திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –9–2–

கீழில் திருவாய் மொழியிலே -அல்லாதார் அடங்க சோபாதிக பந்துக்கள் அவனே நிருபாதிக பந்து -என்கிற அர்த்தத்தை அனுசந்தித்து
அதுக்கு அனுகுணமான பரிமாற்றத்துக்காக பரம பந்துவானவன் கண் வளர்ந்து அருளுகிற திருப்புளிங்குடி யிலே அவனோடே
எல்லாப் பரிமாற்றத்தையும் ஆசைப்பட்டு சென்றபடி பெறாமையாலே விஷண்ணராய் -அதுக்கு மேலே ஒரு சேஷ்டைகள் பண்ணாதே
ஏகரூபமாய் கண் வளர்ந்து அருளுகையாலே திருமேனி அலைகிறது என்று அத்தலையிலே நோவைக் குறித்து அதி பீருக்களுமாய்
என் ஆர்த்தியும் தீர்க்கிறிலன் -தன் ஆர்த்தியும் தீர்க்கிறிலன்-என்று வருகிறார்
ஆராவமுதில் என் ஆர்த்தி தீர்க்கிறிலன்-என்று வெறுத்தார் -இதில் இரண்டையும் குறித்து வெறுக்கிறார்
கொடியார் மாடக் கோளூர் -என்றதுவே தலையெடுத்து தம் ஆற்றாமை எல்லாம் தோற்றும் படி -என்னார்த்தி தீரக் குளிர நோக்க வேணும் –
அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் பண்ணும் ஸ்மிதத்தை நான் காணப் பெற வேணும் –
பிராட்டியும் தேவருமாய் இருக்கிற இச்சேர்த்தியை காட்டி யருள வேணும் -திருவடிகளை என் தலையிலே வைத்து அருள வேணும்
-நான் வந்து கிட்டின இத்தால் வந்த ப்ரீதி தோற்ற எழுந்து இருந்து என் எதிரே வர வேணும் -என்று கொண்டு
தம்முடைய மநோ ரதங்களை அடைய அபேக்ஷிக்கிறார் –
ப்ராப்தியை அனுபவித்தார் கீழ் -பிராப்தி பலத்தை அபேக்ஷிக்கிறார் இதில் –

—————————————————————

அநந்ய கதிகளான அடியோங்களைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து -விடாய் கெடும்படி திருக் கண்களாலே குளிர  நோக்கி அருள வேணும் என்கிறார் –

பண்டை  நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

பண்டை நாளாலே நின் திரு வருளும்-–நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –
பங்கயத்தாள் திருவருளும்-கொண்டு — அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இ றே ஸ்வாதந்தர்யத்தை தவிர்ப்பது
என்னடியார் யது செய்யார் -என்னும் உன் கடாக்ஷமும் -நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று -க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –
நின் கோயில் சீய்த்துப் –-உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –
பல்படிகால்-இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ -என்கை –
குடி குடி -சபரிகரமாக
வழி வந்து –ஆள் செய்யும் -சாஸ்திரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து ஆடச்செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் -அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி
சோதி வாய் திறந்து -பூ அலருமா போலே யாயிற்று வாய் திறந்து அருளிச் செய்யும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்வி -மாமக்ரூரேதி வஹ்யதி என்று வார்த்தை அளவிலே யாயிற்று அக்ரூரன் அனுபவித்தது -தத் காலத்திலே திரு முகத்தில் செவ்வியும் உத்தேச்யமாய் இருக்கிறதாயிற்று இவர்க்கு –
உன்-தாமரைக் கண்களால் நோக்காய்--வார்த்தை யில் தோற்றாத பந்தமும் நோக்கிலே அனுபவிக்கும் படி குளிர நோக்கி யருள வேணும் –அவலோக நதா நேந பூயோ மாம்பால யாவ்யய
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்ததிருப் புளிங்குடிக் கிடந்தானே–தெளிந்த நீரையுடைய திருப் பொருநலோடே சேர்ந்த அழகிய நீர் நிலம் சூழப் பட்ட திருப் புளிங்குடியிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவனே -தேவர் ஸுகுமார்யத்துக்கு சேரும் ஜல ஸம்ருத்தியை யுடைத்தான தேசத்திலே கண் வளர்ந்து அருளின அம்சம் உண்டு -இதின் கார்யம் பெற வேணும் -என்கிறார் -செய்த அம்சத்தில் க்ருதக்நராக ஒண்ணாதே –

—————————————————————-

சர்வ ஸூ லபமான உன்  திருவடிகளை என் தழை மேலே வைத்து அருள வேணும் -என்கிறார் –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

குடிக் கிடந்து -குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இ றே-ஸ்ரீ பரதாழ்வான்-
ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி -பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து
உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் -/ உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்
வழி வருகின்ற-பரம்பரையாக வருகின்ற என்னுதல் /அடிமை செய்யும் முறையில் ஒன்றுமே தப்பாத படி போருகிற -என்னுதல்
அடியரோர்க்கு அருளி -அநந்ய கதியாய் இருக்கிற எங்கள் பக்கலிலே கிருபை பண்ணி
நீ யொருநாள்-சேஷியான நீ முறை கலங்கின நாளிலே
படிக்களவாக நிமிர்த்த-பூமிக்கு அளவாக நிமிர்த்த -சதைக்க ரூபமான திருவடிகளை நிமிர்த்த ஆச்சர்யத்தோ பாதி போருமாயிற்று பூமி யளவிலே குசை தாங்கின படி
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்-சர்வ ஸூ லபனான -உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை என் தலைக்கு ஆபரணமாம் படி பண்ணி யருள வேணும் -குணாகுண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை அநந்ய பிரயோஜனனான நான் இழக்கவோ -ருசி இல்லார் தலையிலே வைத்த திருவடிகளை ருசி உடைய என் தலையிலே வைக்கலாகாதோ-பூமிக்கு அளவான திருவடிகளை என் தலைக்கு அளவாக்க லாகாதோ -கோலமாம் என் சென்னிக்கு -என்று இருக்கிற என் தலையில் வைக்கலாகாதோ -இந்த சீலம் காதாசித்கமாய் இழக்கிறேனோ
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்-திருப் புளிங்குடிக் கிடந்தானே––ஸூ ரஷிதமாய் ஸ்ரமஹரமான தேசத்திலே கண் வளர்ந்து அருள பெற்றது –என் வருகிறதோ -என்கிற பயம் தீர -என்னை விஷயீ கரிக்கும் இதுவே குறை என்கை -சா ராம கீர்த்தனா வீத சோகா -என்று ராம ஸத்பாவத்தில் பிறந்த அதிசங்கை போய் –ராமஸ்ய ஸோகேன சமாநசோகா -என்று விரஹத்தாலே வந்த சோகமே பிராட்டிக்கு உண்டானால் போலே –

—————————————————————

திரு உடம்பு அசைய ஒரு படியே கண் வளர்ந்து அருளாதே அடியோமுக்காக பிராட்டியும் தேவரும் எழுந்து இருந்து அருள வேணும் -என்கிறார் –

கிடந்த நாள்  கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

கிடந்த நாள் கிடந்தாய் -ஒரு ஆஸ்ரிதன் -சாய்ந்த போதை அழகு காண வேணும் -என்று ஆசைப்பட்ட நாள் தொடங்கி கண் வளர்ந்து அருளுகிறிலையோ
எத்தனை காலம்-கிடத்தி -இனி ஒருவன் வந்து கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -என்னும் அளவும் கிடக்கும் அத்தனை இ றே -எல்லா சேஷ்டிதங்களும் -பக்தா நாம் என்று இருக்கை தவிராது இ றே
உன் திரு வுடம்பு அசைய–ஸூ குமாரமான-திருமேனி அலசும்படி -அர்த்திக்குமவர்களையே பார்க்கும் அத்தனையோ -உன்னையும் பார்க்க வேண்டாவோ –
தொடர்ந்து குற்றேவல் செய்து-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும் -இவ்வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –
தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –
இம் மூன்று பாட்டிலும் தம்முடைய யோக்யதையைச் சொன்னால் போலே இருக்கும் -அது அன்று சொல்கிறது -ஒருவருக்கே சேஷமாய் இருப்பாரை வேறு முகம் பார்ப்பார் யுண்டோ என்று தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்கிறார்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து-பொய்கையை விழுங்கின தாமரை போலே இடமுடைத்தான திருக் கண்களாலே குளிர நோக்கி
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்-நீ எழுந்து அருளி இருந்து -உணர்ந்து அருளும் போதை செவ்வியை அனுபவிக்க வேணும் -மாரி முலை முழைஞ்சில் -என்கிறபடியே -உன் தாமரை மங்கையும் நீயும் -பிராட்டியும் தேவரும் சேர இருந்து -எனக்கு காட்டித் தர வேணும் –பங்கயத்தாள் திருவருளும் -என்று ஆஸ்ரயண தசையாகையாலே புருஷகார பாவத்தை சொல்லிற்று கீழ் -அடிமை செய்யும் இடத்திலும் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்யக் கடவது -என்னுமத்தை பற்றச் சொல்லுகிறது இங்கு
இடம் கொள் மூ வுலகும்-இடமுடைத்தான சகல லோகங்களில் உள்ளாரும்
தொழ விருந்து அருளாய்-அநந்ய பரரைப் போலே முறையிலே தொழ இருக்கும் இருப்பை நான் கண்டு அனுபவிக்க வேணும் –
திருப் புளிங்குடிக் கிடந்தானே–ஸூ லபனான பின்பு எல்லாம் செய்து அருளத தட்டு என் -திருப் புளிங்குடிக் கிடந்தானே–இருந்து அருளாய் -சாய்ந்து அருளின அழகை அனுபவிப்பித்து அருளிற்று -இருந்து அருளின அழகை அனுபவிப்பித்து அருள வேணும் -என்கை –

—————————————————————

திருப் புளிங்குடி தொடக்கமான திவ்ய ஸ்தானங்களில் சந்நிஹிதனாய் என்னை இவ்வளவு ஆக்கினால் போலே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் -என்கிறார் –

புளிங்குடிக்  கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை-இருந்து வைகுந்தத்துள் நின்று–திருப் புளிங்குடியிலே -கிடந்ததோர் கிடக்கை -என்னும் அழகைக் காட்டும் -திரு வர குண மங்கையிலே -பிரான் இருந்தமை காட்டினீர் -என்னும் இருப்பில் அழகைக் காட்டியும் -ஸ்ரீ வைகுண்டத்தில் -நிலையார நின்றான் -என்னும் நின்ற அழகைக் காட்டியும் -அன்றோ என்னை புகுர நிறுத்திற்று -இவை எல்லாம் நான் இரக்கவோ செய்தது –
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே-அயோக்கியன் என்று அகலாத படி கண்கள் சிவந்திலே என் ஹிருதயம் தெளிந்தவாறே -அத்தைக் கை விடாதே நிரந்தர வாஸம் பண்ணி –
என்னை ஆள்வாய் -உன்னால் அல்லது செல்லாத என்னை குண ஞானத்தாலே முடியாதபடி தரிப்பித்துப் போந்தாய்-
எனக்கு அருளி-வ்யதிரேகத்தில் -நசையாலே முடியவும் மாட்டாதே -இருக்கும் எனக்கு கிருபை பண்ணி
நளிர்ந்த சீர் -அனுசந்தித்தார் ஹிருதயம் குளிரும் படியான சீலத்தை –ஆழ்வார் -அபேக்ஷித்தத்தை -செய்து அருளினான் -என்கிற இக்கல்யாண குணத்தை –
உலகம் மூன்றுடன் வியப்ப-வி லக்ஷணரோடு -அவி லக்ஷணரோடு வாசி யற எல்லாரும் ஓக்க அனுபவித்து விஸ்மயப்படும் படியாக
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்-நாங்கள் விஸ்மயப்படும் அளவு அன்றிக்கே விக்ருதராம் படி
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்-சிவப்ப
தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –
நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இ றே நடை அழகு இருப்பது –

—————————————————————-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

பவளம் போல்  கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

பவளம் போல்  கனி வாய் சிவப்ப நீ காண-வந்து நின் பல் நிலா முத்தம்–அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –
பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது
தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து
நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி –தயங்குகை -தத் காலத்தில் ஒளி யாதல் -கடல் சலித்தால் போலே அசைந்து வருகிறபடி யாதல் –
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்-தண் திருப் புளிங்குடி கிடந்தாய்-நல்ல பவள படரின் கீழே சங்குகள்-நிர்ப்பாதமாய் வர்த்திக்கிற திருப் பெருநலை யுடைத்தாய் -ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே -/ படர் -தூறு /நிர்ப்பாதமாய் பவளத் தூற்றில் சங்குகள் வர்த்திகையால் அவ்வூரிலே பதார்த்தங்களுக்கு பாதகங்களால் அச்சம் இல்லை என்கை –
கவள மாக் களிற்றின்–கவளம் கொண்டு இருப்பதான பெரிய ஆனை –கவளம் கொண்ட என்ற இத்தால் மதமுதிதம் -என்கை -இதுக்கு முன்பு இடர் பட்டு அறியாத யானை –
இடர் கெடத் தடத்துக்-தன்னிலும் இல்லாத பொய்கையை யிலே ஒரு ஷூத்ர பதார்த்தத்தின் கையிலே யகப்பட்டு ப்ரதிக்ரிதை இன்றிக்கே இரும்படியான ஆபத்துப்போக
காய்சினப் பறவை ஊர்ந்தானே-பிரதிபக்ஷத்தை காயும் சினத்தை யுடைய பெரிய திருவடியை அவன் வேகம் போராமே அவனை ப்ரேரித்து கொடு வந்து தோற்றிற்று இலையோ -ஆனையின் தசை கிடாய் என் தசை -அதுக்கு வந்து தோற்றினால் போலே என் முன்னே வந்து தோற்ற வேணும் –

——————————————————————–

உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தாள் போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார் -மாலி ப்ரப்ருதி ராக்ஷஸர்களிலும் வலிதோ என்னுடைய பிரதிபந்தகங்கள் -என்றபடி —

காய்ச்சினப்  பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

காய்ச்சினப் பறவை யூர்ந்து-பிரதிபக்ஷத்தில் உனக்குத் தண்ணளி யுண்டாகிலும் கண்ணற்று அழியச் செய்யும் பெரிய திருவடியை நடத்தி
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்-அப்போது இருக்கும் படி மேருவைக்கினிய ஒரு காள மேகம் படிந்தால் போல் -இப்போது இது சொல்கிறது -பெரிய திருவடி முதுகில் இருப்பைக் காண் கைக்காக –
மாசின மாலி -மஹானான மாலி -ஸூ மாலி -என்றபடி /மாலிமான் என்று-பெரிய சினத்தை யுடையனாய் கொண்டு வந்த மாலி —
அங்கவர் படக் -என்ற இவர்கள் அங்கே முடியும்படியாக
கனன்று முன்னின்ற-சீறி -அவர்கள் முன்னே நின்ற வடிவைக் கண்ட போதே எதிரிகள் முடியும் படி இ றே வீரம் இருப்பது –
காய்சின வேந்தே–திரு நாமம் -காயும் சினத்தை யுடைய நிர்வாஹகனே-
கதிர் முடியானே-விளங்கா நின்ற திரு அபிஷேகத்தை யுடையவனே -நீர் ரக்ஷகத்வத்துக்கு முடி சூடி இருக்க நான் இழக்கவோ
கலி வயல் திருப் புளிங்குடியாய்-நீ தூரஸ்தன் என்று தான் இழக்கிறேனோ -சம்ருத்தமான வயலை யுடைய திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளினவனே
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி- எம்மிடர் கடிவானே–காயும் சினத்தை யுடைய திருவாழி முதலான திவ்யாயுதங்களைத் தரித்தது ஆஸ்ரிதருடைய ஆபத்துக்களை போக்குகைக்கு அன்றோ -இப்பாட்டில் கிரியை மேலில் பாட்டில் –

———————————————————–

துர்பலரோடு பிரபலரோடு வாசி இன்றிக்கே -ரக்ஷகனான நீ நாங்கள் வாழும் படி எங்கள் கண் எதிரே ஒரு நாள் இருந்திடாய் நின்றார்  –

எம்மிடர்  கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எம்மிடர் கடிந்து –எங்களுடைய சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்கி –
இங்கு – என்னை யாள்வானே-பகவத் ஞானத்துக்கு அடைவு இல்லாத இஹ லோகத்தில் அடிமை கொள்ளுகிறவனே –
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்-–அகிஞ்சனரான எங்களுக்கே அன்றிக்கே -ஈஸ்வரோஹம் -என்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் அங்கு அப்படி நிர்வாஹகன் ஆனவனே –
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்-தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்-சிவந்த மடல் -மலரா நின்றுள்ள தாமரையை யுடைய நீர் நிலங்களை யுடைத்தாய் ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்துநாம் களித்துள நலம் கூர–உன் அடியார் உன்னை அனுபவிக்கிற ஆனந்தத்தைக் கண்டு நாங்கள் உகந்து -அந்த உகப்பு தலை மண்டியிட்டு ஹ்ருதயத்திலே ஸ்நேஹமானது மேன்மேலென மிக்கு வர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–அஞ்ஞரான சம்சாரிகள் அனுபவிக்கும் படி எங்கள் கண் வட்டத்தில் ஒரு நாள் இருந்து அருள வேணும் -நித்ய ஸூ ரிகளுக்கு சதா தர்சனமான விஷயம் நீ ஒரு நாள் எங்கள் கண்ணுக்கு விஷயமாய் இருந்தால் ஆகாதோ -உன்னுடைய தர்சனம் அதிக்ருதாதிகாரமாக வேணுமோ –

————————————————————

பரமபதத்தில் யன்றோ இருப்பு அழகு காட்டலாவது என்ன -அவ்விருப்பை திருப் புளிங்குடியிலே ஒரு நாள் இருந்து அருள வேணும் -என்கிறார் –

எங்கள்  கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்-இணை யடி தொழுது எழுது இறைஞ்சி-எங்கள் கண் முகப்பே இருக்க வேணும் -அது செய்து அருளும் இடத்தில் லௌகீகர் எல்லாம் திருவடிகளின் சேர்த்தி அழகை கண்டு திருவடிகளிலே விழுவது எழுவதாய் ஆஸ்ரயித்து –
தங்கள் அன்பாரத் -தங்கள் ப்ரேமம் மிக்கு வர –
தமது சொல் வலத்தால்–சத்யனுகுணமான சொற்களாலே என்னுதல் –தாம் தாம் சொல்லவல்ல அளவாலே என்னுதல் -பொன்னாலே பூணு நூலிடுவர் –நூறு பிராயம் புகுவீர் -விஜயஸ்வ -என்னுதல்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப-மிகவும் மேல் விழுந்து கொண்டாட –
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்-சஞ்சார சீலனான சந்திரனுக்கும் இளைப்பு ஆறலாம் படியான மாடங்களை யுடைய திருப் புளிங்குடியிலே சந்நிஹிதன் ஆனவனே
திருவைகுந்தத் துள்ளாய் -அவ்வளவு அன்றிக்கே -ஸ்ரீ வைகுண்டத்தில் நின்று அருளினவனே
தேவா-பரமபதத்தில் காட்டில் சம்சாரத்தில் நிலையால் வந்த புகர்
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்-இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–இம் மஹா பிருத்வியிலே திருப் புளிங்குடியிலே பரமபதத்தில் இருக்கும் வேண்டற்பாட்டோடே ஒரு நாள் இருந்து அருள வேணும்-

————————————————————————-

இவ்விருப்பில் வீறு அறியாத சம்சாரத்திலே இருக்கிறது என் -என்னில் -ஆசையுடைய /ருசியுடைய  நாங்கள் நிரந்தரமாக கண்டு வாழுகைக்கு -என்கிறார் –

வீற்று இடம்  கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

வீற்று இடம் கொண்டு -சேஷித்வத்தால் வந்த வேறுபாடு தோற்றும் படி
வியன் கொள் மா ஞாலத்துஇதனுளும் இருந்திடாய் -விஸ்மய நீயமான மஹா பிருத்வியான இதிலேயும் இருந்திடாய் -உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே அந்நிய பாரமான சம்சாரத்திலே -உன்னை ஒழிய செல்லாமை யுடையார் இருக்குமது உனக்கு ஏற்றமோ -இதில் உமக்கு பிரயோஜனம் என் என்னில் –
அடியோம்-அநந்ய பிரயோஜனரான நாங்கள் –
போற்றி –அவ்விருப்பு நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி –
யோவாதே-உச்சி வீடு விடாதே
கண்ணினை குளிரப்-கமர் பிளந்த கண்கள் விடாய் கெட்டுக் குளிரும் படி
புது மலர் ஆகத்தைப் பருக–செவ்விப் பூ போலே இருக்கிற திருமேனியை அனுபவிக்கும் படியாக -புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரமான வடிவை -லோசநாப்யாம் பிபன் நிவ –என்கிறபடியே நிரந்தரமாக அனுபவிக்கப் பெறுகை –
சேற்றிள வாளை செந்நெலூடு களும்-செந்நெலின் நடுவே சேற்றிலே பஞ்ச விம்சதி வார்ஷிகரான முக்தரைப் போலே இருக்கிற வாளைகள் களித்து துள்ளா நிற்பதான அழகிய நீர் நிலத்தை யுடைய தேசம் –
செழும் பணைத் –திருப் புளிங்குடியாய்-அழகிய மருத நிலம் என்றுமாம் –
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த-கொடு வினைப் படைகள் வல்லானே–ம்ருத்யு போலே பிரதிபக்ஷத்தை நிச்சேஷமாய் போக்க வல்லையாய் -அதுக்கு உறுப்பாக கொடிய தொழிலை யுடைய திவ்யாயுதங்கள் கை வந்து இருக்குமவனே -பிரதிபக்ஷத்துக்கு ம்ருத்யுவான திவ்யாயுதம் என்னவுமாம் -இதுக்கு முன்பு தம்முடைய பிரதிபந்தகங்களை போக்கின படிக்கு த்ருஷ்டாந்தம் என்னுதல் -உனக்கு என்ன சக்தி யுண்டாய் நான் இழக்கிறேன் -என்னுதல் –

—————————————————————–

மிகவும் நிரதிசய  போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -என்கிறார் –

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கொடு வினைப் படைகள் வல்லையாய்-உனக்கு சேஷமாய் வைத்து -பிரதிகூலித்தவர்கள் -பக்கல் நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி -ஆயுதம் எடுக்க வல்லையாய் –சிலரை அழியச் செய்ய -என்றால் சக்தன் அன்றிக்கே இருக்கை –யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று இ றே இருப்பது – ந நமேயம் -என்று ப்ராதிகூல்யம் மிகைத்தாலும் -கச்ச அனுஜா நாமி -என்று பின்பு கண்ணும் கண்ண நீருமாய் நின்று இ றே கொல்லுவது-
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்–அசுரர்களால் தேவர்களுக்கு உண்டான துக்கம் தீரும் படி –அஸூரர்களுக்கு துக்கத்தை விளைக்கும் –
கடு வினை நஞ்சே -சடக்கென முடிக்க வற்றாய் ப்ரத்ய ஒளஷதம் இல்லாத நஞ்சு ஆனவனே
என்னுடை யமுதே-எனக்கு நிரதிசய போக்யம் ஆனவனே –சாத்தியமான தேவர்கள் அமுதம் அன்று –
கலி வயல் திருப் புளிங்குடியாய்-ஸ்வர்க்கத்திலும் போக வேண்டா -கடலைக் கடைய வேண்டா -திருப் புளிங்குடியிலே சந்நிஹிதம் யாயிற்று இவருடைய அமிர்தம் –கலி வயல் –சம்ருத்தமான வயல் –
வடி விணை யில்லா மலர்மகள்–இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று -தஞ்சேயம் அஸி தேஷணா-என்று ஏற்றமாய் நின்றது இ றே
மற்றை நிலமகள்-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை
பிடிக்கும் மெல்லடியை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை
கொடு வினையேனும் பிடிக்க-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இ றே
நீ யொருநாள்-கூவுதல் வருதல் செய்யாயே–நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –

———————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றார் எம்பெருமானை நிரந்தரமாக புஜிக்க -அனுபவிக்க பெறுவார் என்கிறார் –

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர்வாரே–9-2-11-

-குரை கடல் கடைந்தவன் தன்னை–கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ப்ரயோஜனாந்தர பரருடைய அபேக்ஷிதம் பூரிக்கைக்காக கடல் கடைந்தவனை யாயிற்று அர்த்தித்தது -இச்சீலத்தை அறிந்து முறை கெடவாகிலும் முறையாலே யாகிலும் கண்டு கொண்டு நிற்க வேணும் என்றாயிற்று சொல்லிற்று –
மேவி நன்கு அமர்ந்த -இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து அத்தாலே தரித்த –
வியன் புனல் பொருநல்-வழுதி நாடன் சடகோபன்–அத்தாலே விஸ்மய நீயமான ஜலத்தை யுடைய திருப் பொருநலை யுடைத்தான -திருவழுதி வள நாட்டை யுடைய ஆழ்வார் –
நாவில் பாடல்-மனஸ் ஸஹ காரம் இன்றிக்கே சொன்னவை –
ஆயிரத் துள்ளும்-இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்-வி லக்ஷணமான இத்திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லார்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்-அடி இணை யுள்ளத்தோர்வாரே–ஆஸ்ரித ஸூலபனுடைய திருவடிகளை நிரந்தரமாக ஹ்ருதயத்தில் அனுபவிக்கப் பெறுவார் -யதி நாசம் நவிந்ததே தாவதா அஸ்மி கருதி சதாஎன்று இது தன்னைப் பேறாகச் சொல்லிற்று இ றே –
ஆராவமுதில் ஆர்த்த ரக்ஷணம் பண்ணுமவன் என்னுடைய ஆர்த்தி தீர்க்கிறிலன்-என்றார் –
இங்கு பரம பந்துவாய் வைத்து என்னை அங்கீ கரித்திலன் என்றும் -ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளினால் திரு உடம்பு அசலாதோ என்று இன்னாதாகிறார் –

—————————————————————

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: