திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –10-1-

கீழே — நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -என்றார் -மரணமானால் -என்று ஈஸ்வரன் நாளிட்டுக் கொடுத்தான்-
-அவன் ஒன்றைச் சொன்னால்-அது கைப் பட்டது என்று மேலே போகலாம் படி இ றே இருப்பது-
-ஆகையால் காலாவதி பெற்றாராய் போக்கிலே ஒருப்பட்டார் போமிடத்து முகம் பழகின சரீரத்தை விட்டு–நெடுநாள் வாசனை பண்ணின பந்துக்களை விட்டுத் தான் தனியனாய் –
போகிற இடமும் முகம் அறியாத நிலமாய் -நெடுங்கை நீட்டுமாய் இருக்கிற படியையும் -போகைக்கு விக்நமாய்-தான் சூழ்த்துக் கொண்ட -அவித்யா கர்ம -வாசனா -ருசிகள் -ஆன சம்சார துரிதத்தையும் அனுசந்தித்து –
-இவ் விக்னங்கள் தட்டாத படி நெடும் தூரத்தை துர் பலரான நம்மால் போய் முடிக்கை அரிது –இனிப் போம் இடத்து -சர்வஞ்ஞனாய் சர்வசக்தியாய் இருப்பான் ஒருவன் வழித் துணையாக வேண்டி இருந்தது –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் –பரா ஸஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்ற வழி கொடு போக விரகு அறியுமவனுமாய் சக்தனுமாய் –
பதிம் விஸ்வஸ்ய என்றபடி ப்ராப்தனுமாய் -மாதா பிதா பிராதா -என்கிறபடியே சர்வ வித பந்துவுமாய் –
மயர்வற மதி நலம் அருளினான் என்கிறபடியே பரம தயாவானுமாய் -ஸ்ரமஹரமான வடிவையும் யுடையவனுமாய் –
சர்வ ரக்ஷணத்திலும் தீஷிதனுமாய் இருக்கிற காள மேகத்தை திரு மோகூரிலே கண்டு –
-அவன் பக்கலிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி வழித் துணையாகப் பற்றுகிறார் –
அவன் கொடு போகும் இடத்தில் வடிவு அழகை அனுபவித்துக் கொண்டு பின்னே போகலாம் படி இறே இருப்பது –
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் -என்றும் -உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -என்றும்-அத்தசையில் விரோதிகள் பீதராய் ஒளிக்கும் படி இ றே இருப்பது –

——————————————————–

பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான காள மேகத்தை ஒழிய  வேறு நமக்கு ரக்ஷகர் இல்லை என்கிறார் –

தாள  தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

தாள தாமரைத் –-தாளையுடைய தாமரை -மலையைச் சுமந்தால் போலே பூவின் பெருமையைப் பொறுக்க வல்ல தாளையுடைய தாமரை -சென்டரின் நன்மையாலே உரத்த தாளையுடைய தாமரை -உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -என்ன கடவது இ றே –
தட மணி வயல் -பூவாலே அலங்கரிக்கப் பட்ட தடாகங்களை யுடைய வயல்
திரு மோகூர்-ஊரில் போக்யதை வயலின் நலத்திலே காணும் இத்தனை –
நாளும் மேவி -நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி
இவ்வூரில் விடிவு தோறும் அவனுக்கு ஸூ ப்ரபாதாச மே நிசா என்னும் படியாய்த்து இருப்பது –
நன்கமர்ந்து நின்று -அநந்ய பிரயோஜனனாய் சேர்ந்து நின்று -அவ்வூரில் வாஸம் ஒன்றுக்காக அன்றிக்கே -ஸ்வயம் பிரயோஜனமாய் இருக்கை –
அசுரரைத் தகர்க்கும்-தோளும்-நான்குடைச்—அசூரரை அழியச் செய்யுமா போலே என் விரோதிகளை துணிக்க வல்ல தோள்களை யுடையவன் –
கஜம் வா வீஷ்ய ஸிம்ஹம் வா வ்யாக்ரம் வா வனமாஸ்ரிதா -நா ஹார யதி சந்த்ராஸம் பாஹு ராமஸ்ய சமஸ்ரிதா-என்னக் கடவது இ றே —விடு காதாய் கிடந்தாலும் தோடிட்ட காது என்று தெரியுமா போலே -தோள்களைக் கண்ட போதே விரோதி நிரசன சீலம் என்று தோற்றி இருக்கும் என்கை –
சுரி குழல்–இவன் பின்னே வழியே போமிடத்து திருக் குழலை ஒரு கால் பேண நெடு நாள் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும் படி யாய்த்து இருப்பது -கேசவ கிலேச நாசன –
கமலக் கண் கனி வாய்-பந்தம் எல்லாம் தோற்றும் படியான நோக்கும் ஸ்மிதமும் இருக்கிற படி –சம்சாரத்திலே பொய்யருடைய நோக்கிலும் ஸ்மிதத்திலும் பட்ட நோவு எல்லாம் ஆறும் படி இ றே இருப்பது -கச்சதாம் தூர  மத்வானம் த்ருஷ்ணா மூர்ச்சித சேதஸாம் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன அம்ருதம் –
காளமேகத்தை – -வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இ றே இருப்பது -சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

—————————————————-

ஆஸ்ரிதர்க்கு ஸ்ரமஹரமான ஒப்பனையால் வந்த போக்யதையும் -அவர்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான திரு நாமங்களையும் யுடையனானவனுடைய ஸ்ரமஹரமான திருவடிகள் அல்லது கால தத்வம் உள்ளதனையும் வேறு புகலுடையோம் அல்லோம் -என்கிறார் –

இலம்  கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் —- எம்மைக்கும் –மற்று ஓன்று—இலம் கதி–இவ்வார்த்தை ஒரு ஜன்மத்துக்கு அன்றிக்கே எல்லா ஜென்மத்துக்கும் இதுவே வார்த்தை -என்கை –/ எம்மைக்கும்–எப்பிறப்புக்கும் -எல்லாக் காலங்களிலும் என்றபடி –
ஈன் தண் துழாயின்–அலம் கலம் கண்ணி–தாரையையும் குளிர்த்தியையும் யுடைய திருத் துழாயின் ஒளியை யுடைத்தான அழகிய மலை —அலங்கல் –ஒளி என்னுதல் / அசைவு என்னுதல் –பின்னே போகா நின்றால் அடி மாறி இடும் போது -வளையம் அசைந்து வருகிற படி என்னுதல் /-திருமேனியில் சேருகையாலே வந்த புகரைச் சொல்லுதல்
ஆயிரம் பேருடை யம்மான்-ஒப்பனைக்கு தோற்று ஏத்துகைக்கு அசங்க்யாயதமான திரு நாமங்களை யுடையவன் –அம்மான் -அழகு இன்றிக்கே ஒழிந்தாலும் ஏத்துகைக்கு ப்ராப்தமான விஷயம் –
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -என்னுமவர்கள்
நலம் கழல் -ஆஸ்ரிதருடைய குண தோஷ நிரூபணம் பண்ணாத திருவடிகள் -அவர்கள் ப்ரேமாந்தராய் -வத்யதாம் -என்றாலும் -நத்யஜேயம் -என்னுமவன் –
அவனடி நிழல் தடம் அன்றி யாமே–அவனுடைய பாதச் சாயை யாகிற பொய்கையை ஒழிய —யாம் -இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும்–அவன்தானே வத்யதாம் என்றாலும் புறம்பு புகலற்று இருக்கிற படி –

——————————————————————

சர்வ ரக்ஷண சீலனான  சர்வேஸ்வரன் வர்த்திக்கிற திரு மோகூரை நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் கெடச் சென்று ப்ராபிப்போம்–இது ஹிதம் -என்கிறார் –

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-

அன்றி  யாம் ஒரு புகலிடம் இலம் -வேறு நாங்கள் ஒரு புகலுடையோம் அல்லோம் -என்றாய்த்து ப்ரஹ்மாதிகள் வார்த்தை -அநந்ய பிரயோஜனர் சொல்லும் வார்த்தையை -சொல்லுவார்கள் யாய்த்து இவன் முகம் காட்டுகைக்காக -/ என்று என்று அலற்றி-–நிரந்தமாக கூப்பிட்டு —
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட-வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்–தங்கள் பிரயோஜனம் பெற்றால் அல்லது மீள மாட்டாதே நின்று ப்ரஹ்ம ருத்ரர்களோடே தேவர்கள் ஆஸ்ரயிக்க -அவர்கள் பிரதி பக்ஷத்தை வென்று -இந்த சகல லோகங்களையும் ரக்ஷித்து -அதுவே யாத்ரையாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
நன்று நாம் இனி நணுகுதும் –இன்று நாம் –நன்று நணுகுதும் –அவன் சர்வ ரக்ஷகனான பின்பு -ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் -நன்றாகக் கூடுவோம் -ஸ்ரீ மதுரையை காலயவன ஜராசந்தாதிகள்-கிட்டினால் போல் அன்றியே –ப்ரஹ்மாதிகள் ஷீராப்தியை கிட்டினால் போல் அன்றியே –அநந்ய பிரயோஜனராகக் கிட்டுவோம் – / நமது இடர் கெடவே—வழித் துணை தேடி க்லேசிக்கிற நம்முடைய துக்கம் கெட —

————————————————————–

நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போக –திரு மோகூரிலே வந்து ஸூ லபனான  எம்பெருமானை ஆஸ்ரயிப்போம் -வாருங்கோள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார் –

இடர் கெட  வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி–எம்மை இடர் கெட போந்து அளியாய் என்றாய்த்து ஈஸ்வர அபிமானிகளுக்கும் சாப அனுக்ரஹ சமர்த்தர்க்கும் வார்த்தை -வேத அபஹாராதி துக்கங்கள் போக -/ எம்மை –முன்பு ஈஸ்வரோஹம் என்று இருந்தவர்கள் -ஆபத்து மிக்கவாறே -ஏஹி பஸ்ய சரீராணி -என்னுமா போலே தங்கள் வெறுமையை முன்னிடும் அத்தனை -/ போந்து அளியாய் -அவதரித்து ரக்ஷிக்க வேணும் என்பார்கள் –
என்று என்று ஏத்தி—-தொடர –தங்கள் ஆபத்தாலே இடைவிடாதே புகழ்ந்து வடிம்பிட்டு ஆஸ்ரயிக்கைக்காக –
சுடர் கொள் சோதியைத்-ஆபத்தாலே யாகிலும் நம்பாடே வரப் பெற்றோமே -என்று உஜ்ஜவலனாய் இருக்குமவனை -என்னுதல் -விலக்ஷணமான அழகை யுடையவன் ஆகையால் -ஸ்வயம் பிரயோஜனம் ஆனவனை கிடீர் துக்க நிவர்த்தனாக நினைத்தது -என்னுதல் –
தேவரும் முனிவரும் தொடர--தேவதைகளும் சாப அனுக்ரஹ சமர்த்தரான ரிஷிகளும் –ஈஸ்வரோஹம் என்று இருப்பாரும் -ஐஸ்வர்ய அர்த்தமாக யத்னம் பண்ணுவாரும் -என்றுமாம் –
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்--ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ருதனானவனைச் சொல்லுகிறது -அநந்ய பிரயோஜனரை அடிமை கொள்ளுகிறவன் கிடீர் ப்ரயோஜனாந்தர பரருக்கு முகம் கொடுக்கைக்காக ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளுகிறவன் -/ படர் கொள் பாம்பு –ஸ்வ ஸ்பர்சத்தாலே வளரா நின்றுள்ள திருவனந்த ஆழ்வான் -/ பள்ளி கொள்வான் திரு மோகூர்--தேவாதிகளுக்கு ஸூ லபன் ஆனால் போலே -நமக்கும் ஸூ லபன் ஆகைக்காக திரு மோகூரிலே நின்று அருளினான் –
இடர் கெட வடி பரவுதும் -நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படி அவனுடைய திருவடிகளை ஆஸ்ரயிப்போம்
தொண்டீர் வம்மினே–என்னோடு சகோத்ரிகளாய் இருப்பார் திரளுங்கோள்–

—————————————————————

அவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார் –

தொண்டீர்  வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

தொண்டீர் வம்மின்-பகவத் விஷயத்தில் சாபலரானவர் வாருங்கோள்
நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்-நிரவதிக தேஜோ ரூபியாய் த்ரிவித காரணமும் தானே யானவன் –நம் -என்று பிராமண பிரசித்தியை சொல்லுதல் –தன் வடிவு அழகையும் ஜனகனான தன்னோட்டை பிராப்தியையும் நமக்கு அறிவித்தவன் என்னுதல் -அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்-அவன் தனக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –சம்சாரத்துக்கு ஆபரணமான தேசம் என்னுதல் –
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய-கொண்ட கோயிலை –எட்டுத் திக்கிலும் ஈன்ற கரும்போடு பெரும் செந்நெல் விளையும் படி பரிக்ரஹித்த கோயில் –கரும்புக்கு நிழல் செய்தால் போலே இருக்கும் செந்நெல் -அவன் சந்நிதியில் வூரும் அகால பலிநோ வ்ருஷ-என்கிறபோது யாய்த்து என்கை – / வலம் செய்து- ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ணி
இங்கு ஆடுதும் கூத்தே–பந்தம் இது –வடிவு அழகு அது -ஆனபின்பு ஆடாதே இருக்கப் போமோ -அங்குப் போனால் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கேயே களிப்போம்-

———————————————————————

திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார் –

கூத்தன்  கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

கூத்தன் -நடக்கப் புக்கால்-வல்லார் ஆடினால் போலே இருக்கை -புத்ர ப்ராதரி கச்சதி -வழி த் துணையாய் -அவன் முன்னே போக பின்னே போம் இடத்து நடை அழகு தானே பிரயோஜனமாய் இருக்கை -ஆடல் பாடல் அவை மாறினார் தாமே -என்னக் கடவது இ றே -இவன் திருக் குழல் வாய் வைத்த போது அப்சரஸ் ஸூ க்கள் குழல் ஓசையைக் கேட்டு பாட்டுத் தவிர்ந்தார்கள்–இவன் நடை கண்டு ஆடல் தவிர்ந்தார்கள் –
கோவலன்-ஆச்ரயித்தாரை ரக்ஷிக்கும் இடத்து தாழ வந்து அவதரித்து ரக்ஷிக்குமவன் -பிசாசுக்கு மோக்ஷ ப்ரதனாய் வழி நடத்தியவன் இ றே –ஆஸ்ரிதர் சிறுமை பாராதவன் இ றே –
குதற்று வல்லசுரர்கள் கூற்றம்–மிறுக்கைப் பண்ணும் பிரபலரான அஸூரர்களுக்கு மிருத்யு வானவன் –குதற்றுதல் -நெறி தவிர்தல்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்–இன்று ஆஸ்ரயிக்கும் நமக்கும் வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிற நித்ய ஆஸ்ரிதர்க்கும் ஓக்க இனியன் ஆனவன் –
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்-அழகிதான நீர் நிலங்களும் -வளவிதான வயலும் -சூழ்ந்த திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் -அஹம் ஸ் மராமி மத்பக்தம் நயம்மி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –
தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை /மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

————————————————————-

சர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ  நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார் –

மற்று  இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-

மற்று இலம் அரண்–இவனை ஒழிய வேறு ரக்ஷகர் இல்லை
வான் பெரும் பாழ் தனி முதலா–கார்ய ஜாதம் அழிந்தாலும் அழியாமையாலே வலியதாய் -அபரிச்சின்னமாய் -போக மோக்ஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூல பிரகிருதி தொடக்கமாக
சுற்றும் நீர் படைத்து -அப ஏவ சசர்ஜ்ஜா தவ் -என்கிறபடியே ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
அதன் வழித் தொல் முனி முதலா-அவ் வழியாலே தேவாதிகளைப் பற்ற பழையனாய் மனன சீலனான சதுர் முகன் தொடக்கமாக –
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண
நம் துயர் கெடும் கடிதே-–வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

—————————————————————–

திரு மோகூரிலே நின்று அருளின ஆண் பிள்ளையான தசரதாத்மஜனை ஆஸ்ரயிக்க நம்முடைய சகல துக்கங்கள் எல்லாம் போம் என்கிறார்

துயர்  கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

துயர் கெடும் கடிது -நாம் அபேக்ஷியாது இருக்க துக்கமானது சடக்கென தாமே போகும்
அடைந்து வந்து –வந்து அடைந்து –வந்து கிட்டி
அடியவர் தொழுமின்-வழித் துணை இல்லை என்று கிலேசப்படுகிற நீங்கள் ஆஸ்ரயிங்கோள்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்–உயர்ந்த சோலைகளாலும் அழகிய தடாகங்களாலும் அலங்க்ருதமான ஒளியை யுடைய திரு மோகூர் – ஒளி -சமுதாய சோபை –சோலையைக் கண்டால் வடிவை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் /தடாகங்களைக் கண்டால் வடிவில் ஸ்ரம ஹரத்தையை நினைக்கலாய் இருக்கும் –
பெயர்கள் ஆயிரம் உடைய-ஈஸ்வரனுக்கு ரஷணத்தாலே ஆயிரம் திரு நாமம் யுண்டாய் இருக்குமா போலே -இவர்களும் பாதகத்தவத்தாலே அநேகம் பெயரை யுடையராய் இருப்பார்கள் -யஜ்ஜ சத்ரு ப்ரஹ்ம சத்ரு என்னுமா போலே
வல்லரக்கர் புக்கு அழுந்த-பெரு மிடுக்கரான அஸூரர்கள் புக்கு அழுந்தும் படி
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–சக்கரவர்த்தி பெற்ற நீல மணி போலே இருக்கிற தடாகத்தினை -அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மருவாபீ வாரிவத் சர்வ போக்யம் -என்கிற படி அனுகூலர்களுக்கு ரக்ஷகமாய் -காகுத்ஸத்த பாதால முகே புதன்ச -என்கிறபடியே உகவாதற்கு நாசகமாய் இ றே இருப்பது -மயா த்வம் சம நுஜ்ஜஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் -என்று பக்ஷியைப் போக விட்டார் இ றே –

————————————————————-

நமக்கு அரணான திரு மோகூரை நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று ஸ்வ லாபத்தை பேசுகிறார் –

மணித்  தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

மணித் தடத்து அடி-தெளிந்த தொரு தடாகம் போலே யாய்த்து திருவடிகள் இருப்பது –ஸ்ரமஹரமான திருவடிகள் -என்கை
மலர்க் கண்கள்-அந்த தடாகம் பூத்தால் போலே யாய்த்து திருக் கண்கள் இருப்பது
பவளச் செவ்வாய்-பவளம் போலே சிவந்த திரு வதரத்தை யுடையவனாய்
அணிக் கொள் நால் தடம் தோள் –தனக்குத் தானே ஆபரணமாய் பெரிய நாலு திருத் தோள்களை யுடைய தெய்வம் -அவன் வழி த் துணையாம் போது -ஸ்ரமஹரமான வடிவும் தன் உகப்பு தோற்றின ஸ்மித வீக்ஷணமும் யுடையவன் -ஒரு கல் மதிளுக்கு உள்ளே போமா போலே அச்சம் கெடும் படி யாய்த்து கொடு போவது –
தெய்வம் -விஜிகீஷை யோடு யாய்த்து கொடு போவது -இவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்னும் அதி சங்கையாலே ஆசிலே வைத்த கையும் தானுமாய் போகை
அசுரரை என்றும்-துணிக்கும் வல்லரட்டன் -அஸூரா வர்க்கத்தை என்றும் துணித்து ஒடுக்கும் பெரு மிடுக்கன்
உறைபொழில் திரு மோகூர்-நித்ய வாஸம் பண்ணுகிற பொழிலை யுடைய திரு மோகூர் -ஸிம்ஹம் வர்த்திக்கும் முழைஞ்சு -என்னுமா போலே
நணித்து-கிட்டிற்று -ப்ரத்யாஸன்னம்
நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–நமக்கு ரக்ஷகமான தேசத்தை ரக்ஷக அபேக்ஷை யுடைய நாம் கிட்டப் பெற்றோம் –

———————————————————–

சர்வ ரக்ஷகனாய் இருக்கிறவன் எழுந்து அருளி இருக்கிற திரு மோகூரை ஆதரித்து நினைத்து ஏத்துங்கோள் -நமக்கு பந்துக்களாய் யுள்ளார் என்கிறார் –

நாமடைந்த  நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று -நமக்கு நாம் ரக்ஷகம் என்று அடைந்த நல்ல அரண் என்று / நல்லமரர்-தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று இருக்கையாலே நல்லமரர் என்கிறார் -இது இ றே அஸூரர்களில் வியாவ்ருத்தி –
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்-பர ஹிம்சையே யாத்ரையாய் இருக்கிற அ ஸூ ரர்களுக்கு அஞ்சி வந்து சரணம் புகுந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
ரக்ஷண ரூபமான வடிவை கொண்டு புறப்பட்டு ரக்ஷிக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர் / காம ரூபம் -நாஸ்யார்த்த தா நூம் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தா நூம் ததா -என்கிற படியே
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–வூரின் பெயரையே வாயாலே சொல்லி –அத்தை அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஏத்துங்கோள் நம்முடையவர்கள் –

——————————————————————

நிகமத்தில் திரு மோகூருக்கு கொடுத்த இத்திருவாய் மொழியை விரும்புவாருக்கு / அப்யஸிக்க வல்லார்க்கு சகல துக்கங்களும் போம் என்கிறார் –

ஏத்துமின்  நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

ஏத்துமின்  நமர்காள் என்று தான் குடமாடு-கூத்தனை –நம் சேஷ்டிதங்களை உகப்பார் எல்லாரும் கண்டு -வாய் படைத்த பிரயோஜனம் பெறும் படி ஏத்துங்கோள் என்று தானே சொல்லி குடகு கூத்தாடினவனை –
குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்--ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்திகள்-அவன் குடக் கூத்தினை அனுசந்தித்து இவர் வாசிகமான அடிமையில் அதிகரித்தார்
வாய்த்த வாயிரத்துள் இவை-சர்வேஸ்வரனுக்கு நேர்பட்ட -ஆயிரத்துக்குள்ளே இவை
வண் திரு மோகூர்க்கு-ஈத்த பத்திவை-விலக்ஷணமான திரு மோகூர்க்கு கொடுத்த பத்து -ரத்ன ஹாரீச பார்த்திப -என்னுமா போலே இப்பத்தின் நன்மையாலே இவை திருமோகூர்க்காய் இருந்தது என்று கொடுத்தார்
இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–இப்பத்தை அப்யஸிக்க வல்லார்க்கு -சரீர அவசானத்திலே -வழித் துணை இல்லை -என்று கிலேசப் பட வேண்டாத படி காளமேகம் வழித் துணையாம் –

——————————————————————–

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: