திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-7-

தாமே தமக்கு ப்ராதிகூல்ய நிவ்ருத்தியை பிறப்பித்து -அதுவே பற்றாசாக ஒரு நாளும் அபராதங்கள் கண்டு உபேக்ஷியாதே
அத்யந்த வத்சல்யனுமாய் இருந்துள்ள சர்வேஸ்வரன் -அநாதி காலம் தம்மைப் பெறுகைக்கு பண்ணின யத்ன பாஹுள்யத்தையும்
-அவனுக்குத் தம்மை பெறுகையில் யுண்டான அபி நிவேசத்தையும் -தம்மோடு சம்ச்லேஷித்து இந்த சம்ச்லேஷம்
பெறாப் பேறு பெற்றவனாக கொண்டு இருந்து அருளின படியையும் அனுசந்தித்து
அவனுடைய படியை பார்க்க தம்முடைய அர்த்தித்வாதிகள் புறணியாய் இருக்கிறபடியை அனுசந்தித்து
-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாளுடைய நீர்மையைக் கண்டு ஈடுபட்டாப் போலே -நாம் என் செய் தோம் ஆனோம் என்று
லஜ்ஜிதருமாய்-எம்பெருமானுடைய வ்யாமோஹத்தை கண்டு விஸ்மிதருமாய்-ஹ்ருஷ்டருமாய்
-அவனுடைய க்ருபாதி குண சமுத்ரத்திலே அழுந்தின ஆழ்வார்
ராம கதாகாந்த சூன்யமான அசோகவனிகையின் நடுவே ராம கீர்த்தனத்தை பண்ணிக் கொண்டு வந்த
திருவடியைக் கண்டு அருளி மிகவும் ஹ்ருஷ் டையாய் -ராம சம்பந்திகளாய் இருப்பார் இத்தேசத்தில் வரக் கூடாது
-ஆனபின்பு இது ஸ்வப்னாதிகளோ-என்று ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அதிசங்கை பண்ணி மெய் என்று தெளிந்து இனியளானால் போலே
எம்பெருமான் அதி வியாமோஹத்தோடே தம்மோடு கலந்து அருளின படியை அனுசந்தித்து
-இது பிரம ஸ்வப்னாதிகளில் ஒன்றோ -என்று அதி சங்கையை பண்ணி -அன்று என்று தெளிந்து ப்ரீதர் ஆகிறார்
எம்பெருமானுக்கு ஈச்வரத்வம் அன்று ஸ்வரூபம் -பாரதந்தர்யமே -என்று இத்திருவாய்மொழிக்கு கருத்து –

———————————————————————

இத்திருவாய் மொழியில் தம்மோடு கலந்த கலவியை சுருக்கமாக அருளிச் செய்கிறார் –

இருத்தும்  வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

சம்சாரத்தில் நம்மை ஆசைப் படுவார் உண்டாவதே -என்று விஸ்மயப்பட்டு என்னைத் தன்னுடைய சிலாக்யமான திருவடிகளின் கீழே இருத்தும் என்று தன்னை அர்த்தித்து அநேக காலம் கூப்பிட்ட எனக்காக –
அவனுடைய பிரணயித்தவ ஸ்வ பாவத்தை அநுஸந்தியாதே இவன் தான் தாழ்த்தான் ஆகவும் -ப்ரணய ஸ்வபாவனான வாமனன் தன் அர்த்திதையாலே புகுந்து -தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே-என்று உள்ள என்னுடைய மநோ ரதத்தை தான் கைக்கு கொண்டு க்ருதார்த்தனாய் இருந்தான் –

—————————————————————

என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தன் அழகைக் காட்டி தவிர்த்து -என்னை விஷயீ கரித்து அருளின மஹா உபகாரத்தோடு ஒவ்வாது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணமும் -என்கிறார் –

இருந்தான்  கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

நிதி கண்டாரை போலே -என்னைக் கண்டு க்ருதார்த்தனாய் -என்னுடைய சபலமான நெஞ்சை ஆளா நிற்பதும் செய்து -எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே -சேதனரைப் போலே நின்று நலிகிற ஐந்து இந்திரியங்களும் போய் க்ஷயிக்கும் படி என் மனசிலே விடாதே இருந்தான் –
என்னுடைய இந்திரியங்களை வென்று தந்த பின்பு ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரண உபகாரத்தையும் ஒரு உபகாரமாக நினையேன் –தரும் அருள் -தந்த அருள் -/ பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்–தான் தரும் அருள் தான் –இனி யானறியேனே-என்று அந்வயம் –

———————————————————

சர்வேஸ்வரன் இப்படி தம் பக்கல் நிரதிசய வ்யாமோஹத்தை பண்ணுகை யாகிற இது கூடாதது ஓன்று -ஆகையால் இவ்வனுபவம் விப்ரமாதிகளிலே ஒன்றோ -என்று சங்கிக்கிறார் –

அருள்  தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

சர்வேஸ்வரன் எனக்கு  உண்டான அஞ்ஞாநாதிகள் எல்லாம் போம்படி -என் ஹிருதயத்திலே வீற்று இருந்தான் -இவ்விருப்பு ஒழிய தன்னுடைய சர்வ ஐஸ்வர்யமும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் -அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்னுடைய ப்ரமமோ-ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ –

——————————————————-

அயர்வறும் அமரர்களுக்கும் முகக்  கொள்ள ஒண்ணாத படியை யுடையனாய் இருந்து வைத்து –ஆயனாய் -என்னை அடிமை கொண்ட பரம ப்ராப்தன்-என்னை வஞ்சித்து ப்ரமிப்பியான் -என்னுள்ளே கலந்து அருளினான் என்கிற இதில் ஒரு சம்சயம் இல்லை -என்கிறார் -என் பக்கல் நிர்ஹேதுக கிருபையை பண்ணி ஹேய ப்ரத்ய நீகமாய்-விலக்ஷண தேஜோ ரூபமான திருவடியை என்னுள்ளே வைத்து அருளினான் –

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

————————————————————————

ஒருவர் பெறும் பேறே -என்று என்னை எல்லாரும் கொண்டாடும்படி வந்து என்னுள்ளே நின்று அருளினான் -இத்தால் வந்த புகழை அல்லது இவனுடைய மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதியேன் -என்கிறார் –

திகழும்  தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

என்னுடைய பேற்றை லோகம் எல்லாம் ஸ்தோத்ரம் பண்ணும் படி -விளங்கா நின்றது -ஒரு நீல மலை போலே என்னுள்ளே நின்றான் –  என்று -தம்முடைய ஹ்ருதயத்தில் இருக்கிற எம்பெருமான் இங்கே நின்று பேராமையும்-இத்தாலே பூர்ணன் ஆகையும்-தேஜஸ்வி யாகையும்-தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –

—————————————————————-

வேறு ஒரு புருஷார்த்தத்தை எனக்கு தந்தால்-அத்யந்த விலக்ஷணமான திரு வழகை யுடைய தன்னைக் கொள்ளுவார் இல்லாமை யன்று  இ றே என் பக்கல் யுண்டான அபி நிவேசத்தாலே தன்னை எனக்குத் தந்து அருளினான் -என்கிறார் –

பொருள்  மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

லோகத்தில் புருஷார்த்த வர்க்கத்தில் மற்று ஒரு புருஷார்த்தத்தை எனக்கு சீர்க்கத் தந்தால் -யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்-தன்னைக் கொள்ளுவார் இல்லை என்று ஷேபம் –

————————————————————–

எம்பெருமானுக்கு தம்மோட்டை கலவியால் உள்ள ஹர்ஷத்தாலே முறுவல் செய்த திருப் பவளத்தில் அழகை அனுபவித்து மிகவும் ப்ரீதர் ஆகிறார் –

செவ்வாய்  யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

திருப் பவளமும் திரு நாபீ கமலமும் வெளுத்த திரு முத்தும் சுடரை யுடைத்தான திரு மகரக் குழை யோடே மற்றற்றும் எவ்விடத்திலும் யுண்டான ஒளியும்-ஒன்றுக்கு ஓன்று முற்கோலி தம்முள்ளே கலசும் படி -ஒன்றுக்கு ஓன்று முற்பட்டு என்னை வளைத்துக் கொள்ள என்றுமாம் -சிவந்த திருப் பவளத்தில் முறுவலோடு என்னுடைய ஹ்ருதயத்தில் இருந்தபடி அல்லது மற்று அருள்கள் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா -என்று கருத்து –

————————————————————————

இப்படி எம்பெருமான் தன்னோடு வந்து சம்ச்லேஷிக்கைக்கு ஹேது அவனுடைய கிருபை போக்கி மற்று ஓன்று இல்லை -என்கிறார் –

அறியேன்  மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

என்னை அடிமை கொள்ளுகிற மஹா உபகாரகர் ஆனவர் தாம் விஷயீ கரிக்க வேண்டுவார்க்கு நிர்ஹேதுகமாக உகந்து கிருபை பண்ணுவர் -மூ உலகையும் தன்னுடைய திரு வயிற்றினுள்ளே வைத்து அதுக்கு பாங்காக வைத்துக் கொண்டு -அவ் வைச்வர்யத்தோடே –சிறியேனுடைச் சிந்தையுள்ளே-நின்று ஓழிந்தார்-

—————————————————————–

இப்படி விஷயீ கரிக்கைக்கு நீர் செய்தது என் என்னில் -அனுமதி மாத்திரம் பண்ணினேன் அத்தனை -என்கிறார் –

வயிற்றில்  கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்-வயிற்றில் கொண்டு நின்று –ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து பரிஹரிக்குமா போலே -பரிஹரிக்கும் க்ஷத்ரியாதிகளையும் -அவர்களில் அளவுடைய ப்ரஹ்மாதிகளையும் -சங்கல்பத்திலே கொண்டு நிற்பதுவும் செய்து
ஓரு மூவுலகும் தம்-வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை-வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே–மூன்று லோகத்தையும் தன் சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே நடத்துகையாலே -ஓர் ஆயாசம் தோற்றாதே -பண்டு போலே நின்ற சர்வேஸ்வரனை நிரந்தரமாக என் மனசிலே வைத்துக் கொண்டேன் –அனுமதியாலே –
ஜகத்தை வயிற்றிலே வைத்து பரிஹரிப்பரை பரிஹரிக்கும் க்ஷத்ரியாதிகளும் -அவர்களில் காட்டில் அளவுடைய ப்ரஹ்மாதிகளும் -இவர்கள் எல்லாம் தன்னுள்ளே அடங்கும்படியாக இடம் யுடைத்தான மூன்று லோகத்தையும் -என்றுமாம் –மன்ன வைத்தேன் மதியாலே என்றது -இவன் படியை அறிந்து கொண்டேன் என்கிறார் -என்றும் சொல்லுவர்-

————————————————————————-

எம்பெருமான் சபரிகரமாக என்னுள்ளே வந்து புகுந்தான் -அவனை நான் இனி ஒரு காலும் விஸ்லேஷித்து கிலேசப் படுகிறேன் அல்லேன் -என்கிறார் –

வைத்தேன்  மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

நிரந்தரமாக தகுதியான திரைகள் மோதா நிற்பதும் செய்து சிரமஹரமான திருப் பாற் கடலினுள்ளே -தன்னோட்டை ஸ்பர்ச ஸூகத்தாலே பணம் விரிப்பதும் செய்து -தகுதியான தேஜஸ்ஸை யுமுடையனான திருவனந்த ஆழ்வானை அணையாக யுடையனுமாய் ஆஸ்ரித ஸூ லபனான சர்வேஸ்வரனை –

——————————————————-

நிகமத்தில் இப்பத்தானது தன்னை  கற்றவர்களுடைய சம்சாரத்துக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் -என்கிறார்-

சுடர்ப்  பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

திருவடிகளை சேருகை ஸ்வபாவமான ஆழ்வார் -தம்முடைய சாம்சாரிக சகல துக்கங்களையும் போக்குகைக்காக அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத்திருவாய்மொழி –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: