திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-5-

எம்பெருமானுடைய தனிமைக்கு அஞ்சி -அவனுடைய ஸுர்ய வீர்யாதிகளை அனுசந்தித்து தமக்கு பிறந்த பயம் கெட்டு தரித்து —
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு -அதனுள் கண்ட திருவடி -என்று தொடங்கி -சீர் கொள் சிற்றாயனுடைய திரு வழகை மிகவும் அனுசந்தித்து –
முதலிலே தொடங்கி இவ்வளவும் பிறந்த ப்ரீதி எல்லாம் இதிலே ஒரு திவலை என்னும்படி மிகவும் ப்ரீதரான ஆழ்வார் -அவனைக் கண்ணாலே கண்டு
தழுவி முழுசி பரிமாற வேண்டும் என்னும் அபேக்ஷை பிறந்த போதே பெறாமையாலே கீழ் பிறந்த நிரவதிக ப்ரீதியும் போய்
தாம் திருநகரியில் யாகராகவும் அவன் திருச் செங்குன்றூரில் யானாகவும்-அனுசந்தித்து -முதலிலே தொடங்கி இவ்வளவும் பிறந்த
வியஸனம் எல்லாம் இதிலே ஒரு கலா மாத்திரம் என்னும் படி மஹா வியஸனம் ஆகிற தவ தஹன ப்ரீதராய் –
தம்மில் காட்டில் தப்தமாய் ஆகுலமான சர்வ கரணங்களையும் யுடையராய் -அவனைக் காண வேணும் என்று பெரு விடாய்ப்பட்டு
என்னார்த்தி தீர சிரமஹரமான படிகளாலே தோற்றி அருள வேணும் என்று கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி பெரிய ஆர்த்த நாதத்தோடே கூப்பிடுகிறார் –

———————————————————–

என் விடாய் கெடும்படி தாமரைத் தடாகம் போல் வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

மாயக்  கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

மாயக் கூத்தா வாமனா--பிரயோஜனாந்தர பரனான இந்திரனுடைய அபேக்ஷிதம் பூரிக்கைக்காக ஸ்ரீ வாமனனாய் மஹா பலியை யுடைய யஞ்ஞ வாடம் ஏற நடக்கை தொடக்கமான மநோ ஹாரியான திவ்ய சேஷ்டிதங்களை யுடையவனே
வினையேன் கண்ணா-எனக்காக கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணினவனே -இத்திரு வவதாரம் தமக்கு கார்யகரம் ஆகாமையாலே வினையேன் -என்கிறார்
சாயல் சாமத் திருமேனி-சாயலையுடைய ஸ்யாமமான திருமேனி குளிர்ந்த இலையாக –

——————————————————————–

என் விடாய் கெடும் படி அழகிய மயிர் முடியாதே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

காண  வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-

நாணி -இவனை நாட்டார் பழி சொல்லுவார்கள் என்று லஜ்ஜித்து / இவனை ஆசைப்பட்டு பெறாமையாலே என் செயதேன் ஆனேன் என்று லஜ்ஜித்து என்றுமாம் –
நன்னாடு -விபரீத லக்ஷணை -விஷய அனுபவத்தால் ஸூ மிதமான தேசத்திலே என்றுமாம் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே ஆத்ம அனுமானத்தாலே ஸூ கிப்பார் ஸூ கிப்பது எம்பெருமானை பெற்று இ றே என்று கொண்டு நன்னாடு என்கிறார் என்றுமாம்
அலமந்தால் -தடுமாறினால் /
கறுத்து இருந்துள்ள ஆதித்யன் உதியா நிற்பதும் செய்து அபி நவமான யோக்யதையை யுடையதொரு மாணிக்க மலை போலே அழகிய மயிர் முடியாதே கூடின சென்னியை யுடைய பெரியோனே –

—————————————————————–

என்னுடைய ஆர்த்தி தீரும்படி வி லக்ஷணமாய் சிரமஹரமான தூ நீர் முகில் போலே  வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

முடி சேர்  சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தோடே கூடின சென்னியை யுடைய ஸர்வேஸ்வரனே -உனக்கு தகுதியாய் மிகவும் அழகியதாய் ஒளியை யுடைத்தாய் சிரமஹரமாய் பரிமளம் மிகா நின்றுள்ள திருத் துழாய் மாலையை யுடைய பெரியோனே என்று நிரந்தரமாக சொல்லா நின்று கொண்டு பொருமி அழுதால்-
படியாய்ச் சேர்ந்து இருந்துள்ள மகரக் குழை களும் -பவளம் போலே இருக்கிற வாயும் நாலு தோளும் துடியை ஒத்து இருந்துள்ள இடையையும் யுடைத்தாய் கொண்டு சமைந்து தெளிந்த நீரை முகக் கையாலே நல்ல நிறத்தை யுடைய மேகம் போலே வந்து தோற்ற வேணும் –படி யாவது -திருமேனி என்றுமாம் –

——————————————————————-

உன்னுடைய அழகு வந்து என் ஹிருதயத்தில் நிறைந்து நலிகிற படி என்னால் சொல்லி முடிகிறது இல்லை என்று எம்பெருமானை நோக்கி விஜ்ஜாபிக்கிறார்

தூ நீர்  முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

தேனாகிற நீரை யுடைய செவ்வித் தாமரை பூ போலே இருக்கிற கண்களும் என் ஹிருதயத்திலே பூரணமாய் நலிகிற படி -தேனின் நீர்மையை யுடைய என்றுமாம்
நீர் வெள்ளத்திலே வெள்ளி மலையின் மேலே அழகியதாய் கறு த்து கிடந்ததொரு மேகம் போலே சுத்த ஜலமான கடலிலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும் என் ஸ்வாமி-

—————————————————————–

உன்னுடைய அழகு -என்னுடைய ஹ்ருதயத்தில் யனு சம்ஹிதமாய் நின்று நலியா நின்றது -இது மறக்க விரகு சொல்ல வேணும் என்கிறார் –

சொல்ல  மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

விளங்கா நின்ற ஒளியை யுடைய திருவடிகள் எல்லையில்லா ஒளியை யுடைய இரண்டு ஆதித்யர்களைப் போலே என்னுள்ளே நின்று நலிகிறபடி நான் சொல்ல மாட்டு கிறி லேன் –
அநர்த்த ரூபமாய் சொல்லுகிற அஞ்ஞானம் வருகைக்கு உபாயம் என் –சொல்ல வல்லையே -கடல் சூழ்ந்த மஹா பிருத்வியை எல்லாம் பிரளயத்தில் அந்தர படாமே திருவயிற்றிலே வைத்து பரிஹரித்து அருளின பரம உதாரனே-

—————————————————————-

உன்னுடைய ஸுந்தரியாதிகளை நினைத்து காண வேணும் என்று நோவு பட்டுக் கூப்பிடுகிற நான் உஜ்ஜீவிக்கும் படி எங்கேனும் ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

கொண்டல்வண்ணா குடக்கூத்தா-நிரதிசய ஸுந்தர்யத்தையும்-மநோ ஹாரியான சேஷ்டிதத்தையும் யுடையவனே
வினையேன் கண்ணா-எனக்கு த்ருஷ்டியான கிருஷ்ணனே –வினையேன் -காணப் பெறாத இன்னாப்பாலே வினையேன் என்கிறார்
என்னை விஷயீ கரிக்கைக்காக அண்டாதிபதி யானவனே -என்று என்னை அடிமை கொள்ளுகைக்காக கூப்பிட்டு அழைத்தக்கால் –

——————————————————————

இங்கே வந்து தோன்றி அருளுதல் -வாராமைக்கு கண் அழிவு உண்டாகில் என்னை அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல் செய்ய வேணும் என்கிறார் –

வந்து  தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப-ஒருவரையும் இழக்க கடவது அன்றிக்கே நிரதிசய போக்யமாய் லோகத்தை எல்லாம் அளந்த உன்னுடைய திருவடிக் கீழ் முற்கோலி  வந்து நிற்கும் படி –

——————————————————————

உன்னோடு சத்ருசமான  மேக தரிசனத்தால் நான் வியசனப் படா நிற்க என்னோடு வந்து சம்ச்லேஷித்து அருளுகிறிலை-இங்கனேயோ உன்னுடைய ஸ்வ பாவம் என்கிறார் –

ஒக்கும்  அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

நாணாளும்-நாள் தோறும் நாள் தோறும் / தொக்க-திரண்ட / மிக நீர்மையுடைய பாண்டவர்கள் ஐவர்க்காய் -ஒரு நீர்மையும் இன்றிக்கே இவர்களுக்கு விரோதிகளுமான துர்யோதனாதிகள் நூற்றுவரும் கால் அறும் படி புக்க உன்னை சாரதியாக யுடைத்தாயாகையாலே -அதி சிலாக்யமான தேருக்கு தனியே நிர்வாஹகன் ஆனவனே -வருகிறிலை -சேனையோ ரூபாயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத-என்றால் அப்படிச் செய்யலாவது அர்ஜுனனுக்கேயோ -எனக்காக அந்த தேரை திரிய விட்டால் ஆகாதோ என்று கருத்து –

—————————————————————–

இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார் –

இதுவோ  பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு உறுப்பாய் மின்னா நின்றுள்ள திருவாழி யாகிற திவ்யாயுதத்தை யுடையையாய் -ஆஸ்ரிதரோடு சர்வவித சம்ச்லேஷமும் பண்ணுமவனே -எதுவேயாகக் கருதுங்கொல்–இவ்வார்த்தி போக்கி யருளத் திரு உள்ளமாய் அருளுமோ -இவ்வாத்த நாதம் கேட்டால் அத்யந்த தயாளுவானுடைய திரு உள்ளம் எங்கனம் புண்படுமோ -என்றுமாம்-

—————————————————————–

சந்நிஹிதனாய் வைத்து கண்ணால் காண ஒண்ணாத படி நின்ற ஆச்சர்ய பூதனான உன்னை நான் காண்பது எவ்விடத்தே -என்கிறார் –

பிறந்த  மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-

பிறந்த மாயா -அகர்ம வஸ்யனாய் இருந்து வைத்து கிருபாதிசயத்தாலே அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு கர்ம வச்யரோடு சஜாதீயனாய் வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய பூதனே –/ பாரதம் பொருத மாயா-ஆயுதம் எடுக்க கடவது அன்றாக ப்ரதிஜ்ஜை பண்ணி சாரத்யத்திலே அதிகரித்து வைத்து பாண்டவர்கள் வெல்லும் படி பாரத யுத்தம் பண்ணின ஆச்சர்ய பூதனே
நீ யின்னே-நீ இங்கனம் ஸூ லபனாய் இருக்கச் செய் தே / பிருதிவ்யாதிகளான பூதங்களுக்கும் -அவற்றின் காரியங்களுக்கும் ஆத்மாவாய் நின்றவனே -காற்றுக்கு சிறப்பு ஆகிறது தாரகத்வம்
கண்ணாலே காண்கிற பாலினுள் நெய் யுண்டாய் இருக்கச் செய்தே காண்கை அரிதானால் போலே இவை எல்லா வற்றுள்ளும் நின்று வைத்துக் கொண்டு காண ஒண்ணாத படி நிற்கிற அத்யாச்சர்ய பூதனே /கறந்த -காலத்தாலும் ஆதஞ்சா நாதிகளாலும் உள்ள பரிமாண ராஹித்யத்தை நினைக்கிறது –

———————————————————————

நிகமத்தில் இத்திருவாய்மொழி வல்லார் ஆழ்வார் பட்ட துக்கம் படாதே இஹ லோகத்தில் இஜ்ஜகத்தில் எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக ஸூ கிப்பர்-என்கிறார் –

எங்கே  காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமாய் -நிரதிசய போக்யமான திருத் துழாய் மாலையால் அலங்க்ருதனான சர்வேஸ்வரனை நான் எங்கே கான்கென் என்று நிரந்தரமாக சொல்லா நின்று கொண்டு அந்த பாவத்தில் பிரவணமான சொற்களாலே
செங்கேழ்-செவ்விதாம் படி / எல்லியும் -இரவும் / காலையே-பகலும்


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: