேல் உள்ளதும் உனக்கே பரம் என்கை -இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –
நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு -ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இ றே –
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் -/ என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன -ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

————————————————————–

தம்முடைய அபேக்ஷிதத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி எம்பெருமானுக்கு பெரிய பிராட்டியார் திரு வாணை யிடுகிறார்-

மாயம்  செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை–பகவத் குணங்களே போது போக்காம் படி பண்ணின வித்தை -க்ரித்திரிமம் என்று நெஞ்சோடு சொல்லக் கூடுமோ என்ன -அங்கன் அல்ல -புத்தி பூர்வகமாகச் சொல்லுகிறேன் -க்ஷண காலமும் தன்னால் அல்லது செல்லாமையை விளைவிக்கைக்காக வாய்த்து -குண அனுபவத்தோடு சம்சாரத்திலே இவரை வைத்தது -அச்செல்லாமை யுண்டானால் இது அனுவர்த்திக்கும் இ றே -இப்படி இவர் நிர்பந்தித்த இடத்திலும் உம்மை மாயம் செய்கிறிலோம் -என்று மா ஸூ ச -என்னாமையாலே-நம் கார்யம் செய்யப் பார்த்திலன் ஆகாதே என்று பார்த்து -செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பிராட்டி ஆணை இடுகிறார் –
உன் திரு –விஷ்ணோஸ் ஸ்ரீ என்கிறபடியே உனக்கு சம்பத்தாய் உள்ளவள் -எனக்கு நீ சம்பத்தாய் இருக்கிறாப் போலே உனக்கு அவள் சம்பத்தாய் இருக்கிற படி -ரத்னத்துக்கு ஒளி சேஷமாய் இருக்கச் செய்தே அத்தாலே இ றே பெரு விலையனாகிறது-இவளாலே அவனுக்கு பெருமை சொல்லா நிர்க்கச் செய்தேயும் சேஷத்வம் குறையாது இ றே இருப்பது –
மார்வத்து மாலை -தாம் விரும்புகிற மார்வுக்கு மாலை யானவள் -உன் திருமார்வுக்கு அலங்காரம் ஆனவள் என்கை –
நங்கை-அவாப்த ஸமஸ்த காமனான நீ -குறைவாளரைப் போலே சிலாகிக்கப் படுபவள் -ரூப குணத்தாலும் சீலாதிகளாலும் பூர்ணையாய் இருக்குமவள் –
வாசம் செய் பூங்குழலாள் –சர்வ கந்த என்கிற விஷயத்தையும் பரிமளிதம் ஆக்கா நின்றுள்ள குழலை யுடையவன் -/ பூங்குழலாள் -பூவை யுடைத்தான குழல் -அழகிய குழல் என்றுமாம் –
திரு ஆணை நின் ஆணை கண்டாய்–திருவினுடைய ஆணை கிடாய் -என் கார்யம் செய்து அல்லது இட்ட அடி பேர இட ஒண்ணாத படி இட்ட ஆணை -போக வல்லை யாகில் போய்க் காண் என்று கருத்து -புறம்பு உள்ளார்க்கு எல்லாம் இடும் ஆணை உன் ஆணை –உனக்கு இடும் ஆணை அவள் ஆணை —
அங்கன் இன்றியே –நின் ஆணை -திரு ஆணை-என்று இருவரையும் ஓக்கச் சொல்லவுமாம் -மயாச ஸீதயா சைவ சப்தோ அஸி ரகு நந்தன -என்கிறபடியே –
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே--நீர் பெறா ஆணை விட்டீர் என்ற அவன் அருளிச் செய்ய அல்லாமை ஏத்துகிறார்-மேல் இத்திருவாய் மொழி குறையும் -ஆற்றாமையின் மிகுதியைச் சொல்லி பரிஹரிக்கிறார் –
நேசம் செய்து-பிராட்டி பக்கல் பண்ணாத ஸ்நே ஹத்தை என் பக்கலிலே பண்ணி -அகலகில்லேன் இறையும் என்று அவள் செல்லாமை கண்டு இ றே அவள் பக்கல் ப்ரேமத்தைப் பண்ணிற்று -உன் செல்லாமை அன்றோ என் பக்கல் ப்ரேமம் பண்ணிற்று –உன்னோடு என்னை -என்னை நித்ய சம்சாரி என்றாதல் -உன்னை நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் என்றாதல் பார்த்தோ மேல் விழுந்தது -இவன் அணு பரிமாணன்-நியாம்யன்-நாம் விபு நியாமகன் -என்று பார்த்தாயா –
உயிர் வேறின்றி ஒன்றாகவே-ஆத்ம பேதம் இல்லாத படி யன்றோ என்னைப் பரிக்ரஹித்தது -உன்னது என்னதாவியும் -என்னது உன்னதாவியும் -என்னும் படி என்னைப் பிரித்து காண ஒண்ணாத படி யன்றோ நீ தலையால் சுமந்து –
கூசம் செய்யாது கொண்டாய்-என் பக்கல் உள்ள அயோக்யதையை பாராதே பரிக்ரஹித்தாய் -முதலிலே என் பூர்வ வ்ருத்தம் பாராதே மயர்வற மதி நலம் அருளினாய் -பின்பு வளவேழ் உலகிலே நான் அயோக்கியன் என்று அகலப் புக -என் வழியே விடாதே உன் செல்லாமையைக் காட்டிச் சேர்த்துக் கொண்டாய் -இப்படி செய்திலை யாகில் நான் இன்று கிலேசப்படாதே போகலாய்த்தே-
என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –ஆனபின்பு என்னை ஈண்டென வந்து அணுகப் பாராய் -சாஸ்த்ரங்களால் அறிவிக்கும் அளவு போராது -குண ஆவிஷ் காரம் மாத்ரம் போராது -உன்னை நான் கிட்டி அனுபவிக்கும் படி பண்ண வேணும் -/ அந்தோ -தன்னை ஒழியச் செல்லாமையை தானே விளைத்து -நான் கூப்பிட வந்து முகம் காட்டாது ஒழிவதே-

———————————————————————

பெரு மிடுக்கரான ப்ரஹ்ம ஈஸா நாதிகள் யுடைய ஸ்வரூப ஸ்திதியாதிகளுக்கு எல்லாம் நிர்வாஹகானான நீ -உன்னால் அல்லது உஜ்ஜீவிக்க விரகு இன்றிக்கே இருக்கிற என்னை ஐயோ விஷயீ கரித்து அருளாய் -என்கிறார் –

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

கூவிக்  கொள்ளாய் வந்து அந்தோ –கீழே கூவிக் கொள்ளாய் என்றவர் -இங்கு வந்து கூவிக் கொள்ளாய் -என்கிறார் -தாஹித்தவன் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலே -ஆற்றாமை மிக்குச் செல்லா நின்றாலும் பாசுரம் இது அல்லது இன்றிக்கே இருக்கிற படி -கூவிக் கொள்ளும் அளவு போராது –வந்து கூவிக் கொள்ள வேணும் -ஆற்றாமை மிக்காலும் நான் வந்து கிட்டுகை முறை என்று -உனக்கு அவத்யமும் காண் என்கிறார் -சரைஸ்த்து சங்குலாம் க்ருத்வா -/ அந்தோ -உனக்கு நிறம் அன்று என்று நான் சொல்ல வேண்டுவதே –
என் பொல்லாக் கருமாணிக்கமே-அதி லோகமான வடிவு அழகைக் காட்டி -என்னை ஈடுபடுத்தினவனே -துளையாத மாணிக்கம் -அநுபபுக்தமான மாணிக்கம் என்னுதல் -நாட்டு ஒப்பான அழகு இன்றியே விசஜாதீயமாய் இருக்கையாலே -பொல்லா -என்கிறது என்னுதல் -த்ருஷ்ட்டி தோஷ பரிஹாரமாக -என்னுதல் -வி லக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன–ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் –அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்-நாவிக் கமல முதல் கிழங்கே –ஈஸ்வரோஹம் என்று இருப்பார்க்கும் நிர்வாஹகன் அல்லையோ நீ என்கிறார் -ஆபத்து வந்தவாறே நிரபிமாநிகளாய்க் கொண்டு தொழும் ப்ரஹ்மாதிகளுக்கு எல்லாம் காரணமான திரு நாபீ கமலத்துக்குக் கிழங்கு ஆனவனே —முதலான நாபீக் கிழங்கே —
உம்பரந்ததுவே–அவர்களுக்கும் மேலான நித்ய ஸூ ரிகளுக்கும் அப்படிப் பட்ட ப்ராப்ய வஸ்து ஆனவனே –அதுவே -என்று பிராமண பிரசித்தியைச் சொல்லுகிறது -மேலான மஹதாதி களுக்கும் காரண புதன் என்று சொல்லிற்று ஆகவுமாம் –நித்ய ஸூ ரிகளோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி அற சர்வ நிர்வாஹகனாய் இருக்கிற நீ என்னை வந்து கூவிக் கொள்ளாய் –
இப்பாட்டால் -கீழும் மேலும் சொல்லுகிற சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் காரிய காரண பாவம் என்னுமத்தை அருளிச் செய்தார் யாய்த்து – சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —

———————————————————————–

சர்வ நிர்வாஹகானான நீ என்னுடைய நிர்வாஹம் நானே பண்ணிக் கொள்வேனாக பார்த்து அருளினாய் யாகில் என்னைக் கை விட்டாயே  யல்லையோ என்கிறார் –

உம்பர்  அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ-மஹதாதி காரியங்களுக்கு எல்லாம் காரணம் ஆகையால் மேலாயத் தன்னுடைய ஏக தேசத்தாலே கார்ய வர்க்கத்தை பிறப்பிக்க வற்றான சக்தியை யுடைத்தாய் விசித்ர பரிணாமினியாய்ச்-சேதனர்க்கு போக மோக்ஷத்தை இசைத்துக் கொள்ளலாம் நிலமாய் இருந்துள்ள மூலப் பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனே – / உம்பர் –மேல் / அம் தண் -அழகியதுமாய் அனுகூலமுமாய் இருக்கை / பாழேயோ-கிருஷிக்கு யோக்யமாய் இருக்கை
அதனுள் மிசை நீயேயோ–அதிலே பத்தமாய் இருக்கிற விலக்ஷணமான ஆத்மதத்வத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே -ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத-தமேவார்த்த ஸ்வரூபேண பிராந்தி தர்சநத ஸ்த்திதம் –ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரி காரணம் ஆகையால் -காரண அவஸ்தையைச் சொல்லிற்று –இத்தால் விசேஷண ப்ராதான்யம் சொல்லும் நியாய வைசேஷிக பக்ஷமும்–விசேஷத்துக்கு அபாரமர்த்த்யம் சொல்லும் மாயாவதி பக்ஷமும் ஆழ்வாருக்கு பக்ஷம் அல்ல என்றதாய்த்து –
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அம்பரம் -ஆகாசம் / நற் சோதி-தேஜோ பதார்த்தம் / இவை இரண்டும் பஞ்ச பூதங்களுக்கும் உப லக்ஷணம் –/ அதனுள் பிரமன் அரன் நீ-அந்த பஞ்ச பூதங்களால் ஸ்ருஷ்டமான அண்டத்துக்கு உள்ளே வர்த்தமானரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நிர்வாஹகன் ஆனவன் நீ –
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–மேலான தேவர்களையும் மனுஷ்யாதி ஸ்தாவாராந்தமான சகல பதார்த்தங்களையும் ஸ்ருஷ்டித்த முனியாக பிரசித்தனானவன் நீ –சகல பதார்த்தங்களையும் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டிக்கைக்காக பூர்வ கர்மங்களை அநுஸந்திக்குமவன் இ றே முனியாகிறான் -ததச தேவ சன்மனோஸ் குருத ஸ் யாமிதி –இத்தால் ஸ்தூல சித் அசித் சரீரத்வத்தாலே கார்யம் சொல்லிற்று யாய்த்து –கஸ்யப ப்ரஜாபதியைச் சொல்லிற்று ஆகவுமாம் –எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–என் கார்யம் நீயே செய்யக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு -அத்தையும் உபேக்ஷித்து அசேதனத்தைப் பொகடுமா போல பொகட்டாய் என்னுதல் –சகலத்தையும் நிர்வஹிக்கிற நீ என்னை ஒருவனையும் நானே என் கார்யம் செய்வேனாகப் பார்த்து உன் பக்கலில் நின்றும் போர விட்டு உபேக்ஷித்தாய் என்னுதல் -/ என்னை -உன்னை ஒழியச் செல்லாத என்னை —

——————————————————————

சர்வ ரக்ஷகனான நீ உபேக்ஷித்தால் என் கார்யம் நான் செய்யவோ -பிறர் செய்யவோ -நான் முடிந்தேன் -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

போர விட்டிட்டு-உன் பக்கலில் நின்று அகற்றி உபேக்ஷித்து -என்னை-அநந்ய கதியான என்னை —நீ -ஸ்ருஷ்டியே தொடங்கி இவ்வளவும் வர என்னைப் புகுர நிறுத்தின நீ என்னுதல் -சர்வ ரக்ஷகனான நீ என்னுதல் –
புறம் போக்கல் உற்றால்-புறம்பு போக்குகையில் அத்யவசித்தால் -என் கார்யம் நானே செய்வானாகப் பார்த்து என்னை உபேக்ஷித்தால் –
பின்னை யான்-ஆரைக் கொண்டு எத்தை -சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு -அசக்தனான நான் -எந்த உபாயத்தைக் கொண்டு என்ன புருஷார்த்தத்தை சாதிப்பது -ஆரைக் கொண்டு என்கிறது புருஷார்த்தம் பெறுவது ஒரு பரம சேதனனாலே -அசேதன க்ரியாகலாபங்களால் அல்ல என்னும் இடம் தோற்றுகைக்காக -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
அந்தோ-மா மேகம் சரணம் வ்ரஜ என்ற உனக்கு நான் உபதேசிக்க வேண்டுவதே
எனது என்பன் என் யான் எனபது என்-பேறு உம்மதானால் சாதனம் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன -எனக்கு பரிகரமாய் இருப்பது ஓன்று உண்டு என்பதோர் அர்த்தம் உண்டோ -ப்ருதக் ஸ்திதி யோக்யமாய் இருப்பதோர் அர்த்தம் உண்டோ -சரீர ரக்ஷணம் சரீரியை ஒழியச் செய்வார் உண்டோ –
தீர இரும்பு உண்ட நீரது போலே–அக்னி சந்தப்த்தமான இரும்பு உண்ட நீரானது காற்ற ஒண்ணாதாப் போலே
என் ஆர் உயிரை-ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே -என் ஆத்மாவைச் சமைய புஜிக்கைக்காக எனக்கு உன்னுடைய நிரதிசய போக்யதையைக் காட்டி என்னை அகப்படுத்தினாய் -முன்பு நீ போக்யதையைக் காட்டிற்றும் உன்னை நான் பெறுகைக்கு அன்றி -என்னை அகப்படுத்தி உன் கார்யம் செய்தாயாய் யத்தனை இ றே என்னுதல் –
காய்ந்த இரும்பு அக்காய்ச்சல் தீரும்படி நீரைப் பருகுமா போலே என்னுடைய விடாய் தீரும்படி உன்னைப் புஜிக்க எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே என்னுதல்

—————————————————————-

பெரிய பிராட்டியார் பக்கல் போலே என் பக்கல் அத்யபி நிவிஷ்டனாய் -என் ப்ரக்ருதியிலும் கூட அத்யாதரத்தைப் பண்ணி என்னை புஜித்த நீ -என்னை உபேக்ஷியாதே ஈண்டென விஷயீ கரித்து அருளாய் என்கிறார் –

எனக்கு  ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

எனக்கு ஆரா அமுதமாய் -தேவ ஜாதியினுடைய உப்புச் சாறு அன்றிக்கே –சதா ஸேவ்யமுமாய்-நித்ய ஸூ ரிகள் எல்லாரும் கூட அனுபவிக்கும் உன்னை -சம்சாரியான எனக்குத் தந்தாய் –
எனது ஆவியை-என்னது என்னும் அதுவே ஹேதுவாக காமுகர் அபிமத விஷயத்தில் அழுக்கை விரும்புமா போலே என்னுடம்பை விரும்பினாய் –
இன்னுயிரை-அது தன்னை நன்று என்று விரும்புகையாலே அதிலும் தண்ணிதான ஆத்மாவை விரும்பினாய் –இன்னுயிர் என்று செவ்வாய் கிழமையை மங்கள வாரம் என்னுமா போலே -என்னுதல் -அவன் தலையால் சுமக்கிற படியால் என்னுதல் –
மனக்கு ஆராமை -மனஸ் ஸூ க்கு ஆராமை –மனக்கு -மனஸ் ஸூ க்கு —
மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்
இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்-முன்பு நீ மேல் விழுந்தது உனக்கு ஒரு குறை உண்டாயோ -ஸ்ரீ யானவள் தான் மேல் விழும் வடிவை யுடையையாய் வைத்து அன்றோ என் பக்கலிலே அபி நிவேசித்தது —புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இ றே இவை –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா –இப்படிப் பட்ட உனக்கு சத்ருசமாக அழகை யுடையளாய் புஷபத்தில் பரிமளத்தை வகுத்தால் போலே இருக்கிற ஸுகுமார்யத்தை யுடையளாய் இருக்கிற பிராட்டிக்கு ஸ்நிக்தனானவனே -பிராட்டி அழகு நாவால் துகைக்க ஒண்ணாமையாலே –உனக்கு ஏற்கும் கோலம் -என்கிறார் –
என் அன்பேயோ-அவளுக்கு அன்பை யுடையவன் -என்கிறார் -இங்கு இரண்டாக பிரிக்க ஒண்ணாத படி இருந்தான் என்கிறார் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-முன்பு இப்படி தலையால் சுமந்து வைத்து உபேக்ஷித்தால் பொறுக்கப் போமோ —

———————————————————————-

நான் பெரிய பிராட்டியார் பரிக்ரஹம் ஆகையால் -பிரளய ஆர்ணவ மக்னையான ஸ்ரீ பூமிப பிராட்டியை எடுத்து அவளோடு சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -கடலைக் கடைந்து பெரிய பிராட்டியாரோடே சம்ச்லேஷித்து அருளினால் போலேயும் -சம்சார ஆர்ணவ மக்நனான என்னை எடுத்து என்னோடே சம்ச்லேஷித்து அருளினான் -என் பக்கல் அதி வியாமோஹத்தை பண்ணின உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விடுவேனோ என்கிறார் –

கோல  மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–பிராட்டி பக்கல் ஸ்நேஹ அதிசயத்தாலே -அந்த ஸ்நேஹமே ஹேதுவாக அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதி பிரவணன் ஆனவனே -சரம தசையில் இவர் அருளிச் செய்த வார்த்தை ரகசியத்தின் படி இருந்தபடி கண்டாயே என்று சீயரைக் குறித்து பட்டர் அருளிச் செய்தார் –பிராதி  கூல்யத்தை கனக்கப் பண்ணினார் பக்கலிலும் நாலடி வர நின்றதுவே ஹேதுவாக ரக்ஷகனாம் ஈஸ்வரன் என்னும் இடம் காக விபீஷணாதிகள் பக்கல் கண்டது இ றே-க்ருபயா  பர்யபாலயாத் — என்றும் நத்யஜேயம் என்றும் அவ்வளவு அன்றிக்கே தனி இருப்பில் தர்ஜன பர்ச நாதிகளாலே நலிந்த ராக்ஷஸிகள் பக்கல் திருவடி எதிர்க்க -க குப்யேத்-கார்யம் க் ருணம் ஆர்யேனே நகச்சின் நபராத்யதி -என்னும் நீர்மை இ றே பிராட்டி நீர்மை –
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்--ததஸ்தம் உத்க்ஷிப்ய நீல இவா சலோ மஹான் –ஒரு அஞ்சன கிரி இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்தால் போலே –பிறையில் மறுவோபாதி யாய்த்து திரு எயிற்றில் கிடந்த பூமி –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்-மாசுடம்பில் நீர் வாரா நின்ற நிலை இ றே இவருக்கு ஆலத்தி வழிக்க விஷயமாய்த்து -பாசி தூர்த்து கிடந்த பார்மகட்க்கு-என்கிறபடியே பிரணயிநி அழுக்கோடு இருக்க தாமான படியே வருவாராகில் பிரணயித்தவத்துக்கு நமஸ்காரமாம் அத்தனை இ றே -அவன் அழிவுக்கு இட்ட வடிவைப் பற்றி இ றே இவர் ஆலத்தி வழிக்கிறது / ஒன்றாய் -வராஹ சஜாதீய மாத்ரம் என்னுதல் –த்ரைலோக்யத்தையும் கண் செறியிட்டால் போலே விம்ம வளர்ந்தபடியாலே அத்விதீயம் என்னுதல் –
நீலக் கடல் கடைந்தாய் -பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தவனே -/ நீலக்கடல் -கடைகிறவனுடைய நிழலீட்டாலே யாதல் -சகல ஓஷிதிகளையும் பொகடுகையால் வந்த நிற வேறுபாடு என்னுதல் -/ நிறத்தால் நீல ரத்னத்தைச் சொல்லிற்றாய் தத் பிரசுரமான ரத்நாகாரம் என்னுதல் –
உன்னைப் பெற்று இனி போக்குவனோ –ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

—————————————————————

அத்யந்த துர்ஜ்ஜேயனான உன்னைப் பெற்று வைத்து இனித் தப்ப விட உபாயம் இல்லை என்கிறார் –

பெற்று  இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை-ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே -இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –
என் தனிப் பேர் உயிரை–உன்னை -என்றதின் வியாக்யானம் -உபமான ரஹிதனாய் விபூவாய் -எனக்குத் தாரகனாய் இருந்தவனை -சேதனனில் காட்டில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
உற்ற இரு வினையாய் -இவ்வாத்மாவோடு பிரிக்க ஒண்ணாத படி கலந்து -இருவகைப் பட்ட புண்ய பாபங்களுக்கு நியாமகனாய் –
உயிராயப் -அவற்றிலே சிறைப்பட்டுக் கிடக்கிற ஆத்மாவுக்கு நியாமகனாய்
பயன் ஆயவையாய்-அந்த புண்ய பாபங்களுடைய பலன்களுக்கு நிர்வாஹகனாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-முற்றக் கரந்து ஒளித்தாய்--இவை எல்லாம் ஆகிற த்ரை லோக்யம் என்கிற தூற்றை யுண்டாக்கி —பெரும் தூறு -என்கிறது -துர்ஜ்ஜேய ஸ்வ பாவம் யுண்டாகையாலே -இந்த லோகத்தின் உள்ளே புக்கு -எங்கும் வியாபித்து துர்ஜ்ஜேய ஸ்வ பாவனாய் இருந்தாய்
என் முதல் தனி வித்தேயோ-இப்படி இருந்து வைத்து உன்னை எனக்கு பெறுகைக்கு அடியான அத்விதீயமான மூல ஸூ க்ருதத்துக்கு உத்பாதகனாய் -உன் பக்கலிலே ஆபிமுக்யத்தை -ஒளன் முக்கியத்தை -பிறப்பித்தவனே -இப்படிப் பட்டு இருக்கிற உன்னை பிரதம ஸூக்ருதத்துக்கும் உத்பாதகனாய்க் கொண்டு வந்த தரப் பெற்ற நான் உன்னைப் போக்குவேனோ –

———————————————————————

நான் ஜகத் சரீரனாய் இருக்கிற இருப்பை உமக்கு காட்டக் கண்டீர் ஆகில் வேறு அபேக்ஷிதம் என் என்னில் -எனக்கு அத்தால் போராது -திரு நாட்டிலே வியாவ்ருத்தமாய் பரி பூர்ணனாய் இருக்கிற இருப்பையும் காண வேணும் என்கிறார் –

முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்-ஓன்று ஒழியாத படி த்ரை லோக்யம் தொடக்கமானவற்றுக்கு எல்லாம் த்ரி வித காரணமும் ஆனவனே /–முதல் -நிமித்த காரணம் / தனி -சஹகாரி காரணம் / வித்து -உபாதான காரணம் –
முதல் தனி யுன்னை-இதுக்கு எல்லாம் பிரதானனாய் -உபமான ரஹிதனாய் இருந்துள்ள உன்னை –
யுன்னை–ஜகத் காரணமாய் -உபமான ரஹிதனாய் இருக்கும் அளவன்றிக்கே -நித்ய விபூதியில் அசாதாரண விக்ரஹ யுக்தனாய் -ஸமஸ்த கல்யாண குண யுக்தனாய் -நித்ய ஸூ ரிகள் அனுபவிக்க இருக்கிற உன்னை –
எனை நாள் வந்து கூடுவன் நான்-என்று வந்து கூடக் கடவன் -அத் திரளிலே  நின்றும் பிறி கதிர் பட்டு போந்தாரைப் போலே இருக்கிறதாய்த்து இவருக்கு யோக்யதையாலே –
முதல் தனி எங்கும் இங்கும் -பிரதானமாய் -உபமான ரஹிதமாய் அங்கும் இங்குமாக மஹாதாதிகள் முழுவதிலும்
முழு முற்று உறு வாழ் பாழாய்-எங்கும் -உற்று -விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து -/ வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–பிரகிருதி பிராக்ருதங்களுக்கு நியாமகமாய் -பிரதானமாய் -ஒப்பின்றிக்கே இவற்றை அடைய பத்துத் திக்கிலும் ஞானத்தால் வியாபித்து நித்தியமாய் இருந்துள்ள ஆத்மவஸ்துவுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்–முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–முதல் தனி வித்தாய் –முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயாய் -இருக்கிற -முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–கார்ய காரண உபய அவஸ்தமான சித் அசித்துக்குகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவு போராது -அசாதாரண விக்ரஹ யுக்தனாய் ஒரு தேச விசேஷத்திலே இருக்கும் இருப்பை அனுபவிக்க வேணும் என்றதாய்த்து –

——————————————————————–

எம்பெருமானுக்கு இவர் அபேக்ஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட இவர் பிரார்த்தித்த படியே பரிபூர்ணனாய்க் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு -அபரிச்சேதயமான பிரகிருதி தத்துவத்திலும் -ஆத்மதத்வத்திலும் உன்னுடைய சங்கல்ப ஞான ரூப ஞானத்திலும் பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் -என்னுடைய மநோ ரதமும் ஒரு படி முடிய பெற்றேன் -என்கிறார் –

சூழ்ந்து  அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ—சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ–-இப்போது பிரகிருதி புருஷாதிகளைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றில் பெரியது என்று சொல்லுகைக்காக -அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவையும் சொல்லுகிறது –ஸ் வ கார்யமான மஹத்தாதிகளைப் பத்துத் திக்கிலும் புக்கு எங்கும் வியாபிக்க -நித்தியமாய் அபரிச்சேதயமாய் -சேதனர்க்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவானவனே –சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ—அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் அதுக்கு நியாந்தா வாகையாலே மேலாய் -விகாராதிகள் இல்லாமையால் விலக்ஷணமாய் விகஸ்வர தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மாவானவனே –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொண்டு அது குளப்படி யாம்படி பெரிதான என்னுடைய அபி நிவேசத்தை -அதிலும் பெரிய உன்னுடைய அபி நிவேசத்தைக் காட்டி வந்து சம்ச்லேஷித்தாயே -என்னுடைய கூப்பீடும் ஒருபடி போம்படி பண்ணுவதே –அங்கே பரதம் ஆரோப்ய முதித பரிஷஸ்வஜே -என்று மீண்டு புகுந்து ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்தால் போலே யாய்த்து இவருடைய விடாயும் கெடும்படி வந்து கலந்தது–

——————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார் -ஆழ்வாருடைய கிலேசம்  இன்றியே பலத்திலே அந்வயிப்பர் என்கிறார் –

அவா  அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை–நித்தியமான ஸ்வரூபத்தையும் ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களையும் ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய மங்கள விக்ரஹத்தையும் -அபரிமித திவ்ய பூஷணங்களையும் சங்க சக்ராதி திவ்ய ஆயுதங்களையும் -லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கத்தையும் உடையனாய் அஸ்த்தானே பய சங்கிகைகளான நித்ய ஸூ ரிகளாலே பரிச்சர்யமாணமான திருவடித் தாமரைகளை யுடையனாய் இருந்துள்ளவனை
அயனை அரனை--ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவானவனை –
அவா அறச் சூழ் கை யாவது -தன்னைக் காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதர் யுடைய விடாய் தீர சம்ச்லேஷிக்கை–இஸ் சாமா நாதி கரண்யத்தாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கலில் ஈச்வரத்வ சங்கை அறுக்கிறார்-அவர்களுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனம் ஆகையால் அவர்களுக்கு பாரதந்தர்யமே ஸ்வரூபம் -நிர்வாஹகத்வம் கர்மத்தால் வந்தது -இஸ் சாமா நாதி கரண்யத்தாலே நிர்வகிக்குமது அன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் யுண்டு –அயனை அரனை–அவா அற்று-அரியை -அலற்றி -வீடு பெற்ற–என்னுதல் -/
அலற்றி-அவா அற்று- -வீடு பெற்ற–என்னுதல் -/ கூப்பிட்டு- அவா  அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்— அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் –பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இவரைச் சொல்லுவித்த அபி நிவேசம் -ப்ரேரகனான மைத்ரேயனுடைய ஸ்த்தானத்திலே நிற்கிறது யாய்த்து –
முடிந்த -அவா இல் அந்தாதி இப்பத்து -பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –
1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் -வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து -அமைவுடை நாரணன் -என்றும் -செல்வ நாரணன் -என்றும் -நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் -திரு நாரணன் -என்றும் -நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திண்ணம் நாரணமே என்றும் -வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே -அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது-
2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் -கமல மலர் மேலே செய்யாள் -என்றும் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து -திருவாணை நின்னாணை கண்டாய் -என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே -ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி -ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –
3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி -நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே -அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று-
4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று தொடங்கி -அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –
இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –
பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் -கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இ றே —

————————————————————————-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: