திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–3–

கீழில் திருவாய்மொழியில் -கூவுதல் வருதல் செய்ய வேணும் -என்றார் –
அவன் உம்மைப் பெறுகைக்கு நாம் அன்றோ பிரார்த்திக்கக் கடவோம் -என்று நாராயணத்தவத்தால் வந்த
தன்னோட்டை பிராப்தியைக் காட்டிக் கொடுக்க -அந்த நாராயணத்வ பிரகாரத்தை அனுசந்தித்து
-அவனைக் காண வேணும் என்று ஆசைப்பட்டு காணப் பெறாமையாலே பல ஹீனராய்
நாராயணத்வத்தில் எல்லை நிலமான சீல குணத்தை -ஏதேனும் ஒருபடி அவன் இருந்த இடத்திலே சென்றாகிலும்
அவனுடைய சீல பிராஸுர்யத்தாலே அடிமை செய்ய ஷமர் இன்றிக்கே-இருக்கையாலே அந்த சீலாதிசயத்தை பேசி முடிக்கிறார் –
அவன் சீலவத்யை பார்த்தவிடத்து நாம் ஓன்று செய்கை மிகை யாம் படியாய் இருந்தது –
தம்மைப் பார்த்தால் அந்த சீலத்திலே கால் தாழ்ந்து ஒன்றும் செய்ய ஷமர் இன்றிக்கே இருக்கையாலே அந்த சீலாதிசயத்தை பேசி முடிக்கிறார் –
கிட்டி அடிமை செய்ய வேணும் என்று அபேக்ஷித்தாலும் ஒரு குணத்தை அவன் ஆவிஷ் கரித்தால் அவ்வழியே போக வேண்டும் படி இ றே இருப்பது –

————————————————————-

அவன் நாராயணன் அன்றோ -நம் அபேக்ஷிதம் செய்கை நிச்சிதம் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஓர்  ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

ஓர் ஆயிரமாய் -ஒரோ திரு நாமங்களே ஆயிரம் முகத்தால் ரக்ஷிக்க வற்றாய் இருக்கும் -ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசச் ச்ரிய- என்று நிர்வசன பேதத்தால் அநேகம் படி ரக்ஷிக்க வற்றாய் இ றே இருப்பது –
உலகு -ரக்ஷிக்கும் இடத்திலே ஓரோர் ஒருத்தரை அன்றிக்கே லோகமாக ரக்ஷிக்கும்
ஏழ் -அது தன்னிலும் ஒரு லோகம் மாத்திரம் அன்றிக்கே சர்வ லோகங்களையும் ரக்ஷிக்கும் –
அளிக்கும்- பேர்— அவன் பாப பிராஸுர்யத்தாலே ஷிபாமி என்னக் கடவன் -இவை ரஷிக்கையே ஸ்வபாவமாக இருக்கும்
ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–இப்படிப்பட்ட திரு நாமங்களை ஆயிரம் உடையனாகையால் யுண்டான பெருமையை யுடையவன் -தேவோ நாம சஹஸ்ரவான்
கார் ஆயின காள நல் மேனியினன்--கார் போன்ற என்னாதே- காராயின –என்று ரூபகம் -மேகம் போலே கறுத்த திரு மேனியை யுடையவன் –
நல் மேனியினன்—சொன்னது உபமானம் அன்று என்கை -பெருக்காற்றில் இழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே ஒரு உபமானம் முன்னாக இழிய வேண்டுகையாலே சொன்ன இத்தனை -உபமான ரஹிதம் -என்கை –
நாராயணன் -ஆயிரம் திரு நாமங்களை யுடையவன் என்று சொல்லி வைத்து -நாராயணன் என்று விசேஷிக்கையாலே இதுவே ஸ்வரூப நிரூபகம் -என்கை –ஞான சக்த்யாதிகளுக்கு ஆஸ்ரயமான ஸ்வ ரூபத்துக்கு -ஞான ஆனந்த அமலத்வாதிகள் நிரூபகம் ஆனால் போலே
நங்கள் பிரான் அவனே–அவனே நமக்கு ரக்ஷகன் -அவதாரணத்தாலே தன் பேறாக ரக்ஷிக்கும் என்கை -கூவுதல் வருதல் செய்திடாய் என்ற விடம் மிகை –

—————————————————————-

கீழ்ச் சொன்ன நாராயண சப்தத்துக்கு அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அவனே  யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்–விஸ்திருதமான பூமியை ஸ்ருஷ்டித்து –பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்தானும் அவனே –அவதாரணத்தாலே ஸ்ருஷ்ட்யாதிகளில் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்— பிரளயம் கொள்ளாத பூமியை வயிற்றிலே வைத்து வெளிநாடு காண உமிழ்ந்து -அபஹ்ருதமான பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் அவனே –இந்த அவதாரணத்தாலே ஆபத் சகத்வாதி ரக்ஷகத்வத்திலும் சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
அவனே யவனும் அவனுமவனும்–ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுடைய ஸ்வரூப ஸ் திதி ப்ரவ்ருத்திகள் அவன் இட்ட வழக்கு -ச ப்ரஹ்ம ச சிவஸ் சேந்த்ர –ஸ்ருஷ்ட்டி ஸ்தித்யந்த-இத்யாதி என்கிற பிராமண ப்ரசித்தியால் சொல்லுகிறார் –
அவனே மற்று எல்லாமும் -பிரதானரோடு அபிரதானரோடு வாசி யற சேதன அசேதனங்களும் அவன் ஆதீனமே
அறிந்தனமே–ப்ரஹ்மாதிகள் -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையும் -அவர்களை ஆஸ்ரயிப்பாருமாய் செல்லா நிற்க நீர் அவனே என்றது என் கொண்டு என்னில் -மயர்வற மதிநலம் அருள பெற்றதால் அறிந்தேன் -என்கை –

————————————————————

வேதங்களுக்கும் ரிஷிகளுக்கும் அறிய நிலம் இல்லாத எம்பெருமான் தன்னை எனக்கு பூர்ணமாக அறிவித்தான் என்று ப்ரீதர் ஆகிறார் –

அறிந்தன  வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்–துர்ஜ்ஜேயார்த்தத்தை அறிந்தனவாய் இருக்கிற வேதங்கள் ஆகிற சாஸ்திரங்கள் -என்னுதல் -அறிந்தனவாய் இருக்கிற வேதங்களில் துர்ஜ்ஜேயார்த்தங்களை நிஷ்கர்ஷித்து தரும் ப்ரஹ்ம ஸூ த்ர இதிஹாச புராணாதிகள் என்னுதல் –
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்–துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –
அறிந்தனர் எல்லாம்-அறிந்தாராய் இருக்கிற பராசர வ்யாஸ வால்மீகி ப்ரப்ருதி ரிஷிகளும் –
அரியை வணங்கி-சர்வ துக்க நிவர்த்தகனை வணங்கி -ஆஸ்ரயித்து –
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–சம்சார துரித பேஷஜம் -என்னும் இவ்வளவு அறிந்தவர்கள் -சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –அவனுடைய போக்யதையிலே இழிந்திலர்கள் -அவனுடைய நிரபேஷ உபாய பாவத்தில் இழிந்திலர்கள் –

———————————————————–

நித்ய ஸூ ரிகளுக்கு போக்யனாய் வைத்து கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளி – நம்மையும் அவர்கள் நடுவே வைப்பானாய் இருக்கிறவனை விடாதே கிடாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

மருந்தே  நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு-உன்னுடைய அனுபவத்தால் எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகனானவனே -இப்படி சொல்லுகிறவர்கள் ஆர் என்னில்
என்று-பெரும் தேவர் குழாங்கள் -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகள் –குழாங்கள்-அவர்கள் கிண்ணகத்தில் இழிவாரை போலே திரள் திரளாக வாயிற்று இழிவது
பிதற்றும் பிரான்-ஜ்வர சந்நிபதிதரைப் போலே அக்ரமாகக் கூப்பிடா நிற்பார்கள் –பிரான் -அவர்களுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன் –
கருந்தேவன்-காள மேக நிபாஸ்யமான திவ்யமான வடிவை யுடையவன்
எம்மான்-அவ்வடிவைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் -நித்ய ஸூ ரிகளுக்கு படிவிடும் வடிவைக் கிடீர் எனக்கு உபகரித்தது
கண்ணன் -தன்னிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து வந்து உபகரித்தவன்
விண்ணுலகம்-தருந்தேவனை -பரமபதத்தை தருவானாய் இருக்கிற சர்வேஸ்வரனை
சோரேல் கண்டாய் மனமே–நெஞ்சே விடாதே கிடாய் –அவன் உபகாரகனாய் நிற்க நீ வை முக்கியம் பண்ணாதே கிடாய் -அவன் வை லக்ஷண்யத்தை புத்தி பண்ணாதே ஸூ லபன் என்னா கால் கடைக் கொள்ளாதே கிடாய் –

——————————————————————–

நிரதிசய போக்யமான எம்பெருமானை விடாதே கிடீர் என்று திரியட்டும் திரு உள்ளத்தை ஆராதிசயத்தால் மிகவும் பிரார்த்தித்து ஆர்த்திக்கிறார் –

மனமே  யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

மனமே யுன்னை-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி என்கிறபடியே முற்பட்டு நிற்கிற உன்னை இ றே நான் இரக்கிறது
வல்வினையேன்-பகவத் விஷயத்தில் க்ரம பிராப்தி பற்றாத படியான பாபத்தைப் பண்ணினேன்
இரந்து-கனமே சொல்லினேன்-உன்னை இரக்க வேண்டி இரக்கிறேன் அல்லேன் -என் சாபல அதிசயத்தாலே இரக்கிறேன் அத்தனை -உன்னைக் கால் பிடித்து த்ருடமாகச் சொன்னேன் –
இது சோரேல் கண்டாய்-நான் தவிர் என்றாலும் நீ விடப் பாராதே கிடாய் -எத்தை விடாது ஒழியச் சொல்லுகிறது என்னில்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்இனமேதும் இலானை அடைவதுமே–நிரதிசய போக்யமானவனை ஆஸ்ரயிக்கை -புனத்திலே மேவி இருப்பதான அழகிய திருத் துழாய் மாலையை உடையவனே ஆகையால் ஒப்பின்றிக்கே இருக்கிறவனை -அத்தோள் மலை யுடையவனாகை இ றே சர்வாதிகனாகை யாவது -நான் நிஷேதிக்கிலும் மேல் விழ வேண்டி அன்றோ விஷயம் இருக்கிறது –அடைவது என்று கிரியை யாதல் -சோரேல் கண்டாய் -என்று கிரியை யாதல் –

——————————————————————-

தம்முடைய உபதேசம் பலித்து இவ்விஷயத்தில் திரு உள்ளம் சிதிலம் ஆகா நின்றது என்று ப்ரீதர் ஆகிறார் –

அடைவதும்  அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்–மிகவும் அழகிதான பிராட்டி யுடன் சம்ச்லேஷிப்பதும் -அவன் தான் வைஸ்வரூபம் கொண்டு இழிந்தாலும் தோள் அழகுக்கு அவ்வருகு போக மாட்டான்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே-அவள் தோளை அணைக்கைக்கு இடும் பச்சை -பர்த்தாரம் பாரிஷஸ்வ ஜே-என்று இ றே அவள் அணைப்பது -ஆஸ்ரித விரோதிகளுக்கு வெம் போர்கள் நெருங்கப் பண்ணுவதும் -என்னுதல் -அவர்களை முடிக்கும் விரகுகளே சிந்தியா நிற்பது என்னுதல் –
கடைவதும் கடலுள் அமுதம் -பிரயோஜனாந்தர பரருடைய பிரயோஜனத்துக்காக கடைவதும் என்னுதல் -பிராட்ட்டியைப் பெறுகைக்கு வியாபாரிக்கு படி சொல்லுகிறது என்னுதல் -அவனை சம்ச்லேஷிக்கும் படி சொல்லிற்று -அதுக்கு இடும் பச்சை சொல்லிற்று -அவளை பெறுகைக்கு யத்னம் பண்ணும் படி சொல்லிற்று -இவை இவர் திரு உள்ளம் உடை குலைப் படுகைக்கு ஹேதுக்கள்
என் மனம்-உடைவதும் அவற்கே யொருங்காகவே–-என்னுடைய மனஸ் ஸூ ஒருமடைப்பட உடை குலைப்பட நிற்பதும் ஏவம் வித சேஷ்டிதங்களை யுடையவனுக்கே –

—————————————————————-

அவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தை சென்று காண வேணும் என்னா நின்றது என்நெஞ்சம் -என்கிறார் –

ஆகம்  சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

ஆகம் சேர் நரசிங்கமதாகி -நரத்வ சிம்ஹங்கள் -சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே ஸூ கடிதமான நரசிம்ஹமாய் -என்னுதல் -நரசிம்ஹத்தின் வடிவு இவர் நெஞ்சிலே சேர்ந்த படி -என்னுதல் –
ஓர்-ஆகம் -ஹிரண்யனுடைய அத்விதீயமான முருட்டுடம்பு –
வள்ளுகிரால் -கூரிய உகிர் -வளைந்த உகிர் என்னவுமாம் –
பிளந்தான் உறை-மாகவைகுந்தம் காண்பதற்கு-விரோதி நிரசன சீலனானவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தை காண வேணும் என்று
என் மனம்-ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே–-என் மனஸ் ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இ றே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது -சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –

——————————————————————-

தன்னைக் காண்கைக்கு பரமபதத்துக்குப் போக வேண்டாத படி திருமலையில் வந்து நின்று அருளின படியை அனுசந்தித்து தம் பல ஹானியாலே தமக்குத் திருமலையோடு பரமபதத்தோடு வாசி அற்றது என்கிறார் –

இன்றிப்  போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து--புண்ய பாபங்களை இன்றிப் போம் படியாக சவாசனமாகப் போம்படி பண்ணி -இத்தலையாலே போக்கும் போது இ றே சேஷிக்கப் போவது –
ஒன்றி யாக்கை புகாமை -அசித்தோடே சேர்ந்து கர்ம கார்யமான சரீர பிரவேசம் பண்ணாத படி
உய்யக் கொள்வான்-நின்ற வேங்கடம்–உயிர் அளிப்பான் -என்கிறபடியே ரக்ஷணார்த்தமாக-அவசர பிரதீஷனாய் நின்ற திருமலை –
நீணிலத் துள்ளத்து--ஸ்வ சம்பந்தத்தாலே சிலாக்கியமான பூமியில் உள்ளது –
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–-அவ்வளவு சென்று தொழ மிடுக்கு உடையார் -நதே மனுஷ்யா தேவாஸ்தே-என்கிறபடியே பாக்யவானான தேவர்கள் –

——————————————————————-

இப்படி ஸூ லபனான உன் திருவடிகளைக் கிட்டப் பெற்றாலும் ஆஸ்ரயணத்தில்-ஆபி முக்கிய மாத்திரத்திலே துஷ்டனாம் உன் சீலத்தையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் -என்கிறார் –

தொழுது  மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

தொழுது  மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு-சிலாக்யமான புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் -என்றால் -இது மிகையாம் படி யன்றோ உன்னுடைய சீலவத்தை இருப்பது -அந்யத் பூர்ணா தபாம் கும்பாத் -என்கிற விஷயம் இ றே
எழுது மென்னுமிது மிகை யாதலில்பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்— இப்படி சீலாதிகன் ஆகையால் -துராராதன் -என்கிற பழுது இன்றிக்கே ஸ்வாபாவிகமான ஸ்வாரதத்வ பிரதையை யுடையையாய் -அதுக்கு அடியாக திருவனந்த ஆழ்வானோடே சம்ச்லேஷிக்கிறவனே
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–உன் திருவடிகளை அணையும் விரகு அறிகிறி லேன் -பல ஹானியாலே முதலிலே கிட்டுகை அரிது -கிட்டினாலும் சீலாதிக்யதையை அனுசந்தித்து ஒரு பிரவ்ருத்தி பண்ண ஷமன் ஆகிறிலேன் –
இப்பாட்டால் அயோக்கிய அனுசந்தானம் பண்ணுகிறார் என்பாரும் உண்டு -கண்கள் சிவந்ததின் பின் அது இல்லை -அவனுடைய உபாய பாவத்தை அனுசந்தித்து இத்தலையால் ஓன்று செய்கையை மிகையாய் இருக்கிறபடி சொல்லுகிறார் -என்பாரும் உண்டு -இவை பக்ஷம் அன்று –

———————————————————————–

தாஸ்ய சுவடு அறியாத ஷூத்ரரான ப்ரஹ்மாதி  தேவர்களும் கூட சமாஸ்ரயணீயராக இருக்கிற உன்னுடைய திருவடிகளில் ஸுசீல்யம் காலம் எல்லாம் கூடினாலும் என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணாது என்கிறார் –

தாள  தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

தாள  தாமரையான் உனதுந்தியான்–தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மா உன் திரு நாபியைப் பற்றி வர்த்தியா நின்றான் -கமல யோனித்துவத்தாலே வந்த துர்மானத்தை யுடையவனுக்கு இ றே உடம்பு கொடுத்தது-
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்– -ஒளியை யுடைத்தாய் -தொடங்கின காரியத்தை முடிய நடத்த வற்றான மழுவை யுடைய ருத்ரன் உன் திருமேனியில் ஏக தேசத்திலான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்-நாளும் என் புகழ் கோ உனசீலமே–அநந்ய சரணத்வ லக்ஷணமான தொடை ஒத்த துளபமும் கூடையுமாய் புகழ்ந்து நிற்கிறான் அல்லனே -அடியராய் பரிசர்யை பண்ணுகிறார் தேவர்கள் -நித்ய ஸூ ரிகள் செய்யும் அடிமை இ றே -தேவத்வ சாம்யத்தாலே -நான் ஈஸ்வரன் -ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவர்கள் –
நாளும் என் புகழ் கோ உனசீலமே–உன் சீலம் நாளும் என் புகழ் கோ -உன்னுடைய சீல குணத்தை காலம் எல்லாம் கூடினாலும் என்னால் புகழ்ந்து முடிக்க ஒண்ணுமோ-

———————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழி கற்றார் -ஸ்ரீ வைகுண்டத்தில் செல்லுகை ஆச்சர்யம் அன்று -பிராப்தம் -என்கிறார் –

சீலம்  எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-

சீலம் எல்லை இலான் அடிமேல் –அமர்யாத சீலனான எம்பெருமானுடைய திருவடிகளிலே –இத்திருவாய் மொழியால் ப்ரதிபாதிக்கப் பட்டது -சீலாதிக்யம் ஆயிற்று -அத்தை நிகமிக்கிறார் –
அணி-கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரி -அன்றியே -கோல நீள் -என்று சப்தம் தானே உண்டாகையாலே –அடி மேல் அணி -மாலை -என்று கூட்டிக் கொள்ளவுமாம் –
ஆயிரத்துள் இவை பத்தினின்-பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–இப்பத்தின் பரிசரத்தில் உளராமவர்கள்-யுக்தி மாத்திரம் – பாட தாரணம் –அர்த்த அனுசந்தானம் -ஒரு வழியாலே இதிலே அந்வயம் யுண்டாகையாலே பரமபதத்தில் செல்லுகை பிராப்தம் -மாக வைகுந்தம் காண்பதற்கு -என்று இவர் பிரார்த்தித்தார் -இவரை ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரார்த்த்யம் அன்று -பிராப்தம் -பித்ரு தனம் புத்திரனுக்கு தாய ப்ராப்தமாய் வருமது இ றே –

—————————————————————–

கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: