திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி –7-9-

எனக்கு சம்சாரத்தோடு பொருந்தாமை யுண்டாய் -உன்னால் அல்லது செல்லாமையும் யுண்டாய் நீயே உபாயமுமாய் இருந்த பின்பு –
த்வத் பிராப்தி விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று பலகாலும் அபேக்ஷிக்க-
அவனும் இவருக்கு நேர் கொடு நேர் தன் கருத்தை அருளிச் செய்யாதே –
தன்னதொரு குணத்தை யாவிஷ்கரித்து அதிலே இவர்க்கு அந்நிய பரதையைய் பிறப்பித்து போந்தான் –
இவரும் அந்த கருத்தை அறியாதே -நீ உன்னை சிலர்க்கு கொடுக்கும் இடத்து தடுக்க வற்றாய் இருபத்தொரு பிரதிபந்தகமும் இன்றிக்கே இருக்க
உன்னைத் தருவதும் செய்யாதே முடியவும் ஒட்டாதே -ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற இதுக்கு காரணம் என் என்ன –
ஸ்ரீ பீஷ்மரை சர தல்பத்தில் இட்டு வைத்து நாட்டுக்கு ஒரு வெளிச்சிறப்பு பண்ணிக் கொடுத்தால் போலே
நமக்கும் நம்முடையார்க்கும் போது போகைக்கு உறுப்பாக இப்பிரபந்தத்தை தலைக் கட்டுகைக்கு காணும் -என்று
தன் கருத்தை நேரே அருளிச் செய்ய -ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் புருஷோத்தமனாய் இருக்கிற தனக்கு ஒரு குறை யுண்டாய்
-அத்தை தம்மால் தீர்ப்பதாக அவன் அருளிச் செய்ததைக் கேட்டு -அத்தாலே மிகவும் ஹ்ருஷ்டராய்
-வேதங்களும் ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்ரீ பராசர பகவான் தொடக்கமான ரிஷிகள் சொன்ன கவிகளும்
-செந்தமிழ் பாடுவார் -என்கிற முதல் ஆழ்வார்கள் அருளிச் செய்த கவிகளும் கிடக்க
-தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்ட இம் மஹா உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமே தடுமாறுகிறார் –

————————————————————-

அதி  ஷூத்ரனாய் இருக்கிற என்னை ஞான சக்த்யாதிகள் உடையேனாம் படி பூர்ணனாம் படி –பண்ணி என்னை-இட்டுத் திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட உபகாரத்தை அனுசந்தித்து தரிக்க மாட்டு கிறி லேன் என்கிறார்-

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு-என்னை ஒரு நாள் பண்ணின விஷயீ காரமே கால தத்வம் உள்ளதனையும் உஜ்ஜீவிக்கப் போரும் என்னும் படி விஷயீ கரித்து -சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீ கரித்தால் பின்னை ஆத்மாவதியா -இது ஒரு விஷயீ காரமே -என்று நெஞ்சு உளுக்கும் படி யாயிற்று இருப்பது -தச்ச ஸம்ஸருத்ய ஸம்ஸருத்ய -என்கிறபடியே என்றும் ஓக்க ஸ்மரித்து தரிக்கலாம் படி யாய் இ றே இருப்பது -ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே என்று சத்ருக்கள் வீரத்துக்கு நெஞ்சு உளுக்கும் படி யாயிற்று குண வித்தரும் ஆற்ற மாட்டாதே இருக்கும் படி -அம்பு பட்டாரை பேஷஜத்தாலே பரிஹரிக்கலாம் –குண வித்தரை பரிஹரிக்கப் போகாது –
உய்யக்கொண்டு-சந்த மேனம் ததோ விது என்கிறபடியே என்னை உஜ்ஜீவிக்கும் படி பண்ணி
போகிய-அன்றைக்கு அன்று-கழிகிற காலம் எல்லாம் நாள்தோறும் நாள்தோறும் விஷயீ கரித்து –
என்னைத் தன்னாக்கி -கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –
என்னால் தன்னை-தன்னாலே தத்த சக்தகதனான என்னாலே -சுருதி யாதிகளுக்கும் பேச நிலம் அன்றிக்கே இருக்கிற தன்னை -யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் -அவ்விஞ்ஞாதம் விஜயானதாம் –
இன் தமிழ் பாடிய-அர்த்தம் கிடக்க -சப்தம் தானே ரசித்து சர்வாதிகாரமாக தமிழிலே இசையை வைத்து தானே பாடினவனை
ஈசனை -இப்படி வாய்க்கைக்கு அடி சர்வ சக்தி யாகையாலே -அவன் பாடினான் ஆகில் நீர் செய்தது என் என்ன
ஆதியாய்-நின்ற-எனக்கு அடியாய் நின்று பாடுவித்தான்
என் சோதியை -இவருக்கு கவி பாடுகைக்கு உள்ளுறை கொடுத்தது வடிவு அழகாயிற்று -எனக்கு வடிவு அழகை ஆவிஷ்கரிக்க-அத்தைக் கண்டு கூப்பிட்டது கவி யாயிற்று -பிடாத்தை விழ விட்டு வடிவு அழகை காட்டினான் -திருத் திரை எடுத்தால் போல் கூப்பிட்டேன் -அது கவி யாயிற்று-
என் சொல்லி நிற்பனோ?-என் சொல்லி தரிப்பேன் -சம்சாரியாய் இருக்கிற நான் தனக்கு ஆபி முக்கியம் பண்ணுகைக்கு என் பக்கலிலே ஒரு ஹேது யுண்டு என்று தரிக்கவோ -பின்பு தன்னை ஒழிய செல்லாமை பிறக்கைக்கு என் பக்கலிலே சாதன லேசம் உண்டு என்று தரிக்கவோ -என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு தனக்கு ஓர் ஏற்றம் யுண்டாக இருக்கிற நீர்மையை கண்டால் என்னால் தரிக்கலாமோ -சாரதியாய் நின்று வென்று வெற்றியை அர்ஜுனன் தலையில் ஏறிட்டால் போலே தானே பாடி என் தலையிலே ஏறிட்டான் அத்தனை –

———————————————————————-

தானே தன்னைக் கவி பாடி வைத்து நான் தன்னை கவி பாடினேன் என்று லோகத்தில் பிரசித்தம் ஆக்குவதே -என்று -அவன் படி இருந்தது என் -அவனுடைய ஆச்சர்யத்தை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

என்  சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

என் சொல்லி நிற்பன்?-அநாதி காலம் அஹங்கார க்ரஸ்தனாய் விமுகனாய் போந்த என்னை நிர்ஹேதுகமாக விஷயீகரித்த படியை அநுஸந்தித்தால் நான் எத்தைச் சொல்லி தரையில் கால் பரவுவது
என் இன்னுயிர்-அசன்னேவ – என்னும் படி உருமாய்ந்து கிடந்த போந்த என் ஆத்மவஸ்து –இன்னுயிர்-என்கிறது பகவத் அபிப்ராயத்தாலே -பகவத் அங்கீ காரத்துக்கு இலக்கான படி சொல்லுகிறார் ஆதல் -விபரீத லக்ஷணை யாலே ஹேயம் என்கிறார் ஆதல் –
இன்று ஒன்றாய்-அவனுடைய விஷயீ காரத்தாலே இன்று ஒரு சரக்காய் -இற்றைக்கு முன்பு இத்தை ஒன்றாக நினைத்து இரார் யாயிற்று -இன்று யாயிற்று இது ஒரு வஸ்து யாயிற்று -இப்படி விஷயீ கரித்து -கொண்ட கார்யம் என் என்னில் –
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
சொல்லும் என்னதாய் -சொன்னேனும் நானேயாய் -அது தான் இனிய கவியாம் படி நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் –
என்பித்து-பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் -என்கிறபடியே லோக பிரசித்தம் ஆக்கி –தான் வென்று அர்ஜுனனை நாட்டார் உடன் ஓக்க புகழுமா போலே -அது தான் அப்படி அன்றோ என்னில் –
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த -சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்
மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான் -உபகரணமான படி தான் என் என்ன
என்-முன் சொல்லும்-அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இ றே –
மூவுருவாம் முதல்வனே.-அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

—————————————————————-

பார்ச்வத்தர்-உமக்கு இனி மறந்து பிழைக்கலாம் அத்தனை என்னை -என்னையும் உபகரணமாக கொண்டு தன்னைத் தானே கவி பாடின மஹா உபகாரகனை  மறக்க உபாயம் இல்லை -என்கிறார் –

ஆ முதல்வன்  இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

ஆ முதல்வன் இவன் என்று -முதலாமவன் இவன் என்று -கவி பாடுகைக்கு முதலாமவன் -அடியாவான் -இவன் என்று –ஆ முதல்வன் -முதலாமவன்
தன் தேற்றி -என் பக்கலிலே தன் திரு உள்ளத்தை தெளியும் படி பண்ணி என்னுதல் -ஜகத் காரண பூதன் -கவி பாடுகைக்கு இவனாம் -என்று தன்னை நான் தேறப் பண்ணி சம்சாரத்தை என்னைக் கொண்டு திருத்தப் பார்த்தான் என்னுதல் -எனக்கு தன் வாசியை அறிவித்தான் என்னுதல் –
என்-நா முதல் வத்து புகுந்து -ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் அடியாக ப்ரஹ்மா சரஸ்வதியை அவன் நாவிலே ஏவி இ றே -அங்கனம் இடையீடு இன்றிக்கே தானே என்னுடைய வாக் பிரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து என்னுதல் –முந்துற நாவில் வந்து புகுந்து என்னுதல் –
நல் இன்கவி-சர்வ லக்ஷனோ பேதமாய் -அது ஒழிய சொல்லும் தானே செவ்வித் பாடு உடைத்தாம் படி இனிதான கவி
தூமுதல் பத்தர்க்குத்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளும் -கேட்டாரார் வானவர்கள் -என்கிறபடியே வித்தராம் படி என்னுதல் -சம்சாரத்தில் தலையான முமுஷுக்கள் என்னுதல்
தான் தன்னைச் சொன்ன-என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்
என்-வாய் முதல் அப்பனை-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை
என்று மறப்பனோ!–இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை -இதற்கு முன்புள்ள காலம் அடங்க நினைக்க அரிதானால் போலே இனி மேல் உள்ள காலம் அடங்க மரப்பன் என்றால் தான் மறக்கப் போமோ –

———————————————————————

தானே கவி பாடிக் கொண்டால் நிரவத்யமாய் என்னைக் கொண்டு தப்பாமே கவி பாடின இவ் உபகாரத்தை மறக்க உபாயம் இல்லை என்கிறார் –

அப்பனை  என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

அப்பனை என்று மறப்பன் -இவ் உபகாரம் பண்ணினவனை இனி அபகாரம் பண்ணினால் தான் மறப்பேனோ
என் ஆகியே-என்னை உபகரணமாகக் கொண்டே
தப்புதல் இன்றித் -என்னோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷம் தட்டாமே -நானே கவி பாடினேன் ஆகில் நிரவத்யமாம்-இது இ றே அரிது
தனைக் கவி தான் சொல்லி-தனக்கு சத்ருசமாக தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை-ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை
உயக்கொண்டு-சந்தமேனம் ததோ விது என்னும் படி விஷயீ கரித்து –
செப்பமே செய்து திரிகின்ற -குடில ஹ்ருதயனான என்னோடே -நித்ய ஸூ ரிகளோடே பரிமாறுமா போலே செவ்வியனாய் வர்த்திக்கிற
சீர்கண்டே.–சீலாதி குணங்களை அனுசந்தித்து அப்பனை என்று மறப்பன்-

—————————————————————-

தன்னைக் கவி பாடுகைக்கு ஈடான நீர்மையும் இன்றிக்கே இச்சையும் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னைக் கொண்டு சர்வ லோகம் எல்லாம் கொண்டாடும் படி கவி பாடுவதே -என்ன -சர்வாதிகானோ -சர்வேஸ்வரனோ -என்கிறார்-

சீர்  கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

சீர் கண்டு கொண்டு -அவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹித்து
திருந்து நல் இன் கவி-கட்டளை பட்டு லக்ஷனோ பேதமாய் -சொல்லின் உடைய இனிமை தானே ஆகர்ஷகமான கவி
நேர்பட -கவி வாய்க்கும் படி
யான் சொல்லும் நீர்மை இலாமையில்-நான் கவி பாடுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் இன்றிக்கே இருக்கச் செய் தேயும்
ஏர்வுஇலா என்னைத்-சைதன்ய ப்ரயுக்தமான இச்சையும் இன்றிக்கே இருக்கிற என்னை
தன் ஆக்கி என்னால் தன்னைப்-தனக்கு உண்டான ஞானாதிகளை எனக்கு உண்டாக்கி -என்னைக் கொண்டு அபரிச்சின்னனான தன்னை -என்னை தன்னாக்கி -தனக்கு அநந்யார்ஹம் என்னும் இடத்தை அறிவித்து என்றுமாம்
பார் பரவு இன் கவி பாடும்-விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற எல்லாரும் வாய் புலற்றும் படியான இனிய கவி என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்கிறபடியே யாதல் –
பரமரே.–நதத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே -என்கிற பிரமாணம் கொண்டு அறிய வேண்டா -என்னை இட்டுக் கவி பாடுவித்துக் கொண்ட இத்தைக் கொண்டே பரத்வம் நிச்சயித்துக் கொள்ளலாம்-

—————————————————————–

பராசர வ்யாஸ வாலமீகி பிரமுகரான கவிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளாதே -என்னை யுபகரணமாகக் கொண்டு வாங்கவோ பாடுவதே என்று ப்ரீதர் ஆகிறார் –

இன்  கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

இன் கவி பாடும் பரம கவிகளால்-தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் -செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது-கவியும் தன்னது –கர்த்தாவும் தான் -விஷயமும் தான் –
இன்று-நன்கு வந்து-இன்று நானும் உஜ்ஜீவிக்கும் படி வந்து என்னுதல் -என்னைக் கொண்டு கவி பாடும் இதுவே பிரயோஜனமாக என்னுதல் -அப்போது நன்கு உவந்து –உகந்து –
என்னுடன் ஆக்கி –என்னால் தன்னை-கவி பாடுகைக்கு என்னை பிரியாத உபகரணம் ஆக்கி என்னுதல் -என்னை தன்னோடு ஓக்க ஞானாதிகன் ஆக்கி என்னுதல்
வன் கவி -செறிந்த கவி -மொய்யா சொல்லால் -என்கிறபடியே –
பாடும் என் வைகுந்த நாதனே.–நித்ய விபூதி உக்தனாய் இருக்கிற ஏற்றத்துக்கு போரும்படி என்னைக் கொண்டு கவி பாடினான் -நித்ய விபூதிக்கு அழிவு இல்லாதாப் போலே அழிவில்லாத ஆயிரம் என்று நித்ய சித்தமாம் படி திரு வாய் மொழியை பாடுவித்தான் என்னுதல் -நித்ய விபூதியால் தனக்கு நிறம் உண்டானால் போலே இக்கவி பாட்டாலே தனக்கு நிறம் உண்டாம் படி பாடினான் என்னுதல் –

—————————————————-

என்னைக் கொண்டு நிரதிசய போக்யனான கவியைப் பாடுவித்துக் கொண்ட இம் மஹா உபகாரத்துக்கு இவனை காலம் உள்ளதனையும் உபகார ஸ்ம்ருதியை அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார்-

வைகுந்த  நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப்   புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

வைகுந்த நாதன்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -நித்ய சம்சாரியான என் பக்கலிலே வந்து மேல் விழா நின்றான் -லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்கிறபடியே
என் வல்வினை மாய்ந்து அறச்-அசன்னேவ சபவதி-என்கிறபடியே அசத்கல்பனான என்னுடைய பிரபலமான பாபங்களை சவாசனமாக போம்படி -சர்வ சக்திக்கும் ஒரு விரகால் போக்க வேண்டும் படி இ றே இதில் கனம் –
செய்குந்தன்-பல பிரதிபந்தகங்களை போக்குவது நிர்ஹேதுகமாக -உன்னடியார்க்கு தீர்த்த அசுரர்க்கு தீமைகள் செய்குந்தா -என்கிறபடியே ஆஸ்ரிதர் பாபங்களை அனாஸ்ரித்தர் மேல் ஏறிடும் சுத்தியை சொல்லிற்று ஆகவுமாம்
தன்னை என்னாக்கி -என்னை தன்னாக்கி –
என்னால் தன்னைவைகுந்தனாகப் புகழ் -நான் புகழ்ந்தால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆவானாய் இ றா நின்றான் -அது தான் முன்பே நித்தியமாய் இருக்க -என் கவி பாட்டாலே இப்போது பெற்றானாய் இருக்கை -தமப்பன் கொடுத்து அது தன்னையே மகன் கொடுக்க அன்று பெற்றானாய் இரா நின்றான் இ றே -ஆத்மா நித்தியமாய் இருக்கச் செய் தே அசன்னேவா என்றும் சந்தமேனம்-என்றும் சொல்லுகிறது
வண் தீங்கவி செய்குந்தன்-உதாரமாய் இனிதாய் இருந்துள்ள கவியை என்னை இட்டுப் பாடுவித்துக் கொண்ட சுத்தியை யுடையவன் –என் கவி பாட்டாலே என் துக்கத்தை போக்கின இது தன் குறை அற்றதாக நினைத்து இரா நின்றான் -துயர் அறு சுடர் அடி என்னுமா போலே
தன்னை -மஹா உபகாரகனை
எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–பண்ணின உபகாரத்தை எத்தனை நாள் அநுஸந்தித்தால் எனக்கு பரியாப்தி பிறப்பது -கால தத்வம் உள்ளதனையும் ஸ்மரித்தாலும் பரியாப்தி பிறக்குமோ -சரீர சம்பந்தம் அற்றால் இதுக்கு அவசரம் இல்லை -அதுக்கு முன்பு காலம் அல்பம் ஆகையால் பரியாப்தி பிறவாது என்கிறார் –

—————————————————————-

என்னைக் கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட இம் மஹா குணத்தை உபய விபூதியில் உள்ளாருடைய போக்த்ருத்வ சக்தியையும் அதுக்கு ஈடான வாக்யாதி உபகரணங்களையும் பெற்று இவ் உபகாரத்தை அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார் –

ஆர்வனோ  ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்-
எனக்கு விஷயமாக கையும் திரு வாழி யுமான அழகை காட்டின உபகாரனுடைய குணங்களை -ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே யுளன் என்று கையும் திரு வாழி யுமாய் நின்ற அழகுக்கு தோற்று கவி பாடுமவன் நான் என்றார் இ றே -தன் ஸ்வரூப குணங்களையும் ஆத்ம குணங்களையும் எனக்கு விஷயம் ஆக்கின உபகாரகன் என்கை –
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்-
பூமியிலும் ஊர்த்வ லோகத்திலும் ஜாலங்களிலும் உள்ள சகல சேதனர்கள் உடைய போக்த்ருத்வத்தையும் வாக்யாதி உபகரணங்களையும் துணையாக கொண்டு அனுபவித்தாலும் ஆர்வேனோ -ஆராத படி பண்ணின உபகாரம் தான் ஏது என்ன
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால்
கவி பாடுகைக்கு யோக்யதைகள் ஒன்றுமே இன்றிக்கே இருக்கிற என்னை -கீழ் ஏர் -என்று இச்சையை அழகாக சொல்லிற்று -இங்கு இச்சைக்கு ஹேதுவான ஞானாதிகளை சொல்லுகிறது
தன்னைச்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனை
சீர் பெற -என் கவி பாட்டால் அந்த குணங்களை பெற்றானாம் படி
இன் கவி சொன்ன திறத்துக்கே ? –சீர் பெறா விடிலும் பாசுரம் அமைந்து இருக்கிற கவியை சொன்ன படிக்கு -திறம் -படி -ஆழி யங்கை பிரான் -என்று தொடங்கி -கலந்து பருகிலும் ஆர்வேனோ -உயர்வற உயர் நலம் உண்டாயிற்று இக் கூப்பாட்டாலே-

————————————————————-

என்னை வைத்து கவி பாடுவித்துக்  கொண்ட மஹா உபகாரகனை சகல சேதனருடைய போக்த்ருத்வ சக்தியை உடையேனாய் கொண்டு-கீழ் சொன்ன பரிகரங்கள் அனைத்தையும் கொண்டு – கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் ஆரேன் என்கிறார் –

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

திறத்துக்கே துப்பரவாம் திரு மால் -ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு / துப்புரவு -சாமர்த்தியம்
திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இ றே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -உபகாரம் தான் ஏது என்ன
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி -ஸ்வ விஷய ஞானத்துக்கு சம்பாவனை இல்லாமையால் விஸ்ம்ருதியும் இன்றிக்கே அசித்சமனான என்னை -மறந்தேன் உன்னை முன்னம் என்கிற படியே அனுதாபமும் இன்றிக்கே இருக்கிற என்னை
என்னால் தன்னை உற-யதோ வாசோ நிவர்த்தந்தே என்கிற விஷயத்தை –எல்லை உற -தனக்கு நேரே வாசகமாம் படி ஈஸ்வரனுக்கு உறும் படி என்றுமாம் இது பிள்ளான் நிர்வாஹம்
பல இன்கவி சொன்ன உதவிக்கே?-சதுர்விம்சத் சஹஸ்ராணி என்றும் பாட்ட் யே-கேயேச மதுரம் என்றும் சொல்லுமா போலே ஆயிரமுமாய் இனிதான கவி சொன்ன உபகாரத்துக்கு –திறத்துக்கு என்று தொடங்கி பருகிலும் ஆர்வனோ-

————————————————————-

தம்மைக் கொண்டு கவி பாடுவித்துக்  கொண்ட மஹா உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாதே அலமாக்கினார் –

உதவிக்  கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

உதவிக் கைம்மாறு-பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரமாக
என் உயிர் -நித்தியமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஞான குணகனான ஆத்மாவை கொடுத்தாலோ என்னில் -அது செய்யலாம் இ றே முன்பே மயர்வற மதி நலம் அருளிக் கொடுத்து இலனாகில் –
என்ன உற்று எண்ணில்அதுவும் மற்று ஆங்கவன் தன்னது -ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்
அங்கு -பிரத்யுபகாரம் பண்ணி யல்லது நிற்க மாட்டாத தசையில் -உபகாரத்தை அனுசந்தித்து ஆத்ம சமர்ப்பணத்தில் இழிவர்-ஸ்வரூபத்தை உணர்ந்து அத்தை அநு சயிப்பர் -எனது ஆவி தந்து ஒழிந்தேன் -என்னா -எனது ஆவி யார் யான் ஆர் என்றார் இ றே -மயா சமர்ப்பித்த-என்னா அதவா கின்னு சமர்ப்பயாமிதே -என்ன கடவது இ றே -பிராந்தி சமயத்தில் ஆத்மசமர்ப்பணம் போலே போலே இருப்பது ஓன்று இ றே -பண்ணின உபகாரத்துக்கு பிரதியுபகாரம் பண்ணின இதுவும் –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக பிரதமத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ண கடவன் -ஸ்வரூபத்தை உணர்ந்தால்-அவனத்தை அவனதாக இசையும் அத்தனை -இவை இரண்டும் ஞானம் பிறந்தார்க்கு பேற்று அளவும் அனுவர்த்திக்க கடவதாய் இருக்கும் –
என்னால் தன்னைப்-உபகார ஸ்ம்ருதியால் பிரதியுபகாரம் தேடி தெகுடாடா நிற்கிற என்னாலே -மஹா உபகாரகனான தன்னை –
பதவிய இன்கவி -மிருதுவாய் இனிதான கவி -கவி பாட்டுண்டவனுக்கு இக்கவியால் முன்பு இல்லாத நீர்மை நீர்மையும் உண்டாம்படி இருக்கை -இக்கவி பாட்டாலே முன்பு இல்லாத நீர்மை தனக்கு உண்டாயிற்றாக நினைத்து இருக்கிறான் யாயிற்று அவன்
பாடிய அப்பனுக்கு-இப்படி கவி பாடின மஹா உபகாரகனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது -செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்
இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இ றே -ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –

————————————————————

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு  எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார் –

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
இஹ லோக பர லோகங்கள் இரண்டிலும் ஸ்ரீ யபதி யல்லது தஞ்சம் அல்லை என்னும் இடத்தை அனுசந்தித்து -சாதன அனுஷ்டான வேளையோடு-பிராப்தி வேளையோடு வாசி அற இவ்வாத்மாவுக்கு மிதுனம் தஞ்சம் என்கை -பண்டை நாளாலே என்கிறபடியே -கைங்கர்யம் பண்ணும் இடத்திலும் அவள் முன்னாக பண்ண வேண்டும் இ றே -ஆஸ்ரயண வேளையிலும் அவள் முன்னாக வேணும் இ றே -ஹதே தஸ்மிந் நகுர்யு -என்று ராவணன் சொல்லுகையாலே நலிந்தார்கள் ஆகில் -அவன் பட்ட பின்பு இன்று நலியா நின்றார்களோ -என்று ராக்ஷஸிகள் பக்கலிலும் குணத்தை ஆரோபிக்கும் நீர்மை யுடையவள் இ றே -நமக்கு சதாச்சார்யர் சந்நிதியில் அவன் உபதேசத்தால் இவ்வர்த்த பிரதிபத்தி யுண்டு -இவர்க்கு பிரதிபத்தி அனுரூபமான பரிமாற்றம் எப்போதும் உண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன் -அந்த பிரதிபத்தியோடே உதாரரான ஆழ்வார் –
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து -இப்பாவ வ்ருத்தியோடே சொன்ன இப்பத்தும் – சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்-என்று மநோ வாக் காயங்கள் மூன்றும் பாஹ்ய விஷயங்களில் தொற்று அற்று உத்தேச விஷயத்திலே மூன்றும் இ றே இவர்க்கு இருப்பது -இப்பாசுரமே அமையும் இது அப்யசித்தவர்களுக்கு -அவர்களை பார்த்து அன்று இ றே ஈஸ்வரன் அங்கீ கரிப்பது -இவர் பாசுரம் என்று இவரை பார்த்து இ றே
எங்ஙனே சொல்லிலும் -அஹ்ருதயமாகவுமாம்–சஹ்ருதயமாகவுமாம் -பழத்தில் வ்யபிசரியாது என்கை
இன்பம் பயக்குமே.–ஆனந்தத்தை உண்டாக்கும் -ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரவதிகமான ஆனந்தத்தை விளைக்கும் –


கந்தாடை   அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: