திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10–3- –

திருவனந்த புரத்தில் போக்யதையையும் –அங்குப் போனால்
அடிமை செய்யும் படியையும் அனுசந்தித்து -அந்த ப்ராப்ய பூமியிலே புக வேணும் என்று பிரார்த்தித்தார் –
அப்போதே செல்லப் பெறாமையாலே அஸ்தானே பய சங்கையாய் விழுந்தது –
ப்ராப்ய பூமியிலே அப்போதே செல்லப் பெறாமையாலும் -பிரார்த்தித்த படியே அடிமை செய்யப் பெறாமையாலும்
-முன்பு பலகாலும் பிரிந்த வாசனையாலும் -அநாதி காலம் வாசிதமான அசித் சம்சர்க்கத்தாலும்-
ஈஸ்வரனுடைய ஸ்வாதந்தர்யத்தாலும் -அதாகிறது -சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்ததும் -ஸ்ரீ பரத ஆழ்வான் வளைப்புக் கிடக்க
-மறுத்து மீண்டு போரும் படி இ றே -ஸ்வாதந்தர்யம் இருப்பது –
அத்தாலும்-அவன் தான் வந்து மேல் விழும்படியான பரம பக்தி நமக்கு இல்லை என்று இருக்கையாலும்
-இன்னம் பிரக்ருதியிலே தம்மை வைக்கில் செய்வது என் -என்னும் பயத்தால் அவசன்னரானவர்
-தம் தசையை -அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
-இவை தான் பய நிவ்ருத்திக்கு உடலாய் இருக்க -கலக்கத்தாலே பயப்படுகிறார் –
-அத்தேசத்தில் புகைப் பெற்றிலோம் என்ன வேண்டா –
காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்று உபக்ரமத்திலே சிசிலராம் படியான ப்ரேம பாரவஸ்யத்தாலே
இப்போது போக மாட்டாது ஒழிகிறார் ஆகையால் -அங்கே சென்று அடிமை செய்யப் பெற்றிலோம் -என்ன வேண்டா –
புகழும் நல் ஒருவனில் படியில் இவர் சொல் முதலாக த்ரிவித கரண வியாபாரங்களை அவன் தனக்கு எல்லா
அடிமையாகவும் நினைத்து இருக்கையாலே -அசித் வாசனைக்கு அஞ்ச வேண்டா –
விலக்ஷண வாஸனையாலே துர்வாசனையைப் பரிஹரிக்க இருக்கிறவர் அல்லாமையாலே சர்வ சக்தியைக் கொண்டு பரிஹரிக்குமவர் இறே
-இன்னம் முடியானேயில் கரணங்களை யுடையவர்க்கு பயம் இல்லை இ றே –
அவன் ஸ்வாதந்தர்யத்துக்கு அஞ்ச வேண்டா -விரோதியை இடையிலே துணித்துக் கொண்டு கொண்டு போகைக்கு உடலாகையாலே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றான் இ றே –
பக்தி இல்லை என்று அஞ்ச வேண்டா -அது உபாயம் அல்லவே -இங்கனம் இருக்க
ப்ரேமத்தாலே வந்த இருட்சியாலே அஸ்த்தானே பீதராய் தம் தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
ராத்திரி எல்லாம் கிருஷ்ணனோடு சம்ச்லேஷித்து -ப்ரபாத சமயத்திலே –
சகல சத்தவங்களும் உணர்ந்து கிளம்பவும் செய்து -குயில்கள் கூவுவது -மயில்கள் ஆலிப்பது–இளங்காற்று சஞ்சரிப்பது –
-கன்றுகளும் பசுக்களும் காடு எல்லாம் பரவா நிற்பதுவுமாய் இருப்பதைக் கண்டு
-அவனுக்கு பிரியக் கடவதாக நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே -போது விடிந்தவாறே –
பண்டு என்றும் இக்காலத்தில் பிரியக் கண்ட வாஸனையாலே -அவன் பசு மேய்க்கப் போகிறானாக அதி சங்கை பண்ணி
–போனானாக அத்யவசித்து -நீயும் பிரிந்தாய் -நீ பிரிந்தால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலியா நின்றன –
-பசு மேய்க்கப் போமது எனக்கு அநபிமதம் -நீ போக வேண்டா என்று சொல்ல ஒண்ணாத படி
என்னுடைய நாக்கு நீர் அற்று வாரா நின்றது -நான் நினைத்ததை சொல்ல வல்லேனாம் படி
உன்னுடைய அணி மிகு தாமரைக் கையை என் தலை மேலே வைத்து அருளி -உன்னுடைய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும்
-அஸூர ராக்ஷசர் சஞ்சாரத்தால் -சப்ரமாதமான காட்டில் பசு மேய்க்கப் போகாது ஒழிய வேணும்-
-மாதா பிதா பிராதா -என்று இவ்வாத்மாவுக்கு சர்வவித பந்துவும் என்று உணர்ந்தால் தன் இழவில் காட்டில் இவனுக்கு பரிய வேண்டும்படி யாயத்து இருப்பது –
ஆனபின்பு நீ போகில் நான் உளனாக மாட்டேன் -என்று இன்னுயிர்ச் சேவலிலும்-மல்லிகை கமழ் தென்றலிலும் படும் வியசனத்தை
-அவன் சந்நிதியில் பட -அத்தைப் பார்த்து -நாம் போகக் கடவோம் அல்லோம் -நாம் போக நினைப்பதும் செய்திலோம்-என்று
தான் போகாமையை இவள் நெஞ்சிலே படுத்த -அத்தாலே தரித்தாள் ஒரு பிராட்டி பேச்சாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –
எம்மா வீட்டில் தம்முடைய தாதார்த்தயத்தை ஆசைப் பட்டார்-
-இதில் அவன் ஸம்ருத்தியை ஆசாசிக்கும் இதுவே புருஷார்த்தம் -என்கிறார் –

————————————————————–

வேய்  மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ–பசுமைக்கும் சுற்று உடைமைக்கும் செவ்வைக்கும் வேயைப் போலியாகச் சொல்லலாம் தோள்கள் இரண்டும் –இணை மெலியும் ஆலோ–நீ சேர்த்தி அழகைக் கொண்டாடும் தோள்கள் இரண்டும் பட்ட பாடு பாராய் – தன் தோள் அழகைத் தான் சொல்லுமவள் அல்லள் -அவன் கொண்டாடக் கேட்டுப் போந்தவள் ஆகையாலே சொல்லுகிறாள் –ராஜ புத்திரனுக்கு பூந்தோட்டம் அழியா நின்றது என்பாரைப் போலே -உன் போக உபகரணங்கள் அழிகிற படி பாராய் -என்கிறாள் –கிண்ணகத்தில் அடிச் சுடுமா போலே -அவன் கூடி இருக்கச் செய்தே-பிராந்தி ஞானத்தை அனுவர்த்தித்து தோளிணை மெலியா நின்றன –இவன் சந்நிதியிலும் அகவாயில் பிரிவு கிடைக்கையாலே அதின் கார்யம் உடம்பிலும் உண்டாகா நின்றது –மெலியும் ஆலோ –இனி நீ வந்தாலும் அஸத் சமம் என்கை-ஆலோ -விஷாத அதிசய ஸூசகமாகக் கிடக்கிறது –
மெலிவும் என் தனிமையும்-நாட்டாருடைய மெலிவும் தனிமையும் போல் அல்ல -என் மெலிவும் தனிமையும் -உன் தனிமையும் உன் மெலிவும் போல் அல்ல –மிக மேனி மெலிவு எய்தி –என்றும் -தமியமாலோ -என்றும் பிரிவில் சொன்னதையும் அன்று -அவன் கூட இருக்கச் செய்தேவந்த மலிவு தனிமையும் இ றே இது -இங்கனம் கூடுமோ என்னில்-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று -என்னுமவள் கூட இருக்கச் செய்தே பிரிந்தானாகவும் சொல்லாத தட்டில்லை இ றே –இவன் தன்னாலும் சமாதேயம் அன்று -போனானாயிட்டு வருகிறான் ஆலன் -போக நினைத்தானாய் தவிரு கிறான் அல்லன்–அவனும் இவள் தோளில் மெலிவில் மெய்ப்பாட்டைக் கண்டு -நாம் பிரிந்தோமோ -என்று பிரமிக்கும் அத்தனை -அது தான் இவன் தன்னுடைய ஸுபாக்ய பலம் இ றே –முன்பு பிரிந்தால் இவளுடைய ஆற்றாமை தோழிமார் சொல்லக் கேட்டுப் போரும் அத்தனை -இப்போது தானே இருந்து காணப் பெற்றான் —தோழி மாரோடு பண்ணும் வ்ருத்த கீர்த்தனத்தை இவன் தன்னோடே பண்ணுகிறாள் –
யாதும் நோக்கா –-ஒன்றும் நோக்கா –என் மெலிவாதல் –என் தனிமை யாதல் -ஒன்றும் பார்க்கிறன வில்லை –
காமரு குயில்களும் –காமருதல் -விரும்புதல் –பரஸ்பரம் விருப்பத்தை யுடைத்தாய் இருக்கை -பிரிவுக்கு உடலான கலவி அன்றிக்கே-நித்ய சம்ச்லேஷத்துக்கு அடியான-ப்ரீதியோடே  கலவா நின்றன –நீ நலிகிறதுக்கு மேலே குயில்களும் நலியா நின்றன -நீ நலியவிட்ட பதார்த்தங்களிலும் நீயே நல்ல –
கூவும் ஆலோ–தனியிருப்பில் என் நோவைக் கண்டால் கலவிக்குப் போக்கு விடுகிற தங்கள் வாயை புதைக்க வேண்டாவோ –
கண மயில் அவை -ஒரு திரளாக பாதகமாகா நின்றன –/அவை -த்ருஷ்ட்டி விஷம் போலே இருக்கையாலே முகத்தை திரிய வைத்து -அவை -என்கிறாள் –
கலந்து ஆலும் ஆலோ-இத் தனி இருப்பில் கலக்கை யாவது -ஸ்த்ரீ வதம் -என்று இருக்க வேண்டாவோ -இவற்றுக்கு கலவியால் யுண்டான ஹர்ஷம் உள் அடங்காமையாலே சசப்ரம ந்ருத்தம் பண்ணா நின்றன -பஸ்ய லஷ்மண ந்ருத்யந்தம் மயூர முப ந்ருத்யதி மயூரஸ்ய வனே நூ நம் ரக்ஷஸா நஹ்ருதா ப்ரியா –இம்மயிலினுடைய பேடை அவனாலே அபஹ்ருத சிந்தை யாய்த்தில்லை யாகாதே -புண்டரீக விசாலாக்ஷீ கதமேஷா பவிஷ்யதி -என்ன வேண்டி இருக்கிற தசையில் -நீயும் உன்னுடைய ரஷ்ய  வர்க்கத்தினுடைய ரக்ஷணத்தே போகா நின்றாய் –
ஆ மருவு இன நிரை மேய்க்க-உன்னோடே மருவி தன்னில் ஒத்த பசு நிரைகளை மேய்க்கைக்கு —மருவின நிரை-மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர-என்கிறபடியே அவனை ஒழியில் தரியாதவை இ றே -ரக்ஷிக்கும் போதும் திரளாக வேணுமோ –
நீ போக்கு-ஒரு பகல்–ஆயிரம் ஊழி ஆலோ–நீ போகிற ஒரு பகல் -என்னுதல்–உன்னுடைய போக்கான ஒரு பகல் என்னுதல் –இவை சப்தத்தில் மிறுக்குண்டு–போக விடுகிற ஒரு பகல் -நீ கழிக்கிற ஒரு பகல் என்னுதல் –இது சப்தத்துக்குச் சேரும் -சொல்லிப் போருமது அன்று –ஒரு பகல் அளவே அன்றோ -என்ன -உன்னைப் போலே என்று இராதே கொள்ளாய் -உனக்கு இ றே ஒரு பகலாய் இருக்கிறது -அது தானே எனக்கு அநேக கல்பமாய் இரா நின்றது -யதா சப்த கோடி ப்ரதிம–க்ஷண ஸ்தேன விநாசா பவத்
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ--நாம் பிரிந்திலோம் –பிரிய நினைத்திலோம் –இப்படி இருக்க போனோமுமாய் -போனால் நலியக் கடவ பதார்த்தங்களும் நலிந்ததாய் இருக்கிற இது ஒரு ப்ரேம ஸ்வபாவம் இருக்கும் படியே -என்று சாதரமாகப் பார்க்க –அழகிய திருக் கண்களால் நோக்கி -நோவு படுத்தா நின்றாய் என்கிறாள் -இந்நோக்கில் காட்டில் நீ பசு மேய்க்கப் போகை யமையும் என்கை முன்புத்தை நோக்கு -ஸ்ம்ருதி விஷயமாக சொல்லுகிறாள் என்பாரும் உண்டு –-ஈர்தி -என்கையாலே -இப்போது பார்த்தானாக வேணும் -இப்படி சொன்ன இடத்திலும் நோக்கை மாற வைத்திலன்–
தகவிலை தகவிலையே நீ கண்ணா–தகவிலை-நீ இருந்த லோகத்தில் கிருபை இல்லை -கண்ணா நீ தகவிலை -ஜகத்தில் யுண்டாகிலும் கிருஷ்ணனே உன் பக்கல் கிருபை இல்லை என்னுதல் –வீப்சையாலே-உனக்கு கிருபை இல்லை என்று நான் கொடி எடுக்கிறேன் என்னுதல் —சீதா விவாஸ நபடோ கருணாகுதஸ்தே –சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்தருத்ய புஜமுச்யதே –விலக்காத அளவைக் கொண்டு பிறரை இன்னாதாகிறது என் –உன் பக்கல் கிருபை இல்லை -ஏவமார்த்தா ஸூ யோஜித் ஸூ க்ருபா கஸ்ய நஜாயதே —

——————————————————————–

இங்கனே இப்பிராட்டி சொல்லா நிற்கச் செய்தே இவள் தரிக்கைக்காக பல காலம் அணைத்து அருள -நீ இங்கனே சம்ச்லேஷித்து நிரதிசய ஸூகம் பிறந்து இருக்கச் செய்தே -அந்த ஸூ கம் எல்லாம் நீ போகக் கடவை என்னுமதினாலே ஸ்வப்னம் கண்டு விழித்தால் போலே பொய்யாய் –நோவு படா நின்றேன் என்கிறாள் –பூர்வ வ்ருத்தமான சம்ச்லேஷம் தன்னையே சொல்லிற்று ஆகவுமாம் —

தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

தகவிலை தகவிலை யே நீ கண்ணா–நீ கண்ணா தகவிலையே–பெண் பிறந்ததற்கு ஸ்வம்மான நீ நிர்த்தயனே யாகா நின்றாய் –கிருஷ்ணன் என்றால் பெண்களுக்கேயாய் இருக்கும் என்னும் இடம் பிரசித்தம் இ றே -நாம் பிரிய நினையாது இருக்க நிர்த்தயன் என்கிறது தன் ஆற்றாமையால் இ றே -என்று அதுக்கு பரிகாரமாக அணைத்தான் –
தடமுலை புணர் தொறும்-அணைக்கிறது பிரிகைக்கு இ றே -என்று கை நெகிழ்ந்த இடத்தில் உடம்பு வெளுக்கும் -அதுக்கு பரிஹாரார்த்தமாக திரிய அணைக்கும் -ஆக இப்படி அதிசங்கையும் பரிஹாரமுமாய் செல்லும் இத்தனை யாய்த்து--தடமுலை –என்றது -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாத போக்யதா பிரகர்ஷம் -மலராள் தனத்து உள்ளான் –இத்யாதி –
புணர்ச்சிக்கு ஆராச்-சுகவெள்ளம் -கலவியின் அளவில்லாத ஸூ க சாகரம் -கலக்கும் இடத்தில் இருவருக்கும் அனுரூபமாய் இ றே ஸூ கம் இருப்பது –அவன் ஸ்வரூபம் இயத்தா ரஹிதமாய் இருக்குமா போலே யாய்த்து போக்யதா பிரகர்ஷமும்-அதனில் பெரிய அவா விறே இவளது –
விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்-சூழ்ந்து -அந்த ஸூ கம் அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கடந்து -மயர்வற மதி நலம் அருள பெற்ற அறிவையும் மூழ்த்தும் படி பெருகிற்று என்னுதல் –-/ விசும்பு -என்று பரம பதம் –அறிவு -ஆகிறது -உபய விபூதியையும் விளாக் குலை கொள்ளும் தன்னறிவு என்னுதல்
அது கனவு என நீங்கி-ஸ்வப்ன கல்பம் என்னலாம் படி வற்றிப் போய் -இந்திர ஜாலங்கள் என்றும் கனவு என்றும் அஸ்திரங்களை சொல்லக் கடவது இ றே -கலந்த போது ஸூ கம் அபரிச்சின்னமாய் இருக்கும் –பிரித்விக் கண்டவாறே பெருக்காறு அடிச் சுடுமா போலே துக்கமும் அபரிச்சின்னமாய் இருக்கும் –
ஆங்கே-அத்தசையிலே
அக உயிர்-பிராண ஸ்தான மான ஹ்ருதயம்
அகம் அகம் தோறும் உள் புக்கு-ஹ்ருதயத்தில் உண்டான அவகாசம் தோறும்–முன்புள்ள சம்ச்லேஷ விஸ்லேஷங்களாலே ஹிருதயம் புடை பட்டு இ றே இருப்பது -அவ்வவகாசகங்களின் உள்ளே சென்று புக்கு —
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ– ஆச்ரயத்தின் அளவன்றிக்கே அபி நிவேசம் பெருகி வாரா நின்றது –சம்ச்லேஷ ஸூ கம் புக்க இடம் எங்கும் ஆற்றாமை யாய்த்து -அணு பரிமாணமாக ஆத்மாவால் பொறுக்கும் அளவன்று ஆசை -ஸூ கமும் துக்கமும் ஸ்வரூபேணா வஸ்திதியும்-என்று மூன்று –ஸ்வரூபேணா வஸ்திதியில் நிற்கிறது இல்லை –
அந்தோ -இது உனக்கு-உபதேசிக்க வேண்டுவதே —-கலவியில் இருவரும் கூடக் கலந்து பிரிவால் ஆற்றாமை உனக்கு உபதேச கம்யமாவதே-கலவிக்கு இருவராய் -நோவு ஒரு தலைக்கே யாவதே -இனி மேல் செய்ய அடுத்து என் என்ன –
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–-போக்கு -போக்குகளானவை -பசு வந்தன -என்னுமா போலே வீவ -தவிர்வனவாக வேணும் -அது வேண்டுகிறது என் என்ன
-மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்-போகில் மேன்மேல் என பிரிவுண்டாம் -பிரிவை என்று செய்யுள் பாடாய் பிரிவால் என்றபடி -உன்னைப் பிரிகை யுண்டாம் -இனி -முன்புத்தை பிரிவுகளுக்கு ஜீவித்து இருந்தேன் ஆகிலும் இனி ஜீவித்து இருக்க மாட்டேன் –

———————————————————————-

நீ உபேக்ஷித்து இருக்க இடைப் பெண்களான நாங்களே ஸ்நேஹித்து இருக்கிற இவ்வொரு தலைக் காமம் நசிக்க வேணும் -என்கிறாள் –

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3-

வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு–பசு மேய்க்கை ஸ்வ தர்மம் ஆகையாலே அதுக்காக போக்கைத் தவிரலாமோ என்ன -உன் போக்கிலே நான் முடிவன்-ஸ்த்ரீ வதம் பலிக்க வரும் தர்மம் தர்மம் அல்ல காண்-இது உனக்கு முடிவாகிற பணி எங்கனே என்ன -வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்-உன் போக்கை நினைத்து வெவ்விதாக நெடு மூச்செறிந்து -அத்தாலே ஹிருதயம் உலர்ந்து -விரஹ அக்னியாலே வேவா நின்றது –நான் போனால் வ்ருத்த கீர்த்தனத்தாலே தரித்தாலோ என்ன –
யாவரும் துணை இல்லை -நீ போனால் -உதவக் கடவ தோழியரும் துணை யல்லர்-குயில் முதலான பதார்த்தங்கள் எல்லாம் பிரதிகூலமாம் -துணையான உன் சந்நிதியில் -எல்லாரும் துணையாம் –நீ போனால் ஒரு துணையும் இல்லை –
யான் இருந்து -அவ் வவசானத்திலும் நூறே பிராயமாய் இருப்பன்–வி லக்ஷண விஷயம் ஆகையாலே முடியவும் ஒட்டாது -தரிக்கவும் ஒட்டாது -நசையாலே முடியவும் ஒண்ணாது -ஆற்றாமை தரிக்கவும் ஒட்டாது –
உன்-அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்–இருந்தால் ஜீவிக்கும் ஜீவனமும் பெறேன்-ஸ்ரமஹரமான வடிவைக் கொண்டு என் முன்னே சஞ்சரிக்கக் காணேன் -உன்னைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியாயோ -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று இருக்க வேண்டாவோ -காமினி யாகையாலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் இழியாள் இ றே -வடிவை இ றே ஆசைப் படுவது -/ ஆட்டம் -நடையாட்டம் /இது எல்லாம் ஒரு பகல் அளவே என்ன –
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்–நீ அகன்றால் போவது அன்று ஒரு பகல் -நீ பிரிகையாலே ஒரு பகலாவது போகிறதில்லை -முப்பது நாழிகை சென்றால் ஒரு க்ஷணமும் குறைந்து காட்டுகிறது இல்லை -உனக்குப் போலே என்று இருந்தாயோ எனக்கும் -காலத்தினுடைய குறைவும் நிறைவும் விஷய அதீனமாய் இ றே இருப்பது -கலவியில் கல்பம் க்ஷணமாய் -வ்யதிரேகத்தில் ஒரு க்ஷணம் கல்பமாய் இ றே இருப்பது –பொரு கயல் கண்ணினை -வியசனத்தாலே அலமந்து பொருகிற கயல் போலே இருக்கிற கண்களும் / நீரும் நில்லா–நீர் மாறுகிறது இல்லை -கண்ணீர் என்னால் தகையப் போகிறதில்லை / நீரும் நில்லா-உன்னைத் தகையிலும் என்னால் அத்தை தகையப் போகிறது இல்லை –பின்னை செய்ய அடுத்து என் -என்ன –
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்-பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–இவ்வாய்க் குலத்திலே இடைச்சியோமாய் பிறந்த இத் தண்ணியோமான எங்கள் தனிமை —சாவது -நசிப்பது -அதாவது -முடிந்து பிழைக்க வேணும் என்கை –தனிமை தானே சாவது -எங்களுக்கு தனிமை தானே இ றே மரணம் ஆவது -தனிமை என்றும் விநாசம் என்றும் இரண்டில்லை என்றுமாம் -நாங்கள் ஜீவிக்கவுமாம் -தவிரவுமாம் -இந்த ஒருதலைக் காமம் நசிக்க வேணும் –

————————————————————————–

இவன் போகிறான் என்று இப்பிராட்டி நோவு படப் பூக்கவாறே -உன்னைப் பிரிய சம்பாவனை யுண்டோ -என்று இப்புடைகளிலே  மற்றும் சில சவிநயமாக சில வார்த்தைகளை அருளிச் செய்ய –இவை இ றே என்னை மாய்கின்றன -அழிக்கின்றன –என்கிறாள் –

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4-

தொழுத்தையோம் தனிமையும் –பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் திரண்ட திரளில் படுகிற தனிமை இ றே -தொழுத்தையோம்-என்றும் -அடிச்சியாம் என்றும் -தங்கள் தோல்வியைச் சொல்லுகிறார்கள் –
துணை புரிந்தார்-துயரமும் நினைகிலை –துணை பிரிந்தார் என்று உன்னைப் பிரிந்தார் என்றபடி -துணை என்றால் த்விஷ்டமாய் என்று காண் இருப்பது -என்னும் ஆச்சான் -அவனே துணை –அல்லாதார் எல்லாம் கழுத்துக் கட்டி -தொழுத்தையோம் தனிமையும் அறிகிறிலை–துணை பிரிந்தார் துயரமும் அறிகிறிலை –பிரிகிறோம் நாங்கள் என்றும் அறிகிறிலை –பிரிகிறது உன்னை என்றும் அறிகிறிலை —
கோவிந்தா–பசுக்களையும் இடையரையும் ரக்ஷிக்க வன்றோ கோவிந்த அபிஷேகம் பண்ணிற்று —
நின்-தொழுத்தனில் பசுக்களையே விரும்பி–உனக்கு ரஷ்யம் இரண்டானால் ஒரு தலையை விரும்ப வேண்டுகிறது என் -உன் தொழுவிலே வளைத்து வைத்த பசுக்களையோ விரும்பலாவது -உன் கைக்குள் அகப்பட்டாரை விரும்பலாகாதோ –பிரிந்தால் வரும் ஆற்றாமை அறியாதார் வேணுமோ ரஷிக்கைக்கு –பசுக்களையே விரும்பி –-இவர்களை அணைத்து கொண்டு இருக்கும் திசையிலும் நினைவு அங்கேயாய் -கண்ணி என்பது பசு என்பதாகா நிற்கும் –மித்யா பரி ரம்பணமே யாய்த்து உள்ளது -அமுதனார் -பசுவின் காலிலே முட்பாய்ந்தால் இடையன் தலை காண் சீக் கொள்ளுமது என்பர் -உடம்பில் முட் பாய்ந்தால் துக்க அனுபவம் ஆத்மாவது இ றே –
துறந்து -அவற்றை விரும்பி –தங்களை சந்நியசித்தான் என்று இருக்கிறார்கள் –
எம்மை இட்டு -அசேதன பதார்த்தங்களை பொகடுமா போலே உஎண்களைப் பொகட்டு
அவை மேய்க்கப் போதி–கூட இருக்கும் போதும் அவற்றை ஸ்மரிக்கும் -அவற்றின் பின் போனால் நம்மை நினைப்பதும் செய்யான் -அவற்றினுடைய ரக்ஷணத்திலே ஆயாசம் உண்டு -எங்களுடைய ரக்ஷணத்துக்கு சந்நிதியே அமையும் –
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்--நாம் போகை யாவது என் -போனால் தான் உங்களை மறப்பது உண்டோ -என் ஆற்றாமை உங்களுக்கு உண்டோ -மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்ய வேண்டுகையாலே பசு மேய்க்கப் போகிறோம் அத்தனை அன்றோ -என்று சில நீச பாஷணத்தைப் பண்ணினான் -இவை கிடாய் உன் மறத்தை எங்கள் பக்கல் வர ஒட்டாதவை -பக்வமாய் வி லக்ஷணமான அம்ருதத்தினுடைய இனிய சாற்று வெள்ளம் போலே போக்யமாய் இருக்கிற உன்னுடைய பணி மொழி யுண்டு –சொல்லுகிற வார்த்தை என்னுதல் –கலவியில் ஒரு வகையான வாக் அம்ருதத்தை சொல்லுதல் –
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்குஅழுத்த நின் செங்கனி வாயின்-–அம்ருதம் நஞ்சு ஆம்படியான பாபத்தைப் பண்ணினேன் -பிரிவை நினைத்து பிரியேன் என்னுமது விஷ சமம் இ றே –ஹிருதய அவகாசம் தோறும் பிரிக்க ஒண்ணாத படி அழுத்த -உன்னுடைய சிவந்த கனி போலே இருக்கிற வாயிலே –
கள்வப்-பணி மொழி-எழுதிக் கொள்ளுகிற தாழ்ந்த பேச்சுக்கள் -பிரிவை நினைத்து சொல்லுகிற வார்த்தை யாகையாலே நெஞ்சை அழிக்கக் கடவதாய் இன்றே இருப்பது / கள்வம்-நினைவு ஒன்றும் செயல் ஒன்றுமாய் இருக்கை -/ நினைதொறும் –தரிக்கலாமோ -என்று நினைக்கப் புகும் –அது தான் பாதகமாம் -பின்னையும் விட மாட்டாள் -இப்படி யுருவச் செல்லா நிற்கை -/ ஆவி வேமால்–-தனக்கு ஆஸ்ரயமான பிராணனானது வேவா நின்றது -க்ஷணிக பதார்த்தம் போலே உத்பத்தியும் விநாசமுமாய் செல்லா நிற்கை -அக்னி ஆஸ்ரயாசியாய் இறே இருப்பது –

————————————————————————-

நான் உன்னுடைய சந்நிதியில் வர்த்தியா நிற்க நீ இப்படி படுகிறது என் -என்று எம்பெருமான் இப்பிராட்டிக்கு அருளிச் செய்ய -இப்பிராட்டியும் -நீ பசு மேய்க்கப் போகக் கடவையான பின்பு -நீயும் போனாய் -நீ போனால் நலியக் கடவ ஸந்த்யை தொடக்கமான பதார்த்தங்களாலே  நலிவு படுகிற என்னை – ஆஸ்வசிப்பித்து  அருள வேணும் -என்கிறாள் -/

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்பகல் நிரை மேய்க்கிய போய –பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே –உன்னைப் பிரியாமைக்கு சொல்லுகிற வார்த்தை அல்ல -உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்-இது அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற வார்த்தை யாகையாலே மெய் –நான் போனேனோ என்ன -/ பகல் நிரை மேய்க்கிய போய -பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய் –
கண்ணா-என்று சம்போதித்து -அவன் தனக்கே -நீ போனாய் -என்கிறாள் இ றே -/ மேய்க்கிய -மேய்க்க —
பிணியவிழ்மல்லிகை வாடை-நீ போனால் நலியக் கடவ பதார்த்தங்கள் நலிகையாலே -போனமை நிச்சிதம் என்கிறாள் -மல்லிகை கமழ் தென்றல் ஆகாராந்தரத்தாலே நலியா நின்றது -கட்டவிழ்கிற மல்லிகையினுடைய மணத்தை வாடையானது –தூவப்--தூவா நின்றது –ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது குளிர் காற்றாய் வந்து நலியா நின்றது / தூவ -தன் மேல் வெக்காயம் தட்டாமே கடக்க நின்று வீசா நின்றது
பெரு மத மாலையும் வந்தன்றாலோ—பத்மகேசரே ஸம்ஸ்ருஷ்ட -மத்த கஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன்னோடே விட்டுக் கொண்டே பெரிய கிளர்த்தியோடே ஸந்த்யையும் வந்தது -இவளை முடிக்க வேணும் என்று ஸந்த்யையானது கூட்டுத் தேடிக் கொண்டு வாரா நின்றது -/ வந்தன்றாலோ—வந்தால் பரிஹரிக்க ஒண்ணாது -அர்ஜுனனனைக் குறித்து பகதத்தன் விட்ட சக்திக்கு மார்வை ஏற்றால் போலே -நடுவே புகுந்து -நோக்காய்–
சந்நிஹிதனாய் இருந்த என்னை நீ செய்யச் சொல்லுகிறது என்ன என் –
மணி மிகு மார்வினின் முல்லைப் போது-என் வன முலை கமழ்வித்–ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெறும்படியான மார்வு என்னுதல் -திரு மார்வு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்தில் புகரே யாம் படி இருக்கும் என்னுதல் -கலவியில் கழற்ற ஒண்ணாத படி இ றே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது -ஸ்த்ரீக்கு ஸ்தனம் போலே ஸ்ரீ கௌஸ்துபம் புருஷோத்தம சிஹ்னம் இ றே -அம் மார்வில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையைப் பரிமளிதமாக்கி-ஸ்ரீ கௌஸ்துபத்தோடு தோளில் மாலையோடு வாசி அற போக உபகாரணமாய் இருக்கிற படி -தோளில் முல்லை மாலையின் பரிமளத்தை முலைக்கு ஆக்க வேணும் என்கையாலே கலவியை அக்ராமயமாகச் சொல்லுகிறது –
துன் வாயமுதம் தந்து--கலவியில் உன்மஸ்தக ரசமான அளவில் தடுமாற்றத்துக்கு பரிஹாரமான தாழ்ந்த பேச்சுக்களைச் சொல்லுதல் -/ வாக் அம்ருதத்தை சொல்லுதல் /பேச்சு என்றே யாய்த்து சொல்லிப் போருவது —உன் போக்கு எனக்கு அநபிமதம் – அத்தைத் தவிர் -என்று சொல்லப்புக்கு -அது ஒண்ணாத படி -நா நீர் வருகிறது இல்லை -அதுக்கு பரிஹாரமாக உன் கையை என் தலை மேலே வை கிடாய் -என்கிறாள் –
அணி மிகு தாமரைக் கையை யந்தோ-ஆபரண பிரசுரமாய் -அது தான் மிகையாம் படி தனக்குத் தானே ஆபரணமான கையை -/ அந்தோ -சேர்ந்து குளிர்ந்து விடாயார்க்கு சமைத்து வைத்த தண்ணீரை வார்க்கச் சொல்ல வேண்டுவதே -என் ஆற்றாமையை நான் உனக்கு அறிவிக்க வேண்டும்படி யாவதே –
அடிச்சியோம் தலை மிசை யணியாய்—கலவியில் தோற்ற தோல்வியால் சொல்கிறாள் -எங்கள் சிரஸ் தோதத்துக்கு பரிகாரமாக உன் கையை வையாய் -வேணுமாகில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கோள் என்ன -எங்கள் பேற்றுக்கு நாங்கள் யத்னம் பண்ணுமவர்களோ –நாங்கள் நீ விரும்பி மேல் விழப் பெருமவர்கள் அன்றோ / அணியாய்-ஆபரணங்களுக்கு அவன் கை போலே யாய்த்து இவர்கள் தலைக்கு அவன் கை –ஆற்றாமை மிக்க அளவிலும் -அவனாலே பெற இருக்குமவர்கள் இ றே –நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்னக் கடவது இ றே-

——————————————————————–

போன போன இடங்கள் எல்லாம் உனக்கு அபிமதைகளான பெண்கள் அநேகர் உளர் -உனக்கு ஒரு குறை இல்லை–நாங்கள் உன்னைப் பிரிந்து தரிக்க மாட்டுகிறிலோம் – உன் போக்கானது எங்களுக்கு அஸஹ்யம் -என்கிறாள் –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6-

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்–ஆழி அம் கண்ணா ––கண்ணாலே குளிர நோக்க வேணும் -தலையிலே கையை வைக்கவும் வேணும் -என்கிறாள் -உனக்குத் தோற்றாரை–ஐயோ -என்று குளிர நோக்கி -ஈராக் கையால் தடவ வேண்டாவோ -/ ஆழி அம் கண்ணா ––கடல் போலே ஸ்ரமஹரமாய்–தர்ச நியாமான கண் –/
தலை மிசை நீ அணியாய்—என்கிற அதன் அருகே யாகையாலே –ஆழி அம் கண்ணா–என்கிற சம்போதானத்துக்கு -குளிர நோக்கி அருள வேணும் -என்று கருத்து -நான் போகிறேனாகக் கொண்டோ நீங்கள் படுகிறது -இது உங்களைக் குறித்து நான் சொல்லும் வார்த்தை அன்றோ -எனக்குப் போக்கு உண்டோ -போனால் விஷயாந்தரமும் உண்டோ -என்ன –
உன் கோலப் பாதம்-பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்-பலர் –அதாகில் உன் திருவடிகளையே பற்றி வர்த்திப்பாரும் அநேகர் இல்லையோ –உனக்குப் போன இடம் எங்கும் பெரிய திரு நாள் அன்றோ –
நடுவு -போகிற கார்யம் ஒழிய நடுவே / அரியையரும்–தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர்கள் —/ பலர்--ஒருவர் இருவரோ -ஷோடச ஸ்த்ரீ சஹஸ்ராணி –அன்றோ –
அது நிற்க–அது கிடக் கிடாய் –ஆனைக் கூட்டத்துக்கு கதவிட்டு உம்மை மயக்கப் போகிறோமோ – எம் பெண்மை ஆற்றோம்–எங்களுடைய ஸ்த்ரீத்வம் கொண்டு ஆற்ற மாட்டோம் என்கை –ஜீவிக்க மாட்டு கிறிலோம்-என்கை -ஸ்த்ரீத்வம் ஸ்வரூபம் ஆனால் வருந்தித் தரிக்க வேண்டாவோ என்ன –
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா–எங்களைப் பார்க்க மாட்டாயோ -ஜீவிப்பார்க்கு உள்ள லக்ஷணம் உண்டாய் இருந்ததோ -கூர்த்துப் பெருத்த கண்கள் -நீர் மாறுகிறது இல்லை -ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரம் படி இது ஒரு கூர்மையே போக்யதையில் பரப்பு போக்தாக்கள் அளவன்றிக்கே இருப்பதே -என்று நீ வாய் வெருவும் கண்கள் படுகிற பாடு பாராய் –நீரும் நில்லா -உன்னைத் தகையிலும் கண்ணா நீர் தகையப் போகிறது இல்லை –
மனமும் நில்லா-நெஞ்சில்-தைர்யத்தாலே கண்ண நீரைத் தகைவோம் -என்ன ஒண்ணாத படி மனசில் தைரியமும் போய்த்து
எமக்கு -பிரிவிலும் நெஞ்சு நெகிழாது ஒழிகைக்கு நீ யன்றோ நாங்கள் –
அது தன்னாலே-மனஸ் சிதிலம் ஆகையால்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு-உன்னுடைய பசு நிரை மேய்க்கப் போக்காகிறது எங்கள் வெடிப்பு -வெடிப்பு ஆவது என் என்ன -வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–எங்கள் ஆத்மா நெருப்பில் இட்ட மெழுகு போலே சிதிலமாய் தஹியா நின்றது –

——————————————————–

நாங்கள் நோவுபட உன்னுடைய ஸூ குமாரமான திருவடிகள் நோவ-நீ பசு மேய்க்கப் போனால் அங்கே-அங்கே அஸூரர் வந்து கிட்டில் என்ன பிரமாதம் புகுரக் கடவது -என்கிறாள் –

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7-

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு-எங்கள் உபதேசம் கொண்டாகிலும் அறியாய் –எமது உயிர் -உனக்கு இல்லை என்னும் இடம் கண்டோம் இ றே
வெள் வளைமேகலை கழன்று வீழ-சங்க வளை–விரஹ கார்ஸயத்தால் வெள் வளைகளும் மேகலைகளும் கழன்று விழும்படியாகவும் -பிறர் அறியாமைக்காக பல காலும் எடுத்து விடுவதாய் -பேணுவதானாலும் அவை நிராஸ்ரயமாய் நில்லா இ றே –தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்-அழகிய தாமரைப் போலே இருக்கிற கண்கள் சோகாஸ்ரு விழும் படி யாகவும் -ஆனந்தஸ்ருவுக்கு யோக்கியமான கண்களை சோகாஸ் ருவுக்கு இலக்காகப் புகுகிறாயே -சம்ச்லேஷ தசையில் ஆனந்தாஸ்ருவைக் கண்டு தாமரையில் முத்துப் பட்டால் போலே -இது ஒரு கண் அழகே என்று கொண்டாடும் நாயக சமாதியாலே தன கண் அழகைச் சொல்லுகிறாள் இ றே
துணை முலை பயந்து- என தோள்கள் வாட–நீ சேர்த்தி அழகு கொண்டாடும் முலை விவர்ணமாய்-என் தோள்கள் ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடும் படியாகவும் –
மா மணி வண்ணா –முன்பு அவன் இழவைச் சொன்னாள்-இப்போது தன் இழவைச் சொல்லுகிறாள் -பெரு விலையனான நீல மணி போன்ற வடிவை யுடையவன் -இவ்வடிவைக் கொண்டே போகப் புகுகிறது –
உன் செங்கமல வண்ண-மென் மலரடி நோவ–விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றத்துக்கு தாமரையை ஒப்பாகச் சொல்லும் -ஸுகுமார்யத்துக்கு சொல்லலாவது இல்லை –
நீ போய்-புக்க இடத்திலே ஊர்ப் பூசல் விளைக்கும் நீ போகக் கடவையோ – குணாதிகனான சக்கரவர்த்தி திரு மகனாய் வழி கொடு வழி போகிறாய் அன்றே –போகத் தவிராதானால் -அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று முன்னே போய் நான் வழி பண்ணினால் அன்றோ போவது –
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று -எங்களை போல் அன்றியே பசுக்களை விரும்பி –/ உகந்தவை –நீ அவற்றுக்கு உகந்து கொண்டு மேய்க்கிற இடத்தில் -நீ அந்நிய பரனான அத்தசையிலே -அச்சித்திரத்திலே –
உன்னோடு-அசுரர்கள் தலைப் பெய்யில்-உன்னோடே துஷ் பிரக்ருதிகள் கிட்டில் -கரு முகை மாலையை நெருப்பு கிட்டினால் போலே –
எவன் கொல் ஆங்கே–அங்கு என்னாய் விளையும் என்ற படி -நாம் புக்க இடத்தில் வெற்றி அல்லது உண்டோ என்ன -ஹதோவா ப்ராப்ச்யஸே சுவர்க்கம் -என்று சொல்லுகிற படியே யுத்தத்தில் ஜய அஜயங்கள் வியவஸ்த்திதாமாய் இருக்குமோ -அங்குப் பிறக்கும் ப்ரமாதத்தை தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே என்னாய் விளையும் என்கிறார் –

——————————————————————-

நீ பசு மேய்க்கப் போனால் என்ன பிரமாதம் புகுகிறதோ என்று அஞ்சா நின்றேன் -உன்னை விஸ்லேஷிக்கவும் ஷமை ஆகிறிலன் -ஆனபின்பு பசு மேய்க்கையை வியாஜ்யமாகக் கொண்டு உன்னுடைய ஸுந்தர்யத்தாலே உனக்கு அபிமதைகளாய் இருப்பாரை நினைத்து போகிறாய் ஆகில் வசீகரித்து -அவர்களும் நீயும் கூட என் கண் வட்டத்தில் உலாவித் திரிய வேணும் -என்கிறாள் –

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆளும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-10-3-8-

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று-யதா சங்கல்பம் நீ வெற்றியோடு மீண்டாலும் -அதுக்கு முன்னே நான் தறைப் படுவன் -நான் உனக்கு வேண்டாவோ -என்கிறாள் –
ஆழும் என்னார் உயிர் -அழுந்தும் -அதுக்கு நம்மால் செய்யலாவது என் -என்ன –ஆன் பின் போகல்-பசுக்கள் பின்னே போகாதே கொள்–ஜாதி உசிதமான தர்மத்தை விடப் போமோ -அவ்வளவும் தரித்து இருக்கும் அத்தனை அன்றோ -என்ன –
கசிகையும் வேட்கையும் உள் கலந்து-கலவியும் நலியும் என் கை கழியேல்–பிரிவில் தரிக்கலாம் படியோ நீ கலவியில் பரிமாறிற்று என்கிறாள் -அபிமத விஷயத்தோடு இருக்கச் செய்தே-சந்த்யா வந்தனம் பண்ண நினைப்பார் யுண்டோ -ஸ்வ ஜனத்தை விட்டோ ஸ்வ ஜனத்தை ரஷிப்பது -/ கசிகையும் – ஸ்நேஹமும் – / வேட்கையும் -மேன்மேலும் உன்னோட்டை கலவியில் யுண்டான அபி நிவேசமும் — அருகே இருக்க பிரிந்தால் பிறக்கும் அலமாப்பு யுண்டாம் படி இ றே அபி நிவேசமும் / கலவியும் -கலக்கும் போது தடுமாறாகப் பரிமாறும் பரிமாற்றமும் / உள் கலந்து நலியும் -என்னுடைய ஹ்ருதயத்தில் ஸ்ம்ருதமாய்ப் பாதிக்கும் /-அதுக்கு நம்மால் பரிஹாரம் என் என்ன –
என் கை கழியேல்--நான் அணைத்த கைக்கு உள்ளே இருக்கப் பார் -இவர்கள் சொல்லுவது கேட்க்கைக்காக ஏக தார விரதனோ நான் -என்ன –
உனக்கு அபிமதைகள் ஆனாரோடு கலக்க வேண்டா என்கிறேன் அல்லேன்–அவர்களோடே என் முன்னே சஞ்சரியாய் -என்ன –
அவர்களை அழைத்து தருவார் வேண்டாவோ என்ன -உனக்கு குறை யுண்டோ -தூது செய் கண்கள் இருக்க -என்கிறாள் –
வசி செய் உன் தாமரைக் கண்ணும்-இனிப் பொருந்தோம் என்று பெண்கள் நெஞ்சில் பிறந்த மறம் எல்லாம் தீரும்படி வசீகரிக்க வல்ல கண்ணும் –
வாயும்-கண்ணாலே நினைத்ததை ஆவிஷ் கரிக்கிற வாயும் –
கைகளும்-அந்நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்ற அளவில் அனுவர்த்தித்து அணைக்கிற கைகளும்
பீதக வுடையும்-அவற்றுக்குத் தோற்று விழும் போது நடுவே தொகையும் திருப் பீதாம்பரமும் –பீதாம்பர தர ஸ்ரக்வீ –
காட்டி--உனக்கு அவர்களை அழைக்கைக்கு பணி யுண்டோ -வடிவைக் காட்ட அமையாதோ-
ஓசி செய் நுண்ணிடை–பண்டே தொட்டாரோடு தோஷமாம் படியான இடை –இதுக்கே மேலே கலவியால் துவண்ட இடையை யுடையவர்கள் –
இள வாய்ச்சியர்-உன்னோடே ஒத்த பருவத்தை யுடையவர்கள் -வடிவு அழகாலும் பருவத்தாலும் உன்னைத் துவக்க வல்லவர் எத்தனைவர் கிடக்கிறது –
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே-வடிவு அழகும் பருவமும் ஒழியவே நீ உகந்த நன்மையை யுடையவர்கள் -அவர்களோடு கூட என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்

—————————————————————–

உங்கள் ஸந்நிதியில் நான் வேறே சிலரோடு பரிமாறுகை உங்களுக்குத் பிரியமாகக் கூடுமோ -என்று அருளிச் செய்ய -எங்களோடு சம்ச்லேஷிப்பதில் காட்டிலும் நீ வேறே சிலரோடு சம்ச்லேஷித்து உன்னுடைய திரு உள்ளத்தில் இடர் கெடுகை-எங்களுக்கு மிகவும் இனிது -ஆனபின்பு சப்ரமாதமான தேசத்திலே பசுநிரை மேய்க்கப் போகாது ஒழிய வேணும் -என்கிறாள் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்-திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான வி லக்ஷணை களோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –
நாங்கள்-வியக்க இன்புறுதும்–புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –
எம் பெண்மை ஆற்றோம்-உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்--உனக்கு எழுத்து வாங்குகிறோம் -நீ பசு மேய்க்கப் போகாது ஒழிய வல்லையே -நீங்கள் இங்கனே நிர்பந்திக்க நான் போகா நின்றேனோ -ஸ்வ தர்மத்தைச் செய்யப் போனால் தான் வருவது என் என்ன –
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு-நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ–பல அஸூரர்கள் வேண்டின வடிவு கொண்டு மிகவும் சஞ்சரியா நிற்பார்கள் –வேண்டு -நீ உகக்கும் வடிவுகள் என்னுதல் / காம ரூபிகள் ஆகையால் நாழிகைக்கு ஈடான வடிவு என்னுதல் / கன்றாய் வருவாரும் விளாவாய் வருவாரும் ஆவார்கள் -ஸ்ரீ பிருந்தா வனத்தில் எழும் பூண்டுகளும் அஸூரா விஷ்டமாய் இ றே இருப்பது -/ கஞ்சன் ஏவ -தோற்றாலும் அவன் பக்கம் கொலை தப்பாது -என்று புகார் -மேல் விழுவார்கள் – மேல் விழுந்தாலும் வெற்றி யோடே அல்லது மீளுவுதுமோ-என்ன / அகப்படில் -யுத்தத்தில் ஜய அபஜய வியவஸ்த்தை யுண்டோ -அவர்கள் கையில் அகப்படில் —அவரோடும் நின்னொடு ஆங்கே–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ-அவர்களும் நீயுமான இடத்தில் -பொல்லாங்கு விளையும் -இப்படிச் சொல்லக் செய்தேயும் -தன் வீரத்தை நினைத்து -ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே பேசாது இருக்க –என் சொல் கொள் -அநாதாரியாதே நான் சொல்லுகிற வார்த்தையை புத்தி பண்ணாய் —அந்தோ-எங்களை அறியா விட்டால் உன்னையும் அறியாது ஒழிய வேணுமோ —

—————————————————————-

கம்ச பிரேரிதரான அ ஸூ ரர் சஞ்சரிக்கும் காட்டிலே நம்பி மூத்த பிரானையும் ஒழியவே தனியே திரியா என்று மிகவும் நோவு படா நின்றேன் என்கிறாள் –

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10-

அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–அதி சங்கை போக்கி -அர்த்தக்ரியா காரி யன்று -என்று இருக்க வேண்டா -நான் சொல்லுகிற வார்த்தையை பிரதிபத்தி பண்ணாய் –/ அந்தோ–ஹிதமே யாகிலும் நான் சொன்ன வார்த்தையாக அமையுமே நீ கேளாது ஒழிகைக்கு —
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ–ஜென்மமே தண்ணியர் –அநேகர் –முன்கை யுரவியர் –மூர்க்கனான கம்சன் பிரேரிக்கிறார் -இவர்கள் சஞ்சரிக்கிற காடு அன்றோ –-தவத்தவர் மறுக நின்று உழி தருவர்–என்னை இ றே விடலாவது -நீ நல்லவர்கள் கலங்கும் படி சஞ்சரியா நிற்பர்கள்-தபோ நிஷ்டரான ரிஷிகள் ஸ்வ ரக்ஷணத்துக்கு உன் கை பார்த்து இருக்குமவர்கள் -தபோ விக்நத்தாலே கலங்கும் படி சஞ்சரிப்பர்கள்–கர்ப்ப பூதா -என்றும் –ஏஹீ பஸ்ய சரீராணி –என்றும் இருப்பவர்கள் -அவர்களால் உனக்கு என் வருகிறதோ என்று கலங்க -என்றுமாம் –
தனிமையும் பெரிது உனக்கி ராமனையும்- உவத்திலை –ஏகதா து விநா ராமம் கிருஷ்ணே பிருந்தாவனம் யவ்–என்று நம்பி மூத்த பிரானை ஒழிய சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு —ராமனையும்- உவத்திலை -அவன் ஸந்நிதியில் தீம்பு செய்ய ஒண்ணாது -என்று அவனோடு நெஞ்சு பொருந்தி வர்த்திகிறிலை –-உவர்த்தலை –உவர்த்தலை யுடையை
உடன் திரிகிலையும் –நெஞ்சில் பொருத்தம் இல்லா விட்டால் -எதிரிகள் அஞ்சும் படி கூடத் திரிந்தால் ஆகாதோ —என்று என்று ஊடுற வென்னுடை யாவி வேமால்–உன்னை போக்கன்றே என்னை நலிகிறது -அவனை ஒழியத் திரிகிற இதுவே என் நெஞ்சை மாறுபாடு உருவச் சுடா நின்றது / ஊடுற–உள்ளுற–உங்களோடு இருக்கிற இருப்பைக் குலைத்து நீங்கக் கொண்டு போவேனோ என்ன
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி–பரம பதத்தில் இருப்பைக் குலைத்து அன்றோ பசு மேய்க்கப் போந்தது -அவ்விருப்பு குலைந்து வந்து இருந்ததும் இப்போது பொல்லாது என்று இருக்கிறாள் -அவ்விருப்பிலே இருந்தான் ஆகில் இப்போது வயிறு எரிய வேண்டா வி றே -நம் பேர் இழவு கொண்டு கார்யம் இல்லை –வஸ்து ஸூ ரஷிதமாய் இருக்கும் என்று இ றே இவர்கள் இருப்பது -பரம பதத்தில் இருப்பை விட்டு பசு மேய்க்கப் போகக் கடவ யுன்னை – எங்களை உபேக்ஷித்தாய் என்று இன்னாதாகப் புகுகிறோமோ -அவ்விருப்பிலும் பசு மேய்க்க என்றால் யுகப்புதி என்றுமாம் –
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–இது ஒரு ப்ரேம ஸ்வ பாவமே -என்று ஸ்மிதம் பண்ணினான் -அதிலே ஈடுபடுகிறார்கள் -அவ்விருப்புக் குலைந்து போந்தமை யுண்டு -உங்களை விட்டுப் போவேனோ –என்று ஸ்மிதம் பண்ண -ஒரு இருப்பைக் குலைந்து போரக் கடவையான பின்பு -எங்களையும் பிரிந்து போனாய் யல்லையோ -என்கிறாள் –

————————————————————

நிகமத்தில் ஆழ்வார் அருளிச் செய்த -ஆயிரம் திருவாய் மொழியிலும் -எம்பெருமானை -பசு நிரை மேய்க்க வேண்டா -என்று பிராட்டி நிஷேதித்த பாசுரமான இதுவும் -அல்லாதவற்றோடு  ஓக்க  ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு-அத் திருவடி திருவடி மேல் -தன் முறுவலாலே எங்களைத் தோற்பித்தால் போலே -தன் பருவத்தில் பிள்ளைகளையும் தோற்ப்பித்த சர்வ ஸ்வாமி யுடைய திருவடிகளிலே சொல்லிற்று -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணம் –என்னக் கடவது இ றே –
பொருநல்-சங்கணி துறைவன் வண்தென் குருகூர்-வண் சடகோபன் சொல்லாயிரத்துள்–இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை-அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்-அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன--அவனோட்டை பிரிவு பொறுக்க மாட்டாத படியால் -ஒரு பருவத்தில் இடைப் பெண்கள் அனுசந்தித்த -தொடையாய் -அவர்களில் ஒருத்தி பசு நிரை மேய்க்க வேண்டா -என்று உரைத்தாள் -எல்லாரும் திரளச் சொன்னால் அவன் செவிப்படாது என்னுமத்தாலே -நப்பின்னைப் பிராட்டியைப் போலே அவனுக்கு மறுக்க ஒண்ணாத தரம் யுடையாள் ஒருத்தியை வார்த்தை சொல்ல விட்டார்கள் -இப்படி யாகில் இ றே -அடிச்சியோம் -என்றும் –தொழுத்தையோம் -என்றும் -ஆழும் என்னாருயிர் -என்றும் -என் சொற் கொள் என்றும் -சொன்ன பன்மைகளும் ஒருமைகளும் -சேரக் கிடப்பது –
இவையும் பத்து அவற்றின் சார்வே-–கீழ்ச் சொன்ன திருவாய் மொழிகள் அருகே இதுவும் ஒரு திருவாய் மொழியே -என்றாய்த்து நிர்வகித்துப் போருவது –அங்கன் அன்றிக்கே கீளில் திருவாய் மொழிகளுக்குச் சொன்ன பலமே இதுக்கும் பலம் என்னுதல் –மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலையால் பலித்த பலமே இதுக்கும் பலம் என்னுதல் -அவர்களுக்கு அவன் போகாமல் மீண்டான் ஆகில் இவர்களுக்கும் அதுவே பலமாய் -அவனோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்–என்கிறார் –

————————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: