திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-4–

எம்பெருமான் உம்மை ஒரு நாளும் பிரியேன் -என்று இவரை ஆஸ்வசிப்பிக்க-பாத்தாலே தரித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார் –
வீடுமின் முற்றத்திலும் -பத்துடை அடியவர்களிலுமாக -ப்ரஸ்துதமான பக்தி யோகம் ஆகிற உபாயம் ஸ்வ சாத்யத்தோடே
சேர்ந்த படியை சாஷாத் கரித்து-அத்திருவாய் மொழிகளிலே பக்தி வர்த்தகமாகச் சொன்ன குணங்களை
பராமர்சியா நின்று கொண்டு பக்தி யோகத்தை நியமிக்கிறார் –
எம்பெருமானை பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும் -என்று அபேக்ஷிக்க -அவனும் அப்படியே தவிருகையாலே
ப்ரீதரான ஆழ்வார் அவன் பக்தி லப்யன் என்னும் இடம் நிச்சிதம் என்கிறார் -என்றுமாம்

—————————————————————-

உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தி யோக லப்யம் என்கிறார் –

சார்வே  தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணனுடைய திருவடிகள் பக்தி யோகத்துக்கு ப்ராப்யம் என்னும் இடம் நிச்சிதம் -வணக்குடை தவ நெறி -என்று சொல்லுகிற அத்தை -இங்கே தவ நெறி -என்கிறது –தாமோதரன் தாள் என்று உரலினோடு இணைந்து இருந்த ஸுலப்யத்தை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது -கறுத்த மேகம் போலே ஸ்ரமஹரமான  திரு நிறத்தையும் அழகிய திருக் கண்களையும் யுடையனாய் -சர்வத்துக்கும் ஈஸ்வரனாய்-ஜகத் ரக்ஷணத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையனாய் -அயர்வறும் அமரர்கள்  தோற்றுப் பேசும் பெருமையை யுடையனான தாமோதரன் என்று அந்வயம்-

—————————————————————-

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் – என்னுடைய பிரதிபந்தகங்களைப் போக்கி -நாள் தோறும் என்னை இஹ லோகத்தில் அடிமை கொள்ளா நின்றான் -என்று -தம்முடைய லாபத்தைப் பேசுகிறார் –

பெருமையனே  வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2-

பெருமையனே வானத்து இமையோர்க்கும்–ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரன் / காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு–பிறர்களுக்கு அரிய வித்தகன் -என்கிறது –
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே--என்றும் பெரிய பிராட்டியார் திரு உடம்பிலே உறைவதும் செய்து -அத்தாலே மதுபான மத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை யுடையவனாய் -சர்வேஸ்வரன் -இத்தால் -மலர் மக்கள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -என்கிற இடத்தை ப்ரத்யபிஜ்ஜை பண்ணுகிறது –

—————————————————————–

மறுவல் இடாத படி சம்சாரத்தை போக்கி நப்பின்னை பிராட்டிக்கு நாதனாவனுடைய / வல்லனனானவனுடைய – திருவடிகளைக் கண்டு கொண்டு சிரோ பூஷணமாக என் தலை மேலே புனைய பெற்றேன் என்கிறார் –

ஆள்கின்றான்  ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்– சர்வேஸ்வரன் என்னை அடிமை கொள்ளா நின்றான் -இனி ஆராய்க் கொண்டு கார்யம் யுடையோம் —
வாள் கெண்டை ஒண் கண்–ஒளியை யுடைய கெண்டை போலே இருக்கிற அழகிய கண் –

——————————————————————–

என்னுடைய ஹிருதயத்தில் இருக்கிற சர்வேஸ்வரனை ஒருவராலும் விஸ்லேஷிக்கப் பண்ண ஒண்ணாமையை நிச்சயித்து -அத்தாலே க்ருதார்த்தனாய் இருந்தேன் -என்கிறார் –

தலை  மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

என்பாடு வருகைக்காக ஆலின் இலை மேல் வந்து கண் வளர்ந்து அருளி –அயர்வறும் அமரர்கள் அடிமை செய்யத் திருமலையில் நின்று அருளி -என்னை இசைவித்து என் இருதயத்திலே புகுந்து இருந்தவனை –

———————————————————————

எம்பெருமான் என் திறத்திலே செய்து அருள நினைத்து இருக்கிறவை ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல என்கிறார் –

நிச்சித்து  இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5-

கைச் சக்கரத்து அண்ணல்–கையிலே திரு வாழி யை யுடைய சர்வேஸ்வரன் -/ அநாஸ்ரிதர்க்கு குணங்களால் கொண்டாடப்படான்–அவர்களுக்கு மெய் செய்வாரைப் போலே பொய் செய்ய வல்லவன் –ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக போக்யனானவன் ஆஸ்ரிதரான நமக்கு நச்சப்படும் —

————————————————————————-

இன்று புகுந்து ஆஸ்ரயிப்பாரையும் குண தோஷம் பாராதே நித்ய ஆஸ்ரிதரைப் போலே விஷயீ கரிக்கும் ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் திருவடிகளை /நிர்மமனாய் விழுந்து – பணியப் பெற்றேன் –

நாகத்து  அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே-10-4-6-

ஞானம் -பக்தி -நாள் தோறும் அருள் செய்யும் என்று அந்வயம் –ஐஸ்வர்யத்துக்கு ஸூ சகமான பிறையைச் சூடி ப்ரயோஜனாந்தர பரதைக்கு உறுப்பான சாதகத்வம் தோற்றும் படியான ஜடையை யுடையவனை திரு மேனியில் ஒரு பார்ஸ்வத்திலே வைத்தவனுடைய திருவடிகளை பணியப்  பெற்றேன் –

————————————————————

சர்வேஸ்வரனை நெஞ்சே நாள் தோறும் அனுபவி —அவன் தானே பிரதிபந்தகங்களை நீக்கி அடிமை கொள்ளும் -என்கிறார் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-

சர்வாதிகனான ஈஸ்வரனை நெஞ்சே நாள் தோறும் பணி -ஒரு துக்கங்களும் ஸ்பர்ஸியா–துக்க ஹேதுவான சம்சாரத்தைக் கெடுத்து அடிமை கொள்ளும் -நீல மணியினுடைய ஒளியை யுடையனாய் -பிரதிகூல நிரசன ஸ்வ பாவனாய் -எனக்கு பவ்யனாய் -தனக்கு ஆபரணமாய் நிற்பதும் செய்து -செம் பொன் போலே இருக்கும் நிறத்தை யுடைத்தாய் பிரதிகூலரை யடர்க்கும் ஸ்வ பாவமான திரு வாழியை யுடையவன் –

——————————————————————–

அவனை அனுபவி என்றவாறே -பரீதமான நெஞ்சைக் கொண்டாடி -நெஞ்சே அவனை இடைவிடாதே அனுபவி -என்கிறார் –

ஆழியான்  ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8-

திருவாழி தொடக்கமான நித்ய ஆஸ்ரிதரை யுடையனாய் -அவர்களில் காட்டிலும் ஸ்வரூப குணங்களால் விஸஜாதீயனாய்-கால சேஷமான பிரளய காலத்திலும் உளனாய்–கால உபலஷித சகல பதார்த்தங்களையும் படைப்பதும் செய்து -தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்தின் உள்ளே வந்து -திருவவதாரம் பண்ணி -பசு மேய்ப்பதும் செய்து -அவற்றுக்கு வந்த ஆபத்தை நீக்குவதற்காக ஜகத்துக்கு எல்லாம் ஒதுங்க இடம் போரும் படியான அழகிய தோள்களாலே கோவர்த்தன உத்தாரணமும் பண்ணுவதும் செய்தவனுடைய திருவடிகளை –

————————————————————————-

ஜன்மாந்தர சஹஸ்ர க்ருத தப ஞாநாதிகளாலே சாத்தியமான பக்தி யோகத்தால்  லப்யனான எம்பெருமானை -நான் கேவலம் அவன் பிரசாதத்தாலே காணப் பெற்றேன் என்று ஸ்வ லாபத்தைப் பேசுகிறார் –

கண்டேன்  கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

எம்பெருமான் திருவடிகளைக் கண்டேன் –கண்ட போதே என்னுடைய சகல துக்கங்களும் நீங்கிற்றன–நித்ய கைங்கர்யம் பண்ணும் படியாக பண்டே சர்வேஸ்வரன் அருளிச் செய்த படியே –அவன் பிரசாதத்தாலே -முதல் பாட்டிலே பக்தி யோகம் ஸ் வ சாத்யத்தோடே சந்தித்தபடியை சாஷாத் கரித்து அருளிச் செய்தார் -இப்பாட்டில் தம்முடைய உபாயமான பிரபத்தி தனக்கு சாத்தியமான திருவடிகளோடே
சந்தித்தமையை அனுசந்தித்து அருளிச் செய்கிறார் –

————————————————————————

ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கூட ஸமாச்ரயணீயனாய் அவர்களுடைய அபிலஷித ப்ரதனான சர்வேஸ்வரன் திருவடிகள் –அநந்ய ப்ரயோஜனரான பக்திமான்களுக்கும் ப்ரபன்னரர்க்கும் நல்ல அபாஸ்ரயம் என்னும் இடம் நிச்சிதம் என்று கொண்டு ப்ரஸ்துதமான பக்தி யோகத்தை நிகமிக்கிறார்-

வகையால்  மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10-

ஸ்ரீ யபதியாகையாலே ஸ்வராதனனான தன்னை புஷ்பாதி சமாராதன உபகரணங்களைக் கொண்டு திக்குகள் தோறும் வந்து பிரயோஜனாந்தர பரரான தேவர்கள் நாள்தோறும் ஸமாச்ரயிக்கலாம் படி நின்ற ஸ்வபாவத்தை யுடையவனுடைய திருவடிகள் –

————————————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழியைக் கற்றற்கு கிருஷ்ணனுடைய திருவடிகள் ஸூலபமாம் என்கிறார் –

பற்று  என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-

சர்வேஸ்வரனாய் -பலத்தை யுடைத்தாய் -திண்ணிதான தோள்களை யுடையனாய் -ஆஸ்ரிதர் பக்கம் -வ்யாமுக்தன் ஆனவனை-பரம ப்ராப்யம் என்று பற்றி -ஆழ்வாருடைய சொல்லாய் -அழகிய தொடையை யுடைத்தாய் -அந்தாதியான ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி கற்றார்க்கு –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: