திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-3–

ப்ராப்ய பூமியில் போக்யதையும்-அங்குப் போனால் அடிமை செய்யும் படியையும் அனுசந்தித்து ப்ரீதராய்
-அப்போதே ப்ராப்ய பூமியில் செல்லப் பெறாமையாலும் -பண்டு பல்கால் பிரிந்த வாசனையாலும்
ப்ரக்ருதியில் இருந்தமையை அனுசந்தித்தும் -தான் நினைத்தனத்தையே செய்யக் கடவதான ஈஸ்வரனுடைய
ஸ்வா தந்தர்யத்தை அனுசந்தித்தும் -அவனுக்குத் தம்மை விஷயீ கரித்து அல்லது நிற்க ஒண்ணாத தமக்கு இல்லையாகவும் பார்த்தும்
இப்பிரக்ருதியிலே இன்னமும் தம்மை வைத்து அருளில் செய்வது என் என்னும் பயத்தால்
மிகவும் அவசன்னரான ஆழ்வார் -தம்முடைய தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
இரவெல்லாம் எம்பெருமானோடே சம்ச்லேஷித்து விடிந்தாலும் பிரியக் கடவதாக அவனுக்கு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தேயும் –
சகல சத்தவங்களும் உணர்ந்து கிளம்பவும் செய்து -குயில்கள் கூவுவது -மயில்கள் ஆலிப்பது–இளங்காற்று வந்து நடையாடா நிற்பது
-கன்றுகளும் பசுக்களும் காடு எல்லாம் பரவா நிற்பதுவுமாய்க் கொண்டு -போது விடிந்தவாறே –
பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட பழக்கத்தால் வெருவி -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி
-அவன் எதிரே அவனைப் பிரிந்தால் படும் வியசனத்தைப் படுகிறாள் –
ஒரு பிராட்டி –அவனைப் பிரிந்து இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை
-அவன் முன்பே படா நின்று கொண்டு -தாம் தம்மைக் கொண்டு அகல் தல் தகவு அன்று என்று நோவுபடும் பிரக்ருதியுமாய்
-அவன் பக்கல் பரிவுடையார் எல்லாருடைய பரிவை யுடையாளான இவள் -வியசனத்தின் மிகுதியால்
-பசு நிரை மேய்க்கப் போக வேண்டா -என்று வாயால் சொல்லவும் ஷமை ஆகிறிலேன்-
நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி
-உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருளி -என்னைத் தரிப்பித்து அருள வேணும் -என்றும்
-சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும் -என்றும் சொல்லி -மிகவும் ஆர்த்தையாய்க் கூப்பிடுகிறாள் –
எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்-
-இத் திருவாய் மொழியில் நான் ததார்த்தம் ஆகவுமாம்-தவிரமுமாம்
-எம்பெருமானுக்கு சம்ருதிகள் யுண்டாம் -இத்தனை வேண்டுவது -என்கிறார் –

——————————————————————-

எம்பெருமான் பிரிகிறான் என்று -வியசனப்படா நிற்கச் செய்தே -அதுக்கு மேலே குயில் தொடக்கமான பதார்த்தங்கள் யுடைய  த்வனிகளாலும் -அவனுடைய நோக்காலும்–தனக்குப் பிறந்த -அவசாதத்தை  வாயாலே தோழி மார்க்குச் சொல்லுமா போலே அவனுக்கு அறிவிக்கிறாள்-

வேய்  மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேய் மரு தோள் -உனக்கு ஸ்ப்ருஹணீயமான தோள் / உன்னைப் பிரிந்து இருக்கிற  என்னுடைய அவசாதமும் -இவ் வவசாதத்திலே-எனக்கு ஒரு துணை இன்றிக்கே இருந்தமையையும் -ஒன்றும் பாராதே பரஸ்பரம் விருப்பமுடைய குயில்களும் கூவா நின்றன -அதுக்கு மேலே மயில்களும் திரண்டு கலந்து ஆலா நின்றன -கண்டு தரிக்க மாட்டாமையாலே முகத்தை திரிய வைத்து –அவை -என்கிறாள் -உன்னோடு மருவி தன்னில் ஒத்த பசு நிரைகளை மேய்க்கைக்கு -நீ போகிற ஒரு பகல் ஆயிரம் ஊழி யாகா நின்றது -என்று இவள் சொல்ல -இது ஒரு ஸ்வபாவம் இருக்கும் படியே என்று ப்ரீதனாய் அவன் நோக்க -நீ பசு மேய்க்கப் போமதில் காட்டிலும் அழகிய திருக் கண்களால் நோக்கி  நோவு படுத்தா நின்றாய் -கிருஷ்ணனே  நீ இருக்கிற லோகத்தில் க்ருபா தத்துவம் இல்லை -அங்கு யுண்டாகிலும் உன் பக்கல் கிருபை இல்லை -என்கிறாள் –

—————————————————————–

இங்கனே இப்பிராட்டி சொல்லா நிற்கச் செய்தே இவள் தரிக்கைக்காக பல காலம் அணைத்து அருள -நீ இங்கனே சம்ச்லேஷித்து நிரதிசய ஸூகம் பிறந்து இருக்கச் செய்தே -அந்த ஸூ கம் எல்லாம் நீ போகக் கடவை என்னுமதினாலே ஸ்வப்னம் கண்டு விழித்தால் போலே பொய்யாய் –நோவு படா நின்றேன் என்கிறாள் –பூர்வ வ்ருத்தமான சம்ச்லேஷம் தன்னையே சொல்லிற்று ஆகவுமாம் —

தகவிலை  தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

தடமுலை புணர் தொறும்-புணர்ச்சியின் அளவில்லாத ஸூ க வெள்ளம் -அபரிச்சேதயமான ஆகாசத்தையும் கடந்து -என்னுடைய அறிவு கெடும்படி பெருகினது-ஸ்வப்னம் போலேயாய் -போய் – -அத்தசையிலே சம்ச்லேஷ விஸ்லேஷங்களால் இடமுடைத்தான ஹ்ருதயத்தில் உள்ளுண்டான அவகாசங்கள் தோறும் உள்ளே சென்று புக்கு அபி நிவேசம் பொறுக்கும் அளவன்றிக்கே இரா நின்றது -பலகாலும் உன்னைப் பிரிகை யுண்டாம் படி நீ பசு நிரை மேய்க்க போம் போக்கு எல்லாம் வீவனாக வேணும் –

———————————————————————-

நீ உபேக்ஷித்து இருக்க இடைப் பெண்களான நாங்களே ஸ்நேஹித்து இருக்கிற இவ்வொரு தலைக் காமம் நசிக்க வேணும் -என்கிறாள் –

வீவன்  நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

வெவ்விதாக நெடு மூச்செறிந்து என்னுடைய ஹிருதயம் தக்தமாகா நின்றது -நீ போனவாறே சர்வமும் பிரதிகூலமாம் -இவ் வவசாதத்தோடே நான் ஜீவித்து இருப்பதும் செய்து ஸ்ரமஹரமான வடிவையுடைய உன்னுடைய சஞ்சாரமும் காணேன் -நீ போனால் பகல் குறைந்து காட்டாது -வியசனம் பொறுக்க மாட்டாமையாலே அலமந்து போருகிற கயல் போலே இருக்கிற கண்களும் நீர் மாறுகிறனவில்லை -எங்களுடைய விஸ்லேஷம் நசிப்பது என்றுமாம் -முடிந்து பிழைக்க வேணும் என்று கருத்து -எங்களுக்கு விநாசமாவது தனிமை என்றுமாம் –

————————————————————————

இவன் போகிறான் என்று இப்பிராட்டி நோவு படப் பூக்கவாறே -உன்னைப் பிரிய சம்பாவனை யுண்டோ -என்று இப்புடைகளிலே  மற்றும் சில சவிநயமாக சில வார்த்தைகளை அருளிச் செய்ய –இவை இ றே என்னை மாய்கின்றன -அழிக்கின்றன –என்கிறாள் –

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

கோவிந்தா -அபிமதரைப் பிரிந்தார் படும் விஸ்லேஷமும் -உன்னைப் பிரிந்து நாங்கள் படும் வியசனமும் நினைக்கிறிலை -உன் தொழுவில் நிற்கும் பசுக்களையே ஆதரித்து அசேதன பதார்த்தங்களை பொகடுமா போலே எங்களைப் பொகட்டு அவை மேய்க்கப் போகக் கடவை -பக்வமாய் விலக்ஷணமான அம்ருதத்தினுடைய இனிய சாற்று வெள்ளம் போலே போக்யமாய் இருக்கிற உன்னுடைய பணி மொழிகளை ஹிருதய அவகாசம் தோறும் மறக்க ஒண்ணாத படி ஸ்த்திரமாக்க-உன்னுடைய சிவந்த கனி போலே இருக்கிற வாயில் சர்வ ஸ்வாபஹார க்ஷமமான பணி மொழிகளை நினை தோறும் ஆவி வேவா நின்றது –

——————————————————————–

நான் உன்னுடைய சந்நிதியில் வர்த்தியா நிற்க நீ இப்படி படுகிறது என் -என்று எம்பெருமான் இப்பிராட்டிக்கு அருளிச் செய்ய -இப்பிராட்டியும் -நீ பசு மேய்க்கப் போகக் கடவையான பின்பு -நீயும் போனாய் -நீ போனால் நலியக் கடவ ஸந்த்யை தொடக்கமான பதார்த்தங்களாலே  நலிவு படுகிற என்னை -ஆலிங்க நாதிகளைப் பண்ணி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் -என்கிறாள்

பணி  மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

 மேய்க்கிய-மேய்க்க / அலரா நின்றுள்ள மல்லிகையினுடைய மணத்தை வாடையானது தூவ –பெரும் கிளர்த்தியான ஸந்த்யையும் வந்தது -கௌஸ்துபாதிகள்  நிறம் பெரும் படியான உன்னுடைய திரு மார்பில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையைக் கமழப் பண்ணி -உன்னுடைய வாய் அமுதத்தைத் தந்து -அணி மிக்கு இருந்துள்ள அழகிய திருக் கையை எங்கள் தலை மேலே – ஐயோ – வைத்து அருளாய் –

———————————————————–

போன போன இடங்கள் எல்லாம் உனக்கு அபிமதைகளான பெண்கள் அநேகர் உளர் -உனக்கு ஒரு குறை இல்லை–நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டுகிறிலோம் – உன் போக்கானது எங்களுக்கு அஸஹ்யம் -என்கிறாள் –

அடிச்சியோம்  தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-ஆழி அம் கண்ணா –கடல் போலே இருக்கிற அழகிய கண்களாலே -என்னைக் குளிர நோக்கி -என் தலை மேலே கையை வைத்து அருள வேணும் –
உன் கோலப் பாதம்-பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்-பலர் –நான் போகிறேனாய்க் கொண்டே இங்கனம் படுகிறது -போனால் தான் உன்னைப் பிரிந்து தரிப்பேனோ -என்ன -நீ போன இடத்தில் நடுவே உன் திருவடிகளை பிடிப்பார் உனக்கு அபிமதைகளும் பலர் –
அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்--அவர்கள் இடையாட்டம் நிற்க -நாங்கள் எங்கள் பெண்மை கொண்டு செலுத்த மாட்டோம் -ஜீவிக்க மாட்டோம் என்று கருத்து –
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா--கூர்த்துப் பெருத்து இருந்துள்ள கண்கள் நீர் மாறுகிறது இல்லை -/ மனமும் நில்லா -மனஸ்ஸூ சிதிலமாகா நின்றது / எமக்கு அது தன்னாலே-வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு-ஆகையால் எங்களுக்கு உன்னுடைய பசு நிரை மேய்க்கப் போக்காகிறது அஸஹ்யம்
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே––நீ போகிறாய் என்று எங்கள் ஆத்மா மெழுகில் இட்ட நெருப்பு போலே சிதிலமாய் வேவா நின்றது –

—————————————————————

நாங்கள் நோவுபட உன்னுடைய ஸூ குமாரமான திருவடிகள் நோவ-நீ பசு மேய்க்கப் போனால் அங்கே-அங்கே அஸூரர் வந்து கிட்டில் என்ன பிரமாதம் புகுரக் கடவது -என்கிறாள் –

வேம்  எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

-விரஹ கார்ஸ்யத்தாலே -வெள் வளைகளும்  மேகலைகளும் கழன்று விழும் படியாகவும் -அழகிய கண்கள் நீர் சோரும்படியாகவும்-முலைகளும் விவரணமாய் -தோள்களும் வாடும் படியாகவும் -மா மணி வண்ணா-பெரு விலையனான நீல மணி போன்ற திரு நிறத்தை யுடையவன் –

————————————————————————

நீ பசு மேய்க்கப் போனால் என்ன பிரமாதம் புகுகிறதோ என்று அஞ்சா நின்றேன் -உன்னை விஸ்லேஷிக்கவும் ஷமை ஆகிறிலன் -ஆனபின்பு உன்னுடைய ஸுந்தர்யத்தாலே உனக்கு அபிமதைகளாய் இருப்பாரை வசீகரித்து -அவர்களும் நீயும் கூட என் கண் வட்டத்தில் உலாவித் திரிய வேணும் -என்கிறாள் –

அசுரர்கள்  தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

ஆழும்  -அழுந்தும் -/ உன்னோட்டை சங்கமும் உன்னோடே சம்ச்லேஷிக்க  வேணும் என்னும் அபி நிவேசமும்  இப்போதே உன்னோட்டை சம்ச்லேஷமும் நீ போனால் ஸ்ம்ருதமாகப் பாதிக்கும் -ஆனபின்பு என்னைக் கழியப் போகாது ஒழிய வேணும் -/ வசி -வஸ்யம் / ஓசிகை -துவளுகை-

———————————————————————

உங்கள் ஸந்நிதியில் நான் வேறே சிலரோடு பரிமாறுகை உங்களுக்குத் பிரியமாகக் கூடுமோ -என்று அருளிச் செய்ய -எங்களோடு சம்ச்லேஷிப்பதில் காட்டிலும் நீ வேறே சிலரோடு சம்ச்லேஷித்து உன்னுடைய திரு உள்ளத்தில் இடர் கெடுகை-எங்களுக்கு மிகவும் இனிது -ஆனபின்பு சப்ரமாதமான தேசத்திலே பசுநிரை மேய்க்கப் போகாது ஒழிய வேணும் -என்கிறாள் –

உகக்கும்  நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாய் யுள்ள அவர்களோடே திரிந்து -உன்னுடைய திரு உள்ளத்தில் இடர் கெடும் தோறும் -நாங்கள் எங்களோடு சம்ச்லேஷித்ததில் காட்டிலும் மிகவும் இனியோம் ஆவுதோம்-நீ வேறே சிலரோடு சம்ச்லேஷிக்க தரியாது இருக்கும் பெண்மை வேண்டோம் –
பல அஸூரர் கம்சன் ஏவ வேண்டின வடிவுகளைக் கொண்டு மிகவும் சஞ்சரியா நிற்பார் -அவர்கள் கையில் அகப்படில் அவர்களோடு உன்னோடு அவ்விடத்தில் பொல்லாங்குகள் விளையும் -ஐயோ என் சொல் கொள்ளாய் –

————————————————————-

கம்ச பிரேரிதரான அ ஸூ ரர் சஞ்சரிக்கும் காட்டிலே நம்பி மூத்த பிரானையும் ஒழியவே தனியே திரியா என்று மிகவும் நோவு படா நின்றேன் என்கிறாள் –

அவத்தங்கள்  விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

பலவான்களான அஸூரரைக் கம்சன் ஏவ –தபஸ் ஸூ பண்ணும் ரிஷிகள் கலங்கும் படி சஞ்சரியா நிற்பர் -உனக்கு என் வருகிறதோ என்று தவத்தவர் தங்கள் மறுக -என்றுமாம்-அவன் சந்நிதியில் தீமை செய்ய ஒண்ணாது -என்று ராமனோடும் ஹ்ருதயம் சேர்கிறிலை–ஹ்ருதயம் சேரா விட்டால் கூடாது திரிவதும் செய்கிறிலை என்று மிகவும் என்னுடைய ஆத்மா வேவா நின்றது -இது ஒரு ஸ்நேஹ ப்ரக்ரியை இருக்கும் படியே -நான் போகில் அன்றோ நீங்கள் பயப்பட வேண்டுவது -என்று அவர்கள் ஈடுபடும் படி முறுவல் செய்ய –செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-திரு நாட்டில் காட்டிலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி-ஆனபின்பு போனாயே யல்லையோ -என்கிறாள் –

———————————————————————–

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த -ஆயிரம் திருவாய் மொழியிலும் -எம்பெருமானை -பசு நிரை மேய்க்க வேண்டா -என்று பிராட்டி நிஷேதித்த பாசுரமான இதுவும் -அல்லாதவற்றோடு  ஓக்க  ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

செங்கனி  வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

தான் பசுநிரை மேய்க்கப் போகாமை தோற்றும் படி முறுவல் செய்கையாலே -சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளத்தை யுடையவனாய் -ஆஸ்ரித பவ்யனாய் –ஆயர் தேவான ஸ்வாமி யுடைய திருவடிகளிலே-சங்குகளாலே அணியப் பட்ட திரு பொருநல் என்ற ஆற்றை யுடையராய் -சம்ருதமான திரு நகரியை யுடையரான -பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் -இடைப் பெண்கள் அவனோடே பிரிக்கிறோம் என்று நோவு பட்டுச் சொன்ன பாசுரத்தை அவர்களிலே ஒருத்தி பசு நிரை மேய்க்கப் போக வேண்டா என்று சொன்ன -இவை –

———————————————————————

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: