திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –10-2–

கீழில் திருவாய் மொழியிலே தமக்கு வழி கொடு போகைக்கு நல்ல துணையைப் பெற்ற ஆழ்வார்
-நமக்கு ப்ராப்ய தேசம் ஏதோ -என்று ஆராய்ந்து -சாம்சாரிக சகல துக்கங்களும் இன்றிக்கே
நிரதிசய போக்யமாய் -நித்ய ஸூரிகளுக்கும் கூட ஸ்ப்ருஹணீயமாய் -தமக்கு எல்லா அடிமையும் செய்கைக்கு
-யோக்யமாய் இருந்துள்ள திருவனந்த புரத்தை ப்ராப்ய தேசமாக அத்யவசித்து –
அங்கே போய் சர்வ சேஷ விருத்தியும் பண்ண வேணும் என்று அனுகூல ஜனங்களோடே கூடப் போகையில் உத்யோகிக்கிறார்-

———————————————————————

ப்ராப்யமான திருவனந்த புரத்துக்கு போகைக்கு பிரதிபந்தக கர்மங்கள் எல்லாம் போம் –நமக்கு இனிதாக -கேசவா -என்னும் இத்திரு நாமத்தை சொல்லிக் கொண்டு அங்கே போய்ப் புகுருவோம்  வாருங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் –

கெடும்  இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கேசவன் -கேசி ஹந்தா –
நாளும்-கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்--என்றும் கொடிய ப்ரவ்ருத்திகளைப் பண்ணி நலியக் கடவ யம படரும் கிட்ட மாட்டார் –
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்-தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே—படர் கொள் பாம்பணைப் பள்ளிக் கொள்வான் -என்று ஆசைப் பட்டாப் போலே ப்ரதி கூலர்க்கு வந்து அணுக ஒண்ணாத படி விஷத்தை யுடைய திருவனந்த ஆழ்வான் மேலே ஆதரித்து கண் வளர்ந்து அருளுகிறவனதாய் -ப்ராப்ய தேசம் -என்று தெரியும் படி மதுபானமத்தமான வண்டுகளாலே அலற்றவும் பட்டுத் தாப த்ரயத்தை போக்க வல்ல பொய்கைகளோடு கூடின வயலாலே அணைந்து இருந்துள்ள திருவனந்த புரத்தில் இச்சை பிறந்த இன்றே போய்ப் புகுவோம் –

——————————————————————

பிரதிபந்தகங்கள் போகைக்கு -ஒரு திரு நாமம் சொல்ல அமையும் -அது ஒன்றுமே ஆயிரம் பிரகாரத்தாலே ரக்ஷகமாம் -என்கிறார் –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்ப் புகுவுதி கோள் ஆகில் ஒரு நாளும் ஒரு துக்கமும் ஸ்பர்ஸியா/ குன்றோடு ஒத்த மாடங்களையும் -அவற்றின் அருகே பரஸ்பரம் சேர்ந்த -குருத்து முதலான வ்ருக்ஷங்களையும் -மன்றில் அலரா நின்றுள்ள பொழிலையும் யுடைய திருவனந்த புரமாகிற நகரத்திலே ஆச்சர்ய பூதனான எம்பெருமானுடைய திரு நாமம் – உள்ளுவார்க்கும் உம்பரூரே–ஆராய்வார்க்கு திரு வனந்த புரமே ப்ராப்ய பூமி –

———————————————————————-

பிரதிபந்தகங்கள் போகைக்கு இன்ன திரு நாமம் என்று இல்லை -ஆயிரத்தில் ஏதேனும் ஒன்றைச் சொல்ல அமையும் -என்கிறார் –

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

சர்வவித சேஷ விருத்தியும் -பெரிய திருவடியைக் கொள்ளுவதும் செய்து -ஜகத்துக்கு சர்வ வித ரக்ஷகனுமானவன் கண் வளர்ந்து அருளுகிற நிரதிசய போக்யமான திருவனந்த புரத்தை பரம ப்ராப்யம் என்று அங்கே புகுவுதி கோள் ஆகில் -துக்கங்களும் துக்க ஹேதுவான பாபங்களும் எல்லாம் போம் -ஒருவருக்கும் தெரியாத ரகசியத்தை வியக்தமாம் படி நாங்கள் சொன்னோம்-

————————————————————

ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம் –

பேசுமின்  கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

பேசுமின் கூசமின்றி-அயோக்யர் என்று கூசாதே திரு நாமத்தைச் சொல்லுங்கோள் / பெரிய நீரை யுடைய கடல் சூழ்ந்து நிரந்தரமான பரிமளத்தை யுடைய சோலையோடு கூடின வயலாலே அணியப்பட்ட திருவனந்த புரத்தை விரும்பி அங்கே கண் வளர்ந்து அருளுகிறவனை –

——————————————————————–

திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

புண்ணியம்  செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

ஸ்நேஹத்தைப் பண்ணி நல்ல புனலோடே கூடின மலர்களை ப்ரேம பரவசராய்க் கொண்டு திருவடிகளிலே பரிமாறி பணி மாறி – என் ஸ்வாமியுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் -அடிமைக்கு விரோதியான இஸ் சம்சாரத்தை அறுக்கும் / வேறு அயர்வறும் அமரர்கள் என்று சொல்லப் படுகிறவர்களும் செறிந்த புனலை யுடைய திருவனந்த யரத்தில் கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப்பொருள் நிச்சிதம் -இது வியக்தமாகச் சொன்னோம் –

——————————————————————

அயர்வறும் அமரர்களும் வந்து -அடிமை செய்கிறது திருவனந்த புரத்திலே யாதலால் திரு நாட்டில் காட்டில் பரம ப்ராப்யம் திருவனந்த புரம்-நாமும் இங்கே அடிமை செய்ய வேணும் -என்கிறார் –

அமரராய்த்  திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

தேவர்களாய்த்  திரிகிற ப்ரஹ்மாதிகளுக்கும்  காரண பூதனானவன் -கண் வளர்ந்து அருளுகிற திருவனந்த புரத்திலே அயர்வறும் அமரர்களுக்கு பிரதானனான  ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் அடிமை செய்யும் இடத்தில் எடுத்துக் கை நீட்டுவார் அயர்வறும் அமரர்கள் -பந்துக்களாய் யுள்ள நீங்கள்  சொல்லக் கேளுங்கோள் –தேவ சேனாதிபதியாய் பெரு மிடுக்கனான ஸூ ப்ரஹ்மணியனுக்கும் கூட  ஜனகனானவனுக்கு பாதகத்தால் வந்த துக்கத்தைப் போக்கின கிருஷ்ணனை நாமும் போய்க் கிட்ட வேணும்-

———————————————————————

சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளுகிற திருவனந்த புரத்திலே சென்று அடிமை செய்ய -இதுக்குமுன்பு எல்லாம் -அடிமை செய்யப் பெற்றிலோம் என்னும் துக்கம் இப்போதே போம் -என்கிறார் –

துடைத்த  கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

லோகத்தையும் தேவர்களையும் மற்றும் உண்டான ஆத்மாக்களையும்  உண்டாக்கின ஆஸ்ரிதற்கு பவ்யனான சர்வேஸ்வரனுமாய் -திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுவதும் செய்தவனுடைய -ஜல ஸம்ருத்தியாலே களித்து-மடைத் தலையிலே வாளை பாயா நின்றுள்ள வயலாலே அலங்க்ருதமான திருவனந்த புரத்திலே திரு வாசலிலே திரு வலகு  திருப் பணி செய்யப் பெற்றால் –

—————————————————————

திருவனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள் -என்று அனுகூலரை  அழைக்கிறார் –

கடுவினை  களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

கடு வினை -மிக்க வினை –வி லக்ஷணமான திருவனந்த புரத்தை-லோகத்தை எல்லாம் தன அழகாலே-பிச்சேற்றக் கடவனான காமனுக்கு ஜனகனாய் -அவனிலும் முக்தனான கிருஷ்ணன் -ஸ்தானமாகக் கொண்டது என்பர் -தன்னுடைய ஸ்பர்ச ஸூகத்தாலே விரித்த பணங்களை யுடைய திருவனந்த ஆழ்வான் மேலே நிரந்தரமாக பள்ளி கொண்டு அருளுகிறவனுடைய திருவடிகளை காண நடவுங்கோள்-எனக்கு பந்துக்களாய் யுள்ள நீங்கள் ஐஸ் ஸம்ருத்தியை அறியாதே  இழக்கல் ஆகாது என்று சொன்னோம் –

————————————————————————-

நாளேல் அறியேன் –என்றும் -மரணமானாம் -என்றும் சொன்ன காலம் அணித்தாய்த்து –ஈண்டு எனத் திருவனந்த புரத்திலே புக்கு அடிமை செய்ய -அடிமைக்கு விரோதியான கர்மங்கள் எல்லாம் -வசிக்கும் -என்கிறார் –

நாமும்  உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

நன்குடைத்து–மிக்கு யுடைத்து – / வாமனனுடைய திருவடிகளுக்கு என்று நல்ல ஸமாராதன உபகரணங்களை சம்பாதித்து அவனை ஆஸ்ரயிக்க-அடிமைக்கு பிரதி பந்தகங்கள் எல்லாம் தானே வசிக்கும் –

—————————————————————

மாய்ந்து  அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

திருவனந்த  புரத்தில் எம்பெருமானுக்கு அடிமை செய்யுமவர்களுடைய மஹாத்ம்யம் பேச நிலம் அன்று -என்கிறார் / ஏய்ந்த பொன் மதிள்– சேர்ந்து இருந்துள்ள பொன் மதிள்

—————————————————————

நிகமத்தில் – இத்திருவாய் மொழி வல்லார் -திரு நாட்டில் உள்ளார்க்கு போக்யர் ஆவார் -என்கிறார் –

அந்தமில்  புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

முடிவில்லாத புகழை யுடையனாய்த் திருவனந்த புரத்திலே சந்நிஹிதனான ஜகத் காரண பூத புருஷனை சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் –

————————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: