திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–8- –

தம்மைக் குறித்து ஈஸ்வரனுக்கு உண்டான பாரதந்தர்யத்தைச் சொன்னார் அருள் பெறுவார் அடியாரிலே –
அவன் தானே மேல் விழுந்து தம்முடைய திருமேனியை விரும்பா நிற்க இத்தைத் தவிர வேணும் என்று அர்த்தித்த
இதுக்கு இசைகையாலே அந்த பாரதந்தர்யத்தை முடிய நடத்தின படியைச் சொன்னார் செஞ்சொற் கவியில் –
இதில் அஸஹ்ய அபசார பாஹுளராய் இருக்கிற நம்மை -அவற்றைப் பொறுத்து –அத்வேஷத்தைப் பிறப்பித்து –
-அது அடியாக விசேஷ கடாக்ஷத்தை நம் பக்கலிலே பண்ணி -தன்னைப் பெற வேணும் என்னும் இச்சையைப் பிறப்பித்து-
-தன்னைப் பெறுகைக்கு உபாயமும் தானே -என்னும் புத்தியை நமக்குத் பிறப்பித்து –
-சப்தாதி விஷயங்களில் பிரவணராய் திரிந்த நம்மை -பல நீ காட்டிப் படுப்பாயோ -என்னும் படி பண்ணி –
-பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் யுண்டான மஹா ஸம்ருத்தியைத் தந்து -இவ்வளவு புகுர நிறுத்தி-
-தம் பக்கலிலே மிகவும் வியாமோகத்தைப் பண்ணி -அவ்வருகும் கொண்டு போவானாய் த்வரியா நிற்கும்படியை அனுசந்தித்து –
இதுக்கு அடியாய் இருப்பதொன்று நம் பக்கலிலே யுண்டோ என்று ஆராய்ந்த இடத்து தம் பக்கல் ஒன்றும் கண்டிலர்-
-தம் பக்கலிலே உள்ளதொன்றைப் பேற்றுக்கு உடலாக நினைக்குமவர் இல்லாமையால் -இனி இதுக்கு அடி –
-ஸ்வதஸ் சர்வஞ்ஞ னானவன் தன்னையே கேட்ப்போம் -என்று பார்த்து –
இன்று தேவர் இப்படி சிரஸா வஹிக்கைக்கும்-அநாதி காலம் இத்தை விடுகைக்கும் அடி என் என்று கேட்க –
அவனும் நிருத்தரானாய் கவிழ் தலையிட்டு காலாலே தறையைக் கீறி நிக்க -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து அருளினான் என்று அத்யவசித்து
-அவ் விஷயீ காரத்துக்கு அடியாக நிஸ்சீமமாய் நிஸ்சங்க்யமமான கிருபாதி குணங்களை அனுசந்தித்து –
-இது ஒரு குணவத்தையே -என்று அதிலே ஈடுபட்டு விஸ்மிதராய்க் களிக்கிறார் —

—————————————————————–

யாத்திருச்சிகமாக திருமாலிருஞ்சோலை  மலை என்றேன் -என்னில் காட்டில் அத்யந்த நிரபேஷனாய் இருக்கிற -தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-சிலர் ஒரு மலையைச் சொல்லும் இடத்தில் ஒரு விசேஷணத்தை இட்டுச் சொல்ல வேணும் –அம் மாத்ரம் சொன்னேன் அத்தனை என்று இரா நின்றார் இவர் -இவ் விசேஷணத்தை இட்டுச் சொல்லிற்று தன் பக்கல் ஆதரத்தாலே என்று இரா நின்றான் அவன் -/ என்ன -மனஸ் சஹகாரம் இல்லை -யுக்தி மாத்திரமே என்று இருக்கிறார் -ராவணன் தம்பிக்கு மித்ர பாவமே அமையும் என்று இருக்கிறவன் -இவருக்கு உக்திக்கு அவ்வருகு ஓன்று வேணும் என்று இருக்குமோ –சேஷத்வம் ஸ்வரூபம் ஆகில் -உபாய பாவம் நம் தலையிலே கிடந்ததாகில் -அத்வேஷம் உண்டாகில் -நம் பேறாக விஷயீ கரிக்கைக்கு உக்திக்கு அவ்வருகு உண்டோ -என்று இரா நின்றான் அவன் –
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்—திருமால் –அஹ்ருதயமாகச் சொன்னது தன்னையும் சஹ்ருதயம் ஆக்குவாரும் அருகே உண்டு -/ வந்து -நம்மை அங்கே அழைத்துக் கார்யம் கொள்ளுகை அன்றிக்கே –நாம் இருந்த இடத்தே வருவதே –சாபேஷன் இருந்த இடத்திலே பூர்ணன் வருவதே -சர்வருக்கும் அபிகம்யனானவனுக்கு நான் அபிகமயனாவதே -ஸோ அப்யகச்சன் மஹா தேஜோ சபரீம் – என் நெஞ்சம் -உக்திக்கு அசஹகாரியான என் நெஞ்சம் — நிறையப் புகுந்தான்-–விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாத படி பாழ் தீரப் புகுந்தான் –
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்-பெரு விலையனாய் தர்ச நீயமான ரத்னங்களைக் கொண்டு வந்து தள்ளா நின்றுள்ள புனலை யுடைய பொன்னித் தென் கரையிலே
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-–சிலாக்யமான தேசம் என்ற படி —ஸ்ரீ யபதி சேரும்படியான சிலாக்யமான தென் திருப் பேர் -இத்தேசத்தை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் -அஹ்ருதயமான என் யுக்தி மாத்ரத்தைக் கொண்டு -என் நெஞ்சிலே விரும்பிப் புகுந்தான் –
கீழ் -திருமால் -என்ற இடம் -புருஷகார பாவத்தைச் சொல்லிற்று –மேலில்-திருமால் -என்கிற இடம் உத்தரார்த்தத்தில் ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தைச் சொல்லுகிறது –

————————————————————————-

இதுக்கு முன்பு தான் சர்வேஸ்வரனாய் இருந்து வைத்தே -என்னோடே கலக்கப் பெறாமையாலே -குறைவாளனாய் இருந்தவன் -நிர்ஹேதுகமாக என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து பூர்ணன் ஆனான் என்கிறார் –

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பேரே உறைகின்ற பிரான்–திருப் பேரை தனக்கு கோயிலாகப் பேற்று அங்கே நிரந்தர வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
இன்று வந்து-பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-தன்னை ஒருவர் கேட்டார் இன்றிக்கே இருக்காது தானே -இனி ஒரு நாளும் போகேன் -என்று சொல்லி பிராட்டி தன் பக்கலிலே சொல்லுமத்தை தான் என் பக்கலிலே சொல்லா நின்றான் -/ என் நெஞ்சு –நிறையப் புகுந்தான்–இவனுடைய அபி நிவேசத்தை ஆதரியாத நெஞ்சானது பூர்ணமாம் படி –முன்பு நினைவு இன்றிக்கே இருக்க இன்று வந்து புகுந்தான் -முன்பு நினைவு உண்டாவது தன் பக்கல் முதல் உண்டாகில் இ றே –
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்-புஷ் கலாதி மேகம் எழும் –சப்த சமுத்ரங்களும் -சப்த குல பர்வதங்களுமான லோகத்தை திரு வயிற்றிலே வைத்து —ஆரா வயிற்றானை –– பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் இருக்குமவனை
அடங்கப் பிடித்தேனே–-இப்படி அபி நிவிஷ்டனாய் இருக்கிறவனை பூர்ணன் ஆக்கினேன் –அதாகிறது பிரளய ஆபத்தைப் போக்கி ரஷித்தாலும் ஸ்ருஷ்ட்டி முதலாக மோக்ஷ பர்யந்தமாக ரத்னம் பண்ண வேண்டுகையாலே குறைவாளனாய் இருக்கும் -ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் கார்யம் கொள்ளலாம் படி இருக்கையாலே இப்போதே இ றே குறைவற்றது -இனி அவனுக்கு ஒரு அபேக்ஷை இல்லாத படி பரி பூர்ண பாத்திரம் ஆனேன் -என்கிறார் –

——————————————————————-

எம்பெருமான் நிர்ஹேதுகமாக தம்மோடே வந்து சம்ச்லேஷித்த படியை அனுசந்தித்து -இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிதாவதே –என்கிறார் –

பிடித்தேன்  பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை–-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன் -/ மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்-கொடிகளை யுடைத்தான கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப் பட்ட திருப் பேரிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–திருவடிகளைக் கிட்டுகை -எனக்கு அநாயாஸம் ஆவதே -சாஸ்திரங்களில் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் கிடைக்க -கிட்டலாவது ஒரு விரகு பெறுவதே -ஸ்வயம் பிரபா புலத்தில் புக்க முதலிகளைக் கண்ணைச் செம்பளிக்கச் சொல்லி அவன் கரையிலே ஏற விட்டால் போலேயும் -ஸ்ரீ மதுரையில் உறங்கினவர்கள் ஸ்ரீ மத் த்வாரகையிலே விழித்தால் போலேயும் -சிலரை ஆபந் நிவ்ருத்தி பூர்வகமாக ஸூ கிகளாக்கும் போது அவர்கள் கண் செம்பளிக்க வேண்டுமா போலே காணும் –

————————————————————

தனக்கு திரு நாட்டுக்கு கொடுப்பானாய் இருக்கிற எம்பெருமானுடைய படியை -நீர்மையை –அனுசந்தித்து -இங்கனே எளிதாவதே -என்று என்னுடைய இந்த்ரியங்களோடே கூடக் களித்த மனசை யுடையேனாய்க் களியா நின்றேன்–கரணங்களும் களிக்க நானும் களியா நின்றேன் – -என்கிறார் –

எளிது  ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-ஸூ துர்லபமான விஷயம் இங்கனே எளிதாவதே என்று -காணக் கருதும் என் கண்ணே -என்று விடாய்த்த கண்கள் களிக்கும் படி
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-களித்த மனசை யுடையேனாய் -நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சம் -என்ற நெஞ்சும் களிக்கப் பற்றது -கூவியும் காணப் பெற்றேன் -என்ற நான் களியா நின்றேன் -முடியானேயில் தாமும் தம்முடைய கரணங்களும் விடாய்த்த படி சொல்லிற்று -இங்கு தாமும் தம்முடைய கரணங்களும் களித்த படி சொல்லுகிறது
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-செறிந்த சோலையை யுடைய திருப் பேரை நிரூபகமாக யுடையவன் -அக்காலத்திலே யுண்டாய் பின்பு இல்லையாகக் கூடும் –அத்தாலே சொல்லுதல் -பகவத் பரிக்ரஹமான இடத்துக்கு எல்லா நன்மையையும் யுண்டு என்பதினால் சொல்லுதல்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–சுத்த சத்வ மயம் ஆகையால் தெளிந்து இருந்துள்ள பரம பதத்தை தந்தே விடும் -/ சேண் விசும்பு-ப்ரஹ்ம லோகத்துக்கு அவ்வருகே உயர்ந்து இருந்துள்ள ஆகாசம் –

——————————————————

திருப் பேர் நகரான் எனக்குத் திரு நாடு தரக் கடவனாக-என்னோடே பூணித்து-தானே தடுமாற்ற தீ வினைகள் தவிர்த்தான் -என்கிறார்  –

வானே  தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-எனக்கு வானே தருவானாய் -சம்சாரியான எனக்கு நித்ய ஸூ ரிகள் இருப்பை தருவானாக –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து -என்னோடே பூணித்து -நான் அர்த்தியாய் இருக்கச் செய்தேயும் -அராவணம ராமம் வா -என்கிறபடியே -என்னோடே சமயத்தைப் பண்ணி மாம்ஸாதி மயமாய் ஹேயமான இச் சரீரத்தின் உள்ளே தானே புகுந்து -நிர்ஹேதுகமாக வந்து புகுந்து
இன்று-நென்னேற்று ஒரு நினைவு இல்லை
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–மது மிக்க பொழில் —தேன் என்று வண்டு ஆகவுமாம் -இவனுக்கு என்ன குறை யுண்டாய் என் பக்கல் இங்கனே படுகிறான்

———————————————————————

தனக்கு வர்த்தித்து அருளலாம் கோயில்கள் -அநேகம் யுண்டாய் இருக்க -ஓர் இடம் இல்லாதாரைப் போலே -இருப்பேன் என்று பிரார்த்தித்திக் கொண்டு என்னுடைய ஹிருதயத்திலே நிர்ஹேதுகமாகப் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

திருப் பேர்  நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்–திரு அயோத்யையில் வாசம் போலே யாய்த்து திருப் பேரில் இருப்பு -திருச் சித்ர கூடத்தில் இருப்பு போலே யாய்த்து திருமலையில் வாசம் -அதிகம் புரவா சாச்ச –என்றும் -ஜஹவ் ச துக்கம் புரவி ப்ரவாசாத் -என்றும் குபேர இவ நந்தநே–என்றும் சொல்லக் கடவது இ றே-
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து— / பொருப்பு -மலை / பிரான் -உபகாரகன் /-இன்று வந்து-பூர்வ க்ஷணத்தில் நினைவு இன்றியிலே இருக்க -வந்து கொடு நிற்கக் கண்டது அத்தனை –
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்–இஹ வத்ஸ் யாமி ஸுமித்ரே சார்த்தமே தேநபஷீணா–என்கிறபடியே -தன் பேறாக பிரதிஜ்ஜை பண்ணி -இருந்திடுவானுக்கு என்று இராதே என் நெஞ்சிலே குறைவறப் புகுந்தான் –
விருப்பே பெற்று -அவன் விருப்பத்தைப் பெற்று -அவனாலே பஹு மானம் பண்ணப் பெற்று
அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் / அவனுடைய குண அம்ருத பானத்தைப் பண்ணிக் களித்தேன் என்னுதல் /
ஷிபாமி என்று அவனுடைய அவன் உபேக்ஷைக்கு இலக்காகாதே -அவன் பஹு மானத்துக்கு இலக்கானால் -ப்ரீதி உள் அடங்காது இ றே –நரக ஹேதுவான விஷய அனுபவத்தால் வந்த களிப்பளவன்றியே -பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற செருக்கால் உண்டான ப்ரீதியை ஆற்றலாமோ —

——————————————————————-

தமக்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை அருளிச் செய்கிறார் –

உண்டு  களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

உண்டு களித்தேற்கு –ஞான அனுபவத்தால் களிக்கப் பெற்ற எனக்கு -இதுக்கு மேலே ஒன்றுமே வேண்டா -இதுவே அமையும் என்னும் படி ஞான அனுபவம் தானே இனிதாய் இ றே இருப்பது –
உம்பர் என் குறை -மேலே என்ன குறை யுண்டு –உம்பர் -மேல் –
மேலைத்தொண்டு உகளித்து –மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இ றே கீழான தாஸ்யம் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்-முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் -நம இத்யேவ வாதின -இ றே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகள் மது பானம் பண்ணி களிக்கிற பொழில் சூழ்ந்த திருப் பேரிலே வர்த்திக்கிறவன் -ஞானாதிகரோடு திர்யக்குகளோடு வாசி அறக் களிக்கும் தேசம் –
கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –
கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

—————————————————————

வாங்மன சங்களுக்கு நிலம் அன்றிக்கே -நிரதிசய போக்யனான திருப் பேர் நகரான் -என் கண்ணுக்கு எப்போதும் விஷயமாய் -ஒரு நாளும் போகாத படி -ஸ்நேஹித்து என் பக்கல் வியாமோஹத்தைப் பண்ணி –ஹிருதயத்திலே புகுந்தான்-என்கிறார்

கண்ணுள்  நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான்-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்
கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –
எண்ணில் நுண் பொருள் -தாம் தாமே எண்ண நினைப்பார்க்கு துர்க்க்ரஹமான வஸ்து -ஏழிசையின் சுவை தானே-எண்ணாமல் இருக்க ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது -சப்த ஸ்வரங்கள் இ றே பிரதானம் –
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான் –தேசத்தில் போக்யத்தையும் -மேன்மையும் இருக்கிற படி -நாநா வர்ணமாய் மஹார்க்கமான ரத்னங்களாலே செய்யப் பட்ட மாடங்களாலே சூழப் பட்ட தேசம் –
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –தன்னை ஆதரித்து இருக்கிற என்னுடைய ஹிருதயத்திலே தன் வியாமோஹம் எல்லாம் தோன்றும் படி வந்து புகுந்தான் –
திண்ணம்-சர்வேஸ்வரன் ஒரு சம்சாரி ஹிருதயத்திலே இப்படி மேல் விழக் கூடுமோ -என்று சங்கிக்க வேண்டாம் -இது த்ருடம் —

———————————————————————-

இன்று எனக்குத் தன்னை அறிவித்து -விஷயீ கரித்து – என்னோடே திருட சம்ச்லேஷம் பண்ணினவனை பண்டு என்னை உபேக்ஷிக்கைக்கு காரணம் என் என்று கேட்க வேண்டி இருந்தேன் -என்கிறார் –

இன்று  என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னைப் பொருள் ஆக்கி -அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்து வாக்கி -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்கிறபடியே –
தன்னை-சத்துக்களுக்கு ஸ்ப்ருஹநீயனான தன்னை
என்னுள் வைத்தான்-என்னோடே கூட சம்ச்லேஷம் பண்ணினான் -இன்று -என்கிறது மயர்வற மதி நலம் அருளப் பெற்றதற்கு பின்பு உண்டான அநாதி – காலத்தை –
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்–பர தந்த்ரனான என்னை புறம்போகப் பண்ணிற்று என் செயகைக்காக -பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை -புறம் போக விட்டானும் அவனே என்று இருக்கிறார் -ஸ்வ சத்தை பர அதீனமாய் இருக்கை -இவ் வஸ்துவுக்கு போக்கு வரவு ஆவது என் -இரண்டுக்கும் காரணம் சொல்ல வேணும் –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-மலைகள் போன்று விளங்கா நின்றுள்ள மாடங்களாலே சூழப் பட்ட திருப் பேர் நகரான் –
ஓன்று எனக்கு அருள் செய்ய -இன்று விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்ல வேணும் –முன்பு உபாசித்தத்துக்கு ஹேது சொல்லவுமாம் –
உணர்த்தல் உற்றேனே–அறிவிக்க வேண்டி இரா நின்றேன் -இதுக்கு ஈஸ்வரன் இவருக்கு சொன்ன உத்தரம் ஏது என்று சீயர் பட்டரைக் கேட்க -இவர் தலையிலே ஒரு பழி ஏறிட்டு நெடு நாள் இழந்த நாம் சொல்லுவது என் -என்று லஜ்ஜா விஷ்டனாய் நின்றான் -என்று அருளிச் செய்தார் –

———————————————————————–

இவர் கேட்ட அதுக்கு ஒரு ஹேது காணாமையாலே நிருத்தரனாய் -உமக்கு மேல் செய்ய வேண்டுவது சொல்லீர் என்று எம்பெருமான் அருளிச் செய்ய -உன்னைக் கிட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்து கொண்டு உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் -இதுவே இன்னம் வேண்டுவது -என்கிறார் -அவன் தானே செய்தான் என்னுமன்று அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யமும் சர்வ முக்தியும்  பிரசங்கியாதோ  -என்னில் -இத்தலையில் ருசியை அபேக்ஷித்துச் செய்கையாலே அவனுக்கு அது தட்டாது -அது ஹேது வென்று ஈஸ்வரனுக்கு உத்தரம் ஆனாலோ என்னில் -அது உபாயமாக மாட்டாது -பல வ்யாப்தமானது இ றே உபாயம் ஆவது -இந்த ருசி அதிகார ஸ்வரூபம் ஆகையால் தத் விசேஷணமாம் அத்தனை -உபாயம்  சஹகாரி நிரபேஷம் ஆகையாலும் இந்த ருசி உபாயம் ஆக மாட்டாது -இது உபாயம் அல்லாமையாலே இவர்க்கு இல்லை என்னஅவனுக்கு உண்டு என்னவுமாம் –

உற்றேன்  உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

உற்றேன்உகந்து பணி செய்ய உன பாதம்-பெற்றேன்-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –
ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –
எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இ றே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
கற்றார்-ஒரு ஆசனத்தின் கீழே இருந்து போக்கினவர்கள் –
மறை வாணர்கள் வாழ் -வியாச பதம் செலுத்த ஷமர் ஆனவர்கள் அனுபவித்து வர்த்திக்கிற தேசம் –
திருப் பேராற்கு–ப்ரீதி பிரகரஷத்தாலே முகத்தை ஸ்வகதமாகச் சொல்லுகிறார் -என்னுதல் -திருப் பேரனான உனக்கு என்னுதல் –
அற்றார் அடியார் -திருப் பேர் நகரானுக்கு அற்றாரான அடியார் -என்னுதல் -அவனுக்கு அற்றவர்களுக்கு அடியார் -என்னுதல் –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் இட்ட வழக்காம் -வி லக்ஷண தேஜோ ரூபமான திரு நாடு என்கிறார் –

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நில்லா  அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்--துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல் சேர்ந்த தமிழான ஆயிரம்  என்னுதல் -பாட்ட்யேகேயேச மதுரம் என்கிறபடியே இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் என்னுதல்
வல்லார் தொண்டர்-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் -செஞ்சொற்கவிகள் என்கிறபடியே வாசிகமான அடிமை செய்யும் வைஷ்ணவர்கள் –
ஆள்வது சூழ் பொன் விசும்பே–நிரதிசய தேஜோ ரூபமான பரம பதத்தை யாய்த்து ஆளுவது -இத் திருவாய் மொழிஅப்யசித்தவர்கள் சென்றால் ஆண்மின்கள் வானகம்-என்றாய்த்து -அங்குள்ளார் சொல்லுவது –

—————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: