திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-8-

மாயாக் கூத்தனில் விடாய் தீர இருத்தும் வியந்திலே இப்படி -எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளவாய்க் கொள்ள -என்கிறபடியே –
நிரவதிக ப்ரீதியோடே சம்ச்லேஷிக்க பெற்றானாய் -இவர் விடாயும் தீர்ந்து -தன் விடாயும் தீர்ந்து -தம்மிலும் அதிக ப்ரீதனானவன் –
இவர் வளவேழ் உலகின் படியே தம்மை சிறியேனுடைச் சிந்தையுள் -என்று அயோக்யராக அனுசந்தித்து அகலுவார் ஒருத்தர் –
அத்தாலே வ்ருத்த சம்ச்லேஷம் சிதிலமாம் -இஸ் சம்ச்லேஷ ரசம் கலங்காமே-இச்சம்ச்லேஷம் உருவச் செல்லுகைக்கு உறுப்பாக
இவருடைய ஆத்ம வை லக்ஷண்யத்தை காட்டுவோம் என்று காட்டிக் கொடுக்கையில் உபக்ரமித்தான் -இவர் தாம் அகல நினைப்பது –
நித்ய சம்சாரியாய்ப் போந்த இவ்வாத்மா அங்குத்தைக்கு அயோக்யம் -என்றாயிற்று -அவன் வை லக்ஷண்யத்தை காட்டிக் கொடுக்கையாவது
ஸ்வயம் பிரகாச ஞானாதி குணகமாய்-ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று பிராட்டிமாரோபாதியும்-ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதியும்
உம்மோட்டைச் சேர்த்தி நமக்கு சத்ருசமாய் காணும் இருப்பது -வந்தேறியான குறையைப் பார்க்க கடவீர் அல்லீர் காணும் என்றாயிற்று –
இந்த ஸ்வரூப வை லக்ஷண்யத்தை இவர் நெஞ்சிலே படுத்தவே இவர் நம்மை விடார் -அது செய்யும் இடத்தில்
முதலிலே ஆத்ம ஸ்வரூபத்தை பாரீர் என்னில் -அவ்வாயன்றி நான் அறியேன் -என்று நம்முடைய குணங்களிலே
கால் தாழ்ந்து புறம்பு ஒன்றிலே போகாதவர் ஆகையால் -மின்மினி போல் இருக்கிற இது கொடு கார்யம் என் -என்று
அத்தை கால் கடைக் கொண்டு பிடி தாரார் என்று பார்த்து -தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து
-இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும்
தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்
முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது –
முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான
தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள் –

————————————————————————

எம்பெருமான் தன்னோட்டை கலவியாலே புதுக் கணித்து ஸுந்தரியாதிகளைக் காட்டிக் கண்டு அனுபவிக்கிறார் –

கண்கள்  சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1-

கண்கள் சிவந்து–தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று கண்கள் ஆகிறது சிவந்து இ றே இருப்பது -இப்போது சிவந்து -என்கிறது -மாயக் கூத்தனில் விஸ்லேஷத்தாலே விவர்ணம் ஆனது -சம்ச்லேஷித்த பின்பு தன் நிறம் பெற்ற படி -கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு இசையில் காணும் இத்தனை
பெரியவாய்-ஏக ரூபமாய் இருக்கிற இதுக்கு வ்ருத்தி ஹராசங்கள் உண்டோ என்னில் -கர்ம நிபந்தமாய் வரும் அது இல்லை என்னும் காட்டில் -வாத்சல்ய நிபந்தமாய் வரும்து தவிராதே –ஆஸ்ரித சம்ச்லேஷத்தில் அவிக்ருதனாகில் ஆஸ்ரயணீயன் அன்றிக்கே ஒழியும் இ றே -அவனும் கடல் உடைந்தால் போலே தன்னளவில் விக்ருதனாகக் கடவது இ றே
வாயும் சிவந்து-கண்களே அன்றிக்கே -செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை -என்று கலவியால் பிறந்த சிவப்பைச் சொல்லுகிறது
கனிந்து -சிவப்பாய் பரிந்து போக அன்றிக்கே நெய்ப்பூறி இருக்கை நிரதிசய போக்யமான செவ்வியைச் சொல்லுகிறது –
-உள்ளே-வெண் பலிலகு சுடர் -உள்ளே விளங்கா நின்றுள்ள திரு முத்து ஒளியையும் –உள்ளே -திரு வதரத்துக்கு உள்ளுப் புகுகையினுடைய அருமை சொல்லுகிறது -வெண் பலிலகு சுடர்-சிவப்புக்குப் பரபாகமாய் கொண்டு விளங்கா நின்ற ஒளி–அது இத்தை தள்ள -இட்டளத்தில் வெள்ளம் போலே முழவா நிற்கை
இலகு-விலகு மகர குண்டலத்தன்-திருக் குழலில் இருட்சிக்கு பிரகாசகமாய் அலைந்து வருகிற திரு மகரக் குழையையும் யுடையவன் -அலைந்து வருகை யாவது இவரைப் பெற்ற பெற்றாலே -இங்கனம் சம்பவிப்பதே -என்று திரு முடியை அசையா நிற்கை –
கொண்டல் வண்ணன்-வர்ஷூகவலாஹகம் போலே வடிவு குளிர்ந்து – –
சுடர் முடியன்-தன் அழகாலே அல்லாத அழகை அடங்க முட்டாக்கிடும் திரு அபிஷேகத்தை யுடையவன் –மாயாக் கூத்தனில் விடாய் தீருகையாலே வந்த புகர்-முடிசேர் சென்னி யம்மா -என்று இவர் கூப்பிடா நிற்க இவரை உபேக்ஷித்து கவித்து இருபத்தொரு முடியுண்டோ –ரஷ்ய வர்க்கம் நோவு படா நிற்க ரக்ஷகனாய் முடி சூடி இருப்பது ஓர் ஏற்றம் யுண்டோ –
நான்கு தோளன்-இவரை அணைக்கையாலே தோள்களும் பணைத்தது-ஆத்மகுணங்கள் அளவில் நிற்பார் இவ்விஷயத்தில் தேசிகர் அல்லர் -இப்படி வடிவு அழகுக்கு அவ்வருகு அறியாது இருக்கை யாயிற்று இதில் தேசிகனாகை -பிரதமத்தில் ருசி ஜனகமாய் -பின்பு சுபாஸ்ரயமாய் -பின்பு சதா தரிசனத்துக்கு விஷயமாய் இ றே இருப்பது –
குனி சாரங்கன்-ஒண் சங்கதை வாள் ஆழியான் -மகர குண்டலத்தன் -என்கிறவோ பாதி இவையும் சில ஆபரணங்கள் இருக்கிற படி -வீரர்கள் பிடித்த வில்லாகையாலே தானே வளைந்தாயிற்று இருப்பது -வளையும் இணை நீலவில்-உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் -தர்ச நீயமான சங்கு கதை வாள் ஆழியான் –
ஒருவன்-புண்டரீகாக்ஷனாய் -காள மேக நிபஸ்யாமனாய் -சதுர்புஜனாய் -சங்க சக்ராதி திவ்யாயுத உபேதனாகையாலே அத்விதீயன் –
அடியேன் -அவனுடைய சேஷித்வம் அத்விதீயமாய் இருக்கை யாலே த்ரிவியாத்மா வர்க்கத்திலும்-இவருடைய சேஷத்வமும் அத்விதீயம் -ஸ்வரூப ஞானத்தால் அன்றிக்கே அழகுக்கு தோற்று – –அடியேன் -என்கிறார் –
உள்ளானே––யுவா குமாரா -என்று கேட்டே போம்படியான அழகு -வயிர பேழை திறந்தால் போலே அவயவ சோபையும் ஆபரண சோபையும் ஆயுத சோபையுமாய்-மிளிரா நின்றதாயிற்று –

—————————————————————

சர்வ விலஷணனாய் இருக்கிறவன் -என்னுள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே என் சரீரத்தில் வந்து கலந்தான் -என்கிறார் –

அடியேன்  உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

அடியேன் உள்ளான்-என்னுள்ளான் -என்ன வேண்டும் இடத்திலே அடியேன் உள்ளான் என்றது -அடியேன் என்கிறது -அஹம் சப்த பர்யாயம் ஆகையால் -ஞானாநந்தங்களிலும் அந்தரங்கம் பகவத் சேஷத்வம் -என்கை –
உடல் உள்ளான்-சேதனனுக்கு -திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யமாய் இருக்குமா போலே -ஆஸ்ரிதன் ஸ்வரூபத்தில் காட்டிலும் இவன் தேஹத்தை யாயிற்று ஈஸ்வரன் விரும்பி இருப்பது -செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே –
இத்தால் ஜீவ பர பேதமும் -ஜீவர்களுக்கு பரஸ்பர பேதமும் -சேஷ சேஷித்வ சம்பந்தமும் -அபரமார்த்தம் -என்றும் -ஒவ் பாதிகம் என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் அர்த்தாத ப்ரதி ஷிப்தங்கள் -ஆழ்வானுக்கு திருக் கோட்டியூர் நம்பி -அடியேன் உள்ளான் என்னப் பெற்ற படி என் -என்று பணித்தார் –
உம்முடைய திருமேனியை விரும்புகிறவன் ஆர் என்ன -சொல்லுகிறது மேல் –
அண்டத்தகத்தான்-புறத்துள்ளான்-அண்டாந்தர பூதங்களான பதார்த்தங்களோடு -புறம்புள்ள பதார்த்தங்களோடு வாசி அற சர்வகதானானவன்-சர்வ கதமான வஸ்து கிடீர் ஒரு வ்யக்த்தியில் ஏக தேசமான சரீரத்தில் அகப்பட்டது என்கை –
படியேயிது-இதுவே படி – வென்றுரைக்கலாம்-படியனல்லன்–ஸர்வதா சத்ருசமாய் இருப்பதோர் உபமானத்தை உடையான் அல்லன் –சர்வ கதமுமாய்-சர்வ நிர்வாஹகமுமாய் இருபத்தொரு வஸ்து உண்டாகில் இ றே ஒப்புக் சொல்லல் ஆவது –சொல்லும் படி தான் என் என்னில் –
பரம் பரன்-மேலானவற்றுக்கு எல்லாம் மேலானவன் –நேதி நேதி என்கிறபடியே இவ்வளவு அன்று என்னும் அத்தனை –இவ்விஷயத்தை பிரதிபத்தி பண்ணும் படி தான் என் என்னில் –
கடி சேர் நாற்றத்துள்ளாலை-வேதங்கள் நிலம் அன்று என்று மீண்டதை இவர் நிலமாக்கிப் பேசுகிறார் காணும் –கடி என்றும் –நாற்றம் என்றும் பரிமளம் -மீமிசைச் சொல்லாய் -மிக்க பரிமளம் –என்கை –கடி -என்று புதுமையாய் -செவ்விப் பரிமளம் -என்றுமாம் -பரிமளத்துக்கு உள்ளும் புறம்பும் இல்லாத படியால் நாற்றத்தில் -என்றபடி –
இன்பத் துன்பக் கழி நேர்மை-அதினுடைய அனுபவத்தால் வந்த ஸூ கத்தில் -துக்காம்சத்தை கழித்த நேர்மை யுண்டு -நுண்மை -ஸூ காம்சம் –
ஓடியா வின்பப் பெருமையோன்-ஓடியாததுமாய் -பெரியதுமான ஸூ கத்தை யுடையவன் -நித்தியமாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையவன் –
உணர்விலும்பர் ஒருவனே–ஞானானந்தத்தில் வந்தால் மேலான ஒருவன் -அத்விதீய ஞானானந்த ஸ்வரூபன் -என்கை –
ஓடியா வின்பப் பெருமையோன்-உணர்விலும்பர் ஒருவனே–-அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-

———————————————————-

கேவல கிருபையாலே-ஸ்வ விஷயமாக இச்சையையும் பிறப்பித்து -என்னோடே வந்து சம்ச்லேஷித்து -சம்ச்லேஷ ஸ்த் தைர்யர்த்தமாக-ஞானானந்த அமல ஸ்வபாவனாய் -சம்ச்லேஷ தைகரசமான -வி லக்ஷணமாய் -தனக்கு அநந்யார்ஹமுமான-ஆத்ம ஸ்வரூபத்தையும் காட்டி அருளினான் என்கிறார்-

உணர்விலும்  உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

உணர்விலும் உம்பர் ஒருவனை-உணர்விலே உளரான நித்ய சித்தர் -ஞானாதிகரான நித்ய ஸூ ரிகளுடைய சத்தாதிகள் ஸ்வ அதீனமாம் படி இருக்கிற அத்விதீயனை -ப்ராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பு இ றே ப்ராப்யம் -அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இ றே பிரார்த்தித்தது –
அவனது அருளால் உறல் பொருட்டு -அவனுடைய பிரசாதத்தாலே பெறுகைக்காக –ப்ராப்யம் அவன் என்கிற நிர்பந்தத்தோபாதி ப்ராபகமும் அவன் பிரசாதம் என்று இ றே இவர் இருப்பது -ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே யாகில் நீர் வர நின்ற அம்சம் ஏது என்னில்
என்- உணர்வினுள்ளே யிருத்தினேன்-வைத்தேன் –மதியால் –என்றது தான் இ றே -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன் -இச்சித்தேன் என்கை -இச்சை தான் ஸ்வ ஆதீனமோ என்னில்
அதுவுமவன தின்னருளே-அந்த இச்சை தானும் பிறந்தது அவன் பிரசாதத்தாலே -நின்ற நின்ற வளைவுகள் தோறும் -இவ்வளவு அவனாலே பிறந்தது -என்னும்படியாய் யாயிற்று இருப்பது -அவனுடைய நிருபாதிக ஸுஹார்த்தம் -தன் பொன்னடிக்கு கீழ் இருத்தும் வியந்து -என்று ப்ராப்ய ப்ராபகன் அவனே என்று அருத்தித்து -என்றது இ றே -அத்தை இ றே இங்குச் சொல்கிறது –
இரண்டரைப் பாட்டுக்கு மேல் -ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தை காட்டித் தந்தான் என்கிறது –
உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும்
உடம்பும்-சரீரமும்
மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்
பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி
இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து
யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே -என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் -அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் -தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இ றே –

————————————————————-

ப்ராப்தியை காட்டின அளவே அன்றிக்கே இவ்வாத்மா தனக்கு அத்யந்த போக்யம் என்னும் இடத்தையும் காட்டித் தந்து அருளினான் என்கிறார் –

யானும்  தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

யானும் தானாய் ஒழிந்தானை-கீழ் சொன்ன அநந்யார்ஹ சேஷத்வத்தில் ப்ரீதியாலே அனுபாஷிக்கிறார்
யாதும் யவர்க்கும் முன்னோனை-தானும் சிவனும் பிரமனுமாகிப்-பணைத்த தனி முதலை-காரண அவஸ்தமான சகல சேதன அசேதனங்களுக்கும் காரணமானவனை -நியத பூர்வ க்ஷண வர்த்தி இ றே காரணம் ஆவது ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே அவதரித்து -தானும் ப்ரஹ்ம ருத்ரர்களும் தொடக்கமான கார்ய வர்க்கமாய்க் கொண்டு விஸ்திருதமான அத்விதீயமான காரணம் ஆனவனை -நாம ரூபங்கள் இழந்து சக்த்த்யவஸ்தை பிரபை போலே -ஸ் வ ஸ்வரூபத்தில் -அந்தரகதமான சேதன அசேதனங்களை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே -தன் பக்கல் நின்றும் பிரதான புருஷ அவஸ்தையை யுண்டாக்கி மஹதாத் யண்ட ஸ்ருஷ்ட்டி பர்யந்தமாக ஸ்வேன ரூபேண ஸ்ருஷ்ட்டித்தும் -அண்டாந்தரப்பூத பதார்த்தங்களுடைய ஸ்ருஷ்ட்டி சம்ஹாரர்த்தமாக ப்ரஹ்ம ருத்ரகளை ஸ்ருஷ்ட்டித்தும் -பாலன அர்த்தமாக ப்ரஹ்ம ருத்ர சஜாதீயனாய் வந்து அவதரித்தவர் என்கை –
தேனும் பாலும் கன்னலும்-அமுதுமாகித் தித்தித்து -சர்வ ரஸ-என்று சேதனுக்கு அவன் இனிதாய் இருக்குமா போலே அவனுக்கும் இவன் போக்யனாய் இருக்கை –அவனுக்கு போக்யம் என்னும் ஆகாரத்தாலே இ றே ஸ்வ ஸ்வரூபம் இவனுக்கு இனிதாவது
என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற வொன்றை யுணர்ந்தேனே-என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான வி லக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் -நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம் -ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இ றே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் –
ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் -என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் -நின்றனர் இருந்தனர் பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யதையில் தாத்பர்யம் -வையதி கரண்யத்துக்கும் நாட்டார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள் -சாமானாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள் –யாதும் யவர்க்கும் முன்னோனை–என்று தொடங்கி –என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற ஒன்றான – -யானும் தானாய் ஒழிந்தானை-யுணர்ந்தேனே-என்று அந்வயம் –

————————————————

கீழ் பகவத் பிரகாரமாக ஆத்மா அனுசந்திக்கப் பட்டது -இதுக்கு மேலே நாலு பாட்டு -படகதமான ஸுக்லயத்தை நிஷ்கர்க்ஷக சப்தத்தாலே பிரித்துச் சொல்லுமா போலே ஆத்ம ஸ்வரூப மாத்ரத்தை அனுசந்திக்கிறார் -இதில் முதல் பாட்டு -பகவத் பிரசாதத்தாலே நான் அறிந்த இவ்வாத்ம வஸ்து ஒருவருக்கும் அறியப் போகிறது அன்று -அது அறிந்தாலும் சாஷாத் கரிக்கப் போகிறது அன்று -என்கிறார் –

நின்ற  ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

நின்ற ஒன்றை-தேஹ இந்திரிய மன பிராணாதி களில் காட்டில் -அந்நியமாய் -இவை அழியும் அன்றும் அழியாதே ஏக ரூபமாய் -இவற்றுக்கு நியாந்தாவுமாய் விலக்ஷணமுமான ஆத்மாவை
உணர்ந்தேனுக்கு-உயர்வற உயர் நலமுடையவன் -என்று அவன் கல்யாண குணங்களிலே இழிந்தவர் ஆகையால் -இதுக்கு முன்பு மின்மினி போலே இருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தில் கை வைத்திலர்-பரிகரமும் பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால் இத்தை அனுசந்திக்க போது பெற்றிலர் –முக்தன் நோ பஜனம் ஸ்மரன் -பண்ணுமா போலே இ றே பகவத் ப்ரவணனுக்கும் ஆத்ம ஞானம் அவிஷயமாய்-இருந்த படி -இத்தை யாராய்ந்தவாறே இருந்த படி என் –
அதன் நுண் நேர்மை அது இது என்று-ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாதுஅதனுள் நேர்மை -அதினுடைய வை லக்ஷண்யம் -/ அது இது என்று-அநு பூதங்களின் படி என்றாதல் -அநு பவிக்கிற வற்றின் படி என்றாதல் -அறியப் போகாது -/ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது-எத்தனையேனும் அதிசயித ஞானர்க்கும் ஏக தேசமும் அறியப் போகாது -கிலேச அதிகதரஸ் தேஷாம் அவ்யக்த அசக்த சேதஸாம் –
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது-வருந்தி அறிந்தாலும் சாஷாத் கரிக்க ஒண்ணாது –
சென்று சென்று பரம்பரம் ஆய்-போய் போய் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற அன்ன மயாதிகளுக்கும் பரமாய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று-அவற்றின் ஸ்வ பாவம் ஒன்றும் தட்டாத படி அவற்றோடு அற தொற்று அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்-தேகம் -தேஹத்தைக் காட்டிலும் இந்திரியம் -அத்தைக் காட்டிலும் மனஸ் ஸூ -அதில் காட்டிலும் பிராணன் -அதில் காட்டிலும் புத்தி -என்கிறதில் வை லக்ஷண்யம் உண்டாகிறாப் போலே -ப்ராக்ருதங்களில் உண்டான நன்மை தீமைகள் சொல்ல ஒண்ணாது இருக்கை
நன்றாய் -இவற்றில் காட்டில் அதி வி லக்ஷணமாய்
ஞானம் கடந்ததே–இந்திரிய ஞானத்துக்கு எட்டாது இருக்கும் –
கீழில் அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசி உண்டாய் இருக்கச் செய் தேயும் ஏக பிராமண கம்யத்வ சாம்யம் உண்டு -அதுவும் இல்லை என்கிறது இப்பாட்டில் –
-இப்பாட்டில் –சாங்க்யத்தில்-தத்வ சங்க்யானக்ரமத்தால்-ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும்படியைச் சொல்லிற்று-

——————————————————————

யோக சாஸ்திரத்தில் ஆத்ம ஸ்வரூப ப்ராப்யுபாயமாக சொல்லுகிற இந்திரிய ஜயாதி ரூபமான யோகத்தால் பிரகிருதி வி நிர்முக்த ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்கலாம் -என்கிறார் –

நன்றாய்  ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

நன்றாய் ஞானம் கடந்து போய்-அநு பாஷணம் என்றாதல் –நன்றாய் என்ற இது கிடக்க சப்தாதி விஷயங்களை ஞான சப்த்தத்தாலே சொல்லுகிறது
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து-தப்பித் போனாலும் அவை இருந்த இடத்தே இழுக்கக் கடவ பிரபலமான இந்திரிய கணத்தையும் வென்று
ஒன்றாய்க் கிடந்த-ஆத்மாவோடு சேர்ந்து விவேகிக்க ஒண்ணாத படி ஸம்ஸ்ருஷ்டமாய்
அரும் பெரும் பாழ்-மம மாயா துரத்யயா -என்கிறபடியே துஸ்தரமாய் -மஹதாதி விகாரங்களாலும் காரணமான அவ்யக்த ஸ்வரூபத்தாலும் -பெரும் பரப்பை யுடைத்தாய் -போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்கு யோக்யமாய்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-நித்தியமான பிரகிருதி தத்துவத்தை மிகவும் உணர்ந்து
நன்றாய் சென்று -பிரக்ருதி ப்ராக்ருதங்களில் கால் தாழாதே சுத்தனாய் சென்று
ஆங்கு -ஆத்ம ஸ்வரூபத்திலே
இன்ப துன்பங்கள்-செற்றுக் களைந்து-ப்ராக்ருதங்களை த்யாஜ்யம் என்று விட்டாலும் ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபம் கிடக்குமாகில் -அவை கொடு வந்து மூட்டும் இ றே -புண்ய பாப ஹேதுவான லாப அலாபங்களை பற்றி வரும் ஸூ க துக்கங்களை விட்டு
பசை யற்றால்-அவற்றை விட்டாலும் ருசி வாசனைகள் கிடக்குமாகில் பின்னையும் கர்ப்பிக்கும்-அந்த ருசி வாசனைகளும் போனால்
அன்றே அப்போதே வீடு-அம் முஹூர்த்தத்தில் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் தொற்று அற்றவாறே ஆத்ம பிராப்தி லக்ஷண மோக்ஷமாய் இருக்கும் -அதுக்கு என்ன செய்ய வேண்டுவது ஓன்று இல்லை
அதுவே வீடு வீடாமே–இதுவும் ஒரு புருஷார்த்தமாம் -சர்வேஸ்வரன் ப்ராப்யமாம் இடத்தில் -அவனுக்கு பிரகாரமாய்க் கொண்டு ஆத்மாவும் ப்ராப்யமாக கடவதாகையாலே இதுவும் புருஷார்த்தமாமே -என்கிறார் -தம்முடைய உத்தேச்யத்திலே ஏக தேசத்தை புருஷார்த்தத்தில் சரமாவதியாக நினைக்கை யாலே இ றே முன்பு இவர் இத்தை சிரித்து இருந்தது –

—————————————————————–

இங்குச் சொன்ன படியே ஆத்ம அவலோகநம் பண்ணப் பாராதே வேறு சில வழிகளால்-பிராபிக்கப் பார்க்கில் அது கை வராது என்கிறார் –

அதுவே  வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

அதுவே வீடு -அந்த ஆத்ம ப்ராப்தியே மோக்ஷம் ஆவது
வீடு பேற்று-இன்பம் தானும் அது தேறி-அம் மோக்ஷத்தை பெற்றால் வரும் ஸூ கம் ஆகிறதும் அந்த ஆத்ம அனுபவமே
தேறி -இப்படி தெளிந்து
எதுவே தானும் பற்று இன்றி-ப்ரக்ருதியிலும் பிராக்ருதமான சப் தாதி களிலும் யுண்டான பற்றடங்க அற்று
ஆதும் இலிகளா கிற்கில்-அவற்றில் யுண்டான வாசனைகளும் அற தவிரப் பெறில்-கர்மத்தை அனுஷ்ட்டித்து ஞானத்தை யுடையனாய் -ஸ்திதி பிரஞ்ஞக்க்ய அவஸ்தைகள் பிறந்து யோகமும் நிலை நின்று -ஆத்ம சாஷாத்காரம் பண்ணப் பெறில்
அதுவே வீடு -கீழ் ச் சொன்ன ஆத்ம ப்ராப்தியே மோக்ஷம் –
வீடு பேற்று-இன்பம் தானும் அது -மோக்ஷ சித்தியால் வரும் ஸூ கமும் அந்த ஆத்ம அனுபவம் –
தேறாது-இப்படி தெளிய மாட்டாதே
எதுவே வீடு எது இன்பம் என்று-எய்த்தார் –மோக்ஷம் ஆகிறது ஏது -மோக்ஷ ஸூ கமாகிறது ஏது என்று இளைத்தவர்கள்
எய்த்தார் -எய்த்தாரே–என்றும் கிலேசப் பட்டு போம் அத்தனை -நிராஸ்ரயமாக ஆத்ம ஸ்வரூபத்தை அனுசந்திக்கை நிஷ் பிரயோஜனம் -என்கை –

—————————————————————–

இப்படி துஸ் சம்பாதமான ஞானம் ஒரு படி கை வந்தாலும் அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் அந்த ஞானம் கை வருகைக்கு கீழ்  பட்ட கிலேசம் எல்லாம் வ்யர்த்தம் என்கிறார் –

எய்த்தார்  எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று-இவனுக்கு உதக்ரமண தசை பிறப்பதற்கு முன்னே -இவன் முடிகை இஷ்டமாய் இருக்கையாலே -முடிந்தால் என்று பல காலும் சொல்லுவார்கள் –இவன் கலங்கின தசையில் நெஞ்சை தெளிய விட ப்ராப்தமாய் இருக்க இவன் பயப்படும் படி முடிந்தான் முடிந்தான் என்பார்கள் –
இல்லத்தாரும் -இவன் பார்யாதிகள் ஜீவிக்கும் நாள் லோபத்தாலே சிலவற்றை மறைத்து போருகையாலே-இது ஒரு நடுவில் பெருங்குடி என் -எல்லாம் நமக்கே யாக வேணும் -இவன் போக அமையும் என்று இருப்பார்கள்
புறத்தாரும்-இவனும் இவர்களுமான சமுதாயம் தன்னை பொறாமையாலே-புறம்புள்ளார் -போக அமையும் என்று இருப்பார்கள் -பார்யாதிகளுடைய அநாத்ம குணங்களை புறம்புள்ளாருக்கு மறைத்து இ றே இவன் போரு வது –
மொய்த்து -கல்யாணத்துக்கு அழைக்க வேணும் -துக்கத்துக்கு தாங்களே வருவார்கள் ஆதரத்தாலே
ஆங்கு அலறி-மீளுகைக்காக சங்கை உண்டான தசையில் பயத்தால் பிராணன் போம்படி கூப்பிடுவார்கள் –
முயங்கத்-கட்டிக் கொள்ள -மோஹிக்க என்னவுமாம் -கூப்பீட்டாலே போகாத குறை பிராணனும் போம் படி -ஸ்நே ஹித்தார்களாக மேல் விழுந்து கட்டிக் கொள்ளுவார்கள் –
தாம் போகும் போது -இவர்களை விட்டுப் போகா நின்றோம் -என்று நெஞ்சு அங்கே கிடக்க தன்னால் மீள ஒண்ணாத படியால் சரீரத்தை விட்டு தாங்களே போகா நிற்பார்கள்
உன்மத்தர் போல் பித்தே ஏறி-வீத ராகரும் கூட உன்மாத தசையில் போலே அறிவு கெட்டு –தெளிவு பிறந்து சர்வேஸ்வரனையும் தன்னையும் அனுசந்திக்க வேண்டும் தசையில் கலங்கி
அனுராகம் பொழியும் போது -புத்ராதிகள் பக்கலிலே முன்பு ஸ்நேஹியாத நாளைக்கும் போர ஸ்நேஹத்தை பண்ணும் -இத்தசையிலே அபிமத விஷயங்களை முன்னே கொடு வந்து நிறுத்துவார்கள் -ஜீவித்த நாள் லோபத்தாலே த்ரவ்யத்தை புதைத்து வைத்து உபேக்ஷித்தவன் இப்போதாக த்ரவ்யத்தை விட்டு அவர்களை பூஜிக்க காணப் பெற்றிலோம் -என்று கீழ் ஸ்நேஹியாத நாளைக்கும் போர ஸ்நேஹிக்க தொடங்கும் –
எம் பெம்மானோ-டொத்தே சென்று அங்கு உள்ளம்-கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே––அத்தசையில் தெளிவு பிறந்து ஈஸ்வரனுடைய வை லக்ஷண்யத்தை அனுசந்தித்து -இப்படி அவனோடு ஒத்த சுத்தி இவ்வாத்மாவுக்கு உண்டு என்று அனுசந்திக்க கூடிற்றாகில் நல்ல வாய்ப்பு -ஆத்ம பிராப்தி சித்திக்கும் -அநு ராகம் பொழி யில் ஆதிபரதனைப் போலே மானாய் போகும் அத்தனை –
நின்ற ஒன்றை உணர்ந்து -என்கிற பாட்டு தொடங்கி இப்பாட்டு அளவும்- அவர் நிஷ்க்ருஷ்ட ஆத்ம அனுசந்தான மாத்திரம் இன்றிக்கே பகவத் சேஷமான ஆத்மாவை அனுசந்திக்கிறது என்றும் –
இப்பாட்டில் அந்திம ஸ்ம்ருதியும் எம்பெருமான் இவ்வாத்ம தனக்கு சேஷம் என்று இருக்குமா போலே இவன் தனக்கும் அத்தசையில் சேஷத்வ அனுசந்தானம் கூடுமாகில் நல்ல வாய்ப்பு என்று ஆண்டான் நிர்வஹிக்கும் –
பகவத் குணங்களிலே வித்தராய் இருக்கிற இவர் இது எல்லாம் அனுசந்திக்கிறது என் என்னில் இப்படி துர்லபமாய் இருக்கிற இத்தை கிடீர் எனக்கு காட்டித் தந்தது -என்று அவன் பக்கல் உபகார ஸ்ம்ருதியால் என்கிறார் –

—————————————————————

அந்திம ஸ்ம்ருதியிலே ஈஸ்வரனும் ஆத்மாவும் என்று இருவர் பிரசக்தர் ஆனவாறே -இந்த பேதம் அபரமார்த்தம் -இந்த தத்துவ பேதம் இல்லை -இவ் வாத்மாவும்  ப்ரஹ்மமும் ஓன்று என்று கொண்டு நித்ய சம்சாரியான சேதனனையே ப்ரஹ்மமாக சொல்லுகிற மாயா வாதிகளை  ஷேபிக்கிறார் –

கூடிற்றாகில்  நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

கூடிற்றாகில் நல் உறைப்பு-அநு பாஷணம்
கூடாமையைக் கூடினால்-ஆடல் பறவை யுயர் கொடி-எம்மாயனாவாத -சர்வேஸ்வர பரிக்ரஹம் என்னும் ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே ஆடா நின்றுள்ளே பெரிய திருவடியைத் தனக்கு வ்யாவர்த்தக விசேஷணமாக யுடையனாய் ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையும் யுடைய சர்வேஸ்வரனாகை -இஸ் சம்சாரியான ஜீவாத்மாவுக்கு கூடுவது -சச விஷாணம் வந்தியா ஸூ தன் என்கிற அனுப பன்னங்கள் உப பன்னமாகக் கூடில் –
அதுவதுவே-அந்த ஆத்ம வஸ்து அந்த ஆத்ம வஸ்துவேயாய் இருக்கும் அத்தனை -கருட வாஹனாய் -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் -அதி மானுஷ சேஷ்டிதனான-சர்வாதிகனாக மாட்டாது -தத்துவ ஞானம் பிறந்தவாறே -வஸ்து வஸ்துவந்த்தரமாமோ-அந்யத்த்ரவ்யம்ஹீ நைதி தத்ர வ்யதாம் யத-
வீடைப் பண்ணி-நித்ய சித்தருக்கும் அவ்வருகான தத்துவமாக நித்ய சம்சாரியை சொல்லுவர் உண்டோ என்னில் அப்படி இருப்பாரும் உண்டு என்கிறார் –
யொரு பரிசேவீடைப் பண்ணி-சாஸ்திர மூலமாக வன்றிக்கே அவித்யா நிவ்ருத்தியே மோக்ஷம் என்று ஸ்வ புத்தியால் ஒன்றைக் கட்டி
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்-ஓடித் திரியும் யோகிகளும்-உளரும்-பூத பவிஷ்யத வர்த்தமான கால த்ரயங்களிலும் உளராய் -நிஷ் பிரயோஜனமாக தட்டித் திரியும் மகா யோகிகளும் உளர் –
இல்லை அல்லரே–இல்லாமை இல்லை -காலம் அநாதி -பண்ணி வைக்கும் பாபங்களுக்கு எல்லை இல்லை -இப்படி இருப்பாரில் மஹா புருஷர்கள் உண்டாகக் கூடாதோ –சம்சாரத்தில் கூடாதது யுண்டோ –

————————————————————————

சாங்க்யாதி குத்ருஷ்டிகளிலே நான் புகாதபடி தானே  ஸ்வயம் வரித்து எனக்கு சேஷியான தான் அஞ்ஞானாதிகளுக்கு அவகாசம் இல்லாத படி நினைவுக்கு வாய்த்தலையான மனசிலே – என்னுடைய சகல துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

உளரும்  இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

உளரும் இல்லை அல்லராய்-இல்லை என்ன ஒண்ணாதே அஸ்தி மாத்ரமாய் இருப்பர் -என்று சேஸ்வர சாங்க்க்ய மதம் -விதி நிஷேத ஷமன் அன்றிக்கே இருக்கும் பார்த்தாவை போலே -ஈஸ்வரன் ஆகிறான் -ஜெகன் நியமன ஷமன் அன்றிக்கே ஸத்பாவை மாத்ரமாய் இருக்கை –
உளராய் யில்லை யாகியே-இல்லை யாகியே உளர் -என்று நிரீஸ்வர சாங்க்க்ய மதம்-இல்லையாய் கொண்டே அவ்வஸ்துவினுடைய ஸத்பாவம் என்கை –
ஆஸ்ரிதர்க்கு இல்லை எல்லாராய் உளர் -அநாஸ்ரி தற்க்கு-இல்லை யாகியே உளர் -என்று ஆஸ்ரித அநாஸ்ரிதா விஷயம் என்றும் சொல்லுவார்
உளர் எம் ஒருவர் -குண விபூதியாதிகளால் பூர்ணராய்க் கொண்டு உளராய் -அவற்றைக் காட்டி என்னை விஷயீ கரித்த அத்விதீயர்
அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-குணாதிகர் ஆனவர் -என்னளவும் வந்து -மயர்வற மதி நலம் அருளி -தாம் நிறுத்தின நெஞ்சிலே நித்ய வாஸம் பண்ணா நின்றார் –
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே-அசைவும் ஆக்கமும்-வளருஞ்சுடரும் இருளும் போல்-தெருளும் மருளும் மாய்த்தோமே–அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகையாலே சந்திரனைப் போலே மாறி மாறி வருகிற வ்ருத்தி ஷயங்களும் ஆதித்யனும் அந்தகாரத்தையும் போலே மாறி மாறி வருகிற ஞான அஞ்ஞானங்களும் நிச்சேஷமாக போகப் பெற்றோம் –

———————————————————————-

நிகமத்தில் இப்பத்தும் கற்றாரை ஆழ்வார் தம்மை விஷயீ கரித்தால் போல் எம்பெருமான் தானே வந்து விஷயீ கரித்து தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும் என்கிறார் –

தெருளும்  மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

தெருளும் மருளும் மாய்த்துத்-ப்ரஹ்மாவின் ராஜஸம் அடியாக வந்த குத்ருஷ்ட்டி ஞானமானதும் -ருத்ரன் தாமஸம் அடியாக வந்த ஆகமாதி பாஹ்ய ஞானமான அஞ்ஞானமும் மாய்த்து -ஸ்வ அனுபவ விரோதியான பிராகிருத விஷய ஞான அஞ்ஞானங்களைப் போக்கி
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்-ஆஸ்ரிதரை வேறு ஒருவர் காலிலே போக விடாததாய் -ஸ்ப்ருஹணீயமாய் -வீரக் கழலை யுடைத்தான தன் திருவடிகளின் கீழே -இப்போதை வீரக் கழல் -பிராட்டி முன்னாக ஆச்ரயித்தாரை தன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –
அருளி இருத்தும் -கேவல கிருபையால் இருத்தும்
அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்-ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே –
அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை
ஓராயிரத்துள் இப்பத்தால்-இப்பத்தை அப்யசித்தவர்களை அதுவே ஹேதுவாக
அருளி யடிக் கீழ் இருத்தும்-நம் அண்ணல் கரு மாணிக்கமே–நமக்கு ஸ்வாமியாய் ஸ் ப்ருஹணீயமான வடிவு அழகை யுடையவன் -தன் கேவல கிருபையால் தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் -இப்பத்தும் கற்றவர்களை ஆழ்வாருக்கு பண்ணின கிருபையை பண்ணிச் சேர்த்துக் கொள்ளும் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: