திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-5–

கீழ் இரண்டு திருவாய் மொழிகளால் அவன் சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவுகிற
தனிமைக்கு அஞ்சி -அவனுடைய ஸுர்ய வீர்யாதிகளை அனுசந்தித்து தமக்கு பிறந்த பயம் கெட்டு தரித்த சமனந்தரம்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு -அதனுள் கண்ட திருவடி -என்று தொடங்கி
-சீர் கொள் சிற்றாயனுடைய திரு வடிவு வழகை மிகவும் அனுசந்தித்து –
முன்புத்தை ப்ரீதிகள் எல்லாம் ஒரு திவலை என்னும்படி அதி ப்ரீதராய் -அதுதான்
பிரத்யக்ஷ சாமானகாரமான மானஸ அனுபவம் ஆகையால் -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்து அந்த
நிரவதிக ப்ரீதி எல்லாம் போய்
தாம் திருநகரியில் யாகராகவும் அவன் திருச் செங்குன்றூரில் யானாகவும்-அவ்வடிவோடே அணைய பெறாமையாலே-
-கீழ் பட்ட -வியசனங்கள் எல்லாம் இதிலே ஒரு கலா மாத்திரம் என்னும் படி நொந்து -காட்டு தீயிலே அகப்பட்டாரை போலே தப்தராய்
தம்மில் காட்டில் ஆகுலமான சர்வ கரணங்களையும் யுடையராய் -அவனைக் காண வேணும் என்று பெரு விடாய்ப்பட்டு
என்னார்த்தி தீர சிரமஹரமான படிகளாலே தோற்றி அருள வேணும் என்று கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி பெரிய ஆர்த்த நாதத்தோடே கூப்பிடுகிறார் –
கீழ் இவ்விஷயத்துக்கு பிறரால் அழிவு வருகிறதோ -என்று பீதரானார்
-இப்போது தம் ஆர்த்த த்வனியாலே அழிக்கிறார்-
மாயக் கூத்தனில் விடாய் -என்று பிரசித்தம் இ றே -இதுக்கு மேல் உள்ள இழவுகள் பாதித அனுவ்ருத்தி மாத்திரம் –

—————————————————————-

என் விடாய் கெடும்படி தாமரைத் தடாகம் போல் வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

மாயக்  கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

மாயக் கூத்தா -ஆச்சரியங்களையும் மநோ ஹாரி சேஷ்டிதங்களையும் யுடையவனே -இந்திரன் இரப்பு தலைக் கட்டுகைக்காக-அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே அதிகரிக்கையும் -மஹா பலி யஞ்ஞ வாடத்து அளவும் தர்ச நீயமாம் படி நடந்து சென்று மாவலி -என்றால் போலே முக்த ஜல்ப்பிதங்கள் முதலான மநோ ஹாரி சேஷ்டிதங்களை யும் யுடையவனே –நடந்து சென்ற நடை வல்லார் ஆடினால் போலே இருக்கிறதாயிற்று இவர்க்கு –
வாமனா-இந்திரனுக்காக தன்னை இரப்பாளன் ஆக்கினவன் கிடீர் -தன்னைக் காண்கையே பிரயோஜனமாய் இருக்கிற என்னை இரப்பாளனாக்கினான்
வினையேன் கண்ணா -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து இந்திரனுக்கு ஆனால் போலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தது தனக்காக என்று இருக்கிறார் -அவதாரங்களில் காட்டில் கிருஷ்ணாவதாரத்தில் அண்மையாலே சொல்லுகிறார் -சர்வ சாதாரணனுடைய அவதாரம் ஆகையால் உணர்ந்தவர்களுக்கு எனக்கு என்னலாம் படி இருக்கையாலே சொல்லுகிறார் என்றுமாம் —வினையேன் என்கிறது பல்லில் பட்டு தெறித்தால் போலே அவதாரத்துக்கு பிற்பட்ட படியால் சொல்லுகிறார்
கண் கை கால்-தூய செய்ய மலர்களா-கிட்டினாரை முதல் உறவு பண்ணும் கண் -நோக்குக்கு தோற்றவர்களை அணைக்கும் கை -ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் திருவடிகள் -அங்கே கிடந்து தலையெடுத்து அனுபவிக்கும் வடிவு கண்ட போதே விடாய் கெடும்படி நிர்மலமாய் சிவந்து இருந்துள்ள பூக்களாக -ஒரு பொய்கை பரப்பு மாற பூத்தால் போலே தூரஸ்தர்க்கு பூவேயாய்த் தோற்றும் அத்தனை
சோதித் செவ்வாய் முகிழதா-தேஜோ ரூபமாய் சிவந்து இருந்துள்ள திருவதரம் முகுளமாக -அவாக்ய அநதரா-என்கிற தத்வம் ஆகையால் ஸ்மிதம் விகாச உன்முகமான அளவாய் இ றே இருப்பது -ஸ் மயமான முகாம்புஜ -என்கிறபடி இ றே வந்து தோற்றும் போது இருப்பது
சாயல் சாமத் திருமேனி-தண் பாசடையா-ஒளியை யுடைத்தாய் ஸ்யாமமான திருமேனி குளிர்ந்த பச்சிலையாக -புருஷ புண்டரீகாப -அக்கமலத்து இலை போலும் திரு மேனி -என்ன கடவது இ றே
தாமரை நீள்-வாசத்தடம் போல் வருவானே-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இ றே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்
ஒரு நாள்-ஒரு கால் நாக்கு நனைக்க என்பாரை போலே
காண -வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் அதுவே -ஒரு தேச விசேஷத்திலும் சதா பஸ்யந்தி -தரிசனத்தை இ றே பிரயோஜனமாக சொல்லிற்று
வாராயே-ஆற்றாமை மிக்காலும்-தானே வந்து காட்ட காணும் அதுவே முறை -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் –ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -என்ன கடவது இ றே –

—————————————————————

என் விடாய் கெடும் படி அழகிய மயிர் முடியாதே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

காண  வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-

காண வாராய் என்று என்று-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் –
கண்ணும் வாயும் துவர்ந்து -எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-
அடியேன்நாணி-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –
நன்னாட்டலமந்தால்நன்னாடு -அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் –அலமந்தால் -தடுமாறினால் –
இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –
யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –
நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ
யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே
காண வாராய்-பிரயோஜனார்த்தியாய் அழைக்கிறேனோ –
கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற
கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே / நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை
சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –
யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை -கேசவ கிலேச நாசன –

—————————————————————

தெளிந்த நீரைப் பருகின காள மேகம் போலே சிரமஹரமான வடிவோடே என்னார்த்தி தீர வந்து தோன்ற வேணும் என்கிறார் –

முடி சேர்  சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

முடி சேர் சென்னி யம்மா--ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தோடே சேர்ந்த சென்னியை யுடைய ஸர்வேஸ்வரனே –
நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே–தகுதியாய் செறியத் தொடுக்கப் பட்டு மநோ ஹராமாய ஒளியை யுடைத்தாய் சிரமஹரமாய் நாள் செல்ல நாள் செல்ல பரிமளம் மிக்கு செல்லுகிற திருத் துழாய் மாலையை யுடைய ஸர்வேஸ்வரனே
என்று என்றே-ஒரு கால் சொல்லி யாறி இருந்தேனாய் தான் தாழ்கிறாயோ
ஏங்கி அழுதக்கால்-பொருமி அழுதக்கால் -என்னுடைய அழுகை குரலில் தளர்த்தியை கேட்டால் சடக்கென வந்து கொடு நிற்க வேண்டாவோ –
படிசேர் மகரக் குழைகளும்-ஸ்வ பாவமாய்க் கொண்டு சேர்ந்த என்னுதல் -படி -என்று திருமேனியாய் -அதுக்கு சேர்ந்த -என்னுதல் -படி கண்டு அறிதியே என்ன கடவது இ றே
பவளவாயும் நால் தோளும்துடி சேரிடையும் அமைந்ததோர்–பந்தம் எல்லாம் தோற்றும் திரு அதரமும்-அணைக்கைக்கு கற்பக தரு பணைத்தால் போலே நாலு தோள்களும் -துடி போலே இருந்த இருந்த இடையுமாய்க் கொண்டு சமைந்த தொரு முகில் போலே யாயிற்று வடிவு இருப்பது -இவ் விசேஷணங்கள் கேவலம் முகிலுக்கு இல்லாமையால் அபூத உவமை
தூ நீர் முகில் போல் தோன்றாயே–தெளிந்த நீரை முகந்த முகில் -அகவாயில் தண்ணளி எல்லாம் வடிவு அழகிலே காணலாம் படி வந்து தோற்ற வேணும்-

———————————————————————-

உன்னுடைய அழகு வந்து என் ஹிருதயத்தில் நிறைந்து நலிகிற படி என்னால் சொல்லி முடிகிறது இல்லை என்று எம்பெருமானை நோக்கி விஜ்ஜாபிக்கிறார்-

தூ நீர்  முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

தூ நீர் முகில் போல் தோன்றும்-கண்டே போதே விடாய் கெடும் படியான வர்ஷூகாவலாஹகம் போலே யாயிற்று தோன்றும் போது
நின் சுடர் கொள் வடிவும் -சுத்த சத்வம் ஆகையால் நிரவதிக தேஜோ ரூபமான விக்ரஹத்துக்கு -உபசய ஸ்வரூபமான மேகமோ த்ருஷ்டாந்தம் –
கனி வாயும்-கண்ட போதே நுகரலாம் கனி போலே இருந்துள்ள வாய் என்னுதல் -கனிப்து இருந்துள்ள வாய் என்னுதல் –
தே நீர்க் கமலக் கண்களும்-தேனாகிற நீரை யுடைத்தான தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும் -இத்தால் செவ்வியை நினைக்கிறது -தேனினுடைய நீர்மையை யுடைய கண்கள் என்றுமாம் -அதாவது கண்ணாலே பருகலாம் படி இருக்கை
வந்தென் சிந்தை நிறைந்தவா-வந்து என் ஹிருதயத்தில் நிறைந்த படி –சொல்ல மாட்டேன் என்று அந்வயம் -இதர விஷயங்கள் அனுபவித்து விட்டால் விஸ்மரிக்கலாய் இருக்கும் இவ்விஷயம் அனுபவித்து பேர நின்றாலும் நெஞ்சிலே ஊற்று இருக்கும்
மாநீர் வெள்ளி மலை தன்மேல்-மிக்க நீர் வெள்ளத்தில் ஒரு வெள்ளி மலையின் மேலே –திருப் பாற் கடலிலே திருவனந்த ஆழ்வான் மேலே -என்கை –
வண் கார் நீல முகில் போலேதூ நீர்க் கடலுள் துயில்வானே–உதாரமாய் -கறு த்து நெய்த்து இருபத்தொரு முகில் படிந்தால் போலே -தார்ஷ்டாந்திகமான திருவனந்த ஆழ்வானை அழைத்தது கொள்ளும் அத்தனை
எந்தாய்-கீழ் சொன்ன வை லக்ஷண்யம் இல்லை யானாலும் விட ஒண்ணாத பிராப்தி இருக்கிற படி
வந்து என் சிந்தை நிறைந்த வா — சொல்ல மாட்டேனே-–மனசிலே பிரகாசம் கிலேச ஹேது வாகா நின்றது -இதுக்கு ஒரு பாசுரம் காண்கிறிலேன் -விரஹ தசையில் குண அனுசந்தானம் க்லேசத்துக்கு உடலாம் அத்தனை இ றே —தூ நீர்க் கடலுள் துயில்வானே என்று –நெஞ்சு நிறையாக காண வேணும் என்னும் அபேக்ஷை இல்லாதார்க்கு முற்பாடானாய் வந்து சேர்ந்த படி சொல்லுகிறது –

——————————————————————–

உன்னுடைய அழகு என்னுடைய ஹிருதயத்திலே ஸ்ம்ருதி விஷயமாக நின்று நலியா நின்றது -இது மறக்க விரகு சொல்ல வேணும் என்கிறார்-மறக்கும் பரிகாரம் என்னுடைய அசந்நிதானம் அன்றோ -மறவீர் -என்ன -நீ மயர்வறுக்கை யாலே -துயரறு சுடர் அடி என் மனசிலே குடி புகுந்து நலியா நின்றது -மாமேகம் என்று நீயே சொல்ல வேணும் –

சொல்ல  மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

சொல்ல மாட்டேன் -என் ஹிருதயத்திலே நின்று நலிகிற படிக்கும் பாசுரம் இடப போகிறதில்லை
அடியேன்-சம்பந்தத்தால் தவிர மாட்டுகிறிலேன் -அது ஏது என்ன
உன் துளங்கு சோதித் திருப்பாதம்-விளங்கா நின்ற ஒளியை யுடைய உன் திருவடிகள் –
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா -அளவிறந்த அழகை யுடைய பால ஆதித்யர்கள் இருவரைப் போலே என் ஹிருதயத்திலே நின்று நலிகிற படி -பால ஆதித்யர்கள் என்கிறது கண்ணாலே பருகலாம் படி இருக்கையாலும் -பாதிக்க தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு-என்னை பாதிக்க அது இளமை மிகுந்தது – என்னுள்ளவா–சொல்ல மாட்டேன்-
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்குஉபாயம் என்னே ஆழி சூழ்-மல்லை ஞாலம் முழுதுண்ட-மா நீர்க் கொண்டல் வண்ணனே-–உன்னைக் காட்டாதே அருமைப் படுத்த பார்த்தாய் யாகில் துக்காத்மகமாக சொல்லுகிற அஞ்ஞானம் ஆகிற இருள் சேருகைக்கு உபாயம் என் -சொல்ல வல்லையே -அநர்த்த ரூபமான விஸ்ம்ருதி தேட்டமாம் படி இ றே வடிவு அழகு ஹிருதயத்திலே நின்று நலிகிற படி -ஏதேனுமாக இவருக்கு துக்க நிவ்ருத்தியே இப்போது வேண்டுவது -திருவடிகள் நெஞ்சிலே பிரகாசியா நிற்க -அஞ்ஞானம் வந்து சேருகைக்கு பிரசங்கம் இன்றியே இருக்க அத்தை அபேக்ஷிக்கிறார் இ றே -கடல் சூழ்ந்த மஹா பிருத்வி எல்லாம் பிரளயத்தில் அந்தர படாமே திரு வயிற்றிலே வைத்து ரஷித்த பரம உதாரனே -என்னுதல் -ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதும் உண்ட மா நீர் என்று ஏகார்ணவமாய் -அத்தை பருகின மேகம் போலே இருந்துள்ள வடிவை யுடையவனே என்னுதல் -மல்லை ஞானம் -மஹா பிருத்வி –

———————————————————–

உன்னுடைய ஸுந்தரியாதிகளை நினைத்து காண வேணும் என்று நோவு பட்டுக் கூப்பிடுகிற நான் உஜ்ஜீவிக்கும் படி எங்கேனும் ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேணும் என்கிறார் –

கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

கொண்டல்வண்ணா-கண்ட போதே விடாய் கெடும்படி சிரமஹரமான வடிவை யுடையவனே
குடக்கூத்தா-மநோ ஹரமான சேஷ்டிதங்களை யுடையவனே
வினையேன் கண்ணா-கண்ணா– எனக்கு த்ருஷ்டியான கிருஷ்ணனே / வினையேன் -கண்ணை இழந்து இருக்கும் படியான பாபத்தை பண்ணினேன்
-என்-அண்ட வாணா வென்று -என்னை விஷயீ கரிக்கைக்காக அண்டாதிபதி யானவனே -கல்யாண குண யோகம் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்குமா போலே விபூதி யோகமும் தமக்காக என்று இருக்கிறார் –
என்னை-ஆளக் -ஒரு பிரயோஜனத்துக்காக அழைக்கிறேனோ-என்னை நித்ய கைங்கர்யம் கொள்ள வேணும் என்று அன்றோ அழைக்கிறது –
கூப்பிட்டு அழைத்தக்கால்-க்ரம ப்ராப்தியை ஸஹிக்க வல்லேனாய் தான் தாழ்கிறாயோ -என் ஆர்த்த த்வனி கேட்டால் -க்ரமத்தில் வருகிறோம் -என்று ஆறி இருக்கலாய் தான் இருந்ததோ
விண் தன்மேல் தான் -மா நீர் கொண்டல் வரும் ஆகாசத்தில் தோற்ற வேணும் -பரம பதத்தில் இருக்கும் இருப்போடு வந்து தோற்றவுமாம்
மண் மேல்தான்-அவதரித்து வந்து தோற்றவுமாம்
விரி நீர்க் கடல் தான்-ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுகிற படியே வந்து தோற்றவுமாம்
மற்றுத் தான்-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்
தொண்டனேன் -உன் திருவடிகளிலே கைங்கர்யத்தில் சபலனான நான்
உன் கழல் காண-எனக்கு ஜீவனமான திருவடிகளை காண
ஒரு நாள் வந்து தோன்றாயே—பல நாள் வேணும் என்று நிர்பந்திக்கிறேனோ என் சத்தையை நோக்குகைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேணும் –

—————————————————————

இங்கே வந்து தோன்றி அருளுதல் -வாராமைக்கு கண் அழிவு உண்டாகில் என்னை அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல் செய்ய வேணும் என்கிறார் –

வந்து  தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

வந்து தோன்றாயன்றேல்-நான் இருந்த இடத்தில் உன்னைக் கொண்டு வந்து காட்டி அருளாய் –அன்றேல் -என் ஆர்த்தியை பார்த்து உன் கிருபையால் வந்து முகம் காட்ட வேணும் -அது செய்யப் பார்த்திலை யாகில் உன் பூர்த்தியையும் -என் சிறுமையையும் பார்த்து வந்து முகம் காட்டிற்றிலை யாகில் என்றுமாம் –
உன் வையம் தாய மலரடிக் கீழ்-வசிஷ்ட சண்டாள விபாகம் பாராத திருவடிகள் –மலரடிக் கீழ்-ஒரு செவ்விப் பூவைக் கொண்டு ஆயிற்று காடு மோடையும் அளந்தது
மலரடிக் கீழ்- முந்தி வந்து யான் நிற்ப-நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே முற்பாடானாய் வந்து நிற்கும் படியாகவும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-க்ரியதாம் இதி மாம் வத -என்று கண் முகப்பே அடிமை கொள்ள வேணும் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் ப்ரக்ருதி யல்லேன் -ஜலான் மத்ஸ்யா விவோத்தருதவ் -என்னும் இளைய பெருமாள் பிரக்ருதியான என்னை அடிமை கொண்டு அருள வேணும் –
செந்தண் கமலக் கண் கை கால்-சிவந்த வாயோர் கரு நாயிறு-அந்தமில்லாக் கதிர் பரப்பி-அலர்ந்தது ஒக்கும்
சிவந்து குளிர்ந்த தாமரை போலே கண்ணையும் கையையும் காலையையும் உடையனாய் சிவந்த வாயையும் யுடையனாய் -நீலமான நிறத்தையும் யுடையனாய் இருப்பான் ஒரு ஆதித்யன் -சஹஸ்ரம் என்று ஒரு ஸங்க்யை அன்றிக்கே அளவிறந்த கிரணங்களை பரப்பிக் கொண்டு விகசித னானால் போலே வந்து தோன்ற வேணும் –
அம்மானே–உன் மேன்மையை பார்த்து அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல் -உன்னுடைமை நலியாமைக்கு த்வரை யுண்டாகில் உனக்கு வந்து அடிமை கொள்ளுதல் செய்து அருள வேணும் –

———————————————————————-

உன்னோடு சத்ருசமான மேக தரிசனத்தால் நான் வியசனப் படா நிற்க என்னோடு வந்து சம்ச்லேஷித்து அருளுகிறிலை- உன்னுடைய சங்க ஸ்வ பாவம் இதுவோ என்கிறார் –

ஒக்கும்  அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

ஒக்கும் அம்மான் உருவம் என்று-சர்வேஸ்வரனுடைய வடிவுக்கு -தூம ஜ்யோதிஸ் சலில மருதாம் சமூகமான மேகத்தை சத்ருசம் என்று பிரமிப்பர்
உள்ளம் குழைந்து -இது தோல் புரையே அன்றியே-அகவாய் சிதிலமாய்
நாணாளும்-நாள் தோறும் நாள் தோறும் -இந்த ஸைதில்யம் காதாசித்கம் அன்றியே இடைவிடாமல் செல்லுகை
-தொக்கமே கப்பல் குழாங்கள்-திரண்ட மேக சமூகங்களை காணும் தோறும் –
தொலைவன் நான்-கண்ட நாள் காருருவம் காண் தோறும் நெஞ்சோடும் -தரமிலோபம் பிறக்கிறதும் இல்லை -ஜீவித்து இருக்கவும் பெறுகிறிலேன்
நான் -மேக தர்சனம் ஆச்வாஸ ஹேது இ றே நாட்டுக்கு
தக்க வைவர்-என்ன மேக தரிசனத்துக்கு இடைந்து பாண்டவர்களை நோக்கிற்று -பந்துக்களும் ஜீவிக்க வேணும் -எங்களுக்கு ஐந்து குடிக்காடு அமையும் -என்னும் தக்கோர்மை யுடையவர்கள்
தமக்காயன்று-ரதம் ஸ்தாபாய -என்னலாம் படி கையாளாய் -அன்று உதவிற்றும் தமக்கு என்று இருக்கிறார் –
ஈரைம்பதின்மர் தாள் சாய-புக்க –பந்துக்கள் ஜீவிக்கில் ஜீவியோம் என்று நூற்றுவர் கால் அறும்படியாக தூசித் தலையில் புக்கவன் அன்றோ –
நல் தேர்ப்-இவனை சாரதியாக யுடைத்தாகையாலே அதி சிலாக்யமான தேர்
தனிப் பாகா-தனியே நிர்வாஹகன் ஆனவனே -ரதியை காண்கிறிலர்-நகாங்ஷே விஜயம் கிருஷ்ண -என்றவனை சேமம் சாத்தி வியாபரிக்கையாலே சாரதியை யாயிற்று இவர் காண்கிறது
வாராய் -சேனையோ ரூபாயோர்மத்யே ரதம் ஸ்தாப யித்வா-என்று பாண்டவர்கள் சத்ருக்கள் மேல் விட்ட தேரை என்னை நலிகிற மேகத்தின் மேல் விடலாகாது -ஐவருமாய் எதிரிகள் நூற்றுவருமாய் என்று சங்யாதாரானார் ஆனாலோ செய்தலாவது -தனியனுமாய் மேகங்கள் அசங்யாதம் ஆனால் உதவள் ஆகாதோ
இதுவோ பொருத்தமே—-ஆஸ்ரிதரோடு முந்தி பொருந்தி போந்த படி இதுவோ -ஆஸ்ரிதர்க்காக தூத்ய சாரத்யங்கள் பண்ணியும் -ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும் பகலை இரவாக்கியும் பக்ஷபதித்தது பொய்யோ -நாராயண கதாமிமாம் -என்றவனும் கைக்கூலி கொண்டு புலமை பாடினான் என்கிறார் -இப்போது தமக்கு உதவில் அவையும் மெய்யாவது என்று இருக்கிறார்
வாராய் -எனக்கு இது எல்லாம் வேணுமோ -வந்து முகம் காட்ட அமையாதோ -உன் வடிவைக் காட்டி மேகங்கள் அனுகூலமாம் படி பண்ணுதல் -மேக தர்சனம் பாதகம் ஆகாதபடி பண்ணுதல் செய்து அருள வேணும் –

—————————————————————-

இருந்ததே குடியாக ரக்ஷிக்க வந்து அவதரித்த கிருஷ்ணன் தன்னை காண்கையே  தேட்டமான எனக்கு என் செய்ய நினைத்து நினைத்து இருக்கிறான் என்கிறார் –

இதுவோ  பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

இதுவோ பொருத்தம்-இப்படி கூப்பிடச் செய் தேயும் வரக் காணாமையாலே கண்ணான் சூழலையிட்டு மறித்து -இதுவோ பொருத்தம்-என்கிறார் –
மின்னாழிப் படையாய்-மேகத்திலே மின்னினாப் போலே ஆஸ்ரித விரோதி நிரசன சீலமான திரு வாழியை படையாக யுடையவனே -அத்திருவாழி யைக் கொண்டு என்னுடைய பிரதிபந்தகத்தின் மேலே வ்யாபாரிக்கல் ஆகாதோ -என்கை
ஏறு மிருஞ் சிறைப்புள்-அதுவே கொடியா வுயர்த்தானே-ஏறக் கடவதான பெரிய சிறகை யுடைய புள்ளானது தன்னையே த்வஜமாக எடுத்தவனே-ஆஸ்ரிதரை எல்லா அடிமையும் கொள்ளுமவன் அன்றோ –
என்று என்று ஏங்கி யழுதக்கால்-இப்பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால்
எதுவேயாகக் கருதுங்கொல்-இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ -கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ -இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனம் புண் படுகிறதோ என்றுமாம் –
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்-இம் மஹா பிருத்வியின் பாரத்தை போக்குகைக்காக-
மதுவார் சோலை-உத்தர மதுரைப் பிறந்த மாயனே— மதுஸ் யந்தியான சோலையை யுடைய வடமதுரையிலே -சத்ருக்களான கம்சாதிகள் நடுவே பிறந்த மாயனே -ஆவிர்பவிக்கை அன்றிக்கே கப்பா வாஸம் பண்ணி வந்து அவதரித்த ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -பூ பார நிரசனம் என்கிற வ்யாஜத்தாலே சம்சார சஜாதீயனாய் வந்து அவதரித்து ஆஸ்ரித விரோதிகளை போக்கி ஆஸ்ரிதரை ரக்ஷிக்கும் ஸ்வ பாவன் ஆனவன் நம் கூப்பீட்டுக்கு என்ன நினைத்து இருக்கிறான் என்கை –

————————————————————————-

அவதாரத்துக்கு பிற்பாடானாய் -அந்தர்யாமித்வம் கண்ணுக்கு அவிஷயமான பின்பு உன்னை எவ்விடத்தேயோ காண்பது என்கிறார் –

பிறந்த  மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-

பிறந்த மாயா -அகர்ம வஸ்யனாய் வைத்து -அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்த ஆச்சர்ய பூதனே
பாரதம் பொருத மாயா-பிறந்தால் போலே இருப்பது ஒன்றாயிற்று இவ்வாச்சர்யமும் -சத்ய ப்ரதிஞ்ஞனானவன் -அசத்ய ப்ரதிஞ்ஞனான ஆச்சர்யம் -ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுக்கையும் -பகலை இரவாக்குகையும் –
நீ யின்னே-இப்படி ஸூ லபனாய் இருக்கச் செய்தே
சிறந்த கால் தீ நீர் வான்-மண் -காரணமான பிருதிவ்யாதி பூதங்களும் / பிறவுமாய பெருமானே-காரணமான தேவாதி பதார்த்தங்களும் ஆத்மாவான ஸர்வேஸ்வரனே / காற்றுக்கு சிறப்பாகிறது -காரணத்வம் ஒத்து இருக்க தாராக்காதவத்தால் வந்த ஏற்றம்
கறந்த பாலுள் நெய்யே போல்-கண்ணாலே காண்கிற பாலினுள்ளே நெய்யுண்டாய் இருக்க காண்கை அரிதானால் போலே
இவற்றுள் எங்கும் கண்டு கொள்-இறந்து நின்ற பெருமாயா-சகல பதார்த்தங்களில் நின்று வைத்து காண ஒண்ணாத படி நிற்கிற ஆச்சர்ய பூதனே
கறந்த பால் -காலத்தாலும் ஆதஞ்சா நாதிகளாலும் தோற்றுகிற நெய் கறந்த காலத்தில் தோற்றாது இ றே -உன் பக்கல் ந்யஸ்த பரராகை யாகிற ஸம்ஸ்காரத்தால் அல்லது காண வரியை என்கை
உன்னை எங்கே காண்கேனே–பரமபதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேணும் -அவதாரத்துக்கு பிற்பாடான ஆனேன் -அர்ச்சாவதாரம் நினைத்தபடி கிடையாது -அந்தர்யாமித்வம் கண்ணுக்கு விஷயம் அன்று -இனி எங்கே காணப் புகுகிறேன் –

——————————————————————–

இத்திருவாய்மொழி வல்லார் இவ்வாழ்வார் பட்ட துக்கம் படாதே -இஹ லோகத்தில் இஜ்ஜன்மத்திலே அவனைப் பெற்று நிரந்தரமாக ஸூ கிப்பர் -என்கிறார் –

எங்கே  காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

எங்கே காண்கேன்–யான்-ஈன் துழாய் அம்மான் தன்னை -ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்
என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இ றே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இ றே
அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே
அந்தண் குருகூர்ச் சடகோபன்-உபதிஷ்டந்து மாம் சர்வே என்னுமா போலே இவ்வாற்றமைக்கு எல்லாம் இடம் கொடுத்த ஆழ்வார் என்று ஆளவந்தார் நிர்வாஹம் –
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்-இவையும் பத்தும் வல்லார்கள்-செவ்விதாகச் சொன்ன -நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்டு இருக்கை –செங்கேழ் -செவ்விதாக என்றபடி –
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்-எல்லியும் காலையே-–இஹ லோகத்தில் இஜ்ஜன்மத்திலே திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவர் -ஆளாக் கூப்பிட்டு அழைத்தக்கால் -என்று கூப்பிட வானத்து முகம் காட்டாததால் பிறந்த தன்னுடைய அவத்யத்தை-ஆழ்வார் ஆஸ்ரயித்தார் பக்கலிலே தீருமாயிற்று அவன் -பார்யையோடு வெறுப்புண்டால் அவள் பக்கல் முகம் பெறுகைக்கு பிரஜைகளை ஸ்லாகிப்பாரை போலே –


கந்தாடை  அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: