திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –8-1–

சர்வேஸ்வரன் பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே திருவனந்த ஆழ்வான் மேலே இருக்குமா போலே -நாய்ச்சிமாரோடும் நித்ய பரிசாரகராய்
தனக்கு அசாதாரணராய் இருக்கும் பரிகாரத்தோடும் கூட திருவாறன் விளையிலே திருவாய் மொழி கேட்க்கைக்காக வந்து இருக்கிறான் –
அங்கே சென்று திருவாய்மொழி பாடி அனுகூல வ்ருத்திகளையும் பண்ணி அனுபவிப்போம் என்று பாரித்தார் –
அது மநோ ரத மாத்ரமாய் கால்நடையாடாத படியான பல ஹானியாலே அங்கே போய் அது செய்து தலைக் கட்ட பெற்றிலர் –
புருஷகார பூதைகளான நாய்ச்சிமாரும் நித்ய ஸூ ரிகளும் உண்டாய் இருக்க -சர்வ அபேக்ஷித்ங்களையும் கொடுக்கைக்கு உண்டான
ஐஸ்வர்யமும் உண்டாய் இருக்க -ஆஸ்ரித அர்த்தமாக நினைத்த இடங்களில் உதவுகைக்கு உண்டான நிரதிசய போக்யமான
விக்ரஹங்களும் உண்டாய் இருக்க -இத்தலையில் ஆசையும் குறைவற்று இருக்க -நமக்கு இழக்க வருவதே என்று இன்னாதானவர்
தமக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் -ஈஸ்வரனுக்கு நியாமாய் இருக்கிற ஆஸ்ரித பவ்யதை என்ன -அந்தர்யாமியாய் புக்கு நின்று
சத்தையை நோக்கி சர்வ அபேக்ஷித பிரதத்வத்தால் வந்த சர்வ ரக்ஷகத்வம் என்ன –
இந்த குணங்கள் நம்மைத் தோற்றி பொய்யாகிறதோ -என்று அக்குணங்களிலே அதிசங்கை பண்ணினார் -குண ஞானத்தால்
ஜீவித்து இருக்குமவர்க்கு குணத்திலே அதிசங்கை பிறந்தால் தத்விஷய ஞானமும் பொய்யாகையாலே ஜீவிக்க விரகு இல்லை இ றே
-க்யாத பிரஞ்ஞா க்ருதஞ்ஞா சா நுக்ரோசச்ச ராகவோ ஸத் வ் ருத்தோ நிற்க நுக்ரோச சங்கே மத் பாக்ய சங்ஷயாத்-இத்யாதி –
ஈஸ்வரன் இப்படி இவருக்கு பிறந்த அவசாதத்தை பார்த்து அருளி -நாம் உமக்கு ஒன்றும் செய்திலோம் என்று இருந்தீரோ
-புறம்புள்ள வற்றில் துவக்கை அறுத்தோம் -இப்படி நம்மால் அல்லது செல்லாதபடி பண்ணினோம் -மேல் உள்ள சேஷமும் நாமே தருவதாக இருந்தோம்
-நீர் இங்கனம் கூப்பிடுகிறது என் -என்று இவர் தம் இழவு எல்லாம் மறக்கும் படி விஸ்ரம்பணீயத்வ பிரமுகமான குணங்களை
காட்டிக் கொடுக்கக் கண்டு அத்தை அனுசந்தித்து -அதில் அதி சங்கையும் தீர்ந்து தரித்து இனியர் ஆகிறார் –

————————————————————-

பிரியில் தரிக்க ஒண்ணாத படி நிரதிசய போக்யனான நான் உன்னை நான் காணும் படி க்ருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

தேவிமார்  ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி -அவர்கள்புருவம் நெளிந்த இடத்தே உனக்கு கார்யம் செய்ய வேண்டும் படி வல்லபைகளாய் இருக்கிறார் பிராட்டியாரும் ஆண்டாளும் -நகச்சின் நபாராத்யதி -என்று பொறைக்கு உவாத்தாய் இருக்கும் ஒருத்தி -பொறுப்பது எத்தை குற்றம் தான் உண்டோ -என்று அப் பொறை தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் ஒருத்தி -ஒருத்தி சம்பத்தாய் இருக்கும் -ஒருத்தி சம்பத்துக்கு விளை பூமியாய் இருக்கும் -அவர்கள் இருவரும் அருகே இருக்க நான் இழக்க வேண்டுகிறது என் என்ன
ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-அவனும் அவளுமான சேர்த்தியிலே எடுத்துக் கை நீட்டுவார் நித்ய ஸூ ரிகள்
ஏவ -கைங்கர்யம் உத்தேச்யமானவோ பாதி ஏவிக் கொள்ளுகையும் உத்தேச்யம் என்கை -க்ரியதாம் இதி மாம் வத –
மற்று -என்று துல்ய விகல்பத்தை யாயிற்று -திரு முலைத் தடத்தில் அணைந்தால் பிராட்டிமார்க்கு உள்ள இனிமை -அச் சேர்த்தியில் கைங்கர்யம் பண்ணப் பெறுகையாலே இவர்களுக்கு உண்டாம் -ரமமாணா வநேத்ர்ய -ஸ்வரூப அனுரூபமாய் இ றே-ஸூ கங்கள் இருப்பது -வேதம் வல்லார்களைக் கொண்டு என்கிறபடியே அவர்களும் புருஷகார பூதராய் இ றே இருப்பது
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி-புருஷகாரம் உண்டு என்றாலும் அபேக்ஷிதம் கொடுக்கைக்கு ஈடான ஐஸ்வர்யம் வேணும் இ றே -மேவிய வுலகம் -தகுதியாய் பொருந்தின உலகம் -என்னுதல் -ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணும் என்னுதல் – மூன்றவை யாட்சி-பத்தரும் முத்தரும் நித்ய சித்தரும் என்னுதல் -மேலும் கீழும் நடுவுமான சதுர்தச புவனம் என்னுதல் –
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-ரக்ஷணத்துக்கு வேண்டின வேண்டின வடிவு என்னுதல் -இச்சா க்ருஹீதமான வடிவு என்னுதல் -ஆஸ்ரிதர் உகந்த படி என்னுதல் –
பாவியேன் தன்னை-புருஷகாரமும் உண்டாய் விபூதியையும் யுடையனாய் -ஆஸ்ரித அதீனமான விக்ரஹ விக்ரஹ யோகத்தையும் யுடையனாய் இருக்க -இழக்கைக்கு அடியான பாபத்தை பண்ணின என்னை -அந்த கார்ஹஸ்யத்துக்கு புறம்பு ஆவேனோ என்கிறார் –
யடுகின்ற கமலக் கண்ணது-முடிகின்ற -உயரிக்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -என்கிற திருக் கண்களை யுடையவனே
ஓர் பவளவாய் -சவிலாச ஸ்மிதா தாரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்கிற ஸ்மிதத்தை யுடையவனே –
மணியே-விடாயர் முகத்தே குளிர்ந்த நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போலே சிரமஹரமான வடிவை யுடையவனே -இவை கிடீர் எனக்கு பாதகமாய் நடக்கிறது –
ஆவியே -ஒரு ஆவி விசேஷம் அன்று இவருக்கு பிராணன் -நாய்ச்சிமாரோடும் விபூதியோடும் திவ்ய விக்ரஹத்தோடும் கூடின சர்வாதிக வஸ்து வாயிற்று இவருக்கு பிராணன் –
அமுதே -தாரா மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே நிரதிசய போக்ய பூதன் ஆனவனே
அலை கடல் கடைந்த அப்பனே-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே
காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

————————————————————-

என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

காணுமாறு  அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காணுமாறு அருளாய் -அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இ றே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –
என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –
கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது -ஜடிலம் சீர வசனம் –
கண்ண நீர் அலமர -அகவாயில் கலக்கம் உள் அடங்காமை கண்ண நீராய் ப்ரவாஹியா நின்றது
வினையேன்-இதுக்கு முன்பு அவ்விஷயத்தை பற்றினார்க்கு கலக்கமும் கண்ண நீருள் இல்லை கிடீர் -ஆசா லேசமுடையார் கால்கடையிலே துவளக் கடவ தத்துவத்தை பெறுகைக்கு நான் இங்கனம் கூப்பிடும் படியான பாபத்தை பண்ணினேன்
பேணுமாறு எல்லாம் பேணி-முதலிலே அயோக்கியன் என்று அகன்று -அவன் விரும்பாத நானும் என் உடைமையும் எனக்கு வேண்டா என்று ஆற்றாமையாலே மடலில் கை வைத்து -பலபடியும் பிரபத்தி பண்ணி -பிரணய ரோஷம் தலையெடுத்து -க்லாய்ப்பதுவும் செய்த இடத்திலும்
நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு-எனக்கு அருள் உன் பெயரே பிதற்றுமாறாய் விட்டது -உன்னைப் பெறாத வியசனத்தாலே-உன்னுடைய திருநாமங்களை அக்ரமமாகச் சொல்லி கூப்பிடும் இதுவோ நீ எனக்கு பண்ணும் கிருபை -நீச விஷயங்களை ஆசைப்பட்டு கூப்பிடுமத்தை தவிர்த்து -நம்மை விளைய செல்லாமை விளைத்து -நம்மை பேர் சொல்லி கூப்பிடும்படி பண்ணினோமே என்று அன்றோ இருக்கிறது –சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தியோ எனக்கு வேண்டுவது -என் அபிமதம் பெற வேண்டாவோ –
அந்தோ-உன்னை நீ பிரிந்து அரியாய் -பிரிந்தாரைக் கண்டு அரியாய் -நித்ய ஸூ ரிகள் பிரிந்து அறியார்கள் -சம்சாரிகள் பிரிவு அறியார்கள் -இவ்வாற்றாமை யுடையார் இவர் ஒருவருமே யாயிற்று –
காணுமாறு அருளாய்-திருவாறன் விளையை திரு நகரியிலே அணித்து ஆக்குதல் -நான் கால்நடை தந்து போய் புக வல்லேனாம் படி பண்ணுதல் செய்யாய் -இப்படி நாம் அங்கே செய்யக் கண்டு நிர்பந்திக்கிறீர் -என்னா
காகுத்தா !-காகுஸ்த வம்சத்தில் அவதரித்து உன் வடிவை எல்லார்க்கும் காட்டிற்று இல்லையோ -ரூப சம்ஹநனம் லஷ்மீம் –காகுஸ்த வம்சே விமுகா ப்ராயந்தி-என்னும் படி அன்றோ –
கண்ணா !-ருஷிகளுக்கே அன்றிக்கே தாஸாம் ஆவிர் பூத் -என்று இடைப் பெண்களுக்கு உன்னை காட்டிற்று இலையோ
தொண்டனேன் கற்பகக் கனியே !-எனக்கு உபகரித்தது கிடக்க பழம் கிணறு கண் வாங்குகிறது என் -விஷயாந்தரங்களிலே சபலனான என்னை அத்தை தவிர்த்து நீயே வந்து உன்னை எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினவனே -அத்யத்ன சித்த போக்யன் ஆனவனே
பேணுவாரமுதே !–உன் பக்கல் ஆஸாலேசம் உடையோருக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -கலங்குகையும் அக்ரமமாக கூப்பிடுகையும் மிகையாகும் படி அன்றோ உன் படி இருப்பது
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த -ஆர் உன்னை பேணி பிரளயம் எடுத்த ஜகத்தை எடுத்து ரஷித்தது-பிரளய ஆர்ணவம் சூழ்ந்த மஹா பிருத்வியை அதின் நின்றும் உத்தரித்த பெரியோனே -உன்னை ஆசைப்படுதல் -ஆபத்தை அறிவித்தல் -செய்ய மாட்டாத ஜகத்தை அன்றோ ரஷித்தது -நீ அறிய ஆபத்து உண்டாம் அத்தனை அன்றோ ரஷிக்கைக்கு வேண்டுவது
பேராளா !–ரஷ்யத்தின் அளவு அல்லாத படியான ரக்ஷகனுடைய பாரிப்பு –

————————————————————-

ஆஸ்ரித ஸூ லபனாய் இருக்கிற நீ இன்று வந்து என் ஆபரத்தை நீக்காது ஒழி யில் -உன் குணமே ஜீவனமாய் இருக்கும் ஆஸ்ரிதர் உன்னை எங்கனம் விஸ்வஸிக்கும் படி என்கிறார் –

எடுத்த  பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

எடுத்த பேராளன் நந்தகோபன்–நிதி எடுத்தால் போலே உன்னை எடுத்துக் கொண்ட பாக்யாதிகன்-நெடு நாள் நோற்று நோன்பு பெற்று முகத்திலே விழிக்க பெறாதே சிலர் போர விட்டு இருக்க நிதி எடுத்தால் போலே எடுத்து புத்ர முகம் கண்டார் இவர் இ றே -முன்பு ரிக்தனாய் போந்தவன் கனக்க ஜீவிக்க புக்கவாறே -இவன் எடுப்பு எடுத்தான் என்பர்கள் இ றே
பேராளன் -பெரியோன் -அவன் பெருமையோபாதி போரும் கிடீர் என் சிறுமை -நீ மகனாக வேணும் என்றார்க்கோ முகம் காட்டலாவது
நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! -ஸ்ரீ நந்தகோபருடைய நற்சீவன் ஒரு வடிவு கொண்டு புத்ரனாய் உலாவுகிறபடி -கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாய் திரிந்த நாலு நாளும் யாயிற்று இவர் தமக்கு பிரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –கீழ் பரத்வத்தை மண் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர்
அசோதைக்கு-அடுத்த-அவளுக்கு வந்து கிட்டுக் கொடு நிற்க கண்ட இத்தனை -பிரசவ வேதநா க்லேசத்தாலே மயங்கி கிடந்தவள் உணர்ந்து வந்த அநந்தரம் இவன் முகத்தை பார்த்து விழித்த அத்தனை -ததர்ச ச ப்ரபுத்தாசா யசோதா ஜாதமாத்மஜம்
பேரின்பம் -நிரதிசய ஸூ கத்தை விளைவித்தவன் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் என்கிறபடியே அந்தமில் பேர் இன்பத்தை சிற்றின்பம் ஆக்கினாள்
குல விளங்களிறே ! -இடைக் குலத்துக்கு ஆனைக் கன்று போலே சிலாக்யன் ஆனவனே -அபிஜாதமாய் பருவத்தால் ஆகர்ஷகமாய் இருபத்தொரு மத்த கஜம் போலே யசோதை பிராட்டிக்கு பிடி கூடாதே திரியும்படி என்னவுமாம் -அகப்பட்டபோது -யதி சக் நோஷி காச்ச்த்வம் -என்னும் படி இ றே இருப்பது -தறி யார்ந்த கரும் களிறு போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை என்ன கடவது இ றே
அடியனேன் பெரிய வம்மானே !-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –
அடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக்-யுத்த கண்டூதி வர்த்திக்கிற ஹிரண்யனுடைய உடலானது இரண்டு கூறலாம் படி
கை யுகிராண்ட-படையாண்டான் என்னுமா போலே
எம் கடலே !-மஹா விஷ்ணும் என்கிற படியே அபரிச்சேத்யமான வடிவை யுடையவனே -ப்ரஹ்லாதனுக்கு பிரஞ்ஞா சம காலத்திலே வந்து உதவினதும் தமக்கு உதவியதாக நினைத்து இருக்கிறார்
அடுத்த தோர் உருவாய்-அப்போதைக்கு யோக்கியமான வடிவைக் கொண்டு -நரஸ் யார்த்த தனும் க்ருத்வா சிம்ஹஸ் யார்த்த தனும் ததா -என்கிறபடியே அவன் வரத்தில் அகப்படாத வடிவைக் கொண்டு -பதற்றத்தினாலே ஒன்றின் உடலும் ஒன்றின் தலையும் ஒன்றாய் சேர்த்துக் கொண்டு வந்தான் என்னவுமாம் –
இன்று நீ வாராய் -அன்றும் இன்றுமாயிற்று உதவ வேண்டும் நாள் -அன்று உதவினாய இன்று உதவுகிறிலை -விபரீத ஞானம் உடையார்க்கு உதவினாய -யதா ஞானம் உடையோருக்கு உதவினாய இரண்டு கோடிக்கும் புறம்போ நான் -மகன் என்று கலங்கினவனுக்கு உதவினாய் -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிற தெளிவை யுடையவனுக்கு உதவினாய் -என்று என்றே கலங்கின என்கிற கலக்கத்தை யுடைய எனக்கேயோ உதவலாகாது
எங்கனம் தேறுவரும் உமரே ?–நீ வரா விட்டால் நான் முடிகிறேன்-அது கிடக்க உன் குண ஞானத்தால் தரிக்கிற ஆஸ்ரிதர் எங்கனம் தரிப்பர் என்னுதல் -உன் குணங்களே தஞ்சம் என்று இருக்குமவர்கள் எங்கனம் உன்னை விஸ்வஸிக்கும் படி -என்னுதல்-

—————————————————————

ஆஸ்ரிதர் உகந்த ரூப சேஷ்டிதாதிகளையே நீ உகப்புதி–ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி வைப்புதி – என்னும் இவ்வறிவு ஒன்றாலுமே தரிக்கிற நான் அவ்வறிவு பொய்யோ என்று சங்கியா நின்றேன் என்கிறார் –

உமர் உகந்த  உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி-உனக்கு அசாதாரணமாய் இருப்பார் எப்போதும் உகந்த ரூபமே உனக்குத் திரு மேனியாக நினைத்து இருப்புதி என்னுதல் -உனக்கு அசாதாரணராய் இருப்பார் உகந்தத்வத்தாலே நீ உகந்து இருக்கும் வடிவு இ றே உனக்கு வடிவாய் விட்டது என்னுதல் -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் -தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்
உன் தனக்கு அன்பரான-இவர் -உன் பக்கலிலே பிரேம பரவசராய் இருக்குமவர்கள்
உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை-அத்யாதரத்தை பண்ணி -பிரயோஜன நிரபேஷமாக கிட்ட வேண்டும் செயல்கள் –உன்னுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்கள் –
அறிவொன்றும் சங்கிப்பன்-தன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காகும் அறிவே யாயிற்று இவர் உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் சங்கை பண்ணா நின்றேன்
வினையேன்-நான் கண்ணான் சுழலை இட்டு அதி சங்கை பண்ணின போதாக ஸ்வரூப அனுபந்தியான குணங்கள் இல்லை யாகாது இ றே -அதிலே அதி சங்கை வர்த்திகைக்கு அடி என் பாபம் இ றே
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே-ஆஸ்ரித பக்ஷபாதி என்னும் இடத்தில் உதாஹரணங்கள் காட்டுகிறார்
அமரது பண்ணி-அந்த மஹா பாரத யுத்தத்தை பண்ணி –பெரிய பாரதம் கை செய்து -என்கிறபடியே சாரத்ய வேஷத்தோடே கையாளாய் உடம்புக்கு ஈடிடாதே தன்னைப் பேணாதே நின்று போரை விளைத்து –
யகலிடம் புடை சூழ்-பெரும் பரப்பை யுடைய பூமி எல்லாம் -பொழில் பூமி -சூழ் அடு படை யவித்த அம்மானே-வியாபித்து நலிகிற சேனையை சர்வாதோதிக்கமாக சூழ்ந்து கொண்டு கொல்ல வந்த சேனையை
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !-சாரதி சாரதி என்று வாய் பாறிக் கொண்டு வந்த துர்வர்க்கத்தை முடித்த -தேவா நாம் தானவா நாஞ்ச சாமான்ய அதிதைவதம்-என்று சர்வ சாதாரணனாய் இருக்க -ஆஸ்ரித பக்ஷ பாதத்தால் தத் விரோதிகளை அழியச் செய்தவன் –
அசுரர்கள் நஞ்சே-அசுரர்களை அழியச் செய்து குடி இருப்புகளை கொடுக்கையாலே தேர்களுக்கு நிரதிசய போக்யனானவனே
அசுரர்கள் நஞ்சே –ஜென்மத்தால் அஸுரர்களாயும்-ஸ்வ பாவ தோஷங்களால் அஸூரர்களாயும் உள்ளவர்களுக்கு ஆற்ற ஒண்ணாத நஞ்சு ஆனவனே
என்னுடை யார் உயிரேயோ-எனக்கு சத்தா ஹேது வானவனே -அனுகூலர்க்கு போக்யனாய் பிரதிகூலர்க்கு நஞ்சாய் இருக்கிற இரண்டும் எனக்கு தாரகம் என்றுமாம் –

————————————————————————–

சாஸ்திர பலம் ப்ரயோகத்தரி-என்று பேறு உம்மதானால் சாதனமும் உம்முடைய தலையிலே ஆகவேண்டாவோ என்னில் -நான் யத்னம் பண்ணி காண்கை என்று ஒரு பொருள் இல்லை என்கிறார் –

ஆருயிரேயோ  ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

ஆருயிரேயோ -சரீர ரக்ஷணம் ஆத்மவதன்றோ -சரீரம் தான் தன்னை ரஷித்துக் கொள்ளவோ -சம்பந்தமேயோ உள்ளது -அனுஷ்டானம் இல்லையோ -என்கிறார்
அகலிடமுழுதும் படைத்து-இடந்துண்டு மிழ்ந்தளந்த -பஹுஸ்யாம் -என்று பூமிப பரப்பை அடைய ஸ்ருஷ்டித்து -இத்தை பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் உத்தரித்து -பின்பு பிரளயம் கொள்ளப் புக திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து -உள்ளிருந்து நோவு படாமே வெளிநாடு காண உமிழ்ந்து -மஹா பலியாலே அபஹ்ருதமான தசையில் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி அபேக்ஷிப்பாரும் இன்றிக்கே இருக்க கேவல கிருபையால் ரஷித்த நீ வேண்டாவோ இதுக்கு ஹிதம் பார்க்கும் போது –
பேருயிரேயோ ! -பெரியோனே –
பெரிய நீர் படைத்து அங்குறைந்தது -கடைந்தடைத்துடைத்த-பிராட்டியாரோடு சம்சாரிகளோடு வாசி அற ரக்ஷிக்கும் சீர்மையை சொல்லுகிறது -த்வயி கிஞ்சித் சமாபன்னே-நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் இன்பனை என்கிறபடியே –பெரிய நீர் படைத்து அங்குறைந்து-ஏகார்ணத்தை ஸ்ருஷ்டித்து ஸ்ருஷ்ட்யர்த்தமாக அதிலே கண் வளர்ந்து அது கடைந்து –பிராட்டியை லாபிக்கைக்காக அத்தைக் கடைந்து –-அடைத்து –அவளோடு சம்ச்லேஷிக்கைக்காக அத்தை அடைத்து –உடைத்து -அவ்வருகு உண்டான ராக்ஷசர் ஆஸ்ரிதரை நலியாத படி அத்தை உடைத்த
சீருயிரேயோ !-நித்ய ஆஸ்ரிதையோடு அல்லாதாரோடு வாசி அற விஷயீ கரிக்கும் சீரியவனே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !-ஐஸ்வர் யத்தாலும் கௌரவத்தாலும் மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் உத்க்ருஷ்டராய் இருக்குமா போலே அவற்றால் தேவர்கள் மனுஷ்யஸ்தாநீயராம் படி சர்வாதிகன் ஆனவனே -சர்வாதிகனான நீ வேண்டாவோ ஹித சிந்தனை பண்ணும் போது
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ -சகல சேதன அசேதனங்களுக்கும் ஏகாத்ம வானவனே -ஆத்மா சரீரத்துக்கு ஹித சிந்தனை பண்ணுமது ஒழிய சரீரம் ஸ்வ ரக்ஷணத்தை பண்ண என்பது ஓன்று உண்டோ –ஆதாரமாய் நியாந்தாவாய் சேஷியாய் இருக்கிற நீ ஒழிய ஆதேயமாய் நியாம்யமாய் சேஷமான இது ஸ்வ ரக்ஷண சிந்தை பண்ணவோ -சைதன்யத்துக்கு விநியோகம் -பேறு அவனாலே என்று இருக்கை -பெற்ற அம்சத்தில் உபகார ஸ்ம்ருதி உண்டாகை-அனுபவிக்கை -இவற்றிலே அன்றோ –
உன்னை -ஆத்ம பூதனான உன்னை -நான் -சரீர பூதனான நான் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்ட என்பது ஓன்று உண்டோ –

————————————————————-

உக்தார்த்தத்தை விஸ்தரிக்கிறார்

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

எங்கு வந்துறுகோ !-உன்னளவு எது-நான் நிற்கிற நிலை எது -நீ என்னைக் கிட்டுமது ஒழிய நான் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்டவோ –
என்னை யாள்வானே ! -இவ்வளவு புகுர நிறுத்தினவனே -இவ்வளவு நான் வர நின்றேன் ஆகில் அன்றோ மேலும் எனக்கு பரமாவது
ஏழு லகங்களும் நீயே-சர்வ லோகங்களும் நீ இட்ட வழக்காம் படி இருக்கிறவனே -அபேக்ஷை வர்த்திக்கிற என்னை ஒழிய விமுகராய் இருப்பார் தன்னோ ஸ்வாதீனராய் இருக்கிறார்கள் –
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே -அந்த லோகத்தில் உள்ளாருக்கு சமைந்த தெய்வமும் நீ இட்ட வழக்கு -அவர்களைக் குடிமை கொள்ளுகிற தேவர்களோ ஸ்வாதீனராய் இருக்கிறார்கள் –
அவற்றவை கருமமும் நீயே-அவற்றினுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களும் நீ இட்ட வழக்கு அன்றோ –
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்-ஒன்றுக்கு ஓன்று விஸ்திருதமாய் -அண்டத்துக்கு புறம்பாய் அதுக்கு காரணமான மஹதாதிகள் என்று சில உண்டாகில் அவையும் உன் அதீனம் –
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே -கார்ய ஆகாரம் அழிந்து காரணாவஸ்த்தமாய் ஸூ ஷ்மமான அவ்யக்தமும் நீ இட்ட வழக்கு –
வான் புலன் இறந்ததும் நீயே—அவ்யக்தத்தையும் வியாபிக்க வற்றாய் அதீந்திரியமான காராணாவஸ்த் பத்த சமஷ்டியும் நீ இட்ட வழக்கு
நீ யின்னே யானால்-அர்த்த ஸ்திதி இதுவான பின்பு எங்கு வந்து உறுகோ-ஆரேனுமாக ஒருவன் தன் காரியம் தானே நிர்வஹித்தித் கொள்ளும் அன்று அன்றோ என் காரியம் எனக்கு பரமாவது -என்றபடி –
மங்கிய அருவாம் நேர்ப்பம்-என்று பத்த சமஷ்டி / வான் புலன் இறந்த-என்று முக்த ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது என்றும் பிள்ளான் -அப்போது அஸத் சமமாய் ஸூ ஷ்மமான ஆத்ம சமஷ்டி என்றும் –வான் புலன் இறந்த-என்று வானிலே யாய் -பரம பதத்தில் யாய் -அதீந்திரியமான முக்த ஸ்வரூபம் என்றும் நிர்வாஹம் –

—————————————————————–

சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகார தயா  சேஷமாய் -பிரகாரியான நீயே அவற்றுக்கு நிர்வாஹகன் என்னும் அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான் -என் பாபத்தாலே அதிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் என்கிறார் –

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்-கால த்ரயத்திலும் வர்த்திக்கிற சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு –தம் தாம் உள்ள காலத்தில் அவ்வோ பதார்த்தங்களுக்கு சேஷிகளாய் இருப்பாரில் வ்யாவ்ருத்தி –
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று -தூரஸ்தமாயும் -சந்நிஹிதமாயும்-அதூர விப்ருக்ருஷ்டமாயும் இருக்கிற சகல பதார்த்தங்களும் சேஷித்வத்தாலே சிறந்து இருந்துள்ள உன்னுடைய பிரகாரம் –இன்னே யானால் -இறந்ததும் நீயே -என்னுதல் —இன்னே யானால் சிறந்த நின் தன்மை -என்னுதல் -தூரஸ்தமாயும் சந்நிஹிதமாயும் அதூர விபக்ருஷ்டமாயும் உள்ள பதார்த்தங்கள் உனக்கு பிரகாரமாயற்றால் காலத்ரய வர்த்தி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு ஆகையால் சகல பதார்த்தங்களும் உனக்கு பிரகாரம் என்னுதல் –
அறிவொன்றும் சங்கிப்பன்-சரீரகதமான துக்கம் ஆத்மாவுக்கு ஆனால் போலே எல்லாருடைய துக்கங்களும் பிரகாரியான உன்னது என்றும் -சம்பந்த ஞானம் ஒன்றுமே யாயிற்று எனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக நினைத்து இருப்பது -அது ஒன்றிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் –
வினையேன்-கலக்கத்தாலே அதி சங்கை பண்ணும் காட்டில் அவன் ஸ்வரூபம் இல்லை யாகாது இ றே -எனக்கு இப்புத்தி பிறக்கைக்கு அடி என் பாபம் இ றே -கீழில் அதி சங்கைக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு -ஆஸ்ரித பரதந்த்ரன் என்கிற ஸ்வ பாவத்தில் அதி சங்கை பண்ணினால் ஆச்ரயணத்தில் குறையால் அங்கீ கரித்திலன் என்று நினைத்து இருக்கலாம் -இதில் அவனுடைய ஸத்பாவத்திலே அதி சங்கை பண்ணுகிறது இ றே -சர்வபிரகாரியாய் கொண்டு இ றே அவனுடைய சத்தை — ஸ்வ வ்யதிரிக்தங்கள் பிரகாரமாய் கொண்டு இ றே உண்டாவது -இப்படி ஸ்வரூபத்தில் அதி சங்கை வர்த்திகைக்கு அடி என் என்னில் -அதி சங்கா ஹேது சொல்லுகிறது –
வ்யதிரேகத்தில் ஜகத்து உபஸம்ஹ்ருதம் என்று நினைக்க வேண்டும்படியான உன் போக்யதா பிரகர்ஷம் அதி சங்கா ஹேது
கறந்த பால் -கறந்த போதை ரசத்தை நினைக்கிறது -கறவாத பால் இல்லை இ றே -உபாதி விசேஷங்களால் வந்த ரஸ விசேஷத்தை வியாவர்த்திக்கிறது
நெய்யே ! -அதில் சாராம்சம் /
நெய்யின் சுவையே ! -நெய்யின் இன்சுவை யானவனே / கடலினுளமுதமே-மஹத்தத்வத்தை கலக்கி அதில் சாரமான அமிர்தம் ஆனவனே
அமுதிற்-பிறந்த இன் சுவையே ! -அந்த அம்ருதத்தில் பிறந்த இனிய ரசம் ஆனவனே /
சுவையது பயனே -ரஸ அனுபவத்தால் வந்த ஸூ கம் ஆனவனே -ஒன்றில் ஓன்று மேற்பட்ட ரசங்களை சொல்லி அவை போறாமையாலே மேலே தன்னையே சொல்லுகிறது
பின்னை தோள் மணந்த பேராயா !–ஒரு மிதுன அனுபவம் யாயிற்று இவருக்கு போக்யம் -சம்சாரியை ஆனந்திப்பிக்குமா போலே யாயிற்று ஆனந்த மயனை அவள் உகப்பிப்பது -இவருடைய சேர்த்தி அழகாயிற்று இவருக்கு போக்யம் –

——————————————————————

ஏதேனும் செய்தாலும் பேறு உம்மதாய்-ஆஸ்ரயிக்கைக்கு காரணமும் உண்டானால் நீரே யத்தனிக்க வேண்டாவோ -என்னில் -ஆத்மாத்மீயங்கள் அடைய உண்ணாதீனமான பின்பு என்னால் செய்யலாவது ஒன்றில்லை — நீயே ரக்ஷிக்க வேணும் என்கிறார் –

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

மணந்த பேராயா !மாயத்தால் -அபி நிவேசத்தால் நப்பின்னை பிராட்டி தோளோடு சம்ச்லேஷித்த பேராயனே -நப்பின்னை பிராட்டியை காட்டில் இடைத்தனத்தில் கிருஷ்ணனுக்கு உண்டான ஏற்றம் –
முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற-குணங்களை யுடையாய் !–குணங்களில் ஒரு குணம் ஆச்வாஸ ஹேது ஆகிறது இல்லை -உன் குணமாகையும் நாநாகையுமே ஈருகைக்கு வேண்டுவது -எல்லாம் ஓக்க ஈரும்படியான குணங்களை யுடையவனே
வல்வினையேனை-சிலர் குண ஞானத்தால் ஜீவித்து இருக்க -அதுவும் பாதகமாம் படி பாபத்தை பண்ணினேன் -பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –
ஈர்கின்ற-நலிந்ததாய் விடுகிறது இல்லை -அம்பு பட்ட நோவுக்கு மருந்து இட்டு ஆற்றலாம் -குண ஞானத்தால் வந்த நோவுக்கு பரிஹாரம் இல்லை
அசுரர் வன்கையர் கூற்றமே ! -கண் பாராதே நலியும் அஸூரர்களுக்கு அந்தகன் ஆனவனே -அனுகூலரை குணங்களாலே அழிக்கும் -பிரதிகூலரை ஆயுதத்தால் அழிக்கும் –
கொடிய புள்ளுயர்த்தாய் !-உன்னிலும் கண்ட போதே பிரதிபக்ஷத்தை மாய்க்க வல்ல பெரிய திருவடியைக் கொடியாக யுடையவனே -பிரதிபக்ஷத்தை முடிக்கைக்கு தான் வேண்டா -கொடியைக் காணவே முடியும் அத்தனை
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! -ஸ்பர்சத்தால் விகசிதமான பணங்களை யுடையவனாய் -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விடுகைக்கு பல தலையை யுடையனாய் -தானும் பிராட்டியும் பரிமாறப் புக்கால் விஸ்தீர்ணமாய் இருக்கும் உடம்பை யுடையனான திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக யுடையவனே –
பாற் கடல் சேர்ப்பா !-இப்படிப் பட்ட திருவனந்த ஆழ்வானை ஆசனமாகக் கொண்டு பரமபதத்தில் இருக்கை அன்றிக்கே ஆர்த்த ரக்ஷணத்துக்காக அணித்தாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே
வணங்குமாறு அறியேன் -பரமபதத்தை விட்டு திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்துக்கு முற்பாடானாய் இருக்கிற உனக்கு நான் ஒரு கிஞ்சித்காரம் பண்ணினேனாக ஒரு விரகு அறிகிறி லேன் –உமக்கு மநோ வாக் காயங்கள் உண்டு -அவற்றுக்கு ஆஸ்ரயமான நீர் உண்டு -வணங்கத் தட்டு என் என்ன
மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–அவற்றினுடைய ஸத்பாவமே அமையுமோ -அவை ஸ்வ அதீனமாக வேண்டாவோ -மநோ வாக் காயங்களினுடைய சத்தை நீ இட்ட வழக்கு அன்றோ –

—————————————————————-

சகல பதார்த்தங்களும் உனக்கு சேஷமான பின்பும் இந்த ஞானத்தோடு சம்சாரத்திலே இருந்ததோடு வாசி இல்லை யாகிலும் சேஷத்வ ஞான விரோதியான சம்சாரத்திலே இருக்க அஞ்சா நின்றேன் -இதுக்கு அனுகூலமான திரு நாட்டிலே என்னைக் கொடு போக வேணும் என்கிறார் –

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

யானும் நீ தானே -நானும் நீ என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படி உனக்கு பிரகாரமாய் இருக்கிறவனே -ஆத்மேத்ய வது க்ருஹணீயாத்–ஆத்மேதி தூப கச்சந்தி –அஹம் மனுரபம் ஸூ ர்யச்ச –
யாவதோ மெய்யே-உனக்கு பிரகாரமாய் இருக்கிற இவ்வர்த்தம் சத்யம் –
அரு நரகவையும் நீ -சம்சாரத்தில் உண்டான சேதன அசேதனங்களுக்கும் என்னோபாதி உன்னோட்டை பிராப்தி உண்டு -நான் நீ இட்ட வழக்காய் இருக்கிறவோபாதி சகல பதார்த்தங்களும் நீ இட்ட வழக்கு –
யானால்-அர்த்த ஸ் திதி இதுவான பின்பு –
வானுயரின்பம் யெய்திலென்-இச் சேஷத்வ ஞானத்தோடு திரு நாட்டிலே போய் நிரதிசய ஆனந்தத்தை பெற்று இருக்கில் என் -உயர் இன்பம் -நிரதிசய ஆனந்தம் –
மற்றை நரகமே யெய்திலென் –ஸூ கத்துக்கும் சேஷத்வ ஞானத்துக்கும் எதிர்தலையான சம்சாரத்திலே இருக்கில் என் -சேஷ வஸ்து வானால் சேஷியினுடைய எல்லைக்கு உள்ளே -அவன் செய்தபடி செய்கிறான் -என்று இருக்குமது ஒழிய அவனை நிர்பந்திக்கக் கடவன் அல்லன் என்பதோர் அர்த்தமும் உண்டு
எனினும்-இவ்வர்த்தம் இப்படி யானாலும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும்-சகல பதார்த்தங்களும் உனக்கு அத்யந்த பரதந்த்ரம் ஆகையால் நானும் உனக்கு அத்யந்த பரதந்த்ரன் என்னும் தெளிவு பிறக்க பிறக்க
நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்-சேஷத்வ ஞானத்துக்கு விருத்தமான சம்சாரத்தில் இருக்கில் அகப்பட்ட இந்த ஞானத்தையும் இழப்பன் என்று நான் அஞ்சா நின்றேன் -உம்மோடு மற்றும் உள்ள பதார்த்தங்களோடு வாசி அற நம்மைக் குறித்து அத்யந்த பரதந்ந்திரமான பின்பு பரமபதத்தில் இருப்போடு சம்சாரத்தில் இருப்போடு வாசி என் என்று நீ கை வாங்கி இருக்கப் புகுகிறாயோ -என்று சம்சாரத்தில் இருப்பை நான் மிகவும் அஞ்சா நின்றேன் -இப்படி அஞ்சுகிற உமக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்ன
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் -பரமபதத்தில் நிரதிசய ஆனந்த யுக்தனாய் கொண்டு உன்னுடைய சேஷித்வத்தால் வந்த வேறுபாடு எல்லாம் தோற்ற -உனக்கு அமைந்தாரும் நீயுமாக இருப்பதோர் இருப்பு உண்டு
அருளு நின் தாள்களை எனக்கே–இவ்விருப்பில் என்னைக் கொண்டு போய் அவர்கள் அனுபவிக்கிற உன் திருவடிகளை எனக்குத் தந்து அருள வேணும் –

——————————————————————-

தாம் அபேக்ஷித்த படியே  திருவடிகளை எனக்குத் தந்து அருளின மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக என்னஆத்மாவை உனக்குத் தந்தேன் என்கிறார் -இப்போது திருவடிகளைக் கொடுக்கை யாவது -சம்சாரத்தோடு பொருந்தாத படியையும் தன்னை ஒழியச்  செல்லாத படியையும் தமக்கு பிறப்பித்த தசையை பிரகாசிப்பிக்கை –

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத்-உன் திருவடிகளை பற்றினாரில்-நான் பெற்ற பேறு பெற்றார் இல்லை என்னும் படி அடிமை கொண்ட -இன்கவி பாடும் பரமகவிகளால்-என்று பராசராதிகள் முதல் ஆழ்வார்கள் உண்டாய் இருக்க என்னைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
தலைத் தலைச் சிறப்பத் தந்த-மிகச் சிறக்கும் படி தந்த -பூர்ணமாம் படி தந்த என்கை –
பேருதவிக் -கொள்கின்ற என் தரத்தில் அன்றிக்கே தன் திறத்தில் தருகை-
கைம்மாறா-பிரதியுபகாரமாக
தோள்களை யாரைத் தழுவி-உனக்குத் தரப் புகுகிற வஸ்து என்று மிகவும் கொண்டாடி -உபகார ஸ்ம்ருதியில் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து சாவயம் போலே அணைக்கலாம் படி தடித்தது –
என்னுயிரை -விலக்ஷணமான ஆத்மவஸ்துவை –
அறவிலை செய்தனன்-இஷ்ட விநியோக அர்ஹமாம் படி அற விலை செய்து தந்தேன் –தாம் முன்பு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -என்று சொன்ன வார்த்தையை மறந்து உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே பிரமித்து சொல்கிறார்
சோதீ-இவர் பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தாலே அவனுக்கு பிறந்த உஜ்ஜ்வல்யம் –இவர் தம்மது அல்லாத ஒன்றை ஹர்ஷத்தாலே கலங்கி கொடுத்தார் -அவன் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றானாய் அத்தாலே உஜ்ஜவலன் ஆகா நின்றான் -மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர் கலங்க சொல்ல வேணுமோ -மயர்வற மதிநலம் அருளினான் தானே கலங்கா நின்றான்
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !-தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! –
முன்பு இழவாலே கூப்பிட்டவர் -தரித்து பிரதியுபகாரத்திலே இழிந்த படியைக் கண்டு அத்தாலே அவனுக்கு பிறந்த புஷ்கல்யத்தை பேசுகிறார் -உபகார ஸ்ம்ருதியால் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து அணைக்கலாம் படி தடித்தது போலே சதைகரூபமான வடிவும் சதசாகமாயிற்று -அவாப்த ஸமஸ்த காமனானவன் ஒரு சம்சாரியை லபித்து ஹ்ருஷ்டானானான் என்கிற இதுவும் கூடுமோ என்னில் -ஸார்வ பவ்மனான ஷத்ரியனுக்கு உயர்த்தி உண்டு என்னா அபிமதையான மஹிஷி பக்கலிலே சாபலம் இன்றிக்கே ஒழியுமோ -அவாப்த ஸமஸ்த காமத்வமும் பிராமண ஸித்தமாய் ஆஸ்ரித வாத்சல்யமும் பிராமண ஸித்தமாய் ஆனால் அப்படியே கொள்ளும் அத்தனை அன்றோ -எனக்கு ஹர்ஷத்தை தானே பிறப்பித்து -அந்த ஹர்ஷத்தைக் கண்டு அத்தாலே தான் இப்படி விஸ்திருதன் ஆவதே என்று கொண்டாடுகிறார்
தமியனேன்-அவன் ஸ்வரூபத்திலும் ஆஸ்ரித பாரதந்தர்யத்தாலும் அதி சங்கை பண்ணின போதை வெறுமையை நினைத்து சொல்கிறார்
பெரிய வப்பனே !–அவ்வதி சங்கைகளையும் போக்கி இவ்வளவு புகுர நிறுத்தின மஹா உபகாரகனே-

———————————————————-

நிகமத்தில் இத்திருவாய்மொழியில் சொன்ன அர்த்தத்தை எல்லாம் சங்க்ரஹேண சொல்லி இத்திருவாய்மொழி கற்றார்க்கு எம்பெருமானை லாபித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

பெரிய வப்பனைப் -உபய விபூதிக்கும் நிர்வாஹகன் ஆனவனை-
பிரமனப்பனை-சதுர்தச புவ நேஸ்வரனுக்கு ஜனகனானவனை
உருத்தி ரனப்பனை-அவனுக்கு புத்ரனாய் -அவன் தன்னளவிலும் மிகைத்து திரிகிற ருத்ரனுக்கு உத்பாதகனானவனை -க இதி ப்ராஹ்மணோ நாம
முனிவர்க்-குரியவப்பனை-முனிவர் என்கிறது ஸநகாதிகளை-அவர்களுக்கு கேவலம் ப்ரஹ்ம பாவநையாய் இருக்கையாலே உரிய வென்று -அணுமை சொல்கிறது
யமரரப்பனை -தேவர்களுக்கு உத்பாதகனானவனை
உலகுக்குகோர் தனியப்பனை தன்னை-இப்படி பிரித்து சொல்லுகிறது என் -சகல லோகங்களுக்கும் ஏக நிர்வாஹகன் ஆனவனை -இப்போது இவை சொல்லுகிறது என் என்னில் நிதி எடுத்தவன் இன்னது கண்டேன் இன்னது கண்டேன் -என்னுமா போலே ஸ்வரூபத்திலும் குணத்திலும் அதி சங்கை பண்ணின போது இழந்தாராய் இருந்தவற்றை லபிக்கையாலே இவற்றைப் பிரித்து பேசுகிறார் –முனிவர்க்கு உரிய அப்பனை என்கிறது ஆஸ்ரித பவ்யத்தையை சொல்கிறது
பெரிய வண் குருகூர்ச் சடகோபன்-ரக்ஷணம் தாழ்ந்தவாறே அதி சங்கை பண்ணுகையும் -உபகார ஸ்ம்ருதியாலே ஹ்ருஷ்டராகையும் ஆகிற இவை யுண்டாகைக்கு அடி அவ் வூரிலே பிறப்பு என்கை -மானஸ அனுபவ மாத்திரமே யாய் விடாதே ப்ரபந்ததீ கரித்த உதார குணம்
பேணின ஆயிரத்துள்ளும்-உரிய சொல் மாலை இவையும் பத்து -அவனைத் தாம் ஆசைப்பட்ட படியை சொன்ன இப்பத்து -யதோ வாசோ நிவர்த்தந்தே என்று மீளுகை அன்றிக்கே பகவத் குணங்களுக்கு நேரே வாசகமாகை
இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–அநாதி காலம் பகவத் விமுகராய் விஷயாந்தர ப்ரவணராய் -அசன்னேவ -என்கிறபடியே அசத்சமராய் இருக்கிற நமக்கு சந்த மேனம் -என்கிறபடியே உஜ்ஜீவிக்கலாம் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: