திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-4–

சர்வேஸ்வரன் சம்சாரிகள் யுடைய அபேக்ஷையே ஆலம்பனமாக சம்சாரத்திலே வந்து அவதரித்து தனியே உலாவா நிற்கும் –
சம்சாரிகளும் தம்தாம் அபேக்ஷிதத்தை பற்றிக் கிட்டுமது ஒழிய இவன் வாசி அறிந்து பரியக் கடவார் இல்லை
-என்னாகிறதோ என்று அஞ்சின இவருக்கு அந்த அச்சம் தீரும் படி -நமக்கு பரிவரும் உண்டு -ஒருவர் பரிய வேண்டாத படி
அவர்களுக்கு ராக்ஷகமாம் படியான மிடுக்கும் நமக்கு உண்டு என்று தன் படிகளை காட்டி சமாதானம் பண்ண ஸமாஹிதராய் நின்றார் கீழ்
இதில் தேஹாத்ம அபிமானிகளுக்கு தேஹ ஞானம் பிறந்தாலும் தேஹாத்ம அபிமானம் பின்னாட்டுமா போலே
-இவர் ஆகிறார் பிரேம ஸ்வ பாவராய் இருப்பார் -இன்னமும் மறுவலிடக் கூடும் -மறுவலிடாத படி பரிஹரிக்க வேணும் என்று
தன் ஸுர்ய வீர்யாதி குணங்களையும் ஸ்ருஷ்டியாதிகள் ஆகிற அத்புத கர்மங்களையும் -எதிரிட்ட விரோதி வர்க்கத்தை
வேரோடு வாங்கி பொகட வல்ல சர்வ சக்தியையும் காட்டி -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிமித்தமாக மஹா ராஜருக்கு பிறந்த பயத்தை
-பிசாசான் தனவான் யஷான்-என்று தன் மிடுக்கைக் காட்டி சக்கரவர்த்தி திருமகன் போக்கினால் போலேயும்
-மல்ல யுத்தத்தில் நசமம் யுத்த மித்யாஹு -என்கிறபடியே பார்ஸ்வஸ்த்தருடைய பயத்தை கிருஷ்ணன் மல்லரை அழித்து தீர்த்து அருளினால் போலேயும்
தம்முடைய பயத்தை போக்கி அருள -அத்தாலே க்ருதார்த்தராய் -இனி நமக்கு தாரக போஷக போக்யாதிகள் அவன் அல்லது இல்லை என்று ப்ரீதராய்
-முன்பு அழகை கண்டு பரிவாலே பீதரானவர்-அழகிலே நெஞ்சு சென்று அனுபவித்து க்ருதக்ருதராய் தலைக் கட்டுகிறார் –

—————————————————————-

குவலயா பீட மல்ல ப்ரப்ருதிகளான  பிரதிகூலரை நிரசித்த சீர் கொள் சிற்றாயனுடைய திருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாறு -எங்களுடைய பயத்தை போக்க வல்ல–நிர் பயமான – புகல்-என்கிறார்

வார்கடா  வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

வார்கடா வருவி யானை மா மலையின்-வாரா நின்றுள்ள மத ஜலமான அருவியை யுடைய யானையாகிற -மா மலையினுடைய கடா -மதம் –மதகரமான த்ரவ்யங்களை தீட்டி பிச்சேற்றி புகுகிற வாசலிலே நிறுத்தினான் -பிரமாதத்தாலே பிறந்தது என்று மாதுலனாய் வெறுத்து விடுவனாக நினைத்து -புகுவாய் நின்ற போதகம் வீழ பொருதான்-என்ன கடவது இ றே -பொற்றை யுற்ற முற்றல் யானை –என்று தொடங்கி மருப்பு ஒசித்த மாயன் -என்ன கடவது இ றே
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி-மருப்பு ஆகிற இணைக் குவடுகளை இருந்து -கொம்பு ஆகிற சேர்ந்த சிகரங்களை அநாயாசேன முறித்து
உருட்டி -திருவடிகளாலே அநாயாசேன நூக்கி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து-திண்ணியனாய் ஆனையை நடத்துகிற பாகனுடைய பிராணனை போக்கி –திண்மை யாகிறது -ஆனை கொம்பை முறித்தாலும் உயிர் பெறுத்தி நடத்த வல்ல சிஷா பலம் -ஆனையின் கொம்பை முறித்தாலும் இவனை அழியா விடில் பிரயோஜனம் இல்லை -ஆனையின் கொம்பை முறிக்கைக்கு உள்ள அருமை போருமாயிற்று இவன் உயிரைப் போக்குகைக்கு
அரங்கின் மல்லரைக் கொன்று -ஆனையினுடைய இரண்டு கொம்பையும் இருவரும் கொண்டு ரங்க மத்யத்திலே புக்க அளவிலே யுத்த உன்முகராய் வந்த சாணூர முஷ்டிகரைக் கொன்று –ஆனை போயிற்று ஆகிலும் மல்லர் உண்டு என்று கம்சன் நினைத்து இருந்தவர்களையும் அழியச் செய்த படி -நசமம் யுத்தம் இத்யாஹு-என்று பெண்கள் முதலான பார்ஸ்வஸ்த்தவர்கள் அடங்க கூப்பிட்டு பீதரான சமயத்திலே -அவர்கள் பயம் எல்லாம் போம்படி அநாயாசேன மல்லரைக் கொன்று
சூழ் பரண் மேல்-சுற்றும் உண்டான மஞ்சஸ்தலத்தின் மேலே நின்ற
போர் கடா வரசர் புறக்கிட–கெடும் படையை வெற்றி உண்டாம் படி கடாவிப் போரும் அரசர் -சேனாநய விசாரத-என்கிறபடியே தூசித் தலையிலே வெற்றியோடு அல்லது மீளாத படி படை பொருத்தி யுத்தத்தை நடத்த வல்ல ராஜாக்கள் ஸிம்ஹத்தை கண்ட நரி போலே முத்துகாட்டி ஓடும்படியாக
மாடமீ மிசைக்-துங்க மஞ்ச வ்யவஸ்திதித-என்கிறபடியே உயர்ந்த மாதத்திலே இருந்த
கஞ்சனைத் தகர்த்த-கம்சனை கீழே விழ விட்டு மேலே தான் குதித்து அதிலே நக்கரைந்து நசிக்கும் படி பண்ணினான் -அவஞ்சாயா ஹதம் த்ருஷ்ட்வா கிருஷ்னேன மதுரேச்வரம் -என்கிறபடியே –கேசேஷ் வாக்ருஷ்ய விகளத் கிரீட மவ நீதலே சகம்சம் பாதயாமாச தஸ்யோ பரிப பாதச -ராஜ துரோகிகளைக் கொள்ளும் போது ராக்ஷ சிஹ்னங்களை வாங்கிக் கொல்லுமா போலே தான் கொடுத்த முடியை வாங்கிக் காண் கொன்றது -என்று பணிக்கும் அம்மங்கி அம்மாள்
சீர்கொள் சிற்றாயன்— பருவம் நிரம்பாது இருக்கஹ் செய்தே-வீர ஸ்ரீ யாலே குறைவற்று இருக்கிறவன்
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு — புலி நின்ற தூறு போலே பிரதிகூலருக்கு அஞ்ச வேண்டும் வூர்
எங்கள் செல் சார்வே–மஹா ராஜர் -பெரியாழ்வார் -ஸ்ரீ விதுரர் -தாம் -இங்கனம் ஒத்த பரிவர்களுக்கு -நிர்ப்பய ஸ்தானம் என்று புகும் புகல்–கீழ் இவருக்கு ஓடின பயம் நீங்கிற்று என்னுமது இயல் தழைப்பிலே தெரிந்து இருக்கிற படி கண்டதே –

———————————————————————

ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சமர்த்தனாய் திருச் செங்குன்றூரிலே நின்று அருளின எம்பெருமான்  அல்லது எனக்கு நல்ல துணை இல்லை என்கிறார் –

எங்கள் செல்  சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

எங்கள் செல் சார்வு –ஆஸ்ரிதர்க்கு நிர்ப்பயமாக புகல்-கேசவன் தமருக்கு பின்பு இவர் தனியர் அல்லரே -குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை -என்று அவர்களோடு ஒன்றி நின்று சொல்லுகிற சொல்லு இறே
யாமுடையமுதம்-புகலேயாய் போக்ய வஸ்து வேறு தேட வேண்டாது இருக்கை -தேவர்களுடைய அம்ருதத்தை வ்யாவிருத்திக்கிறது –
இமையவரப்பன் என்னப்பன்-நித்ய ஸூ ரிகளை அடிமை கொண்டால் போலே என்னை அடிமை கொண்டவன் -குறைவற்றாருக்கு சத்தா ஹேதுவாய் -குறைவுக்கு எல்லையான எனக்கும் சத்தா ஹேதுவானவன் –
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்-விஸ்திருதமாய் மூன்று வகைப் பட்ட லோகங்களை யுண்டாக்கி நோக்கி அழிக்குமவன்
பொருந்து மூவுருவன் -இச் செயல்களுக்கு பொருந்தின மூன்று வடிவை யுடையவன் -ப்ரஹ்ம அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டிக்கும் -ருத்ர அந்தர்யாமியாய் நின்று சம்ஹரிக்கும் -ஸ்வேனே ரூபேண நின்று பாலநம் பண்ணும் -பொருந்துகையாவது -ரஜஸ் தமஸ் பிரசுரமான ப்ரஹ்மாதிகளோடு திவ்ய விக்ரஹத்தோடு வாசி அற்று இருக்கை –
எம்மருவன்-தான் சகலத்துக்கும் உத்பத்த்யாதி ஹேதுவாய் இருபத்தொன்று இல்லை என்னும் இடத்தை காட்டி எனக்கு தாரகன் ஆனவன் -உத்பத்தி ஸ்திதி நாசா நாமஹேதும் ஹேயி மீஸ்வரீம் -ஸ்வேதர சகலமும் தன் நினைவாலே யாய் தான் ஒருவர் நினைவின் படி இன்றிக்கே இருக்கிற படியைக் காட்டி என்னை தரிப்பித்தவன் –
செங்கயல்களும்-யவ்வனத்தாலே சிவந்த கயல்கள் களித்து வர்த்திக்கிற தேசம் – பரிவர் இல்லை என்று முன்பே க்லேசித்து-பின்பு வார் கெடா வருவியாய் ப்ரீதராக வேண்டாதாய் -சகல பதார்த்தங்களும் களித்து வர்த்திக்கும் தேசம் என்கை
தேம் பணை புடை சூழ்-திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு-தேனை யுடைத்தான நீர் நிலம் சூழப் பட்ட -என்னுதல் -மருத நிலத்தால் சூழப் பட்ட வூர் என்னுதல் –
அங்கு அமர்கின்ற –அவதாரங்கள் போல் அன்றிக்கே நித்ய வாஸம் பண்ணுகிற வூர் –
ஆதியான் -சர்வ காரண பூதனானவன் -என்னுதல் -எனக்கு சத்தா ஹேதுவானவன் என்னுதல் -பிரஜைக்கு பிரத்யா சன்னையாய் வர்த்திக்கும் தாயை போலே -எண் சத்தையை நோக்கிக் கொண்டு இருக்கிறவன் –
அல்லால்யாவர் மற்றென்னமர் துணையே-இவனை ஒழிய வேறு எனக்கு சேர்ந்த துணை இல்லை -அல்லாதார் கழுத்து கட்டி யாதல் -துணை என்று பேராய்-ஆபத்தில் கூட விழுதல் செய்யும் அத்தனை -என்கை –

———————————————————————

ஸ்ரீ வராஹமாய்  பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்து அருளி திருச் செங்குன்றூரில் நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது வேறு சரணம் எனக்கு மநோ ரதத்திலும் இல்லை என்கிறார் –

என்னமர்  பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் எனக்கு அமர்ந்த ஸ்வாமியாய் யுள்ளான் -நித்ய ஸூ ரிகள் இடைவிடாமல் மங்களா சாசனம் பண்ணுகிற படியைக் காட்டி எண் பயத்தை தீர்த்தான் என்கை
இருநிலம் இடந்த வெம்பெருமான்-பிரளயம் கொண்ட மஹா பிருத்வியை எடுத்த தன் சாமர்த்தியத்தை காட்டி என்னை அடிமை கொண்டவன் -பிரளயம் கொண்ட பூமியோ பாதி சர்வரும் தனக்கு குழை சரக்காய் இருக்கிற படியை காட்டி தம் பயத்தை கெடுத்தான் என்கை
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள-என்னை யாள்கின்ற வெம்பெருமான்-ப்ராக்த்தனமான பிரபல கர்மங்கள் சாக்லயேன போம்படி என்னை அடிமை கொண்டவன் -ஸுர வீரயாதிகளைக் காட்டி கீழே எனக்கு பிறந்த பயம் எல்லாம் போம்படி என்னை அடிமை கொண்டவன் என்கை –வல்வினை -என்கிறது பக்தி பாரவஸ்யத்தை யாயிற்று -இது இ றே உபய விபூதி நாதனுக்கு என் வருகிறதோ என்று பயத்தை பிறப்பித்தது -பய ஹேது இ றே பாபம் ஆகிறது -ப்ராக்த்தன பிரபல கர்மங்கள் என்றுமாம் –
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாங்கரை-ஆர்யர் இகழ்ந்த பூமியான தெற்குத் திக்குக்கு ஆபரணமான வூர் –
மீ பால் நின்ற வெம்பெருமான் — மேலைத் திக்கில் நிலையும் உத்கர்ஷ ஹேதுவாய் இவருக்கு பய நிவ்ருத்திக்கு உடலாய் இருக்கிறது -திகபேஷை இ றே பரத்வம் இருப்பது
அடியல்லால் சரண் நினைப்பிலும்- பிறிதில்லை எனக்கே–அவன் திருவடிகளை ஒழிய மற்று ரக்ஷகமாய் இருபத்தொரு வஸ்து மநோ ரதத்திலும் இல்லை –

——————————————————————–

மஹா பலியை வென்றும் கடலைக் கடைந்தும் ஆஸ்ரிதருடைய ஆபத்தை போக்கி திருச் செங்குன்றூரிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகள் அல்லது வேறு எனக்கு அரண் இல்லை -என்கிறார் –

பிறிதில்லை  எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

பிறிதில்லை எனக்குப்-அவனை ஒழிய வேறு எனக்கு ரக்ஷகர் இல்லை –
பெரிய மூவுலகும் நிறையப்பேருருவமாய் நிமிர்ந்த-ப்ரஹ்ம லோகம் பர்யந்தமான ஆகாச அவகாசம் அடைய விம்ம வளர்ந்த -தொடங்கின கார்யம் வென்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே வளர்ந்த படி –
குறிய மாண் எம்மான்-வளருகைக்கு உடலாக கொண்ட வாமன விஷத்தையும் -அர்த்தித்தவத்தையும் காட்டி என்னை அடிமை கொண்டவன் -மஹா பலியை வெல்லுகைக்கு கொண்ட வடிவைக் காட்டி பயத்தை கெடுத்த படி –
குரை கடல் கடைந்த-மஹா கோஷம் எழும்பும் படி கடலைக் கடைந்தவன்
கோல மாணிக்கம்-பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது-
என்னம்மான்-கடலைக் கடைந்த சாமர்த்யத்தையும் வடிவு அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவன்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்-செறிந்த குலையை யுடைத்தான வாழை -அப்படியே இருக்கிற கமுகு -தெங்கு -இவற்றின் திரளாலே சூழப் பட்ட வூர் -ஊர் சிறப்பு என்றும் அரண் என்றும் இரண்டு இல்லை -செறிந்த குலைகளாலும் திரண்டு சூழ்ந்து இருக்கையாலும் யுகாவாதார்க்கு புகுர ஒண்ணாது இருக்கை –
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு-அறிய – திருச்சிற்றாரில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும்படியாக -மாஞ்சா க்ரோசந்தி வத் –
மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்-ஆத்மாநம் -மானுஷம் மன்யே என்றும் -அஹம் வோ பாந்தவோ ஜாத -என்றும் -மறைக்க வேண்டாத படி பத்தும் பத்தாக நின்ற என் ஸ்வாமி –
அடி இணைய யல்லதோர் அரணே-–அவன் திருவடிகள் அல்லது ஒரு ரக்ஷகம் இல்லை -அடி இணை யல்லதோர் அரண் –பிறிதில்லை எனக்கு–

———————————————————————

அல்லாத உகந்து அருளின தேசங்கள் உண்டாய் இருக்க – திருச் செங்குன்றூரிலே அதி நிர்பந்தம் பண்ணுகிறது என் என்ன அங்கனம் இருக்கச் செய் தேயும் திருச் செங்குன்றூரில் அல்லது என் ஹிருதயம் சேர்ந்து அணையாது என்கிறார் –

அல்லாதோர்  அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை-அல்லாத இடங்களிலும் அவனை ஒழிந்து இருப்பது இல்லை
அது பொருளாகிலும் -அர்த்த தத்வம் அது -இங்கனம் இருந்ததே யாகிலும் –
அவனை-யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது-திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை அல்லது என் மனஸ் ஸூ சேர்ந்து அணையாது -திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்றது பரம பதத்தில் பிராப்தி இல்லாமையோ-ராம அவதாரத்தில் பாவ பந்தத்தாலே இ றே -அப்படியே இவரும் -திருச் செங்குன்றூர்
ஆதலால் அவனுறைகின்ற-அத்தாலே அவன் நித்ய வாஸம் பண்ணுகிற —திருச் செங்குன்றூர் -என்று அந்வயம்
நல்ல நான் மறையோர்-அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணர்
வேள்வியுள் மடுத்த-நறும் புகை-யாகங்களில் ப்ரவ்ருத்தமான ஹவிர்க்கந்தியான தூமம் -அநந்ய ப்ரயோஜனர் ஆகில் இவர்கள் அனுஷ்டானத்துக்கு பலம் என் என்னில் -ஸ்வயம் பிரயோஜனம் ஆதல் -பகவத் பிரதிபக்ஷங்களை அழிய செல்லும் அபிசாரம் பலம் ஆதல் -எம்பெருமானாரை போலே யாயிற்று அவ் வூரில் ப்ராஹ்மணரும் –
விசும்பொளி மறைக்கும்-ஆகாசத்தில் ஒளி யுள்ள ஆதித்யாதிகளை மறைக்கும் என்னுதல் -விசும்பு தன்னில் ஒளியை மறைக்கும் என்னுதல்
நல்ல நீள் மாடம் -ஒரு கர்மம் வேண்டா -வூர் அரண் தானே பிரதிகூலருக்கு துஷ் ப்ராபமாய் இருக்கை
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு -மாட மா மயிலை -திருவல்லிக் கேணி என்னுமா போலே
எனக்கு நல் அரணே—என் தான் வருகிறதோ என்று பீதனான எனக்கு நல்ல புகலான தேசம் –

————————————————————-

சர்வஞ்ஞனான தனக்கும் கூட அறிய முடியாத படியை யுடையனாய் அயர்வறும் அமரர்களுக்கு சர்வவித பந்துவுமாய் -ப்ரஹ்மாதிகளுக்கு ஸமாச்ரயணீயனாக கொண்டு திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவனை -தனக்கு என் புகுகிறதோ என்று அஞ்சாதபடி நிர்ப்பயமான திருச் செங்குன்றூரிலே காணப் பெற்றேன் என்கிறார்

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

எனக்கு நல்லரணை -அதஸோ அபயங்கதோ பவதி -என்கிற விஷயத்துக்கு பயப்படுகிற எனக்கு நிர்பயமான அரணானவனை
எனதாருயிரை-தன்னுடைய ரக்ஷகத்வத்தை காட்டி எனக்கு தாரகனானவனை
இமையவர் தந்தை தாய் தன்னை-பய பிரசங்கம் இல்லாத பரம பதத்தில் இருந்து அஸ்தானே பய சங்கை பண்ணுகிற நித்ய ஸூ ரிகளுக்கு சர்வவித பந்துவானவனே -சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்று அவர்களும் அஸ்தானே பய சங்கை பண்ணி மங்களா சாசனம் பண்ணா நிற்பார்கள் -அஸ்தானே பயப்பட வேண்டும் படி இ றே விஷய வை லக்ஷண்யம்
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தன்னாலும் தன்னை பரிச்சேதிக்கப் போகாது -முதலிலே பயத்துக்கு அவகாசம் இல்லை –ஒரு வஸ்துவை பரிச்சேதித்து நலிய வேணும் –
தடங்கடல் பள்ளியம்மானை-மது கைடபர்களை அழிய செய்கைக்கும்-ஸ்வேத தீப வாசிகளுக்கு ஆஸ்ரயிக்கைக்கும்-ப்ரஹ்மாதிகள் பரிகைக்கும் திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டவனை
மனக்கொள் சீர் மூவாயிரவர்-பகவத் குணங்களை மனசிலே கொண்டு -இவனுக்கு என் வருகிறதோ என்று அஸ்தானே பய சங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரம் ப்ராஹ்மணர் உண்டு -அவ் வூரில் ப்ராஹ்மணரும் இவர் கோடியிலே உள்ளார் யாயிற்று -வவந்தே நியதோ மு நிம்-என்கிற ஸ்ரீ பரத்வாஜ பகவான் உடன் ஒக்கும் அவர்கள் -தன்னைப் பிரிந்தவன்று முதல் ராவண வதம் பண்ணி மீளும் அளவும் செல்ல -இவர்களுக்கு என் வருகிறதோ -என்று இத்தனையே நினைந்து இருந்தவன் இ றே ஸ்ரீ பரத்வாஜ பகவான் –
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்-ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கடவராய் பிரதானரான மூவரும் செய்யக் கடவ காரியத்தை ஓர் ஒருத்தரே செய்ய வல்லராம் படி யாயிற்று இவர்கள் சக்தி இருக்கும் படி
கனக்கொள் திண் மாடம் -செறிந்து திண்ணிதான மாடம் -ஒருவர் பரிய ஒண்ணாத படி வூர் அரண் தானே அமைந்து இருக்கை –
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–பயப்பட்ட தேசத்திலே பய நிவ்ருத்தி பிறந்தால் போலே சம்சாரத்துக்கு உள்ளே நிர்ப்பயமாய் இருபத்தொரு ஸ்தானம் யுண்டாய் அதிலே காணப் பெற்றேன் –

———————————————————————-

திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன் -ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி தன் திரு அழகோடு என் இருதயத்திலே வந்து புகுந்தான் -என்கிறார்

திருச்  செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட-அத்திருவடி என்றும்-நிர்ப்பயஸ்தானமான -திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றிலே காணலாம் படி நின்று அருளின ஸ்வாமி
திருச் செய்ய கமலக் கண்ணும் -அழகியதாய் சிவந்து இருப்பதாய் விகாசம் செவ்வி முதலான வற்றால் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
செவ்வாயும்-நோக்கால் பிறந்த முதல் உறவை கிரயம் செலுத்திக் கொடுக்கும் ஸ்மிதமும் -செவ்வடியும்-ஸ்மிதத்துக்கு தோற்று விழும் திருவடிகளும் –
செய்ய கையும்-திருவடிகளில் விழுந்தாரை எடுத்து அணைக்கும் திருக் கையும் –
திருச் செய்ய கமல வுந்தியும் -அணைத்தார்க்கு நித்ய அனுபாவ்யமாய் -அழகுக்கு எல்லையாய் -சர்வ உத்பத்தி ஸ்தானமாய் இருக்கிற திரு நாபியும் –
செய்ய கமலை மார்பும்-பகவத் சம்பந்தம் இல்லாதார்க்கும் பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடம் ஆகையால் சிவந்த திரு மார்வும்
செய்ய வுடையும்-திரு மேனிக்கு பரபாகமாய் பும்ஸத்வவாஹமான திருப் பீதாம்பரமும்
திருச் செய்ய முடியும்-அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் பயம் தீரும் படி ரக்ஷகத்வ ஸூ சகமாய் இருந்துள்ள திரு அபிஷேகமும்
ஆரமும்-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -என்கிறபடியே திரு மார்வுக்குத் தகுதியான திருவாரமும் –
படையும்-வினைத்தலையில் ஆயுதமாய் போக தசையில் ஆபரணமாய் இருக்கிற திவ்யாயுதங்களும்
திகழ -சோபபயன் தாண்ட காரண்யம்-என்கிறபடியே திவ்யாயுதம் தானே விளங்கும்படியாக
என்றும் — வென்ன சிந்தை யுளானே–அவன் என்றும் ஓக்க என் நெஞ்சிலே வர்த்திகையாலே பயத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –பயம் பயா நாம் –

——————————————————————-

இப்படி பூர்ணமாக தாம் அனுபவித்த சீர் கொள் சிற்றாயன் உடைய அழகிலும் விலக்ஷண  குணத்திலும் அழுந்தி அவனை ஸ்துதிக்கும் படி அறிகிறிலேன் என்கிறார் –

திகழ  வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்-இதுவும் இவர்க்கு ஒரு பய நிவ்ருத்திக்கு ஹேது -தம் நெஞ்சில் இருக்கையாலே ஓர் அரணுக்கு உள்ளே இருக்கிறாப் போலே இருக்கிறதாயிற்று -யுகவாதார் வன் நெஞ்சில் இருக்கிற பயம் போய் தம் நெஞ்சிலே இருக்கப் பெற்ற படி -இனிப் போய் பிறர் ஒருவர் வன் நெஞ்சம் புக்கிருக்க ஓட்டேன்-வளைத்து வைத்தேன் -என்ன கடவது இ றே –
செழு நிலைத் தேவர் நான்மறையோர்-திசை கை கூப்பி ஏத்தும்-திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை-நாலு வகைப் பட்ட வேதங்களும் கை வந்து -வி லக்ஷணரான பூ ஸூரரான வைஷ்ணவர்கள் திக்குகள் தோறும் நின்று கை கூப்பி ஏத்தா நின்றுள்ள –திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யிலே வர்த்திக்கிறவனை –உகவாதற்கு கிட்ட ஒண்ணாத படி துர்க்கமான ஊரிலே நிற்கிறபடி
புகர்கொள் வானவர்கள் –புறம்பு உள்ளார்க்கு ஆஸ்ரயணீயராய்-அத்தாலே வந்த தேஜஸை யுடையரான இந்த்ராதிகள் –
புகலிடம் தன்னை-அவர்கள் ஆபன்னரான போது புகலானவனை-அசுரர் வன்கையர் வெங்கூற்றை-அசாத்தியமான அஸூர வர்க்கத்துக்கு அந்தகன் தண்ணீர் என்னும் படி அந்தகன் ஆனவனை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்-படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–-அவனுக்கு ஒரு குறையில்லை -என் குறை தீர புகழ்வது ஒரு பிரகாரம் அறிகிறி லேன் -புகழாது ஒழியவும் மாட்டுகிறி லேன் -ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் -தனக்கு விதேயமான சர்வ ஜகத்தின் யுடையவும் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுமவன் என்று திரளச் சொல்லும் அத்தனை -பிரித்து வகையிட்டுச் சொல்லப் புக்கால் சொல்லி முடிக்கப் போகாது -பிரயோஜகத்தில் சொல்லும் அத்தனை –

————————————————————-

ப்ரஹ்மாதி பீபீலிகாந்தமாய் யுள்ள சகல ஜந்துக்கள் யுடையவும் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் பண்ணுவான் -திருச் செங்குன்றூரில் நின்று அருளின எம்பெருமானே என்னும் இடம் அர்த்த வாதம் அன்று மெய் -என்கிறார் –

படைப்பொடு  கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்பிரம பரம்பரன் சிவப் பிரானவனே-ஸ்ருஷ்டியோடு -சம்ஹாரத்தோடு -பாலனத்தோடு -வாசியற தன்னதீனமாக யுடையவன் -ப்ரஹ்மா வாகிற பராத்பரன் -மனுஷ்யாபேஷயா பரர் இந்த்ராதிகள் -அவர்களுக்கும் பரன் ப்ரஹ்மா –சிவனாகிற பரன் -பிரதானனான ருத்ரன் –
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே-இவர்கள் இருவர் நடுவே புக்கு ஸ்வ தந்திரமாய் இருபத்தொரு பதார்த்தமும் இல்லை -அவன் இட்ட வழக்கு -யாவையும் தானே-இங்கனம் பிரித்து சொல்லுகிறது என் -சேதன அசேதன விபாகம் அற அவனதீனம் –
புகழ்வில்லை -இதில் அர்த்த வாதம் இல்லை -ப்ரஹ்மாதிகளுக்கும் இவ்வேற்றங்கள் சொல்லக் கடவது -அது உபசாரம் -இவ்விஷயத்தில் அர்த்த வாத சங்கையும் இல்லை -இப்படி எல்லாம் ஸ்வ அதீனமாம் படி இருக்கிறவன் ஆர் என்ன –
திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே-என்கிறார்
கொடைப் பெரும் புகழார்-அவ்வூரில் உள்ளார் கொடையால் வந்த பெரும் புகழை யுடையார் -எதிரிகளையும் தானத்தால் வசீகரிக்க வல்லராய் இருக்கை -தானமும் சமாதிகளில் ஓன்று இ றே -பெரும் புகளாவது ஞான தானம் -வித்யா தானம் விதிஷ்யதே
இனையர் -இன்னார் என்று பிரசித்தராய் இருக்குமவர்கள் -விதே சேஷ்வபி விக்கியாதா -என்று சத்ரு தேசங்களிலும் பிரசித்தராய் இருக்கையாலே சத்ருக்கள் அங்குச் சென்றால் மீள போகாது என்று இங்கு வர நினையாது இருக்கை –எனையர் -என்ற பாடமான போது இப்படி இருப்பார் அநேகர் என்கிறது
தன்னானார்-தன்னோடு ஒத்தவர்கள் -அப்ரதிஹத சக்திகர்-அவன் புக்க கார்யம் தலைக் கட்டுமா போலே யாயிற்று இவர்களும்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்-சம்யஞ்ஞானங்களும் -ஞான அனுரூபமான சமாச்சாரங்களும் –எதிரிகளை அறிந்து பரிஹரிக்க வல்ல ஞானங்களும் -எதிரிகளுக்கு நலிய அவகாசமான ஆசார வைக்கலயம் இன்றிக்கே இருக்கையும் -இந்திரன் திதி கர்ப்பத்தை அழிக்கைக்கு ஆசாரவைக்கலயம் இ றே அவகாசம் ஆயிற்று -சத்ருதண்டஸ் ஸூ வ்ருத்ததா
நடைப்பலி –நித்தியமான பகவத் சமாராதானம் -நடை என்று நிரதரமாக-பலி-பூஜை
இயற்கைத் திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–இவையே யாத்ரையாய் இருக்குமவர்கள் –திருச் -செங்குன்றூரில்-திருச் சிற்றாற்றிலே நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேஸ்வரனே –படைப்பொடு கெடுப்புக் காப்பவன்-

——————————————————————

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து சகல ஜந்துக்களும் ஸமாச்ரயணீயன் ஆகைக்காக திருச் செங்குன்றூரில் எழுந்து அருளி நின்று அருளின எம்பெருமானை அனுபவிக்கப் பெற்றேன் -என்று ப்ரீதர் ஆகிறார் –

அமர்ந்த  நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

அமர்ந்த நாதனை -ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –
யவரவராகி-அர்த்திகள் கிட்டினால் அவர்கள் தந்தாமுக்கு நல்லர் போலே அவர்களுக்கும் நல்லனாய் இருக்கும் -அவர்கள் இது நமக்கு வேணும் என்று இருக்குமா போலே -இவர்களுக்கு இது வேணும் என்று இருக்கை -அங்கனம் இன்றிக்கே -அவர்களுக்கு பெறுகையில் அர்த்தித்தவம் -இவனுக்கு கொடுக்கையில் அர்த்தித்தவம் –பெற்றோம் என்னும் ஹர்ஷம் அவர்களுக்கு -கொடுக்கப் பெற்றோம் என்னும் ஹர்ஷம் இவனுக்கு –
அவரவர்கருளும்-அவர்கள் அபேக்ஷிதங்களை தன் பேறாக கொடுக்கை -ச சர்வாநர்த்திநோ த்ருஷ்ட்வா ச மேத்ய ப்ரதி நந்தியச –
அம்மானை-சர்வேஸ்வரன் -பூர்ணணை என்னுதல் -ப்ராப்தனை என்னுதல் –
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றறாங்கரையானை-சேர்ந்து குளிர்ந்த நீர் நிலங்களை யுடைய திருச் செங்குன்றூரில்-திருச் சிற்றறாங்கரையிலே நின்று அருளினவனை –
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி-அவனிதேவர் வாழ்வு-சேர்ந்த குணங்களை யுடைய மூவாயிரம் ப்ராஹ்மணர்க்கும் இனிதான வாஸ ஸ்தானம் -சேஷித்வத்துக்கு அவனுக்குச் சேர்ந்த குணங்களை போலே இவர்களுக்கும் சேஷத்வத்துக்கு சேர்ந்த ஏற்றம் எல்லாம் யுண்டாய் இருக்கை –
அவனிதேவர் வாழ்வு-பூ ஸூரரான வைஷ்ணவர்களுக்கு பிராப்ய பூமி
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை-நான்முகனை –இத்தேசத்தில் பொருந்தி வர்த்திக்கிற ஆச்சர்யமான அழகை யுடையவனை -ப்ரஹ்மாதிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை -ப்ரஹ்ம ருத்ராதிகளை பலகாலும் சொல்லுகிறது -இவனுடைய சர்வ நிர்வாஹகத்வம் தோற்றுகைக்காகவும்-நிர்வாஹயங்களில் ஒன்றால் நலிவு யுண்டாக்க கூடாது என்கைக்காகவும்
யமர்ந்தேனே-ஸர்வேச்வரத்வத்தை அனுசந்தித்து -கீழ் ஓடின பயம் தீர்ந்து -அவனைக் கிட்டப் பெற்றேன் -என்கிறார் –

—————————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு இது தானே முந்துற பரமபதத்து ஏற கொடு போய் பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுக்கும் -என்கிறார் –

தேனை  நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்-இவருடைய பயசங்கா ஹேதுக்கள் சொல்லுகிறது -அவனுடைய ரஸ்யத்தை இ றே இவரை அஞ்சப் பண்ணுகிறது -எனக்கு சர்வவித போக்யன் ஆனவனை -சர்வ ரஸ -என்ன கடவதுஇறே
திருந்துலகுண்ட வம்மானைவான நான்முகனைமலர்ந்த தண் கொப்பூழ்-மலர்மிசைப் படைத்த மாயோனை-மேலே பய நிவ்ருத்தி ஹேதுக்களை சொல்லுகிறது -கட்டளை பட்ட ஜகத்தை பிரளயத்தில் அழியாத படி திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்த பெரியோனை -வானிலே இருக்கிற சதுர்முகனை -ஸ்ருஷ்ட்டி அனுகுணமான செவ்வியை யுடைய திரு நாபீ கமலத்தில் ஸ்ருஷ்டித்த ஆச்சர்ய பூதனை –
கோனை-நிருபாதிக சேஷியை –கீழே ப்ரஹ்மாதிகளுக்கு சொன்ன ஐக்கியம் ஸ்வரூபேண வன்று -கார்ய காரண பாவத்தால் யுண்டான சம்பந்தம் சொல்லுகிறது என்னும் இடம் இங்கே ஸ்பஷ்டம் -ஆபத்சகனாய் -அழிந்தவற்றை யுண்டாக்குமவனாய் -ப்ராப்தனாய் இருக்குமவன் என்கை –
வண் குருகூர் சடகோபன்-சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்-வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்-பிறவி மா மாயக் கூத்தினையே–அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: