திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-8–

தன்னைப் பெற வேணும் என்னும் இச்சா லேசமும் இன்றிக்கே –தன்னைப் பெறுகைக்கு ஈடான உபாயமும் இன்றிக்கே –
அதுக்கு மேலே அஸஹ்ய அபசார பஹுளனாய் மிகவும் விஷயங்களையே உகந்து இருக்கிற எனக்கு –
பொது நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர மஹா ஸம்ருத்தியைத் தந்து என் பக்கலிலே மிகவும் வியாமோகத்தைப் பண்ணி
இப்போது என்னை விஷயீ கரிக்கைக்கும் பண்டு என்னைப் பொகடுகைக்கும் காரணம் என் என்று –
தம்மைத் திருநாட்டில் கொடு போகையிலே விரைகிற எம்பெருமானை ஆழ்வார் கேட்க –
அவனும் நிருத்தனாய் இருந்தவாறே நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து அருளினான் -என்று அத்யவசித்து –
அதுக்கு அடியான நிஸ் சீமமான அவனுடைய க்ருபாதி குணங்களை மிகவும் அனுசந்தித்து அதிலே ஈடுபட்டு விஸ்மிதராய்க் களிக்கிறார்–

—————————————————————

யாத்திருச்சிகமாக திருமாலிருஞ்சோலை  மலை என்றேன் -என்னில் காட்டில் அத்யந்த நிரபேஷனாய் இருக்கிற -தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பெரு விலையனாய் அழகியவான ரத்னங்களை கொடு வந்து தள்ளா நின்றுள்ள புனலையுடைய பொன்னியினுடைய தென் கரையிலே  ஸ்ரீயபதியான தான் சென்று சேரும் சிலாக்யமான தேசம் தென் திருப்பேர் –

—————————————————————-

இதுக்கு முன்பு தான் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்தே -என்னோடே கலக்கப் பெறாமையாலே -குறைவாளனாய் இருந்தவன் -நிர்ஹேதுகமாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து பூர்ணன் ஆனான் என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

திருப் பேரைத் தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன் -இனி ஒரு நாளும் போகேன் என்று சொல்லிக் கொண்டு என்னுடைய ஹிருதயம் பூர்ணனாம் படி இன்று வந்து புகுந்தான் -புஷ் கலாதி மேகம் ஏழையும் -சப்த சமுத்ரங்களையும் -சப்த குல பர்வதங்களையும் திரு வயிற்றிலே வைத்து -பின்னையும் குறைவாளனாய்  இருந்தவனுக்கு -இனி ஒன்றும் தேட வேண்டாதபடி பரி பூர்ணமான பாத்ரமானேன் –

——————————————————————

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எம்பெருமான் திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜென்மங்களை போக்கினேன் -ஜென்ம நிமித்தங்களான துக்கங்களை சாரேன்-சம்சாரத்தில் நிற்கைக்கு உறுப்பான பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் –

——————————————————————–

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

செறிந்த திருச் சோலையை யுடைய திருப் பேரன் ரஜஸ் தமஸ் காலுஷ்யம் இன்றிக்கே சுத்த சத்வ மயமாகையாலே தெளிந்து இருந்துள்ள ஸ்ரீ வைகுண்டத்தைத் தரும் –

——————————————————————-

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே நிர்ஹேதுகமாக வந்து புகுந்து -தன்னைப் பிரிந்து தடுமாறப் பண்ணும் புண்ய பாப ரூபமான கர்மங்களை -தேன்-என்று வண்டாகவுமாம் –

———————————————————————–

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

பொருப்பு–மலை /  பிரான்-உபகாரகன் / விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே-அவனாலே பஹு மானம் பெற்று-அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேனே–அவனுடைய குண அம்ருதத்தைப் பணம் பண்ணிக் களித்தேன் -என்றுமாம் –

————————————————————————–

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

மேலான தாஸ்ய ரசம் பெருகினால் -அதன் முடிவில் ஆற்றாமை சொல்லும் -நம-என்கிற சொல்லைச் சொல்லப் பெற்றேன் -வண்டு களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரான்-நான் கண்டு க்ருதார்த்தனாம் படி கண்ணுள்ளே நின்று அகலுகிறிலன்-இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி குறை யுண்டோ –

———————————————————————

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து ஹிருதயத்திலே புகுந்தான்

——————————————————————–

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

குன்று போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப் பேரான் ஓன்று எனக்குச் சொல்ல வேண்டும் என்று உணர்த்த வேண்டி இருந்தேன் –

——————————————————————

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்று ஆழ்வார் விண்ணப்பம் செய்ய -அவனும் அப்படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் -திருப் பேர் நகரான் -திருவடிகளை ஆச்ரயித்தார்க்கு ஒரு துக்கம் ஆகாதே என்கிறார் -அற்றாரான அடியார் –

————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -விலக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

பெருத்த  வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப் பேர் மேலே விலக்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து க்ருதார்த்தரான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல் சேர்ந்த-
தமிழனா ஆயிரம் திரு வாய் மொழியிலும் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: