திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி –7-7-

முன்பில் திருவாய்மொழியில் எம்பெருமானைக் காண வேணும் என்று கூப்பிட்டு -மல்கு நீர் சுடர் தழைப்ப-என்று தொடங்கி உண்டான
அவனுடைய அழகை அனுசந்திக்கையாலே -அவ் வழகுகள் முன்பே நின்றால் போலே ப்ரத்யக்ரமாக தோற்றா நின்று கொண்டு
பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு யோக்யம் இன்றிக்கே நலிய -ஆழ்வார் தாம் நலிவு படுகிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
எம்பெருமானோடே விஸ்லேஷித்து-அவனுடைய ஸுந்தரியாதிகளை நினைத்து தரிக்க மாட்டாதே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி
-சேதனர் சேதனரை அகப்படுத்துவது கண் வழியே யாகையாலே பிராட்டியும் எம்பெருமானுடைய திரு முகத்தில் ஸுந்தர்யத்தை மிகவும் பாவிக்கையாலே
-அவ் வழியே ஹிருதயம் அகப்பட்டு -பாஹ்ய விஷயம் அனுசந்திக்கைக்கு சஷூராதி கரணங்களுக்கு தான் துணைப் பட மாட்டாதே
அவ் வழகையே நிரந்தரமாக அனுசந்திக்கையாலே சாஷாத் கரித்தால் போலே அவ் வழகு ப்ரதிபாஸிக்க -துணுக் என்று எழுந்து கிட்ட செல்ல
-அவ் வழகு தான் நினைத்தபடி பரிமாற ஒட்டாமையாலே நடுக்கடலில் அகப்பட்டால் போல அலமருகிற இப்பிராட்டியை தோழிமாரும் தாய்மாரும்
-நீ இப்படி படுகைக்கு ஹேது என் -என்று கேட்க அவர்களைக் குறித்து -எம்பெருமானுடைய திருக் கண்கள் தொடக்கமான திவ்ய அவயவங்களில்
அழகுகளை கையாலே காட்டி இவை தனித் தனியும் திரளவும் வந்து என்னை நலிய நான் இவற்றிலே அகப்பட்டேன்
-இனி என்னை அலைத்து உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை -என் பக்கல் நசை அறுங்கோள்-என்கிறாள் –

———————————————————————

திருக் கண்களின் அழகு வந்து தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள் –

ஏழையர்  ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

சபலைகளான பெண்களை முடிப்போம் என்று க்ருத சங்கேதராய் வந்தார் இரண்டு ம்ருத்யுக்களோ அறியேன்-
கடல் போலே அழகிய திரு நிறத்தை யுடைய கிருஷ்ணனுடைய அழகாலே ம்ருத்யுக்களிலும் கொடிதான திருக் கண்கள் கொலோ அறியேன் –
திரு வாழி யை யுடையனாய் உபகார சீலனான கிருஷ்ணனுடைய கண்களோ -என்றுமாம் –
நாண் மலர் போல் -சம்ச்லேஷ தசையில் செவ்வி –

——————————————————

எம்பெருமானுடைய திரு மூக்கின் அழகு தன்னை நலியும் படியை சொல்லுகிறாள் –

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

அன்னைமாரான நீங்கள் என்னை அழைத்தும் பிறருக்கு குற்றங்களை சொல்லியும் என்ன பிரயோஜனம் உண்டு –
கண்ணின் பாடே அதின் நீர்மையாலே வளர்ந்து ஒழுகு நீண்டு இருகையாலும் -ச்ரத்தை யாலும் கற்பகக் கொடியோ அதன் கொழுந்தோ என்று துணிய மாட்டு கிறி லேன்
உருவு வெளிப்பாட்டில் இவருக்கு வெண்ணெய் நாற்றம் உபலப்தம் ஆகிற படி
ஏற்றிய பெரு விளக்கின் ஒளியை யுடைத்தாய் நின்று அவ்வளவும் அன்றிக்கே அற வலியாய் நலியா நின்றது –

———————————————————————–

திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள் –

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோஅறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

வாலிய தோர் கனி கொல்- விலக்ஷணமாய் இருபத்தொரு பழமோ
அழகினுடைய திரளான பவளத்தின் உடைய சிரத்தையை யுடைய முறையோ அறிகிறி லேன் –
கறுத்து பெருத்து இருக்கிற மேகம் போலே இருக்கிற திருமேனியை உடைய சர்வேஸ்வரனுடைய அழகுக்கு பகைத் தொடையாக தோற்றுகிற திருப் பவளமானது-பார்த்த பார்த்த திக்கு எல்லாம் என்னுடைய நல் ஜீவனை முடிக்கைக்காக வந்து தோற்றா நின்றது-

———————————————————————

கீழ் சொன்ன அழகுகள் நலிந்த நலிவுகள் எல்லாம் ஸூகம் என்னலாம் படி விலக்ஷணமான இரண்டு புருவங்களும் என்னை மிகவும் நலியா நின்றன என்கிறாள் –

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர்மதனன் கருப்புச்சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண் ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

நல்ல ஜீவனை கொள்ளுகைக்கு அபலைகள் பக்கலிலே வளைகிற இரண்டு நீலமான விற்களோ -அங்கனம் ஆகாதே வடிவோடே நின்ற அழகை யுடைய காமனுடைய கருப்பு வில்லோ –
லோகத்தை அடைய பிச்சேற்றும் அழகை யுடைய காமனுக்கும் கூட உத்பாதகனாய் உள்ள கிருஷ்ணனுடைய புருவங்களோ -என் பிராணனையே கணிசித்து என்றும் நின்று பாதியா நின்றன-

——————————————————————-

கிருஷ்ணனுடைய முறுவலானது என்னை மிகவும் நலியா நின்றது என்கிறாள் –

என்று  நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

தோன்றி மாயாதே என்றும் நின்று விளங்கா நிற்பதும் செய்து சிவந்த சுடரை ஈனா நின்ற வெள்ளை மின்னோ -அன்றி என் ஆத்மாவை நோவு படுத்தா நின்றுள்ள அழகிய முத்து நிரையோ-அறிகிறிலேன்
கோவர்த்தன உத்தாரணம் பண்ணி ஆஸ்ரிதர் பக்கல் அனுக்ரஹ சீலனான கிருஷ்ணனுடைய முறுவலானது என்னுடைய பிராணனை நலியா நின்றது -அன்னைமீர் அவனுடைய திரு வழகாலே வந்த நலிவைத் தப்பி உஜ்ஜீவிக்கலாம் இடம் அறிகிறிலேன்-

————————————————————-

எம்பெருமானுடைய திரு மகர குண்டலங்களும் திருக் காதும் தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள் –

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

அபலைகளுக்கும் அசுரர்களுக்கும் ராக்ஷஸருக்கும் உய்விடம் எவ்விடம் என்று திரு மகர குண்டலம் தளிர்க்கிற தளிரோ -அஸூர ராக்ஷஸர்கள் அழகைக் கண்டு பொறுக்க மாட்டாமை முடிவர் -அபலைகள் லபிக்க மாட்டாமல் முடிவர் -காமினிகளான அபலைகளையும் சத்ருக்களான அசூரரையும் ஓக்க ஸ்நேஹத்தை விளைத்து அழிக்கையுமாம்
தன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும் பிரதிகூலர்க்கு அணுக ஒண்ணாத படி நஞ்சை உடையனாய் தன்னுடைய திரு அழகுக்கு உத்தம்பகனான திரு வனந்த ஆழ்வானை அணையாக யுடைய எம்பெருமானுடைய திருக் குண்டல காதுக்களே நிரந்தரமாக நலியா நின்றன பாரி கோள்-

——————————————————————-

எம்பெருமானுடைய திரு நெற்றியில் அழகு தன்னை நலிகிற படியைச் சொல்லுகிறாள்-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண்திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

பூர்வ பக்ஷத்தில் அஷ்டமீ சந்திரனோ -அன்றிக்கே ஆசைப்பட்டார்க்கு நஞ்சாய் இருபத்தொரு இலையோ-ஆசைப்பட்டார்க்கு நச்ச வேண்டாது இருக்கிறதோ என்றுமாம்
கொழுந்து விட்டு சுற்று உடைத்தான நாலு தோளை யுடைய சர்வேஸ்வரனுடைய திரு நெற்றியே இப்படி நோவு படுகைக்கு பாபத்தை பண்ணின என் பிராணனை முடிக்கையில் துணிந்து அதிலே அபி நிவேசித்து பிராணனை நலியா நின்றது
கோளிழைத்தே-என் அழகை போக்கி என்றுமாம் –

—————————————————————-

திருக் கண்கள் தொடக்கமாக முன்பு சொன்ன திவ்ய அவயவங்களோடும்  கூடின திரு முகத்தில் அழகு -எல்லாம் –ஒரு முகம் செய்து தன்னை நலிகிற படியை சொல்லுகிறாள்

கோளிழைத்  தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

தன் ஒளியை தனக்கு ஆபரணமாக உடைய தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் அழகை ஆபரணமாக உடைய குளிர்ந்த முத்தும் தளிரும்-குளிர்ந்த பெருத்த பிறையுமாய் தன் அழகே தனக்கு ஆபரணமாக இருக்கிற ஜ்யோதிர் மண்டலமோ –
தன் ஒளியே தனக்கு ஆபரணமாக யுடைய அழகிய திரு முகம் என்று ஒரு பேரை இட்டு இப்படி துக்கப் படுகைக்கு ஈடான பாபத்தை யுடைய என்னுடைய பிராணனை நலிகிறது
கோளிழை-என்கிறது இவற்றை அழிக்கை என்றும் -கொள்கையில் துணிகை என்றும் சொல்லுவார் –

——————————————————————-

அதி லோகமான திருக் குழலின் அழகு தன்னை நலிகிற படியைச் சொல்லுகிறாள் –

கொள்கின்ற  கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

பிரளய காலத்தில் திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே ஜகத்தை அடைய வ்யாபியா நின்று கொண்டு மிக்க தமஸை புற வாயில் வெளிறின அம்சத்தை கழித்து அதின் உள்ளே உண்டான கொழுவிய இருண்ட சுருள் உடைய சாரமான கறுத்த நூல் திரளோ
அன்று மாயன் குழல்-அதுவன்று -அத்யாச்சர்யமான அழகை யுடைய கிருஷ்ணன் உடைய திருக் குழல்
அலரா நின்றுள்ள அழகிய திருத் துழாயினுடைய பரிமளம் நாற வந்து என்னுடைய பிராணனை அபஹரிக்கிற படி அறிகிறிலிகோள் -ஏதேனும் ஒன்றை சொல்லி பொடியா நின்றி கோள்-

——————————————————————–

திரு அபிஷேகத்தில் அழகில் என்னுடைய ஹிருதயம் அகப்பட்டது -இனி என்னைப் பொடித்து உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள் –

நிற்றி  முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-

தன்னகத்தே முற்றத்தே நின்றாய் என்று அயுக்தம் செய்தேனாய்க் கொண்டு என்னுடைய தசை அறிந்த நீங்கள் விடாதே வையா நின்றி கோள்
சுற்றியும் சூழ்ந்தும்-சுழல வந்து பார்த்தும் -சூழ்ந்து கொண்டு நின்றும் என்றுமாம் –
நிரவதிக தேஜஸ்ஸான ரத்னங்களுடைய ஒளியை உடைத்தாய் கொண்டு ஸமஸ்த லோகங்களையும் ஓர் இடம் ஒழியாமே வியாபிக்கிற தேஜஸ்ஸை யுடைய திரு அபிஷேகத்தில் என்னுடைய ஹ்ருதயம் ஒறுப்பட்டது –

————————————————————

நிகமத்தில் இத்திருவாய்மொழியை அறிந்தவர்கள் ஆழ்வார் இதில் பட்ட நோவு படாதே அயர்வறும் அமரர்களோடே நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவார்கள் என்கிறார் –

கட்குஅரிய  பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

மனுஷ்யருடைய இந்திரியங்களுக்கு விஷயம் அன்றிக்கே இருக்கிற ப்ரஹ்மாதிகளுக்கும் கண்ணால் காண வரியனான கிருஷ்ணனை
உட்குஉடை ஆயிரம் -வாஸ்யத்தை வாசிக்க வல்ல சக்தி யோகத்தை யுடைய ஆயிரம் –
உட்குஉடை வானவர் -பகவத் குண சேஷ்டிதாதிகளை பூர்ணமாக அனுபவிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தை யுடைய அயர்வறும் அமரர்கள் –

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: