திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-3–

கீழில் திருவாய்மொழியில் -கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்று எம்பெருமானை பிரார்த்தித்த ஆழ்வாருக்கு -அவனும் –
நான் நாராயணன் அல்லனோ -நீர் அபேக்ஷித்த படி செய்கிறோம் -என்று தன்னுடைய நாராயணத்வத்தைக் காட்டி அருள –
அந்த நாராயணத்வ பிரகாரத்தை அனுசந்தித்து -அவனைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு காணப் பெறாமையாலே பல ஹீனராய்
ஏதேனும் ஒருபடி அவன் இருந்த இடத்திலே சென்றாகிலும் அவனுடைய சீலவத்தையின் மிகுதியாலே
அடிமை செய்ய விரகு இல்லை -என்று அவனுடைய ஸுசீல்யாதிசயத்தை ஓசி முடிக்கிறார் –

———————————————————

அவன் நாராயணன் அன்றோ -நம் அபேக்ஷிதம் செய்கை நிச்சிதம் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஓர்  ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்-பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய-இத்யாதி பிரகாரத்தாலே ஒரோ திரு நாமங்களே நிர்வசன பேதத்தால் அநேகம் படியால் எல்லா லோகங்களையும் ரக்ஷிக்கும் திருநாமங்கள் அநேகங்கள் உடையனாகையாலே வந்த ஒப்பில்லாத பெருமையை உடையான் –
கார் ஆயின காள நல் மேனியினன்-மேகம் போலே கறுத்த திருமேனியை யுடையான் -காராயுள்ள கறுத்து அழகிய திருமேனியை யுடையான் என்று ரூபகம் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே–பிரதான நாமத்தை யுடையவனே நமக்கு ரக்ஷகன்

—————————————————————-

கீழ்ச் சொன்ன நாராயண சப்தத்துக்கு அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அவனே  யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

முதல் அடைய ஏவகாரம் ஸஹாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது  / அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களும் அவன் இட்ட வழக்கு -/ அவனே மற்று எல்லாமும் -மற்றும் உண்டான சேதன அசேதனங்களும் எல்லாம் தத் ஆதீனமே –

————————————————————

வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

அறிந்தனவாய் இருக்கிற  துர்ஜ்ஜேயார்த்த ஸூசகமான வேதங்கள் சர்வேஸ்வரனை துர்ஜ்ஜேயன் என்று அறிந்த -மற்று அறிந்தாராய் இருக்கிற ரிஷிகளும் சம்சார துரித பேஷஜம்  என்று அறிந்தார்கள் –

—————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கும் கூட ஸ்ப்ருஹனீயனாய் இருந்து வைத்து  கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளி -என்னை அடிமை கொண்டு -விண்ணுலகம் தருவானாய் இருக்கிற சர்வேஸ்வரனை விடாதே கொள்-என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

மருந்தே  நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகன் ஆனவனே என்று அயர்வறும் அமரர்களுடைய சமூகங்கள் அக்ரமாகக் கூப்பிடும் படி அவர்களுக்கு தன்னை புஜிக்கக் கொடுத்தவனை / கருந்தேவன்--கறுத்த திரு  நிறத்தை யுடையனாய்க் கொண்டு தீப்யமானவன் ஆனவன் –

————————————————————–

நிரதிசய போக்யமான எம்பெருமானை விடாதே கிடீர் என்று திரியட்டும் திரு உள்ளத்தை ஆராதிசயத்தால் மிகவும் பிரார்த்தித்து ஆர்த்திக்கிறார் –

மனமே  யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

நெஞ்சே உன்னை என் ஆற்றாமையாலே பிரார்த்தித்து த்ருடமாகச் சொன்னேன் -இத்தை அவசியம் சோராது விடாதே ஒழிய வேணும் -செய்வது என் என்னில் -நிரதிசய போக்யனாய் தன்னோடு ஒப்பார் இன்றிக்கே இருக்கிறவனை ஆஸ்ரயீ –அர்த்தித்தது தான் என் என்னில் எம்பெருமானை ஆஸ்ரயிக்கை என்றுமாம் –

———————————————————

தாம் இப்படி அர்த்திக்கும் காட்டில் தம்முடைய திரு உள்ளம் எம்பெருமானுடைய சேஷ்டிதங்களை அனுசந்தித்து மிகவும் சிதிலமாகா நின்றது என்று ப்ரீதராகிறார்

அடைவதும்  அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

பெரிய பிராட்டியாருடைய மிகவும் அழகிதான திருத் தோளை சம்ச்லேஷிப்பதும் ஆஸ்ரித விரோதிகளான அசுரரை முடிக்கும் விரகுகளையே சிந்தியா நிற்பதுவும் ஆஸ்ரித அர்த்தமான மஹா ப்ரவ்ருத்தி பண்ணி அருளா நிற்பதுவும் –என்னுடைய ஹிருதயம் ஒருமைப்பட உடை  குலைப்படா நிற்பதுவும் ஏவம் வித சேஷ்டிதங்களை  யுடையவனுக்கே

—————————————————————

ஏவம் வித  சீல குணகனானவன் நிரந்தர வாஸம் பண்ணுகிற -ஒருவருக்கும் எட்ட ஒண்ணாத திரு நாட்டிலே சென்று காண வேணும் என்று ஆசைப்படா நின்றது என் நெஞ்சு -இதனுடைய  சாபலத்துக்கு நான் என் செய்ய என்கிறார் –

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

நரத்வ ஸிம்ஹத்வங்கள் பரஸ்பரம் ஸூ கடிதமாய் அத்யந்த வி லக்ஷணமான நரசிம்ஹமமாய் மிகவும் குரூரமான ஹிரண்யன் உடைய உடம்பை கூரிய உகி ராலே பிறந்தவன் நிரந்தர வாஸம் பண்ணுகிற பரமாகாசமான ஸ்ரீ வைகுண்டத்தை காண வேணும் என்று –ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே-என்னுடைய ஹிருதயமானது நிரந்தரமாக பண்ணா நின்றது –

—————————————————————–

தன்னைக் காண வேண்டி இருப்பார்க்கு திருநாடு முட்டப் போக ஒண்ணாத படி அணித்தாக திரு மலையிலே வந்து நின்று அருளின படியை அனுசந்தித்து -கால் நடை தந்து -அவ்வளவும் போக வல்லவர்களுடைய பாக்யவத்யைச் சொல்லா நின்று கொண்டு -தம்முடைய பல ஹானியை ஆவிஷ்கரிக்கிறார்-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

தன்னை ஆஸ்ரயித்தாருடைய புண்ய பாப ரூப கர்மங்களை நிச்சேஷமாகப் போக்கிப் பின்னை ப்ரக்ருதியிலே சம்பந்தியாத படி பண்ணி ரக்ஷித்து அருளும் ஸ்வ பாவனானவன் நின்று அருளும் திருமலை – ஸ்வ சம்பந்தத்தால் சிலாக்கியமான பூமி யது – அவ்வளவும் போய் தொழும் மிடுக்கு உடையார் பாக்கியவான்கள் –

——————————————————–

ஏதேனும் ஒரு படி உன்னுடைய திருவடிகளிலே  வந்தேனே யாகிலும் -அன்யாத்   பூர்ணாத் தபாம் கும்பாம் -என்னும்படியாலே ஸமாச்ரயண உன்முகர் பக்கலிலே  அவர்களுடைய ஆபி முக்கிய மாத்ரத்தினாலே துஷ்டனாத் ஸ் வ பாவனான உன்னுடைய சீலவத்தையின் மிகுதியாலே அடிமை செய்வது அரிது என்கிறார் –

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

அழகிய புஷ்பாத் யுபகரணங்களை கொண்டு அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்றால் உன் சீலவத்தையாலே இங்குத்தைக்கு மிகை ஆதலால் –திரு வனந்த ஆழ்வானோட்டை சம்ச்லேஷத்தாலே ஸ்வாராதத்வ பிரதையை யுடையவனே -உன்னுடைய திருவடிகளிலே அடிமை செய்யும் விரகு அறிகிறி லேன் –

————————————————————-

தாஸ்ய சுவடு அறியாத ஷூத்ரரான ப்ரஹ்மாதி  தேவர்களும் கூட சமாஸ்ரயணீயராக இருக்கிற உன்னுடைய திருவடிகளில் ஸுசீல்யம் காலம் எல்லாம் கூடினாலும் என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது என்கிறார் –

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

அத்யபிமானியான கமலாசனன் உன்னுடைய திரு நாபியிலான் -அநந்ய சரண்யர் அடையாளம் இன்றிக்கே -ஒளியை யுடைத்தாய் -நீண்ட மழுவை யுடைய ருத்ரன் உன்னுடைய திருமேனியில் ஒரு பிரதேசத்திலான -பரிசர்யை பண்ணுகிறார் அடிமைக்குத் தகாத தேவதைகள் –

———————————————————

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார் -ஸ்ரீ வைகுண்டத்தில் செல்லுகை ஆச்சர்யம் அன்று -பிராப்தம் -என்கிறார் –

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

அமர்யாத சீலனான எம்பெருமானுடைய திருவடிகளிலே வி லக்ஷணமான அழகு மிக்கு இருக்கிற திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய சொல் தொடையான ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியோடு சம்பந்தமுடையார் —பான்மை -கடன் –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: