திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-6–

மாயக் கூத்தனில் ஆழ்வார் கோடின ஆர்த்தி அளவன்று ஈஸ்வரனுக்கு பிறந்த விடாய் -இது பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசப் பெற்றது இல்லை –
ஊர்த்தவம் மாஸாத் நஜீவிஷ்யே -என்று இ றே இத்தலையில் விடாய் -நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இ றே அத்தலை இருப்பது –
கீழே இவர் ஆர்த்தியோடே கூப்பிட முகம் காட்டப் பெறாமையாலே -ஹ்ரீ ரேஷாஹிமமாதுலா -என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து தப்த ஹ்ருதயனாய்
இவருடைய ஆர்த்தி தீர சம்ச்லேஷிக்கைக்காக வகையிலே உத்தியுக்தனானவன் -ஒரு காலே சென்று முகம் காட்டில்
-ஒரு காலே ஆறு பெறுகில் உடை குலைப் படுமா போலே இவர் சிதிலர் ஆவார் -என்று இவர் பக்கலிலே நேரே வந்து புகுராதே
வரவை அறிவித்து ப்ரீதி சாத்மித்தவாறே முகம் காட்டுவோம் என்று பார்த்து
பெருமாள் ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு தாம் எழுந்து அருளின ப்ரீதி சாத்மித்தவாறே எழுந்து அருளுகைக்காக ஸ்ரீ பரத்வாஜ பகவான்
ஆஸ்ரமத்தில் விட்டு அருளினால் போலேயும் -ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளுகிற போது
நினைவு இன்றிக்கே போய் புக்கவாறே விதுராதிகள் ப்ரீதியாலே சிதிலராகக் கூடும் -என்று குசஸ்தலத்திலே -நிவசதி சச ப்ராதரி ஹைஷ் யதி -என்று
வரவு வார்த்தை யானவாறே-பிற்றை நாள் ஹஸ்திந புரத்திலே போய்ப் புக்கால் போலேயும் -சம்ச்லேஷ உன்முகனாய்
திருக் கடித்தானத்திலே புகுந்து நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க தம்மோடு கலக்கைக்கு ஒருப்பட்டு நிற்கிற நிலையை
அனுசந்தித்து க்ருதக்ருத்யராய் -அத்தை பேசி இனியராகிறார்
கீழில் திருவாய்மொழியிலே வியசனப் படுத்தின நினைவு தானே இப்போது உஜ்ஜீவனமாம் படி பண்ணினான் –
செறுவாரும் நட்பாகுவார் இ றே-செங்கோன் அருள் பெற்றவாறே –

———————————————————————

என்னுடைய ஆர்த்தி தீர்த்து அருள்வான் -ஸர்வேஸ்வரனே -அவன் ஊர்  திருக் கடித்தானாம் -என்கிறார்

எல்லியும்  காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ-அஹோ ராத்ர விபாகம் இன்றிக்கே -உபகாரகனானதன்னை -ஒருவன் செய்து அருளும் படியே -என்று நினைத்து நான் உஜ்ஜீவிக்கும் படியாக
நல்ல வருள்கள்-இத்தலையில் குற்றம் பாராதே வெறுமையே பார்த்து தன் பேறாக அருளுகை -மாயக் கூத்தனில் விடாய்க்கு அருளினான் என்று இருக்கிறிலர்
நமக்கே தந்தருள் செய்வான்-பலர் அடியார் முன்பு அருளிய -என்று நித்ய ஸூ ரிகளும் தாம் பெற்றபேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்-கீழில் திருவாய் மொழியில் -மௌ பூம் தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமான் -என்று இவர் ஆசைப் பட்ட படியே யாயிற்று வந்து நிற்கிறது
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–முன்பு மாயக் கூத்தனாய்–செல்வர்கள் – -பின்பு எல்லியும் காலையுமாய் வேண்டாதவர்கள் -பகவத் அனுபவம் ஆகிற நிரவதிக சம்பத்தை யுடையவர்கள் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன – வாழும் -கைங்கர்ய அனுபவம் பண்ணுகிற வூர் -செல்வர்கள் வாழும் வூர் -திருக் கடித்தானம் என்னுதல் -தண் அம் துழாய் முடி அப்பன் –அருள் செய்வான் -அவன் நிற்கிற திருக் கடித் தானம் நமக்கு ப்ராப்ய பூமி என்கை -அப்பன் -உபகார சீலன் –

——————————————————————–

என் பக்கல் வருகைக்கு பிரதிபந்தகங்களை எல்லாம் எம்பெருமான் தானே போக்கி -திருக் கடித் தானத்திலும் என்னுடைய சிந்தையிலும் ஓக்க அபி நிவேசத்தை பண்ணி என்னுள்ளே வர்த்தியா நின்றான் என்கிறார் –

திருக்  கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்-ஒருக்கடுத்து -ஒருங்கவடுத்து -அதாவது ஓக்க நினைக்கை -திருப்பதியையும் என் ஹிருதயத்தையும் ஓக்க ஆதரித்து –உள்ளே உறையும்-என் மனசிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான் -விரோதி செய்தது என் என்ன -அது ராக்ஷசர் பட்டது பட்டது
செருக்கடுத்தன்று -யுத்த கண்டூதி வர்த்தித்து
திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை /அன்று -ந நமேயம்-என்ற அன்று -/உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் /வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ /
ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் –

——————————————————————–

பிராட்டியோடே கூடத் திருக் கடித் தானத்தில் வந்தான் என்கிறார் –

ஒருவர்  இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று-உருவு கரந்து –உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று கீழோடே அந்தவிதமாகக் கடவது -மூல பலம் சாம்படி அருளுகிற அன்று முந்துற ஒருவனாய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக இருவரும் மூவருமாய்த் தோற்றி
உருவு கரந்து –மேகம் மிக்க வாறே இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையாலே -ரூப கிரஹணம் அரிதாய் -உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று அந்வயம் -வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை –
திருவமர் மார்பன் -நகச்சின் நாபராத்யதி -என்னும் பிராட்டியோடே கூடவாயிற்று வந்தது
திருக் கடித் தானத்தை- மறவி யுறைகின்ற மாயப்பிரானே– பொருந்தி வர்த்திக்கிறவனாய் என் பக்கலிலே ஆச்சர்யமாம் படி பிரவணன் ஆன சர்வேஸ்வரன்
உள்ளும் தோறும் தித்திப்பான்-அனுசந்திக்க அனுசந்திக்க புதியனாய்க் கொண்டு ரசியா நின்றான்-

—————————————————————

திருக்கடித்தானத்தை கலவிருக்கையாகக் கொண்டு ஸ்நேஹ அதிசயத்தாலே என் நெஞ்சை நிரந்தர வாசஸ் ஸ்தானமாக கொண்டான் என்கிறார் –

மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

மாயப்பிரான்-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய உபகாரகன் –
என் வல்வினை மாய்ந்தற-தன்னைப் பிரிந்து நான் பட்ட துக்கம் எல்லாம் நிச்சேஷமாகப் போம் படி / மாயக் கூத்தனில் -காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -பட்ட விடாய் எல்லாம் -வாசனையோடு போம்படி –
நேசத்தினால்-எனக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே -என் பக்கல் சங்காதிசயத்தாலே
நெஞ்ச நாடு-சம்ச்லேஷ விஸ்லேஷங்களால் இவர் நெஞ்சம் பரமபதம் போலே இடமுடைத்தான படி –
குடி கொண்டான்-சபரிகரமாக நித்ய வாஸம் பண்ணா நின்றான் –அரவத்து அமளியினோடும் -என்கிறபடியே
தேசத்தமர் திருக் கடித் தானத்தை-வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே—நிரந்தர பகவத் அனுபவத்தால் தேஜஸ் ஸை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு ப்ராப்ய பூமியாய் -வாசத்தை யுடைய பொழிலொடு கூடின திருக் கடித்தானத்தை கோயிலாகக் கொண்டு வர்த்திக்கிற மாயப்பிரான் -நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்-

————————————————————–

என் பக்கல் உள்ள பிரேம அதிசயத்தாலே திருக் கடித்தனத்தோடே கூட என் ஹிருதயத்திலே புகுந்து அருளினான் என்கிறார் –

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை–திருக் கடித்தானத்தை தனக்கு அசாதாரணமான கோயிலாகக் கொண்டான்
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்-செருப்பு வைத்து திருவடி தொழ புக்காரை போலே ஆக ஒண்ணாது என்று திருக் கடித்தனத்தோடே வந்து புகுந்தான்
கோயில் கொள் தெய்வம் -அந்த கருட விஷ்வக்சேனர் பிரமுகர் -பரமபதத்தில் இவர்களுக்கும் ஒரோ கோயில் உண்டாய் யாயிற்று இ றே இருப்பது –
மெல்லாம் தொழ-வைகுந்தம் கோயில் கொண்ட –நித்ய ஸூ ரிகள் அனுபவிக்க பரமபதத்தை கோயிலாக கொண்டவன்
குடக் கூத்த வம்மானே––சர்வேஸ்வரன் ஆகையால் நித்ய ஸூரிகளோபாதி பிராப்தி ஒத்து இருக்க -சம்சாரிகள் இழக்க ஒண்ணாது என்று கிருஷ்ணனாய் வந்து அவதரித்து -குடகு கூத்து முதலான மநோ ஹாரி சேஷ்டிதங்களை பண்ணி -அவதாரத்துக்கும் பிற்பாடானான எனக்காக திருக் கடித்தானத்தை கோயிலாகக் கொண்டு -அது தன்னோடே வந்து என் நெஞ்சிலே புகுந்தான் -அழகிய பாற் கடலோடும் -என்கிறபடியே -திருக் கடித்தானத்தில் நிலை என்னைப் பெறுகைக்கு ஆகையால் -சாத்தியம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இல்லை இ றே -இனி ஒரு கந்தவ்ய பூமி உண்டு என்று அறியாது ஒழிகை –

————————————————————-

தம்முடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே திருக் கடித்தானத்தை எல்லோரும் ஆஸ்ரயிங்கோள் என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கூத்த  வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

கூத்த வம்மான்-மநோ ஹாரி சேஷ்டிதங்களால் பெரியனானவன்
கொடியேன் -தன்னை பிரிகையாலே நிரதிசய துக்கத்தை யுடைய நான் –
இடர் முற்றவும்-என்னுடைய துக்கத்தை நிச்சேஷமாக
மாய்த்த வம்மான்-உருமாய்த்த என் ஸ்வாமி –
மது சூத வம்மான் உறை-பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான சர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை-அவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே நித்ய வசந்தமான பொழில் -கடாக்ஷ வர்ஷம் மாறில் இ றே பூ மாறுவது -சிரமஹரமான திருக் கடித்தானத்தை –
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–இனியத்தை செய்ய இடரானது நமக்கு தேசம் அன்று என்று தானே போம் -குறிக் கொண்மின்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள்-

———————————————————————-

உங்கள் துக்க நிவ்ருத்திக்கு ஏத்த வேண்டா -திருக் கடித்தானத்தை நெஞ்சால் நினையுங்கோள் -என்கிறார் –

கொண்மின்  இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக்-உங்கள் ஸமஸ்த துக்கங்களும் போம்படியாகத் திருக் கடித் தானத்தை நெஞ்சால் நினையுங்கோள்
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த -சர்வ ஸூலபனானவனுடைய -சகல லோகங்களையும் அளந்த –
ஒண் தாமரை-ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று அளந்தது
மண்ணவர் தாம் தொழ -ஸுலபயத்தையும் போக்யதையும் அறிய மாட்டாத அஞ்ஞர் தொழ
தாம் வந்து-பரமபதம் நித்ய ஸூ ரிகளுக்கே யாய் இருக்குமா போலே -உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கேயாய் இருக்கை -அந்தர்க்கு வைத்த இறையிலியில் கண்ணுடையார்க்குப்பிராப்தி இல்லை இ றே
வானவர் நண்ணு திருக் கடித் தான நகரே— அசங்குசித ஞானராய் நித்ய அனுபவம் பண்ணுமவர்கள் தாம் வந்து நண்ணுகிற தேசம் -நமக்கு அவ்வருகானவன் தாழ்வுக்கு எல்லையான சம்சாரிகள் தொழும் படி நிற்கிற சீலம் இருந்த படி என்-என்று இத்தை அனுபவிக்கைக்கு இங்கே வந்து ஆஸ்ரயிக்கும் திருக் கடித்தான நகரை –கொண்மின் இடர் கெட உள்ளத்து -இங்குள்ளார் அங்கே போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கே வருவது சீல குணம் அனுபவிக்க –

—————————————————————-

எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷணமான நகரங்கள் எல்லாம் பல உண்டாய் இருக்கச் செய் தேயும் -என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும் தன்னுடைய தாய ப்ராப்தமான ஸ்தானமாக கொண்டு ஸ்நேஹித்து இருக்கும் -என்கிறார் –

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

வானிந்நிலம் கடல்-எங்கும் எங்கும் -தலைச் சிறந்த-தான நகர்கள்-முற்றும்
மேலில் லோகங்களிலும் -பூமியிலும் -கடலிலும் -கண்ட இடம் எல்லாம் மிகவும் சிலாக்யமான இருப்பிடமான நகரங்கள் முற்றும் –
எம் மாயற்கே-என் பக்கலிலே அபி நிவிஷ்டனான-ஆச்சர்ய பூதனுக்கு / ஆனவிடத்தும் –-ஆயிருக்கச் செய் தேயும் –
என்னெஞ்சும் திருக் கடித்தான நகரும் தனதாய்ப் பதியே-தனக்கு தாய ப்ராப்தமான ஸ்த்தானமாக விரும்பி இரா நின்றான் –

——————————————————————–

கீழ்ச் சொன்னவை எல்லாம் அவனுக்குத் தாயப் பதிகள் அல்லவோ என்னில் -அது அப்படியே யாகிலும் -என்னோடே கிட்டி  சம்ச்லேஷிக்கைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித்தானத்திலே அத்யபி நிவிஷ்டன்-ஆனான் என்கிறார் –

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்-தலை சிறந்த -தாயப்பதிகள்-எங்கும் எங்கும்-மிகவும் வி லக்ஷணமாய் பழையதாய் வருகிற ஸ்தானங்கள் எங்கும்
மாயத்தினால்-அபி நிவேசத்தினால் என்னுதல் -இச்சையால் என்னுதல் -மாயா வயுநம் ஞானம் –
மன்னி வீற்று இருந்தான் -விரும்பி தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்ற இருந்து அருளினவன் -ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோற்ற இருந்தவன் என்றுமாம் –
உறை-நித்ய வாஸம் பண்ணுகிற
தேசத்தமரர் -தேஜஸ் ஸை யுடைய நித்ய ஸூ ரிகளுக்கு ப்ராப்ய பூமியான திருக் கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி -கோப சஜாதீயனாய் வந்து -அவதரித்து அவர்களுக்கு தலைவனானவன்
அற்புதன் தானே–ஆச்சர்யமான படிகளை யுடையவன் –
உகந்து அருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் யுண்டாகிலும் -என்னை லபிக்கைக்கு திருக் கடித்தானத்திலே தன் மேன்மையும் நீர்மையும் எல்லாம் பிரகாசியா நின்றான் -என்கிறார் –

—————————————————————–

என்னை பெறும் தனையும் திருக் கடித் தானத்தில் நின்று அருளினான் -என்னோடு சம்ச்லேஷித்த பின்பு நிற்பதும் இருப்பதும் என் நெஞ்சிலே என்கிறார் –

அற்புதன்  நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-

நாரணன் -தன் உடைமையை விட்டுக் கொடாத வத்சலன் -ரிபூணம் அபி வத்சல –
அரி-ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தன் -வயிற்றிலே பிறந்த பிரஜை தாயை அறிந்து நேர் முகம் பார்த்தால் அதின் தோஷம் போக்குகை –
வாமனன்-தன்னை தாழ விட்டு ஆஸ்ரிதர் உடைய சர்வ அபேஷிதங்களையும் முடித்துக் கொடுக்குமவன் -தான் அர்த்தியாய் வந்து கிட்டுமவன்
அற்புதன்-கிட்டினால் -அனுபவிக்கைக்கு நிரதிசய போக்யன் ஆனவன் -இப்படிகளாலே அத்யாச்சர்ய பூதன்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்-கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
அநந்ய பிரயோஜனர் என்னும் புகழை யுடைய வைதிகராலே உச்சரிக்கப் பட்ட நாலு வேதங்களினுடைய ப்ரதி த்வனியாலே முழங்கா நின்றுள்ள கற்பக வனத்தை யுடைய திருக் கடித்தானத்திலே நிற்பது -மேவி இருப்பது என் நெஞ்சகம் என்னுதல் –
திருக் கடித்தானத்து – நாரணன் அரி வாமனன்-அற்புதன்-நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம்-என்னுதல்
திருக் கடித்தானம் என்றது சப்தம்யர்த்தே-பிரதமை-

———————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி கற்றவர்களை இது தானே திரு நாட்டிலே கொடு போய் விடும் -என்கிறார் –

சோலைத்  திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை -சிரமஹரமாய் -தர்ச நீயமான சோலையை யுடைய திருக் கடித் தானத்தில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ யபதியை
மதிட் குருகூர்ச் -சம்சாரிக துரிதங்களுக்கு போக ஒண்ணாத அரணை யுடைய திரு நகரி
சடகோபன் சொல்-ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் -என்னுமாப்போலே
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்-பாலோடு அமுது அன்ன ஆயிரம் என்னுதல் -இப்பத்து என்னுதல் -வாஸ்ய வாசகங்கள் யுடைய சேர்த்தி இருக்கிற படி –பால் என்கிறது -சோலை திருக் கடித்தானத்து உறை-திருமால் என்கிற வாஸ்யத்தை –அமுது என்கிறது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை -இது ஆளவந்தார் நிர்வாஹம் –
இப்பத்தும் – மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே—இப்பத்தும் –வியந்து — மேலை வைகுந்தத்து இருத்தும் –சம்சாரத்தில் இத்தை அப்யசிப்பான் ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு-சர்வாதிகமான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் –மாயக் கூத்தன் நடையாடாத தேசத்திலே வைத்து -ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: