திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-6-

ஆழ்வாருடைய ஆர்த்த த்வனியைக் கேட்டு தப்த ஹ்ருத்யனாய் -அவருடைய ஆர்த்தி தீரும்படி சம்ச்லேஷித்து அருளுகைக்காக
வகையிலே உத்யுக்தனான எம்பெருமான் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்காக தாம் எழுந்து அருளின ப்ரீதி சாத்மித்தால் திரு அயோத்யையில்
புக்கு அருளுகைக்காக ஸ்ரீ பரத்வாஜ பகவான் ஆஸ்ரமத்தில் பெருமாள் விட்டு அருளினால் போலேயும்
ஸ்ரீ வஸூ தேவர் திருமகன் தூது எழுந்து அருளின போது நேரே சென்று ஹஸ்தின புரத்திலே புகாதே குசஸ்த்தலத்திலே விட்டு அருளினால் போலேயும்
ஆழ்வார் தம் பாடு நேரே வந்து புகுந்து அருளாதே தான் வந்த வரவில் இவருக்கு பிறந்த ப்ரீதி சாத்மித்தால் வந்து சம்ச்லேஷித்து அருளுகைக்காக
திருக் கடித்தானத்திலே வந்து புகுந்து அருளி தம்மோடு கலக்கிற படியைக் கண்டு ப்ரீதர் ஆகிறார் –

————————————————————-

என்னுடைய ஆர்த்தி தீர்த்து அருள்வான் -ஸர்வேஸ்வரனே -அவன் ஊர்  திருக் கடித்தானாம் -என்கிறார் –

எல்லியும்  காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

காலதத்வம் உள்ளதனையும் ஒருவன் செய்து அருளும் படியே -என்று தன்னை நினைத்து உஜ்ஜீவிக்கும் படி / செல்வர்கள்-எம்பெருமானோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணுமவர்கள் / அல்லி யந்தண்ணந்துழாய் முடி-கீழில் திருவாய்மொழியில் -நின் மொய் பூம் தாமத் தண் துழாய் -என்று ஆசைப் பட்ட படியே தோற்றி –

——————————————————————

திருக்  கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

என் பக்கல் வருகைக்கு பிரதிபந்தகங்களை எல்லாம் எம்பெருமான் தானே போக்கி -திருக் கடித் தானத்திலும் என்னுடைய சிந்தையிலும் ஓக்க அபி நிவேசத்தை பண்ணி என்னுள்ளே வர்த்தியா நின்றான் என்கிறார் –
யுத்த கண்டூதியாலே மதி கெட்ட ராக்ஷஸரை சரீரம் அழியும்படி சர வர்ஷத்தை வர்ஷித்த உபகாரகன் கிடீர் –

———————————————————————-

பிராட்டியோடே கூடத் திருக் கடித் தானத்தை மருவி யுறையா நின்று கொண்டு என் பக்கலிலே ஆச்சர்யமாம் படி ப்ரவணன் ஆனவன் -உள்ளும் தோறும் தித்தியா நின்றான் என்கிறார் –

ஒருவர்  இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-

மூல பலத்தோடு யுத்தம் பண்ணி அருளுகிற போது முந்துற ஒருவராய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக  இருவரும் மூவருமாய்த் தோற்றி இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி வேகம் மிக்கவாறே  வடிவு தெரியாத படியாய் உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று கீழில் பாட்டோடு அந்தவிதமாக கடவது –

——————————————————————-

எம்பெருமான் திருக் கடித்தானத்தை பகல் இருக்கை மாத்ரமாகக் கொண்டு என்னுடைய ஹிருதயத்தை-அத்யபி நிவேசத்தை பண்ணி நிரந்தர வாசஸ்  ஸ்தானமாக கொண்டு அருளினான் -என்கிறார் –

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

ஆச்சர்யமான குண சேஷ்டிதாதிகளை யுடைய சர்வேஸ்வரன் தன்னை பிரிந்து காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து நான் படும் துக்கம் எல்லாம் நிச்சேஷமாக போம்படி தன்னோட்டை சம்ச்லேஷ விஸ்லேஷங்களால்-நாடு போலே வளர்ந்த நெஞ்சிலே ஸ்நேஹத்தாலே சபரிகரமாக நிரந்தர வாஸம் பண்ணா நின்றான் -அயர்வறும் அமரர்களுக்கும் ப்ராப்ய பூமியான திருக் கடித் தானத்தை தனக்கு வாசத்தை யுடைய பொழிலொடு கூடின கோயிலாக கொண்டானான மாயப்  பிரான் –

—————————————————————-

என் பக்கல் உள்ள பிரேம அதிசயத்தாலே திருக் கடித்தனத்தோடே கூட என் ஹிருதயத்திலே புகுந்து அருளினான் என்கிறார் –

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

நித்ய சித்த புருஷர்கள் தன்னைத் தொழும் ஸ்ரீ வைகுண்டத்தை கோயிலாக கொண்ட குடமாடுகை தொடக்கமான மநோ ஹாரியான சேஷ்டிதங்களை யுடைய சர்வேஸ்வரன் –

—————————————————————

மதுகைடபாதிகளைப் போக்கினால்    போலே தன்னைக் காணப் பெறாத என்னுடைய  விடாய் எல்லாம் போக்கின சர்வேஸ்வரன் நிரந்தர வாஸம் பண்ணுகிற திருக் கடித்தானத்தை ஏத்துங்கோள்–உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் -இத்தை குறிக் கொள்ளுங்கோள் என்று ப்ரீதி பிரகர்ஷத்தாலே பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கூத்த  வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

மநோ ஹாரியான குண சேஷ்டிதாதிகளால் பெரியனாய் நிரதிசய துக்கத்தை உடையேனான என்னுடைய துக்கத்தை போக்கின என் ஸ்வாமி –
பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் நிரந்தர வாஸம் பண்ணுவதும் செய்து பூத்த பொழிலை யுடைத்தாய் சிரமஹரமான திருக் கடித் தானத்தை –

—————————————————————–

உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம்படியாக திருக் கடித்தானத்தை ஹ்ருதயத்தால் நினையுங்கோள்-என்கிறார் – –

கொண்மின்  இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

எல்லார்க்கும் ஸூ லபனானவனுடைய சகல லோகங்களையும் அளந்த நிரதிசய போக்யமான திருவடிகளை ஒன்றும் அளவில்லாத பூமியில் உள்ளாரும் தொழ அவர்களுக்கு ஸூ லபனாய் இருந்த இருப்பை காண்கைக்காக பேர் அளவுடைய அயர்வறும் அமரர்களும் வந்து நண்ணா நின்றுள்ள திருக் கடித்தான் நகரை –

————————————————————–

எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷணமான நகரங்கள் எல்லாம் பல உண்டாய் இருக்கச் செய் தேயும் -என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும் தன்னுடைய தாய ப்ராப்தமான ஸ்தானமாக கொண்டு ஸ்நேஹித்து இருக்கும் -என்கிறார் –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

மேலில் லோகங்களிலும் பூமி கடலும் எல்லா இடங்கள் எல்லாம் ஆச்சர்ய பூதனானவனுக்கு மிகவும் சிலாக்யமான இருப்பிடமான நகரங்களாக இருக்கச் செய்தேயும் –

—————————————————————-

கீழ்ச் சொன்னவை எல்லாம் அவனுக்குத் தாயப் பதிகள் அல்லவோ என்னில் -அது அப்படியே யாகிலும் -என்னோடே சம்ச்லேஷிக்கைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித்தானத்திலே அத்யபி நிவிஷ்டன்-ஆனான் என்கிறார் –

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

மிகவும் விலக்ஷணமாய் -பழையதாய் வருகிற ஸ்தானங்கள் எங்கும் அபி நிவேசத்தாலே விடாதே தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும் படி இருந்து அருளினவன் நிரந்தர வாஸம் பண்ணுகிற –
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்-தேஜஸ் ஸை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கும் பரம ப்ராப்யமான திருக் கடித் தானத்துள்-

—————————————————————–

என்னை பெறும் தனையும் திருக் கடித் தானத்தில் நின்று அருளினான் -என்னோடு சம்ச்லேஷித்த பின்பு நிற்பதும் இருப்பதும் என் நெஞ்சிலே என்கிறார் –

அற்புதன்  நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-

இப்பாட்டுக்கு எல்லாம் அநந்ய பிரயோஜனர் என்னும் புகழை யுடைய வைதிகராலே உச்சரிக்கப் படா நின்றுள்ள நாலு வேதங்களும் நிரந்தரமாக முழங்கா நின்றுள்ள கற்பக வனத்தை உடைத்தான திருக் கடித் தானத்தில் ஆஸ்ரித வத்சலனாய் ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தனாய் ஆஸ்ரிதருடைய சர்வ அபேக்ஷிதங்களும் முடித்துக் கொடுக்கும் ஸ்வ பாவனாய் இப்படி அத்யாச்சர்ய பூதனானவன் நிற்பதும் மேவி இருப்பதும் என் ஹ்ருதயத்தில் -திருக் கடித்தானம் என்றது சப்தம்யர்த்தே-பிரதமை யாகிறது –

———————————————————————-

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றவர்களை இது தானே திரு நாட்டிலே கொடு போய் விடும் -என்கிறார் –

சோலைத்  திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

அழகிய திருச் சோலையை யுடைய திருக் கடித்தானத்திலே உறைகிற ஸ்ரீ யபதியை -ஆழ்வார் அருளிச் செய்த பாலும் அமுதும் கலந்தால் போலே இருக்கிற வாஸ்ய வாசகங்கள் யுடைய பொருத்தத்தை யுடைய ஆயிரம் திருவாய் மொழியிலும் -இத்திருவாய் மொழி –வியந்து –அத்யாதரத்தைப் பண்ணி –

————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: