திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-7-

தமக்கு ப்ராதிகூல்ய நிவ்ருத்தியை பிறப்பித்து -அத்வேஷ ஆபிமுக்யம் முதலான அவஸ்தைகளை பிறப்பித்து
அநாதி காலம் புத்தி பூர்வம் பண்ணின பிராதி கூல்யத்தை விஸ்மரித்து -ஆனு கூல்யம் பிறந்த பின்பு பிராமாதிகமாகப் பிறந்த
குற்றங்களில் அஞ்ஞன் என்னும் படி வத்சலனாய் இருக்கிற சர்வேஸ்வரன் -அநாதி காலம் தம்மை பெறுகைக்கு எதிர் சூழல் புக்கு என்கிறபடியே
தாம் பிறந்த ஜென்மங்கள் தோறும் அவதரித்த படியையும் -கீழ்ப் பிறந்த இழவு எல்லாம் தீரும் படி கலந்த படியையும் –
இது தமக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தான் பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
அவனுடைய அர்த்தித்தவத்தை கண்ட அநந்தரம் தாம் ஆர்த்தித்து கூப்பிட்ட இது புறணியாய் தொற்றுகையாலே
ராகவேணாபயே தத்தே சன்னதோ ராவணா நுஜ-என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் யுடைய நீர்மையை கண்ட பின்பு
-நாம் என் செய் தோம் ஆனோம் என்று லஜ்ஜித்தால் போலேயும்
ராம குணங்கள் நடையாடாத அசோகவனிகையிலே திருவடி சென்று -ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் -என்று இனிதாம் படி
ராம குணங்களை சொல்லக் கேட்டு -இந்நிலத்தில் இது கூடாது
-கின்னுஸ் யாச்சித்த மோஹோ யம் பவேத் வாதக திஸ்த்வயம்–உன்மாத ஜோ விகாரோ வா ஸ் யாதியம் மறுக்காத த்ருஷ்ணிகா–என்று
அதி சங்கை பண்ணி மெய் என்று தெளிந்து இனியளானால் போலேயும்
அவன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹத்தில் அதிசங்கை பண்ணி -மெய் என்று தெளிந்து அந்த வியாமோஹத்தை பேசி ஹ்ருஷ்டராகிறார்
இத்திருவாய் மொழி யில் லாபத்துக்கு க்ருஷி பண்ணின படியாய் இருக்கிறது கீழ் எல்லாம் –
இது ஸ்திரமாகைக்கு வேலி படைக்கிறார் மேல் –
சர்வேஸ்வரன் ஸ்வதந்த்ரன் என்று உபபாதித்தது கீழ்
அங்கனம் அன்றிக்கே ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்கிறது இத்திருவாய் மொழியிலே –

————————————————————–

இத்திருவாய் மொழியில் தம்மோடு கலந்த கலவியை சங்க்ரஹேண அருளிச் செய்கிறார்

இருத்தும்  வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று-—என்னைத் தன் பொன்னடிக் கீழ் –வியந்து–இருத்தும்-என்று -தன் வாசி அறியாதே சப் தாதி விஷயங்களிலே அந்நிய பரனான என்னை -சிலாக்யமான தன் திருவடிகளின் கீழே –
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி இ றே
வியந்து -சம்சாரத்தில் நம்மையே அபேக்ஷிப்பான் ஒருவன் உண்டாவதே -என்று விஸ்மயப் பட்டு -ச மஹாத்மா ஸூ துர்லப-என்று கை வாங்கி இருக்குமவன் இ றே –
ஒரு நாளும் பிரியாத படி இருத்தி அடிமை கொள்ளும் –தன் பொன்னடிக்கு கீழ் என்று ப்ராப்ய ஸ்வரூபம் சொல்லிற்று –இருத்தும் என்று ப்ராபக ஸ்வரூபமும் அவனே என்கிறது –வியந்து –இருத்தும் -தன் பேறாக இருத்தும் –
அருத்தித்து -தன் பேறாக இருத்தும் என்கையாலே -அர்த்தித்தவமும் மிகை -சைதன்ய பிரயுக்தமாக வந்தது அத்தனை
எனைத்தோர் பல நாள்-நாள் நாளும் தொக்க மேக்கப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றத்தை சொல்லுகிறது
அழைத்தேற்கு-என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் -என்றதைச் சொல்லுகிறார் -இவன் பிரணயித்தவத்தை அறியாதே தாழ்த்தான் ஆகவும் நாம் அபி நிஷ்டராகவும் கூப்பிட்டு என்ன கார்யம் செய்த்தோம் என்கிறார் காண் என்னும் பிள்ளான் –அழைக்கவும் கூட மாட்டாத இவனையே நாம் அழைத்தது -அத்தலையில் பிரணயித்தவத்தை அநுஸந்தித்தால் அர்த்தித்தவமே தொடங்கி மிகையாய் இ றே இருப்பது -எழுதும் என்னும் இது மிகை இ றே
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து -இப்படி பொருத்தம் உடையவனையோ நான் இதுவோ பொருத்தம் -என்றது –
வாமனன் -அர்த்தித்தவம் இல்லாத மஹா பலியோடே பொருந்தினவனையோ -அர்த்தித்தவம் உடையேனாய் இருக்க என்னோடு பொருந்திற்றிலன் -என்கிறது –
தான் புகுந்து-தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியானவன் என்னை தான் பெறுகைக்கு அர்த்தியாய் வந்து புகுந்தான் –
என்தன்-கருத்தை யுற -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்ற என் கருத்தை -மநோ ரதத்தை -தான் கைக் கொண்டு வந்து புகுந்தான் –
வீற்றிருந்தான் கண்டு கொண்டே—என்னைப் பெறுகையாலே -சம்சாரம் கொண்டவரை மீட்டோம் என்று இருந்தோம் -மாயக் கூத்தவன் கொண்டவரும் பிழைக்கப் பெற்றோமே -என்று குறைவற்று இருந்தான் என்னுதல் -என்னோட்டை கலவி தன் பேறாக இருக்கும் வேறுபாடு தோற்றும்படி இருந்தான் என்னுதல் –
கண்டு கொண்டே -பிரபல வியாதிக்கே பிழைத்த புத்ரனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பிதாவை போலே -விஜூவர பிரமுமோதஹ-என்கிறபடியே மாயாக் கூத்தனில் ஆற்றாமைக்கு பிழைத்தவன் என்று வைத்த கண் வாங்காதே இரா நின்றன் –

————————————————————

என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தன் அழகைக் காட்டி தவிர்த்து -என்னை விஷயீ கரித்து அருளின மஹா உபகாரத்தோடு ஒவ்வாது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணமும் -என்கிறார் –

இருந்தான்  கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

இருந்தான் கண்டு கொண்டே -தரித்ரன் நிதி கண்டால் கண்டு கொண்டே இருக்குமா போலே -பார்த்த படியே இரா நின்றான் -அந்யோன்யம் அபிவிஷந்த்வ நதிருப்திம் உபஜக்மது -என்கைக்கு எதிர்தலையான தம்மை காண்கிறீலர்-இத்தை நினைத்து இ றே அர்த்தித்தவம் என்னும் இதுவும் மிகை என்றார் முதல் பாட்டிலே –
எனதேழை நெஞ்சாளும்-கண்டது எல்லாவற்றிலும் -சபலமாய் இருக்கிற என் நெஞ்சை -அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பணி கொள்ளாத தொடங்கிற்று –
திருந்தாத-அநாதி காலம் சர்வ சக்தி திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத வன்மையையுடைய திருந்தாத வன்மையையுடைய இந்திரியங்கள் –
வோரைவரைத்-இப்படி பண்ணுகைக்கு இன்னம் ஓர் ஐவர் இல்லை -இவற்றால் பட்ட நலிவின் மிகுதியால் சேதன சமாதியால் சொல்லுகிறார்
தேய்ந்தற மன்னி-இருந்தான் -பிராகிருத விஷயங்களிலே பற்று அறும் படி வந்து புகுந்து இருந்தான் –பிராகிருத விஷயங்களில் பற்று நேராக க்ஷயிக்கும் படி தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் விஷயாந்தரங்களிலும் வடிவு அழகிலே இ றே இவன் துவக்குண்டு இருப்பது -ராஜாக்கள் சத்ருக்களை ஆசன பலத்தால் அழிக்குமா போலே இந்திரியங்களுக்கு விஷயங்களில் பற்று அரும்படி புகுந்து இருந்தான்
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தருந்தானருள் தான்–பெரிய தாளுடைய களிற்றுக்கு அருளின சர்வேஸ்வரன் -வடிவில் கனமும்-நோவில் பாடாற்ற ஒண்ணாமைக்கு உடல் என்கை –பெருமான் —தான் தரும் -அருள் -தான் –தரும் அருள் -தந்த அருள் -தரும் என்கிற இது காலத்ரயத்திலும் சொல்லலாய் இருக்கையாலே -ஆஸ்ரிதற்குச் செய்தது தமக்குச் செய்ததாக இ றே இவர் நினைத்து இருப்பது –
இனி யானறியேனே-–எனக்கு உதவின பின்பு நான் அத்தை ஒன்றாக நினைத்து இரேன் -ஆனை நோவு பட்டத்து ஆயிரம் சம்வத்சரம் /அகப்பட்ட பொய்கை பரிச்சின்னம் /முதலை ஓன்று
எனக்கு காலம் அநாதி -/அகப்பட்டது சம்சார ஆர்ணவத்திலே /முதலை ஐந்து –
இத்தை மீட்டுக் கொண்ட மஹா குணத்துக்கு அது ஒரு குணமாயற்றதோ -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பண்ணின அருளை இட்டு புறம்புள்ளார் பக்கலில் பண்ணின அருளை வ்யாவர்த்தித்தார்-தமக்கு பண்ணின அருளை இட்டு அது தன்னை வ்யாவர்த்திக்கிறார் –

————————————————————-

சர்வேஸ்வரன் இப்படி தம் பக்கல் நிரதிசய வ்யாமோஹத்தை பண்ணுகை யாகிற இது கூடாதது ஓன்று -ஆகையால் இவ்வனுபவம் விப்ரமாதிகளிலே ஒன்றோ -என்று சங்கிக்கிறார்

அருள் தான்  இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

அருள் தான் இனி யான் அறியேன்-என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த இது தன்னையும் நான் ஒன்றாக நினைத்து இருக்கிறிலேன் –எத்தைப் பற்ற -என்னில்
-அவன் என்னுள்-இருள் தானற வீற்றிருந்தான்-
அவன் என்னுடைய ஹ்ருதயத்தில் அஞ்ஞானாதிகள் எல்லாம் போம்படி -தன் குறைவு தீர்ந்தானாய் -அத்தாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்தான் –
இதுவல்லால்-பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல-
நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாக நினைத்து இருப்பது -த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை ஆயிற்று -இவன் என் ஹிருதயத்திலே பிறந்த பின்பு அத்தையும் ஒரு பொருளாக நினைத்து இரேன் -என்று ஆளவந்தார் நிர்வாஹமாக-திருமாலை ஆண்டான் பணிக்கும் –
என் ஹிருதயத்தில் வீற்று இருந்த இது ஒழிய வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செல்ல இருக்கிற ஐஸ்வர்யத்தையும் ஒரு புருஷார்த்தமாக நினைத்து இருக்குமோ -என்று பார்த்தால் அதுவும் அவனுக்கு ஒரு சரக்கு அல்ல -என்று எம்பெருமானார் நிர்வாஹம் -இதுவே பிரகரணத்துக்கு சேருவது
மருள் தானீதோ ––சர்வேஸ்வரன் ஒரு சம்சாரியைப் பெற்று ஹ்ருஷ்டனானான் என்கிற இது கூடுவது ஓன்று அன்று -நான் பிரமித்தேனோ –
மாய மயக்கு மயக்கே-தன் ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பித்தானோ -அநாதி காலம் பிரக்ருதியைக் காட்டி அறிவு கெடுத்தான் -இப்போது தன் வ்யாமோஹத்தை காட்டி அறிவு கெடா நின்றான் –

——————————————————————

கிருஷ்ணனாய் அவதரித்து என்னை அடிமை கொண்ட பரம ஆப்தனானவன் என்னை ப்ரமிப்பித்தானாக கூடாது -என்னுள்ளே கலந்து அருளினான் என்கிற இதில் ஒரு சம்சயம் இல்லை -என்கிறார் –

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து–என்னை வஞ்சித்து–மாய மயக்கு மயக்கான்-அநாஸ்ரிதரான துரியோதனாதிகளைக் குறித்து ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும் -பகலை இரவாக்கியும் -வஞ்சித்தான் இத்தனை ஒழிய -பாண்டவர்கள் விஷயத்தே அத்தைச் செய் தானோ -ஆகையால் தனக்கே பாரமான என்னை ஆச்சர்யமான ப்ரம சாதனங்களால் ப்ரமிப்பியான் -ஹேது என் என்னில்
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்-நித்ய ஸூ ரிகளுக்கும் முகக் கொள்ள ஒண்ணாத படியை யுடையனாய் வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து -எனக்கு முறையை அறிவித்த பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து -மாய மயக்கு மயக்கான்-முறையை உணர்த்தின வழி என் என்ன –
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-தேசந்திகழும் தன் திருவருள் செய்தே—தேசந்திகழும் தன் திருவருள் செய்து– தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்–லோகம் எல்லாம் அறியும் படி -என் பக்கலிலே நிர்ஹேதுக கிருபையை பண்ணி –
தன் திருவருள்-புறம்பு ஒருவர்க்கு இன்றிக்கே தனக்கே அசாதாரணமான திருவருள் -ஹேயா ப்ரத்ய நீகமாய் -வி லக்ஷண தேஜோ ரூபமாய் -தனக்கு அசாதாரணமான வடிவை என்னுள்ளத்தே வைத்தான் -தான் அநந்ய சாத்யன் -என்னும் படியைக் கொண்டு என்னுள்ளே தன்னை பிரகாசிப்பித்தான் -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –

———————————————————————-

ஒருவர் பெறும் பேறே -என்று என்னை லோகமாக கொண்டாடும்படி வந்து என்னுள்ளே நின்று அருளினான் -இத்தால் வந்த புகழை அல்லது இவனுடைய மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதியேன் -என்கிறார் –

திகழும்  தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

திகழும் தன் திருவருள் செய்து -பிறருடைய பரிச்சின்னமான அருள் போல் அன்றிக்கே இரண்டு தலைக்கும் நிறமாம் படியான தன் கிருபையை என் பக்கலிலே பண்ணி
உலகத்தார்புகழும் புகழ் தானது காட்டித் தந்து-என்னுடைய பேற்றைக் குறித்து லோகத்தார் பண்ணும் ஸ்தோத்ரத்தை தான் காட்டித் தந்தான் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்று லோகமாக கொண்டாடும்படி பண்ணுகை -இமவ் முநீ பார்த்திவல ஷணா ந்விதவ் குஸீலவவ் சாபி மஹாத பஸ்வி நவ் -என்றும் -மமாபிதத் பூதிகரம் ப்ரவஷ்யதே-மஹா நுபாவம் சரிதம் நிபோதத-என்று சர்வருக்கும் ஸம்ருத்தியை விளைக்கக் கடவ இத்தை எல்லாரும் செவி தாழ்த்து கேளுங்கோள் என்றால் போலே
என்னுள்-திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே-விளங்கா நின்றதொரு நீல மலை போலே என்னுள்ளே நின்ற இம் மஹா குணத்தை அல்லது மற்று ஒரு புகழை ஒரு புகழாக மதியேன் —என்னுடைய இந்திரிய வஸ்யத்தையை தவிர்த்த குணத்தையும் இனி நான் ஒரு சரக்காக நினைத்து இ ரேன்-

—————————————————————-

விலக்ஷண புருஷார்த்தங்களில் இது ஒழிய எனக்கு வேறு ஒன்றை தந்து விட்டால் – புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்ளுவார் இல்லாமல் தன்னை எனக்குத் தந்தானோ என் பக்கல் யுண்டான அபி நிவேசத்தாலே தன்னை எனக்குத் தந்து அருளினான் -அத்தனை அன்றோ –என்கிறார் –

பொருள்  மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்-தருமேல்–பொருள் தன்னில் –மற்று எனக்கும் ஓர் பொருள்-சீர்க்கத்-தருமேல்-புருஷார்த்த வர்க்கத்தில் வேறே கனத்ததொரு புருஷார்த்தத்தை -தருமேல்-தந்து விட்டால் –
பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்-அவன் பின்னை யாருக்கு தன்னைக் கொடுக்கும் -இப் பொகடு சரக்கை கொள்வார் இல்லை என்று ஷேபம் -கொள்வார் இல்லாத வஸ்து இருக்கிற படியை மேலே அருளிச் செய்கிறார்
கரு மாணிக்கக் குன்றத்துத் -ஆச்சர்யத்துக்கு துருதாந்தம் –
தாமரை போல்-அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம் –
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி இருக்கிற திரு மார்வு
கால் -அச்சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளிலே விழுந்தாரை குளிர நோக்கும் திருக் கண்கள்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இந்த சொல்லுச் சொல்லும் திருவதரம்
யுந்தியானே–அவர்களுக்கு அனுபாவ்யமான திரு உந்தி -உந்தி மேலதன்றோ-என்ன கடவது இ றே-

——————————————————————

எம்பெருமானுக்கு தம்மோட்டை கலவியால்-அது தன் பேறாக – உள்ள ஹர்ஷத்தாலே- முறுவல் செய்த திருப் பவளத்தில் அழகை அனுபவித்து மிகவும் ப்ரீதர் ஆகிறார் –

செவ்வாய்யு ந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு-சிறந்த திரு வதரம்-திரு உந்தி -வெளுத்த திரு முத்து -புகரை யுடைத்தான திரு மகரக் குழை -இவற்றோடு கூட
எவ்வாய்ச் சுடரும் -மற்றும் எவ்விடத்திலும் உள்ள தேஜஸ்ஸூம் –வாய் -இடம்
தம்மில் முன் வளாய்க்கொள்ள-ஒன்றுக்கு ஓன்று முற்கோலி-என்னை வளைத்துக் கொள்ள -அஹமஹமிகையாய் முற்பட்டு வளைத்துக் கொள்ள என்னுதல் -ஒன்றுக்கு ஓன்று முற்பட்டு என்னை வளைத்துக் கொள்ள என்னுதல் –
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த-சிவந்த திருப் பவளத்தில் முறுவலோடே என்னுடைய ஹிருதயத்தில் இருந்த -அவாக்ய அநாதரா-என்று இருக்குமவன் -இவரைப் பெற்ற இது தன் பேறு என்று தோற்ற ஹ்ருஷ்டானாய் முறுவல் செய்து இருந்த படி -பூ வலரும் போது எங்கும் ஓக்க ஒரு செவ்வி பிறக்குமா போலே -திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு விக்ருதி பிறக்கும் படி யாயிற்று ஸ்மிதம் பண்ணிற்று –
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–அவ்விடம் அன்றி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு இருந்த இருப்பு அல்லது –காந்த ஸ்மிதா-என்று ஸ்வரூபத்தை சொல்லி ஜாத ஹாஸா-என்றது இ றே -அப்போதைய ஹர்ஷத்தால் உண்டான விக்ருதி என்னும் இடம் தோற்ற -மற்று உண்டான அருளை நான் அறியேன் -இதுவே அமையும் -மற்று ஒன்றும் வேண்டா என்கை –

—————————————————————–

இப்படி எம்பெருமான் தன்னோடு வந்து சம்ச்லேஷிக்கைக்கு ஹேது அவனுடைய கிருபை போக்கி மற்று ஓன்று இல்லை -என்கிறார் –

அறியேன்  மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

அறியேன் மற்றருள்-வேறு ஒரு அருள் அறியேன் –
என்னை யாளும் பிரானார்-என்னை அடிமை கொள்ளும் உபகாரகர் ஆனவர்
வெறிதே யருள் செய்வர் -நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவார் -ஆருக்கு என்னில்
செய்வார்கட்கு-தாம் தாம் ஒன்றைச் செய்வார்கட்க்கு என்னில் -வெறிதே யருள் செய்வர்-என்ன க் கூடாது -யமேவேஷ வ்ருணுதே-தாம் விஷயீ கரிக்க நினைத்தார்க்கு-
உகந்து-தம்முடைய உகப்பே ஹேதுவாக –தம்முடைய உகப்புக்கு -ப்ரியதம ஏவ ஹி வரணீ யோபதி -என்று ப்ரிய தமன் அன்றோ விஷயம் என்னில் -சைதன்ய ப்ரயுக்தமான ருசி -ஸ்வரூபம் இத்தனை அல்லது பேற்றுக்கு சாதனமாக பெறாமையாலே அத்தை ஹேதுவாக சொல்ல ஒண்ணாது
சிறியேனுடைச் சிந்தையுள் -அத்யல்பனான என்னுடைய ஹ்ருதயத்திலே-சம்சாரிகள் நித்ய சித்தர் கோடியிலே யாம் படி இ றே தம்மை நினைத்து இருப்பது –
மூவுலகும் தன-நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–மூ வுலகும் தன் வயிற்றின் உள்ளே அவற்றுக்கு பாங்காக வைத்துக் கொண்டு -நெறி ஆ –பாங்காக -அன்றியே மூவுலகையும் முறையிலே வயிற்றிலே கொண்டு என்றுமாம் -ரக்ஷகன் ரஷ்யத்தை நோக்குகை முறை இ றே – நின்று ஒழிந்தாரேசிறியேனுடைச் சிந்தையுள்-நின்று ஒழிந்தாரே--ஜகத் ரக்ஷணத்திலே முறையிலே நின்றார் -என் பக்கல் முறை கெட நில்லா நின்றார் -அதி ஷூத்ரனான என் ஹிருதயத்திலே தன் மேன்மையோடே புகுந்து நிற்கிறவனுக்கு -தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை நோக்கினான் -என்கிற து ஒரு குணமோ –
அவன் மூ வுலகுக்கும் அவ்வருகாக இவரை நினைத்திரா நின்றான் -இவர் தம்மை சம்சாரிகளுக்கு கீழாக நினைத்திரா நின்றார் –

—————————————————————–

இப்படி விஷயீ கரிக்கைக்கு நீர் செய்தது என் என்னில் -அனுமதி மாத்திரம் பண்ணினேன் அத்தனை -என்கிறார் –

வயிற்றில்  கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும்-ஜனனியானவள் -பிரஜையை வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ஜகத்தை நோக்கும் க்ஷத்ரியாதிகளும்
யவரும்-அவர்களைக் காட்டில் அளவுடைய ப்ரஹ்மாதிகளையும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் -க்ஷத்ரியாதிகளையும் ப்ரஹ்மாதிகளையும் தன்னுள்ளே கொண்டு இருந்துள்ள மூவுலகையும்
தம்-வயிற்றில் கொண்டு -தம்முடைய சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்திலே நடத்திக் கொண்டு என்னுதல் -அவர்களையும் வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகையும் தம் வயிற்றிலே கொண்டு என்னுதல்
நின்ற வண்ணம் நின்ற மாலை-இவற்றை அடைய தன் திரு வயிற்றிலே கொண்ட இடத்திலும் ஒரு விகாரம் இன்றிக்கே முன்பு போலே நின்ற சர்வேஸ்வரனை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—சவிபூதிகனானவனை என்னுடைய ஹிருதயத்திலே கொண்டு ஒரு நாளும் பிரியாத படியாக வைத்துக் கொண்டேன் –
மதியாலே—இவன் படியை அறிந்து கொண்டேன் என்கிறார் -என்னும் அம்மாள் -அங்கனம் இன்றிக்கே –மதி -அனுமதி -என்றாக்கி-என் அனுமதி மாத்திரத்திலே என்பர் பட்டர் -அவன் புகுருகிற இடத்திலே விலக்காமையாலே என்கை –

————————————————————

எம்பெருமான் சபரிகரமாக என்னுள்ளே வந்து புகுந்தான் -அவனை நான் இனி ஒரு காலும் விஸ்லேஷித்து கிலேசப் படுகிறேன் அல்லேன் -என்கிறார் –

வைத்தேன்  மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே-எய்த்தே ஒழிவேன் அல்லேன் –அனுமதியாலே என்னெஞ்சினுள்ளே வைத்தேன் -அனுமதி மாத்ரத்துக்கு உள்ள பலாதிக்யம் என் -அவன் ஹ்ருதயஸ்த்தனான பின்பு பிரிந்து துக்கப் படுகிறேன் அல்லேன் -இது எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன –
என்றும் எப்போதும்-சர்வ திவசத்திலும் -சர்வ அவஸ்தையிலும்
மெய்த்தேய் திரைமோது தண் பாற் கடலுளால் -நிரந்தரமாய் -ஏய்ந்த -தகுதியான -திரை மோதா நிற்பதாய் -சிரமஹரமான திருப் பாற் கடலிலே -சிறு திவலை படிலும்-மோதிற்று -என்னும் படி இ றே ஸுகுமார்யம் இருப்பது –
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –திரைகள் அவன் திருமேனியில் படாத படி விரிந்த பணத்தை யுடையனாய் -அனுபவத்துக்கு தகுதியான தேஜஸ்ஸை யுடைய திருவனந்த வாழ்வானை படுக்கையாக யுடையவனை –நம் பரனை-நமக்கு ஸூ லபனான சர்வேஸ்வரனை —வைத்தேன் -மதியால் -அரவத்தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் -என்கிறபடியே-

———————————————————————–

நிகமத்தில் இப்பத்தானது தன்னை  கற்றவர்களுடைய சம்சாரத்துக்கு இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் -என்கிறார்-

சுடர்ப்  பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை--இப்பத்தும் கற்றார்க்கு ஜென்ம அறுகை இ றே பலமாக சொல்லுகிறது -அது அற்றால் போய் அனுபவிக்கும் ப்ராப்யத்தை சொல்லுகிறது -பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே திருவனந்த ஆழ்வான் மடியில் சர்வேஸ்வரனும் பிராட்டியும் எழுந்து அருளி இருக்கிற இருப்பை அனுபவிக்கை இ றே முக்த ப்ராப்யம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது -என்ன கடவது இ றே
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்-திருவடிகளை சேருகையே ஸ்வபாவமாக யுடைய ஆழ்வார் -ஞானானந்தங்கள் அன்று நிரூபகம்-திருவடிகளில் சேர்த்தியே நிரூபகம்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும்-சம்சார சம்பந்தத்தை அறுக்க அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்து –அடிச்சேர்வகை –முடிப்பான் –-என்றுமாம் –
சன்மம்-விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே––ஜென்ம சம்பந்தம் அறும்படி இப்பத்தும் தன் கண்கள் சிவந்து நோக்கும் -அதாகிறது ஜென்மத்துக்கும் இப்பத்தும் த்ருஷ்ட்டி விஷம் என்கை -ஜென்மத்துக்கும் இப்பத்துக்கும் சஹா நவஸ்த்தான லக்ஷண விரோதம் உண்டு என்கை –


கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: