திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–7- –

விதி வகையே என்கிறபடியே ஆழ்வார் விதித்த படி செய்வானாம் படி இவருக்கு பரதந்த்ரனாம் வைத்து தன்னுடைய சாபல அதிசயத்தாலே –
தலை மேல் தாளிணைகள் என்றும் நறும் துளவம் மெய்ந்நின்று கமழும் -என்றும் சொல்லுகிறபடியே இவருடைய-திரு மேனியை மிகவும் விரும்பி -இத்தேகத்தோடே கூட பரமபதத்தில் கூடக் கொண்டு போகையிலே-அபி நிவேசிக்கிற படியைக் கண்டு -நாம் பொய் நின்ற ஞானத்திலே கழித்துத் தர வேணும் -என்று
அபேக்ஷித்த போதே செய்யாது ஒழிந்தது நம்மைக் கொண்டு பிரபந்தம் தலைக் கட்டுகைக்காக என்று இருந்தோம்-அது ஒரு வியாஜ்யமாய்-சரீரத்தையே விரும்புகிறானாய் இருந்தது -இதுக்கு அடி நம்முடைய சரீரம் என்று
நம் பக்கல் விருப்பத்தால் விரும்புகிறான் அத்தனை -இது தோஷ பிரசுரம் என்று அறிகின்றிலன்-இது நமக்கு அநபிமதம் என்றும் அறிகிறிலன் -உபசயாத்மகம் யாகையாலே அஸ்திரத்தவாதி தோஷ பிரசுரம் என்றும்
–த்வத் அனுபவ விரோதி யாகையாலே அநபிமதம் என்றும் அறிவித்து –இத்தைக் கழித்துத் தர வேணும் என்று பிரார்த்திக்க
-உம்முடைய உடம்பு ஒழிய நமக்கு ப்ராப்யம் யுண்டோ -உம்முடைய உத்தேச்யத்தை நீர் விடா நின்றீரோ என்று அவன் நிர்பந்திக்க-நீ என் பக்கல் உண்டான விருப்பம் இ றே என் சரீரத்தை விரும்புகிறது -இது எனக்கு அத்யந்தம் அநபிமதம்
-எனக்காக இதில் நசையை விட்டருள வேணும் -என்று சரணம் புக்கு இரக்க-
தனக்கு இத்தை விடுகை பிரியம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –இவரைக் குறித்து பர தந்த்ரன் ஆகையால்-அப்படிச் செய்கிறோம் -என்று இசைய-
தனக்கு அபிமதமாய் இருக்க நாம் சொன்ன படி செய்வதே -என்று அத்யந்தம் ஹ்ருஷ்டராய்-இவனுடைய சீலாதி குணங்களில் அழுந்தி இவ்விஷயத்தில் அனுபவிக்க இழிவார் ஐஸ்வர்யத்தில் இழியப் பாருங்கோள்-தம் தாமை வேண்டி இருப்பார் அவனுடைய சீலாதி குணங்களில் அகப்படாதே கொள்ளுங்கோள்-என்று
ப்ரீதி அதிசயத்தாலே உபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

——————————————————

திருவாய் மொழி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வியாஜ்யத்தாலே- பேரையிட்டு கொடு வந்து புகுந்து தம் பக்கல் எம்பெருமான் பண்ணின வ்யாமோஹத்தைச் சொல்லி -இவனுக்கு அடிமை செய்வார் -இவன் சீலாதி குண வெள்ளத்திலே அகப்படாதே கொள்ளுங்கோள் -என்கிறார்

செஞ்சொற்  கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொற் கவிகாள்--செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது -அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது -இன்கவி பாடும் பரம கவிகள் -என்றும் -செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது -பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இ றே அநந்ய பிரயோஜனர் –
உயிர் காத்து ஆட்செய்மின் -உங்களை நோக்கிக் கொண்டு நின்று கவி பாடப் பாருங்கோள் -கவி பாட்டு வாசிகமான அடிமை யாகையாலே -ஆட் செய்ம்மின் -என்கிறார் -ஆட் கொள்வான் ஒத்து என்னாருயிர் யுண்ட மாயன் -என்கிறபடி அடிமை கொள்ளுவரைப் போலே புகுந்து இத்தலையை அழிக்குமவனாய்த்து–பரிஹரித்துக் கொள்ளுங்கோள் -ஆழங்காலிலே இழிந்து அமிழுமவர்கள் அவ்விடத்திலே கொண்டைக்கால் நாட்டுமாப் போலே -வம்மின் புலவர் -என்று முதலிலே ருசி இல்லாதாரையும் அழைக்கிற இவர் சீலாதி குணங்களில் அழுந்தி -இழிகிறவர்களையும் வேண்டா என்கிறார் இ றே ப்ரீதி பிரகரஷத்தாலே –
திருமால் இரும் சோலை–இத்யாதி –இவ்விஷயத்தில் தாம் இழிந்து அகப்பட்ட படியை அருளிச் செய்கிறார் மேல் -திருமலையில் நிலையும் சீலத்துக்கு உடல் இ றே
வஞ்சக் கள்வன் -களவு காணா நிற்கச் செய்தே மெய் என்னலாம் படி இருக்கை -என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -என்றார் இ றே -களவைக் களவு காணா நிற்கும் –
மா மாயன் -இப்படி அறிந்து ஒருவருக்கும் தப்ப ஒண்ணாத படியான ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -நீர் அகப்பட்ட துறை ஏது என்ன –
மாயக் கவியாய்--ஆச்சர்ய அவஹமான கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு பேரையிட்டுக் கொண்டு யாய்த்து வந்து கிட்டிற்று -தண்ணீர் என்ற ஒரு பேரையிட்டு அபிமத விஷயத்தை கிட்டுவாரைப் போலே -கவி பாடுவித்துக் கொள்ளுகை என்று ஒரு வியாஜ்யம் -கிட்டுக்கையே பிரயோஜனம் -தான் இருந்த இடத்திலே சென்று நாம் இருக்கை இன்றிக்கே -நாம் இருந்த இடத்திலே தான் வந்து கவி பாடுவித்துக் கொள்கை இ றே சீலம் ஆவது –வந்து செய்தது என் என்ன –
வந்து என்-நெஞ்சும் உயிரும் உள் கலந்து–நெஞ்சு என்று -சரீரத்துக்கு உப லக்ஷணம் / உயிர் என்கிறது ஆத்மாவை / சரீரத்தோடு ஆத்மாவோடு வாசியற புகுத்தி தன் பேறாக அவகாஹியா நின்றான் -முறை அத்தலை இத்தலையாய் என்னை சிரஸா வஹியா நின்றான் –
நின்றார் அறியா வண்ணம்-கலவிக்கு தேசிகரான பிராட்டி திருவனந்த ஆழ்வான் முதலானோர்க்கும் அபூமியாம் படி யாய்த்து என்னோடு கலந்து -ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது -என்றார் இ றே –
என்-நெஞ்சும் உயிரும் அவை உண்டு –தேஹாத்ம விவேகம் பண்ண அறியாதே யாய்த்து புஜித்தது–சேதனனையும் அசித்தோபாதி பரதந்தனாக்கி புஜித்தான் –உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான் -என்கிறபடியே எனக்கு என்ன மாட்டாமைக்கு -அசித்தோபாதி யாய்த்து சேதனனும் –
தானே யாகி -போகத்தில் இழிகிற போது இருவராய் இழிந்து -எதிர்த்தலையைத் தோற்பித்து -போக்தாவும் அபிமானியும் தானே யானான் –
நிறைந்தானே–அவாப்த ஸமஸ்த காமன் ஆழ்வாரைப் பெறுவதற்கு முன்பு குறைவாளனாய் -இவரைப் பெற்ற பின்பு -பூர்ணன் ஆனான் -க்ருதக்ருத்யஸ் ததா ராம –இது விறே புரையற்ற சீலமாவது –

——————————————————————

தம்மோடு கலந்த பின்பு எம்பெருமானுக்குப் பிறந்த ஸம்ருத்தியைக் கண்டு இனியராய் அனுபவிக்கிறார் –

தானே  ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

தானே ஆகி நிறைந்து -இருவர் கூடப் பரிமாறப் புகுந்து -பெற்றான் தானேயாய் இரா நின்றான்
எல்லா உலகும் உயிரும் தானே யாய்-ஆழ்வாரைப் பெற்ற பின்பு யாய்த்து -சர்வ லோகங்களுக்கும் -அவற்றில் யுண்டான மனுஷ்யாதிகளுக்கும் நிர்வாஹகனாய்த்து -சாமாநாதி கரண்யத்தால் அபிமானியும் தானே -என்கை –
தானே யான் என்பான் ஆகி -பொதுவான ரக்ஷகத்வம் ஒழியத் தன் பக்கலிலே அவன் இருக்கும் படி சொல்லுகிறார் -யானே என்பான் தானே யாகி –விசிஷ்ட வஸ்து வாகையாலே விசேஷ ப்ராதான்யத்தைப் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் -தன் சேஷித்வத்தை எனக்குத் தந்து தான் அப்ரதானனாய் என்னை சிரஸா வஹியா நின்றான் என்னுதல் –
தன்னைத் தானே துதித்து -ஸ்துத்யன் ஆனவோ பாதி ஸ்தோதாவும் தானேயாய் –
எனக்குத்-தேனே பாலே கன்னலே அமுதே -சர்வ ரஸ என்கிறபடியே எனக்கு நிரதிசய போக்யனாய் -அவனைப் புகழும் இடத்தில் தம் பக்கல் கர்தவ்யம் கண்டிலர் -போகத்தில் வந்தால் போக்தாவாகத் தம்மைச் சொல்லுகிறார் இ றே -தன்னைத் தானே புகழ்ந்து அத்தை என் கவியாக்கிக் கெட்டு -அவன் ப்ரீதனாக அவன் பிரீயத்தைக் கண்டு பிரியப்படுகிறார் –
திருமால் இரும் சோலைக்-கோனே யாகி -கீழ்ச் சொன்ன ரசத்தோ பாதி யாய்த்துத் திருமலையில் நிற்கிற நிலையும் –உபய விபூதி யோகத்தில் காட்டிலும் ஓர் ஏற்றமாய்த்து திருமலையை யுடையவன் என்கிற இதுவும் -திருமலையில் வந்து ஆழ்வாரைப் பெற்ற பின்பாய்த்து சேஷித்வம் பூர்ணம் யாய்த்து –
நின்று ஒழிந்தான்-க்ருதக்ருத்ய ததா ராம -என்கிறபடியே பரகு பரகு அற்று நின்றான் –
என்னை முற்றும் உயிர் உண்டே–விபுவான தன்னாலும் -விளாக் குலை கொள்ள ஒண்ணாத படி யாய்த்து இத்தலையான படி –

—————————————————————–

எம்பெருமானுக்கு மேன்மேல் எனத் தன் பக்கல் யுண்டான அபிநிவேச அபர்யாவசநத்தை -எல்லை இல்லாமையை –அருளிச் செய்கிறார் –

என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை முற்றும் உயிர் உண்டு –இத்தலையை எங்கும் புக்கு அனுபவித்தானாய் விடுகை அவனுக்கு ஏற்றமாம்படியாய் இருக்கிறது –யஸ்ய சா ஜனகாத்மஜா –அப்ரமேயம் ஹி தத் தேஜ–
என் மாய ஆக்கை இதனுள் புக்கு–அதி ஷூத்ரமான என் சரீரத்தில் புக்கு தனக்கு உத்தேச்யமான ஆத்மாவளவன்றியே-அழுக்கு உடம்பு -என்று தன்னை கால் காட்டித் தவிர்ப்பித்து கொள்ள வேண்டும் படி த்யாஜ்யமான சரீரத்தையே விரும்பா நின்றான் –
இதனுள் புக்கு-இது இது என்று இவர் இறாய்க்க அவன் மேல் விழா நின்றான் என்கை –புகுந்து என்னாதே புக்கு -என்கிறது அத்தோடு தமக்கு தொற்று அற்று இருக்கிற படி தோற்றுகைக்காக-மங்க வொட்டு-என்று அவன் அனுமதி பார்த்து இருக்கும் இ றே –என்றும் அசித்தோடும் முகம் பழகின இவர் இறாய்க்க -ஹேய பிரதி படனானவன் இ றே மேல் விழா நின்றான் –
என்னை முற்றும் தானேயாய் நின்ற--ஆத்மாவோடு சரீரத்தோடு வசி யறப் புக்கு வியாபித்து தானே அபிமானியாய் நின்றான் -என்னுடைய அஹங்கார மமகாரங்களும் விஷயம் இல்லாத படி நின்றான் –
மாய அம்மான் சேர்-தென்னன் திருமால் இரும் சோலைத் –ஆச்சர்ய குண சேஷ்டிதனான சர்வேஸ்வரன் தானே வந்து விரும்பி வந்து சேருகிற தேசம் —தென்னன் என்று அத்தேசத்தில் பிரதானனைச் சொல்லுதல் -தெற்கில் திக்கில் உள்ளதாய் நன்றான திருமலை -என்னுதல் –
திசை கூப்பிச் சேர்ந்த யான்-அத்திக்கை பரம ப்ராப்யம் என்று சேர்ந்த யான் —இவர் அவன் அளவில் அன்றிக்கே அவன் உகந்த தேசத்தோடே சேர்ந்த திக்கை விரும்பா நின்றார் –அவன் இவர் அளவன்றியே-இவருடைய சரீரத்தை விரும்பா நின்றான் -இவ்வளவிலே பர்யவசியாதாப் போலேயாய் இருந்தது
இன்னம் போவேனே கொலோ –என் கொல் அம்மான் திருவருளே–இனி எனக்கு ஒரு கந்தவ்ய பூமி யுண்டோ -சர்வேஸ்வரனுடைய பாரிப்புக்கு அவதி என்னோ –அவனை விரும்பி –அவன் உகந்த தேசத்தை விரும்பி –அத்தோடு சேர்ந்த திக்கை விரும்பும் படி சேஷத்வத்தின் நிலையிலே நிறுத்தினவன்-எனக்கு ஒன்றும் செய்திலேனாய் பரகு பரகு என்கிற இதுக்கு அவதி என்னோ -விஷயம் இன்றியே இருக்க பிரமிக்கவும் ஆமாகாதே-

———————————————————————

தம்முடைய திருமேனியிலும் தம்மோடு பரிமாறலாம் நிலம் என்று திருமலையிலும் எம்பெருமானுக்கு யுண்டான வியாமோஹத்தை அருளிச் செய்கிறார் –

என் கொல்  அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

என் கொல் அம்மான் திருவருள்கள் –-சர்வேஸ்வரனுக்கு என் பக்கல் யுண்டாய் இருந்துள்ள பிரசாத அதிசயத்துக்கு அவதி என்னா –
உலகும் உயிரும் தானேயாய்-சகல லோகங்களும் சகல ஆத்மாக்களும் தான் இட்ட வழக்காய் இருக்கிறவன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -இப்படிப் படுகிறானோ –
நன்கு என் உடலம் கை விடான்-செருக்கர் நீச ஸ்த்ரீகள் கால் கடையிலே துவளுமா போலே என்னுடம்பை விரும்பி விடுகிறிலன் –எனக்கு மமதா விஷயம் என்னுமதுவே ஹேதுவாக விடுகிறிலன்-
ஞாலத்தூடே நடந்து உழக்கி--பூமி எங்கும் உலாவி -எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்து திரு உலகு அளந்து அருளிற்று -தம்மைப் பெறுகைக்கு கிருஷி பண்ணி என்று இருக்கிறார் -சர்வ சாதாரணன் வியாபாரம் ஆகையால் சம்பந்தம் அறிந்தால் எனக்கு என்னலாம் இ றே -இந்திரன் ராஜ்ஜியம் பெற்றானாய் போந்தான் -மஹா பாலி கொடுத்தானாய் போந்தான் –இவர் அத்தை தமக்கு என்று இருக்கிறார் –
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை-திரு உலகு அளந்து அருளுகை ஒரு வியாஜ்யமாய் -ஆழ்வாரை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் ஏதோ என்று ஆராய்ந்து திரு மலையிலே நின்று அருளினான் -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கில் திக்கில் ஒரு ஆபரணம் போலே இருந்துள்ள திருமலையில் வந்து நின்றான் –
நங்கள் குன்றம் கை விடான்நங்கள் குன்றம் ஆஸ்ரிதருடைய சங்கேத ஸ்தலம் –திருமலையில் நிலை சாதனமாக -ஆழ்வார் திரு மேனியை ப்ராப்யமாக -நினைத்து இருக்கிறான் யாய்த்து –
நண்ணா அசுரர் நலியவே–-திருமலையில் நிலையால் அஸூர வர்க்கம் தானே முடிந்து போய்த்து –
உலகும் உயிரும் தானேயாய்–ஞாலத்தூடே நடந்து உழக்கி–தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை–நங்கள் குன்றம்-நண்ணா அசுரர் நலியவே- கை விடான் -நன்கு என் உடலம் கை விடான் –என் கொல் அம்மான் திருவருள்கள்-என்று அந்வயம் –

———————————————————————-

அவன் தம்மோடு கலந்து தம் வாயாலே திருவாய் மொழி கேட்ட ப்ரீதி உள்ளடங்காமை ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் -நன்கு என்னுடலம் கை விடான் -என்கிற அளவு அன்றியே என் யுக்தி மாத்திரத்தாலே களியா நின்றான் -என்றுமாம் –

நண்ணா  அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும்  நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

நண்ணா அசுரர் நலிவு எய்த –விபரீதஸ்ததா அ ஸூ ர -என்கிறபடியே விபரீதரான அ ஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் —
நல்ல அமரர் பொலிவு எய்த—விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இ றே
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –
நன் முனிவர் -ஈஸ்வரன் அடியாக தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர் –அத்தலைக்கு ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நல் முனிவர் –
இன்பம் தலை சிறப்ப-திருவாய் மொழி ஒழிய வேறு ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –
பண்ணார் பாடல் இன் கவிகள் -பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது -/இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –
யானாய்த் தன்னைத் தான் பாடி–என்னைப் பேரை யிட்டு தன்னைத் தான் பாடி -புத்ரனை வார்த்தை கற்பித்து அவன் வாயாலே கேட்டு இனியனாம் பிதாவைப் போலே
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–ப்ரீதிக்குப் போக்கு வீடாக ஆளத்தி வையா நின்றான் -ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பகவத் லாபத்தில் ப்ரீதிக்கு போக்குவிட்டு சேஷ பூதன் சொல்லக் கடவத்தை -அவாக்ய அநாதர -என்கிற தான் ப்ரீதி பிரகரஷத்தாலே அந்த பூர்த்தி குலைந்து சொல்லுகிறான் இ றே –என் அம்மான் –ஸூத வசனம் ரசிக்குமா போலே சம்பந்தம் இ றே ரசிகைக்கு அடி –திரு மால் இரும் சோலையானே-இவரைக் கவி பாடுவித்த தேசம் திருமலை யாய்த்து –

——————————————————————

ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று அருளி என்னை ஆளுகையில் மிகவும் வியாமுக்தன் ஆனான் -என்கிறார் –

திருமால்  இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

திருமால் இரும் சோலையானே யாகி –என்னை ஆளுமால்-திருமலையை தனக்கு வஸ்த்வய பூமியாகக் கொண்டு என்னை அடிமை கொள்ளுகைக்காக என் பக்கல் வியாமோஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிறவன் –
செழு மூஉலகும் தன்-ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–கட்டளை பட்ட தரை லோக்யத்தையும் அத்விதீயமாக சிறிதான வயிற்றிலே வைத்து -கல்பம் தோறும் கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்கும் -பிரளய ஆபத்தில் ஜகத்துக்கு தன்னை ஒழிய செல்லாதா போலே என்னை ஒழிய தனக்கு செல்லாத படியாய் இருக்கை -திருமால் -ஸ்ரீ யபதி /என்னை ஆளுமால்-என் பக்கல் பிச்சு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் -பிரளய ஆபத் சகனாய் -ஸ்ரீ யாபதியாய் இருக்கிறவன் என் பக்கலிலே சாபேஷனாய் நின்றான் – / சிவனும் பிரமனும் காணாது-அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–ப்ரஹ்ம ருத்ராதிகள் காண பெறாமையாலே நிரதிசய பக்தி உக்தராய் திருவடிகளை அக்ரமாகப் புகழ -அவர்களுடைய அபேக்ஷிதங்களைக் கொடுத்த சர்வேஸ்வரன்-

————————————————————————-

தம்முடைய ஸம்ருத்திக்கு அடியான திருமலையை ஏத்துகிறார் –

அருளை ஈ  என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்-தெருள் கொள் பிரமன் அம்மானும் –என் ஸ்வாமீ என் பக்கலிலே கிருபை பண்ணி யருள வேணும் -உடையவனானா நீ பொகட்டால் வேறு புகலுண்டோ–எண்ணுமாய்த்து -இப்படிச் சொல்லுகிறவன் ஆர் என்னில் -லலாட நேத்ரனாய்-ஈஸ்வர அபிமானியுமான ருத்ரனும் -அவனுக்கும் ஞான பிரதனனாய் ஜனகனான ப்ரஹ்மாவும் –
தேவர்கோனும்-தேவர்களுக்கு அத்யக்ஷனான இந்திரனும்
தேவரும்-தேவேந்திரன் என்று அவனுக்கு ஏற்றமான உத்கர்ஷத்தை யுடைய தேவர்களும் –
இருள்கள் கடியும் முனிவரும்-அஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்கும் ஸ்மர்த்தாக்களும் –
ஏத்தும் அம்மான் திருமலை-இவர்கள் எல்லாரும் கூட ஏத்தும் சர்வேஸ்வரனுடைய திருமலை –
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–கைங்கர்ய விரோதிகளான அவித்யாதிகளைப் போக்குமதாய்-ஸ்வயம் புருஷார்த்தமான திருமலை -திருமலையை ஒழியவே ப்ராப்யம் யுண்டு என்று இருக்கும் நினைவை போக்குமிடம் என்றுமாம் -அது தான் ஏது என்ன –திருமால் இரும் சோலை மலையே –

———————————————————————

திருமலை தொடக்கமான கோயில்கள் எல்லாவற்றிலும் பண்ணும் அபி நிவேசத்தை  என் அவயவங்களிலே பண்ணி ஒரு க்ஷணமும் பிரிகிறிலன் -அவன் படி இருந்த படி என் -என்கிறார் —

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–தெற்கில் திருமலையையும் திருப் பாற் கடலையும் என் உத்தம அங்கத்தையும் -ஓக்க விரும்பா நின்றான் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-பரமபதத்தையும் -வடக்கில் திருமலையையும் -என் சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –
திருமால் வைகுந்தம் -ஸ் ரியா சார்த்தம் ஜகத் பத்தி -என்கிறபடியே அம் மிதுனத்துக்குத் தகுதியான தேசம் –
இத்தேசங்களிலே பண்ணுகிற விருப்பம் தம் திருமேனியில் பண்ணுகிற விருப்பத்துக்கு சத்ருசம் அல்லாமையாலே தம்முடைய அவயவங்கள் தோறும் புக்கு அனுபவியா நின்றான் –
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே-கடக்க அரிதான பிரக்ருதியோடே மயங்கி அசித் கல்பமான என் ஆத்மாவில் -அவ தாரணங்களாலே-இதுவேயோ இவன் அபி நிவேசித்து இருப்பது -என்று தோற்றும்படி இருக்கை –
ஒருமா நொடியும் பிரியான் -ஒரு க்ஷணத்தில் ஏக தேசமும் பிரிகிறிலன்
என் ஊழி முதல்வன் ஒருவனே–-என் பக்கல் அபி நிவிஷ்டன் ஆகைக்காக-கால உபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான அத்விதீயன் -சம்ஹார காலத்தில் சகல சேதன அசேதனங்களும் தன்னை ஒழியச் செல்லாதாப் போலே யாய்த்து -இவர் திருமேனியை ஒழியத் தனக்குச் செல்லாதே இருக்கிற படி -கார்ய காரண உபய அவஸ்தா சித் அசித்துக்கள் யுடைய சத்தை தன் அதீனமாம் படி இருக்கிறவன் -தன்னுடைய சத்தை என் சரீர அதீனமாம் படி இரா நின்றான் -இவனும் ஒருவனாய் இருக்கிறானே –

——————————————————————-

நமக்கு இந்த சம்பத்து எல்லாம் திருமலையாலே வந்தது -ஆனபின்பு திருமலையைக் கை விடாதே -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்துச் சொல்லி -தம்மைச்  சரீரமாக திரு நாட்டிலே கொடு போக வேணும் என்று இருக்கிற எம்பெருமானுடைய அபி நிவேசத்தைக் கண்டு -இந்த ஹேயமான பிரக்ருதியை -நீக்கி என்னைக்  கொடு போக வேணும் என்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்-கால உபலஷித சகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனானவன் ஒருவனே என்று பிரமாணங்கள் சொல்லப் படுகிற அத்விதீயன் -சதேவ ஸோம்யே தமக்ரே ஆஸீத் —
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்--சகல லோகங்களையும் கல்பம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்திலே உண்டாக்கி -நாம ரூபங்களைக் கொடுத்த பின்பு -தன் கார்யம் தானே செய்து கொள்ளலாம் என்று -அவ்வளவில் விடாதே அவற்றினுடைய ரக்ஷணத்தைப் பண்ணி -இவை அதி ப்ரவ்ருத்தமான வாறே சம்ஹரித்து -இதுவே யாத்ரையாய் இருக்கிற
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-கம்பீர ஸ்வ பாவனானவன் என் ஸ்வாமி –கடல் போலே ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி என்னை சம்சார ஆர்ணவத்திலே நின்றும் எடுத்தவன் -என்றுமாம் -தர்ச நீயமான ஸ்ரமஹரமான திருமலையை –
வாழி–நான் சொல்லுகிற கார்யம் -உனக்கு நித்தியமாகச் சென்றிடுக —
மனமே கை விடேல் -நமக்கு இஸ் சம்பந்தத்துக்கு எல்லாம் அடி திருமலையான பின்பு அத்தைக்கு கை விடாதே கொள் என்று என்று திரு உள்ளத்தலாய்க் குறித்து அருளிச் செய்ய –அவனும் தன் திரு உள்ளத்தைக் குறித்து ஆழ்வார் திருமேனியை கை விடாதே கொள் -என்று அருளிச் செய்ய -இந்நிரபந்தத்தைத் தவிர்ந்து அருள வேணும் என்கிறார் -உடலும் உயிரும் மங்க ஓட்டே–சரீர பிராணாதி ரூபமான ப்ரக்ருதி சம்பந்த விநாசத்தை சம்வதித்து அருள வேணும் -திருமலை போலே உத்தேச்யமாய் இருப்பது ஓன்று அன்று –
ஹேயமான சரீரமும் பிராணனும் –மங்க வொட்டு – என்கையாலே ஆழ்வார் இங்கே எழுந்து அருளி இருந்த இருப்பு பிராரப்த கர்மத்தால் அன்று -பகவத் இச்சையாலே தானே -என்கிறது -நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இ றே –

————————————————————————-

தாம் அர்த்திக்கச் செய்தேயும் தம்முடைய பிரக்ருதியால் உண்டான தேகத்தில்    சங்கத்தால் எம்பெருமான் தம் வார்த்தையை ஆதரியா விட்டவாறே -சதுர் விம்சதி தத்தவாத்மிகையான பிரக்ருதியினுடைய ஹேயதையை அவனுக்கு உணர்த்தி -இத்தை விரும்பாதே போக்கி யருள வேணும் -என்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

மங்க ஒட்டு உன் மா மாயை-ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ -மமமாயா துரத்யயா -என்றிலையோ–
திரு மால் இரும் சோலை மேய-நங்கள் கோனே--பரமபதம் கலவிருக்கையாய் இருக்க அவ்விடத்தை விட்டு திருமலையில் வந்து முற்பாடானாய் நிற்கிறது நான் சொன்ன படி கார்யம் செய்வதாக வன்றோ -திருமலையில் வந்து நின்று எனக்கு முறையை உணர்த்தினவன் -என்றுமாம் –
யானே நீ ஆகி என்னை அளித்தானே--என் அபி சந்தியை நீ யுடையையாய் என்னை ரஷித்தவனே –நான் எனக்கு பரியுமா போலே என் திறத்தில் பரிவனாய் ரஷித்தவனே -இப்படி நிர்பந்த்தித்த இடத்திலும் அவன் அநாதரித்து இருக்க இது த்யாஜ்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் –சேதனன் கர்மத்தால் ப்ரக்ருதி யாத்மா விவேகம் பண்ண மாட்டாதாப் போலே இவர் பக்கல் வியாமோஹம் அவன் பிரகிருதி யாத்மா விவேகம் பண்ண ஓட்டுகிறது இல்லை –
பொங்கு ஐம் புலனும்-சேதனனை விக்ருதனாம் படி பண்ணும் சப் தாதி விஷயங்கள் ஐந்தும் –
பொறி ஐந்தும் -வறை நாற்றத்தைக் காட்டி அகப்படுத்துமா போலே சப் தாதிகளிலே மூட்டுகிற ஸ்ரோத்ராதிகள் ஐந்தும் –கருமேந்த்ரியம் -கர்ம இந்திரியங்கள் ஐந்தும் —ஐம் பூதம்--பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் —
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே-– -இஸ் சம்சாரத்திலே இருக்கிற -இவ்வாத்மாவைத் தொற்றி இருக்கிற மூல பிரகிருதி என்ன -மஹான் அஹங்கார மனஸ் ஸூ க்கள் என்ன -இவை யாகிற உன்னுடைய மஹா மாயையை மங்க வொட்டு என்று அந்வயம் –

———————————————————————

நிகமத்தில் மஹத் அஹங்கார விஷயமான இத்திருவாய் மொழி திருமலையில் சொல்லிற்று -என்கிறார் –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் -மஹான் அஹங்காரம் மனஸ் ஸூ என்கிற இவை கெடும்படியாக -இது சரீரத்துக்கும் உப லக்ஷணம் –
ஐவர் வன்கையர் மங்க-என்கிறது கர்ம இந்திரியங்களுக்கும் சப் தாதி களுக்கும் உப லக்ஷணம் -/ வன்கையர்-பெரு மிடுக்கர் –விரோதி போகைக்கு அவன் செய்தது என் என்ன -தன் நிர்பந்தத்தைத் தவிர்ந்தான் என்கை –
தான் ஆங்கார மாயப் புக்கு -எனக்கு அபிமானியாய்ப் புகுந்து என்னுதல் /பெரிய செருக்கை யுடையனாய்க் கொண்டு புகுந்து என்னுதல் –
தானேதானே ஆனானைத்–ஆத்மாத்மீயங்களில் எனக்கு உண்டான அபிமானத்தைத் தவிர்த்து தானே அபிமானியானவனை –
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்--வண்டுகளினுடைய அபிமானமேயான பொழிலை யுடைய திரு நகரியிலே ஆழ்வார் அருளிச் செய்த -ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு –
மான் ஆங்காரத் திவை பத்தும் -–மஹத் அஹங்காராதி ரூபமான பிரகிருதி நிரசன அர்த்தமாகச் சொல்லப்பட்ட இத்திருவாய் மொழி என்னுதல் -பெரிய செருக்கோடு சொன்ன இப்பத்து என்னுதல் –
திருமால் இரும் சோலை மலைக்கே–திருமலையே உத்தேச்யமாகச் சொல்லிற்று -அளக்கரைச் சொன்னவிடம் ஆநு ஷங்கிகம் —

————————————————————————-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: