திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-10-

எம்பெருமான் தம்மை அநந்யார்ஹமாம் படி அடிமை கொண்ட படியை அனுசந்தித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார்
-அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அவ்வளவில் பர்யவசியாதே -அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்தளவும் சென்று ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானைப் போலே –
அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் -என்று அத்யவசித்து
-ஐஸ்வர்யாதியாய் ஸர்வேச்வரத்வ பர்யந்தமான சகல புருஷார்த்தங்களும் தனித்தனியும் திரளாகவும்
இப்பாகவத சேஷத்வ புருஷார்த்தத்தோடு ஒவ்வாது -இப் புருஷார்த்தமே என்றும் நேர் பட வேண்டும் -என்கிறார் –
பயிலும் சுடர் ஒளியில் -இவ்வாத்மாவுக்கு நாதர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றது –
இத் திருவாய்மொழியில் நிரதிசய புருஷார்த்த பூதர் அவர்கள் -என்கிறது –

———————————————————————

விஸ்மய நீயமான த்ரை லோக்யத்தை ஆளுமதில் காட்டிலும் -பாகவத சேஷத்வமே எனக்கு நிரதிசய போக்யம் என்கிறார் –

நெடுமாற்கு  அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்-அவனைக் கருத-
ஆஸ்ரிதரை தன் திருவடிகளிலே விஷயீ கரித்து அருளும் அளவன்றிக்கே பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆக்கும் பெறும் பித்தன் ஆனவனுக்கு-அடிமை செய்ய என்று அவனைக் குறித்து மநோ ராதித்த மாத்திரத்திலே
வஞ்சித்து-தடுமாற்றற்ற தீக் கதிகள்-முற்றும் தவிர்ந்த
பாதகர் இல்லாமையால் பதற்றம் அற்று நின்று நலிகிற புண்ய பாப ரூப கர்மங்கள் அவை தனக்கு அடியான -அவித்யா கர்ம வாசனா ருசிகளோடும் கூட அடைய போயிற்று –தெரியுமே என்னை விட்டு போன
சதிர் நினைந்தால்-
உறுவன பார்க்கில்
கொடுமா வினையேன் -ப்ரீதி பிரகரஷத்தால் மகா பாவியேன் என்கிறார் –
முதலிலே பாகவத சேஷத்வத்திலே தலை வைக்கப் பெற்றிலேன் என்று மகா பாவியேன் என்கிறார் -என்றும் சொல்லுவார் -பாகவத சேஷத்வ புருஷார்த்தம் ஐஸ்வர்யத்தோடு ஒவ்வாது என்று பேசிக் கழிக்க வேண்டுவதே என்னும் வெறுப்பால் –அந்தோ என்கிறார் –

————————————————————————

ஐஸ்வர்ய கைவல்யங்கள் இரண்டும் கூடிலும் நான் பெற்ற பாகவத சேஷத்வம் ஆகிற புருஷார்த்தத்தோடு ஒவ்வாது என்கிறார் –

வியன்  மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

சிறப்புடைய ஐஸ்வர்யம் பெறிலும் -சம்சாரத்தில் தொற்றறவற்று கேவல ஆத்ம அனுபவம் பண்ணப் பெற்றாலும் -வர்ஷூ கமான மேகம் போலே இருக்கிற வடிவை யுடைய சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிக் கீழ்– சயமே அடிமை தலை நின்றார் -திருத்தாள் வணங்கி -அடிமை தானே பிரயோஜனமாக எல்லா அடிமையும் செய்யுமவர்களுடைய திருவடிகளை வணங்கி -அவனுடைய ஸுந்தர்ய ஜயத்திலே தோற்று எல்லா அடிமைகளையும் செய்யுமவர்கள் திருவடிகளை வணங்கி -என்றுமாம் –
இஹ லோகத்தில் நான் பெற்ற புருஷார்த்த ரூபமான ஸூ கத்தை ஒக்குமோ -எனக்கு இவை ஒவ்வாது என்று சொல்ல வேண்டிற்று என்னும் கழிப்பாலே-பாவியேன் -என்கிறார் –

—————————————————————

ஐஸ்வர்ய கைவல்யங்களில் வி லக்ஷணமான பகவத் ப்ராப்தியைப் பெற்றாலும் இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடு ஒவ்வாது என்கிறார் –

உறுமோ  பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

லோகங்கள் எல்லாம் ஒருக்காலே நிறையும் படி பேர் அழகை யுடைய சிறிய திரு வடிவை நிமிர்த்து அருளின ஆஸ்ரித பவ்யனுமாய் -அழகிய திருக் கண்களையும் யுடைய ஸ்ரீ வாமனனுடைய மிக்கு இருந்துள்ள நல்ல பரிமளத்தை யுடைய நாட்பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு –
வடிவு சிறுத்து மஹா மஹாத்ம்யங்களை யுடையராய் என்னை யடிமை கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கே திரியவே-அவர்களை தவிர்ந்து-

———————————————————————

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாம் படி எம்பெருமானை பேசவும் அடிமை செய்யவும் பெறில்-அவர்கள் சஞ்சாரத்தால் ஸ்லாக்யமான இஜ் ஜகத்தில் இருப்பே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார் -பாகவத கைங்கர்ய ரூப புருஷார்த்தத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாகக் கிடைக்கைக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் போக வேண்டாவோ என்னில் -அவ்வனுபவம் இங்கேயே கிடைக்குமாகில் -இங்கே வர்த்தித்தால் சேதம் என் -என்கிறார் என்றுமாம் –

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

இழுக்கு உற்று என்-தண்ணிதானது என் / அறப் பெரிய பூமியை பண்டு சிறு வடிவோடே உண்பது உமிழ்வதாய்ச் சிவந்து அழகியதாய் இருக்கிற பவளம் போல் இருக்கிற திரு வதரத்தையும் யுடையனாய் — சொன்ன குணத்தாலும் அழகாலும் — என்னை அடிமை கொண்ட கொண்டவனுடைய — பொங்கி எழா நின்றுள்ள புகழ்கள் வாயிலே யுளவாய் -சர்வ இந்திரிய அபஹார ஷமமான திருவடிவு என் மனசிலே சந்நிஹிதமாய் கையிலே மலர்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்ய அருளில் –

————————————————————-

திரு நாட்டிலே போய்-அவனுக்கு அடிமை செய்கையாகிற நிரதிசய புருஷார்த்தமும் -கீழ்ச் சொன்ன ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்கள் எல்லாம் கூடினாலும் -சம்சாரத்திலே பிறந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாம் படி -திருவாய் மொழியை பாடுகையை ஒக்குமோ என்கிறார் –

வழி  பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

நித்ய கைங்கர்யம் பண்ணும் படியாக அவனுடைய பிரசாதம் பெற்று -அத்யாச்சர்யமான ஸுந்தரியாதிகளை யுடையனானவனுடைய நிரதிசய போக்யமான திருவடிக் கீழ் மிகுதியாலே சுழிக்கிற அப்ராக்ருதமான அழகு வெள்ளத்திலே ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும் -மற்றுள்ள புருஷார்த்தங்கள் எல்லாம் -அறத் தண்ணிய சரீரத்தோடு பிறந்து தன்னுடைய கல்யாண குணங்களை காட்டி அருள -அதுக்கு அடைவில்லாத நான் அறிந்து -அவை உள் அடங்காமை சொல்லாய் ப்ரவ்ருத்தமாகா நின்றுள்ள நிரதிசய போக்யமான கவிகளை அனுபவிக்கையை ஒக்குமோ –

———————————————————

ஐஸ்வர்ய கைவல்ய பகவத் அனுபவ ப்ரீதியும் பகவத் ஆனந்தமும் கூடினால் தான் -ததீயர்க்கு ப்ரீதியை விளைப்பதான திருவாய் மொழியை அனுபவிக்கையை  ஒக்குமோ

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

தனக்கு ஒப்பு இன்றிக்கே ஒளியை யுடைத்தான சிவந்த முகத்தை யுடைய குவலயாபீடத்தை முடிப்பதும் செய்து -அழகிய திரு வாழி மோதிரத்தாலே அலங்க்ருதமான திருக் கையை யுடையனுமான என் நாதனுமாய் -தங்களுடைய ஜாதியுசிதமாக சிவந்த தலை மயிரை யுடையராய் அக்னி ஜ்வாலை போலே  நோக்கா நின்றுள்ள  கண்களை யுடையராய்  பெரிய வடிவை யுடையரான அஸூரருடைய பிராணன்களை முடித்து அதுவே தாரகமாய் திரியா நின்றுள்ள பெரிய திருவடிக்கு பாகனானவனுடைய பெரிதாய் ஒப்பின்றிக்கே இருந்துள்ள கல்யாண குண ராசியை அனுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்வரத்வம் –

————————————————————

ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொள்ளும் பகவத் அனுபவத்தை ஒழிய -பாகவத ப்ரீதி ரூபமான பகவத் அனுபவத்தை பண்ணிக் கொண்டு பாகவத சம்ச்லேஷமே நாளும் வாய்க்க நங்கட்கே என்கிறார் –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

ஒப்பில்லாத அழகிய புகழே காலம் உள்ளதனையும் நிற்கும் படியாக ஸ்ருஷ்ட்டி உன்முகனாய் -பஹுஸ்யாம் -என்று சங்கல்ப் பிக்கிற பர ப்ரஹ்மம் ஆகிற பரம காரணமாய் லோகங்களை எல்லாம் உண்டாக்கின ஒப்பில்லாத பெரிய தைவத்தினுடைய தளிர் போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகையை தவிர்ந்து –
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே நாள் தோறும் நமக்கு வாய்க்க வேணும் –

———————————————————

அவர்களோடு சம்ச்லேஷம் வேணுமோ -அவர்களோடு ஏகத்ர வாசமே அமையும் என்கிறார் -அவர்களுடைய திரள்களைக் கண்டு கொண்டு இருக்க அமையும் என்றுமாம்

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக  குளிர்ந்து இருக்கிற நீரை யுடைய கடலை யுண்டாக்கி -ஒப்பு இன்றிக்கே பலவான தன்னுடைய திருவடிகளையும் -திருத் தோள்களையும் -திரு முடிகளையும் பரப்பி -உயர்ந்து மிகவும் தழையா   நின்றுள்ள அழகிய கற்பகச் சோலையையும் -நிறை பல் நாயிற்றின் கோளுமுடைய மணி மலை போல் –பல ஆதித்யர்களுடைய தேஜஸ்ஸையும் யுடைய நீல ரத்ன பர்வதம் போலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய இவ் வழகிலே அகப்பட்ட அடியார் –

—————————————————————

அவர்களோடே ஸஹவாசமும் தான் வேணுமோ -அவர்களுடைய சேஷத்வத்தில் முடிந்த நிலமாக அமையும் என்கிறார் –

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூட்டத்துக்கு வரும் விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனாய் -அதுக்கு உறுப்பான -அநேக விக்ரஹங்களையும் யுடையான் -ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரண்ட பாபங்களையும் போக்குமவன் என்றுமாம் -பிரதிகூல நிரசனத்துக்கு உறுப்பாக யுத்த உன்முகமான திரு வாழி தொடக்கமான திவ்ய ஆயுத வர்க்கத்தை யுடையவனாய் -நித்ய யுவாவுமாய் பஞ்ச பாணனான காமனுக்கும் உத்பாதகனானவனுடைய
கோதில் அடியார் தம்-தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கே–அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையை முடிந்த முடிந்த நிலமான வாய்ப்பான புருஷார்த்தமே நேர் பட வேணும் -வேறு ஒருவருக்கு நிலம் அல்லாத புருஷார்த்தத்தை நானே ஆசைப்படுகிற எனக்கு-

——————————————————————

இப் ப்ராப்யமே எனக்கும் என் பரிஹரத்துக்கும் என்றும் வாய்க்க வேணும் என்கிறார் –

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

ஊழி தோறு ஊழி--கால தத்வம் உள்ளதனையும் / அழகிய காயம் பூ போலே இருக்கிற திரு மேனியையும் நாலு திருத் தோள்களையும் அழகிய திரு வாழி யோடே கூடின திருக் கையையும் யுடையனான என் ஸ்வாமி யுடைய பிரிவில் தரிக்க மாட்டாதே அடையாறில் சரமாவதியானவர்கள் என் ஸ்வாமிகள் -/ கோட்ப்பாடு – கோலு பாடு –

———————————————————————

இத்திருவாய் மொழி வல்லவர்கள் இதில் ப்ரதிபாதித்த பாகவத சேஷத்வத்தை பெற்று சபரிக்ரஹமாக வாழ்வர் என்கிறார் –

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

ஆழ்வார் பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதிக்கையாலே அப்படியேயான சகல லோகங்களிலும் புகுந்து -தான் பூர்ணனாவதுவும் செய்து -ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக் கணித்த கண்களை யுடையனாவனை –
ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய்மொழி வல்லார் சபரிகரமாக பாகவத சேஷத்வம் ஆகிற பதத்தை பெற்று கார்ஹஸ்த்யத்தை நடத்துவர் –

—————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: