திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –8-3—

கீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே எம்பெருமானுடைய திரு அழகை மிகவும் அனுசந்தித்த ஆழ்வார்
-யாரேனும் அர்த்தித்ததுவே வ்யாஜமாகக் கொண்டு தம்தாம் பிரயோஜனங்கள் அல்லது அறியாது இருப்பாரும்
-மத்யஸ்தரும் -சத்ருக்களுமேயாய் -தன் பக்கல் பரிவுடையார் ஒருவரும் இன்றிக்கே இருக்கிற சம்சாரத்திலே
அத்யந்த ஸூ குமாரனான தான் தன்னில் காட்டிலும் ஸூ குமாரமான பரிகரங்களில் காட்டிலும் பலகாலும் வந்து
திருவவதாரம் பண்ணி அருளி –அவ்வவ காலங்களில் அர்த்திகளுடைய அர்த்தி தங்களை பூரிக்கைக்காக தனியே உலாவி நிற்பது
-அவ்வளவு அன்றிக்கே கோயில்கள் தோறும் நித்ய சந்நிஹிதன் ஆவது -தான் இப்படி தனிமைப் படா நிற்க –
நான் உதவப் பெருகிறிலேன் என்று -இவர் பீதராக -தனக்கு பரிவர் உள்ள படியையும் -பரிவர் இல்லையே யாகிலும்
தன்னை ஒருவராலும் நலிய ஒண்ணாத படி சாமர்த்யத்தையும் காட்டி அருளக் கண்டு பயம் தீர்ந்து த்ருபதராய் முடிக்கிறார் –

———————————————————-

சம்சாரத்தில் விலக்ஷணரோடு அவிலக்ஷணரோடு வாசி இன்றிக்கே உன்னுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து -உனக்கு பரிவர் இன்றிக்கே உன்னைத் தம் தாமுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்றே இருப்பர் என்று ஐஸ்வர்யாதிகளை இகழ்கிறார்-

அங்கும்  இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும்  இங்கும் வானவர் தானவர் யாவரும்எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி-மேலில் லோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்றும் எல்லா லோகங்களிலும் உண்டான அனுகூலரான தேவர்கள் பிரதிகூலரான அஸூரர்கள் மற்றும் இரண்டு வகையான மனுஷ்யாதிகள் எல்லாம் இப்படி நிரதிசய போக்யன் என்று உன்னை அறியாதே உன் படியை சொல்லுகிறாராக ஏதேனும் ஒரு படியைச் சொல்லிக் கதறி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்-சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-இத்தால் ஸுகுமார்யத்தையும் அழகையும் சொல்லுகிறது –

————————————————————-

கைவல்ய புருஷார்த்த நிஷ்டரை இகழ்கிறார் –

சரணமாகிய  நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

த்ரை குண்யா விஷயா வேதா -என்கிறபடியாலே ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் புருஷார்த்தத்துக்கு சாதனத்தையும் ப்ரதிபாதிக்கிற வேத பாகங்களை விட்டு மோக்ஷ உபதேசம் பண்ணுகிற வேதாந்த பாகத்தில் சொல்லுகிற படியே -ஜென்ம மரணங்களும் பிரபலமான வியாதிகளும் ஜாரை தொடக்கமான ஷட் பாவ விகாரங்களையும் மாய்த்த இத்தனை இ றே நாம் செய்தது என்று முமுஷுக்களை ஷேபிக்கிறது –
உபகரணங்களை யுடையராய் வந்த சத்ரு சேனை நிச்சேஷமாக ஓடும்படி கனலா நிற்பதும் செய்து ஆஸ்ரிதர்க்கு அரணாய் அவர்களை ஒரு நாளும் விடக் கடவது அன்றிக்கே இருக்கிற திரு வாழி யாழ்வான் ஆகிற திவ்ய ஆயுதத்தை ஏந்தின சர்வேஸ்வரனுக்கு அடிமையாயே-கரணப் பல்படை -என்றது -கரண க்ராமம் விஷயங்களில் நின்றும் பற்றறவோடும் படி கனலா நின்றுள்ள திரு வாழி -என்றுமாம் –

————————————————————-

யாரேனும் ஸ்வயம் பிரயோஜன பரராய் -அர்த்தித்ததுவே வ்யாஜமாக கொண்டு -பிறர் அறியாதே தன்னோடே எதிரிட வல்ல சம்சாரத்திலே வந்து வர்த்தியா நிற்கும் -அங்குத்தைக்கு ரக்ஷையாக நான் உதவப் பெறுகிறி லேன் என்கிறார் –

ஆளுமாளார்  ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
திரு வாழி யையும் திருப் பாஞ்ச ஜன்யத்தையும் வருந்தி தரிக்கிறார் -அதி ஸூ குமாரமான தாம் –
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
திரு வாழியையும் பாஞ்ச ஜன்யத்தையும் ஒரு நாளும் கை விடாராகில் மற்றை திவ்யாயுதங்களைக் கொண்டு பின் செல்வார் இன்றிக்கே ஒழிந்தால் அதில் என்னை யாகிலும் ஏவுகிறிலர் -என்று கருத்து
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்-நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே-
தனக்கு ரஷார்த்தமாக பின்னே திரிந்து தன்னைப் பெறாதே உறாவிக் கிடக்கிற கைகள் பூர்ணமாம் படி -தான் நடந்து அருளும் போதை பரிஸ்பன்னத்தால் மிகவும் அழகிதான திருவடிகளையும் திருத் தோள்களையும் தொழலாம் படி காணப் பெறுகிறிலேன் -நான் என்றும் ஓக்க பூமியிலே தேடா நிற்பன்-

—————————————————————

சப்ரமாதமாம் படி ஆலிலையில் ரக்ஷகர் இன்றிக்கே தனியே கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து -இவனுக்கு என் வருகிறதோ -என்று பீதராகிறார் –

ஞாலம்  போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-

அத்யந்த ஸூ குமாரமான சிறு வடிவைக் கொண்டு ஜெகத்தை எல்லாம் வயிற்றிலே புக வைத்து -சிறிய ஆலிலையில் இடம் வலம் கொள்ளும் ஸ்வ பாவனான பெரியோனே –
ஒரு க்ஷணத்தில் நின்றும் ஒரு க்ஷணத்தில் பேரும் சந்தி மாத்திரம் மஹா அந்தகாரமான கல்பத்தோடு ஒவ்வா நின்றது -உனக்கு ரஷா சிந்தை பண்ணுகைக்காக கறுத்த ஒளியை யுடைய உன் அழகிய வடிவை காண ஆசைப்பட்டு பெறாதே மிகவும் நோவு படுகிற மஹா பாபியான எனக்கு –

————————————————————–

திருக் கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் கண் வளர்ந்து அருளுகிற படியை இவர் பயம் தீரக் காட்டி அருளக் கண்டு -சேஷ்டைகளைப் பண்ணாதே ஒருபடிக் கண் வளர்ந்து அருளி அத்தாலே இனிய யாகைக்கு காரணம் என் -என்று தம்முடைய பயத்தால் எம்பெருமானை கேட்க்கிறார்-

கொடியார்  மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

மடியாது-சோம்பாமையுமாம் / ஆஸ்ரிதர்க்காக அஸூர ராக்ஷ சரோடே பிணங்கி  அவர்களுடைய துக்கங்களை  கெடுத்த வருத்தமோ -அன்றிக்கே இப்பூமியை அதி ஸூகுமாரமான வடிவோடே வளர்ந்து அருளி அளந்த நோவோ -அருளிச் செய்து அருளாய் –

——————————————————————-

திரு நாட்டிலே அயர்வறும் அமரர்கள் பரிய எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் கிடீர் ஸமஸ்த ஆத்மாக்களுடைய தணியா வெந்நோய் தவிர்க்கைக்காக என் மனம் மறுகும் படி இவ்வுலகிலே வருகிறவன் -என்கிறார் –

பணியாவமரர்  பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

வேறு சிலரை பணிகைக்கு சம்பாவனை இன்றிக்கே இருக்கிற அயர்வறும் அமரர்கள் பணிவுக்கும் ஞானாதி குணங்களுக்கும் தாமே விஷயமாகக் கொண்டு அழகு மிக்கு இருந்துள்ள திரு வாழி யையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏத்துமவர் கிடீர் -ஒரு நாளும் முடியாத கொடிய துக்கங்களை தவிர்க்கைக்காக அழகிய வடிவோடே இவ்வுலகத்தில் வருகிறவர் –

————————————————————-

நான் அங்கு உதவப் பெறாதே அவசன்னன் ஆனால் என்னைப் போலே அஷமதை இன்றிக்கே நிரந்தரமாய் போவது வருவதாய் திரிகிறவர்களில் ஒருவர் ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-திருப் பரிசாரத்து என் ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் சந்நிதியில் எம்பெருமானை தருவிப்பாரை பெறுகிறி லோமே-என்கிறார்

வருவார்  செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

அழகு மிக்கு இருந்துள்ள திரு வாழி யையும் திருப் பாஞ்ச ஜன்யத்தையும் சாதரமாக தரித்துக் கொண்டு ஒரு பார்ஸவத்துக்கு எல்லாம் நிரந்தரமாக பரிவான் ஒரு அநந்ய பரனும் உளன் என்று –

———————————————————————-

உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார் –

என்றே  என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

அழகு மிக்கு இருந்துள்ள ஒப்பனை திருந்தின திருவடிக் கீழ் -சங்கு சக்கராதி திவ்யாயுத தரனாய் -ஸ்ரீ யபதியாய் -குல பர்வதங்கள் ஏழையும் -ஏழு த்வீபங்களையும் -ஏழு கடல் சூழ்ந்த பூமியையும் -எல்லா வற்றையும் நின்ற நிலையிலே அநாயாசேன அளந்து அருளின நீண்ட திருவடிகளையும் உடையையானவனே
நினைத்தது முடிக்க வல்லவனே -என்று கருத்து -லோகங்களை எல்லாம் அளந்த சிரமம் தீர அடிமை செய்யப் பெறுகிறிலேன் -என்றுமாம் –

—————————————————————-

ப்ரஹ்மாதிகள் தஷாதிகள் உண்டாய் இருக்க நீர் என் செய்ய அஞ்சுகிறீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அவர்கள் உன்னுடைய ஸுகுமாரியாதிகளை அறியார்கள் -நான் என்னுடைய ஸ்நே ஹத்தாலே கலங்கி கதறா நின்றேன் என்கிறார் –

திருமால்  நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

திருமாலே சர்வேஸ்வரனான உன்னுடைய படியை விலக்ஷண பரம காரணமாய் -கால உபலஷித்த சகல பதார்த்தங்களும் ஸ்வாமியுமாய் -என்னை அடிமை யாக்கிக் கொண்ட அழகிய அழகிய கறுத்த திரு மேனியை யுடையவன் என்று சொல்லா நிற்பன்-என்னுடைய ஸ்நேஹம் என்னை அஞ்சி கலங்க பண்ண –

————————————————————

என்னுடைய ஸுகுமாரியாதிகளை அனுசந்தித்து பரிவராய் காப்பார் அநேகர் உளார்-ஒருவரும் பரிய வேண்டாத படி நான் பெரிய மிடுக்கன்-என்று எம்பெருமான் அருளிச் செய்ய -அத்தை அனுசந்தித்து தம்முடைய பயம் கெட்டு ஹ்ருஷ்டராகிறார் –

கலக்கமில்லா  நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே--8-3-10-

தங்களுடைய அறிவுகளுக்கு -விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே நல்ல தபஸ் ஸூ க்களையும் யுடையராய் முமுஷுக்களான முனிகளும் முக்தரும் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான அயர்வறும் அமரர்களும் -என்கிற இவர்கள் எல்லாம் அவனைப் பரிந்து காக்கக் கடவார்-
பெரும் கடல் மலங்கும் படி கடைந்த பெரு மிடுக்கனை நாம் முடிய புகழ வல்லோம் ஆகையாவது என் செய்த படி -சொல்லி கோளே –

——————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழி வல்லார் எம்பெருமானுடைய தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்திலே பிறவார் என்கிறார் –

உரையா  வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே--8-3-11-

வாயால் பேச ஒண்ணாத படி -தமக்கு வர்த்தித்த பயம் போம் படி யருளும் ஸ்வபாவனாய் -அதுக்கு ஈடான ஸர்வேச்வரத்வ ஸூ சகமான பெரிய திரு அபிஷேகத்தையும் யுடையவனை -தம்முடைய வியஸனம் போகையாலே சம்ருத்தமான திரு நகரியை யுடைய ஆழ்வாருடைய உக்தியாய் சேர்ந்த சொல் தொடையை யுடைத்தாய் இருந்துள்ள விலக்ஷணமான ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய்மொழியை -அர்த்த க்ரமத்தாலே அறிவார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: