திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-10-

கீழ் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -இரண்டிலுமாக அவனுக்கு தம்மை அநந்யார்ஹ சேஷமாக அனுசந்தித்து மிகவும் ப்ரீதரானவர் –
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே -அவ்வளவில் பர்யவசியாதே -அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திருவடிகளிலே சேஷத்து அளவும் சென்று -அவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்று அத்யவசித்து –
ஐஸ்வர்யம் ஆத்ம பிராப்தி பகவத் பிராப்தி சர்வ நியந்தாவாய் ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்பு என்று சொல்லுகிற சகல புருஷார்த்தங்களும்
தனித்தனியாகவும் திரளாகவும் இந்த பாகவத சேஷத்வம் ஆகிற புருஷார்த்தத்தோடு ஒவ்வாது –
இப்புருஷார்த்தம் என்றும் நேர் பட வேணும் என்று பிரார்த்தித்து தலைக் கட்டுகிறார் -இதுவும் நமஸ் சப்தார்த்ததில் ஒன்றாய் இருக்கிறது
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றது இ றே
-இன்னம் ஈஸ்வர சேஷத்வம் நிலை நின்றதாவது -ததீயர்க்கு க்ரய விக்ரய அர்ஹம் ஆனால் ஆயிற்று –
ஒருவனுக்கு ஓன்று உண்டானால் புத்ர பவ்த்ராதிகளுக்கு இஷ்ட விநியோக அர்ஹம் ஆனால் இ றே அவனுக்கு ஸ்வம்மாய் ஆயிற்று ஆவது –
இது தான் பயிலும் சுடர் ஒளியில் சொல்லிற்று அன்றோ என்னில் -அதில் இவ்வாத்மாவுக்கு நாதர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றது
இதில் நிரதிசய போக்ய பூதர் அவர்கள் -என்கிறது -ச மஹாத்மா ஸூ துர்லப -பேராளன் பேரோதும் பெரியோர் –
-தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலை மேலாரே -என்று இ றே அளவுடையார் வார்த்தை
-இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் இதுக்கு நிதர்சனம் -கச்சதா -இத்யாதி –

—————————————————————-

விஸ்மய நீயமான த்ரை லோக்யத்தை ஆளுமதில் காட்டிலும் -பாகவத சேஷத்வமே எனக்கு நிரதிசய போக்யம் என்கிறார் –

நெடுமாற்கு  அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நெடுமாற்கு -மால் என்று பெரியோன் –நெடுமை -அதின் மிகுதி –சர்வ சேஷி என்றபடி -தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம் -அவனுடைய சேஷித்வத்தின் எல்லையைச் சொல்லுகிறார் -தாம் சேஷத்வத்தில் எல்லையில் நிற்கப் பார்க்கிறார் ஆகையால் –
அதாவா –
மால் -என்று வ்யாமுக்தன் —நெடுமை அதின் மிகுதியாய் -அதி வ்யாமுக்தன் -தன் திருவடிகளை பற்றினாரை தன்னளவு அன்றிக்கே தன்னுடையார் அளவும் செல்ல நிறுத்தும் படியான வ்யாமோஹத்தை யுடையோன் என்கை -அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அடிமை செய்வன் போல்-அவனைக் கருத-சர்வ சேஷியானவனை குறித்து மநோ ரதித்த மாத்திரத்திலே போல் -மித்ர பாவமே யுள்ளது ஆராய்ந்தால் என்கை –
வஞ்சித்து-தடுமாற்றற்ற தீக் கதிகள்-நிவாரகர் இல்லாமையால் கூச்சம் அற்று நின்று படவடிக்கிற அவித்யாதிகள் ஆகிற விரோதி வர்க்கம் அடங்க -இடையிலே ஒரு ஸத்கர்மம் பண்ணிலே இ றே இவை இவற்றுக்கு கூச வேண்டுவது
முற்றும் தவிர்ந்த -ஒரு காலே நிச்சேஷமாக போயிற்றன-நானே போக்கிக் கொள்ளும் அன்று இ றே க்ரமத்திலே போவது –சர்வே பாப்மான ப்ரதூயந்தே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இ றே அவன் போக்கும் போது இருப்பது தவிர்ந்த பிரகாரம் என் என்னில் -வஞ்சித்து –தவிர்ந்த -மத்திய ராத்ரத்திலே வஞ்சித்து போவாரைப் போலே போனமை தெரியாதபடி போயிற்றன -சும்மெனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –தடுமாற்ற –தீக் கதிகள் முற்றும் வஞ்சித்து தவிர்ந்த -என்னுதல் –அடிமை செய்பவன் போல் அவனை வஞ்சித்து –கருத –முற்றும் தவிர்ந்த -என்னுதல்
சதிர் நினைந்தால்-உறுவன பார்க்கில் -ததீயரை அன்றோ பற்ற அடுப்பது
கொடுமா வினையேன்-ஹர்ஷம் மிக்க அளவிலே இது சொல்லிற்று என் என்னில் பாட்டுக் கேட்ப்பார் பாவியேன்-என்னுமா போலே என்னுதல் -முதலிலேயே சரம அவதியான பாகவத விஷயத்திலே தலை வைக்கப் பெற்றிலேன் என்று வெறுக்கிறார் ஆதல் -இது கிடக்க பிரதம அவதியிலே நின்று துவங்கினேன் என்கிறார்
அவன் அடியார் அடியே-தன் திருவடிகளிலே தலை சாய்த்தால்-தான் சேஷியாய் இருக்கை அன்றிக்கே அவர்களை ஒழிய செல்லாத வ்யாமுக்தனுடைய திருவடிகளோ பாதியானார் திருவடிகளை அன்றோ பற்ற அடுப்பது -அவன் ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனால் அவனுக்கு பிரிய விஷயத்தை அன்றோ பற்ற அடுப்பது -அவதாரணத்தாலே -அங்கு சாமயா பன்னராய் இருக்குமவர் அல்லர் -அவன் சேஷித்வ எல்லையில் நிற்குமா போலே இவர் சேஷத்வ எல்லையில் நிற்கிறார்
கூடும் இது வல்லால்-விடுமாறு எனபது என்னந்தோ-ஐஸ்வர்யாதிகளைப் பற்றினால்-அவற்றை விட்டு பகவத் விஷயத்தை பற்றலாம் –அதிலே நின்றால் சரம அவதியான இதிலே புகுரலாம் -இதுவே நின்றால் மேல் கந்தவ்ய பூமி இல்லை என்கை
அந்தோ -பாகவத சேஷத்வ புருஷார்த்தத்தோடு ஐஸ்வர்யம் ஓவ்வாது என்று பேசிக் கழிக்க வேண்டுவதே -என்கிறார் –
வியன் மூ வுலகு பெறினுமே–விஸ்மய நீயமான த்ரை லோக்யத்தை பெ றி லும் -காடு மோடையும் திருத்தி ஆச்சர்யமாக பண்ணி எனக்கு தந்தாலும் விடுமாறு என்பது என்
பெறினும்-பெறும் தனையும் இப்படிச் சொல்லி பெற்றவாறே அதில் தோள் மாறி சொன்ன வார்த்தை அன்று -பெறி லும் இதுவே வார்த்தை -ஐஸ்வர்யத்துக்கு லோக பரிக்ரஹம் உண்டாகையாலே அத்யந்த வி சத்ருசமாய் இருக்கச் செய் தேயும் நான் பற்றின பாகவத சேஷத்வத்தோடு ஒவ்வாது என்கிறார் –

————————————————————————

ஐஸ்வர்ய கைவல்யங்கள் இரண்டும் கூடிலும் நான் பெற்ற பாகவத சேஷத்வம் ஆகிற புருஷார்த்தத்தோடு ஒவ்வாது என்கிறார் –

வியன்  மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

வியன் மூ வுலகு பெறினும்-சிறப்புடைத்தான ஐஸ்வர்ய புருஷார்த்தைப் பெறிலும்
போய்த்-தானே தானே ஆனாலும்-சம்சார சம்பந்தம் அற்று போய்க் கேவல அனுபவம் பண்ணப் பெற்றாலும் –தானே தானே-என்கிற வீப்சையாலே -பார்யா புத்ராதிகளோடு களிக்கும் அத்தை விட்டு பரம பதத்தில் போய் -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்கும் அத்தையும் விட்டு -கேவலம் தானே யாகை-
புயல் மேகம் போல் திருமேனி-அம்மான்-வர்ஷூ கவலா ஹகம் போலே இருக்கிற வடிவை யுடையனாய் -அவ்வடிவைக் காட்டி -இருந்ததே குடியாக -தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் -நிரதிசய போக்யமான வடிவையும் -விரூபன் ஆனாலும் விட ஒண்ணாத சம்பந்தத்தையும் யுடையவன் என்றுமாம் –
புனை -பூம் கழல் அடிக் கீழ்-புனைய பட்ட பூவையும் -வீரக் கழலையும் யுடைய திருவடிகளின் கீழே
சயமே அடிமை தலை நின்றார்-ஸ்வயம் பிரயோஜனமாக -எல்லா அடிமைகளையும் -செய்யுமவர்கள் -என்னுதல் -அவனுடைய ஸுந்தர்ய ஜெயத்தாலே தோற்று எல்லா அடிமைகளையும் செய்யுமவர்கள் -என்னுதல் –சயம் -ஸூயம்/ ஜெயம் என்னுதல் –
திருத்தாள் வணங்கி -ஐஸ்வர்ய அனுபவத்தாலும் ஆத்ம அனுபவ ஸூ கத்திலும் -அவன் விக்ரஹத்துக்கு தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தேகத்தில் ஏக தேசத்தைப் பற்ற அமையும் என்கிறார்
இம்மையே-பயனே இன்பம் யான் பெற்றது-உறுமோ -ஐ ஹிகத்திலே நான் பெற்ற பிரயோஜன ரூபமான ஸூ கத்தை ஒக்குமோ –
பாவியேனுக்கே–நிலை நின்ற புருஷார்த்தத்தின் எல்லைக்கும் அபுருஷார்த்தத்துக்கும் வாசி சொல்ல வேண்டும்படியான பாபத்தை பண்ணினேன் -பகவத் விஷயம் அல்லாமையாலே ஆத்ம பிராப்தி அபுருஷார்த்தம் -ஐஸ்வர்யம் போலே அஸ்த்திரம் இல்லாமையால் நிலை நின்ற புருஷார்த்தம் என்கை –

—————————————————————-

ஐஸ்வர்ய கைவல்யங்களில் வி லக்ஷணமான பகவத் ப்ராப்தியைப் பெற்றாலும் இங்கே இருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடு ஒவ்வாது என்கிறார் –

உறுமோ  பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

உறுமோ பாவியேனுக்கு–ஆத்ம அனுபவத்தை குறித்து சொன்ன வார்த்தையை பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் -கீழ்ச் சொன்னவை போலே கழிக்க ஒண்ணாதே சரம அவதி இல்லாமையால் உறுமோ -என்கிறார் -பாவியேன் -பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும் வாசி சொல்ல வேண்டும் படி பாபத்தை பண்ணினேன் –இவ்வுலக மூன்றுமுடன் நிறைய-என்று தொடங்கி —நாள் மலரடிக் கீழ்-புகுதல் –உறுமோ
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய-தன் வாசி அறியாத லோகம் மூன்றும் ஒருக்காலே நிறையும் படியாக -வற்றி பாழாய்க் கிடந்த ஏரி வர்ஷியா நிரம்பி நிற்குமா போலே –
சிறுமா மேனி நிமிர்ந்த-கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படியாக எல்லை காண ஒண்ணாத வை லஷண்யத்தை யுடைத்தாய் இருக்கை -இவ்வடிவை யாயிற்று உலகம் மூன்றும் உடன் நிறையும் படி நிமிர்த்தது
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்–வாத்சல்ய ஸூ சகமான அழகிய திருக் கண்களை யுடைய என்னுடைய ஸ்ரீ வாமனன் -இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் தன் திருவடிகளை வைத்து வாழ்வித்தான் –என்னைத் தன் கண் அழகாலே யொடி எறிந்தான் -இந்திரனுக்கு ராஜ்யம் கூறு பட்டது -இவருக்கு அழகு கூறு பட்டது -உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -என்ன கடவது இ றே
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்-புகுதல் அன்றி-இது இ றே இவருடைய வேப்பங்குடி நீர் -ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –
அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –
என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இ றே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இ றே –

——————————————————————-

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு  உகந்த பகவத் கைங்கர்யம் சித்திக்குமாகில் -அவர்கள் சஞ்சாரத்தால் ஸ்லாக்யமான இஜ் ஜகத்தில் இருப்பே நிரதிசய புருஷார்த்தம் என்கிறார்

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

இங்கே திரிந்தேற்கு -பாகவத கைங்கர்யத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் பூர்ணமாக கிடைப்பது பரம பதத்தில் யன்றோ என்ன -அவ்வனுபவம் அவன் பிரசாதத்தாலே இங்கேயே கிடைக்குமாகில் இங்கேயே வர்த்தித்தால் சேதம் என் என்கிறார் என்றுமாம் –அங்குத்தை அனுபவத்துக்கும் அவன் பிரசாதமே இ றே ஹேது -இங்கேயே கிடைக்குமாகில் சேதம் என் -என்கை –
இழுக்கு உற்று என்-தண்ணிதானது என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த-மிக்க பரப்பை யுடைய பூமியை -பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்து நோக்கி -ஸ்ருஷ்ட்டி காலத்திலே உமிழ்ந்த –
செங்கோ லத்த பவள வாய்ச்-பிரளயத்தில் தள்ளிலும் விட ஒண்ணாத திரு அதரத்தை யுடையவன் -சிவந்து அழகிதான பவளம் போலே இருந்துள்ள திருவதரம்
செந்தாமரைக் கண் என் அம்மான்-என்னை நோக்காலே-ஜிதம் -என்னப் பண்ணினவன் -யுக்தமான குணத்தாலும் அழகாலும் என்னை எழுதிக் கொண்டவன் –
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்-பொங்கி எழா நின்ற கல்யாண குணங்கள் வாயிலே யுளவாய் –ஆற்றுப் பெருக்கு போலே கிளர்த்தியை யுடையதாய் புக்காரைக் கொண்டு கிளர வற்றான குணங்கள்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்-சர்வ இந்திரிய அபஹார ஷமமான வடிவு என் மனசிலே சந்நிஹிதமாய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்-அவ்வடிவுக்கு அனுரூபமான மலர்கள் கையிலே யுளவாய்
வழி பட்டு ஓட அருளிலே–நெறி பட்டுச் செல்லும் படி அருள பெறில் -மநோ வாக் காயங்கள் அவன் திருவடிகளிலே நிரந்தரமாக அடிமை செய்யும் படி -அவன் பிரசாதத்தை பெறில் –இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்-பாகவத ப்ரிய ரூபமான -பகவத் கைங்கர்யத்தை -அவன் பிரசாதத்தாலே -இங்கே பெறில் -அதுவே புருஷார்த்தம் -என்கை –

—————————————————————-

அந்த பகவத் அனுபவத்தை பரம பதத்தில் தந்தாலும் -அத்தோடு கீழ்ச் சொன்ன ஐஸ்வர்யாதிகளைச் சேர்த்துத் தந்தாலும் -அது இங்கே -தொண்டர்க்கு அமுது உண்ண -அடியார்க்கு இன்ப மாரி–கேட்டாரார் வானவர்கள் -என்று பாகவத ப்ரிய ரூபமாக திருவாய்மொழி பாடி அனுபவிக்கிற ரசத்தோடு ஒக்குமோ -என்கிறார் –

வழி  பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

வழி பட்டு ஓட அருள் பெற்று–கைங்கர்யத்தில் நெறி பட்டுச் செல்லும் படி அவன் பிரசாதத்தை பெற்று –
மாயன் -அத்யாச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளாலே எல்லாரையும் தோற்பிக்குமவனுடைய
கோல மலர் அடிக்கீழ்–தர்ச நீயமான புஷ்ப்பம் போலே இருந்துள்ள திருவடிகளின் கீழே
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி-வெள்ளத்து –ஆறு பெருகுமா போலே சுழித்துச் செல்லுகிற தேஜஸ் சமுத்ரமான பரம பதத்தில் -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன
இன்புற்று இருந்தாலும்--ஏஷஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்திப்பிக்க -ஆனந்த நிர்ப்பரனாய் இருந்தாலும்
முழுதும் -கீழ்ச் சொன்ன ஐஸ்வர்யாதிகளையும் -இத்தோடு கூடப் பெற்றாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்-பிறந்து –தாழ்வுக்கு எல்லையாம் படி கை கழியப் போன சரீரத்தோடு பிறந்து –
தன் சீர் -நித்ய ஸூ ரிகளும் குமிழ் நீர் உண்ணும் கல்யாண குணங்களை
யான் கற்று-நித்ய சம்சாரியாய் -அந்த குணங்களுக்கு அடைவு அல்லாத நான் அறிந்து –
மொழி பட்டு ஓடும் -அவை உள் அடங்காமையாலே சொல்லாய் ப்ரவாஹியா நின்றுள்ள
கவி அமுதம்-நுகர்ச்சி உறுமோ முழுதுமே–திருவாய் மொழி யாகிற அம்ருதத்தை அனுபவிக்கையோடு ஒக்குமோ –சுடர்ச் சோதி-வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்–முழுதும் —

——————————————————————–

யுக்தமான  ஐஸ்வர்யாதிகளும் -சேஷியாய் ஜெகஜ் ஜென்மாதி காரணமான -சர்வேஸ்வரனாய் நிரதிசய ஆனந்தியாய் இருக்கும் இருப்பும் – பாகவத பிரிய ரூபமாக  திருவாய் மொழி பாடி  அனுபவிக்கிற ரசத்தோடு  ஒவ்வாது என்கிறார் –

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

நுகர்ச்சி உறுமோ -திருவாய் மொழி முகத்தால் பகவத் குணங்களை அனுபவிக்குமத்தோடு ஒக்குமோ –
மூ வுலகின்-வீடு பேறு -தன் சங்கல்ப ஏக தேசத்தாலே ஜகத் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரமாம் படி இருக்கும் ஐஸ்வர்யம்
தன் கேழ் இல்-மிடுக்குக்கு தனக்கு ஒப்பு இன்றியிலே இருக்குமதாய்-
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட– -யுத்தம் என்றால் கிளர்ந்த ஒளியை யுடைத்தாய் -சீற்றத்தால் சிவந்த முகத்தை யுடைத்தான குவலயா பீடத்தை முடித்த –
பொன் ஆழிக்கை–அழகிய திரு வாழி மோதிரத்தாலே அலங்க்ருதமான திருக் கையை யுடையவன் –குவலயா பீடத்தின் கதுப்பிலே யடித்த போது -கையும் திரு வாழி மோதிரமும் இருந்த படி –
என் அம்மான்-கையும் அறுகாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன் -யுகவாதாரை மிடுக்காலே அழித்தான் -உகப்பாரை அழகாலே அழித்தான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்-ஜாதி உசிதமான சிவந்த தலை மயிரை யுடையராய் -அக்னி ஜ்வாலை போலே நோக்கா நின்ற கண்களை யுடையராய்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்-ஒரு சேஷி யுண்டு -என்னும் கூச்சம் இன்றிக்கே -ஈஸ்வரோஹம் -என்று இருக்கையாலே -மெலிந்து வளருமவர்கள் அல்லாமையாலே நீண்ட வடிவை யுடைய அஸூரர்களுடைய உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்-பிராணன்களை முடித்து அதுவே தாரகமாக சஞ்சரிக்கும் பெரிய திருவடியை கருத்து அறிந்து நடத்துமவனுடைய
பெரிய தனி மாப் புகழே––நிரவதியாய் -அத்விதீயமான கல்யாண குணங்களை –திருவாய் மொழி முகத்தால் அனுபவிக்குமத்தோடு ஒக்குமோ -ஜகத் காரணமாய் -சேஷியாய் இறுமாந்து இருக்கை –

——————————————————————-

பாகவத சேஷத்வத்தில் சத்தை யுண்டாக அந்தர்பூதமான பகவத் அனுபவம் ஒழிய -தனியே -எனக்கு -என்று வரும் -பகவத் அனுபவமும் -வேண்டா என்கிறார் –

தனி  மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

தனி மாப் புகழே -உபமான ரஹிதமாய் -அழகிதான புகழே -நாம ரூபங்கள் அழிந்து தமோ பூதமான சமயத்திலே இவற்றை யுண்டாக்க நினைத்த மஹா குணம் –
எஞ்ஞான்றும்நிற்கும் படியாத் -கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே -என்று அத்தையே அநுஸந்திக்கும் படியாக
தான் தோன்றி-அர்த்திப்பாரும் இன்றிக்கே இருக்க -பூர்ணனாய் இருக்கிற -தான் -தன் பேறாக -பஹுஸ்யாம் -என்று தோன்றி –
முனி மாப் பிரம முதல் வித்தாய்-சங்கல்ப் பிக்கிற பர ப்ரஹ்மம் ஆகிற -பரம காரணமாய் -இவற்றின் துர்த்தசையை தானே நினைத்து -தன் பெருமை பாராதே த்ரிவித காரணமும் தானேயாய் –
உலகம் மூன்றும் முளைப்பித்த-சகல லோகங்களையும் யுண்டாக்கின
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்-புகுதல் அன்றி -உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இ றே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்
அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே–/ –நனி -மிகுதி -/ மா -வேண்டற்பாடு
நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –
நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

————————————————————

பாகவதர்களோடு  சம்ச்லேஷம் வேணுமோ – -அவர்களுடைய திரள்களைக் கண்டு கொண்டு இருக்க அமையும் -என்கிறார் –

நாளும்  வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

நாளும் வாய்க்க நங்கட்கு–இத்தையே புருஷார்த்தமாக
விரும்பி இருக்கிற நமக்கு கால தத்வம் உள்ளதனையும் இதுவே வாய்க்க வேணும் –
நளிர் நீர்க் கடலைப் படைத்து -குளிர்ந்து நீரை யுடைய கடலை யுண்டாக்கி –கண் வளர்ந்து அருளுகைக்கு சத்ருசமான ஜலம் என்கை
தன்-தாளும் தோளும் முடிகளும்-சமன் இலாத- உபமான ரஹிதமான திவ்ய அவயவங்கள் -முடிகள் ஆயிரத்தாய் -என்கிறத்தைச் சொல்லுகிறது
பல பரப்பி--கடல் பாழ் தீரும் படி வடிவாலே பாரித்து –
நீளும் படர் பூங்கற்பகக்-காவும்-ஓங்கி -மிகவும் தழைத்து -தர்ச நீயமான கற்பகச் சோலையும் -பூ என்று பரப்பு மாறப் பூத்த -என்றுமாம் –
நிறை பல் நாயிற்றின்-கோளும் உடைய -நிறைந்த ஒளியை யுடைய பல ஆதித்யர்களுடைய தேஜஸ் ஸை யும் -கோள் என்று க்ரஹங்களாய் -அவை தான் தேஜோ பதார்த்தங்கள் ஆகையால் தேஜஸ் ஸை லஷிக்கிறது –
மணி மலை போல்-கிடந்தான் -ஒரு ரத்ன பர்வதம் சாய்ந்தால் போலே யாயிற்று கண் வளருகின்ற படி
தமர்கள் கூட்டமே–-நாளும் வாய்க்க –இப்படி வைத்த கண் வாங்க ஒண்ணாத படி கண் வளர்ந்து அருளுகிறவனை அன்று நாளும் வாய்க்க -என்கிறது -கிடந்ததோர் கிடக்கை -என்று கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளில் நானும் ஒருவனாய் அந்வயிக்க வேணும் -என்னுதல் -அத்திரளைக் கண்ணாலே காண அமையும் என்னுதல் –
தமர்கள் கூட்டம் என்று -பசியர்-காலா வரிசிச் சோறு உண்ண வேணும் -என்னுமா போலே தம் அபி நிவேசம் தோற்ற அருளிச் செய்கிறார் -ஸத் பி ரேவ சஹா சீத -என்றும்– ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -என்றும் சொல்லக் கடவது இ றே-

அவன் பண்ணின உபகாரத்துக்கு தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சம்ச்லேஷிக்க வேணும் என்றார் கீழ் -கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரளைக் கண்ணாலே காண அமையும் என்கிறார் இதில் –

—————————————————————-

அவர்களோடே ஸஹவாசமும் தான் வேணுமோ -அவர்களுடைய சேஷத்வத்தில் முடிந்த நிலமாக அமையும் என்கிறார் –

தமர்கள்  கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

தமர்கள் கூட்ட வல்வினையை-நாசம் செய்யும் -தமர்களுடைய கூட்டத்துக்கு விரோதியாய் பிரபலமான பாபம் -என்னுதல் -தமர்களுடைய திரளான வல்வினை என்னுதல் -தமர்கள் நல்வினையை கூட்டக் கூட்ட நாசம்செய்யும் என்னுதல் –இத்தலைக்கு சூழ்த்துக் கொள்ளுகையே யாத்ரையாய் இருக்கும் போலே யாயிற்று -அவனுக்கு கழிக்கையே யாத்ரையாய் இருக்கும் படி –
சதிர் மூர்த்தி-இவர்கள் விரோதி போக்குகைக்கு உறுப்பான அநேக விக்ரகங்களை யுடையவன் –இவர்கள் அடிமைக்கு அநேக சரீர பரிக்ரஹம் பண்ணுமா போலே யாயிற்று -இவன் ரக்ஷண அர்த்தமாக பல வடிவு கொள்ளும் படி –அமர் கொள் ஆழி சங்கு வாள்-வில் தண்டாதி பல்படையன்-குமரன் -விரோதி நிரசனத்துக்கு உறுப்பாக யுத்த உன்முகமான திரு வாழி தொடக்கமான திவ்ய ஆயுத வர்க்கத்தை யுடையவனாய் –குமரன் -நித்ய யுவாவாய் இருக்கும் –
கோல வைங்கணை வேள் தாதை-கோதில் அடியார் தம்-தமர்கள் தமர்கள் தமர்களாம்-பஞ்ச பாணனான காமனுக்கும் உத்பாதகனானவனுடைய -அழகுக்கு எனக்கு மேல் இல்லை -என்று இருக்கும் காமனுக்கும் அழகுக்கு உத்பத்தி ஸ்தானம் என்கை -அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்று இருக்கும் அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலம் ஆக வேணும் என்கிறார் –
சதிரே வாய்க்க -இந்த நிரதிசய புருஷார்த்தம் -என்றும் ஓக்க வாய்க்க வேணும் –
தமியேற்கே–பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானை தேடித் பிடிக்க வேண்டும்படி யாகையாலே வர்த்தமான காலத்திலே தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –

-கீழே நங்கட்கே-என்றார் -கேசவன் தமரர்க்கு பின்பு தனியர் அல்லாமையாலே தம்மைப் பற்றினாரை கூட்டிக் கொண்டு –இங்கு –தமியேற்கே-என்கிறது தமக்கு சம்சாரிகளில் உபமானவர் இல்லாமையால் –

——————————————————————

இப் ப்ராப்யமே எனக்கும் என் பரிஹரத்துக்கும் என்றும் வாய்க்க வேணும் என்கிறார் –

வாய்க்க  தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

வாய்க்க தமியேற்கு-புருஷார்த்தத்தில் எல்லை யளவும் அவகாஹிக்கையாலே உபமான ரஹிதனான எனக்கு இப் பேறு வாய்க்க வேணும்
ஊழி தோறு ஊழி ஊழி -கால தத்வம் உள்ள தனையும் இடைவிடாதே யாவதாத்மபாவி இதுவே புருஷார்த்தமாக வேணும் என்கை –
மாகாயாம்-பூக்கொள் மேனி நான்கு தோள்-பொன்னாழிக்கை என்னம்மான்-அழகிய காயாவின் பூ போலே இருக்கிற திருமேனியையும் கற்பக தரு பணைத்தால் போலே இருக்கிற திருத் தோள்களையும் -கற்பக தரு பூ போலே இருக்கிற திரு வாழி யையும் காட்டி என்னை அநன்யார்ஹ னாக்கினானவன்-
நீக்கமில்லா வடியார்தம்-அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்-பிரிய நினைக்கில் குருஷ்வமாம் -என்ன வேண்டும்படி விஸ்லே ஷிக்க மாட்டாதவர்களில் சரம அவதியான என் ஸ்வாமிகள் -தமர்கள் தமர்கள் தமர்கள் -என்று முடித்த எல்லையை முதலாகத் தொடங்குகிறார் –
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்-நல்ல கோட்பாடே—இருகரையர் அன்றிக்கே -சபரிகரமாக -அநந்யார்ஹராய் -அனுவர்த்தித்துச் செல்லும் நல்ல கோட்ப்பாடு வாய்க்க -கோட்ப்பாடு -கோலுபாடு –

—————————————————————–

இத்திருவாய் மொழி வல்லவர்கள் இதில் ப்ரதிபாதித்த பாகவத சேஷத்வத்தை பெற்று சபரிக்ரஹமாக வாழ்வர் என்கிறார் –

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

நல்ல கோட்பாட்டுலகங்கள்-பாகவத சேஷத்வமே புருஷார்த்தம் என்று உபபாதித்தவாறே சகல லோகங்களும் அப்படியே கட்டளை பட்டது
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-வ்யாப்தியும் தேவையாகி யன்றிக்கே புதுக் கணித்தது
அல்லிக் கமலக் கண்ணனை-இவர் ததீயரைப் பற்றின ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே புதுக் கணித்த திருக் கண்களை யுடையவன்
அந்தண் குருகூர்ச்--ஊரும் தர்ச நீயமாய் ஸ்ரமஹரமாயிற்று
சடகோபன்-சொல்லப்பட்ட-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை
வாயிரத்துள்-இவையும் பத்தும் வல்லார்கள்-இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்-நல்ல பதமாகிறது -பாகவத சேஷத்வம் -அத்தோடு த்கார்ஹஸ்த்த்யத்தை நடத்துவார்கள் –
கொண்ட பெண்டிர் மக்களே-ச புத்ர பவ்த்ரஸ் ச கண என்கிறபடியே ச பரிகரமாக பாகவத சேஷத்வத்தை அனுபவிக்கக் கடவர்கள் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: