திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–5- –

பக்தியானது ஸ்வ சாத்யத்தோடே பொருந்தினபடியை அருளிச் செய்தார் கீழ் –
-பக்தியோக பிரகாரம் எங்கனே இருக்கும் படி என்று அறிய வேணும் என்று இருப்பார் இழக்க ஒண்ணாதே என்று பார்த்து அருளி
பக்திக்கு ஆலம்பமான திரு மந்த்ரத்தை உபதேசித்து -இதனுடைய அர்த்த அனுசந்தானமே மோக்ஷ ஹேது என்று
-அது அடியாக மநோ வாக் காயங்களை ப்ரவணமாக்கி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆராதியுங்கோள்-
ஸ்ரீ யபதி யாகையாலே ஸ்வாராதன் -நீங்கள் இதிலே இழியவே விரோதி வர்க்கம் தானாகவே போம் –
-இப்படி தன்னோடு பரிமாறுவார்க்கு ஸூலபனாம் -அதில் இழி யும் இடத்து அதிகாரம் சம்பாதிக்க வேண்டா –
-ருசியே அமையும் -என்று உபதேசிக்கையிலே ஒருப்பட்டு-
ஈஸ்வரன் தம்மை பரம பதத்தில் கொடு போகையில் முடுகுகிற படியாலும் உபதேசிக்கிற இவர்களுக்கு
பிரதிபத்தி விஷயமாகவும் பாசுரம் சுருக்கக் கொண்டு உபதேசித்து இத்தோடே பரோபதேசத்தைத் தலைக் கட்டுகிறர் –

———————————————————————

பக்தி உக்தராய்க் கொண்டு அவனை அனுசந்திப்பார்க்கு ஆலம்பமான திரு மந்த்ரம் இன்னது என்கிறது –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கண்ணன் கழலிணை—விபக்ருஷ்டமான பரம பதத்தில் இருக்கை இன்றிக்கே -இங்கே வந்து அவதரித்து -அதிலும் அதிகாரம் ஆராய்க்கைக்கு வசிஷ்டாதிகளும் வாசல் காப்பாரும் இன்றிக்கே -சர்வ ஸூ லபனான கிருஷ்ணன் திருவடிகளை -/ கழலிணை–தூது போதல் -சாரத்யம் பண்ணுதல் -செய்யும் திருவடிகளை –
நண்ணும் மனம் உடையீர்–நண்ணுகை -கிட்டுகை –பிரிந்து போந்து கிட்டினரைப் போலே போக்கிய வஸ்துவாய் இருக்கிறபடி –/ நண்ணும் மனம் உடையீர்-நிதி யுடையவர்கள் என்னுமா போலே –இச்சை தானே குவாலாய் இருக்கிறபடி -இதுக்கு ஒரு அதிகாரம் சம்பாதிக்க வேண்டா -இச்சையே வேண்டுவது -விலக்ஷண புருஷார்த்தமாய் இருக்க ருசி மாத்திரமே அமையும் ஆகிறது -இதுக்கு சத்ருசமான அதிகாரம் சம்பாதிக்க ஒண்ணாமையாலும் ப்ராப்த விஷயம் ஆகையால் அதிகார அபேக்ஷை இல்லாமையாலும் —/ கண்ணன் கழலிணை–என்று தாமோதரன் தாள்கள் சார்வே -என்றத்தை அனுபாஷிக்கிறார்
எண்ணும் திருநாமம்–எப்போதும் அநுஸந்திக்கும் திரு நாமம் -மந்த்ரம் என்னாதே திரு நாமம் என்கிறது -அதிகாரி நியதி யாதல் –அங்க நியதி யாதல் -வேண்டா என்கைக்காக -மாத்ரு நாம க்ரஹணத்துக்கு அதிகாரமும் வேண்டா -சரசமுமாய் இருப்பது -அது தான் ஏது என்னில்
நாரணமே–-அவதாரணத்தாலே இவ்வளவே பூர்ணம் என்கை -ப்ரணவத்தையும் நமஸ்ஸையும் சதுர்த்தியும் ஒழியவே பூர்ணம் -என்கை –அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று -நீ ப்ரஹ்ம ராக்ஷசனாய்ப் பிற -என்னுமதில் வியாவ்ருத்தி சொல்லிற்று
திண்ணம் –பெறுகிற பேற்றின் கணத்துக்கு போருமோ-என்ன வேண்டா -நிச்சிதம் –சத்யம் சத்யம் —

————————————————————–

இரண்டாம் பட்டாலும் மூன்றாம் பட்டாலும்  இதனுடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது -இது ப்ரஸ்துதமான இடங்களில் அர்த்தத்தைச் சொல்லக் கடவதாய் இருப்பது ஒரு நியதி உண்டு இ றே இவர்க்கு –

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-

நாரணன்-சப்த உபாதானம் / எம்மான் –எனக்கு ஸ்வாமி யானவன் /பாரணங்கு ஆளன்–பூமிக்கு அபிமானிநியான நாயகன் ஆனவன் – வாரணம் தொலைத்த காரணன் தானே–ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் –சர்வ காரணமாய் இருக்கிறான் கிருஷ்ணன் தான் —-எம்மான் -என்கிறது சம்சார விபூதிக்கு உப லக்ஷணம் –பாரணங்கு ஆளன்-என்கிறது நித்ய விபூதிக்கு உப லக்ஷணம் -வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

————————————————————-

ஸ்வாமித்வ ப்ரயுக்தமான சர்வ வித ரக்ஷணங்கள் பண்ணும் படி சொல்லுகிறது –

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3-

தானே உலகு எல்லாம்–சர்வம் கலவிதம் ப்ரஹ்ம -என்கிற படியே தான் என்கிற சொல்லுக்குள்ளே சர்வமும் -தஜ்ஜலா நிதி -என்று சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சொன்னால் போலே -இங்கு சாமா நாதி கரண்யத்துக்கு ஹேது சொல்கிறது மேல் –
தானே படைத்து–தம –ஏகீ பவதி–என்கிறபடியே ஸூ ஷ்ம சித் அசித் சரீரனான தானே சர்வ லோகங்களையும் யுண்டாக்கி –அசித விசேஷிதமான தசை யாகையாலே -அபேக்ஷிப்பாரும் இன்றிக்கே இருக்க தயமான மானாவாய்த் தானே இ றே ஸ்ருஷ்ட்டித்தான் –
தானே இடந்து–பிரளயங்கதையான பூமி -என்னை உத்தரிப்பிக்க வேணும் -என்ன வன்று இ றே நஷ்ட உத்தரணம் பண்ணிற்று –
தானே உண்டு–பிரளயம் வரப் புகா நின்றது -என்று அறிவார் இல்லையே
தானே உமிழ்ந்து –புறப்பட விட வேணும் -என்று அர்த்தியாது இருக்க -தானே உமிழ்ந்த படி –
தானே ஆள்வானே–சர்வ பிரகாரங்களாலும் ரஷிக்கையாலே -தானே உலகு எல்லாம் –

——————————————————————

ஆபோ நாரா –என்கிற வழி யாலே திருமந்த்ரார்த்தை நிர்வசித்து -அவ்வழியாலே திருமந்திரத்தை சொல்லிக்     கொண்டு புஷபஞ்சாலி பண்ணி ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-10-5-4-

ஆள்வான் ஆழி நீர்க்–ஆழி நீர் -ஆள்வான்–காரண ஜலத்திலே ஸ்ருஷ்ட்டி உன்முகனாக கண் வளர்ந்து அருளி அத்தசையிலே சேதன சமஷ்டியை ரஷித்தவன் –
கோள்வாய் –மிடுக்கு யுடைய வாய் என்னுதல் –பிரதி கூலர்க்கு மிருத்யுவான வாய் என்னுதல்
அரவு அணையான்–தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-ஆஸ்ரித ஸூ லபன் ஆகையால் ஸ்வாராதனுடைய திருவடிகளிலே செவ்வித் பூவை பணிமாறி நாள் தோறும் ஆஸ்ரயிங்கோள் -இப்படிச் செய்ய ஸ்வரூப அனுரூபமான பேறு நிச்சிதம் -என்கிறார் –

——————————————————————–

இப்படி செவ்வி மாறாத புஷ்ப்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் –அப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -என்கிறார்

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5-

ப்ரீதி பூர்வகமான வ்ருத்திக்கு கால நியதி இல்லை -உங்கள் அபி நிவேசத்துக்கு அனுரூபமான வி லக்ஷண புஷ்பத்தைக் கொண்டு அவன் திரு நாமத்தை ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சொல்லுங்கோள் -இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இ றே இருப்பது –

———————————————————————

ஆஸ்ரயணீயனைக் கண்டு ஆஸ்ரயிக்க வேண்டாவோ -என்ன பிற்பாடரான நமக்காகத் திரு மலையிலே நின்று அருளினான் -அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

உங்களை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகைக்குத் திருமலையில் பொருந்தி வர்த்திக்கிறவன் -ஆஸ்ரயணத்திலே இழிந்தாரை கொண்டு முழுகும் வடிவை யுடையவன் -விரோதி வர்க்கம் செய்யுமது என் என்னில் அது பூதனை பட்டது படும் அத்தனை -நம் பூர்வ வ்ருத்தம் பாராதே ரஷிக்கைக்கு அருகே இருப்பாரும் யுண்டு –

——————————————————————-

ப்ரீதி பிரேரிதராய் ஆஸ்ரயிக்கவும் இனிமையோடே திரு நாமம் சொல்லவும் மாட்டாதார் -அந்தப்புர பரிகரமானார் சொல்லும் வார்த்தையைச்   சொல்ல -பூர்ண உபாசனத்திலே பலம் சித்திக்கும் -என்கிறார் –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

ஸ்ரீ வல்லபன் என்னும் திரு நாமத்தை உங்களுக்கு ருசி இல்லையே யாகிலும் -பர பிரேரி தராய்க் கொண்டாகிலும் நிரந்தரமாகச் சொல்ல வல்லி கோளாகில் பூர்வாகங்கள் நசிக்கும் -உத்தராகங்கள் ஸ்லேஷியா – முன்புள்ள வற்றை மறக்கும் -பின்புள்ள வற்றில் நெஞ்சு செல்லாது –
கீழ்ச் சொன்ன திரு மந்த்ரமும் -இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித் தனியே பேற்றுக்கு பர்யாப்த்தமான பின்பு -இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்கு பேற்றுக்குச் சொல்ல வேண்டா இ றே –

———————————————————-

அதிகாரி நியதி இல்லை -ஆரேனுமாகத் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-என்கிறார் –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8-

சாரா ஏதங்கள் –துக்கங்கள் நம்மை வந்து கிட்டப் பெறா–
நீரார் முகில் வண்ணன்–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இ றே உபதேசிக்க வேண்டுவது –
பேர் ஆர் ஓதுவார் -அவன் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர்
ஆரார் அமரரே–அவர்கள் ஏதேனும் ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் அவர்கள் இருந்த படியே நித்ய ஸூரிகளோடு ஒப்பர்கள்-
இத்தால் ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக அவர்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் –

———————————————————————–

ஜென்மாதிகள் அப்ரயோஜம் ஆனாலும் அநந்ய பிரயோஜனாக வேணுமே என்னில் -ஆப்த உபதேசத்தைப் பற்றி இழியவே-ப்ரயோஜனாந்தர பரதா ஹேதுவான பாபங்கள் தானே அகலும் -என்கிறார் –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-

அமரர்க்கு அரியானை –பிரயோஜனாந்தர பரர்க்கு துர்லபனானவனை -யான் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி
தமர்கட்கு எளியானை-–அநந்ய பிரயோஜனர்க்கு ஸூலபனானவனை –ஸோ அப்ய கச்சத்–ஸூ க்ரீவம் சரணம் கத –இமவ் ஸ்ம முனிசார்த்தூல கிங்கரவ் –
ஞானாதிகரான ப்ரஹ்மாதிகளே யாகிலும் -ப்ரயோஜனாந்த பரர்க்கு துர்லபன்-
ஒரு வேடுவிச்சி யாகவுமாம் -ஒரு குரங்கு ஆகவுமாம் -ருஷி யாகவுமாம் –அவர்களுக்கு கையாளாய் இருக்கும் –
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

————————————————————-

அவ்வளவே அன்றிக்கே கைங்கர்ய பிரதிபந்தகங்களும் போம் -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10-

வினை வல் இருள் என்னும் முனைகள்வினை -கர்மம் –/ வல்லிருள்--பிரபலமான அஞ்ஞானம் –அதுக்கு அடியான தேக சம்பந்தம் -/ இவற்றைப் பற்றி வரும் ருசி வாசனைகள் ஆகிற இத் திரள்கள்
வெருவிப் போம்-நமக்கு இது நிலம் அன்று -என்று பீதமாய்ப் போம் —
சுனை நல் மலர் இட்டு நினைமின் –அழகிய செவ்விப்பூவை திருவடிகளிலே பரிமாற நினையுங்கோள் –
நெடியானே-எல்லாம் செய்தாலும் -ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே–என்று இருக்குமவன் –ஸ்மர்த்தா என்கிறபடியே -இவன் ஒரு கால் நினைக்க -அஹம் ஸ்மராமி-என்று என்றும் ஓக்க நினைக்குமவன் –

——————————————————————

நிகமத்தில் இப்பத்தும் -அப்யசித்தவர்களை -ஆழ்வார் தம்மைப் போலே பகவத் விஷயீ கார பாத்திரம் ஆக்கும் என்கிறார் –

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்--சர்வேஸ்வரனுடைய பிரசாதங்களுக்கு எல்லாம் பாத்ர பூதராகையாலே -அதுவே ஸ்வ பாவமான ஆழ்வார் –ஆற்ற நல்ல வகை காட்டும் -என்று சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்கும் அளவன்றிக்கே-இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் கொண்டு தரித்து நின்று அனுபவிக்க வல்லராகை-
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே––நொடித்தல் -சொல்லுதல் / அடியார்க்கு–அப்யஸிக்க வல்லார்க்கு / அருள் பேறே––பிரசாத லாபம் / நெடியோன் அருள் சூடும் படியான்-என்ற இவர் பேற்றைப் பண்ணிக் கொடுக்கும் –

————————————————————-

கந்தாடை     அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: