திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –9-1–

எம்பெருமான் பாகவத சேஷத்வ பர்யந்தமான நிரதிசய புருஷார்த்தத்தைக் காட்டிக் கொடுத்த மஹா உபகாரத்தை அனுசந்தித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார்
இப்படி உபகாரகனானவனே ஆத்மாவுக்கு நிருபாதிக பந்துவும் -ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம் -மற்று ஒருவரும் இல்லை -என்று
தமக்குப் பிறந்த ப்ரீத்யதிசயத்தாலே ஸமஸ்த சேதனரையும் குறித்து சோபாதிக பந்துக்களான புத்ர மித்ராதிகளை விட்டு
நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றுங்கோள் -என்கிறார் –

————————————————————–

எல்லாருடைய பந்துத்வமும் சோபாதிகம் ஆகையால் நிருபாதிக பந்துவான எம்பெருமானையே பற்றி உஜ்ஜீவிக்க வேணும் -என்கிறார் –

கொண்ட  பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

தான் தன் ஹ்ருதயத்தில் மிகவும் பந்துக்களாக நினைத்து இருக்கும் பார்யாதிகள் கையில் அர்த்தம் கண்ட போது ஸ்நேஹித்தாராய் இருக்கும் அத்தனை போக்கி மெய்யான ஸ்நேஹம் ஒன்றும் இல்லை –கொண்ட பெண்டிர் -என்கிறது அர்த்தாத்யுபாதியாலே சம்பாதித்த பார்யை -என்றும் சொல்லுவார் -பிரளய ஆபத்தில் தன்னை ஒருத்தரும் அர்த்தியாய் இருக்கச் செய்தே-எல்லாரையும் தன் திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்து அருளின மஹா உபகாரகனான வனுக்கு அடியோமாய் உய்கை ஒழிய வேறு ஆத்மாவுக்கு ரக்ஷகர் இல்லை –

——————————————————————-

பர உபகாரக பரரைப் போலே இருந்து தம் தாமுடைய பிரயோஜனங்களையே தலைக் கட்டப் பார்க்கும் ஹேயரை ஒழிய -நிர்ஹேதுகமாக பர சம்ருத்ய ஏக பிரயோஜனமானான தசரதாத்மஜனைப் பற்றுங்கோள் -என்கிறார் –

துணையும்  சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

ஸூ க துக்கங்களை ஓக்க அனுபவிப்பாரை போலேயும் -தாங்களே புகலாவாரைப் போலேயும் அந்நியரோடு  பந்துக்களோடு வாசி இன்றிக்கே தங்களுக்கு கைக்கு எட்டின சம்பத்து உண்டாகில் -அவன் பக்கல் உபகாரம் கொண்டாராய் கொள்ளாதே  அவனுக்கு ஹிதம் பண்ணினாராய் உபஜீவிப்பர் -தம்மால் கொடுக்கலாவது ஓன்று இல்லாத படி வெறுவியருமாய் இருக்கிற ஸ்ரீ ஸூ க்ரீவ மஹா ராஜர் -தாம் மிடுக்கு உடையர் என்று தேறி வாலியைக் கொல்ல இசைகைக்காக உதவி ஒரு சரத்தாலே மராமரங்கள் ஏழையும்  எய்த என்னுடைய பரம உதாரனை / எம் -என்று ஆத்மநி பஹு வசனம் -ப்ரீத்யர்த்தம் பேறாகச் சொல்லுகிறார் -தம் தாமுடைய  சர்வ பர நிர்வாஹகனை கொண்டு உஜ்ஜீவிக்க நினைக்கில் அல்லது வேறு ஒருவரைப் பற்றி ஒரு பிரயோஜனம் இல்லை –

————————————————————-

எம்பெருமானை ஒழிய மற்று உள்ளார் எல்லாம் பிரயோஜனம் உள்ள போது பந்துக்களாய் கொண்டாடி -இவனுக்கு ஆபத்து வந்தால் பார்ப்பாரும் இல்லை -ஆனபின்பு நிருபாதிகமாக எல்லாருக்கும் ஆபத் சகனாய் இருக்க கிருஷ்ணனையே பஜியுங்கோள் என்கிறார் –

பொருள்  கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

ஒருவன் கையில் அர்த்தம் யுண்டாய் பரிமாறக் காணில் பர ஸம்ருத்தியேக பிரயோஜனர் சொல்லும் பாசுரத்தை சொல்லி -அவன் தன்னை அபி முகீ கரித்து -கண்ணற மாட்டான் -என்று தோற்றின வாறே இடாயோ போகவென்று கையேற்று நிற்பர்கள் –இப்படி அர்த்தித்தவர்களுக்கு இட்டே தரித்ரனாய்-இவனுடைய சர்வஸ்வத்தையும் கொண்டு சம்ருத்தரானவர்கள் -என்னே என்ற மாத்திரத்தில் இவனுக்கு உஜ்ஜீவிக்கலானால் அம்மாத்திரம் செய்வாரும் இல்லை –இருள் கொள் துன்பத்தின்மை-யாவது -அறிவு கேட்டையும் துக்கத்தையும் விளைக்கக் கடவ தரித்ர்யம் –
சேதனர் கலங்கும் படியான ப்ரவ்ருத்திகளை யுடைய அஸுரர் மங்கும் படி வடமதுரை பிறந்தவனுடைய கிருபைக்கு பாத்திரமான அடியராய் உஜ்ஜீவிக்கல் அல்லது வேறு இவ்வாத்மாவுக்கு ரக்ஷை இல்லை-

——————————————————————-

சிலரை இவர்கள் நமக்கு ஆபத்துக்கு ரக்ஷகராவார் -என்று அர்த்தாதிகளைக் கொடுத்து -நெடு நாள் ஆஸ்ரயித்து வைத்தால்-ஆபத்து வந்தவாறே கண்ணுற்று உபேக்ஷிப்பர்-நான் ஆஸ்ரயியாது  இருக்கச் செய்தே  நானே வந்து பிறந்து அருளி ஆபத்சகனான எம்பெருமானே ஆஸ்ரயணீயன் என்கிறார் –

அரணம்  ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

-இரணம் கொண்டு தெப்பர் ஆவர்-/கடவிய தனத்திலே சிறிது இழந்து  சேஷித்தது கொண்டு போவாரை போலே இவனை யுபேஷித்து க்ருதக்நராய்ப் போவர் – / இன்றி இட்டாலும் அக்தே–பச்சையிட்டு ஆஸ்ரயியா விட்டாலும் இத் தப்ரரைக் கிடைக்கும் -அவர்கள் தாங்கள் நடுவே முடிந்து இவர்களுக்கு உதவாதே போகிலும் போவார் என்றுமாம் -/ வருணித்து என்னே-வ்யர்த்த கதையை வருணித்து பிரயோஜனம் என் –வண் புகழ் -கல்யாண குணங்கள் / சரண் -ரக்ஷகம் –

———————————————————————–

தங்களை பெறா விடில் தரிக்க மாட்டாத படி ஸ்நிக்த்தை களான ஸ்த்ரீகளாலே ஆபத்துக்கள் வந்தால் இகழப்  படுவர் -ஆனபின்பு என்றும் ஏக பிரகாரமாக ஸ்நிக்தனான எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

சதிரமென்று  தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

சதிராக வாழா நின்றோம் -என்று தங்களை தாங்களே இசைந்து இனிய பேச்சுக்களை யுடையவர்களுடைய மதுரமான போகங்களை புஜித்தவர்களே-புஜிக்கைக்கு ஈடான யோக்யதை குன்றினவாறே  அவர்களால் த்யஜிக்கப் படுவர் -லோகம் எல்லாம் அதிரும்படியான ப்ரவ்ருத்திகளை யுடைய அஸுரர் மங்கும் படி யாக வட மதுரை பிறந்தார்க்கு ஸ்வாகதாதிகளை பண்ணி எதிர் கொள்ளும் அடியராய் உஜ்ஜீவிக்கல் அல்லது ஆத்மாவுக்கு வேறு ஸூ கம் இல்லை –

——————————————————————–

எம்பெருமானே நிரதிசய புருஷார்த்தம் என்னும் இவ்வர்த்தத்தை உணராதே பழையார் அநேகம் பேர் இங்கனம் முடிந்து போனார் –நீங்களும் இங்கனம் நசியாதே ஆஸ்ரிதர்க்காக ஸ்ரீ மதுரையில் வந்து பிறந்து அருளின சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கை அல்லல் அல்லது ஆத்மாவுக்கு ஹிதம் இல்லை -இதை சங்க்ரஹேண  சொன்னோம் -என்கிறார் –

இல்லை  கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ-உள்ளது நினையாதே-வேறே புருஷார்த்தம் இல்லை கிடி கோள்-உண்டான புருஷார்த்தத்தை நினையாதே / மல்லை மூதூர்-அதி சம்ருத்தமாய் அவனுக்கு பழையதாய் வருகிற வூர் –

——————————————————————

பகவத் ஸமாச்ரயணீயத்தின் உடைய எளிமையையும் இனிமையையும் அருளிச் செய்கிறார் –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்–இத்தோடு ஓக்க வேறு எண்ணலாவதும் இல்லை –இது தன்னையும் பரப்பு இன்றிக்கே சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்-இதுக்கு அதிகாரிகள் எங்கனே என்னில் -பூமியிலே எவ்வுயிர்க்கும் -ஜென்ம வ்ருத்தாதிகள் குறைந்தாரோடு நிறைந்தாரோடு வாசி இன்றிக்கே எல்லா ஆத்மாக்களுக்கும்
சிற்ற வேண்டா -ஆபாஸிக்க வேண்டா
சிந்திப்பே அமையும்-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள்
கண்டீர்கள் அந்தோ-இதிலே புகாது ஒழி வதே -என்று இன்னாதாகிறார்
குற்றம் அன்று -இவ்வுபாயம் அநர்த்தத்தை விளையாது இ றே
எங்கள் பெற்றத் தாயன்வடமதுரைப் பிறந்தான்-குற்றமில் சீர் கற்று வைகல்-வாழ்தல் கண்டீர் குணமே–ஆஸ்ரிதர்க்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயனுடைய ஹேய் ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை அப்யஸித்து என்றும் வாழ்க்கை ஆத்மாவுக்கு உக்தம் –

————————————————————–

எம்பெருமான் இங்கே வந்து திருவவதாரம் பண்ணி யருளுகைக்கு நிதானத்தைச் சொல்லி -அவனையே ரக்ஷகனாக பற்றும் அத்தனை போக்கி ஒருவருக்கும் வேறு ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் –

வாழ்தல்  கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

ஆச்சர்யமான குண சேஷ்டிதாதிகளை யுடையனான தன்னுடைய திருவடிகளை இனிதாகக் கொண்டு பேசியே போது போக்க வேணும் என்று அத்யவசிக்க வல்லராய் -அநந்ய பிரயோஜனவரானவர்க்கு உஜ்ஜீவன ஹேதுவாய் வடமதுரையில் பிறந்த சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களையே மேவும் துணையாக பற்றும் இது போக்கி சீரியது ஒன்றும் இல்லை / வீழ் துணை-என்றது -ஆசைப்படும் துணை என்றவாறு –

———————————————————————

எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று ரக்ஷகம் உண்டு என்று பற்றினவர்கள் -பண்டு நின்ற நிலையும் கெட்டு அநர்த்தப் பட்டு போவார்கள் -ஆனபின்பு இவன் போக்கி சரணம் இல்லை என்கிறார் –

யாதும்  இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

இது ஒழிய மற்று ஓன்று ரக்ஷகம் இல்லை என்று ஏதேனும் ஒன்றைச் சொல்லி -அத்தை ரக்ஷகமாகக் கொண்டு -காது பெருக்க என்று புக்கு -பண்டு உள்ளதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே -பண்டு தாங்கள் வாழ்ந்து வருகிற வாழ்வையும் இழப்பார்கள் -/ தாதுசேர் தோள் கண்ணன்-வைஜயந்தி ப்ரப்ருதி மாலைகளால் அலங்க்ருதனான கிருஷ்ணன் –
இவற்றைத் தவிர்த்து கைவல்யத்தை புருஷார்த்தமாக பற்றினாலோ என்னில் -பகவத் ஸமாச்ரயணத்துக்கு யோக்யமுமாய் சப் தாதி விஷயங்களை அனுபவித்து சம்சாரத்திலே இருக்கும் இருப்பையும் இழக்கும் அத்தனை யதில் பிரயோஜனம் –ஆன பின்பு –தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்-இல்லை கண்டீர் சரணே–என்கிறார் என்றும் சொல்லுவார் –

—————————————————————-

தானே எல்லார்க்கும் சரண் என்னும் இவ்வர்த்தத்தை பிரதிஷ்டைக்காக வந்து திருவவதாரம் பண்ணி யருளின கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

கண்ணன்  அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

கிருஷ்ணன் அல்லது சரண் இல்லை என்னும் இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் -அதுக்கு உறுப்பாக பூ பாரத்தை போக்கி அருளுகைக்கும் ஸ்ரீ மதுரையிலே வந்து திருவவதாரம் பண்ணினான் -உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவன் திருவடிகளிலே சேஷத்வேன த்ருடமாக சமர்ப்பியுங்கோள் –
எண்ண வேண்டா நும்மது ஆதும்-அவன் அன்றி மற்று இல்லையே-இப்படியேயோ என்று விசாரிக்க வேண்டா -அத்தனையும் அன்று -உங்களுக்கு சாத்யமானவை எல்லாம் சாதித்து தருவான் அவனே -உங்களினவாக நீங்கள் அபிமானித்து இருப்பவை எல்லாம் அவனதுவே-அதிலே ஒரு சந்தேகமும் இல்லை என்றுமாம் –

——————————————————————-

நிகமத்தில் -அதயேஷ்ய தேச ய இமம் -என்று தொடங்கி எம்பெருமான் அருளிச் செய்தால் போலே இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லார் எனக்கு ப்ரியகரர் என்கிறார் –

ஆதும்  இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

அவனை ஒழிய வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் இல்லை என்று அத்யவசித்து -ஆழ்வார் அருளிச் செய்த நிரதோஷமாய் பஹு குணமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய் மொழி அப்யஸிக்க வல்லவர்கள் பண்டே நமக்கு ஸ்வாமிகள் –


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: