திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-10-

அவன் தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகத்துக்கு பிரதியுபகாரம் காணாமை தடுமாறினார் கீழ்
-இவருக்கு நிரூபித்தால் பிரதியுபகாரமாக கொடுக்கலாவது ஒன்றும் இல்லை -இவர் பக்கலிலே ஓன்று பெற்று
அத்தாலே குறை நிரம்ப வேண்டும்படி அபூர்ணன் அல்லன் -ஆனாலும் உபகார ஸ்ம்ருதி இருந்த இடத்தி
-ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தில் அந்வயிப்போம் என்று பார்த்தார் -தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு
-தன் திருவடிகளிலே கைங்கர்யத்தை பண்ண -அத்தையே பிரதியுபகாரமாக நினைத்து இருப்பான் ஒருத்தன் அவன்
-சேஷ பூதன் தனக்கு அடைத்த விருத்தியை பண்ண சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகவும் கடவன் -ஆகையால்
அவன் திருவடிகளிலே ஆனந்தமாக அடிமை செய்யும் அத்தனை என்றும் பார்த்தார் -அவனும் அடிமை கொள்ளுகைக்கு
ஸ்ரீ ராமாயணம் கேட்க்கைக்கு பேர் ஓலக்கமாக எழுந்து அருளி இருந்தால் போலே -திருவாறன் விளையிலே
லோகம் எல்லாம் வாழும் படி பிராட்டியோடே பரியங்க வித்யையில் சொல்லுகிற படியே திருவனந்த ஆழ்வான் மேலே
தன் பரிகரத்தோடே கூட திருவாய் மொழியை கேட்டு அருளும் படி அணித்தாக வந்து இருந்தான் -அங்கே சென்று
கண்ணாலே கண்டு எல்லா அடிமைகளும் செய்ய வேணும் என்று துணிந்தவர் -அங்கே சென்று அடிமை செய்யும் படியை மநோ ரதிக்கிறார் –
சம்சார சம்பந்தமும் அற்று ஒரு தேச விசேஷத்திலே போய் அடிமை செய்யும் அளவும் ஆறி இருக்க வல்லவர் அல்லாமையாலும்-
அவன் தான் இங்கே கிட்டே இருக்க ஒரு தேச விசேஷத்தே போய் அடிமை செய்ய இச்சை இல்லாமையாலும்
திரு வாறன் விளையிலே புக்கு திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் படியை அனுசந்தித்து இனியர் ஆகிறார்
-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இதுக்கு வாசி -கவி பாடின ஸ்ரீ வால்மீகி பகவானை ஒழிய குசலவர்கள் கேட்ப்பிக்கை அன்றியே
-பாடியவர் தானே கேட்பிக்கையும்-பாட்டுண்டவன் தனியே இருந்து கேட்க்கை அன்றியே பிராட்டியும் தானும் கூடக் கேட்க்கையும் –

————————————————————

திருவாறன் விளையிலே புக்கு -மிகவும் ஹ்ருஷ்டராய் கொண்டு அடிமை செய்யும் காலம் ஆகவற்றே -என்று மநோ ரதிக்கிறார் –

இன்பம்  பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க -நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்தமயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி -அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இ றே -ராமஸ்து ஸீதயாசார்த்தம்
எழில் மலர் மாதருந் தானும்-ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இ றே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இ றே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –
இவ் வேழுலகை-இன்பம் பயக்க-இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இ றே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி -ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இ றே –
இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற-இந்த லோகங்களுக்கு ஸூ கம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற
எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் -கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இ றே –
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற்று-இவர் திருவாய்மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி
அமர்ந்து -வேறு ஒரு பிரயோஜனத்தை கனிசியாதே-தேச வாசம் தானே பிரயோஜனமாக கொண்டு
உறைகின்ற -அவதாரம் போலே அன்றிக்கே நித்ய வாசம் பண்ணுகிற
அணி பொழில் சூழ் திரு வாறன்விளை-தர்ச நீயமான பொழில் சூழ்ந்த தேசத்தை
அன்புற்று -தேன தே தமனுவ்ரதா -என்கிறபடியே அவன் விரும்பும் தேசத்தையே விரும்பும் அத்தனை இ றே -அவன் திருவாய் மொழி கேட்க்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹித்தால் போலே நாமும் திரு வாய் மொழி கேட்ப்பிக்கைக்கு நல்ல இடம் என்று ஸ்நே ஹத்தை பண்ணி
அமர்ந்து -நாமும் அநந்ய பிரயோஜனராய்
?–அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி -மநோ ரத்தத்துக்கு காலமான ஆனதுவே போகத்துக்கும் காலமாக வற்றோ -அபீதா நீம் சகலஸ் ஸ்யாத் –

————————————————————-

திருவாறன் விளையில் விலக்ஷண  நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார் –

ஆகுங்கொல்  ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி -இது முடியுமோ என்னும் சந்தேகம் இன்றியே -என்னுதல் -பூமிப் பரப்பை முடிய அளக்க முடியுமோ என்னுதல் -தன் முக்த்யத்வம் இ றே சந்தேகாஸ்பதம் –அகலிடம் முற்றவும்- பஞ்ச சத்கோடி விஸ்தீரணையான பூமி யடைய
ஈரடியே-ஆகும் பரிசு நிமிர்ந்த -மூவடியை இரந்து இரண்டு அடியாலே அளந்தான் -ஓர் அடிக்கு சிறையிட்டு வைக்கைக்காக -அகலிடம் என்று சகல லோகங்களுக்கும் உப லக்ஷணம்
திருக்குறளப்பன் -ஸ்ரீ வாமனனாக மஹா உபகாரகன்
அமர்ந்து உறையும்-திருப் பாற் கடலிலும் சுவர்க்கத்தில் போல் அன்றியே அவன் விரும்பி நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை-கொடியை யுடைத்தான மாடங்களையும் -ஓங்கின மதியையும் யுடைத்தான திருவாறன் விளையை -–மாகம்-ஆகாச அவகாசத்தை அடைய மறையா நின்றதாயிற்று -மாடங்களின் கொடிகள் –
மாகம்-அவன் திருவடிகளால் அளந்த ஆகாசத்து அவகாசத்து அளவும் கணிசிக்கிற தாயிற்று கொடிகள் –
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?-மஹத்தான கந்தத்தை யுடைத்தான நீர் -சிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிம ஸீ தேனை வாரிணா-என்று ஸ்ரீ நந்திக்ராமம் தொடங்கி ஸ்ரீ பரத்வாஜ ஆஸ்ரமத்து அளவும் பனி நீரை விடுவித்தான் இ றே -அப்படியே நாமும் அங்கே புக்கு அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றோ –

—————————————————————–

திருவாறன் விளையில் எம்பெருமான் திருவடி மேலே நீ ஏறி அருளி இங்கே எழுந்து அருளக் கண்டாலும் அதனைத் தவிர்ந்து நாள் தோறும் திருவாறன் விளையை தொழக் கூட வற்றே என்கிறார் –

கூடுங்கொல்?  வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கூடுங்கொல்? வைகலும் -காலம் எல்லாம் இங்கனம் அனுபவிக்க கூட வற்றோ –
கோவிந்தனை மதுசூதனைக் -கோளரியை-அங்கு வர்த்திக்கிறவனைக் கண்டால் மூன்று ஸ்வபாவம் பிரகாசியா நிற்கும் -அதாவது ஆஸ்ரித பவ்யனாய் இருக்கையும் -தத் விரோதி நிரசீலனாய் இருக்கையும் அநாஸ்ரிதர்க்கு அ நபிபவ நீயனாய் இருக்கையும் –
கோளரி -ஜ்வலந்தம் என்கிறபடியே நிரவதிக தேஜோ யுக்தனாய் இருக்கை
ஆடு பறவை மிசைக்கண்டு -பகவத் ஸ்பர்சத்தாலே களித்தாடா நிற்கிற பெரிய திருவடி மேலே கண்டு -திருவாறன் விளை உத்தேச்யமாகப் போகா நின்றால் அவன் திரு நகரி யுத்தேச்யமாக வாரா நிற்கும்
கைதொழுது -அவனை இங்கே கொள்ளக் கடவதொரு கார்யம் இல்லையே யாகிலும் -அனுவர்த்திக்க வேண்டும் பிராப்தி உண்டு இ றே
அன்றி -அவனை விட்டு
யவன் உறையும்-அவன் நித்ய வாசம் பண்ணுகிற வூரிலே சென்று அனுபவிக்க கடவென்
பாடும் பெரும்புகழ் நான்மறை -அவனுடைய கல்யாண குணங்களை பாடா நின்றுள்ள நாலு வேதங்கள்
வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் -ஷடங்கங்கள் இவற்றை பயின்றவர்கள் -வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் -நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் –
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–ஒக்கத்தை யுடைய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையிலே புக்கு அங்கு உள்ள வைஷ்ணவர்களோடே கூடி அனுபவிக்க காலம் எல்லாம் இங்கனே யாக வற்றோ –

—————————————————-

திருவாறன் விளையிலே செல்லப் பெறோம் ஆகில் -அங்கு நின்று அருளின எம்பெருமான் திரு வடிகளை -அங்கே சென்று புக்கு அனுபவிக்கும் படியை -இங்கேயே இருந்தாகிலும் என்றும் நிரந்தரமாக நினைக்க கூடவற்றே -என்கிறார் –

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வாய்க்குங்கொல் நிச்சலும் -நாள் தோறும் இங்கனம் வாய்க்க வற்றோ
எப்பொழுதும்-நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றியே நிரந்தரமாக
மனத் தீங்கு நினைக்கப் பெற-நெஞ்சால் இங்கே இருந்து அனுசந்திக்கப் பெற -துர்க்கதாநபி ஜாதாயாம் -இவ்வநுஸந்தானம் ரசித்த படியினால் இதுக்கு அவ் வருகு ஒரு பேறு இல்லை என்கிறார்
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை-சம்ருத்தமான கரும்பும் அதுக்கும் கூட நிழல் செய்யும் செந்நெல்லையும் யுடைத்தான வயலாலே சூழப் பட்ட தேசம் -இட்டது எல்லாம் குறைவற விளையும் தேசம் –
வாய்க்கும் பெரும்புகழ் –இட்டது எல்லாம் சம்ருத்தமாக விளைகிற தேசத்திலே இருந்து அருளுகையாலே சம்ருத்தமாய் அஸ அசங்யாதமான கல்யாண குணங்களை யுடையனாகை-
மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த-சர்வேஸ்வரனாய் வைத்து சாது பரித்ராண அர்த்தமாக ஸ்ரீ மதுரையிலே அவதரித்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் -அப்ராக்ருதமான திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையாலே பெரு விலையனானநீல ரத்னம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையனாய் உபகார சீலனான கிருஷ்ணனுடைய
மலரடிப் போதுகளே?–நிரதிசய போக்யமான திருவடிகளை -விகசிதமான திருவடிகள் ஆகிற புஷபங்களை -எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற -வாய்க்கும் கொல்

———————————————————–

திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார் –

மலரடிப்  போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்-விகசிதமான செவ்விப் பூ போலே இருக்கிற திருவடிகளை சர்வ காலமும் என் நெஞ்சிலே வைத்து அதினுடைய போக்யத்தையிலே நிர்மமனாய் திருவடிகளிலே விழும்படி
பலரடியார் முன்பு அருளிய -அயர்வறும் அமரர்கள் இருக்க என்னுதல் -சுருதி பிரசித்தரான பராசராதிகள் இருக்க என்னுதல் -இன்கவிபாடும் பரம கவிகளான முதல் ஆழ்வார்கள் இருக்க என்னுதல் -என் பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணுவதே -முதலிகள் எல்லாம் இருக்க திருவடி பக்கலிலே விசேஷ கடாக்ஷத்தை பண்ணினால் போலே -அதாகிறது தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட யுபகாரம்
பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்-பரியங்க வித்யையில் போலே திருவனந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற யுபகாரகன் -அப்படுக்கையில் காட்டில் விரும்பி வர்த்திக்கிற தேசம் -சபரிகரனாய் -அநந்ய பிரயோஜனனாய் வர்த்திக்கிற தேசம் என்றுமாம் –
மலரின் மணிநெடு மாடங்கள்நீடு மதிள் திரு வாறன்விளை– தேவர்கள் வர்ஷித்த புஷ்ப்ப வருஷடியோடே கூட ஓங்கின மணி மயமான மாடங்கள் -ஓங்கின மதிள் இவற்றை யுடைய திருவாறன் விளையினுடைய
உலக மலி புகழ் பாட-சம்சாரத்தில் அடங்காத ஏற்றத்தை பாட என்னுதல் -அங்கு எழுந்து அருளி இருக்கிறவனுடைய குணங்களை பாட என்னுதல்
நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–நம் பக்கல் உண்டான சகல துக்கங்களும் தானே போம் –

——————————————————————-

எம்பெருமான் பக்கல் சாபலம் உடையீர் -உங்களுக்கு ஸமஸ்த துக்கங்களும் நீங்கும் படி திருவாறன் விளையை நெஞ்சால் நினைத்து ஆஸ்ரயிங்கோள் -என்கிறார் –

ஒன்றும்  நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை-பாபங்களை நாமே போக்க புக்கால் இ றே சேஷிப்பது -பகவத் பிரபாவத்தாலே போக்கும் இடத்தில் சவாசனமாக போகத் தட்டில்லை -சர்வ பாப்மான ப்ரதூயந்தே –மேரு மந்த்ர மாத்ரோபி-அவன் தானே சொல்லிலும் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று இ றே சொல்லுவது –
உள்ளித் தொழுமின் தொண்டீர்!-பகவத் விஷயத்தில் சபலரானார் -மநோ வாக் காயங்களாலே அனுபவிக்க பாருங்கோள்
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்அன்று -ஆஸ்ரிதர் உடைய ஆபத்தசைகளிலே உதவுமவன் -சிசுபாலன் ஸ்வயம் வரத்துக்கு முடுகின தசையில் –அங்கு -அத்தேசத்திலே -தூணிலே தோற்றினால் போலே தோற்றி –அமர்வென்று -சிசுபாலனை யுத்தத்தில் வென்று -உருப்பிணி நங்கை -மார்பிலே அம்பு ஏற்றாலும் பொறாத ஆத்ம குணங்களால் பரிபூர்ணை யானவள்
அணி நெடுந் தோள் புணர்ந்தான்-தனக்குத் தானே ஆபரணமாய் போக்தாவின் அளவில்லாத போக்யதையை யுடைத்தான தோளோடு அணைந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப -நாள்தோறும் இடைவிடாதே என் மனஸ் ஸூ ருக்மிணி கல்யாண குணத்தையே கொண்டாடும்படி
உள்ளே இருக்கின்ற பிரான்-அந்த மணக்கோலத்தோடு என்னுடைய ஹ்ருதயத்தில் இருக்கிற உபகாரகன்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–ஹ்ருதயத்தில் நிற்கிறவன் கண்ணுக்கு விஷயமாம் படி வந்து நிற்கிற தர்ச நீயமான திருவாறன் விளை யாகிற மஹா நகரம் அதுவே -உள்ளித் தொழுமின் தொண்டீர்!-ஒன்றும் நில்லா – முற்றவும் தீவினை கெடும்-

————————————————————

நமக்கு ப்ராப்யம் திரு நாடு அன்றோ என்னில் -திருவாறன் விலையே நமக்கு ப்ராப்யம் -அங்குத்தை -அங்கு நின்று அருளும் எம்பெருமானே நமக்கு ப்ராபகன் என்கிறார் –

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீணக ரமதுவே-கலங்கா பெரு நகரமாய் -அபுநாராவ்ருத்தி லக்ஷணமான தேசம் திருவாறன் விளையே
மலர்ச் சோலைகள் சூழ்-நித்ய வசந்தமான தேசம் -அவனுக்கு ப்ராப்ய பூமி என்று தோற்றும்படி போக்யத்தை யுடைத்தான தேசம்
திரு வாறன்விளை-யாகிற அதுவே நீணகரம்
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்-மஹா நகரத்திலே நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் -விண்ணவர் கோனாய் வைத்து ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹத்தாலே கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஸூ லபன் ஆனவன் –
வாணபுரம் புக்கு -எதிரிகள் இருந்த தேசத்திலே எடுத்து விட்டு
முக் கட்பிரானைத்-ஈஸ்வர அபிமானியாய் வாணனுடைய ரக்ஷணத்துக்கு நான் கடவன் என்று ஏறிட்டு கொண்ட ருத்ரனை –
தொலைய-இனி ரக்ஷகத்வம் வேண்டா -அத்தை பொகடும் படி
வெம் போர்கள் செய்து-கொடிய யுத்தங்கள் செய்து – வாணனை ஆயிரம் தோள் துணித்தான்- பாணனுடைய பாஹு வனத்தை சேதித்து விட்டான் -உஷை பித்ரு ஹீனை யாகாமைக்கு
சரண் -அவனே அத்தேசத்தை பிராபிக்கைக்கு உபாயம் –
அன்றி மற்றொன்று இலமே.–வேறு ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக் கடவோம் அல்லோம்-

—————————————————————–

திருவாறன் விளையிலே புக நம்முடைய சகல துக்கங்களும் போம் என்கிறார் –

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று -கஜ ஆகர்ஷதே என்கிற ஸ்வ சாமர்த்தியம் கார்யகரம் ஆகாத அளவிலே உன் திருவடிகளை ஒழிய வேறு பற்று உடையேன் அல்லேன் என்கிறாள் –
அகலிரும் பொய்கையின் வாய்-அகன்று ஆழ்ந்து இருந்துள்ள பொய்கையை வாயிலே -இப்போது அகலமும் ஆழமும் சொல்லுகிறது -அவன் ஏற விடுதல் -தானேயேற பார்க்கில் முடித்தல் செய்யும் படியாய் இருக்கை –
நின்று-ஸ்வ சாமர்த்தியம் ஓவிச் செயல் அற்று நின்று
தன் நீள் கழல் -செயல் அற்றார் இருந்த இடமே எல்லையாக வளரும் திருவடிகள் -நினைத்த அளவிலே நபி பேதி குதச்சந -என்னப் பண்ணுகிற திருவடிகளிலே
ஏத்திய-முள் பாய்ந்தால் அம்மே என்பாரைப் போலே ப்ராப்தியையும் ஸுலப்யத்தையும் நினைத்து நாராயணா என்று ஏத்தினான்
ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-துதிக்கையும் பூவும் ஒழிய அழுந்தின அழுந்தின அளவிலே -பூவில் செவ்வி அழிவதற்கு முன்பே திருவடிகளில் சாத்தப் பெற்றிலேன் என்கிற இடரைத் தீர்த்த உபகாரகன்
சென்று அங்கு இனி துறைகின்ற-இப்படிப்பட்ட ஆபத் நிவாரணத்துக்கு ஈடு என்று தானே சென்று அங்கே இனிமையோடே வர்த்திக்கின்ற தேசம் -மடுவின் கரையிலே யானைக்கு உதவினால் போலே ஆர்த்தி திசையிலே வந்து கிட்டின படி இவர்க்கு
செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை-அவன் தனக்கு ப்ராப்ய பூமி என்னும் படி போக்யத்தையிலே மிக்க வூர்
ஒன்றி வலஞ்செய -கிட்டி அனுகூல வ்ருத்திகளைப் பண்ண
ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–ஓ தீ வினை ஒன்றும் உள்ளத்தின் சார்வல்ல என்று யுக்தி பிரகாரம் ஆதல் –ஒன்றி வலம் செய்ய ஒன்றுமோ -கிட்டி வலம் செய்ய கிட்டுமோ -கிட்டுமாகில் தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல என்னுதல்-

———————————————————–

என்னுடைய ஹ்ருதயமானது ஸ்ரீ வைகுண்டமும் திருவாறன் விளையும் இரண்டும் கிடைப்பதானால் -ஸ்ரீ வைகுண்டத்தில் காட்டிலும் அங்கு உள்ளாரும் வந்து விரும்பும் திருவாறன் விளை யமையும் என்னா நின்றது என்கிறார் -இதுவே பரம ப்ராப்யம் என்னா நின்றது என் மனஸ் ஸூ என்றவாறு –

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் -அவித்யாதிகள் ஆத்மாவை ஸ்பர்சியாத படி யாய் -மனஸ் ஸூ நிர் தோஷமாய் என்றபடி
தெளி விசும்பு -இங்கு உள்ளார் அங்கு செல்லிலும் தெளிவைப் பிறப்பிக்கும் தேசம் -அவனே வரிலும் சோக மோஹங்களை விளைக்கும் இது -இருள் தரும் மா ஞாலம் இ றே இது -தெளி விசும்பு சுத்த சத்வம் அது –
ஏறலுற்றால்-போக ப்ராப்தமானால் -கிடைப்பதானால் –
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்றுயாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மநோ வாக் காயங்களாலே நித்ய ஸூ ரிகளும் பயின்று ஆஸ்ரயிக்குமதாய்-நிரதிசய போக்யமான திருவாறன் விளையை -தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவாகி -என்ன வேண்டாத நித்ய நிர்தோஷர் படுகாடு கிடக்கிற தேசம் என்கை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–கிட்டி அனுகூல வ்ருத்திகளை பண்ண வற்றே என்னா நின்றது என் மனஸ் ஸூ -பாவோ நான்யத்ர கச்சதி -என்று என் வசம் அல்ல என் மனஸ் ஸூ –

—————————————————————

திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார் –

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்-திருவாறன் விளை ஒழிய வேறு ஒன்றில் ப்ராப்ய புத்தி இல்லை என்னும் இடம் சர்வேஸ்வரன் அறியும் -உம்முடைய நினைவுக்கு சர்வேஸ்வரனை சாக்ஷி யாக்கைக்கு ஹேது என் என்னில்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை-நினைவுக்கு வாய்த்தலையில் இருக்கிறவன் அறியானோ -மனசாலே செய்யுமவற்றில் அவன் அறியாத வஞ்சகங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்-நித்ய ஸூ ரிகளைப் போலே மநோ வாக் காயங்களினால் பூ ஸூ ராரான முமுஷுக்கள் திரள் திரளாக வந்து ஆஸ்ரயிப்பார்கள்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–கிட்டினாரை நிரதிசய ஆனந்தி யாக்கும் தேசம் -இவ்வத்தியவசாயம் என்று தொடங்கி என்ன –
யுறை தீர்த்தனுக்கு-அங்குத்தை நித்ய வாசத்தாலே தனக்கு போக்யத்தை காட்டி -புறம்பு உள்ள ருசியைப் போக்கி தன் பக்கல் ருசியை பிறப்பித்தவனுக்கு –அற்ற பின்னே- அவன் பக்கல் அநந்யார்ஹமாம் படி ருசி பிறந்த பின்பு -சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை -தேவபிரான் அறியும்-

———————————————————–

நிகமத்தில் இத்திருவாய் மொழி வல்லார் அயர்வறும் அமரர்களால் ஸ்லாக நீயர் என்கிறார் –

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

தீர்த்தனுக்கு அற்ற பின் -தன் அழகைக் காட்டி புறம்புள்ள பற்றை யறுத்தவனுக்கே யாகத் துணிந்த பின்பு
மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் -வேறு ஒரு தஞ்சம் இல்லை என்று அனுசந்தித்து
தீர்த்தனுக்கே-பாஹ்ய ருசியை தவிர்த்தவனுக்கே துணிந்த திரு உள்ளத்தை உடையராய்
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் -இவருக்கு இந்த நன்மைக்கு அடி திரு நகரில் பிறப்பாயிற்று -செழுங் குரு கூர்-ஆத்ம குணங்களை சம்ருத்தமாக்கும் தேசம் –
சொன்ன-தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் -தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் –
தேவர் –நித்ய ஸூ ரிகள்
வைகல்-அபர்வணி கடல் தீண்டலாகாது என்னுமா போல் அன்றியே சர்வ காலமும்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–மஹீஷிகளை ஸ்நேஹித்து கொண்டாடும் தசையில் அவர்களுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணினார்களாகச் சொல்லுவார்கள் -நித்ய ஸூ ரிகள் மஹீஷிகளை கொண்டாடி இருக்கும் போது ஆகிறது -தாங்கள் கைங்கர்யத்தில் இழிந்தால் எடுத்துக் கை நீட்டும் போது –தேவர் என்று ப்ரஹ்மாதிகளையும் சொல்லுவர் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: