திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-8-

இப்படி ஆழ்வாரோடு சம்ச்லேஷிக்கப் பெற்று -இவர் தம்மில் காட்டிலும் அதி ப்ரீதனான எம்பெருமான்
-இவர் வளவேழ் உலகில் படியே -தம்மை அயோக்யராக அனுசந்தித்து அகன்று -வ்ருத்த சம்ச்லேஷம் கலங்காமே
-இச்சம்ச்லேஷம் உருவச் செல்லுகைக்கு உறுப்பாக இவருடைய ஆத்ம வை லக்ஷண்யத்தை காட்டிக் கொடுக்கையாலே உபாக்ராந்தனாய்
-முதலிலே தம்முடைய ஆத்ம ஸ்வரூப அனுசந்தானம் பண்ண என்னில் -இந்த ஷூத்ரத்தில் என் என்று
அத்தை கால் கடைக் கொண்டு பிடி தாரார் என்று பார்த்து அருளி -ஆத்ம அவலோகத்துக்கு இசையும் படி யாக
நிரதிசய போக்யனான தன்னுடைய ஸ்வரூப ரூப குணாதிகளைக் காட்டிக் கொடுத்து அவ்வழியாலே –
இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹ சேஷம் என்னும் இடத்தையும் -தனக்கு நிறம் கொடுக்கும் படியான
வைலக்ஷண்யத்தை யுடைத்து என்னும் இடத்தையும் காட்டிக் கொடுத்து அருளக் கண்டு அனுசந்தித்து ப்ரீதராகிறார் –
முதலில் இரண்டரைப் பாட்டு -இருத்தும் வியந்தில் -அனுபவித்த அழகு பின்னாட்டுகிறது-என்றும் சொல்லுவர் –
ஆத்ம ஸ்வாஸ்ரயம்-என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக அதுக்கு ஆஸ்ரயமான தன்னை முற்படக் காட்டிக் கொடுக்கிறான் -என்றும் சொல்லுவர் –

————————————————————

எம்பெருமான் தன்னோட்டை கலவியாலே புதுக் கணித்து ஸுந்தரியாதிகளைக் காட்டிக் கண்டு அனுபவிக்கிறார் –

கண்கள்  சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1-

வாயும் சிவந்து கனிந்து-நிரதிசய போக்யமான செவ்வியை யுடைத்து -/ உள்ளே-வெண் பலிலகு சுடரிலகு-விலகு மகர குண்டலத்தன்-என்னோட்டை கலவியால் பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே முறுவல் செய்த திருப் பவளத்திலே சிவப்போடு -பகைத் தொடையாய் -உள்ளே விளங்கா நின்றுள்ள -திரு முகத்தின் ஒளியையும் விளங்கா நின்று கொண்டு அலைந்து வருகிற மகர குண்டலத்தையும் யுடையான் –சங்கு -கதை -வாள்-ஆழியான் -ஒருவன் -அத்விதீயன் –

———————————————————–

சர்வ விலஷணனாய் இருக்கிற எம்பெருமான் -என் உள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே -என் சரீரத்தின் உள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் -என்னுள்ளான்-என்ன வேண்டும் இடத்தில் -அடியேன் உள்ளான் -என்கையாலே -அடியேன் என்றும் -நான் என்றும் பர்யாயம் –

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

சர்வ கதனாய்-தனக்கு உபமான ரஹிதனாய் மேற்பட்ட பதார்த்தங்களுக்கும் மேற்பட்டு உள்ளான் -லோகத்தில் காண்கிற வி லக்ஷணமான நாற்றத்தை யுடைய ஆலையை அனுபவித்தால் உள்ள ஸூகத்தில் அஸ்திரத்வாதி தோஷம் நீக்கினால் உள்ள வைலக்ஷண்யத்தை யுடைத்தாய் -நித்யமுமாய் இருந்துள்ள ஆனந்தத்தை யுடைத்தான –
உணர்விலும்பர் ஒருவனே-அறிவில் மேற்பட்டு அத்விதீயனாய் உள்ளான் -அறிவில் மேற்பட்டு இருந்துள்ள அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் உள்ளவன் என்றுமாம் –

————————————————————–

கேவல கிருபையாலே-ஸ்வ விஷயமாக இச்சையையும் பிறப்பித்து -என்னோடே வந்து சம்ச்லேஷித்து -சம்ச்லேஷ ஸ்த் தைர்யர்த்தமாக-ஞானானந்த அமல ஸ்வபாவனாய் -சம்ச்லேஷ தைகரசமான -ஆத்ம ஸ்வரூபத்தையும் காட்டி அருளினான் என்கிறார் –

உணர்விலும்  உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

அறிவில் மேற்பட்டு இருந்துள்ள -அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவன் பிரசாதத்தாலே பெறுகைக்காக என்னுடைய ஹிருதயத்திலே இருத்தினேன் -இச்சித்தேன் -என்றவாறு –
அதுவுமவன தின்னருளே-அவ்விச்சை பிறந்ததவும் அவனது பிரசாதத்தாலே –
வைஷயிக ஞானமும் -பிராணனும் -சரீரமும் -மற்றும் உண்டான அபரிச்சேத்யமான பிரகிருதி விகாரங்களும்-ப்ரக்ருதியும் – -அபுருஷார்த்தம் என்னும் அறிவை யுடையேனாம் படி பண்ணி -இவை புருஷார்த்தம் அல்லாமை யைக் காட்டின மாத்திரம் அன்றிக்கே -ஞானானந்த ஸ்வரூபமான ஆத்ம சாஷாத்கார பர்யந்தமாக என்னை நிர்வஹித்து -அவ்வளவில் பர்யவசியாதே-என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி ஸ்வ ப்ரகார தயா நான் தனக்கு அத்யந்த சேஷம் என்னும் இடத்தையும் காட்டி அருளினான் –

—————————————————————-

இவ்வாத்மா தனக்கு அத்யந்த போக்யம் என்னும் இடத்தையும் காட்டித் தந்து அருளினான் என்கிறார் –

யானும்  தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

யானும் தானாய் ஒழிந்தானை-யாதும் யவர்க்கும் முன்னோனை-தானும் சிவனும் பிரமனுமாகிப்-பணைத்த தனி முதலை-
சேதன அசேதனங்களுக்கு காரணமுமாய் -விபூதி யந்தர் பூதனான தானும் -ப்ரஹ்மாவும் ருத்ரன் தொடக்கமான காரிய வர்க்கத்துக்கும் காரணமானவனை
தேனும் பாலும் கன்னலும்-அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே–நிரதிசய போக்யமாய் -என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமாய் நின்ற வி லக்ஷணமான ஆத்மாவை தனக்கு சேஷமாக யுடையவனை அறியப் பெற்றேன் –யாதும் யவர்க்கும் முன்னோனை–தானும் சிவனும் பிரமனுமாகிப்-பணைத்த தனி முதலை-தேனும் பாலும் கன்னலும்-அமுதுமாகித் தித்தித்து என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே-என்று அந்வயம்
இருந்ததே குடியாக சர்வ சேதனரையும் -விசேஷித்து அவர்களில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும் -தன்னுடைய திவ்ய சங்கல்பத்தாலும் -தன்னுடைய திவ்ய அவதாரங்களாலும் -அவர்களுடைய இச்சாதிகளுக்கு அனுகுணமாக ப்ராக்ருதமான ஐஸ்வர்ய தாரதம்யத்தைக் கொடுத்து -நடத்துகிறவன் –
அங்கனம் அன்றிக்கே –
என்னை ஒருவனையும் விசேஷித்து முற்றூட்டாக கைக் கொண்டு ஆத்ம ஸ்வரூப அனுகுணமாக ப்ராக்ருதமான சப்தாதி விஷய அனுபவம் ஹேயம் என்னும் இடத்தையும் -ஆத்ம ஸ்வரூபம் பரதந்த்ரம் என்னும் இடத்தையும் -ஆத்மா நிரதிசய போக்யம் என்னும் இடத்தையும் -அறிவித்தார் -என்று இவ்விரண்டு பாட்டுக்கும் கருத்து –
நின்றனர் இருந்தனர் -பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யத்தையிலே தாத்பர்யம் –
கீழ் ஆத்மா பகவத் சேஷத்வ பர்யந்தமாக அனுசந்திக்கப் பட்டது -இனி மேல் ஆத்மா மாத்திரம் அனுசந்திக்கப் படுகிறது –

—————————————————————–

நான் பகவத் பிரசாதத்தாலே அறிந்த இவ்வாத்மவஸ்து-ஒருவருக்கும் அறியப் போகிறது  அன்று  -என்கிறார் –

நின்ற  ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

தேஹ இந்திரியாதிகளுக்கு ஸ்வாமியாய் நின்ற விலக்ஷணமான ஆத்மாவை ஆராய்ந்தேனுக்கு-அதினுடைய வைலக்ஷண்யம் ஒரு பிரகாரத்தை சொல்லி –இப்படி இருந்தது -என்று எத்தனையேனும் அறிவுடையார்க்கும் ஒன்றும் அறிய ஒண்ணாது -அறிந்தால் பின்னை சாஷாத் கரிக்க ஒண்ணாது –
போய்ப் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற -அன்னம் பிராணாதிகளுக்கு பரனாய் -பிரகிருதியின் தன்மை ஒன்றும் இல்லாத படி அத்தோடு அற ஓட்டற்று-ப்ராக்ருதமான படியால் நன்று என்றும் தீது என்றும் அறிய ஒண்ணாதே அற விலக்ஷணமாய் இந்த்ரிக ஞானத்துக்கு எட்டாது இருக்கும் -இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

——————————————————-

யோக சாஸ்திரத்தில் ஆத்ம ஸ்வரூப ப்ராப்யுபாயமாக சொல்லுகிற இந்திரிய ஜயாதி ரூபமான யோகத்தால் பிரகிருதி வி நிர்முக்த ஆத்ம ஸ்வரூபத்தை துக்கேன பிராபிக்கலாம்-என்கிறார்-

நன்றாய்  ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

நன்றாய் ஞானம் கடந்து-இது அநு பாஷாணம் -அதவா – ஞானம் கடந்து-போய்-நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து-ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்-உலப்பில் அதனை-யுணர்ந்து உணர்ந்து-நன்றாய்-சென்று-என்று கொண்டு -சஷூராதி கரணங்களுக்கு விஷயமான சப் தாதி விஷயங்களிலே அகப்படாதே தப்பித் போய் போனாலும் -அவை இருந்த இடம் ஏற இழுக்கக் கடவதாய் மிகவும் பலவத்தான இந்திரிய கணத்தையும் வென்று -ஆத்மாவோடு அநாதியாக விவேவிக்க ஒண்ணாத படி -ஸம்ஸ்ருஷ்டமாய் துஸ் தரமாய் மஹதாதி விகாரங்களாலும் ஸ்வரூபத்தாலும் பெரும் பரப்பாய் நித்தியமான பிரகிருதி தத்துவத்தை மிகவும் உணர்ந்து அதில் அவகாஹனம் இன்றிக்கே சுத்தமாய் போய் அதினுடைய லாப அலாப நிமித்தமான ஸூ க துக்கங்களையும் அற விட்டு -அவற்றில் உண்டான ருசி வாசனைகளும் போனால் –
அன்றே அப்போதே வீடு-அதுவே வீடு-அன்று அப்போதே பிரகிருதி தொற்று அறும் -அதுவே ஆத்ம பிராப்தி யாவது
வீடாமே-இதுவும் புருஷார்த்தமாக இச்சிப்பார்க்கு புருஷார்த்தமாம் –

———————————————————————-

இங்குச் சொன்ன படியே ஆத்ம அவலோகநம் பண்ணப் பாராதே -அத்தையும் விட ஷமராகில்-அது மோக்ஷமாவதுவும் மோக்ஷத்தால் பெறும் ஸூகமாவதுவும் –

அதுவே  வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

அதுவே மோக்ஷமாவதுவும் மோக்ஷத்தால் பெறும் ஸூகமாவதுவும் என்று தேறாதே இதுவே மோக்ஷம் இதுவே ஸூ கம் என்று அத்யவசிக்க மாட்டாதார் என்றும் துக்கப் பட்டே போம் அத்தனை –

——————————————————————-

இப்படி துஸ் சம்பாதமான ஞானம் ஒரு படி கை வந்தாலும் அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் அந்த ஞானம் கை வருகைக்குப் பட்ட கிலேசம் எல்லாம் வ்யர்த்தம் என்கிறார் –

எய்த்தார்  எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

முடித்தார் என்று பல கால் சொல்லி ஸ்வ க்ருஹத்தில் பார்யாதிகளும் -அவர்களுடைய அவஸ்தையை அறிய வந்த புறம்புள்ளாரும் திரண்டு -அத்தசையிலே இவர்கள் தங்களுக்கு பயாவஹமாம் படி கூப்பிட்டு கட்டிக் கொள்ள -தாங்கள் சரீரத்தை விட்டுப் போம் போது –
எத்தனையேனும் வீத ராகரும் கூட உன்மத்தரைப் போலே அறிவு கெட்டு புத்ராதிகள் பக்கல் மிகவும் ஸ்நேஹத்தை பண்ணும் தசையில் எம்பெருமானுடைய வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து -இப்படி விலஷணன் என்று ஆத்மாவை அனுசந்திக்கக் கூடிற்று ஆகில் ஆத்ம பிராப்தி சித்திப்பது -இல்லாவிடில் செய்தது எல்லாம் வ்யர்த்தம் –
நின்ற ஒன்றை உணர்ந்து என்கிற பாட்டு தொடங்கி இப்பாட்டு அளவும் -அவர் நிஷ்க்ருஷ்ட ஆத்ம அனுசந்தான மாத்திரம் இன்றிக்கே பகவத் சேஷமான ஆத்மாவை அனுசந்திக்கிறது என்றும்
இப்பாட்டில் அந்திம ஸ்ம்ருதியும் எம்பெருமான் இவ்வாத்ம தனக்கு சேஷம் என்று இருக்குமா போலே இவன் தனக்கும் அத்தசையில் சேஷத்வ அனுசந்தானம் கூடுமாகில் அவனுக்கு ஆத்ம பிராப்தி உள்ளது -இல்லையாகில் கிடையாது -என்றும் சொல்லுவர் –

—————————————————————

அந்திம ஸ்ம்ருதியிலே ஈஸ்வரனும் ஆத்மாவும் என்று இருவர் பிரசக்தர் ஆனவாறே -இந்த தத்துவ பேதம் இல்லை -இவ் வாத்மாவும் ப்ரஹ்மமும் ஓன்று என்று கொண்டு நித்ய சம்சாரியான சேதனனையே ப்ரஹ்மமாக சொல்லுகிற மாயா வாதிகளை ஷேபிக்கிறார்

கூடிற்றாகில்  நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

சர்வேஸ்வர பரிக்ரஹம் என்னும் ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே ஆடா நின்றுள்ள -பெரிய திருவடியை தனக்கு பரிகரமாக யுடையனாய் -ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனான சர்வேஸ்வரனாகை சம்சாரியான இந்த ஜீவாத்மாவுக்கு கூடுவது அசங்கதமான சசவி ஷணாதிகள்-உண்டாகக் கூடில் –
அதுவதுவே-அந்த ஆத்ம வஸ்து அந்த ஆத்ம வஸ்துவேயாய் இருக்கும் அத்தனை –
இங்கனம் மோக்ஷம் சொல்லுவாரும் உளரோ என்னில் -பிராமண மூலமாக வன்றிக்கே -ஸ்வ புத்திகளாலே சிலவற்றை மோஷமாக காட்டி கால த்ரயத்திலும் மோக்ஷத்துக்கு யத்னம் பண்ணி வ்யர்த்தமே தட்டித் திரிவாரும் உளர் -இல்லாமை இல்லை –

————————————————————–

சாங்க்யாதி குத்ருஷ்டிகளிலே நான் புகாமே காத்து -எனக்கு சேஷியான தான் -என்னோடே வந்து நிரந்தர சம்ச்லேஷம் பண்ணுகையாலே என்னுடைய சகல துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

உளரும்  இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

உளரும் இல்லை அல்லராய்-இல்லை என்ன ஒண்ணாதே அஸ்தி மாத்ரமாய் இருப்பர் என்று சேஸ்வர சாங்க்ய மதம்
உளராய் யில்லை யாகியே-இல்லையாகியே உளர் என்று நிரீஸ்வர சாங்க்ய மதம் -இவை இரண்டையும் ஆஸ்ரித அநாஸ்ரித விஷயம் என்றும் சொல்லுவார் –
உளர் எம் ஒருவர் அவர் வந்து-என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பூரணமாய் இருந்துள்ளனர் அவற்றைக் காட்டி என்னை அடிமை கொண்டு என்னை அடிமை கொண்டு -என்னுடைய ஹ்ருதயத்திலே எப்போதும் வர்த்தியா நின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும் போலே -அசைவும் ஆக்கமும்-வளருஞ்சுடரும் இருளும் போல்-தெருளும் மருளும் மாய்த்தோமே
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே மாறி மாறி வருகிற வ்ருத்தி ஷயங்களும் -தமஸ் பிரகாசங்கள் போலே மாறி மாறி வருகிற ஞான அஞ்ஞானங்களும் போக்கப் பெற்றோம் –

——————————————————————–

நிகமத்தில் இப்பத்தும் கற்றாரை ஆழ்வார் தம்மை விஷயீ கரித்தால் போல் எம்பெருமான் தானே வந்து விஷயீ கரித்து தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் என்கிறார் –

தெருளும்  மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் ஈஸ்வரனாய் -தன்னை அனுபவிக்கைக்கு விரோதியான பிராகிருத விஷய ஞான அஞ்ஞானங்களைப் போக்கி -தன்னை ஆஸ்ரயித்தவர்களை தன் திருவடிக் கீழ் சேர்த்துக் கொண்டு அருளும் ஸ்வ பாவனான ஸ்ரீ யபதியாலே நிர்ஹேதுகமாக விஷயீ கரிக்கப் பட்ட ஆழ்வாருடைய –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: