திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-9-

த்வத் பிராப்தி விரோதியாய் உள்ள இப்பிரக்ருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று பல காலும் அபேக்ஷிக்க –
செய்து அருளாமைக்கு காரணம் என் என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க -அவனும் சர தல்பத்திலே ஸ்ரீ பீஷ்மரை வைத்து-
லோகத்தார்க்கு தர்மத்தை சொல்லுவித்தால் போலே என்னை ஆஸ்ரயித்தற்கும் எனக்கும் போகார்த்தமாக கவி பாட வைத்தோம் என்று அருளிச் செய்ய
-அவ் உபகாரத்தாலே மிகவும் ஹ்ருஷ்டராய் ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே ஸம்ப்ராந்தராய் -வேதங்களும் ஸ்ரீ வால்மீகி பகவான்
தொடக்கமாக உண்டான ரிஷிகளும் சொன்ன கவிகளும் -பழைய ஆழ்வார்களும் அருளிச் செய்த கவிகளும் கிடக்க
தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட இம் மஹா உபகாரத்துக்கு பிரதியுபகாரம் காணாதே தடுமாறுகிறார் –

————————————————————————–

அதி ஷூத்ரனாய் இருக்கிற என்னை ஞான சக்த்யாதிகள் உடையேனாம் படி பண்ணி என்னை-இட்டுத் திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தை அனுசந்தித்து தரிக்க மாட்டு கிறி லேன் என்கிறார்-

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

ஒரு நாளை விஷயீகாரமே ஆத்மாவதிகமாக வாழுகைக்கு போரும் என்னும் படி போன காலம் எல்லாம் நாள் தோறும் விஷயீ கரித்து கவி பாடுகைக்கு அனுரூபமான ஸாமக்ரி ஒன்றும் இல்லாத என்னை ஞான சக்தி யாதிகளால் தன்னோடு ஒக்கப் பண்ணி -என்னைத் தனக்காக்கி என்றுமாம் –
தன்னாலே தத்த சக்திகனான என்னாலே சுருதி ஸ்ம்ருதியாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னைத் தான் சர்வ சக்தியாகையாலே இனிதாய் எல்லார்க்கும் அனுபவிக்கலாம் படியாக தமிழனா திரு வாய் மொழியை பாடுவித்துக் கொண்டவனை
எனக்கு தன் அழகைக் காட்டி கவி பாடுகைக்கு அடியானவனை-

———————————————————————-

தானே தன்னைக் கவி பாடி வைத்து நான் தன்னை கவி பாடினேன் என்று லோகத்தில் பிரசித்தம் ஆக்குவதே -என்று -அவன் படி இருந்தது என் -அவனுடைய ஆச்சர்யத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

என்  சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

என் சொல்லி நிற்பன்-எத்தை சொல்லி தரிப்பது
என் இன்னுயிர் இன்று ஒன்றாய்-என்னுடைய ஹேயமான ஆத்மா அவனுடைய விஷயீ காரத்தாலே இன்று ஒரு சரக்காய் –இன்னுயிர்-என்கிறது விபரீத லக்ஷணை –
சொல்லும் என்னது அன்றிக்கே கவி பாடினேனும் நான் அன்றிக்கே இருக்கச் சொல்லும் என்னதாக்கி கவிபாடினேனும் நான் என்று லோகத்தில் பிரசித்தமாக்கி தன்னுடைய சொல்லாலே தான் தன்னை கவி பாடின ஆச்சர்ய பூதனை-ப்ரஹ்மாதிகளை யுண்டாக்கி அவர்களுக்கு வேதங்களை ஓதுவிக்குமா போலே தானே கவியை பாடி என்னை சந்தையிட்டு கற்பித்தான் என்கிறது –

—————————————————————–

பார்ச்வத்தர்-உமக்கு இனி மறந்து பிழைக்கலாம் அத்தனை என்னை -என்னையும் உபகரணமாக கொண்டு தன்னைத் தானே கவி பாடின மஹா உபகாரகனை  மறக்க உபாயம் இல்லை -என்கிறார் –

ஆ முதல்வன்  இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

கவி பாடுகைக்கு உறுப்பு ஆவான் இவன் ஒருவன் என்று தானே தெளிந்து -முதலாவான் இவன் என்று தன்னை நான் தேறப் பண்ணி -என்றுமாம் –
தானே என்னுடைய வாக் ப்ரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து சர்வ லக்ஷனோ பேதமாய் -இனிதான திருவாய் மொழியை அநந்ய பிரயோஜனரான பிரதான பக்தர்களுக்கு போக்யமாக —
என்னுடைய வாய்த்த பிரதான பந்துவை என்று மறப்பனோ -என்னுடைய வாய்க்கு முதலான உபகாரகனை மறக்க உபாயம் உண்டோ என்றுமாம் –

—————————————————————

தானே தன்னைக் கவி பயாடிக் கொண்டான் ஆகில் ஆச்சர்யம் இல்லை -அதுக்கு பாங்கு அன்றிக்கே இருக்கிற என்னைக் கொண்டு தப்பாமே கவி பாடின இவ்வுபகாரத்தை மறக்க உபாயம் இல்லை -என்கிறார் –

அப்பனை  என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய ப்ரத்ய நீகத்வ சர்வஞ்ஞாதிகளாலே தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே -ஹேயத்வ   அஞ்ஞாதிகளால் ஒப்பில்லாத என்னை விஷயீ கரித்து செவ்விதாக பரிமாறின நீர்மையை அனுசந்தித்து –

————————————————————

தன்னைக் கவி பாடுகைக்கு ஈடான நீர்மையும் இன்றிக்கே இச்சையும் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னைக் கொண்டு சர்வ லோகம் எல்லாம் கொண்டாடும் படி கவி பாடுவதே -என்ன -சர்வாதிகானோ -சர்வேஸ்வரனோ -என்கிறார்-

சீர்  கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

தன்னுடைய கல்யாண குண அனுசந்தான பூர்வகமாக திருத்தி இனிதான கவியை வாய்க்கப்படும் நீர்மை எனக்கு இன்றிக்கே இருக்கச் செய்தே-
என்னை தன்னைப் போலே ஞான சக்திகளை யுடையேனாக்கி –தனக்கு நான் சேஷம் என்னும் இடத்தை அறிவித்து என்றுமாம் –

————————————————————

பராசர வ்யாஸ வாலமீகி பிரமுகரான கவிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளாதே -என்னை யுபகரணமாகக் கொண்டு வாங்கவோ பாடுவதே என்று ப்ரீதர் ஆகிறார் –

இன்  கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

தன் கவி -தனக்கு சத்ருசமான கவி
இன்று-நன்கு வந்து -என்னைக் கொண்டு கவி பாடுவித்து கொள்ளுமதுவே பிரயோஜனமாக வந்து
என்னுடன் ஆக்கி என்னால் தன்னை-வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே-கவி பாடுகைக்கு பிரியாததொரு உபகரணமாக என்னைக் கொண்டு என்னாலே தன்னைத் தான் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆனபடிக்கு சத்ருசமாம் படி அரணிய கவியைப் பாடா நின்றான் –

—————————————————————–

என்னைக் கொண்டு நிரதிசய போக்யனான கவியைப் பாடுவித்துக் கொண்ட இம் மஹா உபகாரத்துக்கு இவனை காலம் உள்ளதனையும் உபகார ஸ்ம்ருதியை அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார்-

வைகுந்த  நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப்  புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து நிர்ஹேதுகமாக என்னுடைய பிரதிபந்தகங்களை நீக்கா நின்றுள்ளவனை
தன்னை என்னாக்கி-என்னை தன்னாக்கி
நான் புகழ்ந்தால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதனாம் படி என்னைக் கொண்டு அழகியவாய் இனியவாய் இருந்துள்ள கவியை பாடுவியா நின்று கொண்டு அதுவே பிரயோஜனமாய் இருந்தவனை-

———————————————————————-

என்னைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட இம் மஹா குணத்தை உபய விபூதியில் உள்ளாருடைய போக்த்ருத்வ சக்தியையும் அதுக்கு ஈடான வாக்யாதி உபகரணங்களையும் பெற்று அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார் –

ஆர்வனோ  ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

நான் கவிபாடுகைக்கு பாங்காம் படி யாகத் திரு அழகை காட்டின மஹா உபகாரகனுடைய குணங்களை சகல சேதனரையும் துணையாகக் கொண்டு பருகிலும் ஆர்வேனோ
தன்னை கவி பாடுகைக்கு யோக்யதை இன்றிக்கே இருக்கிற என்னை தன்னோடு ஒக்கப் பண்ணி –தனக்காக்கி என்றுமாம் –
என்னாலே தன்னை நிறம் பெறும் படி கவி சொன்ன படிக்கு –

——————————————————————-

என்னை வைத்து கவி பாடுவித்துக்  கொண்ட மஹா உபகாரகனை சகல சேதனருடைய போக்த்ருத்வ சக்தியை உடையேனாய் கொண்டு-கீழ் சொன்ன பரிகரங்கள் அனைத்தையும் கொண்டு – கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார் –

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைய ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி– ஸ்வ விஷய ஞானத்துக்கு சம்பாவனை இல்லாமையால் விஸ்மரணம் இன்றிக்கே அச்சித்தகல்பனாய் இருந்துள்ள என்னை தன்னோடு ஒக்கப் பண்ணி
என்னாலே தனக்கு உறும்படி இனிதாக பல கவியைச் சொன்ன உபகாரத்துக்கு –
தனக்கு நேரே வாசகமாம் படி என்றுமாம் –

—————————————————————-

தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக்  கொண்ட மஹா உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாதே அலமாக்கினார் –

உதவிக்  கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

அவனுக்கு பிரதிபகாரமாக என்னுடைய ஆத்மாவைக் கொடுக்கைக்கு என்று ஆராய்ந்த போது அதுவும் பின்னை அவதானதாய் இரா நின்றது –
என்னாலே தன்னை மிருதுவாய் இனிதான கவியைப் பாடின மஹா உபகாரத்துக்கு இங்கு இருந்தாலும் -திரு நாட்டிலே போனாலும் பண்ணலாம் பிரத்யுபகாரம் இல்லை –
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-அஹங்கார மமகார சம்பாவனை யுள்ள இஹ லோகத்தில் பிரத்யுபகாரம் பண்ணப் பெறாத இவருக்கு அவற்றை கனாக் காணவும் முடியாதே பரலோகத்தில் பிரத்யுபகாரம் பண்ண விரகு இல்லை என்று கருத்து

—————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு  எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார் –

இங்கும்  அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

இஹ லோக பர லோகங்களில் ஸ்ரீ யபதி யல்லது தஞ்சம் இல்லை என்னும் இடத்தை அனுசந்தித்து அந்தபாவ யுக்தராய் இருக்கிற ஆழ்வார் –
இப்பாவத்திலே அருளிச் செய்த ஆயிரம் திருவாய்மொழிகளிலும் இத்திருவாய் மொழி –

————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: