திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–4–

கீழே அவனுடைய ஸுசீல்யத்தையும் அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும் அனுசந்திக்கை யாலே
அப்போதே பெற வேணும் என்று சாபலம் பிறந்து -பெறாமையாலே முடியானே யில் போலே தாமும் விடாய்த்து தம்முடைய
கரண க்ரமங்களும் சேதன சமாதியாலே விடாய்த்து மிகவும் அவசன்னரானார் –
இவருடைய அவசானம் தான் அவன் க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்ன ஒண்ணாத படியாய் இருக்கையாலே
அவன் தூணிலே வந்து தோற்றி ஹிரண்யனால் வந்த நலிவை
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு தீர்த்து அருளினால் போலேயும் தம் ஆர்த்தி தீர வந்து முகம் காட்டின படியை அனுசந்தித்து
ஹ்ருஷ்டராய் -காணப் பெற்றேன் என்கிற அளவு அன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்
என்று தாம் பெற்ற பேற்றைப் பேசி ஹ்ருஷ்டராகிறார் –

—————————————————————

ஸ்ரீ யபதியான எம்பெருமானைக் காண வேணும் என்று தம்முடைய சஷூர் இந்த்ரியத்துக்கு பிறந்த சாபல்யத்தை அருளிச் செய்கிறார் –

மையார்  கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

மையார் கருங்கண்ணி–ஸ்வா பாவிகமான கறுப்பை யுடைத்தாய் அஞ்ஞனத்தாலே அலங்க்ருதமான திருக் கண்களை யுடையவள் -ஒன்றால் சமாதானம் பண்ண வேண்டாத படி அழகு ஸ்வாபாவகமாய் இருக்கையாலே கண்ணுக்கு அஞ்சனம் மங்களமார்த்தம் இ றே –
கமல மலர்மேல்-செய்யாள் –ஸுகுமார்யத்தாலே வந்த போக்யதையை யுடையவள் –
திரு மார்வினில் சேர் -மேகத்திலே மின் சேர்ந்தால் போல் யாயிற்று சேர்த்தியால் வந்த அழகு -அபூ அடி கொதித்துக் கால் வாங்கி திரு மார்விலே ஏற வேண்டும் படி யாயிற்று -அவளுக்கு திரு மார்வில் சேர்த்தி இருப்பது –
திருமாலே-அவன் பக்கல் அத்யந்தம் வ்யாமுக்தனானவனே –அவள் திரு மார்வில் பண்ணும் வ்யாமோஹத்தை இவன் அவயவங்கள் தோறும் பண்ணும் என்கை -இப்படி அந்நியோன்யம் சேர்ந்த சேர்த்தியிலே இ றே கைங்கர்யம் பண்ண ஆசைப் பட்டது -இச்சேர்த்தியைப் பற்ற இ றே அவள் முன்னாக பற்ற ஆசைப்படுவார் ஆசைப்படுவது –நகச்சின் நபராத்யதி -என்னும் அவளும் -என்னடியார் அது செய்யார் -என்னுமவனுமான சேர்த்தி இ றே -சம்சாரிகளுக்கு தஞ்சம் –
வெய்யார் சுடர் ஆழி -பிரதிபக்ஷத்தின் மேலே வெம்மை மிக்கு இருந்துள்ள தேஜஸ்ஸை யுடைய திரு வாழி
சுரி சங்கம் -ஒரு காரியம் செய்ய வேண்டாதே சந்நிவேசம் தானே தர்ச நீயமாய் இருக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் –
ஏந்தும்-கையா -கையும் திவ்யாயுதமான சேர்த்தி அழகை யாயிற்று இவர் காண வேண்டி இருப்பது –
உனைக்-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை
காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இ றே சத்ருசம் -நித்ய ஸூ ரிகளும் சதா தர்சனம் இ றே பண்ணுவது –
என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –

—————————————————————-

தமக்கும் தம்முடைய ஹ்ருதயத்துக்கு உண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார் –

கண்ணே  உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

கண்ணே -எனக்கு த்ருஷ்ட்டி யானவனே –
உன்னைக் காணக் கருதி -நிரதிசய போக்யனான உன்னைக் காண ஆசைப்பட்டு -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே -என்கிறார் -சஷூச் ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயணா -என்னக் கடவது இ றே -அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இ றே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இ றே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –
என்நெஞ்சம்-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்ன வேண்டும்படியான நெஞ்சம் –
எண்ணே — கொண்ட சிந்தையதாய்–எண் கொண்ட மநோ ரதத்தை யுடைத்தாய் -பஹு மநோ ரதங்களைப் பண்ணி -காண வேணும் -காணாதே பட்ட துக்கத்தை போக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்று –
நின்று இயம்பும்-நிரந்தரமாக கூப்பிடா நிற்கும் -வாக் விருத்தியும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும் –
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை-தம்முடைய கூப்பீட்டைச் சொல்லுகிறார் -ப்ரஹ்மாதிகளுக்கும் சனகாதிகளுக்கும் என்றும் கிட்ட அரிய உன்னை –
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -பெறாது ஒழி யேன் -பெற்று முடிவன்-என்று நான் கூப்பிடா நின்றேன் -ப்ரஹ்மாதிகளுக்கு துர்லபனாய் இருக்கிற உன்னை பெற்று முடிவன் என்கிறது யென் கொண்டு என்னில்-தம் தாம் தலையில் சாதனம் கிடந்தவர்களுக்கு விளம்ப ஹேது வும் யுண்டு -முதலிலே ந்யஸ்த பரனாய் இருக்கிற எனக்கு விளம்ப ஹேது இல்லை –
நண்ணாது ஒழியேன்-அவனைக் கிட்டாது ஒழி யில் நான் தரியேன் என்றுமாம் -இது ஆய்த்தான் நிர்வாஹம் –கண்ணே -என்ற இடம் -அவனே உபாயம் -என்கிறது –
உன்னைக் காணக் கருதி -என்ற இடம் உபேயமும் அவனே -என்கிறது –
எண்ணே கொண்ட சிந்தையதாய் -என்ற இடம் சுவீகருத்த உபாயருடைய யாத்திரை சொல்லுகிறது –
நண்ணாது ஒழியேன்-என்ற இடம் மஹா விச்வாஸம் சொல்லுகிறது –

——————————————————————

இப்படிக்கு கூப்பிடச் செய் தேயும் அவன் வரக் காணாமையாலே ஆர்த்தியே முதலாக ரஷிக்கக் கடவ உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ என்கிறார் –

அழைக்கின்ற  அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்–குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்--அயோக்யனாய் ஷூ த்ரனாய் இருந்து வைத்து ஆர்த்தியாலே கூப்பிடா நின்றேன் -ருசியாலே தவிர மாட்டார் -கிட்டினால் அத்தலைக்கு அவத்யமாம் படியாய் யாயிற்று தம்முடைய நிலை -அது தன்னை உடையவனுக்கு தன் அபிமதத்தால் ருசியை தெரிவிப்பத்து வாலாலே யாயிற்று -அது தான் கூழை யானால் தெரிவிக்கை அரிதாம் இ றே -அது போலே என் மனஸ் ஸூ ஆனது நோவு படா நின்றது -இத்தால் தமக்கு ஓடுகிற கிலேசம் பேச்சுக்கு நிலம் அன்று என்கை -நிஸ்ஸாதனாய் வைத்து ஆசைப்படா நின்றேன் என்றுமாம் –
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்-இந்திரன் வர்ஷிக்கிற தசையில் மலையை எடுத்து இடையாரையும் பசுக்களையும் ஆர்த்தியே முதலாக ரஷித்தவனே
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–வரையாதே ரஷித்த-அந்த மஹா  குணம் எனக்கு உதவாமையாலே பிழைக்கப் புகா நின்றாய் என்று பேகணியா நின்றேன்-என்று ஆளவந்தார் நிர்வாஹம் –
அந்த மஹா குணத்துக்கு புறம்பு ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –

—————————————————————–

நீர் இங்கனம் பயப்படுகிறது என் என்ன -தேவாதிகளுக்கு அரியையாகையாலே எனக்கும் அரியையாகிறாயோ -என்று என் நெஞ்சு கலங்கா நின்றது என்கிறார் –

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

உறுவது இது என்று-சீரியது அடிமை செய்யுமது என்று
உனக்கு ஆட்பட்டு -உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இ றே
நின் கண்-பெறுவது எது கொல் என்று -உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ -என்கை –
பேதையேன் நெஞ்சம்-மறுகல் செய்யும்-நான் அபிசந்தி பண்ணின படியே பலிக்கும் என்னும் அறிவு இன்றிக்கே இருக்கும் என் நெஞ்சு கலங்கா நின்றது -இங்கனம் கலங்குகைக்கு அடி என் என்னில் –
வானவர் தானவர்க்கு என்றும்-அறிவது அரிய அரியாய அம்மானே–தேவா நாம் தானவா நாஞ்ச -என்று சம்பந்தம் ஒத்து இருக்க தேவ தானவர்களுக்கும் என்றும் ஓக்க அறிய ஒண்ணாத நரஸிம்ஹமான ஸர்வேஸ்வரனே -ஆஸ்ரித ஸுலப்யத்தோடு சர்வேஸ்வரத்தோடு வாசி அற அவர்களுக்கு அறிய அரியவன் என்கை -இத்தால் ப்ரஹ்லாதனுக்கு எளிமையான கோடியிலே ஆகிறேனோ -தேவதைகளுக்கு அரியை யாகிற கோடியிலே ஆகிறேனோ என்று அஞ்சா நின்றேன் -தேவாசுர விபாகம் பண்ணின சமனந்தரம் நாம் எக்கோடியிலே ஆகிறோமோ என்று அர்ஜுனன் அஞ்சினால் போலே அஞ்சா நின்றேன் –

————————————————————–

நாம் எளியோமான கோடியிலே அன்றோ -நீர் உமக்கு பேறு கை புகுந்து இருக்க  இங்கனம் பதறுகிறது என் என்ன என் நெஞ்சம் காண்கையில் பதறுகிறது என்கிறார் –

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

அரியாய அம்மானை-சர்வாதிகனானவனை
அமரர் பிரானைப்-நித்ய ஸூ ரிகளுக்கு தன்னை உபகரித்துக் கொண்டு இருக்குமவனை
பெரியானைப் -அவர்களுக்கு பரிச்சேதிக்க ஒண்ணாதவனை
பிரமனை முன் படைத்தானை-ஜகத் ஸ்ருஷ்டிக்காக ப்ரஹ்மாவை முதலிலே உண்டாக்கினவனை
அரியாய -என்று கீழோடே கூட்டுவது –
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற-–-ஆஸ்ரிதற்கு உதவுகை அன்றிக்கே தத் சம்ச்லேஷ ஏக ஸ் வ பாவனானவனை
வரி வாள் அரவு — வரியையும் வாளையும் யுடைய அரவு
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற கரியான் கழல் -வெளுத்த நிறத்தை யுடைய திருவனந்த ஆழ்வான் மேலே காளமேகம் சாய்ந்தால் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளுவது
காணக் கருதும் கருத்தே–காண்கையில் த்வரியா நின்றது என் மனஸ் ஸூ -படுக்கைக்கு பரபாகமான வடிவும் அதுக்கு பரபாகமான திருவடிகளும் -இத்தை யாயிற்று ஆசைப்படுகிறது –

—————————————————————–

தாம் காண ஆசைப்படும் அளவிலே எம்பெருமான் தம்முடைய திரு உள்ளத்திலே வந்து புகுந்து அருளினவாறே நெஞ்சு உகந்து அனுபவிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

கருத்தே  உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

கருத்தே உன்னைக் காண கருதி -எனக்கு மிடுக்கானவனே -உன்னைக் காண ஆசைப் பட்ட அளவிலே முகம் காட்டினாய் -இவ்விஷயத்தை லபிக்கைக்கு ருசியே அமையும் என்கை –கண்ணே உன்னைக் காணக் கருதி என்றார் கீழே -கருத்தே உன்னைக் காணக் கருதி -என்றார் இங்கே
என் நெஞ்சத்து-இருத்தாக இருத்தினேன் -மறுகல் செய்யும் -என்கிற நெஞ்சிலே பரம பதத்தில் இருக்குமா போலே இருத்தினேன் -பகவத் கந்த கதா ரஹிதமான நெஞ்சு இ றே இது
தேவர்கட்கு எல்லாம்-விருத்தா-நித்ய ஸூ ரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் ஆனவனே -தமிழர் கிழவன் என்றும் கிழத்தி என்றும் தலை மகனையும் தலை மகளையும் சொல்லுவார்கள்
விளங்கும் சுடர் சோதி உயரத்து-ஒருத்தா-மிக்க புகரை யுடைய தேஜஸ் ஸை வடிவாக யுடைத்தாய் சர்வ உத்க்ருஷ்டமான பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிற அத்விதீயனே
உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –சடக்கென முகம் காட்டின உன்னைக் கண்டு கலங்கின என் நெஞ்சம் உகந்தே அனுபவியா நின்றது –

———————————————————————

தூணிலே தோற்றி  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்து அருளினால் போலே தம்முடைய ஆர்த்தியை எம்பெருமான் தீர்த்து அருளின படியை அனுசந்தித்து ப்ரீதராய் அவனை ஏத்துகிறார் –

உகந்தே  யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

உகந்தே யுன்னை உள்ளும் -பிரிந்து கிலேசத்தோடே தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே ஏக ரூபமாக உன்னை அனுபவிக்கும் படி –
என்னுள்ளத்து -எண்ணே கொண்ட சிந்தை என்கிற மனசிலே
அகம்பால்-அகந்தான்-உள்ளுக்கும் உள்ளே -உள்ளூலாவி என்னுமா போலே கமர் பிளந்த இடம் எங்கும் மறு நனையும் படி
அமர்ந்தே-தன் பேறாக அத்யபிநிவேசத்தை பண்ணி
யிடங்கொண்ட-அவகாசம் உள்ள இடம் எங்கும் தானேயாம் படி நிறைந்த
வமலா– இவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பிரயோஜனத்தை கணிசித்து இன்றிக்கே -ஒரு ஹேதுவைப் பற்றியும் இன்றிக்கே -இருக்கை -எண்ணே கொண்ட சிந்தையாய் நின்றுஇயம்பும் -என்கிறதை சாதனமாக நினைத்து இருக்கிறிலர்
மிகுந்தானவன்-பிராதி கூல்யத்தில் ஓர் அளவில்லாதவன் –தன்னை இல்லை செய்கையை அன்றிக்கே தன்னுயிர் நிலையில் நலிந்தவன் -ஞாநீத் யாத்மைவ-என்ன கடவது இ றே
மார்வகலம் இரு கூறா-நகந்தாய்-அகன்ற மார்வானது இரண்டு கூறாம் படி பண்ண வல்ல நகத்தை யுடையவனே —நகத்தாய்-என்று வல்லொற்றை மெல்லொற்றாய்க் கிடக்கிறது என்று கிடக்கிறது
நரசிங்கமதாய வுருவே–சதைகரூபமாக வடிவை யுடையவன் தன்னை இங்கனம் அழிய மாறுவதே -என்கிறார் -இத்தால் என் நெஞ்சு உகக்கும் படி தூணிலே வந்து தோற்றினால் போலே சடக்கென முகம் காட்டி என்னை அனுபவிப்பித்தான் என்கிறார் –

———————————————————–

எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார் –

உருவாகிய  ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்-விகித அநுஷ்டானங்களும் நிஷித்த பரிஹாரங்களுமாக-உபதேசிப்பாரும் கேட்பவருமாய் போருகையாலே ஆபாத ப்ரதீதியில் ஓன்று போலே இருக்கிற பாஹ்ய சமயங்களுக்கு எல்லாம் அவிஸால்யமான படியை யுடையனாய் நின்றான் –
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்–அருவாகிய வாதியைத்–பொரு என்று தடை -அவற்றால் மேலிட ஒண்ணாத படி நிற்கை -சகல பதார்த்தங்களும் அந்தராத்மாவாய் -நியாமாகதவத்தாலே பிரதானுமானவனை
தேவர்கட்கு எல்லாம்-கருவாகிய -ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –
கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை
கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இ றே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூ லபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

—————————————————————

தன்னை அனுபவிக்கவும் பெற்று அதுக்கும் மேலே  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாம் படி திருவாய் மொழி பாடவும் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

கண்டு  கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

கண்டு கொண்டு -நான் அழைப்பேனே-என்ற விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்று
என் கண்ணினை ஆரக் களித்து-காணக் கருதும் என் கண்ணே -என்கிற கண்களின் விடாய் கெட
என் கண்ணினை ஆரக்-கண்டு கொண்டு-கலியர் வயிறு நிரம்ப உண்டேன் -என்னுமா போலே
களித்து -மறுகின நெஞ்சு களிக்கும் படி
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்-இவ்வுகப்புக்கு இடைச் சுவரான ப்ராக்த்தன கர்மங்கள் ஆனவற்றை சவாசனமாகப் போக்கி -காண்பதற்கு முன்புள்ள துக்கத்தை சவாசனமாகப் போக்கி
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்-என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

——————————————————————-

எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தன் ஆனேன் என்கிறார் –

அடியான்  இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

அடியான் இவன் என்று -மேல் பண்ணப் புகு கிற உதார குணம் பிராப்தம் என்று தோற்றுகைக்காக –அடியான் -என்று ஒரு பேரை இட்டு யாயிற்று உபகரித்தது
எனக்கு ஆர் அருள் செய்யும்-நெடியானை -கொள்ளுகிற என்னளவு அன்றிக்கே தன்னளவில் உபகரித்த சர்வேஸ்வரனை
நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்-கொடியானைக் -ஸுர்ய வீர்யாதி குண பிரதையை யுடையனாய்-நிரந்தர பகவத் அனுபவத்தால் தர்ச நீயனுமான பெரிய திருவடியை கொடியாக யுடையவனை -ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவனை -பெரிய திருவடியை விஷயீ கரித்தால் போலே என்னை விஷயீ கரித்தவன் என்கை -இப்படி விஷயீ கரிக்கைக்கு என்ன நன்மை உண்டு என் என்னில்
கு ன்றாமல் உலகம் அளந்த-அடியானை அடைந்து –குணாகுண நிரூபணம் பண்ணாதே திரு உலகு அளந்து அருளினால் போலே நிர்ஹேதுகமாக என்கிறார் -தன் பெருமையையும் ஸுலப்யத்தையும் என்னை அனுபவிப்பித்தான் –
அடியேன் உய்ந்தவாறே-சேஷத்வமே ஹேதுவாக உஜ்ஜீவித்த படி என் -சேஷத்வ ஞானத்துக்கு இத்தனை பிரயோஜனம் உண்போ –

—————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி தன்னுடைய ரஸ்யதையாலே  அயர்வறும் அமரர்களுடைய ஹ்ருதயத்தை நோவு படுத்தும் என்கிறார் –

ஆறா  மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

ஒருநாளும் மாறாத மதத்தை யுடைய குவலயா பீடத்தை முறித்தால் போலே நம்முடைய துரிதத்தை போக்கினவனை -பிரதிபக்ஷம் போனவாறே சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வார் பாரத ராமாயணாதிகளில் கண்ட பார்வதி பேதம் போலே தரிப்பார்க்கு எளிதாம் படி நூறு நூறாக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி வானவர் தம் இந்த உயிர்க்கு ஏறானவனை தரும் என்றும் சொல்லுவார் –

————————————————————————-

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: